எப்டியோ நல்லா படியாக திருமணத்தை நடத்திவிட்டோம் என்ற நிறைவு தான் இருந்தது ஜெபாஸ்டின் அண்ட் ஹரிஷ்க்கு..
கெளதம், என்னவோ இறுக்கமாகவே இருந்தான். எத்தனையோ முடியாதுங்கற காரியத்தை எல்லாம் கட்சிதமாக முடித்து குடுத்துருக்கான். ஆனால் இதோ இந்த மண வாழ்க்கை முடியும் என்றே தோணவில்லை. மனதோ இன்னுமும் உடன்படவில்லை.
ஒரு பொண்ணோடு ஒரே வீட்டில் சாத்தியமா? சத்தியமா முடியாது என்று அடித்து கூறியது மனது.
அந்த டென்ஷன், கோவம் எல்லாம் அவளிடம் காட்டிட உத்வேகம் வந்தாலும், தனக்குள்ளே அமிழ்த்தி கொண்டான். அவளிடம் காட்டி உரிமையை கூட வெளி படுத்த கூடாது என்று முடிவு எடுத்து கொண்டான்.
கேக் கட்டிங், ஜெபங்கள், புகழ்ச்சியுரை, மொய் குடுக்குதல் என தொடர் வண்டி போலே நீண்டு கொண்டே சென்றது. எப்போ முடிஞ்சு தொலையும் என்று வெறுப்பாக அமர்ந்து இருந்தான். இதில் அவள் கையை கண்டிப்பாக பிடித்து கொண்டுதான் அமர வேண்டும் என்று கட்டளைகள் வேறு...
அந்த மண்டபத்தில் சிரிக்காதவர்கள் யார் என்று போட்டி நடத்தினால், நிச்சயம் இவர்கள் இருவரும் தான் வெல்லுவார்கள்..
வைபவம் முடித்ததும், பெண்ணை கையொடே மாப்பிளை வீட்டுக்கு தான் அழைத்து செல்லுவார்கள் அவர்களின் வழக்கத்தில். அடுத்த நாள் தான் மறுவீடு என்று வைத்திருந்தார்கள்.
சிறிதாக கூட்டமும் குறைய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் இரு வீட்டாரின் விருந்தினர்கள் மட்டுமே இருந்தனர். கமலியை, அழைத்து செல்லலாம் என்று முடிவு எடுத்தனர், அவளுக்கோ "ஹோ'வென வந்தது.. கண்களில் கண்ணீர் இப்போ விழவா அப்புறம் விழவா என்று காத்திருந்தது..
அவளின் தகப்பனை கட்டிக்கொண்டு அப்டி ஒரு அழுகை அழுதாள்.. செபாஸ்டியன்க்கும் கண்களை கரித்தது, அதை பார்த்துக்கொண்டிருந்த நவரோஜினிக்கும் அழுகை வந்தது..
ஹரிஷ் தான் நிலைமையை கையில் எடுத்தார்..
"செபா, நீயும் அழுதா பிள்ளை இன்னும் சோர்ந்து போவா.. உனக்கு அவ எப்படி மகளோ, அப்டியே நாங்களும் பார்த்துப்போம்.. கவலையை விடு" அவரின் தோளை தட்டி குடுத்தார்..
"தெரியும் ஹரிஷா.. இருந்தாலும் மனசு தாங்கலடா.."
"அம்மாடி, கமலி.. நீ அழுதா உன் அப்பாவும் அழ ஆரம்பிச்சுடுவான்.. நீ நினைச்ச நேரம் உன் அப்பாவ வந்து பார்க்கலாம்.. இந்த இருக்கு சென்னை, நீ எப்போவும் போல இருக்கலாம்" என்று சொல்லியது நன்றாக வேலை செய்தது.. தன்னை திட படுத்தி கொண்டாள்..
பின், அனைவரிடமும் விடை பெற்று கொண்டார்கள். ஒரு சிறு டெம்போ ஒன்றில் ஹரிஷ் உறவினர்கள் ஏறிகொண்டார்கள். அவர்கள் வீட்டிற்கு செல்ல ஒன்றரை மணி நேரம் ஆவது ஆகும்..
இவர்களின் கார்யை ஹரிஷ் இயக்கவே, பக்கத்தில் ரெஜினா அமர்ந்து கொண்டார்.. மடியில் ஹேமா குட்டி தூங்க ஆரம்பித்திருந்தாள்..
பின் இருக்கையில், திடக்காத்திரமான ஆண்களான கெளதம் அண்ட் சித்தார்த் இருவரும் நடுவில் அமர, சித்தார்த்தின் வலது புறம் அவன் மனைவி மாலினியும்.. கெளதமின் இடது புறம் கமலியும் அமர்ந்து கொண்டார்கள்..
கமலியோ மூக்கு நுனியும் முகமும் சிவந்து, வாடி வதங்கிய பூவென இருந்தாள்..
அவளை தான் கெளதம் பார்த்து கொண்டிருந்தான். இந்த பெண்கள் தான் எவ்ளோ பாவம்.. பிறந்து வளர்ந்து வந்த இடத்தில் இருந்து வேரோடு பிடிங்கி இன்னொரு இடத்தில் நாட்டி வாழ வைப்பது என்பது மன அழுத்தம் அல்லவா குடுக்கும்.. ஆனாலும் சில காலத்தில் அதிலயும் அழகாக பொருந்தியும் கொள்ளுகிறார்கள்... ஹ்ம்ம், பாராட்ட கூடியது தான்.. இதல்லாம் நம் ஆண்களுக்கு முடியாது என்றே தோன்றியது..
கூடவே, அழுதாலும் இந்த பெண் அழகாக இருக்கிறாள்.. இந்த எண்ணமும் எழுந்தது.
கிளம்பி ஒரு பத்து நிமிடத்தில், அவளுக்கு சோர்வினாலோ இல்லை மன அழுத்தத்தினாலோ, தூக்கம் கண்களை கட்டியது..
உக்கார இடம் பத்தியது என்றாலும் அவனை இடிக்காமல் அமர முடியவில்லை. அதிலும் அவளின் வலது தொடை அவனின் தொடையின் மேல் தான் இருந்தது.. சரி, பின்னால் சாய்ந்து கொள்ளலாம் என்று பார்த்தாள், அவன் இடது கையை தலை சாய்க்கும் இடத்தில் நீட்டி வைத்திருந்தான்.
இதற்கு மேல் முடியாதுடா சாமி என கதவில் சாய்ந்து கொண்டாள்.. உடனே தூங்கியும்விட்டாள்..
அவள் நன்றாக தூங்கிவிட்டாள் என அவன் அறிந்ததும்.. அவனின் மனமோ, 'அவளை தன் தோளின் மேல் சாய்த்து கொள்ள உந்தியது' அவன் அறிவோ, 'அவ எப்படி தூங்குனா உனக்கு என்ன மூடிட்டு உக்காரு என அடக்கியது'..
இறுதியில் மனம் வெல்லவே, அவளை தன் தோளில் சாய்த்து கொண்டான்.. ரொம்ப லைட் வெயிட்ஆஹ் இருக்கா, இது அவன் மனதின் எண்ணம்..
ஒரு மணி நேரம் கடந்து இருந்தது.. சிறிதாக விழிப்பு தட்டியது.. இருந்தாலும் கண்ணை திறக்காமல், இன்னும் அழுந்த கட்டி கொண்டாள் தலையணை என நினைத்து.. கட்டி கொண்டதும், 'ஏன் இவ்ளோ ஹார்ட்ஆஹ் இருக்குது' என நினைத்தாள்..
அவள் அவனை கட்டி அனைத்ததும் அவன் தேகம் விறைத்தது, இது பிடிக்கவில்லை என!!
இரு நிமிடம் கடந்து இருக்கும், அவன் கழுத்தில், அவன் தேகத்தில் இருந்து வந்த மெல்லிய நறுமணம்.. கூடவே அவனின் வாசம் என அவள் மூக்கை துளைத்தது..
அவனின் வாசம் ரம்மியமான மனநிலையை கொடுத்தது.. இன்னும் வேணும் என அவன் சட்டை காலரை லேசாக பிடித்து இழுத்து "ஹ்ம்ம்ஹா" என நுகர்ந்தாள்..
அவ்ளோதான், அவனுக்கோ தள்ளிவிடும் வேகம் இருந்தாலும்.. அவன் உடம்போ இனம் புரியாத உணர்வை தோற்றுவித்தது..
இன்னும் அந்த வாசம் வேணும் என நினைத்தாளோ என்னவோ, அவன் காலரை இன்னும் அழுத்தமா பிடித்த நேரம், அவன் அவள் கைய பற்றி எடுத்து விட்டதும் படக் என கண்ணை திறந்தாள்...
திறந்ததும், அவன் தோளில் படுத்து இருப்பது தெரிந்ததும்.. டக்கென நேராக உக்காந்து கொண்டாள்...
'ஹையோ, இவ்ளோ நேரம் இவன் தோளில்ஆஹ், அப்போ அந்த ஸ்மெல்.. ஆஹ், கமலி என்ன பண்ணி வச்சுருக்க..'
ஓரக் கண்ணால் அவனை நோட்டம் விட்டாள்..
அவனோ எதுவுமே நடக்காத மாதிரி அமர்ந்து இருந்தான்..
'ஹ்ம்ம், ஹாப்பாடா.. இவன் நார்மல்ஆஹ் தான் இருக்கான்.. இப்போ என்ன தூங்கிட்டேன் அவ்ளோதானே.. விடு விடு பாத்துக்கலாம்" தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டாள்..
அவர்கள் வீட்டையும் அடைந்தார்கள். மணியும் ஐந்து ஆகியது.. காபி குடித்து, உறவினர்களுக்கும் குடுத்து என நேரம் போனதே தெரியவில்லை..
இவளுக்கு இரவு நேரம் குறித்து இப்போவே படபட க்க ஆரம்பித்தது.. கீழே இருக்கும் ஒரு ரூமில் அவளை ரெப்பிரேஷ் பண்ணிக்க விட்டார்கள்.. மதுரையில் இருக்கும் இந்த வீடு கீழே மேலே என்ற அமைப்பில் தான் இருக்கும்.. கௌதமின் ரூம் மேலே தான் இருந்தது.
ஹரிஷின் தங்கை கீதாவின் மகள் ஷாலினியும், மாலினியும் அவள் கூடவே இருந்தார்கள்.
ஷாலினி, துரு துரு பெண்.. இப்பொழுது தான் கல்லூரி படிப்பை முடித்து விட்டு.. கோவேர்ந்மேன்ட் எக்ஸாம்க்காக படித்து கொண்டிருக்கிறாள்..
இரவு சாப்பாடும் ரூமிற்கே ரெஜினா குடுத்து விட்டார்.. சாப்பிட்டு முடித்ததும், மேலும் பயம் அதிகரித்தது..
என்னதான் மாலினியும், ஷாலினியும் பேசினாலும் கருத்தில் பதியவில்லை..
சிறிது நேரத்தில் ரெஜினா அவர்கள் இருக்கும் ரூமில் நுழைந்தார்.. அவரின் கையில் பால் நிறைந்த குவழை இருந்தது.
"மாலினி, சித்து கூப்பிடுறான். என்னனு போய் பாக்கிறியாமா?"
"ஹ்ம்ம், இதோ போறேன் அத்தை" அவரிடம் கூறியவள்..
கமலியின் காதில்.."ஆல் தே பெஸ்ட் கமலி" ரெஜினா கேட்காதவாரு முனுமுனுத்து சென்று விட்டாள்..
"ஷாலினி, எல்லாரும் சாப்பிட்டாச்சானு ஒரு பார்வை பாத்துட்டு வரியாடா" ரெஜினா..
"அது சரி, இதுக்கு நீங்க நான் ஏன் மருமகள்கிட்ட பேசணும்னு சொல்லிருந்தாலே.. நா கம்முனு போயிருப்பேனே"
"ஹேய், அப்டினு இல்லைடா. நெஜமாவே யாராச்சும் ஒரு மேற்ப்பர்வை பார்க்கணும் தான் கூப்பிட்டேன்"
"சரி சரி, பதட்டபடாதீங்க.. நா போய் ஒரு எட்டு பார்த்துட்டு வரேன்"
பின், கமலியிடம் திரும்பி, "அத்தை சிரிச்சு பேசியே மயக்கிடுவாங்க.. பி கேர்ஃபுல்" என்று சொல்லியவள் கிளம்பி விட்டாள்.. அவள் சொன்னதுக்கும் ரெஜினா சிரிக்கதான் செய்தார்..
"ரொம்ப அழகா இருக்கடா" அவர் சொன்னதும் கண்களை தொடாமல் சிரித்தாள் கமலி..
"இந்தா டா, பால்... ரெண்டு பேரும் கண்டிப்பா குடிக்கணும்." என அவள் கையில் குடுத்தார்..
"எனக்கு எப்படி ஆரம்பிக்கனு தெரில கமலி.. வழக்கமா எல்லா மாமியாரும் சொல்றது போல பத்து மாசத்துல குழந்தை பெத்து குடு, இப்படிலாம் நான் சொல்ல போறது இல்லை. என் பையன் கொஞ்சம் முரடன் தான்,கல்யாணத்துல பிடிப்பு இல்லாம இருக்கான் தான் ஆனாலும் பொண்ணுங்கள மதிக்க தெரிஞ்சவன்.. என்னுடைய வேண்டுகோள் எல்லாம் அவனை வெறுத்துடாதமா.."
'ஹ்ம்ம், இவங்க அடங்காத காளைய பெத்த வைப்பாங்களாம், நான் போய் அடக்கணுமாம்.. நல்லா இருக்கே கதை' அவளின் மனது!!
அவள் "ஹ்ம்ம்" என இளித்து வைத்தால்..
"நீ நினைக்கலாம் பிடிப்பு இல்லைனு சொல்றேன் அப்போ ஏன் கல்யாணம்னு.. அவன் மாறிடுவானு நம்பிக்கை இருக்கு.. உன்ன பார்த்ததுல இருந்து நீயும் அவனை மாத்திடுவனு ஸ்திரமா தோணுச்சு.."
'கிழிஞ்சுது' அவள் மனதின் கவுண்டர்..
"ஹ்ம்ம்" என கேட்டுகொண்டாள்.. ஒரு தாயின் வேதனையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
"சரிடா, நீ கிளம்பு.. மேலே இடது பக்கம் தான் அவன் ரூம்" என ஆசீர்வதித்து அனுப்பினார்..
தட தடக்கும் உள்ளதோடு மேலே ஏறி.. அவனின் ரூம் கதவை தட்டினாள்!!!!