இதயம் 7

 

(@lovita-elsi)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 10
Thread starter  

 

இரு வாரங்கள் கட கடவென கடந்தது. அவளின் கல்யாணம் நடக்க போகும் நாளான வெள்ளிக்கிழமை வந்தது.

காலையிலே பட படப்பாக இருந்தாள் கமலி. குழப்பமாகவும் இருந்தது. ராகி சொன்னதும் கூட கொஞ்சம் குழப்பத்தை உண்டாக்கியது.. நம்மால வாழ்க்கையை கொண்டு போய்ட முடியுமா.. தப்பான முடிவ எடுத்துருக்கேனா. இப்படி பலவாறு சிந்தித்து, கண்ணாடியில் தன்னையே பார்த்து கொண்டிருந்தாள்.

ரோகினி, " என்னடீ, ரொம்ப நெர்வோஸ்ஆஹ் தெரிற"

'இவகிட்ட சொல்லலாமா? இவனை வேணாம்னு சொல்லியும், நா சரினு சொல்லிட்டேனு எதாவது கடுப்பா இருப்பாளோ?'  மனதோ நிலை கொள்ளாமல் தவித்தது..

"ஹேய், என்ன யோசனை"

"இல்லைக்கா, ஒண்ணும் இல்லை"

"ஹ்ம்ம், அப்போ இருக்கு.. நீ அக்கானு கூப்பிடுறதுலயே தெரிது..சொல்லு என்னது மண்டைக்குள்ள ஓடுது"

"ஒண்ணும் இல்லை" என தலையை இடம் இருந்து வலமாக அசைத்தாள்..

"என்னைய பாரு" அவளின் தோளை பிடித்து தன்னை பார்க்க வைத்து "நீ என்ன நினைக்குறனு நா சொல்லவா? எடுத்த முடிவு சரியா தப்பானு குழம்பிட்டு நின்னுட்டு இருக்க ரைட்ஆஹ்"

ரோஹிணி சொன்னதும் இவள் கண்கள் இரண்டும் விரிந்தது.

"என்ன நான் சொன்னது சரிதான?"

"ஹ்ம்ம்" என சொல்லும் போதே அவள் கண்களும் கலங்கியது.

"பட்டு குட்டிடீ நீ. இதோ பாரு கமலிமா. முடிவு எடுக்குற வரைக்கும் எவ்ளோனாலும் யோசிக்கலாம்.. அவ்வளோ ஏன் குழம்பிக்கவும் செய்யலாம்.. பட் முடிவுன்னு ஒண்ணு எடுத்தாச்சுன்னா அப்புறம் யோசிக்கவும் கூடாது, குழம்பிக்கவும் கூடாது.. அது தப்பாவே இருந்தாலும் சரியா ஆக்கிடணும்"

"ஹ்ம்ம்,  இருந்தாலும் எனக்கு இப்போ கல்யாணமே வேணாம்னு தோணுதுக்கா.. உங்கள விட்டு நான் ரொம்ப தூரமா இருக்குற மாதிரி இருக்குக்கா..ரொம்ப பயமா இருக்கு.. இதுல அவரு என்னைய பிடிச்சுலாம் கல்யாணம் பண்ண நினைக்கல"

"இது நார்மலா எல்லா கல்யாண பெண்களும் பேஸ் பண்ற விஷயம்தான் கமலிமா.. பழகிட்டா எல்லாமே சரி ஆகிடும். அப்புறம் பாரு,  எப்போ வர, வான்னு நாங்க கெஞ்சுற நிலைமைக்கு வந்துடுவ"

"ஹ்ம்ம்" இன்னும் சுணங்கி கொண்டே சொன்னாள்..

"கமலி, நீ ஹாப்பிஆஹ் இருக்குற நாள் இது. பொக்கிஷம் மாதிரி சேர்த்து வைக்குற நாள். இப்படி அழுது வடியாத. அப்புறம் போட்டோல நல்லா வராது.. நான் தான் இப்படி ஒரு வாய்ப்ப மிஸ் பண்ணிட்டேன்.. பட் உன் கல்யாணத்த பார்த்து அத நான் தேத்திக்கிறேன்.. உன்னை இப்படி மணப்பெண் கோலத்துல பாக்குறது ரொம்பவே சந்தோசமா இருக்குது தெரியுமா.. அவ்ளோ அழகா இருக்க. கெளதம் குடுத்து வச்சவன் தான் மொத்த அழகும் அவனுக்கே அவனுக்கு"

"அக்க்க்கா..என்னக்கா நீ" சிணுங்கினாள்.. "அவருக்கு என்னைய பிடிக்கவே செய்யாது. ஆபீஸ்ல சும்மா கூட பார்க்க மாட்டார்"

"கெளதம், பொண்ணுககிட்ட அப்டித்தான்.. சில சமயம் தோணும், காவ்யா ஏன் அவனை வேணாம்னு சொன்னானு. அவனை மிஸ் பண்ணிட்டானு கூட நினைச்சுருக்கேன்.அவன் நல்லவன் தான். அதான் பிரச்சனையே. ஒரு கணவன், பொண்டாட்டி கிட்ட கண்ணியம் காக்க தேவை இல்லையே. காதலிக்கும் போது கைய கூட அவனா முன் வந்து பிடிக்க மாட்டான் போல. இவ ஏன் இப்படி இருக்கனு கேட்டா கூட, எதா இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் தான்னு சொல்லிடுவான்னு சொல்லிருக்கா. சில உணர்வுகள் வெளிகாட்டறதுல தப்பில்ல. அவன் நல்லவனாவே இருந்தாலும் உனக்கு ஈசிஆஹ் போகுற லைப் தான் நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதான் வேணாம்னு உன்ன சொல்ல சொன்னேன்  மத்தபடி வேற ஒண்ணும் இல்லை. லவ் பேய்லியர் ஆனவங்க கல்யாணம் பண்ண கூடாதா என்ன?.. அதுவும் இல்லாம என் தங்கச்சிய யாருக்காச்சும் பிடிக்காம போகுமா? ரொம்ப போட்டு யோசிக்காம இந்த நிமிஷம் என்னவோ அத ஏத்துகிட்டு லீட் பண்ணு லைப் நல்லாவே போகும், சரியா?"

"ஹ்ம்ம் சரிக்கா" எதோ ஒரு தெளிவு கிடைத்த உணர்வு.

அதற்குள் நவரோஜினி வந்துவிடவே, "ஹேய், என்ன ரெண்டு பேரும் கதை அடிச்சுட்டு இருக்கீங்க. நேரம் ஆச்சு, மண்டபத்துக்கு கிளம்புங்க. அப்புறம் ஆலயத்திருக்கு போகணும்"

அவர்கள் திருமணம் கிறிஸ்துவ முறைப்படி நடப்பதாக முடிவு எடுத்து இருந்தார்கள்.

"ம்மா, எங்கள பார்த்தா கதை அடிச்சுட்டு நிக்கிற மாதிரி தெரியுதா, நானே எவ்ளோ பீலிங்ஸ்ல நின்னுட்டு இருக்கேன். ம்மா உனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா நா கல்யாணம் ஆகி போறேன்.. நினச்ச நேரம் இங்க வரலாம் முடியாதுனு"

"எவடி இவ. உன்ன பத்தி எனக்கு தெரியாது. நினைச்சா நினைச்ச உடனே சாதிச்சு வந்துடுவன்னு. என்னமோ கல்யாணம் பண்ணி அடுத்த கண்டத்துல கொடுக்குறோம் பாரு வருத்த பட.. இந்தா இருக்கு மெட்ராஸ், நைட் கிளம்புனா காலையில வந்துடுர.."

"ம்மா, உனக்கு கொஞ்சம் கூட பாசமே இல்லைம்மா.."

"ஓஹ் ஹோ, பாக்குறேன்டீ.. இப்போ புழிய புழிய அழுறவள்க தான் கல்யாணம் முடிஞ்சு அம்மா வீட்டுக்கு வர்றதுக்கும் அழுவாளுக"

"ம்மா, நான் ஒண்ணும் அப்படி இல்லை."

"பார்ப்போம் பார்ப்போம்"

நவரோஜினியை இடை மறித்து "ம்மா, அப்போ நீ அப்டித்தான் பாட்டி வீட்டுக்கு போகணுமான்னு அழுதியா?"

லேசாக சிரித்தவர் "பின்ன இல்லையா, உங்க அப்பா நீங்க இரண்டு பேரும் பிறக்கிறதுக்கு முன்னாடியே அவ்ளோ தாங்குவாரு. அதுவும், ரோஹிணி பிறக்க ஒரு வாரம் முன்னாடி தான் அதுவும் தலை பிரசவத்துக்கு போகணுமேனு போனேன். கமலி வயித்துல இருக்கும் போது,  அது கூட இல்லை. அம்மா வீட்டுக்கே போகல. உங்க அப்பா அவ்ளோ நல்லா பாத்துப்பாரு" அவர் கண்களில் அவ்ளோ புரிப்பும் நிறைவும் தெரிந்தது.

இப்படி நம்மையும் தாங்குவானா, அப்டி இருந்தா நல்லாத்தான் இருக்கும். பார்ப்போம் வாழ்க்கை என்ன வச்சுருக்குனு..

"சரி சரி, வாங்க கிளம்புவோம்.. நேரம் ஆச்சு" என அவர்கள் இருவரையும் கையொடே அழைத்து சென்று விட்டார்.

மண்டபத்தில் சில சம்பிரிதாயம் முடித்து, ஆலயத்திருக்கும் வந்து விட்டார்கள்.. கூட்டம் அவ்ளோவாக இல்லை.

செபாஸ்டியன் தான், கமலி கையை பிடித்து அழைத்து வர வேண்டும். செபாஸ்டியன்க்கு தங்கோனா சந்தோசம். அவள் வலது கையை பிடித்து, உள்ளே அழைத்து சென்று, கெளதம் கையில் இணைத்து வைத்தார்.

பின், சில ஜெபங்கள், வாக்குரிதிகள் பெற்றவுடன்,  ஆலயத்தந்தை கௌதமின் கையில் திருமாங்கல்யத்தை குடுத்து அவள் கழுத்தில் அனுவிக்க சொன்னார்.

அதை வாங்கியதும், உள்ளம் நடுக்கம் கொண்டது அதே நேரம் இறுக்கமும் கொண்டது. இரு வேறு மன நிலையில் இறுக்கமான முகத்தோடு அவள் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான்.

-பொறுத்திருப்போம் ♥️

கதை பிடித்திருந்தால், உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும். நிறைவு இருந்தாலும் தெரிய படுத்துங்கள், குறைவு இருந்தாலும் தெரிய படுத்துங்கள்.. உங்கள் கருத்துக்கள் தான் என்னை மேலும் மேலும் எழுத தூண்டும்... ♥️♥️♥️♥️♥️

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top