இதயம் 5

 

(@lovita-elsi)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 10
Thread starter  

அவன் கீழே சென்றதை தொடர்ந்து இரு நிமிடம் கழித்து கமலியும் கீழே இறங்கினாள்..

 

கமலி வந்தவுடன், இவளை பார்த்த பெரியப்பா (செபாஸ்டியனின் ஒன்றுவிட்ட அண்ணன் முறையில் உள்ள ஒருவர்).. "அப்புறம் என்ன பொண்ணும் வந்தாச்சு, சபையிலே உங்க விருப்பத்தை சொல்லிடுங்க. தனியாவும் பேசிட்டு வந்துருக்கீங்க. ஒரு வேளை கருத்து மாறுபடலாம்ல" 

 

ஹரிஷோ, ஓஹ் வேணாம்னு சொல்லிடுவியா.. சொல்லித்தான் பாரேன் என வெட்டவா குத்தவா என்று அவனை பார்த்து கொண்டிருந்தார்.

 

"தம்பி நீங்க தான் பொண்ணு கிட்ட பேசணும்னு விருப்பபட்டீங்க, அதுனால நீங்களே முதல்ல உங்க விருப்பத்தை சொல்லிடுங்க"

 

அவர் கேட்டதும், இவன் மனதில் போராட்டம், ஒரு பெண்ணின் வாழ்கையை வீணாக்குவதற்கு விருப்பமே இல்லை. என்ன சொல்வது என்று குழப்பம். கமலியை தான் பார்த்தான், அவள் கண்ணில் நிராசை சாயல் இந்த மாதிரி எதாவது தெரிந்தால் கண்டிப்பா மறுத்துவிட வேண்டும் என்று..  ஆனால், அவள் முகம் நிர்மலமாக தெளிவாக இருந்தது.. 

 

"ஹ்ம்ம்" தலை அசைத்தான்...

 

"மாப்பிளை தம்பி, தலையை மட்டும் ஆட்டுனா எப்படி..  சம்மதம்னா வாய் நிறைய சொல்லுங்க..அப்ப தான எங்க மனசும் நிறையும்" கமலி பெரியப்பா..

 

"சம்மதம்" உறுதியாக சொல்லிவிட்டான். அவள் அவளாகவே தான இருக்க விருப்பபடுறா.. அப்டியே இருக்கட்டும். என்னால ஏத்துக்க முடியாதுனும் என் நிலைமையை சொல்லியாச்சு. அதுக்கு மேல நான் செய்யறதுக்கும் ஒண்ணும் இல்லை, ஒரு வேளை கருத்து பின் வேறு பட்டால் கண்டிப்பாக பிரிந்து விட வேண்டும் என்று அவன் மணம் கணக்கு போட்டது..

 

"கமலிமா, நீயும் சபையிலே சொல்லிடு உன் விருப்பத்தை"

 

இவளுக்கு பெரிதாக யோசிக்க ஒன்றும் இல்லை, வீட்ல ஹெல்ப் பண்றதுக்கு ஒப்ஜெக்ட் பண்ணல, சிக்கல் இல்லை என  "சம்மதம் பெரியப்பா" என்று தெளிவான குரலில் சொல்லிவிட்டாள்.

 

"அப்புறம் என்ன, ரெண்டு வீடும் தாம்புல தட்ட மாத்திக்கோங்க" என்றார். 

 

உடனே ஹரிஷும், செபாவும் தட்டை மாற்றி கொண்டார்கள். 

 

அப்டியே நிச்சயத்தையும் முடிச்சுடலாம் இரண்டு மாதத்தில் திருமணம் வைத்துவிடலாம் என்று முடிவு எடுத்து கொண்டார்கள்.. அவர்கள் கையொடே இரு மோதிரம் வாங்கி வைத்திருந்தது இருந்தது. மாற்றி கொள்ளவும் வைத்தார்கள்.

 

கமலிகோ அவன் கையை பற்றவே நடுக்கமாய் இருந்தது. அலுத்து சலித்த விடயம், என்றாவது நமக்கு நடக்குமா என்று ஒரு ஓரத்தில் இருந்த ஆசை நடக்கவும் ஏதோ கனவில் மிதப்பதாக இருந்தது. என்ன தான் அவனுக்கு விருப்பமில்லை என்று அறிந்தாலும் இவன் என்னவன் என்கிற உரிமை தானாகவே எழுந்தது..

 

அவள் மோதிரத்தை அவன் விரலில் அணிவிக்கும் போது உணர்த்தான் அவள் நடுக்கத்தை. 

 

அதனால், அவளுக்கு அணிவிக்கும் போது அழுத்தமாக பற்றி பிடித்து தன் கதகதப்பை கடத்தி போட்டுவிட்டான்..

 

அதன் பின், ஒவ்வருவராக வந்து புகைப்படம் எடுக்கவென அவர்களிடம் நின்றார்கள். 

 

ரெஜினா தங்கை சாராவும் வந்திருந்தார்.

"என்ன மகனே, பொண்ணு கைய பிடிங்க.. பிடிச்சா தெய்வ குத்தம் மாதிரி மடக்கி வச்சுடுக்கீங்க.. நிச்சயம் முடிஞ்சா பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரி.. நீங்க தைரியமா புடிச்சுகலாம்"

 

"சித்த்திதி..." அவரை அடக்க முடியாது என்று தெரிந்தும் கத்தினான்.. 

 

"பிடி டா.. கையை பின்னாடி மடக்கி வச்சுடுக்கான் மாக்கான் மாதிரி" என அவரே இருவரின் கையை இணைத்து வைத்து, போட்டோ அவர்களுடன் எடுத்து சென்று விட்டார்..

 

முதலில் பட்டும் படாமலும் தான் கையை பிடித்தான், அவள் நடுக்கம் இன்னும் தெரிந்தது, பின் என்ன நினைத்தானோ, அவள் விரல்களுக்குள் கோர்த்து கொண்டான். அவள் விரல்கள் நடுக்கத்தில் வந்த ஈரத்துடன் மெத்து மெத்துவென இருந்தது..'என்னாச்சு, ஏன் படபடப்பா இருக்கா. கைய விட்டா விழுந்துவிடுவாள் போலவே, தோளோடு சேர்த்து புடிச்சுக்கலாமா' என்று வரை அவன் நினைப்பு சென்றது. அவனுக்கே சிறிது வியப்பு, சில மணி நேர முன்பு பார்த்த பெண்ணுக்காக யோசிக்கிறோமே என!!

 

அவளுக்கோ விட்டால், அவன் மேலே தொய்ந்து விழுந்துவிடுவோமோ என்கிற அச்சம் .. ஏனோ இந்த உணர்வை, கடக்க முடியவில்லை.. 

 

எல்லாரும், புகைப்படம் எடுத்து செல்லவே.. இவர்கள் இருவரை மட்டும் இணைத்து ஒரு சில படங்கள் எடுக்கலாம் என்று புகைப்படம் எடுப்பவர் சொல்லவே.. சரி என இசைந்தார்கள்..

 

புகைப்படம் எடுக்கும் கலைஞர், கௌதமை அவளின் தோளில் கை போட சொல்லவே, எதுவும் யோசிக்காமல் அவள் தோளின் மேல் கை வைத்து பிடித்து கொண்டான். அவளுக்கு அப்போதைக்கு ஆதரவாய் ஒரு தோளும் தேவை பட்டது.. கூட இன்னும் சில படங்கள் எடுத்து கொண்டு புகைப்படம் எடுப்பவர் சென்று விட்டார். புகைப்படம் எடுக்கும் சமயத்தில் தன்னை அமைதி படுத்திகொண்டாள். 

 

இவனும், சரி சாப்பிட போய்டலாம் என்று ஒரு நடை எடுத்து வைத்ததும் "ஒரு நிமிஷம் நில்லுங்க" என்று இவளின் குரல் கேட்டு அவளை பார்த்து திரும்பி நின்றான்.

 

"உங்களுக்கு என்ன பார்த்த நியாபகம் இல்லையா"

 

வெறும் புருவத்தை மட்டும் உயர்த்தி என்ன சொல்லுகிறாள் என்று பார்த்தான். 

பெரிய இவன் என்ன எதுன்னு கேக்க மாட்டான்.. புசு புசுவென வந்தாலும் "நானும் உங்க ஆபீஸ்ல தான் ஒர்க் பண்றேன்.. லாஸ்ட் வீக் தான் உங்க டீம்ல ஜோயின் பண்ணேன்.. நீங்க தான் எனக்கு ப்ராஜெக்ட் ஹெட்ம் கூட.."

 

"ஓஹ்" இது வேறயா என்றும் யோசனையாக நெற்றியை தடவினான்.

 

"நினைவுக்கு வரலையா?"

 

"இல்லை.. நா கவனிச்சுருக்க மாட்டேன். அப்புறம் இன்னும் தெளிவு படுத்திகிறேன் கமலி.  ரெண்டு மாசம் உனக்கு டைம் இருக்கு, உனக்கு மனசு மாறுச்சுன்னா தாராளமா கல்யாணத்தை நிறுத்திகலாம். இப்போவும் சொல்றேன் என் கேரக்டர்க்கு கல்யாணம் செட் ஆகும்னே தோணல. நல்லா யோசிச்சுக்கோ. அப்புறம், ஒரு வேளை நம்ம திருமணத்துக்கு அப்புறமும் ஒத்து வரலனாலும் பிரிஞ்சுக்குறதுக்கு நான் ரெடி தான்.."

 

"ஓஹ், ஏன் வாழ்க்கையை எப்படி காப்பாத்திக்கணும்னு எனக்கு தெரியும்..விவாகரத்து வரைக்கும்லாம் நான் போக மாட்டேன். நான் தீர்க்கமா தான் முடிவு எடுத்திருக்கேன்.. என் முடிவுல மாற்றம் இல்லை" என்ன இவன் இன்னைக்கு தான் நிச்சயம் பன்னிருக்கோம் அதுக்குள்ள பிரிவை பத்தி பேசுறானே என்று அவள் மனம் சுருங்கியது. 

 

ஹ்ம்ம் என தோலை குலுக்கி கொண்டான். 

 

பின் நினைவு வந்தவனாக, "அப்புறம், ஆபீஸ்ல நான் கண்டிப்பா உன்ன தெரிஞ்ச மாதிரிலாம் காட்டமாட்டேன். நீயும் அப்டி பண்ண கூடாது. யார்கிட்டயும் எதுவும் சொல்ல கூடாது.. அங்க நீ யாரோ, நான் யாரோ தான்.. தென், கல்யாணத்துக்கு ஆபீஸ்ல இருந்து யாரையும் கூப்பிட கூடாது. நானும் கூப்பிடமாட்டேன்.கல்யாணத்துக்கு அப்புறமே இதே தான் பொல்லொவ் பண்ணனும்.. ஐ நீட் பிரைவேட் ஸ்பேஸ்."

 

சரியான ரூல்ஸ் மன்னன்ஆஹ் இருப்பான் போலயே.. " ஓஹ், அவ்ளோதானா இல்லை இன்னும் இருக்கா" அவள் எகத்தாளமா கேட்டாள்.. 

 

"இப்போதைக்கு அவ்ளோதான், இருந்தா அப்புறமா சொல்றேன்"  என அவனும் அவ்வாறே கூறினான். 

 

"ஹ்ம்க்கும் ரொம்பதான்" என நொடித்து அவனை கடந்து சாப்பிட சென்றாள்.. 

 

 

 

-பொறுத்திருப்போம்♥️

 

 

மக்களே, படிக்கிறீங்க தானே.. கதை சுமாராவாச்சும் போகுதா? புடிச்சிருக்கா? கருத்துக்களையும் கூறுங்கள்..

 

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top