கமலி என்ன பண்றதுனு குழம்பின நேரம், இங்கு ஒருவனோ மண்டை காஞ்சி கத்தி கொண்டு இருந்தான்.. வேறே யாரு கெளதம் ராட்லி..
"அப்பா, என்னைய கேட்காம எதுக்கு வாக்கு குடுத்துட்டு வந்தீங்க?" என வானத்துக்கும் பூமிக்குமாக குதித்து கொண்டு இருந்தான்.
"இதுக்கு மேலே உன் இஷ்டத்துக்கு விட முடியாது. அரை கிழவன் ஆகியாச்சு இன்னும் கல்யாணம் பண்ண வழிய காணும்" ஹரிஷ்
எப்பவும் இவனுக்கும் அவன் அப்பாவுக்கும் ஏழாம் பொருத்தம் தான். அதற்காக பிடிக்காது என்றும் இல்லை. எத எடுத்தாலுகம் முட்டிக்க மட்டும் செய்யும்.
"யாரு அரை கிழவன். ம்மா.. அவர சும்மா இருக்க சொல்லு.. ஐயாவுக்கு இன்னுமும் பொண்ணுங்க க்யூல நிக்கிறாங்க. அதுனால கொஞ்சம் பார்த்து பேச சொல்லுங்க " இப்போது அவன் அம்மா மேலே பாய்ந்தான்.
ரெஜினாவிற்கு எந்த பக்கம் பேசுவது என்று சுத்தமாக விளங்கவில்லை..
"ஆமா, ஆமா.. நிக்கிறாங்க நிக்கிறாங்க. அப்போ அதுல ஒண்ண பார்த்துருக்க வேண்டியது தானே.. அங்க ஒண்ணு கிலிக்க வக்கு இல்லைல"
ஹரிஷ் அந்த காலத்துலயே காதல் திருமணம் பண்ணியவர் காதலுக்கு என்றுமே எதிரியாக இருந்தது இல்லை. இவன் கல்லூரி காலத்தில் காவ்யாவை காதலிக்கும் போதே வந்து சொல்லிவிட்டான்.. இவளை தான் திருமணம் செய்து கொள்ளுவேன் என்று. இவர்கள் மறுக்கவில்லை மாறாக வாழ்க்கையில முன்னேறும் வரை காத்திருங்கள் கட்டாயம் நாங்களே திருமணத்தை நடத்தி வைக்குறோம் என்று உறுதி தான் குடுத்தார்கள். திடீர் என ஒரு நாள் "அவ என்ன வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டானு" அவன் சொல்லும் போதும் ஆறுதல் தான் சொல்லமுடிந்தது.. அவன் இன்னும் கொஞ்ச நாள் இன்னும் கொஞ்ச நாள் என்று தள்ளி போட்டு தள்ளி போட்டு வருடங்கள் உருண்டோடியது..
இதற்கு மேல் இவனை பிடிக்க முடியாது என்று நினைத்த போது எதர்ச்சயா செபாஸ்டியன் பார்க்க நேர்ந்தது... பரஸ்பர விசாரிப்பின் பின், தங்கள் மகவுகளை பற்றி பேசும்போது உதயமாகியது தான் நாம் ஏன் சம்பந்தி ஆகிட கூடாது என்று.. முதலில் தோன்றியது, இறுதியாக உறுதியாக சம்மந்தி ஆக தோன்றியது.. உடனே நேரத்தை கடத்தாமல், நிச்சயம் வைக்கும் வரை அவர்களாகவே முடிவு எடுத்து விட்டனர்.
"என்னங்க நீங்க வேற?" பரிதாபமாக ஹரிஷ்யிடம் கேட்டார்
"பின்ன என்ன ரெஜி, நான்லாம் இவன் வயசுல இவனை பெத்து எடுத்துட்டேன்.
துரை இன்னும் மொட்டை துரையா சுத்திட்டு இருக்காரு, ஊர்ல கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியுதா, இவனை விட இளையவன் இவன் தம்பிக்கே ஒரு பிள்ளை இருக்கு"
"இப்போ நான் கல்யாணம் பண்ணலனு பிரச்சனையா? இல்ல பிள்ளை பெத்துக்கலன்னு பிரச்சனையா? பிள்ளை பெத்துக்குறது தான் பிரச்சனைனா, அதுக்கு இப்போ மெடிக்கல்ல ஆயிரம் வழி இருக்கு" கெளதம்.
"டேய், ஏன் டா.. நீயாச்சும் அமைதியா தான் இரேன்" ரெஜினா... இருவருக்கும் இடையே அல்லோல் படுவது என்னவோ இவர் மட்டுமே!!
"பாத்தியா பாத்தியா, எவ்ளோ பேச்சு பேசுறானு.. இதோ பாரு ரெஜி, அவன்கிட்ட ஸ்ட்ரிக்ட் ஆஹ் சொல்லிடு.. இந்த பொண்ண தான் கட்டணும்.. ஒரு காலத்துல செபாஸ்டியன் ரொம்ப நெருங்கிய சினேகிதன்.. அவனுக்கு வாக்கு கொடுத்துட்டேன்.. ஒரு வேளை இவன் அத மீறினா"
அவர் முடிக்கும் முன் அவன் இடைமறித்து, "என்ன பிளாக்மெயில் ஆஹ்? விஷம் குடிச்சுடுவேன் அப்டி இப்படின்னா??"
"நான் ஏன் மகனே விஷம் குடிக்க போறேன்? எனக்கு என் பொண்டாட்டியோட 100 வருஷமாவது வாழனும் ஆசை இருக்குதுல.. நீ நான் சொன்னதை மீறினா, வீட்டை மறந்துட வேண்டியது தான். முக்கியமா உங்க அம்மாவை மறந்துட வேண்டியது தான்.. அம்மா கூட பேச விட மாட்டேன்" என்று அனுகுண்டை தூக்கி போட்டுவிட்டு வெளியே சென்று விட்டார்..
கெளதம்க்கு தாய் என்றால் அவ்ளோ இஷ்டம், இவர் கோவத்தை கூட மிருதுவாக தான் காட்டுவார்.. அதுனாலயே, அவர் மீது அவனுக்கு அவ்ளோ ஒரு வாஞ்சை உண்டு..
"ம்மா, என்னமா இவரு இப்படி பன்றாரு"
"டேய், அப்பா சொல்றதுல ஒண்ணும் தப்பு இல்லையே.. கல்யாணம் தானே பண்ணிக்க சொல்றாங்க.. எப்டின்னாலும் ஒரு கட்டத்துல துணைனு ஒருத்தர் வேணும்ல ராஜா.. எனக்கும் உன்ன கல்யாண கோலத்துல பார்க்கனும்னு ஆசை இருக்குது கெளதம்.. ஏம்பா, நீ இன்னும் அந்த புள்ளையை மறக்கலயா?"
"ம்மா, நான் அவளை என்னைக்கோ தூக்கி எரிஞ்சுட்டேன்.. இப்போல்லாம் எனக்கு ஒரு பெண்ணை பார்த்தாலே பணப் பிசாசு மாதிரி தான் தெரிது.. உங்கள தவிர யாரையும் மதிக்க முடிலம்மா"
"ஹ்ம்ம், அப்டி இல்லை கெளதம்.. எல்லா பொண்ணுங்களும் அப்டி கிடையாது.. அதும் இந்த பொண்ணு கண்டிப்பா அப்டி இல்லை.. அவங்க அப்பாக்கு ரொம்ப வருசமா ரொம்ப உதவியா இருக்கிறா போல.. அவங்க அப்பா நிலத்துல ஏற்பட்ட நஷ்டத்த கூட இவ தான் ஈடு செஞ்சிருக்கா.. ரொம்ப அழகா, பொறுப்பா இருக்க கெளதம்.. கண்டிப்பா உனக்கும் புடிக்க ஆரம்பிச்சுடும்.. எனக்கு வற்புறுத்த புடிக்கல தான் பட் நீ பார்த்த பொண்ணு உனக்கு ஒத்து வரல.. இந்த முறை எங்கள் மட்டும் நம்பேன்"
'இந்த அம்மா எப்டியாச்சும் பேசி பேசி கரைச்சுட்றாங்க' என்று நினைத்தாலும் "சரி உங்களுக்காக' என்று அவரை தன் தோளோடு தோள் சேர்த்து அணைத்து கொண்டான்...