இதயம் 2

 

(@lovita-elsi)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 10
Thread starter  

 

அதிகாலை ஐந்து மணிக்கு அவள் மதுரை இறங்கினாள்.. அந்த வேளையிலும் அவள் அப்பா அவளுக்காக காத்து கொண்டிருந்தார்.. இது இன்று நேற்று அல்ல, இவள் என்று வெளியே சென்று வந்து கொண்டிருந்தாலோ அன்றைய தினத்தில் இருந்து இன்று வரை இவள் வருவதற்கு முன் அவர் வந்து நின்று விடுவார். அந்த அன்பை எண்ண எண்ண அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை..

"அப்பா" என்று கூவி கொண்டு அவர் முன் நின்றாள்.

"வந்துட்டியா பாப்பா"

"ஆமாப்பா, போலாமா?" அவர் இரு சக்கர வாகனத்தில் தான் வந்திருந்தார்.

"சரிம்மா" என்று அவள் பையை வாங்கி முன் வைத்துக்கொண்டு அவளை ஏற சொன்னார்.

சில தூரம் சென்றதும் ஒரு டீ கடை இருந்தது.. "பாப்பா, ஒரு டீ குடிச்சுட்டு போவோமா" என்று கேட்டார்

புரிந்து கொண்டாள் ஏதோ பேச வேண்டும் என்று நினைக்கிறார் என..  மறுக்காமல் "சரி" என்று கூறியதும்..

வண்டியை நிப்பாட்டி, இருவரும் நடந்தனர்.. அந்த அதிகாலை வேளையில், ஈரப்பதம் நிறைந்த காற்றும், அந்த காற்றில் மிதந்து அலைவரிசையில் இருந்து வரும் இசையும் மனதை லகுவாக்கியது!!!!

"இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்"

தம்பி, " ஒரு டீ, ஒரு காபி"

அவர் காபி என்றதும் மனம் நிறைந்த சிரிப்பு தான் வந்தது.. இவளுக்கு காபி என்றால் பிரியம்...

"பாப்பா, அம்மா சொல்லிட்டா தானே?"

"ஆமாப்பா"

"ஹரிஷ், பள்ளியில் என் கூட படித்த சிநேகிதன். அவன் மேலே படிக்க என்று வெளியூருக்கு சென்றான்.. கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் மறுபடியும் பார்த்தேன். பேசுனோம், அவன் முதல் பையனுக்கு பொண்ணு பார்க்கிறதா சொன்னான். அப்டியே சம்பந்ததுல முடிச்சுருச்சு. எனக்கும் வயசாகிட்டே போகுது, உன் கல்யாணத்தை கண் கூடா பார்க்கணும்னு ஆசை படுறேன்டா. பையன் குணத்துல ஒரு குறையும் இல்லை. அப்பா உங்கிட்ட கேட்டு முடிவு எடுக்கலனு வருத்தம் இல்லையே?"

இவரின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ள முடிந்தது.. இவரின் தளர்ந்த நடைகள், தோலில் ஆரம்பித்திருக்கும் சுருக்கம்.. ஒரு விதமான பயத்தை அவளுள் தோற்றுவித்தது உண்மை.

பெற்றோர்கள் முதிர் வயது சென்று கொண்டுருக்கிறார்கள் என்பதை பார்க்கும் நமக்கும் சுருக் என்று இருக்கத்தான் செய்கிறது.

அவர் கேட்கும் போது, இல்லை என்று தானாகவே அவள் உதடு உதிர்த்தது..

"உன் கல்யாணத்தயாவது முன்னே நின்று நடத்துனும்னு பிரிய படுறேன் பாப்பா"

"சரிப்பா, அதுலாம் நல்லா நடக்கும், வருத்த படாதீங்க"

ரோஹிணி, வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவள்.. இவள் வீட்டில் காதலை சொன்ன போது, முதலில் எதிர்த்தார்கள்.. எதிர்த்தவுடன், சரி வராது என்று அவளே சென்று திருமணம் செய்து கொண்டாள். அவள் கணவனின் பெயர் "சுரேந்தர்". இவள் கொஞ்சம் அமர்ந்து பேசிருந்தால் செபாஸ்டியன் ஒத்து கொண்டிருப்பார். அவளுக்கு பொறுமை என்பது கிடையாது, சற்று சுயநலவாதி.. 

ஷீலா பிறந்ததும், செபாஸ்டியனால் விலக்கி வைக்க முடியவில்லை.. சேர்த்து கொண்டார்கள்..

ரோகினி அப்படி பண்ணிவிட்டாள் என்பதற்காக கமலிக்கு எந்த கட்டுபாடும் செபாஸ்டியன் விதித்ததில்லை.. இத்தனைக்கும் அப்பொழுது தான் தன்னுடைய கல்லூரி வழக்கையை ஆரம்பித்து இருந்தாள்.. என்னவோ,அதுனாலேயே இவர் என்ன சொன்னாலும் கேட்க தோன்றும்.

"அதே மாதிரி,உன் கல்யாணத்துக்கு அப்புறமும் உன் சம்பளம் எங்களுக்கு குடுக்க வேண்டாம் டா.. நீ இது வரை குடுத்ததுல பாதி அம்மா சீட்டு போட்டு உனக்கு நகை எடுத்துருக்கா.. இனி மேல் எங்க பாட நாங்க பாத்துகிறோம் டா.. நீ சந்தோசமா இருக்கனும். அதுனால மாப்பிளை கிட்ட நான் வீட்டுக்கு குடுப்பேன், குடுத்தா தான் கல்யாணம் அப்டின்னு பேச கூடாது..."

"ப்பா, எப்படிப்பா"

"இல்லை டா, அது சரியா வராது, நல்லாவும் இருக்காது"

"ஹ்ம்ம்" என்று சொல்லுவதை தவிர்க்க முடியவில்லை...

"ப்பா, நா கட் and ரைட் ஆஹ் பேசல பட் நா சொல்லுவேன்"

செபாஸ்டியன் மேலும் பேச வருமுன்..

"இருங்க இருங்க, நான் முடிச்சுடறேன், நான் சொல்லுவேன். அப்டி என்னுடைய வீட்டுக்கு குடுக்குறதால நமக்குள்ள பைனான்சியலா பிரச்சனை வராத மாதிரி பாத்துக்கிறேனும் சேர்த்து சொல்லுவேன்.. எப்படிப்பா பாதிலே நிப்பாட்ட சொல்லுறீங்க"

இரு வருடம் முன்பு பெய்த மழையில், நெல் சாகுபடி இல்லாமல், விழை நிலத்தின் விளைச்சலை பார்க்க முடியாமல் இருந்த பொழுது.. இவள் தான் லோன் எடுத்து அவரின் நட்டத்தில் இருந்து மீட்டு எடுத்தது... வீட்டின் செலவை அவள் அம்மாவும் பார்த்து கொள்வதால் இவர்கள் ஓரளவு பரவாலை என்கிற நிலைமை...

இன்னும் அந்த லோன் அடைக்க வேண்டும்.. இவள் பாதியும், செபாஸ்டியன் பாதியுமாக கட்டி கொண்டு இருக்கிறார்கள்.

"ப்ளீஸ்ப்பா மறுக்காதீங்க.."

அவள் சொன்ன விதத்தில் மறுக்க தோன்றவில்லை..

காப்பி வந்ததும் குடுத்து விட்டு வீட்டை வந்தடைந்தனர்..

வீட்டினுள் நுழைந்ததும், நல்ல சுகந்தம் வீசியது.. ஏதோ அவள் அம்மா சமைக்கும் மணம்..

"ம்மா,"அழைத்து கொண்டு சமையல் கட்டுக்குள் நுழைந்தாள்..

"வந்துட்டியா, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு குளி.. குளிச்சு கிளம்ப ஆரம்பி..மாப்பிளை வீட்டு ஆளுங்க 11 மணிக்குலாம் வராதா சொல்லிருக்காங்க"

"ம்மா, என்னமா நீ, நான் எப்படி இருக்கேனு கூட கேக்க மாட்டிக்கிற.. போ ம்மா," சிணுங்கி கொண்டிருந்தாள்..

"உன் குரல வச்சே நான் கண்டு புடிச்சுருவேன்டீ அதுலாம் நல்லா திவ்யமா  நல்லா இருக்க, சொல்றத செய்.. எனக்கும் நேரமாகுது.. போ போ.. அரைமணி நேரத்துல காபி குடிக்க வந்துடு" என்று அவளை அனுப்பி வைத்தார்.

அவளும் அன்னை சொன்னது போலவே சிறிது ஓய்வு எடுத்து.. கிளம்பினாள்..

ஒன்பது மணி இருக்கும் போது, சித்தி என்று இரு சிறிய கரங்கள் அவளை இறுக்கமாக அணைத்து கொண்டது.

"ஹே, ஷீலா குட்டி.. எப்போ வந்த?"

"நாங்க நேத்து சாயந்தரம் வந்தோம்" அழகா பட்டு பாவாடை உடுத்தி, கண்ணை உருட்டி உருட்டி பேசினால்...

"அடடே நேத்தே பட்டு குட்டி வந்துடீங்களா, அம்மா எங்கே?"

அவள் கேட்டு கொள்ளும் போதே, ரோகினி உள்ளே வந்தாள்...

"ஹே கமலி, வா டீ.." கூறிவிட்டு.. பாப்பா, கீழ பாட்டி கிட்ட போய் சாப்பிட்டுட்டு இரு.. அம்மா வந்துடுறேன்...

அவளும் சமத்தாய் சரி என்று கேட்டு கொண்டு போனாள்...

"அக்கா எப்படி இருக்க" சிரித்த படி கேட்டாள்..

"இருக்கேன் இருக்கேன்"

"என்ன க்கா சலிப்பா சொல்லுற"

"ஹே, மாப்பிள போட்டோ பாத்தியா"

"இல்லைக்கா, நேர்ல தான் பாக்கணும்"

"இரு என்கிட்ட இருக்கு" என்று தன் போனில் இருந்து காட்டினாள்..

போனில் இருந்தவன் பார்த்தவுடன் ஈர்க்கும் படி இருந்தான்.. கூர்மையான கண்கள்.. இவனை எங்கயோ பார்த்து இருக்குறோமே... என்ற எண்ணம் ஓடினாலும்.. "நல்லா தான் அக்கா இருகாங்க"

"நல்லா உத்து பாருடீ, உனக்கு அவன் யாருனு தெரில?"

மறுபடியும் பார்த்தாள், ஏதோ அந்த கண்கள் தன்னை துளைப்பது போல் உணர்வு..

"அக்கா, இவங்க எனக்கு ப்ராஜெக்ட் மேனேஜர் ஆஹ் இருகாங்க, லாஸ்ட் வீக் தான் பார்த்தேன் டீம்ல குட்டி இன்ட்ரோ குடுத்தாங்க..."

"ஹ்ம்ம், மண்ணாங்கட்டி.. ஹேய், இவனை தாண்டி என் பிரின்ட் காவ்யா காலேஜ் படிக்கும் போது லவ் பண்ணா" என்ற குண்டை தூக்கி போட்டாள்...

"ஹையோ, என்னக்கா சொல்ற.. நல்லா பாரு"

"அவன் தான் டீ இவன், நல்லா தெரியும்..இவன் வேண்டாம் டீ, இன்னிக்கு வேண்டாம்னு சொல்லிடு"

"அக்கா இப்படி திடு திப்புனு வேண்டாம்னு சொன்னா அப்பா பாவம்ல க்கா"

"அதல்லாம் பாவம் இல்லை. அவனை கல்யாணம் பண்ணா நீ தான் டீ பாவம் ஆகிடுவ"

"அப்படி எல்லாம் இருக்காதுக்கா"

" இருக்க கூடாது.. அவன் கொஞ்சம் நல்லவன் தான்.. அது மட்டும் இல்லை, அவனுக்கு ஒரு பொண்ண ஹண்ட்ல் பண்ண தெரியாது"

"ஏன் க்கா, அப்டி சொல்ற"

"எப்டி டீ உங்கிட்ட சொல்றது அதை.. னா ஏற்கனவே உனக்கு சொல்லிருக்கேன்ல, அவன் எந்த ஸ்டேப் எடுத்து வைக்க மாட்டான். சொல்ல போனா, அவனுக்கு ஒரு முத்தம் கூட குடுக்க வராது.. காவ்யா இந்த மாதிரி நிறைய சொல்லிருக்கா.. அவளா ககுடுத்தா கூட தள்ளி விட்டுட்டான்டீ.. குடும்ப வாழ்க்கைக்கு லாயக்கே இல்லை..அதுனால தான் சொல்றேன்"

கமலிக்கு நினைவு இருக்கு.. இவர்கள் இருவரும் தோழிகள் போல் தான் இருப்பார்கள்.. ஒளிவு மறைவு என்பது இருக்காது.. ரோகினி கல்லூரியில் படித்த போது, அவள் பிரின்ட் காவ்யா ஒரு பையன காதலித்தால் என்று இவளிடம் சொல்லிருக்கிறாள்.. இன்னும் நினைவு இருக்கிறது.. அந்த பையனுக்கு காவ்யா அக்கா நியாயம் செய்யவில்லை என்றும் உண்மையாய் இருக்க வில்லை என்று தோன்றும்.

"அக்கா, உனக்கே தெரியும். என் கல்யாணத்துல நா எத முக்கியமா பார்க்கிறேனு. ஒரு வேலை இவங்க நான் கேக்குறதுக்கு ஓகே சொல்லிட்டாங்கனா என்னால எதுவும் பண்ண முடியாது க்கா"

"லூசே, நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன பேசிட்டு இருக்க.."

"அக்கா, நீ சொல்றது புரிது.. காவ்யா அக்கா, அப்போ பண்ணதும் தப்பு தானே. அவர தவிக்க விட்டுட்டேங்கள."

"ஆமா அப்டியே தவிக்க விட்டுட்டாலும்!! அவ பெருசா ஒண்ணும் கேக்கல, அவன் கிட்ட லவ் ஆஹ்  இருன்னு கேட்டா.. கைய கூட அவனா வந்து புடிக்க மாட்டான்.. பைக்ல பின்னாடி வச்சு கூட்டுட்டு போனதில்லை... சுரேந்தர் மாதிரி அவன் இல்லை"

அவள் சொல்ல கேட்கும் போது கண்ணியவானாய் தெரிந்தது.

"அக்கா, கம்பர் பண்ணாத.. நல்லாவே இல்லை.. நீ சொல்றத கேட்கும் போது நல்லவரா தான் தெரியுது. கல்யாணத்துக்கு முன்னாடியே கண்ணியமா நடந்துருக்கார்.. அத பாராட்டணும்.. காவ்யா அக்கா இப்போ இன்னொரு அழகான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருகாங்க.. அவங்க முவ் ஆகிட்டாங்க.. பழசை யோசிக்க வேண்டாம்னு தோணுது"

"உன் இஷ்டம், சொல்றத சொல்லிட்டேன்.. கல்யாணத்துல அன்பு ரொம்ப முக்கியம்.. அது தான் ஆணி வேர்.. யோசிச்சுக்க" என்று கீழே போய் விட்டாள்.

இவளுக்கோ இப்போ பயங்கர குழப்பம், என்ன தீர்மானம் எடுப்பது என்று!!!

பொறுத்திருப்போம்!!!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top