தூகை 39

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 310
Thread starter  

39

 

அன்று…

 

மனது எதோ குற்றம் செய்தது போல குறுகுறுவென்று இருந்தது நிரஞ்சனுக்கு. அதிலும் மனைவியின் பார்வை அவன் மீது சுத்தமாக இல்லை. 

 

அவளின் பாராமுகம்.. அதுவே அவனுக்குள் என்ன ஏதேதோ செய்தது..!! மனம் ஒரு மாதிரி நிலை கொள்ளாமல் தவித்தது.

 

“மேகா ஏன் சரியாக பேசமாட்டேங்குறா? ஏன் நம்ம கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்றா? என்னாச்சு அவளுக்கு?” இப்படியாகத்தான் அவன் எண்ணங்கள் முழுவதுமே அவளைச் சுற்றியே இருந்தது..

 

இத்தனை நாட்களில் அவளின் பாராமுகம் அவனை சென்று சேரவே இல்லை. அவன் தான் வேறொரு உலகத்தில் மாயத்தில் இருந்தானே??

 

அதிலும் வீ ப்ரண்ட்ஸ் ஆப்பை அவன் விடுகிறேன் என்று சொல்லும் போது விழிகளை மட்டும் உயர்த்தி ஏளனமாக அவனை ஒரு பார்வை பார்த்து “ஆப் மட்டுமா இல்ல லிங்க் சேட்டு இதெல்லாம் சேர்த்தா?” என்று மென் குரலில் நக்கலாக அப்பொழுது அவள் கூறியதை அவன் சரிவர கவனிக்கவில்லை. 

 

இப்போது இரவில் அவளுக்காக காத்திருக்கும் வேளையில் இதையெல்லாம் அசைபோட்டுக் கொண்டிருந்தான்..!

 

அதிலும் குடிகாரனுக்கு அந்த குடியை விட்டாலும் அந்த நேரம் வரும்பொழுது கை கால் எல்லாம் ஒரு மாதிரி நடுங்குமே.. அது போல தான் நிரஞ்சனுக்கும். அந்த நேரம் வந்ததும் லைவ் செல்ல வேண்டும்.. அவளுடன் சேட் செய்ய வேண்டும் என்று மனமும் விரல்களும் பரபரத்தது.

 

அதனை அடக்கிக் கொண்டவன், கேடயமாக மனைவியை அருகில் இருத்திக் கொள்ள பார்த்தான்.

 

“மேகா.. மேகா.. இன்னைக்கு

இங்கேயே படுத்துக்கிறியா?” என்று மெல்ல கேட்டான் மனதின் படபடப்பை அடக்கிக் கொண்டு..!

 

“எதுக்கு..? நீங்க உங்க கள்ளகாதலியோட சேட் பண்றத வெறிச்சு வெறிச்சு நான் பாக்குறதுக்கா? இல்ல அவள நினைச்சுகிட்டு என்கூட படுத்து அவ பெயர சொல்றத ரசிக்கவா?” என்று அவள் அமைதியாக அவன் கண்களை பார்த்து கேட்க..

 

“மேகா..!” என்று அலறியிருந்தான் நிரஞ்சன்.

 

அதே நேரம் இடி மின்னலோடு பயங்கர மழை பெய்தது..!

 

நிரஞ்சன் உடல் நடுங்கியது. மேகாவின் சாட்டை அடி வார்த்தையில்..!

 

“மேகா.. மேகா… அது.. அது.. வந்து..” என்று அவன் திணற…

 

சத்தியமாக இப்படி மேகா பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அதிலும் அவளின் இந்த ஒரு குற்றச்சாட்டு அவனை இன்னும் பயத்தின் பிடியில் தள்ளியது.

 

‘ஏதோ அவளுக்கு தெரிந்திருக்குமோ இல்லை தெரிந்துவிட்டதோ?’ என்று அவன் இதயத்தின் ஓசை துடிப்பு வேகமாக மாறியது.

 

“நான் எப்போ?? அப்படி எல்லாம் இல்லை.. அதெல்லாம் இல்லை மேகா..” என்றவன் முன் கண்களை உருத்து விரலை தன் உதட்டில் வைத்து எச்சரித்தாள்.

 

“உஷ்.‌! பேசாத நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்..!” என்ற அவளின் கண்டனத்தில் அவனுக்கு சகலமும் ஆடியது.

 

“நீ யார் கூடையும் சேட் பண்ணவே இல்ல? அந்படிதானே?” என்றதும் அவளுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்று புரிந்தவன்,

 

“அது.. அது.. சும்மா பிரண்டு. சாப்பிட நிறைய பேர் கூட ப்ரண்டா இருக்கேன்ல அப்பப்போ சேட் பண்ணுவேன்” என்று சமாளித்தான்.

 

“இப்பெல்லாம் ப்ரண்டுக்கு கூட லவ்யூ மிஸ்யூ சொல்லீவீங்களோ?” என்று அவள் கத்தவில்லை..! ஆர்ப்பாட்டம் பண்ணவில்லை..! ஆனால் அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் கூர் கத்தியாக அவன் நெஞ்சை கிழித்தது. 

 

“அது சும்மா ஃப்ரெண்ட்ஸ் குள்ள சொல்லுவாங்கள லவ் யூ ன்னு அந்த மாதிரி…! ஐ லவ் யூனு உன்னைத் தவிர நான் யார்கிட்டேயும் சொல்லவே இல்ல மேகா..!” என்று அவசர அவசரமாக என் காதல் நீ மட்டும் தான். வேற எந்த பெண் இல்லை என்று அவன் உணர்த்த முயன்றான்.

 

சட்டென்று சார்ஜரில் இருந்து அவன் போனை எடுத்து, வீ ப்ரண்ட்ஸ் ஆப்க்குள் நுழைந்தாள். அதில் சேட் பகுதியில் இருந்த வெறும் கண்களை மட்டும் போட்டு இருந்த ஐடியை ஓபன் செய்து காட்ட... அவனுக்கு மொத்தமும் உடல் உதறியது.

 

“மேகா.‌ மேகா.. அது அது சும்மா ஃப்ரெண்ட்” என்று அவன் அடுத்து பேசும் முன் மீண்டும் அவளின் தீ பார்வையில் அவனின் வாய் தானாக முடியாது. 

 

“யாரு ஸ்வீட்டு?” என்று கேட்க..

 

முதலில் யாரென்று அவளிடமே கேட்க வந்தவன், அவளின் அக்னி பார்வையில் தன்னை பொசித்து விடுவாளோ என்று அத்தனை பயந்து வந்தது அவனுக்கு. 

 

“அது வீபிரண்ட்ஸ்ல ஜஸ்ட் பிரிண்ட்..” என்றான்.

 

“ஜஸ்ட் பிரண்டுக்கு செல்ல பெயர் எல்லாம் வைப்பிங்களோ?” என்று அவள் ஏளனமாக கேட்டதும், அவன் பதில் சொல்ல முடியாமல் திணறினான்.

 

“இல்ல அது சும்மா பேச்சு வார்த்தைக்கு…”

 

“ஓ பேச்சு வார்த்தை எல்லாம் எப்படி போகும் உங்களுக்குள்ள?

ஜஸ்ட் ப்ரண்டு கிட்ட கிஸ்ஸிங் ஸ்மைலி போட்டு தான் லவ் யூ ன்னு சொல்லுவீகளோ.. மிஸ் யூ ன்னு சொல்லுவீகளோ.. ஆனா அதெல்லாம் ஜஸ்ட் ஃப்ரெண்ட்னு நான் நம்பணும். ஏன்னா நான் கேன கிறுக்கி அப்படித்தானே?” என்றதும்,

 

“மேகா.. நீ.. நீ..” என்றவன் மனைவிக்கு இதெல்லாம் எப்படி தெரிந்தது? எப்பொழுது தெரிந்தது? என்று அவன் உடல் வெளிப்படையாகவே இப்பொழுது நடுங்கியது.

 

“அப்போ இது போல நானும் இந்த ஆப்பை டவுன்லோடு செய்து ஜஸ்ட் பிரண்ட் கூட லவ் யூ கிஸ் யூ மிஸ் யூ இதெல்லாம் வேற ஒருத்தனுக்கு செய்யவா?” என்றாள் அவனைப் பார்த்து தீர்க்கமாக..! 

 

“மேகா..!” என்று அவன் கத்த..

 

“உஷ்..! சத்தம் போடாதே. பாப்பா தூங்குறா.. அங்க ரூம்ல உங்க அம்மா தூங்குறாங்க. ஒண்ணு உன்ன பெத்தவங்க.. இன்னொன்னு உனக்கு பொறந்தது. ரெண்டு பேருக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா உன்ன காரி துப்புவாங்க..” என்றதும் அவனுள் ஏதோ ஒன்று பொங்கி வர அது கட்டுப்படுத்த முடியாமல் உதட்டை கடித்து நின்றான்.

 

“ஏன் உனக்கு மட்டும் இப்ப எரியுதோ? நான் மட்டும் அடக்க ஒடக்கமா வீட்ல இருக்கணும் நீ ஊர் மேவியோ? நீ ஊர் மேயுறதை பார்த்தும் நான் பார்க்காத மாதிரியே இந்த வீட்ல இருக்கணும்? அப்படித்தானே?” என்று கேட்க..

 

“அப்படியெல்லாம் இல்ல டி உன்னை தவிர நான் யாரையும் மனசால கூட..” என்றதும்

 

“வாயை மூடு டா..!” என்று கர்ஜித்தாள்.

 

“என்னடா மனசால நினைச்சது இல்ல.. என்ன மனசால நினைச்சது இல்ல.. மயிரால நெனச்சதில்ல.. என்ன பேசுற?” என்று அவள் சற்று இறங்கிப் பேச அவனுக்கு அவமானமாக இருந்தது.

 

 

“ஆமா.. எதுக்காக இப்ப நீ கார் வாங்குன? வீட்ல ஏற்கனவே பணம் கஷ்டம். என் நகை எல்லாம் அடமானத்துல இருக்கு.. அப்படி இருக்கும்போது இவ்வளவு அவசரமா எதுக்கு கார் வாங்குன?” என்றதும் அவனுக்கு வார்த்தை வராமல் உதடுகள் உதறியது. 

 

அவனுடைய ப்ரொபைலை காட்டியவள் “இதோ இந்த காரோட நிக்கிற போட்டோவ நெஜமா வச்சிருக்கேன்னு அந்த நாதாரிக்கு காட்டறதுக்கு தானடா நீ இப்ப அவசரமா லோன் போட்டு கார் வாங்கின?” என்றதும் அவன்‌ அமைதியாக இருக்க..

 

 

“எப்படிடா உன்னால இப்படி முடியுது கொஞ்சம் கூட உனக்கு எல்லாம் மனசுன்னு ஒன்னு இருக்கா அதுல காதல் குடும்பம் பொண்டாட்டி புள்ளைங்கன்னு இருக்கா? பொண்டாட்டிக்கு துரோகம் பண்றமேனு.. இல்லவே இல்லையா?” என்றவளின் கேள்வியில் உயிர் துடிப்பை உணர்ந்தவன், கண்களை இறுக்க மூடிக் கொண்டான்.

 

“அதெல்லாம் கூட எனக்கு பெருசில்ல அதை விட நீ ஒன்னு செஞ்சு பார்த்தியா? அதுதான் டா.. அது தான்.. என் பெண்மையை இத்தனை வருஷ நம் தாம்பத்தியத்தை.. இத்தனை வருசம் உன் மீது நான் வைச்சிருந்த காதலை.. அதை எல்லாம் தாண்டி என் நம்பிக்கையை.. போட்டு உடைச்சிட்ட இல்ல?” என்றதும் நிரஞ்சனுக்கு மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. 

 

“இல்லடி.. இல்லடி.

 அப்படியெல்லாம் இல்லடி..! அது ஏதோ நான் புத்தி மாறி போய் ஏதோ என்னை அறியாமல் செஞ்ச தப்பு தான். என் தப்பு தான். உன்மேல நான் வைச்ச காதல் உண்மை டி மேகா..!” என்று அவள் முன் மண்டியிட்டு கதறினான்.

 

அவனது அக்கா வெறும் பணம் உதவியை கொடுத்ததற்கு அந்த ஆட்டம் ஆடினார். அத்தனைக்கும் அவனின் மாமா எந்த தவறும் செய்யவில்லை. அவர் சொன்னது போல மனைவிக்கு துரோகம் பண்ணிவிட்டு நான் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் என்ற வார்த்தையை அவனுக்கு நெருஞ்சிமுள்ளாய் குத்திக் கொண்டிருக்க.. இப்பொழுது மனைவி ஒவ்வொன்றாக சாட்டை அடி கேள்வியாய் கேட்க..

 

தான் எவ்வளவு தரம் தாழ்ந்து போய் நடந்து இருக்கிறோம். மனைவியை எவ்ளோ கஷ்டப்படுத்தி இருக்கிறோம். மனைவிக்கு எப்படி எல்லாம் துரோகம் செய்திருக்கிறோம் என்று அவனுக்கு அத்தனை கேவலமாக இருந்தது தன்னை நினைத்தே..!

 

“ஆனால் இதையெல்லாம் கூட ஏதோ சபல புத்தி ஆண் புத்தி கண்ட இடத்தில் மேயுது நான் விட்டுடுவேன்.. ஆனா இத விட பெருசா நீ ஒன்னு செய்த பாரு.. இந்த ஜென்மத்துல என்னால உன்னை மன்னிக்கவே முடியாது டா..!” என்று அவள் கண்களில் கண்ணீர் வடிய வேதனையோடு கூறியது அவனுக்கு உயிர் வரை வலித்தது.

 

‘தான் செய்த மிகப்பெரிய இழிவு செயல் அவளை இன்னும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது?’ ஆனால் அப்படி என்ன செய்தேன் என்று தெரியாமல் மனைவியை கையாலாக தனத்தோடு வேதனையோடு பார்த்தான்.

 

‘ஐயோ ஆண்டவா..! ஏற்கனவே அவளுக்கு நான் பெருசா துரோகம் பண்ணி இருக்கேன். அதைவிட இப்ப வேற என்னமோ பண்ணி இருக்கேன்னு சொல்றாளே.. அப்படி என்ன பண்ணுனேன் நானு?’ என்று உள்ளுக்குள் கதறினான். ஆனால் வெளியே கண்கள் கலங்க தலை தொங்க போட்டுக்கொண்டு மனைவின் முன் குற்றவாளி போல அமர்ந்திருந்தான்.

 

“ஆனா அன்னைக்கு செஞ்ச பாரு அதை என் வாழ்நாளில் நான் மன்னிக்கவே மாட்டேன்..! இந்த ஜென்மத்துல உன்ன நான் மன்னிக்க மாட்டேன் சத்தியமா உன்ன நான் மன்னிக்கவே மாட்டேன் என்று கோபமும் அழுகையும் போட்டி போட கண்களை திறங்கையால் துடைத்துக் கொண்டே அவள் பேசியது அவனை வேதனையில் உச்சத்துக்கு கொண்டு செல்ல மேகா என்று அவள் கையை தொடப் போக என்ன தொடாத என்று தள்ளி அமர்ந்தவள் விசும்பி விசும்பி அழுதாள்.

 

“மேகா… சத்தியமா நான் உனக்கு துரோகம் செய்யல.. அந்த பொண்ணு கூட சேட் செய்த உண்மைதான். தப்புதான் என்ன மன்னிச்சிடு” என்று அவள் கால் பிடித்து மன்னிப்பு கேட்டான்.

 

அவள் அப்பொழுதும் அவனை வெறித்தபடியே அமர்ந்திருக்க.. “அந்த பொண்ண நேரா கூட எல்லாம் பார்த்ததில்லை டி. சத்தியமா உனக்கு துரோகம் பண்ற அளவு எல்லாம் நெருங்கி பழகல டி” அந்தப் பெண்ணுடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளவில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தினான்..

 

 

ப்ளாரென்று அவன் கன்னத்தில் ஒரு

 அறை விட்டவள், 

 

“நான் தான உன் பொண்டாட்டி.. என் கூட தானடா படுத்த.. அப்புறம் என்ன மயிருக்கு அப்போ அவ பேர சொன்ன? சொல்லு டா..? சொல்லு டா..!!” என்று அவ

ன் சட்டை காலரைப் பற்றி அவள் உலுக்க..

 

“மேகா..” என்றவனுக்கு தொண்டையில் இருந்து காத்து மட்டுமே வந்தது..!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top