இதயம் 11

 

(@lovita-elsi)
Member Moderator
Joined: 7 months ago
Messages: 13
Thread starter  

இருவரும் கிளம்பிவிட்டார்கள் மறுவீட்டுக்கு.. பொதுவாக யாராவது வந்து அழைத்து செல்லுவார்கள். 

 

கெளதம், யாரும் வர வேண்டாம் நாங்களே வந்துடுறோம் என்று சொன்னதால், யாரும் வர வில்லை.

 

தூர்கிஷ் ப்ளூ வித் பேல் பிங்க் பார்டர் வைத்த சாப்ட் சாரீ தான் அவள் உடுத்தி இருந்தாள்.. எப்போவும் அவள் விருப்பம் சாப்ட் சாரீ தான்...பொதுவாக கனமான சாரீ அவளுக்கு விருப்பம் கிடையாது.. தலைக்கு குளித்திருந்ததால் நடுவில் சென்டர் கிளிப் போட்டு, தளர்வாக பின்னிக் கொண்டாள்.. தொடுத்த மல்லிகை சரத்தை இரு பக்கமும் வளியும் படி வைத்தாள்.. காதில் ஜிமிக்கி போட்டிருந்தாள், வலது கையில் நான்கு வளையல், இடது கையில் தங்க நிறத்தில் வாட்ச்..கழுத்தில் மின்னும் தாலி கூடவே பிங்க் நிற கல் பதித்த அட்டிகையும், வயிரை தொடும் நீளமான சிலுவை வைத்த ஒரு செய்யுன்னும் போட்டிருந்தாள்.. 

 

மிதமான அலங்காரம் பண்ணி கொண்டாள். கல்யாணம் குடுத்த பூரிப்பு எல்லாம் சேர்த்து அவளை மெருகேறி காட்டியது. 

 

காலை உணவை முடித்ததும் கிளம்பிவிட்டார்கள்.. இங்கே வந்தால், எங்கயாவது செல்லுவதற்கு என ஒரு ஸ்பிலெண்டர் பிளஸ் வாங்கி போட்டிருந்தான். அவன் தந்தை காரில் தான் எல்லாரும் வந்திருந்தார்கள், பெரும்பாலும் தேவை இல்லாமல் அவரின் காரை உபயோக படுத்த மாட்டான். 

 

இரு பக்கத்திலும் வயல் வெளி, நடுவில் இருக்கும் ஒத்தை அடி பாதையில் காரை விட பைக்கில் செல்வது அலாதி பிரியம்.

 

ஹரிசும் சொல்லி பார்த்தார், அவன் பைக்கில் தான் போவேன் என்று அடம் பிடித்து நின்று விட்டான்.

 

ரெஜினா தான் ஆயிரம் பத்திரம் சொல்லி அவளை அனுப்பி விட்டார்.

 

பைக்கிலா என்று தயங்கினாள் தான், பின் அவனுக்கே கவலை இல்லாதபோ நமக்கு என்ன என்று ஏறிகொண்டாள்.

 

ஏறினதும், அவளுக்கு  "பார்த்த முதல் நாளே" என்ற பாட்டு தான் நியாபகத்துக்கு வந்தது. 'ஹ்ம்ம், நல்லா ரொமான்டிக் ஆஹ் போக வேண்டிய பயணம்.. ரொம்ப சப்பையா போகுது'என எண்ணி  கொண்டாள்..

 

சைடில் பிடித்து கொள்ள ஹண்ட்ல் இருந்தது,  அதை பிடித்து கொண்டாள். 

 

மிதமான வேகத்தில் வண்டியை செலுத்தினாலும் அரை மணி நேரத்துல அவள் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.

 

உள்ளே நுழையும் போதே, அசைவ உணவின் வாசனை வந்தது.

 

"ஹ்ம்ம்" என ஆழ்ந்து நுகர்ந்தபடியே வந்தாள்..

 

"வாங்க மாப்பிளை" என வரவேற்பும் தட புடலாக இருந்தது. 

 

இவள் நேரிடையாக சமையல் அறைக்குள் சென்று விட்டாள். 

 

"வா கமலி" என்றவரிடம் "ம்ம்மா, உங்க கையாள ஒரு ஸ்ட்ரோங் காபி"

 

சிரித்தவர் "சரி சரி, தரேன்.. மாப்பிளைக்கு என்னடீ கொடுக்கட்டும்.. அவருக்கும் காபியே போடவா"

 

"ஹ்ம்ம் ஓகே ம்மா"  என்று சொன்னவள். ரோகினியை பார்த்தாள். 

 

அவளோ இவளை ஆராய்யும் பார்வைகளை தான் தொடுத்து கொண்டிருந்தாள்.

 

"என்ன ரோகி, புதுசா பார்க்குற மாதிரி பார்க்குற?"

 

"அதெல்லாம் ஒண்ணும் இல்லைடீ, சும்மா தான்.." என்று ரோஹிணி சொல்லும் போதே கமலி கையில் காபி குடுத்துவிட்டு, ஹாலில் இருக்கும் மாப்பிளைகள் இருவருக்கும் காபி குடுக்க விரைந்தார்..

 

அவர் சென்றதும், ரோகினி தன்னை கட்டு படுத்த முடியாமல் கேட்டுவிட்டாள்..

 

"என்னடீ, எல்லாம் ஓகேவா.எனக்கும் புரியுது இருந்தாலும் கேக்குறேன்" ரோகினி 

 

" ஹ்ம்ம்" தலையசைத்தால்..

 

"சரி, எதையும் போட்டு யோசிக்காத.. பழசை அப்டியே விட்டுடு என்ன?"

 

"ஹ்ம்ம் சரிக்கா..எங்க ஷீலா குட்டி.. வந்ததுல இருந்து பாக்கவே முடில"

 

"பக்கத்து வீட்ல இருக்காளே மதி, அவ மெஹந்தி போட்டு விடுறேனு கூட்டிட்டு போனா"

 

"ஓஹ் சரி சரி" என்று இருவரும் ஹால்குள் வந்தார்கள். 

 

 

அவளை பார்த்த ஜெபாஸ்டின், "பாப்பா, மாப்பிளைக்கு வீட சுத்தி காட்டு, அப்டியே உன் ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கவும் வை" என்று சொன்னவர்.. கெளதமை பார்த்து, "மாப்பிளை, எனக்கு கொஞ்சம் தோட்டத்துல வேலை கிடக்கு..நா அத பார்த்துட்டு விரசாவே வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு சென்றார்..

 

 

அவர் செல்லவே, "சகல, நீங்க இருங்க..நான் ஒருத்தர பார்க்க வேண்டி இருக்கு.. ஒரு மணி நேரத்துல வந்துடுறேன். வந்து உங்கள நான் தோட்டத்துக்கு கூட்டிட்டு போறேன்" என்று சுரேந்தரும் கிளம்பி விட்டான்.

 

பின், ரோகினியும் "போ" வென கண்ணைகாட்டி விட்டு சமையல் அறைக்குள் சென்று விட்டாள். 

 

"வாங்க" என அழைத்து முன்னே சென்றாள்.. 

 

செல்லும் போது தான் முதன் முறையாக கவனித்தான், பட்டு போல் இருக்கும் அவளின் கூந்தலை... கரிசல் காடுவென இருந்தது... அவன் வட்டத்தில் இவ்ளோ நீளமாக பார்த்ததில்லை. அவளின் பின்னழகு அசைய அசைய, பின்னலும் அந்த தாளத்திற்கு ஏற்ப அசைந்தது... 

 

புடவை மடிப்பு கட்சிதமாக, விசிறிவாழையென இருந்தது!!

 

அவள் நேரே மாடி படி தான் ஏறினாள்.. அந்த பாந்தமான அழகு, அவன் மனதை ரம்மியமாக்கியது.. 

வீடு பழங்காலத்து வீடுதான் என்றாலும் நவீன வசதிகளுடன் இருந்தது..

 

15 சென்ட் இடத்தில், எட்டு சென்ட் இடத்தில் வீடு எடுத்து இருந்தார்கள் வீட்டை சுற்றிலும் தோட்டம் தான்... தென்னை, வாழை, மாமரம், சப்போட்டா, முருங்கை, தக்காளி என பயிறிட்டு, வீட்டுக்கு போக மீதியை கடையில் கொடுத்தும் விடுவார்கள்..

 

கீழே இரு அறைகள், ஒரு ஹால், ஒரு கிட்சேன் என்று இருக்கும், கீழே இருந்து மேலே செல்ல உள்ளேயே படியும் இருந்தது..மேலே மூன்று பெட் ரூம். ஒன்று ரோகினிக்கு, இன்னொன்று கமலிக்கு.. மீதம் இருப்பதை கெஸ்ட் ரூமாக மாற்றி இருந்தார்கள்... 

 

எல்லாவற்றையும் சுற்றி காட்டிவிட்டு, கடைசியாக அவள் ரூமினுள் நுழைந்து சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்க கூறினாள் அவனிடம்.. 

 

அதே நேரத்தில் ஷீலாவும், ரோகினியும் வந்து விட்டார்கள்..

 

"சித்தி" என அழைத்த படியே ஷீலா வந்தாள். 

 

அவள் கையை பார்த்தவாறு "ஷீலா குட்டி, வா வா, சூப்பர்ஆஹ் இருக்கே.. இன்னும் கழுவலயா"

 

"இல்லை சித்தி, நீங்க வந்து வாஷ் பண்ணிவிடுங்க" என்று அழைத்தாள்..

 

"சரி, சரி, நானே பண்ணிவிடுறேன்.. சித்தப்பா பார்த்தியா,ஒரு ஹாய் சொல்லு" கமலி சொல்லியதும்...

 

"ஹாய் சித்தப்பா" சொல்லியது வாண்டு..

 

"ஹாய் குட்டி, உங்க பேர் என்ன?"

 

"ஷீலா" புதியதாய் சித்தப்பாவை பார்த்ததும் வெட்கபட்டுக்கொண்டே கூறினாள்.. 

 

"நைஸ் நேம்" என்றவனிடம் இந்தாங்க கெளதம் இத குடிங்க என்று இளநீரை நீட்டினாள் ரோகினி...

 

அவன் வாங்கியதும், "சரி, சரி, நீங்க ரெண்டு பேரும் வாஷ் பண்ணுங்க கீழே போய், ரொம்ப நேரம் வச்சிருந்தா சளி புடிச்சுக்க போகுது" என்று அவர்களை அனுப்பிவிட்டாள்..

 

அவர்கள் சென்றதும், "கெளதம், சாரி நான் தான் கமலி கிட்ட எல்லாத்தையும் சொன்னேன்"

 

"ஹ்ம்ம், பரவால்ல.. நீங்க சொல்லாட்டியும் நான் கண்டிப்பா சொல்லிருப்பேன்"  அவனும் நேரிடையாக விஷயத்திற்குள் வந்துவிட்டான்...

 

"என்னால நீ வான்னு சொல்ல முடியாது, பட் நீங்க என்னைய நீ வான்னே சொல்லுங்க.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை கெளதம்"

 

"இல்லங்க அது சரி வராது. என்ன தான் நம்ம சில சமயம் பேசி இருந்தாலும், கரெக்ட்ஆஹ் இருக்காது. எனக்கு நீங்க வாங்கனு சொல்றது தான் கபோரட்டப்பிலே"

 

சிரித்தபடியே, "சரி ஓகே தான்,  அப்புறம் நான் அட்வைஸ் பண்றேன்னு நினைக்க வேண்டாம். நீங்க கொஞ்சம் முவ் ஓன் ஆகி இந்த லைப் ஆஹ் ஏத்துக்க ட்ரை பண்ணுங்க கெளதம். என் தங்கச்சி லைப் அப்படிங்கிறது நாள நான் சொல்ல வரல, உங்கள பத்தி கொஞ்சம் தெரிஞ்சதுனால  சொல்லுறேன். கமலி சில சமயம் கொஞ்சம் துடுக்குதனமா பேசுவளே தவிர, ரொம்ப ரொம்ப நல்லவ.. எப்போவும் தெளிவா தான் யோசிப்பா, முடிவு எடுப்பா.. என்னைய விட பொறுப்பும் அதிகம் தான்.."

 

'தெளிவா யோசிப்பாளா, ரொம்ப தெளிவு தான்'..  கிண்ட்லாக நினைத்தவன் 'அவ்ளோ தெளிவுனா என்னைய ஏன் கல்யாணம் பண்ணிருக்க போறா" என வெறும் "ஹ்ம்ம்" என்று சொன்னான்.. அதை சொல்வதை தவிர என்ன சொல்வது என்று அவனுக்கும் தெரியவில்லை..

 

"சரி கெளதம், ரெஸ்ட் எடுங்க" என சென்று விட்டாள் ரோஹிணி..

 

இன்னும் ரோலர் கோஸ்டர் ரைடில் இருப்பது மாதிரி தான் இருந்தது.. அவனுக்கு மனது ஒரு நிலைக்கு வர முடியவில்லை..

 

பொறுத்திருப்போம் ♥️

 

 

This thread was modified 3 months ago by Lovita Elsi

   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top