நேரமே தூங்கியதுனாலயோ என்னவோ சீக்கிரமாக அவளுக்கு முழிப்பு தட்டியது.
பக்கத்தில் இவனை பார்த்தால், அசந்து தூங்கி கொண்டிருந்தான்.
அவள் அரவத்தில் எழும்பாமல் இருக்க பூனை போல் அவனை தாண்டி பெட்ல் இருந்து இறங்கினாள்.
இரவில் ஒற்றையா விட்ட சேலை பிலீட் சீராக எடுத்து பின் வைத்து குத்தினாள்.
மணியை பார்க்க, 6:30 என்று காட்டியது. குளிக்கணும் போல் இருந்தது. மாற்று உடை இல்லை. அம்மா குடுத்து விடுவதாக சொன்னார்..
கீழே போய் பார்க்கலாம் யாராவது எழுந்திருக்காங்களா என்று சென்றாள்.
படியில் இறங்க இறங்க காபியின் மணம் அவளை கட்டி இழுத்தது நேராக கிட்சேன்க்கு!!
அங்கே ரெஜினா காபி கலக்க ஆயத்தமாக இருந்தார்.ஆழ்ந்து மணத்தை சுகித்து இழுத்தவள், "காபியா அத்தை" என்று அவர் பின் நின்று கேட்க.
ஒரு நிமிடம் திக் என்றானவர், அவளை பார்த்து மென்நகை புரிந்து "வா டா, ஆமா.. காபி தான்..சீக்கிரமா எந்திச்சுட்டியா? "
"ஆமா அத்தை.. நைட் சீக்கிரமா தூங்கிட்டேனா. அதான் நேரமே முழிப்பு தட்டிடுச்சு"
அவள் சொன்ன பதிலில், கொஞ்சம் வருத்தம் எழுந்தது அவருள்.. ஆனாலும் தன்னை தேற்றி கொண்டார், 'பத்து மாசத்துல எதுவும் எதிர் பாக்கலனு சொல்லிட்டு, எதிர் பார்த்தா.. என்ன அர்த்தம்' என தன்னை நிந்தித்து கொண்டவர்.. 'இப்போ என்ன, ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கட்டும்.. அப்புறம் வாழ்க்கைய தொடங்கட்டும்' என்று தன்னை நிதானித்தும் கொண்டார்.
"ஹ்ம்ம், நேத்து முழுசும் நின்னுட்டே இருந்தீங்க.. டயர்ட் ஆஹ் இருந்துருக்குமே. அதான்" என்றவர். "கெளதம் எந்திச்சுட்டானா?"
"இல்லை அத்தை தூங்கிட்டு தான் இருந்தாங்க.. எனக்கு ரொம்ப கச கசன்னு இருந்துச்சு அதான் குளிக்கலாம்னு பார்த்தேன். மாத்த துணி இல்லை.. அம்மா குடுத்து விடுறேன்னு சொன்னாங்க. பெட்டி ஏதும் வந்துச்சா"
"ஆமா ஆமா, நைட் நீ போனதுக்கு அப்புறம் அண்ணிக்கு தெரிஞ்சவங்க குடுத்துட்டு போனாங்க. என் ரூம்ல தான் இருக்கு. இரு எடுத்து தரேன்" என்றவர் அவர் ரூமினுள் நுழைந்தார்..
அதே சமயத்தில், ஷாலினியும் மாலினியும் சமயற்கட்டிற்கு நுழைந்தார்கள்.
"இதோ பார்ரா, நேத்து கல்யாண முடிஞ்ச பொண்ணு காலையிலே இங்க உக்காந்துருக்கு.." கமலியை நோட்டம் விட்டபடி மாலினி கேட்டாள்..
அதற்குள் ஷாலினி, "என்ன கமலிக்கா நைட்ல ஒரே ஜல்ஸாவா"
"ஷாலினி" நிர்மலமான குரலில் தான் அழைத்தாள் ஆனாலும் கண்டிப்பு நிரம்பி இருந்தது.
"சரி சரி.. இப்படி கேட்க கூடாதா.. அப்போ இப்படி சொல்லுறேன். சிவ ராத்திரி, தூக்கம் ஏது ஹோய்" பாடிய படி வம்பு இழுத்தாள்..
"விடுங்கக்கா, அவளுக்கு கல்யாணம் ஆனதும் அவளை உண்டு இல்லைனு பண்ணிடலாம்.." மாலினிக்கு புரிந்தது கண்டிப்பாக எதுவும் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. என்ன தான் கமலி முகத்தில் ஒரு வித சோர்வு தெரிந்தாலும் கல்யாணம் ஆகுன அவளுக்கு இந்த சோர்வை பகுத்தறியத் தெரிந்தது.
"ஹா ஹா, வாய்ப்பில்லை ராஜா..நான்லாம் கல்யாணம் முடிஞ்சதும் கையொடே ஒரு சுட் ரூம் புக் பண்ணி கூட்டிட்டு போய்டிவேன்.. ரெண்டு நாளைக்கு வீட்டு பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டேன்" ஷாலினி
"பார்த்தீங்களா கமலிக்கா.. இப்போ உள்ளதுங்க எல்லாம் ரொம்ப விவரம் தான்" மாலினி
"ஹ்ம்ம்.." மெல்லிய புன்னகை சிந்தினாள்..
அதற்குள் ஷாலினி அப்பா கால் செய்யவே, அதை எடுத்து கொண்டு சமயல்கட்டுக்கு பின்னாடி தோட்டம் போல் இருக்கும் இடத்திற்கு சென்றாள்..
"கமலிக்கா எல்லாம் ஓகே தானே" என்று அவள் கேட்பதற்கும் கெளதம் சமையல் அறையின் வாசலுக்கு வந்து நின்று "க்கும்" தொண்டைய செருமினான்.
இருவரும் அவனை பார்த்ததும் திரு திருவென முழித்தனர்..
'போச்சு கண்டிப்பா கேட்ருப்பான்' அவன் பார்வையை வைத்து அறிய முனைந்தாள் கமலி..
அவன் தான் எதையும் லேசில் முகத்தில் காட்டுபவன் அல்லவே!!
அதற்குள் ஷாலினியும் வந்து விட்டாள்..
"அத்தான், என்ன உங்க பொண்டாட்டிய தேடி இங்கயே வந்துடீங்க? கொஞ்ச நேரம் கூட பிரிஞ்சு இருக்க முடிலயா, அவ்ளோ பாசம்.. ஹ்ம்ம்"
"ஷாலினி" சிறிது அதட்டினான்..
'புருஷனும் பொண்டாட்டியும் எதுல ஒத்துமையோ இல்லையோ என் பேர ஏலம் போடறதுல நல்லா ஒத்துமை" மனதில் பொரும மட்டுமே முடிந்தது.
"கெளதம், வந்துட்டியா. கமலி பெட்டி மாடிப்படி ஏறுற இடத்துல வச்சுருக்கேன் கொஞ்சம் உன் ரூமுக்கு எடுத்துட்டு போறியா?" சொல்லிய படி சமையல் அறைக்குள் அவனை தாண்டி வந்தார்.
"ஹ்ம்ம், சரிம்மா " என அவன் திரும்பினான், பின் என்ன நினைத்தானோ..
"ம்மா, காபி குடுத்து விடுங்க"
"சரி டா" என எல்லாருக்கும் காபி போட ஆரம்பித்தார்.
"என்ன அத்தை அத்தான் கிட்ட ஒரு முன்னேற்றம் தெரியுதே .. காபிலாம் குடுத்து விட சொல்லுறாரு" மாலினி
"நீங்க எதாவது கோணக்க மனக்கா பண்ணீங்களாடீ" என ஷாலினி, மாலினி பார்த்து கேட்டார்.
மூன்று பேரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்கவே.. ரெஜினா புரிந்து கொண்டார்.
"அதான், உங்க கூட்டத்தை பிரிக்க கேட்டுட்டு போறான்"
"அவ்ளோ ஈசியாலாம் எங்க சங்கத்தை பிரிக்க முடியாது அத்தை.. நீங்க போய் அத்தானுக்கு காபி குடுங்க.. கமலி அக்காவ அனுப்பலாம் முடியாது"
"ஷாலினிமா" என்று ரெஜினா ஆரம்பிக்கவும்..
அவர் சொல்லவரதை இடை மறித்து "என்ன சொல்ல போறீங்கனு தெரிஞ்சுருச்சு.. இப்படி சொல்ல கூடாது தானே சொல்ல போறீங்க...குடும்பம் மொத்தமே ஷாலினி ஷாலினி ஏலம் விடறாங்கபா" நொடித்து கொண்டாள்.
காபி ரெடியாகவே, கமலி கையில் குடுத்து குடிக்க வைத்து, அவனுக்கு ஒண்ணு குடுத்து மாடிக்கு அனுப்பி விட்டார்.
அதே சமயத்தில் ரூமில் அவனோ.. கட்டிலில் காய்ந்து இருந்த மல்லிகை பூவை கீழே தட்டி, படுக்கை விரிப்பை உருவி எடுத்தான்..
படுக்கை விரிப்பு இதற்கென்றே வாங்கி இருந்தார்கள். உருவி எடுத்தவன் என்ன நினைத்தானோ மடித்து அவன் பெட்டிக்குள் வைத்துவிட்டான்..
இந்த வீட்டில் வைத்துவிட்டு செல்ல விருப்பம் இல்லை. என்ன நினைத்து அதை தன் பெட்டிக்குள் வைத்தானோ அவன் மனதிற்கே வெளிச்சம்!!
பின், கப்போர்டில் இருந்த வேறொரு படுக்கை விரிப்பை நேர்த்தியாய் விரித்து விட்டான்.
கீழ் தட்டி விட்ட மல்லிகை பூவை, பெருக்குமாறு வைத்து கூட்டி அள்ளி குப்பை கூடையில் போட்டு கொண்டிருந்த நேரம், கமலி உள்ளே நுழைந்தாள்..
ரூம் பார்த்தாலே துப்புரவாக இருந்தது.
"நீங்களே எல்லாம் பண்ணிடீங்களா, நான் வந்து பண்ணிருப்பேனே"
"இருக்கட்டும்" அவளை பார்க்காமல் பதில் உரைத்தான்.
விளக்குமாறை வெளியே எப்போதும் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு உள்ளே வந்தான்.
"காபி அத்தை குடுத்து விட்டாங்க, இந்தாங்க" அவன் முன் நீட்டினாள்..
"வச்சுடு" என டேபிளை கை காட்டிவிட்டு பாத்ரூமினுல் சென்று கை கழுவி வர சென்றான்.
'ஒரு வார்த்தை ஒரு லட்சம்னு யாராச்சும் இவன் கிட்ட சொல்லிருப்பாங்களோ.. ஒரு வார்த்தைக்கு மேலே எதுவுமே வர மாட்டிக்குதே' கலாய்த்தபடி டேபிள் மேல் வைத்தாள்..
வெளியே வந்தவன், "நீ இப்டியே போயிருக்க வேண்டாம். கண்டிப்பா அம்மா வருத்தப்பட்டிருப்பாங்க." ஒரு வித இறுக்கதோடே கேட்டான்.
இவன் ஒருத்தன் ஒண்ணு ஒரே ஒரு வார்த்தை பேசுறான், இல்லை குறை சொல்ல வாயை துறக்கான் கடுப்பாய் வந்தது அவளுக்கு..
என்ன பேசுறரோம் என்று அறியாமல், அவனுக்கு பதிலுக்கு பதில் குடுத்து விடும் முனைப்பில், "அவ்ளோ யோசிக்கிறீங்கனா, அப்போ வருத்தபடமா வச்சுருக்க வேண்டியது தானே" சொன்னதும் தான் புரிந்தது.. இதற்கு அர்த்தம், இரு பொருள் வருதே என்று ..
இவள் சொன்னதோ, வருத்தபடாம இருக்க உடை பெட்டியை முதலில் இவனே எடுத்துட்டு வந்துருக்கலாம் என்று, ஆனால் இவர்கள் இணக்கமாய் இருந்திருந்தால் இவள் கீழ சென்று இருக்க மாட்டாள், அவன் அம்மாவும் வருத்தப்பட்டும் இருக்க மாட்டார்கள் என்று இன்னொரு பொருளும் படும் அல்லவா... "ஹைய்யோ, நான் தப்பா சொல்ல வரல" மேலும் இவள் இப்படி சொல்ல...
அவனுக்கும் எப்படி ரியாக்ட் செய்வது என்று புரியவில்லை. 'என் தப்பு தான், தான் கேட்டதுதான் தப்பு கெளதம்' என்ற நிலைக்கே வந்து விட்டான்..
அவளுக்கு மேலும் என்ன சொல்வது என்று தெரியாமல், தன் உடை எடுத்து கொண்டு குளிக்க சென்றுவிட்டாள்..
பொறுத்திருப்போம் ♥️♥️
பிடித்திருந்தால் கமெண்ட் செய்யுங்கள்.. தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ♥️♥️♥️
Really sorry இவ்ளோ நாள் அப்டேட் பண்ணாமல் இருந்ததுக்கு.. கொஞ்ச ஒர்க் நிறைய ஆகிட்டு.. Thanks for all this huge support♥️♥️🤗
கமெண்ட் பண்ணுங்கள்.. கதை எப்படி இருக்குதுனு கமெண்ட் பண்ணுங்க ப்ளீஸ் 🙏🙏
இந்த கதைக்காக யாராச்சும் வெயிட் பண்ணிட்டு இருக்கீங்களா. கதைய தொடரவா வேண்டாமா?
