இதயம் 6

 

(@lovita-elsi)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 10
Thread starter  

இதோ இவர்களுக்கு நிச்சயித்து இரு மாதங்கள் கடந்து இருந்தது. இன்னும் இரு வாரங்களே இருந்தது திருமணத்திற்கு.

இவள் திருமணத்திற்கு இரு நாட்களும், திருமணம் முடிந்து நான்கு நாட்களும் என்று விடுப்பு எடுத்து இருந்தாள்.

கெளதமும், கமலியும் ஒரே ப்ராஜெக்ட் தான். இவன் ப்ராஜெக்ட் மேனேஜர். இவள் சீனியர் அஸோஸியேட்.

ஒரு நாளும் தெரிந்தது போலவே காட்டினதும் இல்லை அவளை கவனித்ததும் இல்லை. நீ யாரோ நான் யாரோ என்கிற நிலைபாட்டில் எட்ட நின்றுவிட்டான்.

அவன் சகஜமாக பேசவில்லை என்றாலும், சிரிப்பிற்கும் பற்றா குறை என்பதே இவளின் ஆற்றாமை.

டீம்மை பொறுத்த வரை மிக கண்ணியமானவன், முசுடு.. வலிசல் அவனிடம் இருக்கவே இருக்காது. பெண் என்றாலும் ஆண் என்றாலும் சரி சமமாக தான் பேசுவான்.

சில பெண்கள் வலிய வந்து ஜொள்ளினால் வாங்கி கட்டாமல் செல்லமாட்டார்கள். எட்ட நில் எச்சரிக்கிறேன் என்பது சரியாக இவனுக்கு பொருந்தும்!!

அன்றைய தினம் மதிய வேளையில், ஒரு 10 பேர் மட்டும் அமரக்கூடிய காங்பிறேன்ஸ் ரூமில் இவள் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தாள்.  பெருசாக வேலை இன்னும் அவளுக்கு கொடுக்கபடவில்லை. மதியத்திற்க்கு முன் கொடுக்க பட்ட வேலையை முடித்துவிட்டு.. பின், எதாவது ப்ராஜெக்ட் சம்மந்தமாய் படிப்பாள். அவள் பி ஜி(paying guest) சென்று படிக்க முடிவதில்லை. பேக் பண்றதும், கல்யாணத்துக்கு ஏதாவது வாங்குவது என்று போய் விடுவதால்!

அவளுக்கு எதிற்கே கெளதம் உக்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தான்.
அவனுக்கு தெரியும்தான் அவள் அங்கே இருக்கிறாள் என்று!

அந்த வேளையில், திடிர்யென கதவை திறந்து "கமலி" என வாஞ்சயாய் ஒரு குரல் கேட்டது.

கேட்டதும், லேப்டாப்யிலிருந்து தலையை உயர்த்தி பார்த்தாள். அவள் பக்கத்தில், அவள் காலேஜ் தோழி "ராகினி". காலேஜில் இருவரும் இணை பிரியா  தோழிகள். காலேஜ் முடிந்த பின் இவ்ளோ காலமும் தொடர்பில் இருப்பவர்கள். ராகினிக்கு, இரு வயதே ஆன பையன் உள்ளான். கடந்த ஓர் ஆண்டாக இங்கே தான் வேலை பார்க்கிறாள்.

"ராகி, வா வா.. என்ன பாக்க வந்துட்டே.. இத்தன மாசம் சும்மா கூட என்னனு பார்க்க வரல"

"ஹ்ம்க்கும், என்ன பண்றது நீ நேத்து சொன்ன விஷயத்தை கேட்டதும் மனசே சரி இல்லை. அதான் நேர்ல வந்துட்டேன்"

கமலி, 'ராகி' என எக்ஸ்சைட் ஆகுனதை பார்த்தான். அவள் முகமும் அகமும் மலர்ந்த மாதிரி அவன் கண்களுக்கு தெரிந்தது. 'அப்போ வேண்ட பட்டவள்' என புரிந்து கொண்டான். காதில் ஹெட்செட் போற்றிருந்தாலும், பாடல் அதுவாகவே நின்று விட்டது என எதுவும் தற்சமயம் கேட்கவில்லை. அதனால் அவர்கள் பேசுவதை தெளிவாக கேட்க முடிந்தது.

"அப்டி என்ன சொன்னேன்?"

"அடி பாவி, நீ சொன்னதை கேட்டதுல இருந்து உன்ன எப்போ பாப்போம்னு மனசு தவியா தவிச்சுச்சு.  நீ ரொம்ப அஸ்சால்டா என்ன சொன்னேனு கேக்குற. ஹ்ம்ம் உனக்கு என்ன தாயி எல்லமே கசுயல் தான்.. எப்படி தான் இப்படி இருக்கியோ"

கமலி எதுவும் சொல்லவில்லை, ஓரக் கண்ணால் எதிரில் இருக்கும் அவனைத் தான் பார்த்தாள். பேசுறது கேக்குமோ என்று!

"ஹேய், அங்க என்ன பார்க்குற. கெளதம் தானே, அவரு இதல்லாம் கவனிக்க மாட்டாரு.. நேரமும் இல்லை அவருக்குலாம்..பத்தாதுக்கு ஹெட்செட் யூஸ் பண்றாரு. அதுனால கவலையை விடு" அவன் ஒரு டைம் ராகினி டீம் ஹண்ட்ல் பண்ணும் போது அறிந்தும் கொண்டாள் அவன் எப்படி பட்டவன் என..

"ஹ்ம்ம் அப்போ சரி" என தலையை அசைத்து கொண்டாள் கமலி.

"அப்புறம் சொல்லு, என்ன பண்ண போற?"

"என்ன என்ன பண்ண போறேன்"

"ஏய், செருப்பால அடிப்பேன். ஒழுங்கா கல்யாணத்த நிறுத்து.. நல்லா யோசிச்சு பார்த்தேன் இதான் சரியான முடிவா இருக்கும்னு தோணுது"

இதை கேட்கும் போது கெளதம் 'யாருமா நீ, இவ்ளோ அருமையான தோழியா இருக்க.. எப்படியாச்சும் அவளை கன்வின்ஸ் பண்ணிடுமா' உள்ளம் உருக வேண்டிக்கொண்டு இன்னும் கூர்மையாய் அவர்கள் பேசுவதை கவனிக்கலனான்...

"கல்யாணத்த நிறுத்த லாம் முடியாது வேற ஏதாச்சும் சொல்லு" - கமலி..

"இத தவிர வேற எதுவும் இல்லை கமலி, எப்படி டீ  கல்யாணமே வேண்டாம்னு சொன்னவர் கூட வாழ முடியும்.."

"நீ சொல்லவரதுலாம் புரியத்தான் செய்கிறது. பட் கல்யாணத்த நிறுத்த முடியாதுங்கிறதுல நான் ஸ்ட்ரோங் ஆஹ் இருக்கேன் ராகி.. எப்படி அபிட்டர்  மெரைஜ் மேனேஜ் பண்ணனும்னு மட்டும் சொல்லு"

"மேனேஜ்ஜே பண்ண முடியாதுனு சொல்றேன்.. மறுபடி மறுபடி எப்படி ஹண்ட்ல் பண்றதுனே கேக்கற.. இங்க பாரு கமலி, நீ அவர புரிஞ்சு அவரு உன்னை புரிஞ்சு.. அதுக்குள்ள தொண்டு தொட்டு கிழவி ஆகிடுவ பக்கி"

"ஏன் அரேஞ் மெரைஜ்லாம் அப்படித்தானே நடக்குது.. கல்யாணம் முடிஞ்சு தானே அண்டர்ஸ்டாண்டியிங் வருது.. அவங்கலாம் என்ன தொண்டு தொட்டு கிழவியா ஆகிட்டாங்க"

"சரிடீ, நீ சொல்றதுக்கே வரேன்.. அவங்கலாம் அரேஞ் மெரைஜ்னாலும் அங்க நடக்குறதுலாம் வேற"

"என்ன வேற" என யோசித்தவள் "ஓஹ், நீ 'மேட்டர்' பத்தி சொல்லுறியா" என கமலி சொல்லியதும் கௌதமிற்கோ நிலை கொள்ள முடியவில்லை.. ஒருத்தன் இங்கே இருக்கிறான் என  மதிக்கவில்லையோ என்று தொண்டையை செருமினான்....

அவன் செருமியதை இருவரும் கேட்டாலும் கருத்தில் பதியவில்லை..

"ஹ்ம்ம் அதுவும் தான்.. ஒண்ணு காதல் இருக்கும் இது இல்லைனா, நீ சொன்னது இருக்கும்.. இது ரெண்டுல ஏதாவது ஒண்ணு ஒரு கட்டத்துல வழி காட்டிடும்.. இப்படி எதுவுமே இல்லாம இருக்குறது ரொம்ப கஷ்டமாக்கிடும்"

"ஓஹ் அப்போ கூடலில் காமம், இல்லை கூடலில் காதல், இது மட்டும் தான் வாழ்க்கையை தீர்மானிக்கும்னு சொல்ற"

"பைத்தியக்காரி பையித்தியக்காரி.. அப்டி இல்லை. அந்த காலத்துலலாம் பார்த்தா கல்யாணம் பண்ணாங்க.. கல்யாணம் ஆகுன அன்னிக்கு நைட் தான் பார்த்துப்பாங்க, அன்றைய தினமே வாழ்க்கையை ஆரம்பிச்சுடுவாங்க.. முதல்ல ஆரம்பம் வேணும்னா காமம்ஆஹ் இருக்கலாம் பட் சில நாட்கள்ல உணர்வுகள் சங்கமிக்க ஆரம்பிச்சுடும்.. இதுலாம் அனுபவச்சவங்களுக்கு தான் தெரியும்.."

"ஓஹ் ஹோ, அப்போ இப்படி தான் பண்ணனும்!"

ஏதோ குதர்க்கமா யோசிச்சுட்டானு தோணியது ராகினிக்கு, "எப்படி" என்று கேட்டாள்..

"ஹ்ம்ம்,  அப்போ நா அவரை ரேப் பண்ணிட வேண்டியது தான் முதல் ராத்திரில"

அப்பொழுது தான் கெளதம் தொண்டையை செருமிட்டோம், சரி பேருக்கு தண்ணிய குடிப்போம் என்று குடித்து கொண்டிருந்தான், அதே சமயம் இவள் இப்படி சொன்னதும் அடுத்த கனம் புரை ஏறி விட்டது..

இருவருக்கும் சிறிது பயம் எங்கே கேட்டிருப்பானோ என்று..

ஒரு நிமிடம் முழுதாக எடுத்து தன்னை சீர் படுத்திகொண்டு, தன் வேலையை தொடர ஆரம்பித்தான். ஏதோ அப்டி இருவர் பேசினார்கள் என்கிற அசப்பு இல்லாமல்.

ஆனால் மனதிலோ, "இவளை கட்டிக்கிட்டு" என்று சட்டென்று தோன்றியது.. தன் மனம் அப்டி நினைத்ததும் பிடிக்கவும் இல்லை அதனால் அதை ஒதுக்கி தள்ளி விட்டான்.

அவன் வேலையை தொடர்ந்ததும் தான் இருவருக்கும் ஆசுவாசம் வந்தது...

"கமலி, உன்ன என்ன பண்றதுனே தெரிலடீ.. ஒரு ரோஜா செடில பூ பூக்க வைக்கணும்னு நினைச்சா, வெயிட் மட்டுமே பண்ணிட்டு இருக்க கூடாது. அந்த செடிக்கேற்ப உரம் வைக்கணும், நிலத்துக்கு ஏற்ப தண்ணி விடணும், பாதுகாக்கணும்.. இப்படி பலதும் இருக்கு, இதுல இருந்து நான் உனக்கு என்ன சொல்ல வரேன்னு சொல்லு பார்ப்போம்"

"ஹ்ம்ம், மெனக்கிடனும்னு சொல்ற"

"கரெக்ட் கமலிமா... நீ கற்பூரம்டீ" சரி சரி முறைக்காத..

"நான் ஏன் இதல்லாம் சொல்றேனா, யாராச்சும் ஒருத்தங்க மெனக்கிடனும்.. நீங்க ரெண்டு பேரும் அப்டி இல்லைனு நீ சொன்னதை வச்சு புரிஞ்சுது.. ரெண்டு வீட்டு பெரியவங்க வாக்கு கொடுத்துட்டாங்கனு கல்யாணம் பண்ண போறீங்க.. இதுல உன்னவருக்கு லவ் பெயிலியர், அப்புறம் உனக்கு உன் கமிட்மென்ட் வித் லோன்ஸ்.. ரெண்டு பேரும் அவங்க அவங்க கம்போர்ட் சோன் விட்டு வெளிய வரவேணாம்னு ஓகே சொல்லிகிட்டீங்க.. அப்போ யாரு மெனக்கிடுவா.."

"ஹ்ம்ம்,.. மெனகிடுறது, மனசை மாத்துறது, என்ன காதலிக்க வைக்குறதுலாம் இத பத்திலாம் இப்போ யோசிக்க முடியாது ராகிமா.. அது மட்டும் இல்லை எனக்கு அதுலாம் வரும்னே தோணல.. அதுவும் இல்லாம அப்பா ரொம்ப விருப்ப படுறாங்க. அவங்க விரும்புறத குடுக்கணும்னு நினைக்கிறன் ராகி... இப்போ என்னால எதுவுமே செய்ய முடியாது.. நிறுத்த லாம் விருப்பமும் கிடையாது"

"ஹ்ம்ம், அப்டினா ஒரே வழி கோ வித் த ப்லொ.. தைரியமா இருந்து பேஸ் பண்ணிக்கணும்... எதுவும் கால போக்கில தான் மாறும், மாற்றம் ஒன்றே மாறாதது  "

" இதே தான் அவர் கிட்ட சொல்லிட்டு வந்தேன்" என சிரித்தாள்..

" அது சரி, விடு பாத்துக்கலாம்.. நான் கேக்கவே இல்லை பாரு.. உன் பியன்சி நேம் என்ன"

அவள் கேட்டதும், அவனை கடைக்கண்ணால் பார்த்து கொண்டே "ராட்லி" என்றாள்..

"ஹ்ம்ம் நைஸ் நேம்.. சரி டைம் ஆகிட்டு.. நான் கிளம்புறேன். உன் கல்யாணத்துக்கு வரவும் வேணானு சொல்லிட்ட.. பட் நானும் அந்த டைம் வெளில போறேன்.. ஆல் தி பெஸ்ட்டீ.. நீ வந்ததும் பேசறேன்" என ராகினி விடை பெற்று சென்று விட்டாள்..

பொறுத்திருப்போம்.......


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top