இதயம் 4

 

(@lovita-elsi)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 10
Thread starter  

 

அரை குறை மனதோடு கெளதம் கிளம்ப ஆரம்பித்தான். ஹரிஷ் உடைய பூர்விக வீடு ஒன்று மதுரையில் தான் உள்ளது...எப்போவாவது வருவார்கள். இந்த முறை பெண் பார்க்க வசதி படவே வந்துவிட்டார்கள். பெண்ணின் வீடு திருமங்கலம், மதுரையில் இருந்து நாற்பது நிமிடம், பத்த மணிக்கு கிளம்புவதாக இருந்தது.

கெளதமின் தம்பி சித்தார்த் ஜோர்டான் தன் குடும்பத்தோடு ஒரு தினம் முன்பே வந்து விட்டான்.. அவன் மனைவி மாலினி, ஒரு வயது குட்டி வாண்டு ஹேமா என்று பெங்களூருரில் வசிக்கிறார்கள். இவர்களின் திருமணம் காதல் திருமணம்.. இரு வீட்டிலும் எதிர்ப்பு இல்லை. கெளதம் கல்யாணம் முடித்துவிட்டு இவர்கள் பண்ணலாம் என்று தான் இருந்தார்கள். ஆனால், கெளதம் தான் எனக்காக பார்க்கதீங்க, நான் வேற நீங்க வேற..  எனக்கு கால அவகாசம் வேணும் என்றும் உடனே அவர்களின் திருமணத்தை நடத்தி விட்டான்.

இதோ கிளம்பிவிட்டார்கள் திருமங்கலத்திற்கு. கௌதமே வண்டியை ஓட்டினான். பெண்ணின் வீடு ஹரிஷ்யிடம் கேட்டு அறிந்து வந்து நிறுத்தினான். அவர்களை இறக்கி விட்டு, கொஞ்சம் தள்ளி வாகனத்தை நிறுத்த போனான்..

கார் நிறுத்திய சத்தம் கேட்டு  செபாஸ்டியன் வாசலுக்கே வந்து அவர்களை வரவேற்றார்...

"வா ஹரிஷ், வா ம்மா தங்கச்சி" செபாஸ்டியன்

"வரோம், வரோம்.. என்னடா எப்படி இருக்கே?"

"நல்லா இருக்கேன், மாப்பிள்ளை வரலையா?" தவிப்பாக கேட்டார்..

"நீ பயப்படாத செபா, அவன் வந்துருக்கான்..எல்லாம் நல்லாதான் நடக்கும்... வா போலாம்"

"நீங்க உக்காருங்க, நான் மாப்பிளை வந்ததும் சேர்த்தே கூட்டிட்டு வரேன்" என்று சிவா என ஒருத்தரை அழைத்து உள்ளே கூட்டிட்டு போக சொன்னார்.

ஹரிஷ்க்கு, அளவில்லா சந்தோசம்.. தான் அனுபவக்கிக்காத மாமனாரின் அன்பை பெறுகிறான் என்று..

கௌதமும் நிறுத்திவிட்டு வந்தவுடன், "வாங்க மாப்பிளை" என்று உண்மையான பாசத்துடனும், வாய் கொள்ள புன்னகையுடன் வரவேற்த்தார் மனுஷன்.

ஒரு நிமிடம் ஜெர்க் ஆனாலும், அவர் அன்பில் நெகிழ்ந்த மனதை அடக்கி.. "ஹ்ம்ம், அங்கிள்" என்றான்

"உள்ள வாங்க" என்று கை பிடித்து அழைத்து சென்றார்.

உள்ளே தட புடலா உணவு உபசரிப்பு நடந்து கொண்டிருந்தது..

இவன் வந்ததும், பெண் வீட்டாரின் பரபரப்பு கண் கூடாக தெரிந்தது.

கமலிக்கு அவன் வந்ததும் தெரிந்தது, ஷீலா முதல் ஆளாக அவளிடம் ஓப்பித்து விட்டாள். "சித்தி, சித்தப்பா வந்தாச்ச்சு"

"சித்தப்பா வா? உனக்கு யார் சொல்லி குடுத்தது"

"பாட்டி தான் சொன்னாங்க சித்தி,  உனக்கு சித்தப்பா பார்த்துருக்காங்க"

"அம்மா" என்று பல்ல கடிக்க மட்டுமே முடிந்தது. கூடவே அவன் என்கிட்ட பேச கேப்பானா, நான் கண்டிப்பா போய்ட்டு கேக்க முடியாது.. கடவுளே, அவன் என்கிட்ட பேசணும்னு கேக்கனும்னு வேண்டுதல் தான் வைக்க முடிந்தது..

இங்கோ, " அப்புறம் செபா.. தாம்புலம் மாத்திக்கலாமா" ஹரிஷ் கேட்டார்.

"சரி ஹரிஷா" என்று செபாஸ்டியன் சொல்லவும்.. "ஒரு நிமிஷம், நான் பொண்ணுகிட்ட பேசணும்" என்று கெளதம் சொன்னதும் அந்த இடத்தில் அமைதி நிலவியது..

அவன் கேட்டதும் தான் தாமதம், ஹரிஷ் முகத்தில் கோவத்தின் சாயல்.

நிலைமையை செபாஸ்டியன் கையில் எடுத்தார்.. "சரி மாப்பிளை, போய் பேசிட்டு வாங்க" என ரோகினியிடம் "மாப்பிளையை பாப்பா ரூமிற்கு கூட்டிட்டு போ, ரோஹிணிமா" என்றார்.

அவளும் "வாங்க" என அழைத்து சென்றாள் மேலே இருக்கும் கமலியின் அறைக்கு.. செல்லும் வழி எங்கும் யோசனையே 'இவனிடம் எதாவது சொல்லலாமா,நீ லவ் பண்ணது, காவ்யா ஏன் விட்டுட்டு போனது எல்லாமே..பின், சரி வேணாம், அவ கிட்ட சொல்லியாச்சு, அவ முடிவு எடுக்கட்டும்' என அவனை கமலி அறையின் வாசலில் அவனை நிறுத்திவிட்டு "இது தான் அவ ரூம், நீங்க போய் பேசுங்க" என்று கீழே இறங்கிவிட்டாள்..

இழுத்து ஒரு பெருமூச்சு விட்டு, கதவை தட்டினான்..

தன் வீட்டு மக்கள் தட்டாமல் தான் அவள் ரூமினுள் வருவார்கள்.. அப்பா மட்டும் வெளியே நின்று குரல் மட்டுமே கொடுப்பார் அதனால் தட்டுறதுலேயே தெரிந்தது, இது வேற யாரோ என்று.

"வாங்க" என மெல்லிய குரல் அவன் செவியை வந்தடைந்ததும் உள்ளே நுழைந்தான்.

அவன் உள்ளே நுழைந்ததை பார்த்ததும் கீற்றாய் புன்னகையாய் தவழவிட்டாள்..

அவன் பார்த்தாலும் கண்டு கொள்ளவில்லை.. வெறும் ஊடுருவும் பார்வையை தான் பார்த்தான். ஆனால் அவன் மனதோ, 'என்ன ரொம்ப சின்ன பொண்ணா தெரிரா, எப்படி நான் சொல்றத எடுத்துப்பா' இதை தான் யோசித்தது..

'என்ன இது, பதிலுக்கு ஒரு குட்டி தலையசைப்பு  கூட இல்லை,இவங்க இப்படி வேறு யாரையோ நான் பார்த்து சிரிக்குற மாதிரி நிக்கிறாங்க, இப்படி இருந்தா நா என்னனு பேசுறது' ஐயம் எழுந்தது அவளுக்கு..

"க்கும்" தொண்டைய செருமினான்.

அவனை அவள் ஏறெடுத்து பார்த்ததும், "கொஞ்சம் பேசணும்"

"ஹ்ம்ம்" என மெதுவாக தலையசைத்தாள்..

"நா டைரக்ட் ஆஹ் விஷயத்துக்கே வரேன். எனக்கு பெருசா கல்யாணம் பண்றதுல இஷ்டம் இல்லை. வீட்ல ரொம்ப கம்பெல் பண்ணாங்க, கல்யாணம் முடிஞ்சதும் எல்லாம் சரி வந்துடும்னு கூட சொன்னாங்க பட் எனக்கு அதுல நம்பிக்கை இல்லை. வீட்ல பேசி என்னால நிறுத்த முடியாது. சோ பெட்டெர் உங்க வீட்ல பேசி நீயே நிறுத்திடு" அவனுக்கே உரித்தான குரலில் கூறினான்.

"நீங்க இன்னும் முவ் ஆகலையா?"

"எதுல?"

"காவ்யா அக்கா"

"ஓஹ்" மறுபடியும் ஒரு ஊடுருவும் பார்வையை குடுத்தான். அந்த பார்வை நடுக்கத்தை தான் குடுத்தது அவளுக்கு.

"அது வந்து, ஏன் அக்கா காவ்யா அக்கா பிரின்ட்.. அவ சொல்லி தெரியும்"

"ஓஹ், சரி.. எனக்கு விருப்பம் இல்லைனு சொல்றதுக்கும் நீ கேக்குறதுக்கும் என்ன சம்பந்தம்"

"இல்லை அதுனால தான் வேணாம்னு சொல்லறீங்களோ"

"தட்ஸ் நன் ஒப் யுவர் பிசினஸ்" பட்டென மூஞ்சியில் அடித்த மாதிரி பதில் கூறினான்.

அவன் சொன்ன விதம் பாதித்தாலும் தளராமல் போடா என ஒதுக்கி விட்டு, "ஓகே, என்னாலயும் நிறுத்த முடியாது.. நானும் வீட்டை எதிர்க்க முடியாது.  ஐ அம் ஆல்சோ ட்ராப்ட்.. எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் உங்க கிட்ட இருந்து"

"நான் ஹெல்ப் பண்ணா கல்யாணத்த நிறுத்திடுவியா?"

"கல்யாணம் நிறுத்த மாட்டேன், பட் ஐ கேன் கிவ் யூ ஒன் அசூரன்ஸ்.. உங்கள நான் எந்த விதத்திலயும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். புரியும்னு நினைக்கிறன், ஒரு மனைவியா எதுவும் எதிர் பாக்க மாட்டேன்.. நமக்குள்ள எல்லாம் ஒத்து வந்ததுக்கு அப்புறம் நம்ம அடுத்த படி எடுத்து வைக்கலாம்"

"லுக், என்னால அடுத்த படி எடுத்து வைக்க முடியாது.. வீனா உன் வாழ்க்கையை வேஸ்ட் பண்ணாத"

"ஓஹ், எனக்கு அதுவும் பரவலா.. "

"உனக்கு என்ன பிரச்சனைனு இப்படி ஒரு முடிவு" அவனால் கேட்காமல் இருக்க முடியவில்லை. 

"ஹ்ம்ம்,  தட்ஸ் நன் ஒப் யுவர் பிசினஸ்" என முகத்தை பாக்கவாட்டாக திருப்பி கூறினாள்

அவள் அப்டி கூறியதும், அவன் உதடு சிறிதாக விரிந்ததோ என்ற அளவிற்கு விரிந்தது..

பின், அவளாகவே.. "அப்டினு எனக்கு சொல்லணும்னு ஆசை தான்.. இருந்தாலும் சொல்ல மாட்டேன். எனக்கு இதுக்கு மேலே இப்பிடி பொம்மை மாதிரி அலங்கரிச்சுட்டு நிக்க முடில..  நீங்க சொல்றத வச்சு பார்க்கும் போது உங்கள கல்யாணம் பண்ணா கல்யாணத்துக்கு அப்புறமும் நான் நானாகவே இருக்கலாம்னு தோணுது"

அவள் நினைப்பதற்கும் காரணம் இருக்கிறது. அவள்  தோழிகள் நிறைய பேர், இன்றைக்கு தங்கள் சுயம் இழந்து நிற்கிறதை தான் பார்க்கிறாளே..

இது எவ்ளோ நிதர்சனமான உண்மை.. எத்தனை பெண்கள் இன்று கல்யாணம் முடிந்தும் அவர்களாகவே இருக்கிறார்கள். இந்த ஆசை நிராசையாக தான் இன்னுமும் பல பெண்களுக்கு இருக்கிறது!!

"ஓஹ்" அவனுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் சொல்வதில் இருக்கும் உண்மை புரிகிறது. சுடுகிறது. அவனும் பார்க்கிறான் தானே..

ஆனாலும், "புருஞ்சுக்கோ.. இது வாழ்க்கை, விளையாட்டு இல்லை. என்னைய மாத்த முடியும், சாதிச்சுருவேன் அப்டினு லேசா நினைக்காத.. கண்டிப்பா முடியாது.. சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்"

"ஹ்ம்ம், உங்கள மாத்த முடியாது அது ஓகே.. பட் மாற்றம் ஒன்றே மாறாதது இத நான் நம்புறேன்.. நா உங்கள்ட ஹெல்ப் கேட்டேன்"

ஆனால் மனதோ 'மவனே, உன்ன நான் மாத்தி காட்றேன்டா.. கமலி, கமலி னு சுத்த வைக்கல.. நான் கமலி இல்லைடா' என்று உறுதி எடுத்து கொண்டாள்.

"என்ன சொல்லு, முடிஞ்சா மட்டும் தான் பண்ணுவேன்"

"நான் உங்கள கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமும் என்னுடைய சம்பளத்தை குடுத்து வீட்டுக்கு ஹெல்ப் பண்ணுவேன்.. அது ஓகேவா"

இவ கல்யாணம் பண்ணுவேன் சொன்னதும் அவனை கடுப்பாக்கியாது.. அதே கடுப்பில், "கல்யாணமே வேண்டாம்னு சொல்றேன், நீ என்னடானா இப்படி கேட்டுட்டு இருக்க. நீ என்னவேணாலும் பண்ணு.. ஐ டோன்ட் கேர்..இதோ பாரு, இதான் உங்க இனத்துக்கு உள்ள பிரச்சனை.. இன்டெபேண்டண்ட்ஆஹ் இருந்தா மட்டும் போதாது, உங்களுக்குனு இருக்குற உரிய உரிமையை யார்கிட்டயயாவது குடுத்துட்டு அவங்க எப்போ குடுப்பாங்க இல்லை குடுப்பாங்களான்னு எதிர் பார்த்துட்டே இருக்காதீங்க. உங்க உரிமை உங்க கையில தான் இருக்கு.. ஸ்டாண்ட் போர் யோர்ஸெல்ப்"

ஏனோ அவன் சொன்ன விதம் பிடித்திருந்தது.. "சரி" என கேட்டுக்கொண்டாள்..

இந்த சமயத்தில் கதவு மறுபடியும் தட்டபட, கெளதம் கதவிற்கு சிறிது தள்ளி நின்றிருந்தான், ஆனாலும் இவள் வேகமாக அவனை தாண்டி கதவை லேசாக திறந்து தலையை மட்டும்விட்டு எட்டி பார்த்தாள்..

ரோஹிணி தான்.. "ஏய், நேரமாச்சுடீ.. வாங்க.. உன்னையும் வர சொன்னாங்க" அழைத்து விட்டு சென்று விட்டாள்..

கதவை மறுபடியும் சாத்தி விட்டு அப்படியே இடது பக்கமாய் திரும்பும் போது அங்கே இருந்த மேஜை அவளை தடுக்க, அப்படியே மல்லாக்க விழ இருந்தவளை, வயிற்றின் முன் பிடித்து, கெளதம் தன் மீது அவளை தாங்கி நிறுத்தி கொண்டான்.

அவன் இடது கை அவளின் குழைந்திருந்த வயிற்றை கொத்தாக பற்றி பிடித்திருந்தது, அவள் தலையில் சூடி இருந்த மல்லிகை சரத்தின் மணம் அவனை எங்கோ இழுத்து செல்லும் பிரமை!! இன்னும் நெருக்கி சேர்த்து அணைக்க கை பர பரத்தது..

அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்து,"கெளதம், வலிக்குது" அவள் குரல் நடு நடுங்கி ஒலித்தது. ஆனால் அவனுக்கு ஏதோ அவள் முனங்குவதாக கேட்டது.

மறுபடியும்  "கெளதம், வலிக்குது" என்று அவன் தன் வயிற்றை பிடித்திருந்த கையை அசைத்தாள்.. அதில் அவன் உணர்வு பெற்று, "ஓஹ்" என்றும் டப்பென கையை எடுத்துவிட்டான்.

தான் ஒரு நிமிடம் மயங்கியதை நினைத்து தன்னையே நிந்தித்து கொண்டாலும் 'ஹையோ, என்னா சாப்ட்றா சாமி'  என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

"கீழ கூப்பிடுறாங்க, வாங்க" என்று அவள் சொன்னதும் உடனே விறு விறுவென கதவை திறந்து வெளியேறினான்!!

யாராச்சும் இந்த கதை படிக்கிறீங்களா? படித்துக் கொண்டிருந்தா, கருத்தை பகிரவும்.. 🙏♥️

 


   
Quote
 Karu
(@karu)
Member
Joined: 2 months ago
Messages: 1
 

Nice 


   
Lovita Elsi reacted
ReplyQuote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top