Share:
Notifications
Clear all

மோகங்களில் 5

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 201
Thread starter  

 

மோகங்களில்… 5

 

ஏற்கனவே ஒரு சமையலுக்கு ஒரு பெண்மணியை ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தான் துருவ். சுகன்

அவ்வாறே ஒரு நடுத்தர வயது பெண்மணியை ஏற்பாடு செய்திருக்க..

 

ஆனால் வந்த பெண்மணியோ "இங்க பாரு சாரே.. சமையல் வேலை மட்டும் தான் பார்க்க முடியும். வீட்டோடு எல்லாம் வந்து தங்கினு எல்லாம் இருக்க முடியாது. எனக்கும் குடும்பம் பிள்ளை குட்டிகள் இருக்காதா? அத்த நான் பார்க்கணுமா? வேண்டாமா? காசு கொடுத்தா உங்க ஊட்டாண்டே வந்து உட்கார்ந்துகின முடியுமா? போய்யா…" என்று சென்றுவிட அதை துருவின் காதல் போடாமல் மறைத்து விட்டான் சுகன்.

 

அதனால் மறுநாள் துருவ் அலுவலகத்துக்கு சென்றதும் இவனே அனுவைப் பார்த்துக் கொண்டான். ஏற்கனவே தாரதி சொல்லிருந்த மாதிரி உணவுகளை ஹோட்டலில் இருந்து வரவைத்து தான் கொடுத்தான். இடையிடையே அவளுக்கு ஜூஸ் பழங்கள் என்று கொடுத்தான். ஆனால் அனைத்தையும் ஹாலில் வைத்து மட்டுமே… அனுவின் அறைக்குள் எல்லாம் செல்லவே மாட்டான்.

 

தாரதி ஒரு மெனு சார்ட் போட்டுயிருக்க.. அதனை அப்படியே ஃபாலோ செய்தான் சுகன்.

சாப்பாடு‌ வாங்கி வருபவன் செல்போன் மூலம் அவளை அழைப்பான்.

 

புது செல்ஃபோன் டாக்டர் தாரதியின் கிரெடிட் கார்டு உபயம். 

 

செல்ஃபோன் மூலம் அவன் அழைத்ததும் அனுவோ பெரிய பெருத்த வயிற்றை தடவியபடி அசைந்து அசைந்து ஆழி தேர் போல் வருபவள் அவன் செய்து இருப்பதை பார்த்ததும் ஒரு சிரிப்போடு "தேங்க்ஸ்.. அண்ணா சார்!" என்பாள். 

 

அவனும் தலையாட்டியப்படி அங்கிருந்து நகர்ந்து விடுவான்.

 

முதல் முறை அனு அவனை "அண்ணா! என்றதுமே சுகன் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பாசமும் பொத்துக் கொண்டு வரவில்லை. அவன் வேலை முறை அப்படி! நோ எமோஷன்ஸ்!

 

அதே நேரம் அண்ணா என்று உறவுமுறை சொல்லும் பெண் மீது அவனுக்கு ஒரு அன்பு உள்ளுக்குள் இருந்தது உண்மை. ஆனால் துருவோ அவனை முறைத்தான்.

 

துருவின் முறைப்பில் "மேடம்.. அண்ணா எல்லாம் சொல்லாதீங்க.. சார்னு சொல்லுங்க" என்று விட்டான் சுகன். அவள் இரண்டையும் சேர்த்து இப்படி "அண்ணா சார்.. அண்ணா சார்" என்று அவனை பார்க்கும்போது எல்லாம் கூப்பிடுகிறாள். 

 

'இதற்கு ஏதாவது சொல்லி இதோடு வேறு ஏதாவது புது பெயரை போட்டு அவள் எசக்கு பசக்காக கூப்பிட்டா என்ன செய்வது?' என்று தான் அவளின் அண்ணா சாரில் தலையசைத்து சென்று விடுவான் சுகன்.

 

"இவகிட்ட மாட்டிகிட்டு நம்ம பாஸே முழிப் பிதுங்கும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்?' என்று அவனுக்கு புரியாதா என்ன??

 

இப்படியாக நாள்‌ சென்று கொண்டிருந்தது எந்த பிரச்சினையும் இல்லாமல். காலை உணவு சுகன் கொண்டு தான் இருந்தது. இரவுக்கு துருவ் வந்ததும்‌ அவன்‌ சென்று விட்டான்.

 

காலை எல்லாம் அமைதியாக இருப்பவள், இரவு ஆரம்பித்ததுமே இவள் ஆரம்பித்து விடுவாள். 

 

"அம்மா… இந்த பெரிய வயிற்றை தூக்கிக்கொண்டு என்னால் சாப்பிடவே முடியலையே.. எனக்கு வயிறு நெஞ்சு எல்லாம் எரியது போல இருக்கே.. இந்த தொண்டையில் இருந்து அப்படியே இங்க வயிறு வரைக்கும் எதோ எரிமலை பொங்கி வழியுற மாதிரி எரியுதே.. இப்படி பார்த்துக்கிட்டே உட்கார்ந்து இருக்கீங்களே.. ஏதாவது செய்யுங்களேன்" என்று அவன் முன்னாடி வயிற்றில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு அவள் கத்துவாள்.

 

ஓரளவு மருத்துவ அடிப்படை அறிவு தெரிந்து கொண்டான் தான் துருவ் அன்றைய சம்பவத்தின் பிறகு.. "‌‌ஆனா.. இவளோ புள்ளதாச்சியாக இருக்கிறாளே.. என்னத்த மருந்து கொடுக்க?" என்று யோசித்தவன் வேறு வழியின்றி தாரதியை பிடிக்க…

 

தாரதியோ "மருந்தே கொடுக்கக் கூடாது! எதா இருந்தாலும் வீட்டில் உள்ள உணவுகளை வைத்து தான் சமாளிக்க வேண்டும். சும்மா சும்மா மருந்தெல்லாம் கொடுக்கக்கூடாது!" என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிட்டாள்.

 

"தயிர் கொடுக்கலாமா?" என்று பார்த்தால்.. 

 

"இரவில் கொடுத்து அது வேறு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது?" என்றாள்.

 

வேறு என்ன அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அனுவோ அவனிடம் "எனக்கு ஐஸ் கிரீம் வேண்டும்" என்றாள்.

 

"வாட்?? ஐஸ்கிரீம் ஆஆஆ? அதுவும் இந்த அர்த்த ராத்திரியிலா??" என்று அதிர்ந்தே போனான் துருவ்.

 

"எப்படித்தான் சுகன் உன்னை காலையில் எல்லாம் வைத்து மேய்க்கிறானோ.. தெரியலையே??" என்று நெற்றியில் இடது கையை வைத்து தேய்த்துக் கொண்டான்.

 

"அண்ணா சாரை பற்றி ஒன்னும் சொல்லாதீங்க.. அவர் எவ்வளவு என்னை அருமையா பாத்துகிட்டார் தெரியுமா? நான் கேக்குறதுக்கு முன்னாடி எனக்கு ஜூஸ் என்ன.. வெஜிடபிள் சாலட் என்ன.. ஃப்ரூட் சாலட் என்ன.. எனக்கு புடிச்ச மெனுல சாப்பாடு என்ன…" என்று அவள் சொல்லிக் கொண்டே போக..

 

"என்ன.. என்ன.. இப்ப என்னை என்ன பண்ண சொல்ற?" என்று பற்களை கடித்துக் கொண்டு அவளிடம் சீறினான் துருவ்.

 

அவனின் கோபத்தில் தானாக இரண்டு‌ அடி‌ பின்னால் வைத்தவள், "வேறு என்ன ஐஸ்க்ரீம் தான் வேணும்.." என்றாள் மெல்லிய குரலில்.

 

"அடியேய்…." என்று அவள்‌ கழுத்தை நெறிப்பதை போல சென்றவன், "ச்சே.. மனுஷனுக்கு நிம்மதியே போச்சு!" என்று திரும்பி சிகையை கோதிக் கொண்டான்.

 

பகலில் இவளை மேய்ப்பதே பெரிய வேலையாக இருக்க.‌ எட்டு மணிக்கு மேல் துருவிடம் அவளை ஒப்படைத்துவிட்டு ஓடியே போய் விட்டான் சுகன்.

 

"இன்னும் கொஞ்ச நேரம் பாத்துக்க மேன்!" என்றாலும்..

 

"சார் காலையிலிருந்து நான் மேடம் கூட தான் சுத்திக்கிட்டு இருக்கேன். இப்படியே சுத்திக்கிட்டு இருந்தா அவங்களுக்கு நான் சமையல் ஆள் கண்டுபிடிக்க வேண்டுமா? வேண்டாமா? அட்லீஸ்ட் நீங்க ஒரு ஏழு மணி போல வந்து என்னை ரிலீவ் பண்ணி கொடுத்தீர்கள் என்றால்.. ஊர்ல தேடி ஒரு கேர் டேக்கரை கண்டுபிடித்து கூட்டிட்டு வருவேன். சீக்கிரம் உங்களுக்கு விடுதலை கிடைக்கும். இல்லை என்றால் சொல்லுங்க.. நான் இங்கே உட்கார்ந்து இருக்கிறேன்" என்றவனிடம் பெரிய கும்பிடு போட்டு அவனை அனுப்பி வைத்தான் 'சீக்கிரமே நல்ல பதிலை சொல்!' என்று துருவ்.

 

அந்த பக்கம் இவன் சென்றதுமே இந்த பக்கம் "அண்ணா சார்.." என்று கதவை திறந்து கொண்டு வந்தவளை வரவேற்றது என்னவோ பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டபடி நின்ற துருவ் தான்.

 

"அண்ணா சாராம்.. அண்ணா சார்.. அவன் இல்லை" என்று பல்லை கடித்துக் கொண்டு அவன் பேச அமைதியாக இவள் டைனிங் டேபிள் பார்க்க இரவுக்கு தேவையான உணவுகளை எல்லாம் சரியாக வாங்கி வைத்திருந்தான் சுகன். 

 

கூடவே பிரிட்ஜில் இருந்த சரக்கு பாட்டில் எல்லாம் காலியாக இருக்க.‌ இப்போது அது முழுக்க கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுமாறு சில உணவு வகைகளும் பழங்களும் பால் யோக்கர்ட் என்று நிரம்பி வழிந்தது. 

 

துருவ் மீது கொண்ட கடுப்பில் சற்று முன்னால் தான் அவள் சாப்பிட்டதை மறந்து இரவு உணவை கொஞ்சம் நிறையவே அவள் சாப்பாடும் நேரத்துக்கு முன்னமே சாப்பிட்டாள். அதற்கு நெஞ்சு எரிச்சல் கண்டது. தொண்டை எல்லாம் எரிய ஆரம்பித்தது.

 

அதற்குத்தான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு எங்கேயும் அங்கேயும் குறுக்கே மறுக்கே நடந்து கொண்டிருந்தவளை பார்த்தவாறு ஒற்றை சோபாவில் அமர்ந்து பீட்ஸாவை தனியாக உண்டு கொண்டிருந்தான் துருவ் வல்லப்!!

 

"நான் மட்டும் இவ்ளோ பெரிய வயிற்றை தூக்கிக்கொண்டு நடக்க முடியாமல் நடக்கிறேன். ஒரு நல்ல உணவை.. அதுவும் எனக்கு பிடித்தமான உணவை சாப்பிட முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இவன் இப்படி நம் கண் எதிரே பீட்ஸாவை வைத்துக் கொண்டு சாப்பிடுகிறானே? தப்பாச்சே!!! ரொம்ப தப்பாச்சே!! இப்படி இவனை நிம்மதியாக சாப்பிட விடக்கூடாதே.." 

என்று அவளுக்கு பொறாமை மட்டுமல்ல இன்னும் என்னென்ன ஆமை இருக்கிறதோ அத்தனையும் பொங்கி வந்தது.

 

அதனால்தான் 'எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும்' என்றும் 'எரியுதே.. எரியுதே..' என்றும் அவனை படுத்தி வைத்துக் கொண்டு இருந்தாள்.

 

அனு துருவைப் படுத்தினால்.. துருவோ தாரதியை படுத்தினான்…

 

"நீ புள்ள பெத்துக்கறதுக்கு நான் ஏன் மேன் கஷ்டப்படணும்.. ஒய் மீ?" என்று ஃபோனை பார்த்தபடி கேட்டாள் தாரதி.

 

"ஸ்ரீராம் அப்பவே சொன்னாரு.. நான் அவர் பேச்சைக் கேட்டு இருக்கணும். எப்படிப்பட்ட ஆளுங்க கிட்ட நீ தொக்கா சிக்கி இருக்க பாத்தியா.. தாரதி" என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவள், துருவுக்கு பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தாள்.

 

ஆனாலும் தாரதி சொன்ன ஒன்று கூட உனக்கு புரியவில்லை அவனுக்கு. 

 

"சுடு தண்ணீர் வைத்து ஒரு சிட்டிகை பெருங்காயம் போட்டு கொடுங்க.."

 

"ஓமத்தை கையால் நன்றாக அரைக்கி சுடு தண்ணீரில் போட்டு அதன் தன்மை இறங்கியதும் வடிகட்டி கொடுங்க.."

 

இப்படியாக வீட்டு பத்திய முறைகளை அவள் கூறிக் கொண்டே செல்ல.. இதில் எதுவும் துருவின் கார்மெண்ட்ஸ் மண்டைக்கு புரியவில்லை.

 

"வெயிட்.. வெயிட்.. நீ சொன்னது எனக்கு ஒன்னு கூட புரியல. நீ சொன்னதுல எந்தெந்த பொருள் எங்க எங்க இருக்குன்னு கூட எனக்கு தெரியாது. எங்க வீட்ல எங்க அம்மா தான் பாத்துக்கிட்டாங்க. நானெல்லாம் டிரிங்க்ஸ் எடுக்க மட்டும் தான் ஃப்ரிட்ஜை திறக்கும் ஆளு... ஏதோ என் விதி!! இப்படி வந்து உங்களிட்ட மாட்டிட்டு முழிக்கிறேன்" என்றதும் அந்த பக்கம் தாரதி அமைதி காத்தாள்.

 

"நான் கேட்கிற ஒன்னுக்கு மட்டும் நீ பதில் சொல்லு டாக்டர் தாரதி. ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தா இப்ப அவளுக்கு நன்மையா கெடுத்தியா? அதை மட்டும் சொல்லு!" என்றான்.

 

"ஐஸ்கிரீம் சாப்பிடலாம் சார். தப்பில்லை.. ஆனால் நிறைய வேணாம் பாத்துக்கோங்க. கோல்டு புடிச்ச கஷ்டம்! ஆன்டிபயாட்டிக் மருந்தும் நாம எதுவும் கொடுக்க முடியாது. திரும்பவும் இந்த மாதிரி கசாயம் அது இது தானு நான் சொல்லுவேன்.. நீங்க தான் டென்ஷன் ஆவிங்க.. ப்ளீஸ் அண்டர்ஸ்டான்ட் சார்" என்று தன்மையாக தான் சொன்னாள் தாரதி.

 

அவள் சொல்வதும் சரிதானே என்பதை புரிந்தவன் "அப்போ ஓகே நான் அவளுக்கு கண்ட்ரோல்லா வாங்கி கொடுக்கிறேன்" என்றவன் ஃபோனை வைத்துவிட்டு, திரும்பி அனுவைப் பார்க்க அவளோ அவன் பாதி தின்று விட்டு வைத்திருந்து பீட்சாவை தான் கனக்கச்சிதமாக காலி செய்து கொண்டிருந்தாள்.

 

"ஏய்.. ஏய்.. அறிவு இருக்கா உனக்கு? அதெல்லாம் எனக்கு வாங்கி வச்சேன்.. யூ இடியட்!" என்று அவளிடமிருந்து அதை புடுங்க.. அவளோ அவள் பக்கம் பிடுங்கி "அதனால என்ன சார்? நான் இதெல்லாம் எனக்காகவா சாப்பிடுறேன். எல்லாம் உங்க புள்ளைங்களுக்காக தான் சாப்பிடுறேன்!" என்று வயிற்றை தடவி காட்டினாள்.

 

"ச்சே.. எப்ப பாரு புள்ள.. புள்ள.. புள்ளனு.." என்று கத்தியவன், தனக்குத்தானே 'பொறுமை.. பொறுமை.. பொறுமை..!' என்று சின்சான் போல சொல்லிக் கொண்டே இரு கைகளையும் ஆட்டி ஆட்டி.. காற்றை ஊதி வெளியே அனுப்பிவிட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டதும் அவள் புறம் திரும்பினான்.

 

"உனக்கு என்ன ஃப்லேவரில் ஐஸ்கிரீம் வேணும்?" என்றதும் அவனுக்கு தெரிந்து எதோ ஒரு நாலு ஃப்ளேவர்ல இவழ் ஐஸ்கிரீம் சொல்ல போகிறாய் என்று பார்க்க…

 

"மலாய் குல்பி.. ப்ளுபொர்ரிஜெம்ஸ்.. ஸ்ட்ராபெரி வித் ஜெல்லி‌‌.. பட்டர் பீகன்.." என்று ஆரம்பித்தவள் கைவிரல்களால் எண்ணியப்படியே அவள் சொல்லிக் கொண்டே போக எதிரே நின்று கேட்டவனுக்கோ மூச்சு அடைத்தது.

 

"இங்க பாரு.. உனக்கு இத்தனை எல்லாம் சீனிலேயே கிடையாது. டாக்டர் ஒன்னு தான் வாங்கி கொடுக்க சொல்லி இருக்காங்க.. அதுவுமே இந்த நேரத்துல அதுவும் நைட்ல சாப்பிட வேணாம்ன்னு சொல்லி இருக்காங்க.. நான்தான் போனா போகுதுன்னு வாங்கி தரலாம்னு நினைச்சேன். நீ நெஞ்சு எரிச்சல்ல கஷ்டப்படுறது பார்த்து எல்லாம் கிடையாது.. என்னை இம்சை பண்ணாம இருக்கனும்னு என்பதற்காக.. அதனால ஒரே ஒரு ஃப்ளேவர் தான் சொல்ற நான் அதை வாங்கிட்டு வரேன்! டாட்..!" என்றான்.

 

"காட்..! இவளோடு சேர்ந்து சேர்ந்து நானும் பெருசு பெருசா டயலாக் பேசுறேன்" என்று பின்னால் சாய்ந்து இரு கைகளாலும் தலையை பிடித்துக் கொண்டான் துருவ்.

 

உதட்டை பிதுக்கியவள் "இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாம் நீங்கள் எதுவும் எனக்கு செய்ய வேண்டாம். எனக்கு ஐஸ்கிரீமை வேண்டாம்.. போயா.." என்று விட இவனுக்கு தான் தலை வலித்தது. எப்படி தான் இத்தனை ஆண்டுகளாக இவளை வைத்து சமாளித்து இருப்பார்களோ என்று!

 

அவனுக்கு என்ன தெரியும் பேருக் காலத்தில் மகளிர் உள்ளே ஏற்படும் ஹார்மோனல் சேஞ்சஸையும்.. அவள் மனம் எதை நினைக்கிறது என்று அவளுக்கே தெரியாமல் குழம்பு மனநிலையையும்..‌

 

ஏதேனும் ஆறுதலாக பேசினால் சிடு சிடுத்து விடுவதும்.. சிடுசிடுப்பாக யாரும் பேசினால் அவர்களிடம் தன்மையாக பேசும் இந்த முரண்பாடான குணங்கள் எல்லாம் பிள்ளை பேரின் ஒரு அங்கமே!!

 

அதனாலதானே இம்மாதிரியான குண்ங்களை சமாளிக்க பெரியோர்கள் இருந்து கர்ப்பிணி பெண்களை பார்த்துக் கொள்வது. 

 

அவர்களுக்கு பிடித்தது செய்து கொடுத்து.. அவர்களுக்கு பிடித்தமானவற்றை பேசி.. எல்லாம் செய்ய அதிலேயே ஓரளவு அவர்களுக்கு தெளிந்து விடும். அதேபோல பெண்களுக்குளுக்கான ஒரு சூட்சமம்.. மனதில் தோன்றும் குழப்பங்களை அவ்வப்போது நிவர்த்தி செய்வதாலே மனம் குழம்பாமல் தெளிவாய் தைரியத்தோடு பிள்ளையை பெற்றெடுப்பர்.

 

ஆனால் இங்கு தான் யாருமே இல்லையே..!?

 

இவன் ஒரு சட்டம் போட்டால்.. அதை அவள் மீறினாள்!

 

அவள் தேவைக்கு ஏதாவது கூறினாள்.. சரி தான் போடி! என்று இவன் போவான்!

 

பின் எங்கே ஒற்றுமையாக இருப்பது?

 

இவர்கள் டாம் அண்ட் ஜெர்ரி கிடையாது. இந்தியா பாகிஸ்தான் தான்! எப்போது எங்கே எதனால் சண்டை வெடிக்கும் என்று நமக்கு தெரியாது! ஏன்‌ அவர்களுக்கே தெரியாது!!

 

உடல்நிலை உபாதையால் ஒரு பக்கம் அவள் புலம்பிக் கொண்டிருந்தால்.. மனதாலும் மிகவும் குழம்பி இருந்தாள் அனுப்பிரியா.

 

சுகனும் துருவும் அவளை பார்த்துக் கொண்ட விதத்தில் சர்க்கரையின் அளவு அவளுக்கு கூடி இருந்தது இரத்தத்தில்.. அந்த மாதம் இவள் செக்கப் சென்று வந்ததும், அவளின் மருத்துவ அறிக்கைகளை துருவுக்கு அனுப்பி வைத்தாள் தாரதி.

 

"சார்.. திரும்பவும் கோபப்படாதீங்க அவங்க பிளட் சுகர் லெவல் இந்த மாசம் ரொம்ப ஏறி இல்ல எகிறி இருக்கு. இது இப்படியே போனால் சரி கிடையாது. கொஞ்சம் கண்ட்ரோல்டா பார்த்துக்கோங்க.." என்று வாய்ஸ் மெசேஜ் மட்டும் அனுப்பி விட்டாள், இவனிடம் ஃபோன் செய்து யார் மாட்டிக் கொள்வது என்ற தெளிவுடன் தாரதி.

 

இன்னும் மண்டை காய்ந்து போனான் துருவ். கேட்டேக்கர் கிடைக்கிற வரையில் தன் வீட்டிலாவது கொண்டு போய் தங்க வைத்து அம்மாவிடம் ஒப்படைத்து விடலாமா என்று ஒரு கணம் தோன்றியது அவனுக்கு.

 

இதிலும் இவனுக்கு விவாகரத்து ஆனா விஷயம் இன்னும் அம்மாவிடம் கூட இவன் தெரிவிக்கவில்லை. அதிலும் இந்த 15 நாட்களாக இவன் வீட்டுக்கே செல்லவில்லை. 

 

காலையில் அலுவலகம் பேக்டரி என்று அலைபவன், இராத்திரி ஆனால் தான் இவளை பாதுகாக்க என்று பீச் ஹவுஸ் வந்து விடுகிறானே.. பின் எங்கே செல்ல முடிகிறது அவனால்??

 

தலையை‌ இருக்கையில் பின்னால் சாயத்து இரு கைகளாலேயும் தலையை பிடித்தப்படி அமர்ந்திருந்தான் துருவ்.

 

ஒரு வழியாக துருவை அனுவிடமிருந்து காப்பாற்ற.. கேர் டேக்கர் ஒருவரை கண்டுபிடித்து கூட்டி கொண்டு வந்திருந்தான் சுகன். அவர் தான் சாவித்திரி அம்மாள்.

 

"கர்ப்பிணி பெண்ணை பார்த்துக் கொள்ள வேண்டும். பெரியவங்க யாரும் வீட்டில் கிடையாது. உணவு அவளின் உடல்நிலை எல்லாத்தையும் நீங்கதான் பார்த்துக் கொள்ள வேண்டும். உணவு தங்குமிடம் இலவசம். உங்களுக்கு சம்பளம் மாதம் 20 ஆயிரம்" என்றவுடன் வேறு எதையும் யோசிக்காமல் மருமகளிடம் இருந்து இடிச்சோறு வாங்குவதற்கு பதில் இப்படி வந்து பிழைக்கலாம் என்று பெட்டியை கட்டிக் கொண்டு வந்து விட்டார் சாவித்திரி அம்மாள்.

 

அந்த வீட்டையே அவ்வளவு பிரம்மிப்போடு பார்த்தார் அவர்.

 

"மேடம்…" என்று சுகன் அழைத்துதும்..

 

"என்ன அண்ணா சார்?" என்று வந்த அனுவை தன் கண்ணாடியை ஏறி இறங்கி.. அவளை ஏற இறங்க பார்த்தார் சாவித்திரி அம்மா..

 

"மேடம்.. இவங்க தான் உங்களை கவனிச்சுக்க போற கேர் டேக்கர்..

சாவித்திரி அம்மா.." என்றான் சுகன்.

 

"ஓஹ்.. அப்போ சாவித்திரி எங்கே?" என்று கேட்டவனை அவன் புரியாமல் பார்க்க..

 

"இல்ல.. இவங்கள சாவித்தரி அம்மானு சொன்னீங்களே அண்ணா சார்.. அப்போ சாவித்திரி எங்கே? கரெக்ட்டா தானே கேட்கிறேன் நானு?" என்று அவள் விளக்க..

 

"ஓ மை காட்! நான் லூசா.. இவங்க லூசா? தெரியலையே…" என்று புலம்பியவன், "மேடம்… அவங்க பேரே அது தான்.. சாவித்ரி அம்மாள். ஷார்ட்டா சாவித்ரி அம்மா.." என்றான்.

 

"ஓஹ்.. செம ஷார்ட் போங்க அண்ணா சார்.." என்று சிரித்தவள், அவரை பார்த்து வாங்க என்று அழைத்தாள்.

 

"அழகா இருக்கேடா ராசாத்தி.. உன் பேரு‌ என்ன ராசாத்தி?" என்று அவர் கேட்கஹ..

 

"அனுப்ரியா!" புன்னகையோடு கூறினாள்.

 

"எத அனுப்புறியா வா? எங்கிட்ட எதுவும் உன் வீட்டுக்காரர் கொடுத்து வைக்கலையே? எத நான் அனுப்ப?" என்று கேட்டார் அவர். தன் பேரை அவள் நக்கல் அடைத்ததை திருப்பிக் கொடுக்கும் வகையில்..

 

முதலில் புரியாமல் ஹேங்க் என்று விழித்த அனு பின்பு கலகலவென்று சிரித்தாள்.

 

"சாவி.. அவசரப்பட்டு வாய் விட்டுடியே சாவி.. அவ என்ன உன் மருமகளா இப்படி குதர்க்கமாக பேசுற? உனக்கு சம்பளம் கொடுக்கிற முதலாளியோட பொண்டாட்டி. கொஞ்சம் வாய அடக்கு.. வாய அடக்கு" என்று அவர் தனக்குள் பேசிக் கொண்டிருந்தவர்,

அவள் வேலையை விட்டு அனுப்பி விடுவாளோ என்று பயந்தார். குறைந்தபட்சம் திட்டுவாள் இல்லை முறைப்பாள் என்று எதிர்பார்த்து இருந்தார். 

 

ஆனால்… அவளோ அவரின் எதிர்பார்ப்பை எல்லாம் முறியடித்து கலகலவென்று சிரிக்க அதிர்ச்சியோடு பார்த்தார் அனுவை.

 

"நீங்கதான் எனக்கு சரி! இப்படி எனக்கு சரிக்கு சரி வாய் பேசணும். உங்களை எனக்கு பிடிச்சிருச்சு" என்று அவரின் கைகளை பிடித்துக் கொண்டாள் அனு. போன உயிர் அப்போதுதான் அவருக்கு திரும்பி வந்தது. 

 

"அதோ.. அங்க ஃபோட்டாலா இருக்குறாரே… அவர் தான் உன் புருஷனா ராசாத்தி" என்று துருவின் ஃபோட்டோ ஹாலில் மாட்டி இருந்ததை பார்த்து கேட்டார் சாவித்திரி அம்மா.

 

"புருஷனா? யாரு?" என்று கேட்டவள் அவர் ஃபோட்டோ காட்டியதை பார்த்து இல்லை என்று தோளை குலுக்கினாள்.

 

சிறிது நேரத்துக்கு முன்னால் துருவ் ஃபோட்டோவை காட்டி அவர்தான் வீட்டுக்காரர் என்று அறிமுகப்படுத்தி இருந்தான் சுகன்.

 

'இவள் என்ன இப்படி சொல்கிறாள்?' என்று குழப்பத்தோடு அவளைப் பார்த்தார் சாவித்திரி.

 

"ஏம்மா… அவரு வீட்டுக்காரர் இல்லையா? அப்போ அவள் வயிற்றை பார்த்து "இந்த பிள்ளைங்க?" என்று கேட்டார்.

 

ஒரு வினாடி யோசித்த அனு. 

இந்த வீட்டு ஓனர் துருவ் தானே? அப்போ அவன் வீட்டுக்காரர் தானே? என்ற அர்த்தத்தில் புரிந்து கொண்டவள், "ஆமா அவர் வீட்டுக்காரர்‌ தான்… பிள்ளைங்க அவரோடது தான்‌.‌ ஆனா.. நான் அவரு பொண்டாட்டி இல்ல…!" என்று தெளிவாக குழப்பினாள்.

 

"என்னம்மா குழப்புற? அவர் ஒரு புருஷன் தானே?" என்று இப்பொழுது கொஞ்சம் தெளிவாக கேட்டார் சாவித்திரி.

 

"அவர் என் புருஷன் இல்ல.. நானும் அவர் பொண்டாட்டி இல்ல.. ஆனா இந்த வீட்டுக்கு அவர்தான் வீட்டுக்காரர்!"

 

"எதே?! நீ அவரு பொண்டாட்டி இல்லையா?" அலறினார் சாவித்ரி.

 

"ஆமா…" அலட்டாமல் கூறினாள் அனு. 

 

"நிஜமா.. இது அவரோட‌ குழந்தையா?" தெளிவுப்படுத்திக் கொள்ள கேட்டார் சாவித்ரி.

 

"ஆமா.. அவரோடது தான்! குழந்தை இல்லை குழந்தைங்க.." குட்டையை குழம்பினாள் அனு.

 

"எதே.. இதுல டிவின்ஸா…??"

 

"ஆமா.."

 

"அவரு உன் புருஷன் இல்லேங்குற.. பின்ன எப்படி குழந்தைங்க?" என்று கேட்டார் சாவித்ரி.

 

"என்ன சாவி மா சின்ன புள்ள மாதிரி பேசுறீங்க.. குழந்தை பெத்துக்கிறதுக்கு புருஷன் இருக்கணுமா என்ன?" என்று கேட்டவளை பார்த்து மயங்கி விழுந்தார் சாவித்ரி.

 

படையப்பா ஸ்டைலில் பதிலளித்துக் கொண்டிருந்த அனுப்ரியா..

 

"இப்ப நான் என்ன அப்படி அதிர்ச்சியா சொல்லிட்டேன்னு இவங்க மயங்கி விழுந்துட்டாங்க..??" என்று யோசனையோடு "அண்ணா சார்.." என்று சுகனை பார்த்து கத்தியிருந்தாள்.


   
Sakku reacted
Quote
(@gowri)
Member
Joined: 6 months ago
Messages: 47
 

சாவி, அனு சரியான காம்போ🤣🤣🤣🤣🤣

துரு....அவ பிளான் உன் பீட்ஸா வா ஆட்டைய போட்டு சாபரது தான்😂😂😂😂😂


   
Jiya Janavi reacted
ReplyQuote
(@srd-rathi)
Member
Joined: 6 months ago
Messages: 11
 

Annaa sir eppove escape ayachu anu.😂😂😂😂


   
ReplyQuote
Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 201
Thread starter  

@gowri ஹா ஹா.. கண்டுப்பிடிச்சிடிங்களா 🤣🤣 எஸ் எஸ்


   
ReplyQuote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top