ஆழி 13

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

13

 

இந்த வானம்

இந்த அந்தி

இந்த பூமி

இந்த பூக்கள்

எல்லாம்

காதலை கவுரவிக்கும்

ஏற்பாடுகள்

என்பாய்

காதலித்துப் பார்!!!

 

கதவு தட்டப்படும் சத்தத்தில் விஷ்ணுவிற்கு சௌமினிக்கும் அதிர்ச்சி என்றால், அடுத்து கேட்ட அம்மா மார் குரலில் அது உச்சத்தை அடைந்தது…

"அச்சோ… எங்க அம்மாவும், பெரியம்மாவும் இங்கனயே வந்துட்டாங்க போல.. இப்போ நான் செய்ய.. என்ன செய்ய.. உங்களோட என்னை பார்த்தாக அவ்வளோ தான்" என்று கை பிசைந்து கொண்டே புலம்பியவளை பார்த்து, " ஏன் பேபி, கிராமத்தில் எல்லாம் இந்த மாதிரி ஒரு ஜோடியைப் பிடிச்சா.. கல்யாணம் பண்ணி வைச்சிடுவாங்களே உண்மையா பேபி" என்று கள்ள சிரிப்புடன் கேட்டவனை பார்த்து , " இந்த ரணகளத்துலேயும் உங்களுக்கு குதூகலம் கேட்குதோ .. எங்க வீட்டு ஆளுங்க எல்லாம் வேற மாதிரி.. முதுகையே வீச்சு அருவா ஸ்டண்டா மாத்தி வச்சு இருப்பாங்க.."

" அய்யோ… படிச்சது எல்லாம், பரிட்சை எழுதும் போது மறந்து போகுகிற மாதிரி, ஒரு யோசனையும் வர மாட்டேங்குதே . என்ன செய்ய.. ஐய்யனாரப்பா… என்னைய காப்பாத்து.."

என்றவளை பார்த்து, " நான் ஒரு ஐடியா சொல்லுறேன்… ஆனா அதுக்கு தனியா பீஸ் கொடுக்கனும் டீல் ஆ?" என்று கட்டை விரலை உயர்த்தி, இந்நிலையிலும் டீல் பேசுபவனை பார்த்து புஸ் புஸ் என்று மூச்சு விட்டு கொண்டு, " நேரத்த கடத்தாம, அதை சொல்லுங்க முதல" என்றாள்.

" நான் பாத்ரூம்ல ஒளிஞ்சுக்கிறேன், நீ வெளியில் வைச்சு பூட்டு போட்டுரு, யாரும் கேட்டா, அதுல தண்ணீர் வரல.. இல்லை எதுவும் பிராப்ளம் சொல்லி சமாளி.. என்ன புரியுதா.."

முகம் ஒளிர ,தன் கைகளால் அவன் கன்னம் இரண்டையும் இழுத்து கொஞ்சி " சூப்பர்… போங்க போங்க .. போய் ஒளியுங்க " என்றாள்.

சௌமினி அவனை குளியலறையில் தள்ளி கதவை பூட்ட முயல, விஷ்ணு அவளின் இடுப்பை பிடித்து தன் அருகே இழுத்து, கன்னத்தில் முத்தம் ஒன்று வைக்க, அவள் அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றாள். அதை கண கச்சிதமாக அவனின் செல் போன் படம் பிடித்தது. பிளந்த வாயை அவன் கை கொண்டு மூடி, " வெளியில என் மாமியார் ஸ் எல்லாம் வெயிட்டிங் பொண்டாட்டி…" என்றான் கள்ள சிரிப்புடன்,..

தன் தலையில் அடித்து கொண்டு, அவனை குளியறையில் தள்ளி கதவை பூட்டி, சாவியை தலையணை அடியில் மறைத்து, "ஸ்ஸ்ப்ப்ப்பா எவ்வளோ… சமாளிக்க வேண்டி இருக்கு, ஒரு காதலை பண்ணி புட்டு" என்ற மைண்ட் வாய்ஸ் உடன், முகத்தை பாவம் போல வைத்து அறை கதவை திறந்தாள்.

அறை திறந்த உடன் பெண்ணிடம் நெருங்கி அவள் நெற்றி , கன்னம் ,கழுத்து என்று தொட்டு பார்த்து " என்ன கண்ணு இன்னும் சுரம் இருக்கு.. " என்று பாசமழை பொழிந்தார் மல்லிகா.. வழக்கம் போல சரசு , அவள் தலையில் ஒரு கொட்டு கொட்டி.., " ஏண்டி, கதவை திறக்க இவ்வளோ நேரம்.. ஏழு கழுதை வயசாகுது, இப்படிதேன் நடந்துப்பியா.. கல்யாணம் கட்டி வச்சுயிருந்தா, இந்நேரம் கையல ஒன்னு , இடுப்புல ஒன்னு இருந்து இருக்கும்.. உன்னயே ஒழுங்கா பார்த்துக்க தெரியல… நீ எப்படி ஒரு குடும்பத்தைப் பார்க்க போறீயோ " என்று புலம்பியவரை தலையை தடவி கொண்டே பார்த்து, " ஏன்மா .. என்ன சொல்ல வர.. கல்யாணம் பண்ணி வைச்சு இருக்கனுமா .. இல்ல வேண்டாம்னு சொல்லுறீயா.. என் தலைக்கு நானு முதல ஒரு ஹெல்மெட் போடனும், எப்போ பாரு கொட்டி கிட்டே இருக்க, நீங்கொட்டி கொட்டி தான் நான் சரியாவே வளரல…"

" சரசு வந்ததும் ஏன் புள்ளைய இப்படி கொட்டுரவ", என்று அவரை கடிந்து விட்டு, " கண்ணு நீ போய், வேற உடுப்பு மாத்திகிட்டு வா, கீழ எல்லாரும் உன்னய பார்க்க காத்து இருக்காக"

’எங்கன போய் உடுப்பு மாத்த’ என்று யோசித்தவள், " பெரியம்மா இங்கன, பாத்ரூம் சரி யில்லை பூட்டி இருக்காக, நீங்க வெளியில இருங்க நான் வேற மாத்திட்டு உடனே வரேன்"

" இல்லையில்ல , நாங்க இங்கனவே இருக்கோம்.. நீ மாத்து, இல்லைனா நீ இன்னும் நேரம் கடத்துவ ," என்ற அன்னையை " நான் என்ன சேலையா மாத்திட்ட வர போறேன், சுடிதாரு தானே, சீக்கிரம் வந்துடுவேன், உன்னை வைச்சு கிட்டு எல்லாம் மாத்த முடியாது, அப்புறம் அப்பாகிட்ட இந்த உடுப்போட போய் சொல்லி கொடுப்பேன்" என்று மிரட்டுபவளை பார்த்து, " என் மாமியாரு கூட இப்படி எல்லாம் மிரட்டினது இல்ல டி.. நீ பத்து மாமியா.. இருபது நாத்திக்கு சமம் டி" என்று கூறி கீழே சென்றார் சரசு.. மறக்காமல் இரண்டு கொட்டை பரிசளித்து விட்டு மல்லிகாவுடன்..

தன்னெஞ்சில் கை வைத்து மூச்சை இழுத்து விட்டு, உடனே சென்று பாத்ரூம் கதவை திறக்க போனவள், " அவனைய நம்ப முடியாது என கூறிகொண்டு, அவசரவசரமாக சுடிக்கு மாறியவள், கதவை திறந்து விஷ்ணுவை அழைத்தாள்.

அவனும் அவளின் சுடியை அளவிட்டவாரே சிரிப்புடன்," ம்ஹும்.. பலத்த முன் யோசனை தான்" என்றான்.

" போதும் .. போதும்.. முதல கிளம்புங்க… போன உங்க அய்த்த மார் வந்திட போறாங்க" என்று கை எடுத்து கும்பிட.. " டீல் மறந்துடாதே.. டுமோரோ ஆபீஸ்.. மை கேபின்.. லவ் யூ பேபி" என்று நெற்றியில் முட்டி விட்டு கிளம்பினான்.

சௌமினி வெளியில் சென்று யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து இல்லை என்று அவனுக்கு சைகை செய்ய , அவன் விரைந்து வெளியேறினான்.

இவளும் தன் குடும்பத்தினரை காண ஓடினாள். தன் பெரியப்பாவை கண்டு, " அப்பூ" என்று நெழிக, நரசிம்மர் தன் மகளை அணைத்து கொண்டார். பின் நின்று வல்லபர் அவளின் தலையை கோதி கொடுக்க, ஒரு பாச படலம் அங்கே அரங்கேறியது. அடுத்து அண்ணன்மார்கள் அன்பு கலந்த விசாரணை…, " ஏன் தீடீரெனு இப்போ சுரம் வந்தது"? 

" யாரும் எதுவும் திட்டினாங்களா?" என்று கேட்டே தினுசே.. மாட்டினவன் செத்தான் என்பதாய்..

" உனக்கு வேலை ஜாஸ்தியா கொடுக்குறானா என்ன?"

" ஒழுங்கா சாப்புடுறீயா இல்லையா?"

"ஹாஸ்டல் சாப்பாடு எங்கன நல்லா இருக்க போகுது?"

" நீ சிவனேனு வேலை வேண்டாம் ஒன்னும் வேண்டாம் னு எழுதி கொடுத்திட்டு வீடு வந்து சேரு.."

"உன்னைய இங்கன அனுப்பிட்டு எங்களால் அங்க நிம்மதியா இருக்க முடியல"

" ஆமா…வேல என்ன பெரிய வேல…"

அவளை சுற்றி நின்று கொண்டு மாற்றி மாற்றி கேட்டு கொண்டிருந்தனர்.

அவளோ ஆவென வாய் பிளந்த படி நின்று இருந்தாள், விசிட்டர் ஹாலில் இருக்கும் நாற்காலியில் அன்னைமார் உட்கார்ந்து இருக்க, அவர்கள் முன்னால் தந்தை மார் நின்றிருக்க… இவளை நடுவில் வைத்து சுற்றியும் அண்ணன்கள் .. தனி ஒரு ஆளாய் ஒரு பெரும் சைனியத்தின் முன் நிற்கின்ற மாதிரி போன்று நின்று கொணடிருந்தாள் சௌமினி...

இவ்வளவையும் அருகில் இருந்த ஜன்னலில் சாய்ந்தவாறு, கண்களில் சிரிப்புடன் முகம் மட்டும் அவளுக்கு தெரியும் வண்ணம் பார்த்து கொண்டிருந்தான் விஷ்ணு.

விஷ்ணுவை தான் அவள் ஆவென வாய் பிளந்தபடி பார்த்து கொண்டிருந்தாள், அவளின் மூளையோ ’இவன் அடங்கவே மாட்டானா… இங்குட்டு இருக்கிற மொத்த பீஸ் ல.. ஒத்த பீஸ் பார்த்தாலும், ஜோலி முடிஞ்சுது… பனை மரம்.. பனை மரம்.. ஸ்டூல் போடாமலேயே சீலிங்கை தொடுவான் .. ஜன்னலுக்கு தெரிய மாட்டேனா என்ன.. போகுறான பாரு… பல்லை வேற காட்டுறானே… கை ஜாடையும் காட்ட முடியாது.. கண் ஜாடையும் காட்ட முடியாதே.. டா..… பக்கி… பக்கி… போடா…" என்று ஏக வசனத்தில் அவனை பொரிந்து தள்ளி கொண்டு இருந்தாள், ஆனால் முகம் மட்டும் பாவம் போல அண்ணன்கள் சொல்லுவதை கேட்டு கொண்டு..

அவனோ இன்னும் சாவதானமாக… அவளை பார்த்து தன் இதழ் குவித்து பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பி வைத்தான்.. தண்ணீர் குடிக்காமல் அவளுக்கு புரை ஏறியது, இதயமோ டிரம்ஸ் மணிக்கு டஃப் கொடுத்து வாசித்து கொண்டிருந்தது … இவள் கண்களாலேயே அவனிடம் கெஞ்சி, கொஞ்சி, போக சொன்னாள்.

விஷ்ணுவும் அவளை சோதித்தது போதும் என்று நினைத்து, ஒரு கை அசைப்புடன் மீண்டும் விடுதி சுவரை எகிறி குதித்து சென்று விட்டான். அவன் எகிறி குதித்ததை ஒரு ஜோடி கண்கள் பார்த்தது.

" ஸ்ஸ்ஸ் ப்பா… இப்பவே கண்ண கட்டுதே… இவங்களை எப்படி சேர்ந்து வைச்சு…. முடியல டா சாமி" வேறு யார் கியூபிட்டே தான்.

சௌமினியை தனியே அழைத்து சென்ற ரிஷி, " அந்த ஸ்பிரிங் முடிக்காரி.. எங்கன போன.. உன்னய கவனிக்காம .. " என்று சுஜியைப் பற்றி கேட்க.. இது தான் சமயம் என்று, " பாவம் அந்த புள்ள, காலையில் இருந்து என்னையே தான் பார்த்து கிட்டு இருந்தா, வேலைக்கு சும்மா சும்மா லீவ் போட கூடாது வேற.. எனக்கு மதியம் சாப்பாடு வரை எடுத்து வைச்சுட்டு தான் போனா… அப்பயும் எங்கூடவே இருக்கேன் சொன்ன.. நாந்தேன், எதுக்கு அனாவசியமாக லீவ் போடனும் அனுப்பி வைச்சேன்.. பொறுப்பா என்னைய பார்த்துக்குறா.. யாருக்கு கொடுத்து வைச்சு இருக்கோ? " என்று பிட்டை போட்டு, தோழியின் காதல் வளர தன்னால் முடிந்த நீரை ஊற்றினாள். ரிஷி ஒன்றும் சொல்லாமல், நகர்ந்து விட்டான்.

வழக்கம் போல, சாப்பாடு வாங்க என்று சித்தப்பா உடன் கிளம்பி விட்டான் ரிஷி, இவர்கள் இருவரும் மெதுவாக விசாரித்து கொண்டே செல்ல, அவர்கள் கண்ணில் பட்டான் தன் காரில் சாய்ந்த வண்ணம் ஃபோனில் பேசி கொண்டிருந்த விஷ்ணு. 

ரிஷி ’ இவன் இங்கன என்ன பண்றான்?’ என்று அண்ண்ணாய் சந்தேகம் எழ, வல்லபர் அவனை கண்டு கொண்டார்.." ஆபிசர் தம்பி… ஆபிசர் தம்பி" என்று கத்தி விளிக்க.. 

சௌமினியிடம் பேசி கொண்டு இருந்ததால், போனை சைலெண்ட்டில் வைத்திருந்த விஷ்ணு, கார் ஏறும் போது தான் பார்த்தான்.. ஏகப்பட்ட மிஸ்டு கால்ஸ். . அவனின் சீனியரிடம் இருந்து, அவரிடம் பேசி கொண்டிருந்தவனை தான் இவர்கள் பார்த்தது.

போனை கட் செய்தவன், அவர்களை பார்த்து ’ என்னது மாமனும், மச்சானும் சேர்ந்து கூப்பிடுறாங்க, என்னவா இருக்கும் ’ என்று மனதுக்குள் யோசனை உடனே சிரித்து வைத்தான்.

" என்ன தம்பி… இங்கன… " என்னவோ இவர் ஊருக்கு அவன் வந்தது போல கேட்க, அவன் எத்தனாய் , " கிளையண்ட் ஒருத்தரை பார்க்க வந்தேன் சர், வீட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்களா" 

ரிஷி எத்தனுக்கு எத்தனாய் , " கிளையண்ட் பார்க்க சொல்லுறீக, ஆனா இப்படி இந்த டிரஸ்ல வந்து இருக்கீக" 

நீ புள்ளியில் புகுத்தால் நான் கோலத்தில் புகுவேன் என்று விஷ்ணு, " இது அன் அஃபீசியல் மீட்டிங்.. சோ.. நோ பார்மல்.. " 

" அப்புறம், மிஸ் சௌடாம்பிகை எப்படி இருக்காங்க, "

" எங்க பொண்ணுக்கு உடம்பு சரியில்லாத உங்களுக்கு எப்படி தெரியும்" இப்போது வல்லபர் உள் நுழைந்து, " ஏன் டா.. அவர் தானே ஆபிசர் அவருக்கு

தெரியாதா.." என்க, ஒரு மிதப்பு பார்வை விஷ்ணுவிடம்.. " நல்லா இருக்கா தம்பி, அப்புறம்.. தம்பி இங்கன எங்க சாப்பாடு நல்லா இருக்கும்?"

" எனக்கும் இந்த ஏரியா புதுசு தான் சர், ஆனா பக்கத்துல …" ஒரு பிரபலமான ஹோட்டல் பேர் சொன்னவன் " அங்க போங்க சர்" என்றான் மிக பவ்வியமாக.. உரிமையாக.. வல்லபருக்கு அவனை மிக பிடித்து விட்டது.. " நீங்களும் வாங்களேன் தம்பி.." என்று அழைப்பு விடுக்க.. ரிஷி முறைக்க.. வீணான யூகங்களை தவிர்க்க எண்ணியவன், " பரவாயில்லை சர், எனக்கு முக்கியமான இன்னொரு மீட்டிங் இருக்கு, அப்புறம் பார்க்கலாம்" என்று தன் காரில் ஏறி சென்று விட்டான். செல்லும் அவனை புருவம் சுருங்க, முறைத்து பார்த்து கொண்டிருந்தான் ரிஷி.. ’ இவன்கிட்ட என்னமோ சரியில்லை ’ என்ற மைண்ட் வாய்ஸ் உடன்…

"விசயம் தெரியும் முன்னையே இப்படி முறைக்குறானே… விசயம் தெரிஞ்சா… " இது கியூபிக் மைண்ட் வாய்ஸ்…


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top