11
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
காதலித்துப் பார்!
ஐடி கார்டு வாங்கவென விஷ்ணுவின் கேபினில் நுழைந்த சௌமினியைப் பின்னிருந்து அணைத்து ," நியூட்டன் தேர்டு லா.. இப்போ ஒழுங்கா ஒர்க் அவுட் ஆகுதா… " என்று கேட்டவனின் கையோ அவள் இடுப்பின் வளைவுகளை அளந்து கொண்டு இருக்க.. அவன் இதழ்கள் அவள் காதோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தது…நறுக்கு என்று அவன் கையை கிள்ளினாள் சௌமினி..
"ம்ம்ம்… செய்யுது செய்யுது… ரொம்ப்ப்ப்ப்பபப லேட் ஆ வேலை செய்யுது… "
"ஸ்ஸஸ் ஆ… ஏண்டி இப்போவே என்னை அடிக்கிற.. கிள்ளூற… அது எல்லாம் கல்யாணத்திற்கு அப்புறம் தான்.. "
" ஏன்.. இப்போ செய்ஞ்சா ஒத்துக்க மாட்டிகளோ"
இன்னும் அவளை நெருங்கி நின்றவன், அவள் காது மடல்களை லேசாக கடித்து, " இப்போவே… உனக்கு ஓகே நா.. எனக்கும் ஓகே" என்றவனின் பேச்சு சற்று நேரம் சென்று தான் புரிய… ஒரே தள்ளு அவனை தள்ளி விட்டு ஒற்றை விரல் பத்திரம் காட்டி.. " ம்ஹூம்… உங்களுக்கு அதுகெல்லம் இன்னும் ரைட்ஸ் யாரும் கொடுக்கல.. உங்க பேச்சு ஒன்னும் சரியில்லை… நான் இனிமே உங்க கேபின் பக்கமே வரலடா சாமி… இந்த கோட்டை தாண்டி நானும் வர மாட்டேன்.. நீங்களும் வர கூடாது… " என்று கோபமாக மூக்கு நுனி சிவக்க பேசியவளை பார்க்க விஷ்ணுவிற்கு வெகு சுவாரஸ்யமாக இருந்தது…
" இட்ஸ் நாட் ஃபெர்… நீ மட்டும் கல்யாணம் முன்னாடி என்னை அடிக்கலாம்… கிள்ளலாம்.. அதுக்கு மட்டும் உனக்கு யாரு ரைட்ஸ் கொடுத்தது" இவன் பேசிய லாஜிக் கில் அவள் வாயடைத்து தான் போனாள்.
" யோவ்… நான் கிள்ளனதும்.. இதுவும் ஒன்னாய்யா"
" ஆஃப் கோர்ஸ் பேபி… இரண்டுமே உரிமை பற்றியது தான்" என்று அவளை மேலும் கடுப்பாக்கி குழப்பினான்..
" ரைட்ஸ் ஆ" என்று விழித்தவளை, " ஆமாம்.. அடிக்கிறது..கிள்ளுறது உன்னுடைய.. தட் மீன்ஸ் ஒய்ஃப் ஓட உரிமை… அதே போல ’அது’ என்று ஒற்றை கண்ணை அடித்து என்னுடைய .. தட் மீன்ஸ் ஹாஸ்பண்டோட உரிமை.. உன் உரிமையை நீ எடுத்துக்கும் போது, அதுவும் கல்யாணத்துக்கு முன்னமே என் உரிமையை நான் எடுக்க கூடாதா…" என்று விளக்கம்
கொடுத்தவனை எதை கொண்டு அடிக்க என சுற்றும்முற்றும் தேடினாள் சௌமினி..
அவளிடமிருந்து சில அடிகள் தள்ளி நின்றவன்… " பார்த்தியா.. பார்த்தியா. நான் சொன்னதை நீ நிருபிக்கிற... நான் எவ்வளோ நல்ல கணவன்.. இப்போவே எல்லா உரிமையும் உனக்கு தறேன்..ஆனா நீ …" என்று அவன் முடிக்கும் முன் இவள் அங்க இருக்கும் ஒவ்வொரு பொருளாக எடுத்து எறிய ஆரம்பித்தாள்.
இவன் லாவகமாக ஓடி ஓடி தப்ப முயல, அவள் இவனை துரத்த கடைசியில் அவளுடனே அருகில் இருந்த சோஃபாவில் விழுந்தான்.. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க.. இருவரும் கண்டுண்டு… இவ்வுலகை மறந்து தங்கள் உலகில் சஞ்சரிக்க … அப்படி எல்லாம் இருக்க கூடாது ராஜா என்று ஒரு கரடி கதவை தட்டியது.. தட்டும் சத்தம் எதுவும் கேட்கவில்லை அவர்களுக்கு..
கதவை தட்டி விட்டு வந்த கரடி நட்டுவே தான்.. " கையில் ஏதோ ஒரு பைலை வைத்து கொண்டு அதன் மீது பார்வை ஓட்டி கொண்டு வந்தவன் இவர்களை கவனிக்க வில்லை.., " வி.பி. இந்த புராஜக்ட் எனக்கு தலை பிய்க்க வைக்குது டா… கொஞ்சம் பார்த்து..… பார்த்துதுது…." அதற்கு மேல் எங்கே அவன் பேச… வாயை பிளந்தபடி நின்றிருந்தான்..
நட் பேச்சில் சுதாரித்த விஷ்ணு, சௌமினி மேல் இருந்து விலகி அமர்ந்து, அவளையும் எழுப்பி, உட்கார வைத்து, திரும்ப.. புஸ்.. புஸ்.. என்று மூச்சை விட்டபடி நின்ற நட்டை பார்த்து அசட்டு சிரிப்பை ஒன்றை அவனை நோக்கி விட…
அவனின் அசட்டு சிரிப்பில் மேலும் அவனை முறைத்து அறையை நோட்டமிட, அங்கே இருந்த ரணகளம் அவனை எக்கு தப்பாக யோசிக்க வைத்தது.. அறையின் நிலையும் அவர்களின் நிலையும் அப்படி…
தன் நெஞ்சில் கை வைத்து, " என்னடா.. குடும்பமே நடத்த ஆரம்பிச்சிட்டியா…??? இந்த ஸ்டெப் பை ஸ்டெப் எல்லாம் உங்க கிட்ட கிடையாதா டா.. டைரக்டா அஹ்ஹ் வா… கல்யாணத்தை பிள்ளையோட பண்ணிபீங்களா.. இல்லை பிள்ளை குட்டிகளோட வா.. "
" திஸ் ஐடியா ஃபீல் குட்… மினி உனக்கு ஓகேவா??"
இருவரையும் பார்த்து முறைத்தவள் நட்டுவை நோக்கி சென்று, " என்னைய பத்தி என்ன நினைச்சீங்க… விட்டா உங்க இஸ்டத்துக்கு பேசி கிட்ட போறீங்க.. என் பொறுமையுக்கும் ஒரு எல்லை இருக்கு.. "
திரும்பி, விஷ்ணுவை பார்த்து " உங்க சேர்க்கையே சரி இல்லை.. முதல இவர் ஓட சுத்துறதை கட் பண்ணுங்க… " என்று அவனை திட்டியவள், நட் டை பார்த்து முகத்தை தோளில் ஒரு இடி இடித்து விட்டு சென்றாள்.
என்னங்க டா.. நட்டுக்கு வந்த சோதனை… என்று நட் திரும்பி விஷ்ணுவை பார்த்து, " ஏன் டா.. நீங்க பிராக்டிகலா எல்லாம் செய்வீர்களாம்.. நான் அதை ஜஸ்ட் தியரிட்டிக்கலா சொன்னா .. அது ஒரு குத்தமாடா… என்ன டா உங்க லாஜிக்.. நீ இல்லைடா .. நான் தான் உன் பிரென்ட் ஷிப்பை கட் பண்ணனும்.. சில்லு வண்டு மாதிரி இருந்து கிட்டு.. என்னா பேச்சு பேசுற டா.."
" டேய்.. என்ன இருந்தாலும் அவ தான் மச்சி.. உன் தங்கச்சி.."
" நல்லா ரைமிங் ஆக பேசு.. ஆனா கதவை மட்டும் லாக் பண்ணிடாதே.. " என்று தலையில் அடித்துக்கொண்டு சென்றான்.
விஷ்ணு தன் கேபினை ஒரு முறை சுற்றி பார்த்து… "அச்சோ .. எப்படி இப்போ க்ளீன் செய்யுறது??? இவளை கட்டிகிட்டா.. இந்த வேலையும் நம்மை தான் பார்க்க சொல்லுவா போலையே…" என்று புலம்பியவாறு அறையை சுத்தம் செய்தான்.
இவர்கள் காதலும்.. புராஜக்ட்டும் ஜெட் வேகத்தில் தான் சென்று கொண்டு இருந்தது.. என்ன தான் சௌமினியிடம் காதலில் கரை புரண்டாலும்.. வேலை என்று வந்துவிட்டால் வெளுத்து தான் வாங்கினான் விஷ்ணு.. காதலில் பி.எம் என்றால் வேலையில் வி.பி தான்..
கோட் இவர்களிடம் படாதடாடு பட்டது என்றால், இவர்கள் வி.பி. யிடம் விழி பிதுங்கி நின்றனர். என்ன முட்டினாலும் , மோதி கொண்டாலும், அவுட்புட் வராமல் விட மாட்டான் . ப்ராஜெக்ட் உடன் காதலையும் வளர்த்தான் இந்த கணிப்பொறி காதலன்..
அன்றும் அவர்களை இரவு 7 மணி வரை விடவில்லை.. வேலையில் பிழிந்து எடுத்து விட்டான். இடையில் அரை மணி இடைவேளை.. அனைவரும் அடித்து பிடித்து கொண்டு வந்து விட்டனர் காஃபி டே அறே விற்கு.. சௌமினிக்கு மிக சோர்வாக இருந்தது. வேலை சேர்ந்து ஒரு மாதம் நெருங்கும் நேரம். ஆனால் இன்று போல் என்றும் இருத்தில்லை. அவளுடைய மேஜையிலேயே படுத்து விட்டாள் அசதியில். சுஜி எழுப்ப.. எழுப்ப அவளால் கண் திறக்க முடியவில்லை. சரியென்று சுஜி சென்று வி.பி இடம் சொல்ல, அவன் பறந்து வந்து விட்டான். ஆனால் அவளை நெருங்க முடியா வேலையின் மாண்பு தடுக்க..
அவள் அருகே சென்று கன்னத்தில் விளையாடும் முடி கற்றை ஒதுக்கி, அவளை தன் மார்பில் சாய்த்து கொள்ள முயன்ற மனதையும், பரபரத்த கையையும் கட்டுக்குள் வைக்க பெருபாடு பட்டு போனான்.
" சுஜிதா.. அவங்கள தொட்டு பாருங்க.. ஃபீவர் இருக்கானு"
அவள் தொட்டு பார்த்து விட்டு, " லைட் ஆஹ் இருக்கு சர்" அவனிடம் கூறி விட்டு, " சௌமி.. டி சௌமி.. என்னடி ஆச்சு .. உங்க அண்ணனுக்கு தெரிஞ்சா என்னைய வகுந்துடுவாக… வாடி.. ஹாஸ்பிடல் போகலாம்"
சௌமினி திக்கி திணறி.. " போடி.. அவங்க கிட்ட சொன்ன.. நானே உன்னைய வகுந்துடுவன்.. ஹாஸ்பிடல் வேண்டாம் டி.. பெருசா ஊசி போடுவானுங்க.. நானு மாத்திரை போட்டுகிறேன் டி.."
" டோண்ட் பீகேவ் சில்டிஷ் மிஸ். சௌடாம்பிகை"
இவன் எப்போ வந்தான்.. இதுல எப்போ பாரு நீட்டி முழக்கி கூப்பிட்டிகிட்டு போடா.. என்று மனதுக்குள் அவனை தாளித்தவள்.. சட்டென்று எழுந்து நின்று தன் டீம் மை பார்த்து.. " கைஸ்… அட்டென்ஷன் பிளீஸ்… " என்றாள்.
சில பல வெளிடீம் களும் அப்போது அங்கே இருந்தனர்.. அவர்களும் திரும்பி பார்க்க.." கைஸ் .. நான் என் டீம் மை மட்டும் தான் கூப்பிட்டேன்.. அடுத்த வீட்டுக்குள்ள எட்டி பாக்குறது அவ்வளோ நல்ல விசயம் இல்ல கைஸ்.. " என்று கூற, அவர்கள் முறைத்து விட்டு திரும்பி கொண்டனர்.. விஷ்ணு தலையில் அடித்து கொண்டான்.
" ஓகே.. கைஸ்.. எதுக்கு கூப்பிட்டேன்னா… என் பேரு கொஞ்சம் பெருசு தான்.. அதுக்குன்னு நீங்க எல்லாம் அப்படி கூப்பிடனும் என்று அவசியம் இல்லை.. . ஒவ்வொரு தடவையும் நீங்க அப்படி கூப்பிடுவது, என் தலையிலே அடிச்சு கூப்பிடுற மாதிரி இருக்கு.. சௌமினி.. சௌமி இப்படி கூப்பிடலாம்.. என்ன செய்வீர்களா… செய்வீர்களா " என்று சொற்பொழிவு ஆற்றிறவளை கண்டு அதுவரை கோட் யில் மண்டை காய்ந்து போய் இருந்த மொத்தமும், இவள் பேசியது ஒரு ரெப்ஃப்ரெஷ் ஆக இருக்க… அவர்களும் கோரசாக, " செய்வோம்.. செய்வோம்" என்றனர் . அனைவரையும் பார்த்து தலைக்கு மேலே கை எடுத்து கும்பிட்டு நன்றி கூறி தன் இடத்தில் அமர்ந்தாள்..
அதுவரை அவளை தான் முறைத்து கொண்டு நின்றிருந்தான் விஷ்ணு. பின், அவள் கிட்டே நெருங்கி, பிறர் அறியா வண்ணம், " உடம்பு சரியில்லை என்றாலும், உனக்கு வாய் குறையுதா டி.. தனியா மாட்டும் போது இருக்கு டி.. உனக்கும் அதுக்கும்" என்று விட்டு சென்று விட்டான்.
அடுத்த அரை மணியில் அனைவரையும் வீட்டுக்கு கிளம்ப சொல்லி விட்டான், சௌமினிக்காக… அவர்கள் கிளம்பியது, இவனும் அவர்கள் கேப் பின்னே தொடர்ந்தான். அவர்கள் ஹாஸ்டலில் இறங்கியதும், கேப் சென்றவுடன், ஃபோனில் அவளை அழைத்தான்..
" என்ன வி.பி சர்.."
" கொழுப்பு டி உனக்கு.. மாத்திரை வாங்கினியா"
" இல்லை "
" தெரியும் உன்னை பத்தி.. நான் வாங்கிட்டு வந்திருக்கேன்.. வா.. வந்து வாங்கிட்டு போ..
" இதுக்காக .. திரும்ப ஆபீஸ் வர முடியாது"
" ஏய், திரும்பி பாரு டி.. உன் ஹாஸ்டல் வாசலில் தான் இருக்கேன்.. காரில்.. வா"
சந்தோச அதிர்ச்சி அவளுக்கு, திரும்பி பார்க்க, அவன் காரில் உள்ளே விளக்கை போட்டு காண்பித்தான்.. சிரிப்புடன் சுஜியிடம் சொல்லி விட்டு , காரை நெருங்கி அவன் பக்க சன்னல் வழியாக குனிந்து பார்க்க.. " கொல்லாதடி.. ஏற்கனவே உனக்கு உடம்பு வேற சரியில்லை.. அப்புறம் என்னை ஏதும் சொல்லுவ.. அந்த பக்கம் வாடி.." என்று மறுபக்க கதவை திறந்து விட்டான்.
அவள் உள்ளே அமர்ந்ததும், அவள் நெற்றியில் மெல்லிய முத்தமிட்டான்..
காமமில்லா இம் முத்தம் பெற
தினமும் தினமும் காய்ச்சல் வரம் கேட்பேன்
என் கடவுளிடம் அன்பே...
என்றது சௌமினியின் இதயம்…
" ஃபீவர் இன்னும் இருக்கு டி.. ஹாஸ்பிடல் போவோமா?" என்றான் அவள் தோளை அணைத்து..
அவன் மேல் சாய்ந்து" வேண்டாம்.. லைட் ஆ தான் இருக்கு.. மாத்திரை போட்டுகிறேன் சரி ஆகிடும்"
அவனிடம் மாத்திரை வாங்கியவள், நீங்க பார்த்து போங்க என்று இறங்கி விட்டாள். அவனும் மனமே இல்லாமல் வீட்டுக்கு சென்று விட்டான்.
மறுநாள் காலையில் ஆபீஸ் வந்தவன் மனம் முழுக்க அவன் மினி நினைவு தான்.. ஃபோன் செய்தால் ஸ்விட்ச் ஆஃப் என்று வர.. திரும்ப திரும்ப முயற்சி செய்து தோற்றவன்.. சுஜிக்கு அடிக்க அவளுதும் ஸ்விட்ச்ஆஃப்.. ஆனால் சுஜி ஆபீஸ் வந்து இருந்தாள். அவளை ரூம்க்கு அழைத்தவன் சௌமினி பற்றி கேட்க, " சர்.. ஃபீவர் லைட் ஆ தான் இருக்கு.. ஆனா ரெஸ்ட் எடு சொன்னேன் சர்.. அது தான் அவ இன்னக்கு லீவ்"
" ஃபோன் ஏன் ஸ்விட்ச் ஆஃப்.. "
" தெரியல சர்.. "
" அவளை தனியா விட்டுட்டு நீங்க ஏன் வந்தீங்க.. தெரியாத ஊர் வேற..போங்க.. போய் வேலை பாருங்க" என்று அவளை கடிந்தான். போகலைனு சொன்ன அவ திட்டுறா... வந்தா.. இவர் திட்டுறாரு.. போங்கைய்யா.. நீங்களும் உங்க காதலும்… என்று அவள் தன் இடத்திற்க்கு சென்று விட்டாள்.
கண்ணோடு கண் பார்த்தே பிரிய விருப்பமில்லாது.. பிரிந்த தன் மினியின் கவிதை பார்வை .. அவள்பால் உள்ள காதலை பேரன்பின் ரசவாதமாய் மாற்றி.. இரவெல்லாம் தூங்க விடவில்லை விஷ்ணுவை..
காதல் இத்தனை சுகமானதா? தேடலையும் தவிப்பையும் கூட ரசித்தான் அவ்வினோதன்..
குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன் இனி தங்காது என்று விட்டு சென்று விட்டான் தன் காதல் மினியை தேடி.. யாரும் அறியாமல் ஹாஸ்டல் சுவர் ஏறி குதித்து.. பாவம் தேனியே கிளம்பி வருகிறது அவளை காண என்று தெரியாமல்..
கியூபிட் டே ஜெர்க் ஆனது… " இவங்னுங்க சந்திச்சிகிட்டா … அவ்வ்வ்"