ஆழி 10

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

 

10

 

காதல் …

உன் பிம்பம் விழுந்தே

கண்ணாடி உடையும்...

கண்ணிரண்டும்

ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

 

கவியரசுவின் வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ சௌமினிக்கு மிக கச்சிதமாக பொருந்தியது.. சுஜிக்கு முன்னால் தெரியாமல் இருந்த சௌமினிடம் தொலைந்த ஒன்று.. இப்போது இன்னும் பிரகாசமாக மின்னலென தெரிந்தது… அவள் கண்களின் ஒளி அது.. காதல் தான் எத்துணை ஆக்க பெருங் சக்தி… 

ஒப்பனை என்றால் காத தூரம் ஓடும் பெண்.. இன்று கண்ணாடியில் பார்த்து பார்த்து தன்னை அலங்கரித்து கொண்டாள்...சௌமினியின் காதலை சுஜி கண்டு கொண்டாள் அவள் சொல்லாமலே… அவளும் காதல் வைரஸால் பாத்திக்க பட்டவள் அல்லவா.. ஆனால்.. அது சுஜிக்கு அதிர்ச்சியை தந்தது.. 

காதல் என்றால் ... வேட்டியை மடித்து கட்டிங்கொண்டு எடுடா வீச்சு அருவாளை என்று உறுமும் குடும்பத்தில் பிறந்தவளின் காதல் எங்ஙனம் கை கூடும் என்ற கவலை.. நாத்தி என்பதை காட்டிலும் தோழி இன்னும் ஸ்பெஷல் அல்லவா… அவளின் நல்வாழ்க்கை இன்னும் மிக முக்கியம் அல்லவா.. மனதில் ஓரம் இந்நினைப்பு அவளை படுத்தி கொண்டு இருந்தது..

காலையில் வழக்கம் போல விஷ்ணுவின் தரிசனத்திற்கு காத்து இருந்தனர் கோபியர்கள்… மிக துள்ளலுடன் … கண்கள் மின்ன… உதட்டில் நெளியும் மென்னகையுடன் ஆபீசில் நுழைந்தவனை ஆ வென வாய் பிளந்து பார்த்தனர் அவர்கள்..

" என்னடி.. இது நம்ம வி.பி தானா…"

"ஆமாண்டி .. இவ்வளோ சந்தோசமா… அதுவும் காலையிலே… சம்திங் ராங்…"

" ஏய் சுகி.. அந்த 90 ஸ் கிட் பரிதாபத்துக்கிட்ட பிட்டு போட்டியா இல்லையா… என்ன விசயம் னு தெரியலையே., ப்ரீத்தி… உனக்காச்சும் தெரியுமா"

"அஞ்சு.. அலட்டமா இரு… எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில கண்டுபிடிச்சுடலாம்…"

"எனக்கு என்னவோ… வி.பி ஓட எல்லா சிம்ட்டம்ஸ் பார்த்தா அதுவா இருக்குமோ னு லைட் ஆ டவுட் வருது"

" ஏய்.. ப்ரீத்தி… நீ எப்பவும் எந்த விஷயத்தையும் நேராக பேச மாட்டியா டி"

" போடி.. குள்ள வாத்து" என்று அவளின் தலையில் தட்டியவள், " நீ இன்னும் வளரனும்… அது எல்லாம் புரிய.. போ.. போ.. போய் காப்ளான் குடி.. அப்பவாச்சும் வளர்ரீயானு பார்ப்போம்.."

" நான்.. காம்ப்ளான் குடிக்கிறேன்.. இல்லை அப்படியே சாப்புடுறேன்.. அதுவா டி.. இப்போ பிரச்சனை.. என்ன சிம்ட்டம்ஸ் ஒழுங்கா சொல்லு டி"

"எனக்கு என்னமோ .. நம்ம வி.பி….."

" நம்ம வி.பி."

"நம்ம வி.பி…. சொல்லு டி"

" காதலில் விழுந்துட்டாரோ.. னு ஒரு டவுட்"

அது வரை என்னவோ ஏதோ என்று பயந்து இருந்த அனைவரும் பக் என சிரித்தனர்… 

"போடி.. போ.. வி.பி. ஆவது… காதலிக்கிறதாவது… "

" நீங்க பாட்டுக்கு சிரிச்சி கிட்டு இருங்க.. எவளோ வந்து கொத்தி கிட்டு போக போறா"

"ஆனாலும்.. இது சற்று யோசிக்க வேண்டிய விசயம்…"

" முதல நட்டை பிடிப்போம்… கண்டுபிடிப்போம்.."

தன் கேபினுள் நுழைந்தவன் கதவை திறக்கும்போது.. கதவு அருகே அன்று நடந்த நிகழ்வில் இன்று அவனுள் மகிழ்ச்சி மத்தாப்பாய்…

தலை கோதி சிரித்து கொண்டே.. சென்று தன் இருக்கையில் அமர்ந்தவனின் எதிர் இருக்கையில் அன்று தன்னவள் அமர்ந்து கோட் செய்த நினைவு இனிமையாய்… மீண்டும் தலை ஆட்டி சிரித்து கொண்டே… லப் டாப் உயிர்பித்தவனின் திரையில் சிரித்தாள் அவனின் மினி.. பார்வை விலக்க முடியா இழு விசையில் அவளிடம் சிக்கி கொண்டே.. நிழற்படத்தை தொட்டு ஒரு முத்தம் கொடுத்து, " என்னை டோட்டல் லா… மாத்திட்டடி.. ரீ புரோகிராம் பண்ண சிஸ்டம் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கேன்" என்று ரசித்து கூறி.. தன் வேலையை தொடங்கினான்..

பயிற்சி முடிந்து இன்று தான் முழு நேர வேலையாக அவர்கள் அந்த ஆபீஸில் வேலை எடுக்க போகிறார்கள். அவர்களுக்கென்று தனி சிஸ்டம் ஹெச்.ஆர் டிபார்ட்மெண்ட்மென்றால் வழங்கப்பட்டது. எச்.ஆர் டிபார்ட்மெண்ட் சென்றவுடன் ஆதர்ஸ் பேச ஆரம்பித்தான்…

 விஷ்ணுவும் அங்கே தான் இருந்தான்… ஆனால் ஹெட் ஆக விரைப்பாகவே நின்று இருந்தான்.. சௌமினி தான் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.. அவனிடம் எதிர் வினை இல்லவே இல்லை…" பி.எம்.. கொஞ்சமாச்சும் ஃபீலிங்ஸ் இருக்கா பாரு" என்று அவனை திட்டி கொண்டே இருந்தாள்.

பின் சுஜியிடம் "நியூட்டன் தேர்டு லா வேஸ்ட் டி… ஒர்க் அவுட் ஆகல" என்றாள்.. அவள் புரியாமல் விழிக்க… இங்கே ஆதர்ஷ் பேசிக் கொண்டிருந்தான்..

"வெல்கம் கைய்ஸ் ……இனி தான் நமக்கான வேலை…. நம்மோட ஹனி மூன் பீரியட்ஸ் எல்லாம் ஓவர் …. இனி கொடுக்குற பிராஜக்ட் கரெக்டா கோட் எடுத்து செய்யனும்.. இப்போதைக்கு எல்லோருக்குமான ப்ராஜெக்ட் கொடுத்திருக்காங்க இதனை சக்ஸஸ்புள் செஞ்சு கொடுக்கணும்.. டீமும் இன்னையில் இருந்து அவரவர் டீம் லீடர் கிட்ட ரிப்போட் பண்ணனும்… உங்களோட.. ஐடி மற்றும் அக்சஸ் கார்டு உங்க டீம் லீடர் கிட்ட வங்கிகோங்க… ஆல் தி பெஸ்ட் டீம்"

அடுத்து பிரணவ் பேச ஆரம்பித்தான்..…" வெல்கம் கைஸ்…உங்க சிஸ்டத்துக்கு பாஸ்வேர்டு போட்டுகோங்க. …எப்பவும் "சேஃப் அண்ட் க்ளீன் கேபின் " ஃபாலோ பண்ணுங்க… ஆல்ரெடி உங்களுக்கு தெரியும் பட்.. ஒரு சின்ன ரிமெம்பர் கொடுக்கிறேன்..என்னை விட உங்களில் ஒருவர் சொன்ன இன்னும் நல்லா இருக்கும்" என்று சுற்றி பார்த்தவன் கண்களில் விழுந்தாள் நம் சௌமினி..

"மிஸ்.. சௌடம்பிகை .. யூ " என்றான்..

 அதுவரை விஷ்ணுவை கண்ணாலே விழுங்கி கொண்டிருந்தவள், ’இதுக்கும் என்னைய தான் உன் கண்ணுக்கு தெரியுமா ’ என்று புலம்பலுடன் எழுந்து பேசினாள்..

"நம்ம புராஜக்ட் சம்பந்தபட்ட எந்த டீடைய்ல்ஸையும் சிஸ்டம்ல அப்படியே விட்டுவிட்டு ரெஸ்ட் ரூம் கூட போக கூடாது.. உங்க ஃபோன்க்கு எப்படி சுத்தி சுத்தி பேட்டர்ன் வரைஞ்சு வைச்சு இருக்கீங்களோ .. அதே மாதிரி சிஸ்டம் லேயும் வரைஞ்சு வைச்சு சேஃப் ஆ பயன்படுத்தனும்…. இது தான் சேஃபே.. அப்புறம் உங்க காஃபி டேரியாவை உங்க கேபினுக்கு ஷிஃப்ட் பண்ண கூடாது.. இது தான் க்ளீன் … கரெக்ட் ஆ சர் " என்றாள் சௌமினி… 

அவளின் விளக்கத்தில் அங்கு இருந்த அனைவரும் ஆரவாரத்துடன் சிரித்து, கரவொலி எழுப்பினார்கள்…

விஷ்ணுவிற்கு கூட உதட்டு ஓரம் சிரிப்பில் வளைந்தது.. பின் அவரவர் தங்கள் டீம் லீடரிடம் சென்று தங்களின் ஐடி கார்டு வாங்கி கொண்டு, தத்தம் சிஸ்டீமில் செட் ஆனார்கள். சௌமினி தவிர… "உங்கள் நேம் மாத்தி ப்ரண்ட் ஆகி இருக்கு.. லஞ்ச் டைம்ல வந்து வாங்கிக்கோங்க… நான் ஹெச்.ஆர் கொடுத்து மாற்றி வைக்கிறேன்" என்று விட்டான்.

சுஜி தன் பாஸ்வேர்டு ஐ ’ ரிஷிமாமா143’ என்று வைத்ததை பார்த்து, அருகில் இருந்த சௌமினி, " ம்ம் … நடக்கட்டும்.. நடக்கட்டும்… அண்ணியாரே" என்றாள்..

" போதும் டி.. உன் ரீல் அந்து போய்.. அரை நாள் ஆகுது… நாங்களும் பார்க்கிறோம்… நீ என்ன வைக்கிறனு"

அவளின் பேச்சில் தன் ரகசியம் வெளி வந்ததில் உதடு கடித்து சிரித்தவள்…" போங்கள் அண்ணியாரே… நீங்கள் ரொம்ப மோசம்" அதில் ஜெர்க் ஆன சுஜி.." அடியே… அவளோ நீ "" என்க… அங்கே ஒரு அடிதடி ஆரம்பமானது..

"வாட் ஹேப்பெண்ட் ஹியர்… ஆர் யூ சைல்டிஷ்" என்ற சத்தத்தில் இருவரின் கையும் அப்படியே அந்தரத்தில் நிற்க, மெதுவாக இருவரும் திரும்பி பார்க்க.. அங்கே அவர்களை முறைத்து கொண்டு நின்றான் விஷ்ணு…

" பார்… பார்.. முழுவதும் வி.பி. ஆக மாறி இருக்கும் உன் பி.எம் யைப் பார்" என்ற மைண்ட் வாய்ஸ் சௌமினி மண்டைக்குள் ஓட… 

இருவரும் கைகளை விலக்கி கொண்டு தன் சிஸ்டமில் தலையை நுழைத்து கொண்டனர்.

அவர்கள் அருகில் வந்தவன்.. " உங்க அடிதடி எல்லாம்.. உங்க ஹாஸ்டல் ரூம் ஓட.. அண்டர் ஸ்டேண்ட்" என்று உருமியவன்..

" மிஸ்.. சௌடாம்பிகை.. புட் பாஸ்வேர்டு டூ யூர் சிஸ்டம்.. "

" எஸ்.. வி.பி சர்" என்று உதட்டு சுழித்து இழுத்தவளின்.. உதட்டில் ஆழ்ந்து நோக்கி விட்டு சென்று விட்டான்.

" அப்பா.. இந்த எஸ்.பி தொல்ல தாங்கலை டி"

" அச்சோ… அடுத்த பேரா… " என்று அதிர்ந்தாள் சுஜி..

"எஸ் .. ஆஃப் கோர்ஸ்…" என்று மிதப்பாக சொன்னவளை… " இதுக்கு என்னடி .. அர்த்தம்"

"பப்ளிக்.. பப்ளிக்… ஏன் இவ்வளோ சத்தம்… போனவன் திரும்ப வந்துருவான்"

" ஆனாலும்.. உனக்கு கொழுப்பு ஜாஸ்தி டி.. உன் ஆளா இருக்கலாம் … அதுக்காக அவன்.. இவன் சொல்லுவியா"

" உன்கிட்ட மட்டும் தான் சொல்லுறேன்.. மத்தவங்க முன்னாடி எல்லாம் கரெக்ட் ஆ பேசுவேன் டி"

" உன்னை எல்லாம்" என்று தலையில் அடித்து கொண்டு தன் வேலையை தொடர்ந்தாள்.

சுஜி வேளையில் ஐக்கியமாகி விட… சௌமினி மிக தீவிரமாக யோசித்து, தன் சிஸ்டம் பாஸ்வேர்டு வைத்தாள்.. " பிரதுமினி16"…                       

லஞ்ச் டைமில் தன் சுற்றி வந்து அமர்ந்து இருக்கும் கோபியர்களை பார்த்து ஒரு நொடி நட், சந்தோச பட்டாலும் அடுத்த நொடி இவர்களின் நோக்கம் தெரியாதவனா அவன்.. இவர்களின் ஜொள்ளை தான் ஆபீஸ்சே அறியுமே..

" ஹாய்.. 90ஸ்.. என்று ஆரம்பித்த சுகி டக்குனு நாக்கை கடித்து, உதடு சுழித்து சாரி… சாரி.. நட் சர் என்றாள்.. 

அவளின் அந்த சுழிப்பில் நட்டுக்கு கூட ஹார்ட் ஒரு ஜம்ப் ஜம்பாகி… பின் அதனுடைய இடத்தில் போய் செட்டில் ஆனது..

கியூபிட்.. " டேய்… பாவம் பார்த்து உனக்கும் …. ஒருத்தியை கண்ணுல காட்டிடேன்… மகனே இனி உன் சமத்து '"என்றது…

கியூபிட் வாய்ஸை கேட்ச் பிடித்தவன், ’ நட் ட்டு… இவளையும் விட்ட.. நீ ஆயுசுக்கும் முரட்டு சிங்கிள் தான்’ என்று முடிவெடுத்து, அவளை கரெக்ட் பண்ண ரெடி ஆனான்.

"ஹாய்.. கேள்ர்ஸ்… என்ன காத்து இந்த பக்கம் வீசுது.."

அதற்குள் ஒருவரையொருவர் பார்த்து அனைவரும் சுகிக்கும் ஜாடை காட்ட, அவளே தொடர்ந்தாள்..

" என்ன நட் சர்.. இப்படி சொல்லிட்டீங்க… நீங்க நா எங்க எல்லோருக்கும் ஒரு தனி பிரியம் தான்"

" ஆஹான்ன்… அப்படியா… உங்களுக்குமா" என்றான் தன் காரியத்தில் கண்ணாக…

" ஆமா… சர்… ஒரு டீடைய்ல் வேணுமே.. "

" வி.பி பத்தியா…" என்று பாய்ண்ட் ஐ பிடித்தான்..

" உங்களுக்காக.. இல்லை, உங்க ப்ரெண்ட்ஸக்கா.."

" என் ப்ரெண்ட்ஸ் க்கு தான்… எனக்கு ஏன்…" என்று சமாளித்தாள்..

" என்ன"

"சர்.. வி.பி. சர் யாரையும் லவ் பன்றாரா??…" 

"அவன் பெர்சனல் உங்க கிட்ட.. நான் எப்படி சொல்ல.. நீங்க ஒன்னும் அவ்வளோ க்ளோஸ் இல்லையே எனக்கு" என்று பிட்ட போட..

" என்ன சார்.. இப்படி சொல்லுறீங்க… நாம அப்படியா பழகி இருக்கோம்"

" நாம எங்க பழகினோம்… ஃபர்ஸ்ட் பழகுவோம் .. அப்புறம்… பார்க்கலாம்"

அவர்கள் அவனுக்கு வலை விரிக்க.. அவ்வகையில் அவர்களே சிக்க.. எல்லோரும் பே என்று முழித்தனர்.. மற்றவர் எல்லோரும் சுகியை முன் நிறுத்த… வேறு வழி இல்லாமல் அவளும் நட் வலையில் சிக்கினாள் …. வாங்க பழகலாம் என்று…

கியூபிட் " ஒரு நல்லவன் இருந்தான்.. அவனையும் சிக்க வைச்சாச்சு …. மிஷன் கம்ப்ளீட்" என்று மந்தகாசமாக சிரித்தது…

லஞ்ச் டைமில் விஷ்ணுவின் கேபினில் நுழைத்தவள் விஷ்ணுவின் பிடியில்… "நியூட்டன் தேர்ட் லா ஒழுங்கா வேலை செய்யுதா மினி" என்றான் ஒற்றை கண் அடித்து…


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top