9
"ஐ லவ் யூ மினி… " என்ற விஷ்ணுவின் அதிரடி தாக்குதலில் சற்று அதிர்ந்து.. அவனின் முத்த மழையில் நனைந்து அவன் காதலில் குழைந்து தான் போனாள் பெண்ணவள்..
இரண்டு நாட்களாக மனதில் வெறுமையுடன் தான் சுற்றி கொண்டிருந்தான் விஷ்ணு… அவனுக்கே தன்னை புரியாத நிலை.. இதழின் இணைப்பில் ஏற்படும் இந்த பந்தம் காமமா… காதலா… பிரித்தறியா நிலையில் அவன்.. காமம் கொள்ள தான் ஒன்றும் காமுகன் அல்லவே.. என்று தனக்கு தானே கூறி கொண்டு மேலும் குழம்பினான் அந்த புதிதாய் காதல் நோய் கண்ட காதலன்…
பார்த்து பதினைந்து நாட்களில் காதல் சாத்தியம என்று கேட்டு கொண்டவனுக்கு தெரியவில்லை… பார்த்த நிமிடமே பற்றி கொள்ளும் பெரும் நெருப்பு காதல்.. என்று…
சிஸ்டம் இல் நுழைந்த வைரசை கண்டறிய வழி இல்லாது.. விழி பிதுங்க, முட்டி மோதும் நிலையில் தான் அந்த கணிப்பொறி காதலன்..
கண்களை மூடி, கையை நெற்றியின் மீது வைத்து படுத்து இருந்தவனின் உதட்டோரம் மென்னகை புரிந்து கொண்டு இருக்க, மனமோ ஏதோ ஒரு உணர்வு சுழலில் சிக்கி சிக்கி மீண்டு வந்தது. ஒரு வித புது அனுபவமாக, ஆனாலும் பிடித்து தான் இருந்தது அவனுக்கு.
தலையை குலுக்கி சத்தமாக தனக்குத்தானே "முத்தி போச்சு நமக்கு" சொல்லி கொண்டவன் குளியல் அறையில் புகுந்து ஷவர் அடியில் நின்று குழம்பிய மனதை குளிர்வித்தான்.. எல்லாவற்றையும் பார்ட்டியில் பார்த்து கொள்ளலாம் என்று கிளம்பி விட்டான். க்ரே நிற ஷர்ட், கருப்பு நிற ஷூட்டில் தன்னை சிரத்தை எடுத்து பார்த்து பார்த்து கிளம்பினான் விஷ்ணு.. அவனுக்கே தன்னை நினைத்து வெட்க புன்னகை வேறு..
எல்லாவற்றிற்கும் பார்ட்டி என்ற கார்பொரேட் பாணி இவர்களின் ஜாப் ஜாயினிங் க்கும் விதி விலக்கு அல்ல.. ஆகவே ஜோராய் ஆரம்பித்தது ஜாப் ஜாய்னிங் பார்ட்டி.. பெண்கள் அழகு நட்சத்திரங்களாய் ஜொலிக்க.. ஏற்கனவே ஜொலிப்பவள் இன்னும் மின்மினியாய் சௌமினி … அவளின் அழகில் தேன் குடிக்க துடிக்கும் வண்டென விஷ்ணு.. இவ்வளவு நாட்களாக சிறிது சிறிது இருந்த புள்ளிகள் இணைந்து மொத்த வடிவமாய் மாற.. காதல் ஊற்று அவனுள்.. இவனை கண்டும் காணாமல் சுற்றும் அவளின் மேல் கோபமும் தாபமுமாக அவன்.. காதலுடன் கூடிய பொறாமை வேறு அவனை அவளிடம் இழுத்து சென்றது.. பிடுங்க வரும் பொம்மையை தன்னுள் பொத்தி பாதுக்காக்கும் பிள்ளையை போல அவளை தன்னுள் பொதிந்து விடவே துணிந்து விட்டான்.
காதல் என்றால்.. ரப்புஷ்.. டைம் பாஸ்.. சில்லி திங்ஸ்ஸ் என்று கூறும் விஷ்ணுவின் இதயத்தை வைரஸ் போல ஊடுருவி மொத்தமாக ஆக்கிரமித்து விட்டாள்... எங்கே.. எப்போது.. என்று கேட்டால் அவனிடம் பதிலில்லை.. ஆனால் அவள் வேண்டும் என்ற தவிப்பு மட்டும் பெரும் பிரவாகமாய்… மயில் தோகையென கூந்தலை விரிய விட்டு அழகான தங்க நிற சுடியில் தங்க தாரகை என வலம் வந்தவளை அள்ளி கொள்ள மனம் வெகுவாக துடித்தது.. சுற்றுப்புறம் அதனை தடுக்க, அவற்றை எல்லாம் தகர்க்க தருணம் பார்த்து கொண்டிருந்தான் அந்த கந்தர்வ காதலன்…
கோபியர் கூட்டம் நல்ல வேளையாக இல்லை.. இருந்திருந்தால் விஷ்ணுவின் பார்வை சௌமினி துளைப்பதை பார்த்து இதயம் வெடித்து இறந்திருப்பார்கள்.. இது வி.பி டீம் க்கான பார்ட்டி மட்டுமே.. கூடவே சீனியரும் நட்டு வும்.. அன்றைய நிகழ்ச்சிக்கு பின், நட் முகம் திரும்பினாலும் நண்பனின் குணம் தெரியும் ஆதலால், ஆங்கிரி பெர்டு மொடு இருந்து மாறி சின்சான் போல திரிந்து கொண்டு இருந்தான் பார்ட்டியில்.. தனக்கான பெரும் அதிர்ச்சி இனி தான் என்று தெரியாமல்..
பார்ட்டி அனைவருக்கும் வெகு குதூகலமாய்.. பெரும்பாலும் கல்லூரி முடித்து வந்தவர்கள் என்பதால் ஆட்டம் பாட்டம் என்று குறைவில்லாமல் சென்று கொண்டிருந்தது. சௌமினி.. சுஜி க்கு சொல்லவும் வேண்டுமா.. நிரம்பவே கொண்டாட்டத்தின் பிடியில் அனைவரும்.
கழுகுக்கு இரை ஒன்றே குறி என்பது போல விஷ்ணுவின் கண்களுக்கு சௌமினி மட்டுமே.. நல்ல நாளிலே அவளிடம் யார் பேசுவதும் பிடிக்காதவன்.. இன்று அழகு ஓவியமாய் திகழும் மின்னும் அவளை நெருங்க முயன்றவர்களை கண்களாலேயே எரித்து கொண்டிருந்தான் கொங்கணவர் போல…
சௌமினியும் அவனை பாராதது போல பார்த்து கொண்டிருந்தாள்… அவனை பார்க்கும் போது அவளின் சபதங்கள் எல்லாம் சூரியன் கண்ட பனி போல இருந்த இடம் தெரியாமல் மறைந்து கொண்டிருந்தது… தன் மனதில் தோன்றும் எண்ணங்களை அவன் அறிய நேர்ந்தால்.. தன்னை இன்னும் மட்டமாக நினைக்க தோன்றும் என்று அவனிடம் சாயும் மனதினை கடிவாளமிட முயன்று கொண்டிருந்தாள்…
கடிவாளமிட்ட குதிரையென இருக்க அறிவு எச்சரிக்க… சூரியனை கண்ட தாமரை போல அவனை கண்ட நொடி மலரும் மனதினை என்ன செய்ய..இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்து மனதிலுள் மருகி கொண்டு இருக்க. .. இவர்களை இணைக்க கியூபிட்டும் நேரம் பார்த்து கொண்டு இருந்தது..
விளையாட்டுகள் முடிந்து ஆடல் பாடல் என அனைவரும் குதுகளிக்க.. சௌமினி அதில் இருந்தாலும் அவளின் நினைவு முழுக்க விஷ்ணுவே.. அவன் நினைவின் மன்னன்.. யாரும் அறியாமல் அவள் பின்னே நின்று, அவளின் கையை பற்றி இழுத்து சென்றான் காதல் கள்வனாக…
அவன் இழுத்து சென்ற இடம் ஹாலிவுட் படங்கள் போல காபி கலர் இடுக்கு இருட்டு ஹால் பாதையில்… அவளின் பின்னால் கையை கிடுக்கு பிடி போட்டு "என்னடி என் கூட பேச மாட்டுகிற.. கண்டா ஓடுற… தேடி தேடி வந்து எனக்கு முத்தம் கொடுத்துட்டு இப்போ என் எச்சில் உனக்கு கசந்துருச்சா? " என்றவனின் பேச்சில் முற்றிலும் பொறாமையே..
விஷ்ணுவின் வார்த்தைகள் அவளை கொத்தினாலும்.. சௌமினியிடமிருந்து வந்த நறுமணமும் கொழு கொழு வெண்ணையின் குளுமையுடன் கூடிய பட்டு தேகமும்.. அவளின் உடல் வனப்பும் பித்தம் கொள்ள செய்ய.. பின்னால் இருந்தே அவளை அணைத்தான்.. அடுத்த நொடி... ஆயுளுக்கும் இவ்வணைப்பு வேண்டும் என்ற பேராசை தூண்டியது அவனுக்கு..
சௌமினிக்கோ அவ்வலிய ஆணின் பிடியும் அணைப்பும் வலித்தாலும் இன்னும் மலைப்பாம்பாய் இறுக்கி.. முறுக்கி .. எலும்பு நொறுக்கி கொன்று விடு என மனம் பிதற்ற ஆரம்பித்தது…
இது நடக்காது என தெரிந்து வலியில் சுற்றும் வேதனையை விட உன் கையால் முக்தி பெற்று மோட்சம் பெறுவேன் என்று உச்ச மருள் நிலையில் சௌமினி மவுனம் காத்து தன் கீழ் உதட்டை மேல் பற்களால் அழுந்த கடிக்க…
அவளின் மௌனம் காதல் பக் உள்ளே நுழைந்ததை அறியா அந்த சாப்ட்வேர் காதலனை கடுப்பேத்த.. இன்னும் அவளை நெருங்கி அணைப்பை தளர்த்தி... தன் நெஞ்சில் பரவி கிடந்த அவள் அடர் தோகை கூந்தலை தள்ளி பார்க்க.. தங்க பேழை என ஜொலித்த அவளின் முதுகை வெறித்தான்...அளவாய் வெட்டி தைக்க பட்ட சுடியின் வெளிர் வட்ட கழுத்தை சுற்றிலும் குட்டி குட்டி முத்தங்களால் அலங்கரித்தான் காதலனாய்… ஒவ்வொரு முத்ததுக்கும் மினி.. மினி என்ற பிதற்றலோடு…
"நான் பெரிய பொம்பளை பொறுக்கி.. சரியா.. சோ அடிக்கடி இப்படியெல்லாம் செய்வேன்.. "என்று உளறுபவனை மென்னகையுடன் அவள் பார்த்து தலை ஆட்டி மோகன புன்னகை புரிந்தாள்.. அவளின் புன்னகையில் மூச்சு காற்றில் வேகம் ஏறி ..அவளின் முதுகில் இவனின் வெப்ப காற்று...
அவளுக்கோ.. பருவ மலர் இதழ் விரித்து சுகம் பரப்ப.. அம்மம்மா!! சுகமா? வலியா? அடிவயிற்றுக்குள் யாழின் நரம்பை கொத்தாய் பிடித்து விட்டு விட்ட வலி..
"பேசுடி.. வாய் கிழிய கிழிய …பேசுவ… இப்போ என்னாச்சு.. என்கிட்ட மட்டும் என்ன வந்தது உனக்கு.. " இப்போ சரியா அவன் உதடு இவளின் வலது கழுத்தில் இருந்து மேல் ஏறி காதுக்குள் பேசியது.
"ம்ம்ம்.. " என்ற முனகல் மட்டுமே.. எதுக்கென்றே தெரியாது சௌமினி..
விஷ்ணுவால் அந்த 'ம்' ஒலி கொடுத்த தூண்டலில் பின்னங்கழுத்தில் பல் பதிய கடித்து வைத்தான் கணவனாய்.. கள்வனாய்..
ஏற்கனவே காதல் போதையில் சுரணை இல்லாது கிடந்தவளை இக்கடி உயிர் தந்து உயிர்ப்பிக்க.. பின் பக்கம் சாய்ந்து , இடுப்பை பற்றி இருந்த விஷ்ணுவின் விரல்களை தன் விரல்களோடு கோர்த்து நெரித்து இன்னும் அவனின் பாதியாகவே அவள் ஒன்ற.. இருவருக்கும் அக்கணம் புரிந்து விட்டது.. தன் இணையை கண்டுகொண்டேன் என்று..
எப்போதும் இருவருக்குள் விபத்தாகவே நிகழும் முத்தம் யுத்தம்.. இன்று அவளை தன் உயரத்துக்கு தூக்கிக்கொண்டு மிகுந்த விருப்பத்துடன் நிகழ்ந்தது.. இதழ்களில் யார் இதழ் என பிரித்தறியா வண்ணம் அவ்விரு இதழ்களும் தங்களுக்குள் லயித்து இருக்க… மிக மென்மையாக அவள் இதழை பிரித்து, அவளை கீழே இறக்கி, காதல் வழிய அவள் கண்களை ஊடுருவினான்… அவன் கண்களின் காதலில் கட்டுண்டு இருந்தவளின் கண்களும் அவனுக்கு சளைக்காமல் காதல் வழிந்தது…
அவள் கை பற்றி.. அழகிய பிறை நுதலில் மென்மையான ஒரு முத்தம் பதித்து,
"ஐ லவ் யூ டி பொண்டாட்டி.. " தன் மினியிடம் கண் பார்த்து சொல்லியே விட்டான் கந்தர்வ கணவனை விஷ்ணு…
அவனின் காதலில் கரைந்து கொண்டு இருந்தவள், அவனின் பொண்டாட்டி என்ற விளிப்பில் விழி விரிய வியந்து, அவனுக்கு சம்மதமாய் இதழ்கள் புன்னகை புரிய.. மகிழ்ச்சி பெருக்கில் வலது கண் ஓரம் ஒரு துளி கண்ணீர் வைரம் என மின்னியது…
"சொல்லுடி.. பொண்டாட்டி… கல்யாணம் பண்ணிக்கலாமா… இப்போவே.. இங்கையே…"
வெட்க சிரிப்புடன் அவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள் மாது.. இப்போது அவனை இறுக்கி.. நெருக்கி அணைப்பது அவளின் முறையானது..
வார்த்தைகள் இன்றி அணைப்பினால் சம்மதம் தரும் தன்னவளை குனிந்து அவளது காதில் தன் மீசை உரச, "என்னடி.. பதில் இல்லை… சொல்லு டா.. எனக்கு இந்த பாஷை புரியல .. உன் வாய் வார்த்தை தான் வேணும்"
" மௌனம் சம்மதம் னு கேள்வி பட்டது இல்லையா"
" ஒஹ்ஹ்.. அப்போ இந்த மௌனம் . .. எதற்கு சம்மதம் சொல்லுதாம்.. நான் சொன்ன காதலுக்கா.. இல்லை கல்யாணத்திற்கா"
" இப்போதைக்கு காதலுக்காம்…"
"அப்போ.. எப்போவாம்.. கல்யாணத்திற்கு"
" கல்யாணம்… கொஞ்ச வெயிட் பண்ணுவோமே.. வீட்டுல சொல்லி…." என்று இழுத்தவளை ஆழ்ந்து பார்த்தவன்..
" இருபத்தி ஏழு வருசம் வெயிட் பண்ணியாச்சு டி… உன்னை பக்கத்துல வைச்சு கிட்டு இனியும் ரொம்ப எல்லாம் வெயிட் பண்ண முடியாது.."
" ம்ம்ம்… " என்றவள்.. இன்னும் அவனை நெருங்கி அணைத்து கொள்ள, அவனும் அணைப்பை இறுக்கி.. "மினி.. மினி .. மை லவ்" என்று ஹஸ்க்கி வாய்ஸ் இல் கூற… அவளும் " பிரது… பிரதி…" என்றாள்.
தங்களை மறந்து அணைப்பில் இருந்த இருவரையும் க்கிலீங் என்ற சத்தம் நினைவுக்கு கொண்டு வர, பிரிந்து திரும்பி பார்க்க அங்கே நட் இவர்களை பார்த்து வாய் பிளந்து நின்று கொண்டிருந்தான்…
" இவனுக்கு எப்படி தான் மூக்கு வேர்க்குமோ.. சரியான கரடி" என்று மனதுக்குள் பொரிந்து தள்ளி விட்டு, அவனை பார்த்து அசட்டு சிரிப்பு ஒன்றை விடுத்தான் விஷ்ணு.. வழக்கம் போல ஓடமால் மெதுவாக நடந்து சென்றவளையே விஷ்ணு பார்க்க.. நட் முறைக்க.. "மினி வெயிட் ஃபார் மீ "என்று குரல் கொடுத்தான் விஷ்ணு..
" என்னது மினியா…. இப்பவும் ஆக்ஸிடெண்டு தானா டா.. நீ லவ் பண்ணவே இல்லை தானா" என்று கோபமாக கேட்டவனை பார்த்து,
"மச்சி… நாங்க லவ் பண்றோம்" என்று வெட்க புன்னகையுடன் தலையை கோதி கொண்டான் விஷ்ணு.. ஒரு நிமிடம் நட்டுவே அவனின் வெட்க சிரிப்பை ரசித்தான்.
" என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலையே… ஏன் டா.. ஏன் … இருக்கா கேட்டா.. இல்லை சொல்லுற… இல்லையானு கேட்டா இருக்கு னு சொல்லுற… எஸ். ஜே. சூரியா மாதிரியே பேசுறீயே…மச்சான் "
"டேய்..மச்சி… அப்போ இல்ல அதனால இல்லை னு சொன்னேன்.. ஆனா இப்போ இருக்கு.. சோ இருக்கு னு சொல்லுறேன்" என்று தெளிவாக குழப்பினான் விஷ்ணு நட்டுவை…
" மீ.. பாவம் டா… வலிக்குது… விட்டுடுடா… என்று கிளம்பியவன் திரும்பி வந்து, "அப்புறம் இன்னும் ஒண்ணு … ஒரு கன்னி பையன் இன்னும் ஒண்ணும் அனுபவிக்காமா இருக்கேன்.. பொசுக்கு பொசுக்கு னு என் முன்னாடி.. கட்டி பிடிக்கிறது.. முத்தம் கொடுக்கிறது எல்லாம் வேண்டாம்.. மீ லிட்டில் ஹார்ட் தாங்காது… எதா இருந்தாலும் தனியா வைச்சுக்கோ சொல்லிட்டேன்…." என்று புலம்பிவிட்டு சென்றான்.
நட் நிலைமை பார்த்து கியூபிட் கூட விழுந்து விழுந்து சிரித்தது ..
அடுத்த இரண்டு நாட்களில் சௌமினி சட்ஃபிகேட்ஸ் அனைத்தும் விஷ்ணுவின் கேபின் டிராயரில் குடி கொண்டது...