ஆழி 8

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

 8

 

நாட்கள் விரைந்து ஓடி நாளை மறுநாள் ஃப்ரெஷ்ஷர்ஸ் டிரெய்னிங் முடிவடைந்து முதன் முதல் கோட் செய்ய இருக்கிறார்கள். இந்த பத்து நாட்கள் தனியாக அவன் சௌமினியை பார்க்கவில்லை.. சந்திக்கும் தருணங்களிலும் அவளின் ஆபீஷியல் ஆனா அந்த முகம் ஏனோ அவனுக்கு பிடிக்கவில்லை.. அவனை கண்ட நொடி கண்கள் மின்ன மென்னகையுடன் அவள் " குட் மார்னிங் வி.பி" என்று இழுத்து சொல்லும் அந்த குறும்பு கூடிய வாழ்த்து கேட்க மனம் தவித்தது. தன் மீது கோபம் கொண்டாலோ, இல்லை ஏதேனும் திட்டி தீர்த்து இருந்தால் கூட அவனுக்கு கொஞ்சம் இதமாக இருந்திருக்கும்.. ஆனால் அவளின் அந்த பார்த்தும் பாராத முகம் அவனின் மனதை முணு முணுவென இரவு பூச்சி சத்தம் போல கேட்டு கொண்டே இருந்தது.  

விஷ்ணுவிற்கு இந்த பத்து நாட்கள் ஏனோ பத்து மாதங்கள் போன்றே தோன்றியது. அவளை காதலிக்கிறானா என்று கேட்டால் நொடியும் தாமதிக்காது " வாட் ரப்பிஸ் டாக்கிங் இஸ் திஸ் " என்பான். ஆனால் ஏதோ ஒன்று பிராண்டியது என்றும் சொல்லுவான். என்ன மேக் கோ.. பாவம் அந்த க்யூபிட் அவனிடம் மாட்டி கொண்டு விழி பிதுங்க முழிக்கிறது… 

விஷ்ணுவை பார்த்து பார்க்காததும் போல சென்றான் நட். விஷ்ணு அவனை பார்த்து முறைத்து விட்டு, "அவ என்கிட்ட பேசாம போன அதுல ஒரு நியாயம் இருக்கு… ஆனா இந்த பக்கி ஏன் எப்படி முகத்தை வைச்சு கிட்டு சுத்துறான். பொண்டாட்டி முன்னாடி காதலிக்கு முத்தம் கொடுத்தது போல , இவன் முறைச்சுகிட்டு திரியுறான்.. " என்று தனக்குள் முணுமுணுத்து கொண்டு தன் கேபின் நோக்கி சென்றான்.

ஆம்.. அன்று கதவை தள்ளி கொண்டு உள்ளே வந்தது நட்டுவே தான். விழிகள் தெறிக்க விழித்து கொண்டு தன் கண்ணை நம்ப முடியாமல் நன்றாக தேய்த்து கொண்டவன், திரும்பவும் அதே காட்சி தெரிய…. உண்மை தான் என்று அவன் மண்டையை யாரோ பெரிய சுத்தியலால் தட்டி கூறியது போல, விது விதிர்த்து போய், சுற்றும் முற்றும் யாரும் பார்க்கிறார்களா என பார்த்து யாரும் பார்க்கவில்லை என ஊர்ஜித்து கொண்டு, திரும்பி அவர்களை பார்த்தான்..

அவர்கள் அப்போவும், அந்த மோன நிலையில் இருந்து மீளாமல் இருக்க, நட்டு " என்ன டா நடக்குது இங்க… நான் வந்தே பத்து நிமிசம் மேல ஆகுது டா" என்று சத்தமாக வினவ, அவன் சத்தத்தில் மீண்ட இருவரும் ஒருவரை ஒருவர் தயக்கத்துடன் பார்வை விலக்க, நட் இருவரையும் முறைத்து கொண்டு இருந்தான்.

"நான் இங்க தான் இன்னும் இருக்கேன்" என்ற அவனின் பேச்சில் கதவை திறந்து கொண்டு ஓடியே விட்டாள் சௌமினி.. மறுபடியும் தன்னை தவறாக நினைத்து கொண்டு விட்டாளா.. என்று ஒரு நிமிடம் கலங்கியவன்.. அவள் பின்னே போக எத்தணிக்க, அவன் கை நட்டுவால் அழுந்த பற்ற பட்டது.

"என்ன டா.." என்று கடுப்பாக கேட்டவனை பார்த்து முறைத்த நட், " உன்கிட்ட நான் இதை எதிர் பார்க்கவில்லை வி.பி"

"எதை" கோபத்துடன் கேட்டவனை அதை விட கோபமாக பார்த்து, " நீ அந்த பொண்ணை லவ் பண்ணுவதை.. என்கிட்ட சொல்லவே இல்லை ல.. நானும் நீயும் பழகுனது அப்படியா...அவ்ளோ தானா... அவ்ளோ தானா .. கோபால்.. கோபால்" என்று கோபத்துடன் தொடங்கி, சரோஜா தேவி குரலில் முடித்தவனை எதை கொண்டு அடிக்க என சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருந்தான் விஷ்ணு.

ஒன்றும் கிடைக்காததால் தன் கையே தனக்கு உதவி என்று அவனின் முதுகில் இரண்டு போட்டு, " எருமை.. எருமை.. நான் எப்போடா அவளை லவ் பண்ணுனேன்.. "

" அப்போ.. லவ் பண்ணமா தான் அன்னைக்கு என் கிட்ட.. ஷி இஸ் மை கேர்ள் னு சொன்னியா.. இப்போ பட்ட பகலில் அதுவும் உன் கேபினில்.. கதவை கூட சாத்தாம டீப் கிஸ்.. அதுவும் லிப் லாக் … சொல்லு டா"

" லூசு.. போடா.. அவள் இங்க புராஜக்ட் கோட் பண்ண வந்தாள் அதை பற்றி நான் அவகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.. நீ கதவை தட்டமா அப்படியே தலள்ளிக்கிட்டு வந்து , நான் அவ மேல விழுந்துட்டேன்.. இது தான் நடந்தது"

" ஆமா டா.. நீ உள்ளுக்குள் ஒருத்திய தள்ளிகிட்டு வந்து இருப்பேனு, எனக்கு எப்படி தெரியும்.. நம்ம நண்பன் தானே நான் கதவை தள்ளிகிட்டு வந்தேன்… இனி கதவை தட்டிடே வரேன்"

"அப்புறம்.. அது எப்படி டா.. நான் தள்ளுனா நீ விழதானே செய்யணும்… எப்படி டா லிப் லாக் பண்ணினே… இதுல.. லவ் இல்லைனு வேற அண்ட புளுகு.. ஆகாச புளுகு.. 90ஸ் கிட் னா நீங்க என்ன சொன்னாலும் நம்பனுமா…"

இவனுக்கு எப்படி சொல்லி புரியா வைக்க என்று யோசித்தவனை பார்த்து " ஆனாலும்.. உன்னை எல்லாம் இந்த ஆபீஸ் ல.. இன்னும் விஸ்வாமித்திரர் ரேஞ்சுக்கு நினைக்கிறாங்க… உள்ள வந்த பார்த்தா தான்.... நீ செய்யுற லீலா விநோதங்கள் தெரியுது… கலி யுகம்.. கலி யுகம்.."

இல்லை டா.. என்று ஆரம்பித்தவனை, கை நீட்டி தடுத்தவன், " தளபதி மமூட்டி மாதிரி நினைச்சேன் டா உன்னை.. இப்படி பொண்ணை பார்த்து கலட்டி விடும் உதயநிதி மாதிரி நீ, என்னை காமெடி பீஸ் சந்தானம் ஆகிட்டியே டா.. என்ன இருந்தாலும் நான் 90ஸ் கிட்ஸ் பரிதாபம் தானே.. போடா" என்று கூறி கொண்டே செல்பவனை பார்த்து சிரிப்பதா.. இல்லை அழுவதா என்று புரியவில்லை விஷ்ணுவிற்கு..

அதை நினைத்து சிரித்துக்கொண்டே தன் அறைக்குள் நுழைந்தான். டீம் லீடர்ஸ் அவரவர் டீம் பற்றிய விபரங்கள்.. அவர்களின் ஆக்டிவிடீஸ் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் அவனுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.. அதில் தன் பார்வையை ஓட்டி கொண்டிருந்தவன், தன்னிடம் உள்ள மற்ற அறுவரின் விபரங்களை அத்துடன் இணைத்து, தன் சீனியருக்கு அனுப்பி வைத்தான். 

டிரெய்னிங் போது இவன் அவ்வபோது மட்டுமே சென்று பார்த்து வருவான்.. பொதுவாக எல்லோருக்குமான டிரெய்னிங் அது. ஆனால் நாளை மறுநாள் இருந்து இவர்கள் ஆறு பேரும் விஷ்ணுவின் மேற்பார்வையில் தான் வேலை செய்ய போகிறார்கள். விபரங்கள் அனுப்பி வைத்தவன் சிஸ்டம் ஸ்கிரீன் இல்

இன்னும் அந்த அறுவரின் புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் அணைக்கப்படாமல் இருக்க…. விஷ்ணு வின் கண்களோ சௌமினியின் நிழற்படத்தில் நிலை குத்தி நின்றது.

இப்போது எல்லாம் சௌமினி படிகளை தவிர்த்து லிஃப்ட் இல் தான் பயணம்.. முதலில் வித்தியாசமாக பார்த்த சுஜியாய் ஒரு முறைப்பில் அடக்கினாள். வீட்டோடு நன்றாக பேசினாள், ப்ரெண்ட்ஸ் உடன் கிண்டல் கேலி எதிலும் குறைவில்லை.. ஆனால் என்னமோ ஒன்று குறைந்தது அவளிடம்.. சுஜிதா என்ன முயன்றும் அதை சரியாக ஊகிக்க முடியவில்லை.. அவளும் அவள் முறைப்பை மீறி கேட்டு பார்த்தும் விட்டாள்.. அவளை லூசு பா நீ என லூக் விடுபவளை என்ன செய்ய என்று மண்டையை பியத்து கொள்ளாத குறை தான். 

அவளுக்கு நிகரான மண்டை குழப்பத்துடன் வந்து சேர்ந்தான் சுஜியின் நாயகன்.. சௌமினி பாசமலர் மூன்று ரிஷிவேஸ்வர் மூன்று பெரிய பைகளுடன் , தேனி மாவட்ட பாச முழுவதையும் தூக்கி கொண்டு.. அன்று மாலை நேராக ஆபீஸ் வந்து காத்திருந்தான், தங்கையை பார்த்தும் கண்கள் கலங்க அவள் மற்றவர்களிடம் பேசும் பாவனைகளை அவதானித்து கொண்டே நின்று கொண்டிருந்தான்.. அண்ணனை அவளும் எதிர் பார்க்கவில்லை… திடீரென்று கேட்ட, " சௌமி கண்ணு "வில் நிமிர்ந்து பார்த்தாள், ஆபீஸ் என்று எல்லாம் பார்க்கவில்லை ஒரே தாவு தான் அண்ணனிடம். 

கண்களில் கண்ணீர் வந்தாலும் துடைக்க தோன்றவில்லை அவளுக்கு.. தங்கையின் அழுகைகில் அருகில் இருந்த சுஜியை முறைத்தான், " இது தான் நீ என் தங்கச்சி பார்த்துகுற லட்சணமா… அவள அழுக விட்டு பாத்துகிட்டு நிக்குறவ" என்று எகிறினான்..

சுஜிக்கு அந்த கோபத்தில் கூட உரிமை கலந்த அன்பு தெரிய, மெல்ல சௌமினியாய் சுரண்டி, " ஏண்டி.. இன்னும் கொஞ்சம் அழுவுடி.. உங்க அண்ணனுக்கு இப்போதேன் என்னைய கண்ணுக்கு தெரியுது" என்று குதூகலிக்க.. அவளை இரண்டு அடி போட்டு கலகல என்று சிரித்தாள் சௌமினி. 

அப்போது அவர்களை கடந்து சென்ற விஷ்ணுவின் கூரிய கண்களுக்கு அவளின் சிரிப்பு, அதில் தெரிந்த மின்னலும், வென் பஞ்சு உதடுகளும் தப்பவில்லை.. மனதில் ’என்னை தவிர எல்லோரும் கிட்டயும் பல்ல கட்ட வேண்டியது என்று வறுக்கவும் தவறவில்லை.

அண்ணனுடன் பேசி கொண்டே ஆபீஸ் விட்டு வெளியே வந்தவர்கள், அருகில் இருந்த பார்கில் சென்று அமர, அண்ணன் தங்கைக்கு தனிமை கொடுத்து சுஜி பிள்ளைகள் விளையாடும் பகுதிக்கு சென்று விட்டாள், கண்களால் அவளை மெச்சி கொண்டே, தங்கையிடம் பேசினான். ஆனாலும் அவளின் பாதுகாப்பை கவனிக்க தவறவில்லை ரிஷி.

" சொல்லு கண்ணு.. என்னாச்சு.. ஒரு வாரமா ஒன் பேச்சு ஒன்னும் சரியில்ல… பேசும் தொனியும் சரியில்ல.. எதுனா பிரச்னை யா.. யாரும் உன்கிட்ட பிரச்சனை பண்ணினாங்களா... சொல்லு" என்று செம்பு காப்பை முறுக்கி விட்டு அவன் கேட்ட தொனியே சிக்கினவன் செத்தான் என்பதாய்.

தன் மனதில் புதைந்து இருந்த மனகிலேசங்களை ஒதுக்கி, அண்ணன் கையை பற்றியவள், "ஒன்னும் இல்ல அண்ணே… டிரெய்னிங் நடக்குது கொஞ்சம் கஷ்டமாக இருக்கு அதான்.. " என்றவளை நம்பா பார்வை பார்த்தான். தன் அண்ணனின் தாடையை பற்றி, "என்னங்கண்ணா என்னைய பத்தி உங்களுக்கு தெரியாதா… அரை மணி நேரம் ஒரு இடத்துல உட்கார மாட்டேன்.. இங்கன.. ஒரு நா பூரா உட்காரா சொல்லுறானுவோ என்ன செய்ய நான்.. இடையில் தூங்க கூட பிடாதாம்.. அதான் நா.. ஹாஸ்டல் போன வுடன் அசந்து போகுது." என்றவளின் தலையை ஆட்டி.. "வாலு" என்றவன்.. " கண்ணு… நீ தான் கண்ணு நம்ம மொத்த குடும்பத்தோட உசுரு… உனக்கு ஒன்னு நா.. எங்களால தாங்க முடியாது… சுதானாம இருந்துகோங்க கண்ணு" பாசத்தை குரலில் புரட்டி எடுத்து கூறினான்.

சுஜியை தனியே அழைத்தவன் அவளை வறுத்து எடுக்கவும் மறக்கவில்லை… ரிஷியின் வன் சொற்களை கூட.. காதல் மொழிகள் போல அவனுக்கு தெரியாமல் தன் ஃபோனில் பதிவு செய்து கேட்பவளை கண்டு," அண்ணியாரே முத்தி போச்சு" என்று நக்கல் அடித்தாள் சௌமினி.. அவர்களை ஹாஸ்டலில் விட்டவன், வழக்கம்போல இருவரும் வெளியில் உணவை வாங்கி கொடுத்து தான் சென்றான்.

சுஜி தன் போனுடன் ஐக்கியமாகி விட.. சௌமினியின் எண்ணங்கள் வழக்கம் போல விஷ்ணுவை சுற்றியே.

அன்று அவனின் அறையில் இருந்து ஓடி வந்தவள், வழக்கம் போல கழிவறை சென்று கதவை மூடி தாளிட்டு தான் மூச்சை விட்டாள்.

 ’ இந்த வெள்ளை பன்னி, பொசுக்கு பொசுக்கு னு முத்தம் கொடுக்குறான், பனை மரம்.. பனை மரம்.. முதல் இருமுறை இவள் தான் கொடுத்தாள் என்பதை மறந்து, அவனை தாளித்து கொண்டு இருந்தாள்.

ஆனாலும் அவனால் தூண்டப்படும் அந்த உணர்வு குவியலை என்ன செய்ய.. நிலைக்காத உறவு. நித்தமும் கொன்றது அவளை... அவனை பற்றிய ஒரு முடிவான முடிவுக்கு அவளால் வர முடியவில்லை.. காணும் பெண்களிடம் காமத்தை எதிர்பார்க்கும் காளை அல்ல அவன்.. ஆனால் தன்னிடம் மட்டும் காட்டும் இந்த அதிகப் படியான உரியமையை என்ன வென்று எடுத்துக்கொள்வது?? அவனுக்கு தன் மீது காதல் என்றா?? இல்லை தனக்கு அவன் மீது காதல் என்றா?? தன் குடும்பத்தை நினைத்தவளின் காதல் காத தூரம் ஓடியது… பின்னே.. இந்த இணைப்பின் பிணைப்பிற்கு காரணம் தான் என்ன? எதில் கொண்டும் முடியும்? முடிவு தெரியாத முடிவிலியாய் அவள் மனம்… 

வெகுவாக யோசித்து, 'கொண்டை சேவலை எதுக்கு கூப்புடுவானேன்… அது கொண்டைய கொண்டைய ஆட்டி நம்மை கொத்த வருவானேன்… அவனை பார்க்க கூடாது.. பார்க்க நேர்ந்தால், அபிஸியல் தாண்டி எதுவும் இல்லை' என முடிவு எடுத்தவள் அதனை கடைபிடிக்கவும் செய்தாள்.. அதனால் ஒருத்தன் புலம்பவுதும், தன் மீது கொலை வெறியில் இருப்பதும் தெரியாமல்… 

அந்த கொலை வெறி கொண்டவனோடு மீண்டும் தனியே சிக்கினாள் சௌமினி அதுவும் மறுநாளே… ஜாப் ஜாயினிங் பார்ட்டியில்… 

"விடுற அம்பையெல்லம் இப்படி புஸ் ஆக்குறானே.. இவன் என்ன மேக்.. எல்லா கோட்டையும் அழிச்சிட்டு திரும்பவும் ஆரம்பிக்க வைக்கிறானே" என்ற புலம்பியது… இவனால் நொந்து நூடுல்ஸ் ஆன கியூபிட்..

மறுநாள் மாலை ஆரம்பித்தது இவர்களுக்கான ஜாப் ஜாயினிங் பார்ட்டி.. நட்சத்திரங்களாய் பெண்கள் வலம் வர.. ஆண்களின் கண்களிலோ காந்தம்..

மின்மினியாய் சௌமினி சுற்ற.. விஷ்ணுவின் கண்களை அவளில் இருந்து விலக்க முடியா தவிப்பு.. சிறிது சிறிதாக குட்டி குட்டி தவிப்புகள் சேர்ந்து பெரும் தாபமாக, கண்டு கொள்ளாமல் செல்லும் அவளின் மீது கோபமாக.. என்னவாம் இவளுக்கு.. முட்டி முட்டி வந்த அனைத்தும் வெடித்து வெள்ளம் என அவனுள்.. 

சுற்றி கொண்டிருந்தவளை யாரும் அறியா வண்ணம் பற்றி இழுத்து, அதுவும் ஹாலிவுட் படங்கள் போல காபி கலர் இடுக்கு இருட்டு ஹால் பாதையில்… பின்னால் கையை கிடுக்கு பிடி போட்டு "என்னடி என் கூட பேச மாட்டுகிற.. என் எச்சில் கசந்துருச்சா? "

வார்த்தைகள் அவளை கொத்தினாலும்.. சௌமினியிடமிருந்து வந்த நறுமணமும் கொழு கொழு வெண்ணையின் குளுமையுடன் கூடிய பட்டு தேகமும்.. ஆயுளுக்கும் இவ்வணைப்பு வேண்டும் என்ற பேராசை தூண்டியது அவனுக்கு..சௌமினிக்கோ அவ்வலிய ஆணின் பிடி வலித்தாலும் இன்னும் மலைப்பாம்பாய் இறுக்கி.. முறுக்கி .. எலும்பு நொறுக்கி கொன்று விடு என மனம் பிதற்ற… நடக்காது தெரிந்து வலியில் சுற்றும் வேதனையை விட உன் கையால் முக்தி பெற மோட்சம் பெறுவேன் என்று உச்ச மருள் நிலையில் சௌமினி மவுனம் காத்தாள்.

அவளின் மௌனம் காதல் பக் உள்ளே நுழைந்ததை அறியா அந்த சாப்ட்வேர் காதலனை கடுப்பேத்த..

தன் நெஞ்சில் பரவி கிடந்த அவள் அடர் தோகை கூந்தலை தள்ளி.. பின் அளவாய் வெட்டி தைக்க பட்ட சுடியின் வெளிர் வட்ட கழுத்தை குட்டி குட்டி முத்தங்களால் அலங்கரித்தான் காதலனாய்… ஒவ்வொரு முத்ததுக்கும் மினி.. மினி என்ற பிதற்றலோடு… "நான் பெரிய பொம்பளை பொறுக்கி.. சரியா.. சோ அடிக்கடி இப்படியெல்லாம் செய்வேன்.. "என்று உளறுவனை மென்னகையுடன் அவள் பார்க்க.. மூச்சு காற்றில் வேகம் ஏறி ..அவளின் முதுகில் இவனின் வெப்ப காற்று..

அவளுக்கோ.. பருவ மலர் இதழ் விரிக்க.. அம்மம்மா!! சுகமா? வலியா? அடிவயிற்றுக்குள் யாழின் நரம்பை கொத்தாய் பிடித்து விட்டு விட்ட வலி..

"பேசுடி .. "இப்போ சரியா அவன் உதடு இவளின் வலது கழுத்தில் .. காதுக்குள் பேசியது.

"ம்ம்ம்.. " என்ற முனகல் மட்டுமே.. எதுக்கென்றே தெரியாது சௌமினி..

விஷ்ணுவால் அந்த 'ம்'ஒலி கொடுத்த தூண்டலில் பின்னங்கழுத்தில் பல் பதிய கடித்து வைத்தான் கணவனாய்.. ஏற்கனவே காதல் போதையில் சுரணை இல்லாது கிடந்தவளை உயிர்ப்பிக்க.. இடுப்பை பற்றி இருந்த விஷ்ணுவின் விரல்களை தன் விரல்களோடு கோர்த்து நெரித்து இன்னும் அவனின் பாதியாகவே அவள் ஒன்ற.. இருவருக்கும் அக்கணம் புரிந்து விட்டது.. தன் இணை என்று..

எப்பவும் விபத்தாகவே நிகழும் முத்தம்.. இன்று அவளை தன் உயரத்துக்கு தூக்கிக்கொண்டு மிகுந்த விருப்பத்துடன் நிகழ்ந்தது..

"ஐ லவ் யூ டி பொண்டாட்டி.. " கீழே விடும் பொழுது தன் மினியிடம் கண் பார்த்து சொல்லியே விட்டான் கந்தர்வ கணவன்..

திரும்ப கரடியா இடையில் வந்த நட்டுவும் மண்டைய பிச்சுக்கிட்டான் ஏற்கனவே விஷ்ணுவின் அதிரடியால் குழம்பி இருந்த கியூபிட் போல…


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top