அசுரன் 13
ஓர் இரவு அவனோடு தங்கவென்று வந்தவள் அதன் பின் அவளது மொத்த இரவுகளையும் சுருட்டிக் கொண்டான் இந்த பொல்லா அசுரன் ராவண்.
“அப்பப்பா.. சரியான அசுரன் நீங்க.. மாறா” என்று அவனது அதிரடி கூடலில் பலமுறை அவள் அவனை செல்லமாக திட்டுவாள். அவனும் அவளுக்கு கொஞ்சம் கூட சளைக்காத பார்வை பார்த்து “இந்த அசுரனுக்கு ஏற்ற அசூரிடி நீ” என்று மீண்டுமொரு கூடலுக்கு அச்சாரமாய் அவள் கழுத்தில் முகம் புதைப்பான்.
ஹசனிடம் தெரிவித்து விட்டு மொத்தமாக ராவண் வீட்டிற்கு குடிவந்து விட்டாள் ஆருஷி.
ஆனால் இந்த விஷயங்கள் வீட்டிற்கு அவள் தெரியப்படுத்தவில்லை. அந்த வயதில் அது ஒரு சுவாரஸ்யமாக இருந்தது அவளுக்கு.
எப்பொழுதும் அவளது தாத்தா அங்கே போகாதே..! இங்கே நிற்காதே..! என்று ஏகப்பட்ட கட்டளைகள் இடுவர். இப்போது படுக்க படுக்கையாக இருந்தாலும் அவ்வப்போது பேத்திய அழைத்து அவரின் நல்லனை பார்த்துக்கொள்வார்.
ஆனால் வெளிநாடு படிக்க வர பெரிதாக விருப்பம் இல்லை. ஆனால் ரூபிணி அவளை அனுப்பி வைத்தார் “எல்லாத்தையும் தெரிஞ்சுக்க கண்ணு” என்று..!
வெளிநாட்டு வாழ்வு அவளுக்கு ஆக பெரும் சுதந்திரத்தை தந்திருந்தது. அந்த சுதந்திரத்தை அவள் இந்நாள் வரை கெட்ட வழியில் எல்லாம் பயன்படுத்தியதே இல்லை.
அவரின் அதிகபட்சமான சுதந்திரத்தை மிஸ்யூஸ் செஅவது என்றால்.. இப்படி ஹசனோடு சுற்றுவது.. கணக்கு வழக்கு இல்லாமல் கே டிராமா பார்ப்பது, அதுவும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு..!
ஆனால் இன்று ராவண்னோடு ஒரு முறையற்ற பந்தத்தில்.. தாம்பத்தியத்தில் அவனோடு தங்கியிருப்பது அவள் மனது ஒப்பவில்லை என்றாலும் காதல் தான் கண்களையும் கருத்தையும் மறைத்திருந்ததே..!
அதனோடு கூடிய ராவண் மீது அறப்பறிய நம்பிக்கை..! ஒரு பெண்ணின் மனதை வெல்வதை விட நம்பிக்கையை பெறுவது வெகு கடினம். அதை ராவண் அடைந்திருந்தான். அந்த நம்பிக்கையின் பொருட்டே தன்னை மொத்தமாக அவனுக்கு தாரை வார்த்துக் கொடுத்திருந்தாள் ஆருஷி.
அதிலும் சிறு வயது முதலே ஒரு அழகிய ராஜகுமாரன் வந்து இளவரசியை காதலித்துக் கவர்ந்து செல்லும் சிண்ட்ரெல்லா கதைகள் என்றால் ஒரு மோகம் ஆருஷிக்கு. அதுவே தன் விஷயத்தில் தற்போது நடந்து இருப்பதாக எண்ணி பூரித்து போயிருந்தாள்..!
கூடவே இக்கால கே டிராமாக்கள் அணிவகுப்புகள்.. அதில் வரும் அளவற்ற காதல் காட்சிகள்.. காதலியை காதலன் தாங்குவது போன்று காட்சிப்படுத்துதல்.. அவள் இளம் மனதில் பலவித காதல் அபிலாசைகளை ஏற்படுத்தி இருந்தது. அதன் வெளிப்பாடு ராவண் காதல் சொன்னதும் சிறு மறுப்பு இல்லாமல் அவனோடு தங்கி விட்டாள்.
காதல் என்பது வெறும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் அல்ல..!
அதைத் தாண்டிய பந்தம் புரிதல் என்று இள வயது ஆருஷிக்கு புரியவில்லை..!
அவள் பார்த்த படங்கள் படித்த கதைகள் டிராமாக்கள் என்று அந்த ரொமான்ஸ் உலகிலேயே கட்டுண்டு இருந்தவளுக்கு ராவண்னின் இந்த காதல் பேர் உவகையாக இருந்தது..!
அதிலும் ஈகோவற்ற ராவண் இந்த வேலை பெண்கள் தான் செய்ய வேண்டும். இது ஆண்களுக்கான வேலை.. என்று எந்தவித பாகுபாடும் இன்றி அவன் தனித்த வாழ்க்கையும் பயனாக அவன் வேலைகளையும் அவளுக்கும் சேர்த்தே செய்ய அதில் இன்னும் கிறங்கிப் போயிருந்தாள் பாவை.
தன் வீட்டில் இன்னமும் மாமாவுக்கு பரிமாறிய பின்னே சாப்பிடும் அத்தை.
தாத்தாவுக்கு அத்தனை பணிவடைகள் செய்யும் ஆச்சி என்று பார்த்திருந்தவள்.. இங்கே தனக்காக பார்த்து பார்த்து செய்யும் இராவண் செயல்கள் யாவும் அவளுக்கு காதல் பிம்பங்களாகவே தெரிந்தது. அவனது வெளிநாட்டு வாழ்க்கையில் வளர்ப்பில் கலாச்சாரத்தில் இது சகஜம் என்று அப்பொழுது அவள் உணரவில்லை.
உணரும் காலமும் வந்தது..! உணர்த்த வேண்டியவரும் வந்தார்..!
முன்பெல்லாம் வாரம் ஒரு முறை தன் மகனுக்கு அவன் வாங்க வேண்டிய கிரசரிகளை தான் ஞாபகப்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் தற்போதயெல்லாம் அவனே ஃபோன் செய்து வாங்கி விட்டேன் என்கிறானே?
என்ன நடக்கிறது? என்ன மாற்றம் என் மகனுக்குள்? முன்னை விட பேச்சில் இப்பொழுது ஒரு துள்ளல் தெரிகிறது.. அதே நேரம் வீட்டில் இருக்கும் போதெல்லாம் இப்பொழுது பெரும்பாலும் வீடியோ கால் வருவதில்லை. மருத்துவமனை வந்தால் மருந்தே உலகம் அவனது பேஷண்டை குலதெய்வம் என்று இருப்பவன், இப்போதுதான் மருத்துவமனைக்கு வந்து வீடியோ கால் பேசுகிறான் என்று தாயாய் அவருக்கு மகனைப் பற்றி பல சந்தேகங்கள்..!
எதுவோ என்னவோ நடக்கிறது மகன் தன்னிடம் எதையோ மறைக்கிறான் என்று அவருக்கு புரிந்தது. ஆனால் கண்டிப்பாக கெட்டதாக இருக்காது என்று மகன் மீது அதீத நம்பிக்கை.
அந்த அதீத நம்பிக்கையை சோதித்து பார்க்கவே வந்தார் அவனது அப்பார்ட்மெண்ட்டுக்கு.
மகன் மருத்துவமனையில் இருக்கும் நேரம் பார்த்தே வந்தார். அவனது அந்த அப்பார்ட்மெண்ட் டிஜிட்டல் லாக் முறை. அதன் சீக்ரெட் எண் இவருக்கும் தெரியும்.
பலமுறை ராவண் அவரை வரச் சொல்லி வற்புறுத்தி இருக்க, வருகிறேன் வருகிறேன் என்பவர், ஒன்னு ரெண்டு முறை மட்டும் வந்து சென்று இருக்கிறார். அப்பொழுது அவன் மருத்துவமனையில் வேலைக்கு செல்லும் முன் அவருக்கு அந்த அப்பார்ட்மெண்ட்டை நன்று பழகி விட்டிருந்தான். அதனால் எந்தவித தயக்கம் இன்றி சீக்ரெட் எண்ணை போட்டு உள்ளே நுழைந்தவர், பார்க்க என்னவோ வீடு சற்றே வித்தியாசமாக தெரிந்தது.
மகன் மட்டும் புழங்குவது போல் தெரியவில்லை. ஏனென்றால் மருத்துவமனை வாசத்தில் இருப்பவன் வாரத்திற்கு ஒருமுறை வீட்டை கிளீன் செய்பவன், மற்றபடி அந்தந்த பொருள் அந்தந்த இடத்தில் மட்டுமே தான் இருக்கும்.
ஆனால் இப்பொழுது வேறு ஒரு ஆள் புழங்கியது போல சில பொருட்கள் இடம் மாறி இருக்கவும்.. அலட்சியமாக அங்கங்கே சில பொருள்கள் இருப்பதையும் பார்த்து தலையை அசைத்துக் கொண்டார்.
மகனுக்கு நேர் எதிர் மகனோடு வசிப்பவர்..!
தன் குணத்திற்கு நேர் எதிராய் ஒருவரை தன்னோடு தங்க அனுமதித்து இருக்கிறான் என்றால் மகன் கூட வசிக்கும் அந்த இன்னொரு நபர் யார்? அவ்வளவு முக்கியமா அவர்? என்று யோசித்தபடி வீட்டை கண்களால் சுற்றி சுழற்றியவர்,
எதிரே இருந்த மகனின் படுக்கை அறையை பார்த்தார். ஏதோ ஒரு உந்துதல்.. ஆனால் அதே நேரம் ஒரு தயக்கம்.. என்னதான் நடக்குது பார்க்கலாம் என்று அவர் உள்ளே செல்ல..
குளியலறையில் குளிக்கும் சத்தம் கேட்டது. அந்த அறையே சொன்னது அவனோடு ஒரு பெண் அந்த அறையை பகிர்ந்து கொண்டிருக்கிறாள் என்பது..!
அதுவே அவருக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி..! தன் மகனா லிவிங்கில் இருப்பத அப்படி இருந்தாலும் அதை ஏன் எனக்கு அவன் என்னிடம் பகிரவில்லை? அந்த அளவுக்கு நான் அவனுக்கு அந்நியமாகி போய் விட்டேன்? இல்லை என்னிடம் மறைப்பதற்கு வேறு ஏதும் காரணம் இருக்குமா? என்று பலவாறு சிந்தித்தபடி குளியலறையின் கதவை மெல்ல தட்டினார்.
உள்ளே ஏதோ ஒரு பாடல் சத்தமாக பாடும் பெண்ணின் குரல்.. கூடவே ஷவரின் தண்ணீர் சத்தம்.. மீண்டும் இவர் சற்று வேகமாக கதவைத் தட்ட..
ஷவரின் தண்ணீர் சத்தம் குறைந்தது. பின் அங்கு ஒரு அமைதி நிலவும் மீண்டும் இவர் கதவை கட்ட..
“ஹே.. டாக்டரே.. என்ன இது விளையாட்டு? ஹாஸ்பிடல் இருந்து இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க? போங்க.. போங்க.. எனக்கு உண்மையாவே இப்ப படிக்கணும். எக்ஸாம் இருக்கு. அன்னைக்கு மாதிரி படிக்கணும்னு கத புக்கெல்லாம் படிக்க மாட்டேன். அதனால உங்க மூடு மாத்திக்கிட்டு திரும்பவும் ஆஸ்பிட்டலுக்கே போயிடுங்க டாக்டரே..!” என்று சிரிப்புடன் கூடிய துள்ளலான குரல் அதுவும் தமிழில்..! திகைத்தவர் அமைதியாக வந்து வரவேற்பு அறையில் அமர்ந்து கொண்டார்.
என்ன என்ன நடக்குது தமிழ் பெண்ணா? என்று வேற எதுவும் யோசிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.
குளித்து முடித்து உடை மாற்றி வந்த ஆருஷி ராவண்னை எதிர்பார்த்து டாக்டரே என்று அழைத்துக் கொண்டே வந்தவள், அங்கே அமர்ந்திருந்த பெண்மணி பார்த்து அதிர்ச்சி.
அதிலும் அவர் “நான் இராவண் அம்மா” என்று தமிழில் பேச இன்னும் அதிர்ச்சி..!
அவரின் தோற்றம் சிகை நிறம் என அனைத்தும் அப்பட்டமாகவே அவர் ஒரு மேற்கத்திய பெண்மணி என்பதை பறைசாற்ற பின் தமிழ் எப்படி சாத்தியம் என்று திகைக்க..
அவள் முகத்தைக் கொண்டு அகத்தைப் படித்தவரும் “அனைத்தும் சாத்தியம் காதல் என்ற ஒன்றால்..!” என்றார் அமைதியாக..!
தனக்கு எதிரே இருந்த இருக்கையை அவர் காட்ட அதில் வந்து அமர்ந்தவள் “என் பையன் இதுவரைக்கும் எதுவும் என்னிடம் மறைச்சது இல்லை. ஆக்சுவலி இதை எல்லா அம்மாவும் சொல்றதுதான். ஆனால் உன் கூட லிவிங்ல இருக்கானு பார்க்கும்போதே புரியுது என்கிட்ட இதுவரைக்கும் இன்னும் சொல்லல..” என்றார் வருத்தத்தோடு.
அவளுக்கு ஒரு மாதிரி இருக்க ‘இதை எப்படி அன்னையிடம் பகிர்வார்கள்? நானுமே என் குடும்பத்திடம் கூறவில்லையே?’ என்று மனதில் நினைத்தாலும் அவரிடம் எதுவும் கூறாமல் அவரைப் பார்த்து பயத்தோடு விழித்தாள்.
“ஹே.. ரிலாக்ஸ் கேர்ள். நீ யார்? உன்னை பத்தி சொல்லு?” என்றாள் மென்மையான குரலில்.
அவரின் ஏமாற்றத்தை புரிந்தவள், “அப்பாடி.. மாமியார் நல்லாதான் பேசுறாங்க..” என்று மனதில் தோன்றிய நம்பிக்கையோடு அவளைப் பற்றி கூறலானாள்.
ஆருஷிக்கு சொல்லவா வேண்டும்? ஒரு சிறு பொறி பற்றினால் கூட சலசலவென்று அனைத்தையும் ஒப்பித்து விடுபவள் ஆயிற்றே..!!
முதலில் அவளைப் பற்றி கூற கூற அமைதியாக சிரித்த முகத்தோடு கேட்டவர் அவர் குடும்ப பின்னணியை கேட்டதுமே நெற்றி சுருங்கியவர் முகமோ இறுகியது.
அடுத்த கணம் மகனுக்கு அழைத்து அவன் எங்க இருக்க என்று கேட்டார்.
“என்னம்மா வழக்கம்போல ஹாஸ்பிடல் தான்.”
“நான் இப்ப உன்னோட அபார்ட்மெண்ட்ல இருக்கேன். எனக்கு எதிரா உன்னோட கேர்ள் ஃப்ரெண்ட் ஆருஷி இருக்கா” என்றதுமே அவனுக்கு அனைத்தும் விளங்க.. அடுத்த 15-வது நிமிடம் அன்னையின் முன் நின்று இருந்தான் ராவண்.
என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை ஆருஷிக்கு.
இவர் பாட்டுக்கு வந்தார்? என்னிடம் கேள்வி கேட்டார்? நானும் மறைக்காமல் அனைத்தும் கூறினேன்..! அவர் மகனை ஏன் அழைத்தார்? ராவண்னும் வந்து அமைதியாக நிற்கிறார்?
என்ன நடக்கிறது இருவருக்குள்ளும்???
என்று ராவண்னையும் அவனின் அன்னையையும் மாறி மாறி அவள் பார்க்க..
அன்னையின் தீர்க்க பார்வையை பார்க்க முடியாமல் அவன் பார்வையை திருப்ப..
“இங்க என்ன தான் நடக்குது? ஏன் இரண்டு பேரும் இப்படி அமைதியா இருக்கீங்க? சொல்லுங்க.. சொல்லுங்க..!” என்று அந்த வீடே அதிர கத்தினாள் ஆருஷி.
ராவண் அவளை தீர்க்கமாக பார்த்தானே ஒழிய அவளிடம் ஏதும் கூறவில்லை..!
“இவனோட முழு ஃபேர் உனக்கு தெரியுமா?”
தெரியாதென்று அவள் தலையசைத்தாள்.
“இராவண் திரேந்திரன் மாறவேல்.. இதுல மாறவேல் அவங்க தாத்தா பேர். அதாவது அவன் அப்பாவோட அப்பா..!” என்ற க்ளோரியா அவளை தீர்க்கமாக பார்க்க.. முதலில் புரியாமல் யோசித்தவள், பின் ‘அழகப்பன் மாறவேல்..!’ என்று அவள் தாத்தாவின் பேரை மெல்லியக் குரலில் கூறி ஆங்காங்கே இருந்த புள்ளிகளை இணைக்க.. முற்று பெற்றது முழுதாய் ஒரு உருவம் இராவண் யாரென்று..!
முதலில் அவளுக்கு அதில் மகிழ்ச்சி தான். ‘தன் தாய் மாமாவின் மகன் தனக்கு கணவனாக வரப்போகிறேன் நல்ல விஷயம் தானே? இதற்கு ஏன் இவர் கோபப்படுகிறார்? ஒருவேளை இவருக்கு விருப்பம் இல்லையோ?’ என்று இப்பொழுது கேள்வியோடு க்ளோரியாவை பார்த்தாள் ஆருஷி.
இல்லை என்று தலையசைத்தவர், இப்பொழுது மகனை தீர்க்கமாக பார்க்க..
“எஸ்..! நானா இவளை எல்லாம் தேடி போகல.. இவர்களை பற்றி எண்ணமே எனக்கு இல்லை. பட்சி அதுவே வந்து மாட்டுச்சு.. என்ன பண்ண சொல்றீங்க..?” என்று அவன் காட்டமாக கேட்டான்.
இப்பொழுது ஆருஷியின் உடம்பினுள் ஒரு அதிர்வு.
“என்ன சொல்கிறான்? என்ன சொல்ல வருகிறான் இவன்? பட்சி வந்து மாட்டுச்சா? அப்படி என்றால்.. முட்டும் அழுகையோடு நடுங்கும் உதடுகளை மேற்பற்ளால் கடித்த படி அவனை பார்த்தாள் ஆருஷி.
“எஸ்.. ஐ யூஸ்ட் யூ..!” என்றான் அழுத்தம் திருத்தமாக..!
“வாட்?” என்று அதிர்ந்தவள் நம்பா இயலாமல் அவனை பார்த்தாள்.
பாவையின் பார்வை வீச்சு தாழாமல் முகத்தை திருப்பிக் கொண்ட ராவண் “எஸ்.. ரீவேஞ்ச் தான். உன் தாத்தா பேசியதற்கு. ‘கூட படுத்த காசு கொடுத்து கழட்டிவிட்டு வா’னு சொன்னவர் தான் உன் தாத்தா..! அதுக்கு தான் இது..!” என்றான் அலட்சியமாக.
“அப்போ என் கூட நீ ஒண்ணா இருந்தது? என் மீது உள்ள காதலால் இல்லை.. அளப்பரிய ரிய அன்பு காரணம் கிடையாது. முட்ட முட்ட மோகம் கிடையாது. வெறும் பழி வாங்குவதற்காகவா?” என்று நம்ப முடியாமல் பார்த்தாள்.
ஒருத்தன் பழிவாங்க இவ்வளவு கீழ் இறங்குவானா? அத்தனை காதல் போல உருக்கமாக நடித்தானா? அந்தரங்க நேரத்தில் அவன் பிதற்றிய வார்த்தைகளும்.
அவன் காட்டிய அளவில்லா மோகமும் வெறும் நடிப்பா? எப்படி ஒருவனால் அந்த நிலையிலும் நடிக்க முடியும்? என்று அவளுக்கு புரியவே இல்லை..!
அவளுக்கு இந்த மாதத்தோடு படிப்பு முடிகிறது. அதன் பின் என்ன செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களாக ஒரே யோசனை..!
வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அனைத்தையும் விடுத்து சொத்து சுகம் பெற்றோராய் வளர்த்த மாமா அத்தை தாய்க்கு தாய் மேல் தாங்கியே ஆச்சி.. க்ரைம் பார்ட்னர் சுக்ரேஷ் என்று அனைவரையும் விடுத்து இவனே உலகம் என்று இவன் பின்னே வர சித்தமாக இருந்தேனே.. ஒரு நொடியில் என் உலகத்தையே புரட்டி போட்டு விட்டானே..! என்று அவனின் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் நெஞ்சில் கை வைத்து அப்படியே அமர்ந்திருந்தாள் ஆருஷி.
க்ளோரியா சட்டென்று அவள் அருகே வந்து அவளை தாங்கிப் பிடித்து “வெரி சாரிமா உங்க தாத்தா அன்னைக்கே பேசினது என்னவோ மனசை ரொம்ப உங்க மாமாவை காயப்படுத்திச்சு. இவன் வளர வளர தாத்தா பாட்டி பத்தி கேட்கும் போது வேறு வழி இல்லாமல் எல்லாத்தையும் சொல்லிட்டார். அதனாலதான் பிரிந்திருக்கும் என்று சொன்னார். இவன் மனசுல அது இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்னு எனக்கு தெரியவே தெரியாது. அதுவும் இல்லாமல் உங்களை பத்தி எல்லாம் நாங்கள் யோசித்ததே இல்லை.. இவன் அப்பா இறந்த பிறகு சுத்தமா உங்க தொடர்பு எங்களுக்கு இல்லை..” என்று அவர் பேச பேச..
ஒன்றும் கூறாமல் வெறுமையாக அவரைப் பார்த்தவள் அடுத்த நிமிடம் அவர்கள் உபயோகித்த அறைக்குள் சென்று அவள் உடைகள் பயன்படுத்திய பொருட்கள் என்று அனைத்தையும் அள்ளி ட்ராலியில் போட்டவள் வேகமாக வெளியேறினாள்.
செல்லும் முன் அவனை பார்த்து “நிஜமாவே என் கூட லவ் மேக்கிங் பண்ணும் போது உனக்கு லவ்வே இல்லையா? அட்லீஸ்ட் ஒன் பர்சென்ட் கூடவா?” என்று கடைசி நம்பிக்கையாக அவளின் காதலை கையில் பிடித்து கேட்க..
“இல்லை..!” என்று அலட்சியமாக உதட்டை சுழித்தவன் “டோண்ட் வொர்ரி.. குளிச்சா குளிக்கிற தண்ணியோட எல்லாமே போயிடும்..!” என்றான் எகத்தாளமாக..!
அவள் செல்லும் முன் “ஆரா.. யுவர் கம்பெனி வெரி வெரி நைஸ்” என்று மொத்தமாக அவளை உடைத்தே அனுப்பி இருந்தான் ராவண்..!
அன்று அவளை உயிரோடு கொன்று அனுப்பிவிட்டு இன்று அவள் மருத்துவமனைக்கே வேலைக்கு வந்து அவளை தேடி வந்த நோக்கம் என்ன?
ஆருஷி சென்ற பின் ராவண்னை பார்த்த க்ளோரியா அவனின் கன்னத்தில் விட்டார் ஒரு அறை..!
அவன் ஆருஷியை காதல் என்று சொல்லி ஏமாற்றியதற்காக அடிக்கிறார் என்று அமைதியாக நிற்க..
அடுத்தடுத்து அவரது கடந்தக் கால பக்கங்களை கூற கூற விக்கித்து நின்றான்..!
“இப்படிப்பட்டவருக்கு பிறந்தவனா டா நீ? ச்சீ.. என் முகத்திலேயே விழிக்காத..! நீ செஞ்ச பாவத்துக்கு என்னைக்குமே உனக்கு மன்னிப்பு கிடைக்காது..! கர்த்தர் உன்னை மாதிரி பாவிகள மன்னிக்கவே மாட்டார்” என்று சென்ற க்ளோரியா.. இப்போது வரை மகனிடம் பேசவில்லை..!
இராவண் பெற்றோரான சிவநேசன் மற்றும் க்ளோரியா
வாழ்வில் என்ன நடந்திருக்கும்? எதனால் வந்த மாற்றமாய் தன்னவளை தேடி வந்திருப்பான் இராவண்??
இப்படி இவனுள் மாற்றத்தை உருவாக்கியவள் இப்போது இவனின் கருவை சுமத்தப்படி எங்கே சென்றாள்??
விடை.. அடுத்த பாகத்தில்…