மோகங்களில்… 2
"வாட் இஸ் த ஹெல்?" என்று கர்ஜித்தவனுக்கு தாரதி சொன்ன செய்தியில் இதுவரை அடித்த ஃபாரின் சரக்கின் மொத்த போதையும் சரேலென்று இறங்கியது.
'அடடா… சரக்கு போச்சே…!
வேற யாரு நாம தான்!
"இப்பொழுது தான் மனைவியை விவாகரத்து செய்து, தொலைஞ்சது இம்சைனு நிம்மதியாக சந்தோஷமாக நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துக் கொண்டிருக்க.. அடுத்த (இம்சை)பிரச்சினை ஆன் தி வே என்பது போல உங்கள் குழந்தையுடன் வாடகைத்தாய் இங்கே இருக்கிறார். கம் சூன். இட்ஸ் வெரி அட்ஜெண்ட்" என்றால்… அவனுக்கும் கோபம் ஷூட்அப் ஆகுமா? ஆகாதா?
இந்த செய்தியை திரும்பத் திரும்ப துருவ் வல்லப் காதலில் மாற்றி மாற்றி ஒலித்துக் கொண்டு இருந்தது. இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு இருந்தவன் "ஒரு இம்சையை இப்பதான் விரட்டிவிட்டால்… அடுத்த இம்சை வந்து இறங்கி இருக்கு. நிம்மதியா ஒரு பார்ட்டி கொண்டாட முடியுதா? ப்ளடி ஹெல்.. சர்ரோகேட் மதர்" என்று புலம்பினான்.
இறங்கிய போதையை ஏற்ற இயலாமல் புதிதாய் முளைத்த டென்ஷன் படுத்தி எடுக்க.. அவன் போட்டிருந்த ஷார்ட்சில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.
நிறுத்தி நிதானமாக எல்லாம் புகைக்கவில்லை. ஐந்து நிமிடங்களில் 5 சிகரெட்டை ஊதி தள்ளியவனுக்கு அப்பொழுதும் நிதானம் வரவில்லை.
"எப்படி? எப்படி இது நடந்தது? அவ கிட்ட என்னை இதில் இழுக்க கூடாதுனு சொல்லி தானே இதற்கு ஒத்துக்கிட்டேன். யார கேட்டு இப்படி பண்ணுனா? சீட் லேடி! இப்ப அவள வேற டைவர்ஸ் பண்ணி அனுப்பிட்டேனே.. ஓ மை காட்! என்னென்ன பேப்பரில் என்ன சைன் பண்ணி வச்சிருக்கேன்னு தெரியலையே?" என்று புலம்பியவன்,
"ப்ரண்ட்ஸ்.. ஒரு அர்ஜென்ட் மீட்டிங். வந்துடுறேன்" என்று அவன் கிளம்ப குடிபோதையில் உளறிக்கொண்டும் உருண்டும் கொண்டும் இருந்தவர்கள்,
"என்னடா மச்சி.. எங்கள மட்டும் தனியா விட்டுட்டு நீ மட்டும் கிளி கூப்பிட்ட உடனே பறந்து போக பார்க்குறியா?" நேரம் காலம் தெரியாமல் நக்கல் அடித்தான்.
"டேய்.. அவன பத்தி தெரியாதாடா அவன் பொண்டாட்டியையே கமிட்மெண்ட்டுனு அவளை துரத்தி விட்டுட்டு செட்டில்மெண்ட் பண்ணியவன்.. அவனாவது வேற ஒரு பொண்ண பார்க்க போறதாவது? அதுவும் இந்த வயசுல?" கேலியாக சொல்லி சிரித்தான்.
"அவனுக்கு என்னடா பாடி எப்படி எக்சர்சைஸ் பண்ணி மெயின்டைன் பண்ணி வச்சிருக்கான்! பாரு.. 36 வயசு மாதிரியா தெரியுது? இன்னும் இவன் சட்டையை திறந்து விட்டு அவனுடைய சிக்ஸ் பேக் காட்டினால் சிக்காத கன்னியரும் உண்டோ…"
"ஹே.. அவன் உடம்ப அவன் மெயின்டன் பண்றான். அதனால சிக்ஸ் பேக் வச்சிருக்கான். நீ உட்கார்ந்து தண்ணி அடிச்சு அடிச்சு ஸ்கூல் பேக்கை தான் வைச்சிருக்க…"
"நீ ரொம்ப ஒழுங்கு நீ அட்டாத ஆட்டமா? அடிக்காத லூட்டியா? அந்த ஈசிஆர் பீச் ஹவுஸ் அலறுதாம்"
நண்பர்கள் இப்படியாக தங்களுக்குள் தங்களையே வாரிக் கொண்டிருந்தனர்.
வீட்டுக்குள் சென்று வேறு உடை மாற்றியவன் அங்கிருந்த பாடி கார்ட்ஸிடம் "இவங்களை பத்திரமா அவங்கவங்க இடத்துக்கு சேக்கிறது உங்க டியூட்டி.. காட் இட்?"என்று விட்டு வேகமாக தன் ரோல்ஸ் ராய்ஸில் கிளம்பினான் சுகம் மருத்துவமனையை நோக்கி..
துருவ் வல்லப் சுகம் மருத்துவமனை அடையும் முன்… அவனைப் பற்றி ஒரு சின்ன ரீக்கேப் பார்ப்போமா??
துருவ் வல்லப்… முப்பத்தாறு வயது இளமையின் கடைசி அத்தியாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் அக்மார்க் திராவிட இளைஞன்!
'வல்லப்'ஸ் மேக்ஓவர்' என்ற கார்மெண்ட்ஸ் நடத்திக் கொண்டிருக்கிறான். கார்மெண்ட்ஸ் என்றால் உள்ளூர் சந்தையில் மட்டும் விற்பனை செய்யும் சாதாரண விற்பனன் இல்லை!
ஆண்களுக்கு என்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படுபவை.. உலகின் பல நாடுகளில் அவன் ப்ராண்டே முதல் இடம்! முதல் தரம்!!
தரத்திற்கு எங்கும் காம்ப்ரமைஸ் பண்ண மாட்டான். பட் தாரத்திற்கு…???
அவனது தயாரிப்புகளில் முதல் தரம் வாய்ந்தவற்றை ஏற்றுமதி செய்யப்பட்டு, அதில் ஏதும் மிச்சம் மீறி இருந்தால் தான் உள்நாட்டிலேயே அவனது துணிகள் கிடைக்கும்!
இப்படியாக… அதி மிகப் பிரபலமாக இருக்கிறவனை தான் தன் ஏரியா ஜனங்களை காட்டி மிரட்டி தன் இடத்திற்கு அழைத்திருக்கிறாள் அனுப்ரியா!
இக்காலத்தில் வெறும் ஒரு தொழிலை மட்டும் வைத்துக் கொண்டு ஒருத்தனாலும் வாழ முடியாது! அவன் செலவுகளே அப்படி இருக்கும். எதிலும் முதல் தரம் தான் அவன் தேர்வு! அதனால்.. தன் செலவுகளுக்காகவே தனியாக பல தொழில்களில், இதில் வரும் லாபத்தை முதலீடு செய்திருக்கிறான்.
வெறும் எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட் மட்டும் செய்யாமல்.. அவன் ப்ராண்டுகளுக்கு அவ்வப்போது மாடலிங் செய்து, அதன் மூலம் இந்திய தயாரிப்பாளர்களையும் தன்னை நோக்கி ஈர்த்துக் கொண்டிருந்தான்
இப்படி அனைவரையும் அவன்
தன்னை நோக்கி ஈர்த்துக் கொண்டிருக்க.. அவனை ஈர்த்த விஷயம் என்ன தெரியுமா??
"எப்போதும் முதலிடம் வகிப்பது"
'எங்கும் முதல் தரம்! எதிலும் முதல் இடம்!' என்பதனை தாரக மந்திரமாய் கொண்டு வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் தொழிலதிபன்!
முதல் என்பது… அது ஒரு இராஜ போதை! ஒருமுறை அனுபவித்து விட்டால் அதனை விட மனது வராது. இன்னும் இன்னும் வேண்டும் என்று அந்த போதையை தனக்குள் தக்க வைத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வெறியே வரும். அது போல தான் துருவ் தன்னுடைய வியாபார நுணுக்கங்களை மிக தந்திரமாகவே கையாளுவான்.
இதுபோல… இவனைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.. நல்ல வேலை அதற்குள் சுகம் மருத்துவமனை வந்துவிட்டது!!
தன் வேக நடையோடு உள்ளே சென்றவன் நிற்காமல் நடந்துக் கொண்டே அருகே வந்த அவன் பௌன்ஸர் மூலமாக டாக்டர் தாரதி கேபின் எங்கே இருக்கிறது என்று கேட்டறிந்து அங்கே போய் நின்றான்.
அவன் நடையும் பின்னால் ஒதுக்கிவிடும் முடியும், பிடரியை சிலிர்த்துக் கொண்டு சண்டைக்கு செல்லும் சிங்கத்தை ஒத்திருந்தது.
பாவம்.. பெண் சிங்கம் முன்னால் ஆண் சிங்கம் என்று எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது?
கதவை ஒரு நாகரிகத்துக்காக கூட தட்டாமல் படாரென்று திறந்து கொண்டு உள்ளே சென்றான் துருவ்!
அதில் அதிர்ந்தது என்னவோ தாரதி தான். அனுப்ரியாவோ கொஞ்சமும் அசையாமல் அந்த கௌச்சில் அமர்ந்து புதிதாக வாங்கிய ஃபோனில் விளையாடி கொண்டிருந்தாள்.
"டாக்டர் தாரதி.!" என்று அவனது அழைப்பிலேயே சர்வமும் ஒடுங்கியது தாரதிக்கு.
"எஸ் சார்?' என்ற முன்னால் வந்து நின்றவள், கண்களால் அருகில் இருந்த கோச்சில் அமர்ந்திருந்த அனுப்ரியாவை காட்டினாள்.
முகத்தை பக்கவாட்டில் திருப்பி அவளை உள்வாங்கி பார்த்தவன் அதற்கு மேல் கவனத்தை தாரதியிடம் திருப்பிவன் நின்ற தோரணையே அவளுக்கு உள்ளுக்குள் அல்லுவிட்டது.
"சார்.." என்று அவனை அழைத்து இவளுக்கும் அப்சராவுக்கும் நடந்த சாம்பாஷணையை கூறினாள்.
"ஏய் அப்சரா? எங்கடி இருக்க? ஏண்டி என் போனை எடுக்க மாட்டேங்கற? உன்னால எனக்கு எவ்ளோ பிரச்சனை தெரியுமா? அந்த சர்ரோகேட் மதர்.. அந்த பொண்ணு பேரு என்ன.. ஹான்.. அனுப்ரியா அந்த பொண்ணு இங்க வந்து நிக்குது?" என்று அதிர்ச்சியோடு கூறினாள்.
"என்னது? உன் கிட்ட வந்து நிக்கிறாளா? பரவால்ல நான் நினைச்சதை விட புத்திசாலியா தான் இருக்கிறாள்" என்றாள் அபச்ரா.
"இப்போ அவளுக்கு இந்த பாராட்டு பத்திரம் தேவையா? எதுக்குடி அவளை என்கிட்ட அனுப்பி வச்ச?"
"நான் எங்க அவளை உன்கிட்ட அனுப்பி வச்சேன்? அவளுக்கும் எனக்குமான டீல் முடிஞ்சதுன்னு சொல்லி அவளை என் பாடி கார்ட் மூலமா செட்டில்மென்ட் பண்ணி அனுப்பி வெச்சிட்டேனே! அப்புறம் ஏன் அவ வந்து உன்கிட்ட நிக்கிறா?" என்றாள் அலட்டிக் கொள்ளாமல் அப்சரா.
"ஆமா.. இவ மூலமா குழந்தை பெத்துக்கிறேன்னு சொல்லி தானே இவளை ஏற்பாடு பண்ணுன? இப்ப என்ன திடீர்னு நீ இவளோடான டீலை முடிச்சிட்டேனு சொல்ற?" என்று அதிர்ச்சியோடு கேட்டாள் தாரதி.
"என்னடி பண்ண சொல்ற? நானும் அந்த துருவ் இப்ப மாறுவான் அப்ப மாறுவானு.. இப்ப நம்மள புரிஞ்சிப்பான்.. அப்ப நம்மள புரிஞ்சுப்பான்னு எவ்ளோ நாள் தான் காத்திருக்கிறது? சரி ஒரு குழந்தை வந்தது என்றால் மாறுவானு பார்த்து தான் இப்படி வாடகை தாய் ஏற்பாடு பண்ணினேன். பட்.. எனக்கு டிவோர்ஸ் கொடுக்கிறேன் சொல்லிட்டான்! இப்படி இவன் கூட உட்கார்ந்து மாரடிக்கிறது டிவோர்ஸ் வாங்கிட்டு செட்டில் ஆகிடலாமானு முடிவு பண்ணிட்டேன். நல்லவேளை இவன நம்பி நான் ப்ரக்னெட் ஆகல.. கிரேட் எஸ்கேப் மீ!" இவள் பேசியதை கேட்டு தாரதி பேச்சு வராமல் நின்றாள்.
"பை த வே.. நான் இப்போ ஏர்போர்ட்ல இருக்கேன். இன்னும் பத்து நிமிஷத்துல செக் இன் ஆகிடுவேன். இனிமே இந்தியாவுக்கு டாட்டா.. பை பை.. நான் இனி லண்டன் தான்! லண்டன்ல இறங்கிட்டு செட்டில் ஆனதுக்கப்புறம் உன்னை கூப்பிடுறேன் பை டி!" என்று வைத்து விட்டாள்.
"என்னது லண்டன்ல செட்டில் ஆக போறியா?" என்று அதிர்சியிலிருந்து மீண்ட தாரதி கேள்விக்கு பதில் கூற அங்கு எதிர்முனையில் யாருமில்லை.
உண்மையில் அப்சரா குழந்தை வேண்டும் என்பதற்காக தேர்வு செய்தவள் தான் அனுப்ரியா! ஆனால் சில சமயம் மருத்துவமனைகள் மூலமாக இம்மாதிரி வாடகை தாய்கள் ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். அதில் அப்சராவுக்கு விருப்பமில்லை.
"எனக்கு பிரெஷ் பொண்ணா தாண்டி வேணும்"
"அதுக்கு நிறைய செலவாகும் டி" என்று அதில் உள்ள சட்ட சிக்கல்களையும் எடுத்துக் கூறினாள் தாரதி.
"அதனால் இவர்களை மருத்துவமனை மூலம் பரிந்துரை செய்ய முடியாது" என்பதையும் தெளிவாக கூறினாள்.
"எவ்வளவு பணம் வேணும்னாலும் பரவால்ல.. நான் வெளியில் ஆளை பாத்துக்குறேன்" என்று தான் அனுப்ரியாவை ஒரு முறை அழைத்து வந்து பரிசோதனை செய்தாள். அனைத்தும் இவர்களுக்கு ஏத்த மாதிரி இருக்கவும் தான் அடுத்த பிராசஸஸை தாரதி செய்தது.
இப்பொழுது எனக்கும் அனுப்ரியாவுக்கும் இடையில் எதுவும் இல்லை என்று அப்சரா சென்றுவிட.. மாட்டி முழிப்பது என்னவோ தாரதி தான்.
இவள் தோழி மூலம் போலீஸ் இல்லை மீடியாவிலோ இந்த விஷயம் கசிந்தால்.. திருமணமாகாத ஒரு பெண்ணை எப்படி வாடகை தாயாக ஏற்றீர்கள்? என்று முதல் சட்ட சிக்கலே இவளுக்கு தான் வந்து சேரும்.
அதை சமாளிக்கவே இவளுக்கு போதும் போதும் என்று ஆகும். இந்த விஷயம் ஸ்ரீராமுக்கு தெரிந்தால்.. அவ்வளவுதான்! இப்படி எங்க போனாலும் முட்டு சந்தாகவே இருக்க.. சிறிது நேரம் அப்படியே அமர்ந்து விட்டாள். அப்பொழுதுதான் அனுப்ரியா அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்க.. தன கார்டை தூக்கி கொடுத்து "வேண்டியதை ஆர்டர் பண்ணிக்கோ" என்று விட்டாள்.
"அமேசான் பிளிப்காட்டுக்கு போனா டெலிவரி ஆக ரெண்டு மூணு நாள் ஆகும். நாம உடனடி ஆன்லைன் ஷாப்பிங் போகலாம்" என்று அருகில் இருக்கிற கடைகளில் ஆன்லைன் மூலம் உடனடி டெலிவருக்கு ஏற்பாடு செய்து தேவையானவற்றை எல்லாம் இவள் வாங்கி ஒரு புறம் குவித்து கொண்டிருக்க.. இங்கே தலையை பிடித்துக் கொண்டு தாரதி அமர்ந்திருக்க..
'நாம் ஏன் துருவ் வல்லப்பிடம் கூறக்கூடாது?' என்று எண்ணியவள், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனை அழைத்து விட்டாள்.
இதையெல்லாம் கேட்டவுடன் அவ்வளவு கோபம் பொங்கியது துருவுக்கு.
"வாட் அ ரெடிக்குலஸ்! அந்த பொண்ணுக்கு தான் செட்டில்மென்ட் கொடுத்தாச்சுல்ல.. அப்புறம் என்னத்துக்கு இங்க வந்து பிரச்சனை பண்றா?" என்றான் ஆத்திரமாக..
"இல்ல சார்.. இந்த பொண்ணு கொடுக்க வேண்டிய செட்டில்மெண்ட் பணத்தை எடுத்துட்டு ஓடிட்டான் அப்சரா ஆளு. இந்த பொண்ணு நடு தெருவுல நிப்பாட்டிட்டு" என்றதும் தலையை பிடித்துக் கொண்டு நின்றிருந்தான் துருவ்.
"இப்ப என்ன அந்த அமௌன்ட் எவ்வளவு சொல்லுங்க ஒரே செப்ல நான் குடுத்துடறேன். இந்த இம்சையை இப்படியே எங்கேயாவது வெளியில் போக சொல்லுங்க" என்றதும் அப்போதுதான் தாரதிக்கு மூச்சே வந்தது.
"ஓகே சார்" என்றவள், அனுப்ரியாவை அழைத்து விஷயத்தை கூற எழுந்து வந்து துருவை மேலும் கீழும் பார்த்தாள்.
"டாக்டரு.. இவர் தான் அந்த ஓடிப்போன கேஸோட புருஷனா?" என்று தாரதியிடம் கேட்க அவளோ அசட்டு சிரிப்போடு தலையசைத்தாள்.
"சார், உனக்கு அப்சரா கொடுக்க வேண்டிய செட்டில்மெண்ட் அமௌன்ட் கொடுக்கிறேன் சொல்லிட்டார். இதுக்கு மேல எந்த பிரச்சனையும் பண்ணாமல் நீ போயிடணும் சரியா?" என்றதும் இருவரையும் மாறி மாறி பார்த்த அனு, "சரி இவர் கொடுக்கிற அமௌன்ட் நான் வாங்கிக்கிறேன். அப்போ இத்த என்ன பண்றது?* என்று தன் மேடிட்ட வயிற்றை சுற்றி காட்ட…
துருவும் தாரதியும் ஒரே நேரத்தில் திகப்படைந்தனர்.
"ஆமாமில்ல.. மண்ட மேல உள்ள கொண்டையை மறந்த மாதிரி இவளுக்கு முன்னாடி இருக்குற இம்மா பெரிய வயிற்றை மறந்துட்டோமே!"
"இந்த குழந்தையை என்ன பண்றது?" என்று தாரதி துருவை பார்க்க..
துருவோ "எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காண்ட்ராக்ட் போட்டவளிடமே சேர்த்து விடுங்க டாக்டர்" என்று தோள்களை உலுக்கிக் கொண்டான்.
"இங்க பாரு டாக்டரு.. அந்த அம்மா எனக்கு கொடுக்க வேண்டிய அமௌன்ட் நீங்க கொடுக்குறீங்க நான் ஒத்துக்கிறேன். ஆனா இந்த குழந்தைய அந்த அம்மா கிட்ட கொடுக்க வேண்டியது தானே அப்போ எனக்கு யார் செட்டில்மெண்ட் பண்றாங்களோ அவங்ககிட்ட இந்த குழந்தையை கொடுத்துடறேன். அதுக்கப்புறம் அவங்களாச்சு அவங்க குழந்தைங்களாச்சு…" என்றாள்.
"வாட்? குழந்தைங்களா?" என்று அடுத்த அதிர்ச்சியை காட்டினான் துருவ்.
"ஆமாம் சார்.. ட்வின்ஸ்" என்று இரண்டு விரல்களை பவ்யமாக காட்டினால் தாரதி.
"ஷிட்! ஷிட்…! எப்படி இப்படி?" என்று அவன் தாரதியைக் கேட்க இதெல்லாம் இவனிடம் சொல்லியா புரிய வைக்க முடியும் என்று யோசித்தவள், "சார் இந்த மாதிரி சர்ரோகெட் வச்சு குழந்தை பெத்துக்கும் போது டிவின்ஸ் எல்லாம் வர்றது சகஜம் தான் சார்" என்றாள்.
"சரி ஓகே.. ட்வின்ஸ் ஆர் டிர்பிலெட்ஸ்.. எத்தனை குழந்தைகள் வேணாலும் இருக்கட்டும். எனக்கும் அந்த குழந்தைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! என்னோட பெரிய தப்பு அந்த முட்டாள் அப்சரா கேட்கும் போது நான் அக்சப்ட் பண்ணிட்டு இதுக்கு ஒத்துக்கிட்டது தான். அதுக்கு பாவமா தான் அவ சொன்னதோட டபுள் அமௌன்ட் நான் பே பண்றேன். இதுல இருந்து எனக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது. புரியுதா?" என்று அதுவரை தாரதியிடம் பேசியவன் திரும்பி கோபமாய் அனுப்ரியாவை ஒரு பார்வை பார்த்து கேட்டான்.
"இல்ல… புரியல!" என்று தெனாவட்டாக பதில் கூறினாள் அனு.
இதுவரை அவன் இவ்வாறு கோபம் கண்டு கத்தினாலோ கர்ஜித்தாலோ எதிரே நிற்க அத்தனை பேரும் பயப்படுவர். எதிர்த்து ஒரு வார்த்தை என ஒரு மூச்சு கூட வராது.
ஏன் சற்று நேரம் முன்பு இத்தனை பெரிய மருத்துவமனையின் மருத்துவர் தாரதியே அவனிடம் பயந்து கொண்டு தானே நின்றாள். அந்த நினைப்பிலேயே அனுப்ரியாவிடமும் பேசி விட்டான்.
அவள் என்ன மற்றவர் போலவா?
"என்ன சொன்ன?" நெற்றி சுருங்க கேட்டான் துருவ்.
"நீங்க சொன்னது எதுவும் புரியலன்னு சொன்னேன்! அமௌன்ட் கொடுக்கறீங்க.. சரி! அப்போ குழந்தைகளை என்ன பண்றதா உங்களுக்கு உத்தேசம்?" என்று கேட்டவள்,
"அது உங்க பிரச்சனை! பெத்து கொடுக்க வேண்டியது மட்டும் தான் என்னோட பொறுப்பு. ஆனா அதுவரைக்கும் நான் எங்க தங்கறது?" என்றதும் இன்னும் விழி பிதுங்கியது இவளின் பேச்சில் துருவிற்கு.
"குழந்தையையே நான் வேண்டாம் சொல்கிறேன். இதில் உன்னை நான் பார்த்துக்கணுமா?" என்று அவளை மேலும் கீழும் இளக்காரமாக பார்த்தவன்,
"நான் யார் தெரியுமா? என் அந்தஸ்து என்ன தெரியுமா? தொழில் வட்டாரத்தில் என்னோடு மதிப்பு உயர்வு என்னன்னு தெரியுமா?" என்று அவன் கேட்ட விதத்தில் அதுவரை உள்ளுக்குள் சுருண்டு இருந்த அனுவின் தன்மானம் துருவின் சீண்டலில் சிலிரத்துக் கொண்டு வெளி வர…
"நான் குழந்தைகள நல்லபடியா நான் பெத்து முடிக்கிற வரைக்கும் என்னை நீங்க தான்.. உங்க வீட்ல வச்சு தான் பார்த்துக்கணும்! அப்படி இல்லைன்னா… திரும்பி ஃபர்ஸ்ட் இருந்து அந்த டயலாக் எல்லாம் நான் சொல்ல முடியாது. டாக்டரு நீயே சொல்லு" என்றாள் அனு.
அதன்படி அவள் வந்தவுடன் கூறிய அந்த போலீஸ் ஸ்டேஷன் லெட்டர் அதற்கு பின் மீடியாவில் வீடியோ ரிலீஸ் இது எல்லாம் கூறினாள் தாரதி.
போலீஸ் பற்றி அவனுக்கு கவலை இல்லை. அவனின் செல்வாக்கை வைத்து அதனை சரி கட்டி விடலாம். ஆனால் மீடியா..??
ஒரு புள்ளி கிடைத்தாலே போதுமே அதற்குள்ளேயே நுழைந்து பெருசு பெருசா ரங்கோலி வரைந்து விடுவார்கள். இவள் அலேக்காக கண்டீன்ட்டை தூக்கி கொடுத்தால்.. அவ்வளவுதான்..! அடுத்த ஒரே நாளில் நான் காலி" என்ற தலையை உலுக்கி கொண்டவன் "சரி என்ன இப்போ இந்த பொண்ண பார்த்துக்கணும் அவ்வளவுதானே நான் கூட்டிட்டு போறேன்" என்றான்.
அவன் இந்த பதிலில் தாரதி அதிர்ச்சியாக பார்க்க.. அனுப்ரியாவோ "சிம்பிள்! முடிந்தது அவ்வளவுதான். ஓகே டாக்டர் ரொம்ப டேங்க் யூ.." என்றவள், துருவ் அருகே நின்றிருந்த பவுன்சரை பார்த்து "அண்ணாத்த இந்த மூட்டை எல்லாம் அள்ளிக்கிட்டு வந்துரு.. சரியா?" என்றபடி வெளியே செல்ல போனவள், திரும்பி தாரதியை பார்த்து "நாளை தானே அப்பாயிண்ட்மெண்ட்? நாளைக்கு பார்க்கலாம்.. பை டாக்டரு" என்று முன்னே நடந்தாள்.
துருவ் கண்டிப்பாக இவளை அழைத்துச் செல்ல சம்மதிக்க மாட்டான். வேறு ஏதாவது ஏற்பாடு பண்ணுவான் என்று தாரதி நினைத்திருக்க.. துருவ் அழைத்துச் சென்றது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கூட்டியது அவளுக்கு. ஆனால் "தொல்லை விட்டதடா சாமி!" என்று நிம்மதி அடைந்தாள்.
துருவ் காரில் ஏறினாள். முன்னே டிரைவரோடு பவுன்சர் அமர்ந்திருக்க பின்னே அவனோடு அமர்ந்திருந்தாள். அவள் வாங்கிய பொருட்களை எல்லாம் பின்னால் வைத்தான் பவுன்சர் சுகன்.
இவன் எப்பொழுதுமே துருவின் நிழலாய் துருவ் கூடவே வருபவன்.
ஓரளவு அவனுக்கு விஷயம் தெரிந்திருக்க அந்த பொண்ணு தாங்கிக் கொண்டிருப்பது தன் முதலாளியின் வாரிசுகள் என்ற நினைவே.. அவன் அவள் சொன்னதை செய்ய வைத்தது. இல்லை என்றால் முதலாளி கண்ணை காட்டாமல் நிற்கும் இடத்தை விட்டு அசைய மாட்டான் சுகன்.
டிரைவரோ இப்போது எங்கே செல்வது என்று கேள்வியாய் பவுன்சரை பார்க்க.. அவன் துருவை பார்க்க..
துருவ் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தான். அவன் புருவ முடிச்சுகளே சொன்னது அவன் தீவிர சிந்தனையில் இருக்கிறான் என்று!
"சார்.. சார்.. இப்போ வீட்டுக்கா இல்ல…" என்று சுகன் கேட்க..
"ம்ம்.. இவளை வீட்டுக்கு கூட்டிட்டு போனா.. என்னன்னு எங்க அம்மா கிட்ட போய் நான் இவளை இன்ட்ரோ கொடுக்க முடியும்? ஓஎம்ஆர் பீச் ஹவுஸ் போ…" என்று கட்டளையிட்டான்.
'என்னையே மிரட்டி என்னுடனே தங்க வரியா நீ? இந்த துருவ் யாருன்னு
உனக்கு தெரியல.. ரெண்டே நாள் இல்லை இல்லை இரண்டே மணி நேரத்துல உன்னை ஓட வைக்கிறேன் பார்" என்று மனதினில் சங்கல்பம் எடுத்து அவளை நக்கலாக பார்த்தான் துருவ்..
யார் யாரை ஓட விடுவார்கள்?
அனு பத்தி அவன் இன்னும் தெரிஞ்சிப்பான் போல🤣🤣🤣🤣🤣
அனு ஸ்மார்ட்♥️♥️♥️♥️
துரு 🤭🤭🤭🤭 no comments 😂😂😂😂