ஆழி 6

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

6

இன்பமாக இளையராஜா பி.ஜி.எம் இல் மூழ்கி, காதல் எனும் இன்ப கடலில் நீந்தி கொண்டிருந்தவனின் முதுகில் விழுந்த அடியில் வாரி சுருட்டு எழுந்து பார்த்தவனின் கண்களில் விழுந்தது கோபத்தில் முகமெல்லாம் ஜிவ்வு என சிவந்து இருந்த வி.பி தான்..

"அடேய் ஏன் டா… அடியாடா இது இடி மாதிரி இருக்கு.. இன்னும் கொஞ்சம் பலமாக விழுந்து இருந்தது… நீ ஒரு கொல கேஸ்ல உள்ள போய் இருப்ப" என்று வலித்த தன் முதுகை தேய்த்து விட்டு கொண்டே அலறினான் நட்..

"நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்த…" முறைத்தவாறே கேட்டான் வி.பி.

" ஹ ஹ என்று அசட்டு சிரிப்பை உதிர்த்து விட்டு, வி.பி யைப் நெருங்கி அவன் கை பட்டனை திருகி கொண்டே…" அது… முரட்டு சிங்கிளா இருந்த நான்.. அந்த கிராமத்து பைங்கிளி ஓட மிங்கிள் ஆகிடலாம்னு பார்க்கிறேன் டா"

"ஸ்ஸ்ப்பா… தயவு செய்து வெக்கடப்பட்டு தொலைக்காதே.. பார்க்க முடியல" என்று முகம் திருப்பியவனின், தாடை பற்றி திருப்பி " டேய் மச்சி.. ஹெல்ப் பண்ணுடா… பிளீஸ்…"

அவன் கையை தட்டி விட்டு, அவனை ஆழ்ந்து பார்த்து, " தட்ஸ் மை கேர்ள்…" அவனின் பதிலில் நட்டுக்கு உலகம் தட்டாமாலை சுற்றியது, "அடேய் நான் ஒரு நாளு தானே டா ஆபீஸ்க்கு வரல, அதுக்குள்ள எப்படி டா செட் பண்ணுனா…அதுவும் ஒரே நாளுல… என்ன மாதிரி ஃபிராங்க் ஆ பேசறவன கூட நம்பலாம் டா.. உன்னை போல முகத்தைக்கு கஞ்சி போட்ட மாதிரி வைச்சு கிட்டு விறைப்பா சுத்துறவன எல்லாம் நம்ப கூடாது… நம்பவே கூடாது டா… "என்று ஆற்றாமையில் புலம்பி தீர்த்தான்..

அவனுக்கு ஒரு கிளாஸ் தண்ணீரை கொடுத்து குடிக்க சொன்னான் வி.பி. இவ்வளவு பேச்சிற்கு எந்தவித அலட்டலும் இல்லாமல்..

" நான்.. சொல்ல வந்தது, ஷி இஸ் மை டீம் கேர்ள்.. நீ உன் பாட்டிற்கு புரிஞ்சுக்கிட்டா .... அதற்கு நான் பொறுப்பு இல்லை.. புரிஞ்சுதா"

அவனின் வார்த்தையில் குஷியான நட், " அப்போ எனக்கு இன்னும் வாய்ப்பு இருக்கா… யாஹூ" என்று சந்தோச கூச்சலிட்டான்.

அவனின் சந்தோசத்தில் கடுப்பான விஷ்ணு, " வாய்ப்பே இல்லை ராசா.. வாய்ப்பே இல்லை.. என் டீம் பொண்ணுங்க கிட்ட எல்லாம் உன் வாலை நீட்டாதே… ஒட்ட நறுக்கிடுவேன்…" என்று எச்சரித்தவனை, " நீ எப்போதில் இருந்து டா.. உன் டீம் பொண்ணுகளுக்கு பாடிகாட் ஆ கமிட் ஆன.. சொல்லவே இல்ல.."

" நீ எப்போ இருந்து எனக்கு ப்ரெண்ட் ஆ கமிட் ஆனியோ அப்போ இருந்து," என்று கூறி அவனுக்கு நோஸ்கட் செய்தவனை பார்த்து " இங்க இருந்ததுல அந்த பொண்ணுங்க மட்டும் தான் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக நமக்கு செட் ஆகுறாப்புல இருந்தது.. அதுக்கும் இவன் ஆப்பு வச்சுட்டான்.. முதல இவன் ப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணனும் … அப்போ தான் எனக்கு பொண்ணு செட் ஆகும்" என்று புலம்பியவாறு தன் கேபின் நோக்கி சென்று விட்டான்.

ரெஸ்ட் ரூம் சென்று அமைதியாக வந்தவளை சுஜி என்ன என்று விசாரிக்க.. அவளின் முறைப்பில் அடங்கி போனாள்.

சௌமினி எண்ணமோ அங்கே சுழன்று கொண்டு இருந்தது… அருகே நெருங்கிய விஷ்ணுவின் அந்த ஸ்பர்சமில்லா ஸ்பரிசம் பெண்ணவளின் பருவ உணர்வுகளின் இதழ்களை விரிக்க செய்தது.. ஒரு உரிமையான ஆணின் ஸ்பரிசம் பெண்ணிற்கு என்னன்ன உணர்ச்சிகளை தூண்டுமோ அதையே தான் சௌமினிக்கும் விஷ்ணுவின் அந்த ஸ்பரிசம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த சூழலில் விட்டு வெளியே வர இயலாமல்.. விரும்பாமல் அமைதியாகவே அன்றைய பொழுதை கழித்தால் சௌமினி..

மாலை வீட்டுக்கு சென்றவள்.. பெற்றோர் விசாரிக்க அவளுக்கு அங்கே எல்லாம் ஓகே என்றதும் எற்கனவே தயார் நிலையில் இருந்த அவர்கள், இவர்களை இவர்களுக்கு என பார்த்த ஹாஸ்டலில், விட்டுவிட்டு கண்களும் மனமும் கலங்க ஊரை நோக்கி சென்றனர்.. இரவு உணவை அவர்களுக்கு வாங்கி தர மறக்கவில்லை அந்த பொறுப்பு மிக்க அண்ணன் ரிஷி..

மறுநாள் ஆபிஸ் வந்தவளின் மனம்.. நேற்றைய நினைவில் சுகம் கண்டு சுகிக்க எண்ண, அறிவோ நிதர்சனத்தை நினைத்து எண்ணத்திற்கு தடா விதித்தது. 

ஹாலில் இன்று அவர்களுக்கு டீம் லீடர் பேஸிக் டிரெய்னிங் எடுத்து கொண்டிருக்க… ஒரு நிலைக்கு மேல் அவளால் அதில் ஒன்ற முடியாமல் தன் இருக்கையில் நெளிந்து வளைந்து கொண்டிருந்தாள் சௌமினி.. இவளின் செய்கை மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்தாலும், விஷ்ணு கூர் விழிகளுக்கு தப்பவில்லை.. 

"மிஸ்.. சௌடாம்பிகை.. எனி டவுட்.. " என்று சத்தமாக வினவ, அதுவும் எல்லோர் முன்னிலையிலும் .. 

’இவன் வேற.. எப்போ பாரு தலையில அடிச்ச மாதிரியே சௌடாம்பிகை சௌடாம்பிக்கை னு.. நீட்டி முழக்கி கூப்புடுறான்’ என்று மனதில் தாளித்து, வெளியில் அசட்டு சிரிப்பை ஒன்றை அவனிடம் கடத்தி… "நோ சர்" என்றாள்.

"பார்த்தா.. அப்போ இருந்து ஏதோ கேட்க நினைக்கிற மாதிரி இருந்தது உங்க ஆக்டிவிடீஸ்.. டோண்ட் ஹெஸி்டேட்.. ம்ம் சரியா"

அவனிடம் மண்டையை மண்டையை ஆட்டி விட்டு , ’ போய்யா.. போ .. நானே உட்கார முடியாம நெளிஞ்சு கிட்டு இருந்தா.. இவன் நானு கவனிச்ச மாதிரியே கேள்வி கேட்க சொல்லுறான்..பி.எம். " என்று முணகியவாறு அமர்ந்தாள்.

இப்போது கிளாஸ் எடுத்த கொண்டிருந்தவர், மற்றவரை விட சௌமினியை அதிகமாக பார்த்து பார்த்து சொல்லி கொடுத்து கொண்டு இருக்க.. அவளுக்கு பே என்று ஆனது. முகத்தை மிகவும் கஷ்டப்பட்டு கவனிக்கிற மாதிரியே வைத்து இருந்தாள்.

அவளும் எவ்வளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது, முகத்தை பாவம் போலவே வைத்து நடத்துபவரையே பார்த்துக்கொண்டு இருக்க, அதுவும் முடியாமல் விழிகளை சுழட்டி பார்க்க, வாயிலின் ஓரம் கதவில் சாய்ந்து ஒரு கையை பாண்ட் பகேட்டில் விட்டு கொண்டு மறு கையால் உதட்டில் தவழும் புன்னகையை மறைத்தவாறு அவளையே பார்த்துக் கொண்டு இருந்த விஷ்ணு சிக்கினான்..

இருவரும் விழிகளும் ஒன்றோன்று கலக்க, அவளின் செய்கையை தான் பார்த்து விட்டேன் என்பதாய் ஒற்றை புருவத்தை உயர்த்தி உதட்டில் நமட்டு சிரிப்பை உதிர்க்க.... இதுவே வேறு சமயம் என்றால் பெண்ணவளின் இதயம் சொல்லும் கதையே வேறு.. ஆனால் இன்று இவன் தன்னை கண்டு கொண்டதோடு , அனைவர் முன்னிலையிலும் மாட்டி விட்டு, அவளின் அவஸ்தையை பார்த்து ரசித்து கொண்டு இருக்கும் அவனை மனதில் தாளிக்க மட்டுமே முடிந்தது பெண்ணவளால்.. உதட்டை சுளிந்து, மெல்ல அசைத்து, ’போய்யா பி.எம் 'என்றாள்.

அவள் சொல்வது புரியவில்லை என்றாலும், தன்னை ஏதோ திட்டுகிறாள் என்று புரிய, ஒரு விரலை காட்டி பத்திரம் செய்தவன், பின் தானும் உதட்டு அசைவில், " என்கிட்ட மாட்டுவலடி அப்போ இருக்குடி உனக்கு" என்றான்

அவனின் பதிலில், திரும்பவும் உதட்டை சுளித்து முகத்தை தோள் பட்டையில் ஒரு இடியிடிக்க.. விஷ்ணு தன் தொண்டை சரி செய்து அவளை கூப்பிடுவது போல பாவனை செய்ய, அவள் பயந்து இரு கை கூப்பி, கண்களால் கெஞ்ச, இவனோ கெத்தாக முகத்தை வைத்து, கையால் பிழைத்து போ என்று பவானையுடன் சென்றான்.. சென்றவனின் முகம் இறுகி இருந்தாலும் கண்களில் மின்னல் பளிச்சிட்டது..

இவர்களின் இந்த மௌன சம்பாஷனையை யாரும் பார்த்தார்களா என்று சௌமினி ஆராய முட்டை விழி தெறிக்க, திறந்த வாயை மூடாமல் பார்த்து கொண்டிருந்தாள் சுஜி " என்னடா நடக்குது இங்கன" என்ற மைண்ட் வாய்ஸ் வேறு..

அச்சோ மாட்டிகிட்டோமே என்று லேசாக கீழுதட்டை மேல் பற்களால் கடித்து சற்று தன்னை சமாளித்தவள்.. சுஜி யைப் நோக்கி கட்டை விரல்.. ஆள்காட்டி விரலை சேர்த்து காண்பித்து அவள் வாயை மூட சொன்னாள்.

பின் எங்கே சுஜிக்கு டிரெய்னிங்ஙில் கவனம் சென்றது, சௌமினியை பார்ப்பதும், டிரெயினேரைப் பார்ப்பதுமாக இருந்தாள்.. ஆனால் சௌமினி இப்போது இன்னும் தான் பாடத்தில் கவனமாக இருப்பது போல காட்டி கொண்டாள் இவளிடம் இருந்து தப்பிக்க.

அன்றைய அலுவல் முடிந்து, சௌமினியும் சுஜியின் படியில் இறங்கி வந்து கொண்டிருந்தனர், " என்னடி நடக்குது உங்களுக்குள்ள… மருவாதையா மறைக்காம சொல்லு.." " ம்ம்… இரண்டு பேரும் கண்களில் காதல் பேசி, லவ் டெவலப் செய்து கிட்டுயிருந்தோம்.. யாருடி இவ.. என்னை மாட்டி விட்டு, நக்கல் பண்ணி சிரிக்கிறான் டி.. அந்த வி.பி."

" நீ எப்போதும் பி.எம். தானே சொல்லுவ… "

" இந்த வி.பி. அந்த வி.பி. இல்லை.. வெள்ளை பன்னியின் சுருக்கம்"

"அடிப்பாவி . .. நீ இப்படியே அவருக்கு பேரு வைச்சு கிட்டு சுத்து, என்னைக்கு அவர் கிட்ட மாட்ட போறியோ.. அன்னைக்கு உன்னைய வைச்சு செய்ய போறாரு"

" அப்போ பார்க்கலாம் போடி"

இவர்களின் பின்னே வந்த விஷ்ணுவின் காதில் அனைத்தும் விழுந்து அவன் காதில் புகை வர வைத்தது.. 'நான் வெள்ளை பன்னியா.. இருடி.. உன்னை… என பற்களை கடித்தவன் , 'ஆமா.. அப்போ பி.எம். என்னவாக இருக்கும்.. நம்மையே மண்டை காய வைக்கிறா.. " என்று கோபத்தில் அவளை திட்டிக் கொண்டே சென்றவன் அதே திருப்பத்தில் எதிரே வந்தவர் மீது மோதி கொள்ள… ஒரு ஆவலுடன் நிமிர்ந்த விஷ்ணுவை முறைத்து பார்த்து கொண்டு நின்றது நட்டு. விஷ்ணுவிற்கோ அந்த இருமுறை இதழ்கள் இணைப்பு கண் முன்னே மின்னி மறைந்தது..

இவர்கள் மோதிய சத்தத்தில் திரும்பி பார்த்தார்கள் சௌமினியும் சுஜியும். சௌமினியின் வதனத்தில் குறும்புடன் கூடிய புன்னகை.. விஷ்ணுவின் பார்வை அவளை கோபத்துடன் பார்த்தாலும் அவனின் முதல் உறவான கோவை இதழில் வெறிக்க தவறவில்லை…

" ஒரு தடவை சான்ஸ் கொடுத்தா ஒவ்வொரு தடவையும் கொடுப்பார்களா... அஸ்க்கு புஸ்க்கு " கியூபிட் விஷ்ணுவை பார்த்து சொல்லி சிரித்தது..

கியூபிட் சான்ஸ் கொடுக்குமா… ??? இல்லை விஷ்ணுவே வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வானா???

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top