Share:
Notifications
Clear all

சண்டியரே 22

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

சண்டியரே 22

 

 

தன் வீட்டு வாசலில் லோகநாதன் வாங்கி கொடுத்த சரக்கை குடித்து விட்டு மட்டையாகி பப்பரப்பா என்று பட்டாபட்டி அன்ராயர் தெரிய படுத்து கிடந்த தியாகேசனை எள்ளலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவர் அன்ராயர் உள்ளே இருந்து சாவியை லாவகமாக திருடி கதவைத் திறந்து உள்ளே மெல்ல நுழைந்தான் லோகநாதன்.

 

ஆம்..!! லோகநாதனே தான்..! நல்ல பாம்பாய் கரம் வைத்து காத்திருந்தான்.

ஆரூரனை பழிவாங்க.. 

இந்த தியாகேசனை ஏமாற்றா.. 

தங்கமயிலை அபகரித்துக் கொள்ள…!!

 

ஆரூரன் அவனை தண்ணீரில் முக்கிய முக்கி பம்பு செட்டில் வைத்து அன்று அடித்து வெளுத்த இன்னும் அவன் கண்களை விட்டு மறையவில்லை.. அந்த பயம் மரண பயம் அதுவும் இருந்தது. அதை தாண்டிய அகத்திரமும் இருந்தது..!

 

அதைவிட ஏற்கனவே தங்கமயில் மீது ஒரு கண் அவனுக்கு தியாகேசனாய் வந்து கட்டிக் கொள் என்று அவனிடம் கேட்டு கல்யாணத்தை இருவரும் முடிவு செய்து, இனி அவள் எனக்குத்தான் என்று இறுமாப்பில் இருந்தவனுக்கு இடியாய் விழுந்தது ஆரூரன் தங்கமயில் திருமணம்..!

 

என்று ஆரூரன் தான் தன் மகனை கட்டிக் கொண்டான் என்று தெரிந்ததோ.. அன்றிலிருந்தே மதம் பிடித்த யானை தான் சுற்றிக் கொண்டிருந்தார் தியாகேசன்.

 

அந்த மதம் பிடித்த யானையை சரக்கு என்று அங்குசத்தை கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் தன் பக்கம் இழுத்து இருந்தான் லோகநாதன்.

 

“நீ எவ்ளோ பெரிய ஆளு மாமா.. உன்னையே இப்படி ஏமாத்தி உன் பொண்ண கட்டிட்டு போயிட்டானே.. பாவம் தான்யா நீ.. வா வா வந்து என் கூட சேர்ந்து கட்டிங் போடு.. அது ஒன்று மட்டும்தான் இப்போதைக்கு உனக்கு ஆறுதல்” என்று உத்தி கொடுத்தவன் மெல்ல மெல்ல..

 

 

“ஆமா.. அத்த உன் கூட இல்லையாமே கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டாமாம். பாவம் தான் நீயி” என்று என்னென்னமோ பேசி கொஞ்சம் கொஞ்சமாக தியாகேசன் மனதில் கடுகளவு ஆரூரன் மேல் இருக்கும் அந்த அக்கறையும் அகற்றி மொத்தம் முழுதாக அவன் மீது வன்மத்தை ஏற்று விட்டிருந்தான் லோகநாதன். 

 

அதனோடு கூட அவ்வப்போது மயிலை பற்றி அக்கறையாய் அன்பாய் பேசி “என்ட்ட என் பொண்டாட்டி இருந்திருந்தா அதுக்கு இப்படி ஒரு நெலமா வந்து இருக்குமா? என் வீட்டில் ஜம்முனு மகாராணியா இருந்திருக்கும். சொவத்துல அடிச்சபந்து மாதிரி திரும்பவும் உன் வீட்டுக்கு வந்து வாழவெட்டியா கெடக்குது.. இனி அதீத வாழ்க்கை.. ம்ம்ம் .. என்னவோ போ மாமா..” என்று எப்படி பேசி பேசி அவரின் மனதில் மயில் மேல் வருத்தத்தை ஏற்படுத்தினான்.

 

ஏற்கனவே தங்கமயிலை பார்க்கும் போதெல்லாம் ஒரு பக்கம் தியாகேசனுக்கு வருத்தமாக இருக்கும் ‘தவறு செய்து விட்டோமோ புருஷன் கூட வாழ வைத்திருக்க வேண்டுமோ? என்று..!

 

ஆனால் மறுபுறம் யோசிக்கும் போது ‘அந்த ஆரூரனை கூடவா? சேச்ச அதுக்கு என் பொண்ணு என் வீட்டில் இருக்கட்டும்’ என்று வீரென்று கொண்டு எழுந்திருக்கும் ஆரூரன் மேல் உள்ள விளங்க முடியாத கோபம். இப்படியாக இரு உள்ளமாக ஆடிய அவரின் மனதை பிடித்து ஒரு பக்கம் அதுவும் ஆரூரனுக்கு எதிர்ப்பக்கம் நிற்க வைத்து விட்டான். லோகநாதன். 

 

அதன்படி நீ காலையில் வயலை மேற்ப்பார்வை பார்த்தவரை அழைத்து வந்தவன் “இந்த வயசான காலத்துல இந்த வேலை எல்லாம் தேவையா உனக்கு மாம? உச்சு வெயில் நின்னுகிட்டு மயங்கி விடப் போற.. வா.. வா.. ரெண்டு வாய் சாப்பிட்டு போகலாம்” என்று பாசமாக அழைக்க அதில் நெக்குருகி போனார் தியாகேசன். 

 

ஏற்கனவே குழம்பி இருந்த அவர் மனதில் இன்னும் குழப்பி லாவகமாக தியாகிசனிடம் நம்பிக்கை என்று மீனை ஒவ்வொரு முறையும் பிடித்துக் கொண்டு இருந்தான் லோகநாதன்.

 

தன்னை அக்கரையாக கவனித்து சாப்பாட்டு எல்லாம் வாங்கி தரும் இவனை ஏன் எல்லோரும் கெட்டவர்கள் என்றார்கள்? அவர்கள் தான் கெட்டவர்..! அவர்கள்தான் பாவிகள்..! என்று லோகநாதனுக்கு சப்போர்ட் செய்தது தியாகேசனின் மனம். கூடவே ‘முதல் பொண்டாட்டி என்ன தப்பு பண்ணினாளோ‌..?’ என்று அவர் நினைத்தை கேட்க..

 

“நீ வேற ஏன் மாமா அந்த விஷயத்தை ஞாபகம் படுத்தற?? அவ சரியில்ல மாமா..! ஆனா ஊரு முன்னாடி அத சொல்லாம என்னைய கேவலப்படுத்தி விவாகரத்து வாங்கிட்டு போயிட்டா.. ஏன் தெரியுமா அத்தனை பேருக்கும் முன்னால அவளை அடிச்சேன்??” என்று அவருக்கு உணவு பரிமாறிக் கொண்டே கேட்க..

 

“சொல்லு மாப்பிள.. சொல்லு..” என்று கேட்டார்.

 

 நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பது போல இவனுக்கும் ஒரு பக்கம் இருக்குமே? அது ஏன் கேட்போம்? என்று கேட்டார்.

 

ஆனால் அந்த மற்றொரு பக்கம் நியாயத்தை ஆரூரனுக்கு மட்டும் காட்ட.. பார்க்க மறுத்தார். 

 

“அவ கல்யாணத்துக்கு முன்னையே அவ வீட்டுல வேலை பார்த்த நடவாள் கூட ஒன்னு மண்ணா இருந்தா.. வீட்ல யாருக்கும் தெரியல.. இங்கே வந்ததும் அந்த நடவாளை என் வீட்டில பண்ணையாளை சேர்த்து விட சொன்னா..? முதல்ல நானும் சேர்த்துவிட்டேன். அதுக்கப்புறம் இவங்க பழக்கத்தை கண்டுபிடிச்சு முதலில் எச்சரிச்சேன்.. இவ கேட்கல..! வீட்ல திட்டினேன் அடிச்சு அப்பவும் உரைக்கல..! அப்படித்தான் பண்ணுனா ..அதுக்கப்புறம் ரோட்ல வச்சு அடிச்சாளாவது அவளுக்கு புத்தி வருமான்னு பார்த்து தான் செஞ்சேன். பாவி மக எல்லா பலியையும் என் மேல போட்டுட்டு அந்த பயலோட கம்பி நீட்டிட்டா..” என்றான் சோகமாக..

 

முதல் கல்யாணத்தை மறைத்து குழந்தை இருப்பதையும் மறைத்து தான் ஆதிரன் என்று கூறி தன் பெண்ணை கல்யாணம் கொண்ட ஆரூரனை விட இந்த லோகநாதன் எவ்வளவோ மேலாக தெரிந்தான் அந்த கணத்தில் தியாகேசனுக்கு. 

 

அப்புறம் என்ன கொஞ்சம் கொஞ்சமா பேசி அவருடைய சுத்தி வீட்டுக்கு அழைத்து வரும் வரை கொண்டு வந்துவிட்டார்.

 

 அன்று வீட்டில் இருக்கும் பொழுது தான் பேசாம மயில உனக்கு “இரண்டாம் தரமா கல்யாணம் பண்ணி கொடுத்துடலாம்னு இருக்கேன்” என்று வாயை விட்டார் தியாகேசன்.

 

ஆனால் அவனோ நல்லவன் மாதிரி “வேண்டாம் மாமா அது மனசு கஷ்டப்படும்.. என்னதான் ஆண்கள் ரெண்டாவது கல்யாணம்னா நாங்க மனச மாத்திம்போம். ஆனா பொண்ணுங்களுக்கு அப்படி இல்ல.‌. பெண்கள் மனது நுட்பமானது” என்று மயிலுக்காய் வருத்தப்பட்டு அவன் பேச..

 

“எத்தனை பரிவு காட்டும் இவன்தான் என் மாப்பிள்ளை..! என் பொண்ணுக்கு கணவன்..!” என்று மீண்டும் மீண்டும் தப்பான முடிவு எடுத்தவர் “நீ தான்யா மனசன்.. என் பொண்ணுக்கு புருஷன்..!” என்று வாயாலே பேச உச்சி குளிர்ந்து விட்டது லோகநாதனுக்கு. எப்படி இந்த கல்யாணத்தை நடத்தலாம் என்று கேட்க “உன் பொண்ணு ஒத்துக்கவே மாட்டா மாமா” என்று வருத்தப்பட்டான். 

 

தியாகேசனுக்கும் புரியவில்லை ஆரூரனுக்கு தெரிந்தால் அவ்வளவுதான். ஆனால் இம்முறை அவனை கழட்டி விட்டு லோகநாதனுக்கு கட்டி வைத்து விடுவதில் தீர்மானமாக இருந்தார். 

 

“ஒன்னு செய்யலாம் தினமும் நைட் உன் வீட்டுக்கு நான் வந்துட்டு போற மாதிரி வச்சுக்கலாம்.. அப்படி வந்துட்டு போறத பாத்தா ஊருக்குள்ள நாலு பேர் பேசுவாங்க ஏற்கனவே தங்கமயிலும் தனியா தான் இருக்கு. ஆரூரன் காதுக்கும் இது போதும்.. இந்த விஷயம் கேள்விப்பட்டால் கண்டிப்பா அவனே வேண்டாம் என்று முடித்து விட்டுவிடுவான். எப்படி?” என்று கேட்டான்.

 

“திட்டம் நன்றாகத் தான் இருக்கிறது ஆனா.. இராவு என் வீட்டுக்கு வரணுமா? அதுவும் ஒரு பொண்ண பக்கத்துல வச்சுக்கிட்டு..” ஏனோ தியாகேசனுக்கு அந்த திட்டம் பிடிக்கவில்லை. 

 

“ஏன் மாமா நீ கூடத்துல படுத்து இருக்க போற.. அந்த ரூம்ல பொண்ணு இருக்க போகுது. இந்த ரூம்ல நான் இருக்க போறேன். காலையில எல்லோருக்கும் தெரிகிற மாதிரி வெளியில போக போறேன். இந்த மாதிரி ஒரு ஒரு வாரம் பண்ணா போதாதா?” என்றதும் தியாகராஜனுக்கு மனசு ஒப்ப மறுத்தது.

 

“வேண்டாம்..! இந்த மாதிரி பேச்சு வந்து.. என் பொண்ணுக்கு வர வேண்டாம்..” என்று அவருக்குள் இருந்த அந்த அப்பா என்று நல்ல மனிதர் உறங்கவில்லை போலும் பிடிவாதமாய் மறுத்துவிட்டார்.

 

“சரி சரி உனக்கு பிடிக்கலைன்னா.. விட்டுடலாம்” என்று அவருக்கு தண்ணீர் ஊற்றிக் கொடுத்து, அவர் மது போதையில் உறங்கியதும் பட்டாபட்டியில் இருக்கும் சாவியை எடுத்துக்கொண்டு மெல்ல உள்ளே நுழைந்து சத்தம் போடாமல் மற்றொரு அறையில் பதுங்கிக் கொண்டான்‌

 

முதலில் “ஏன் அந்த மயிலை விட்டு வைத்திருக்க வேண்டும்? அப்பாவும் கேட்க மாட்டான்? தனியா தான் இருக்கிறா.. ருசித்து விட்டால் தான் என்ன அவளை?” என்று எண்ணம் தோன்றியது.

 

“ஆனா.. அப்பன் தான் மட்டையா இருக்கான். அவள் முழிச்சிட்டு தானே சத்தம் போட்டு ஒரே கூட்டிவிட்டா என்றால்.. இல்லை இவளே எக்குத் தப்பாக அடித்து உதைத்து விட்டா..?? வேண்டாம் வேண்டாம்.. அவள் பெயரை முதலில் கெடுப்போம் அடுத்து அவள..” என்று கோணலாக சிரித்தவன் விடியற்காலையில் எழுந்து பால் ஊற்று வரும் வேளையில் தலையில் துண்டை போட்டுக்கொண்டு முகம் தெரியாமல் வீட்டிலிருந்து ஓடினான்.

 

அதே சமயம் சற்று விடிந்த பிறகு வாசல் வழி வெளியே செல்ல பார்த்த ஆரூரன் பூட்டி இருப்பதை கண்டு திரும்பவும் தூங்கும் தங்கமயிலிடம் “உங்க அப்பன் வெளியில் பூட்டி வச்சுருக்கான் போல.. பின் பக்கமாக போறேன்” என்றதும் சரி சரி என்று அவள் தலையாட்ட, பக்கமாக சென்றான்..

 

அதன் பின் அவனது ஓட்டம்..! காலை அப்போ மகளுடன் சிறிது நேரம் கழித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவன், அடுத்து மருத்துவமனை இரவு பொழுதுவீட்டுக்கு வருவது இல்லை ஏதேனும் அவசர கேஸ் என்றால்.. இரவு வரை இருப்பது அதன் பின் நள்ளிரவில் வீட்டுக்கு வந்தாலும் மயிலுக்காக அவளோடு போய் தங்கி இருந்தான். முதல் நாளை இரண்டு பேருக்கும் இடையில் அவள் சீன சுவற்றை எழுப்ப அதை எல்லாம் சிரித்து உதைத்து தள்ளியவன்,

 

“ஒழுங்கா இருக்கறவனை இருக்க விட மாட்ட போல…” என்று அவளை நக்கல் குரலில் கேட்டவன், பின்பக்கத்தில் இருந்து அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டே உறங்கினான். முரண்டு பிடித்தால் மொத்தமும் ஸ்வாஹா ஆயிடும் என்று அவளுக்கு தெரியும் அதனால் அவள் அமைதியாக படுத்துக்கொண்டாள். இப்படியாக ஒரு வாரம் சென்றது. 

 

பின் வழியாக செல்லும் ஆரூரனை ஒரு சில பேர் பார்த்தாலும் வாசல் வழியாக செல்லும் அதுவும் மூஞ்சி மூடிக்கொண்டு செல்லும் லோகநாதனை அநேகம் வேறு பார்த்தனர்.

 

அதுவும் கிராமத்தில் காலை வேளையில் மாடு கறக்க வயல்வெளி செல்ல என்று காலையிலேயே கிராம விழித்து விடுவதால் இவன் அனைவருக்கும் கண்ணிலும் பட்டான். 

 

இதுவே பெரும் பேச்சு பொருளாக மாற வேம்பு தான் பதறிக்கொண்டு மயிலிடம் இது பற்றி கூறினாள். ஆனால் மயிலுக்கும் லோகநாதன் வந்து செல்வது தெரியாது. 

 

“எல்லாம் என் மாமா தான் டி.. அது தான் இப்படி நைட்டு நைட்டு வந்துட்டு போகுது” என்றதும் வேம்பு அவளை ஒரு மாதிரியாக பார்த்து சிரிக்க..

 

“நீ வேற ஏன் டி? அப்பாரு குடித்து மட்டை ஆகுதா? லோகநாதன் பிரச்சனை வரக்கூடாதுன்னு பாதுகாப்புக்கு வந்துட்டு போகுது” என்றதும் சரி சரி என்று அவளும் சிரித்துக் கொண்டாள்.

 

அப்போதுதான் அவள் கழுத்தில் இருந்த அந்த வெள்ளி செயினை கண்டு “இத நான் எங்கே பார்த்திருக்கிறேனே??” என்று யோசித்தாள். 

 

“ஆகா நேத்து என்னாளு நினைப்பில் எடுத்து பார்த்ததை திரும்ப உள்ள வைக்க மறந்துட்டேனே..” தலையில் அடித்துக் கொண்டாள் வேம்பு.

 

“சரி சரி நான் வீட்டுக்கு போறேன் டி அம்மா என்னைய தேடும்” என்று அவள் கிளம்ப..

 

வேம்புவின் கையை பிடித்தவள் “ஒழுங்கு மரியாதையா சொல்லு? இது தவசி அண்ணாவோடது தானே?” என்றதும் நெளிந்து குழைந்தவள் “ஆமாம்..!” என்றாள்.

 

“அடிப்பாவி..! அது ஒரு ஆஞ்சநேய பக்தன் டி..!” என்று இவள் அதிர…

 

“சும்மா பயம் காட்டாத டி..! அந்த ஆஞ்சநேயர் வால புடிச்சு இறுக்க எப்படி என் இடுப்புல சொருகுறதுனு எனக்கு தெரியும்.. கூடிய சீக்கிரம் அவர.. என்ன சொன்ன அவரு உனக்கு அண்ணனா இல்ல வேற எதுவும் உறவுமுறை வருமே?” என்று யோசித்தாள்.

 

“ஒரு முறையில் அண்ணன் இன்னொரு முறைல சித்தப்பா.. ரெண்டும் சொல்லிக்கலாம்..” என்று சிரித்தாள் மயில்.

 

“சரி..சரி.. கூடிய சீக்கிரம் உனக்கு அண்ணியாகவோ இல்ல சித்தியாகவோ என்னைய நீ எதிர்பார்க்கலாம்” என்று சொல்லி சென்றவளை சிரிப்புடன் பார்த்தாள் தங்கமயில். 

 

ஆனால் அவள் சிரிப்பு எல்லாம் பறிபோனது..!

 

காரணம் லோகநா

தன் தான் தான் அவள் வீட்டுக்கு சென்று வருவதாக மீண்டும் பரப்பி விட்டான் பொன்வயலில்..!

 

 

தொடரும்…

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top