கண்ணம்மா 20
மறுநாள் மதியம் விருந்துக்கு மதுரை வந்தவர்கள் பொதுவாக அனைவரிடம் சொல்லிக் கொண்டு பயணத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஏற்கனவே தன் லக்கேஜை ஆதித் சென்னையில் இருந்தே பேக் செய்து கொண்டு வந்திருக்க.. இங்கு ஒரு மினி மதுரையை ரெடி பண்ணி வைத்திருந்தார்கள் தாராவின் குடும்பத்தினர்.
ச்ச.. தாராவுக்கு என்று நினைத்தால் அது தவறு!! அவர்களின் தங்க மாப்பிள்ளைக்கு தான் அவ்வளவும்!!
அதனைப் பார்த்து திகைத்தவள், பின் நிதானமாக திரும்பி நிக்கை ஒரு முறை முறைத்தாள் தாரா.
அடுத்த கணம் அவளுக்கு தலையில் கொட்டு வந்து விழ "என்ன மாப்பிள்ளைய முறைச்சிட்டு இருக்குறவ.. போய் மத்த வேலையை பாரு தீபு" என்று விரட்டி விட்டார் வைதேகி.
"ஆஸ்திரேலியா வாங்க.. அப்ப இருக்கு உங்களுக்கு" என்று விரல்களால் அவனுக்கு பத்திரம் காட்டிக் கொண்டு இவள் செல்ல.. அதற்குள் தாராவை இடித்துக் கொண்டு வந்த அவளது தங்கைகள் மூவரும் தங்களுடைய பரிசு என்று அவனுக்கு கொடுக்க.. அதையும் சற்று காதில் புகை வர பார்த்தவள் சென்று விட்டாள்.
மதுரை ஏர்போர்ட்…
"மாப்பிள்ளை அவ கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பா.. நீங்க தான் அட்ஜஸ்ட் பண்ணி போய் அவளுக்கு புத்திமதி சொல்லி நல்லபடியா பாத்துக்கணும்! அம்புட்டு தூரம் அனுப்பி வைக்கிறோம்.. ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து நடந்துக்கணும்" என்று மரகதவல்லி கண் கலங்க…
"சும்மா இரு கா நீ.. சொல்ல போன இதெல்லாம் நம்ம தீபு கிட்ட சொல்ல வேண்டிய டயலாக்.. அவதான் நம்ம மாப்பிள்ளையே கண் கலங்காம பார்த்துக்க சொல்லி சொல்லணும்! அம்புட்டு சேட்டை செய்யுறா.." என்றதும் மற்றவர்கள் சிரிக்க…
"அய்த்தான்.. அடுத்து எப்போ வருவீங்க? நாங்க உங்கள பாக்கணும்னா நாங்க எப்படி பார்க்குறது?" என்று விஷாகா அவன் அருகில் அமர்ந்து கொண்டு வருத்தமாக கேட்க..
"அதுக்கு என்ன விசு குட்டி.. உனக்கு எப்போ இந்த அய்த்தான பாக்கணும் சொல்லு.. உடனே டிக்கெட் போட்டு விடுறேன்" என்று அவளிடம் கூற அவளும் கண்கள் மின்ன சரியா தான் என்றாள்.
இந்த பக்கம் அமர்ந்திருந்த தாராவை எழுப்பி மஞ்சரியும் வர்ஷினியும் அமர்ந்து கொண்டனர்.
விசாகாவுக்கு ஆதித் வந்ததிலிருந்து இவர்கள் காதில் மீது ஏதோ ஒரு சுவாரசியம். அதனால் ஆதித்தை மிகவும் பிடிக்கும்!
மஞ்சரிக்கும் வர்ஷினிக்கும் அக்கா கணவன் என்ற அந்த பிடித்தம் முதலில் உண்டு. எப்பொழுது அவர்களுக்காக அவன் பேசினானோ.. அன்றிலிருந்து அவன் ஒரு ஹீரோ அப்பியரன்ஸ் தான் அவர்களுக்கு!!
குகன் சொல்லவா வேண்டும்? அவனது அதிரடிகளை ஆளுமைகளை நேரில் இருந்து பார்த்தவன் அல்லவா.. தந்தை சிறையில் இருந்த போது! அதனால் அய்த்தான் என்றாலே ஏதோ குலம் காக்கும் அய்யனார் சாமி போலவே பக்தி மயமாக பார்த்துக் கொண்டிருந்தான் அருகில் நின்று.
செந்தில்வேலனுக்கும் கதிர்வேலனுக்கும் இவர்களது உயரம் பெரிதாக தெரியவில்லை அதை தாண்டி அவனது குடும்பதத்தின் மீதான அன்பும் பாசமும் புரிய.. அவர்களும் கண்களில் கனிவோடு தான் மாப்பிள்ளையை பார்த்து இருந்தனர்.
பங்கு பங்கு என்று தன் மேல் அன்பு காட்டும் ஆதித்தை கண்டு வியப்பு உண்டு வெற்றிக்கும். அவனிடம் புன்னகை முகமாக பேசிக் கொண்டிருந்தான்.
இப்படி ஒட்டு மொத்த குடும்பமும் அவனை சுற்றியே நின்று இருக்க.. இரண்டு சீட்டு பின்னால் அமர்ந்திருந்த தாராவை ஒருத்தரும் கவனிக்கவில்லை!
நகம் கடித்து முறைப்போடு அவர்களைப் பார்த்து இருந்தவள், அருகில் ஒரு உருவம் அமர்வது தெரிய அதை கண்டுகொள்ளும் நிலையிலும் அவள் இல்லை.
"ஹாய்.. ஹேவ் அ ஜுஸ்.." என்ற குரலில் அவள் திடுக்கிட்டு பார்க்க அங்கே சிரித்து முகமாய் அமர்ந்திருந்தான் ஒரு ஆண், அவளிடம் ஜூஸை நீட்டியப்படி..
அவனது பார்வையில் கல்மிசமோ கள்ளத்தனமோ இல்லை. ஒருவித நட்பு மட்டுமே இருந்தது. 'என்னோடு சேர்ந்து சிரியேன்' என்பது போல புன்னகை முகம் ஆக இருந்தான்.
ஆனாலும் அந்த ஜூஸை வாங்காமல் அவனைப் பார்த்தபடி இருந்தாள் தாரா.
"ரொம்பவும் யோசிக்க வேணாம் சிஸ்டர்! ஒய் பிளட் சேம் பிளட்.." என்று கண்களால் அவளது குடும்பத்தை காட்டி சற்று தள்ளி நின்ற அவனது குடும்பத்தை காட்டினான்.
அங்கே நடுவில் ஒரு பெண் நின்றிருக்க.. சுற்றிலும் அவளது சொந்தங்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனர். இல்லை இல்லை பாசத்தை கொட்டிக் கொண்டிருந்தனர்.
அதை பார்த்ததும் அவளுக்கு புரிந்தது அருகில் அமர்ந்திருந்தவனின் நிலை! இப்பொழுது சினேக பாவத்தோடு அவனை சிரித்த முகமாக தாரா பார்க்க.. "இப்போது வாங்கிக்கலாம் தானே! உள்ளே இருக்கிற சூடு கொஞ்சம் தணியும் குளிர்ச்சியாக குடிங்க" என்று கூறினான்.
சிரிப்போடு வாங்கி கொண்டவள், மறுக்காமல் குடித்தாள்.
"என் மாமனார் குடும்பம் பெரிய குடும்பம்! எனக்கே நாலு மாமனார் நாலு மச்சானுங்க.. அவங்க பேமிலி.. ம்ம்.. சீக்கிரம் விட மாட்டாங்க! ஒரு நாலு ரவுண்டாவது பாசத்தை கொட்டி முடிச்சு தான் விடு வாங்க" என்று அவன் கூற.. அவளுக்கும் அதே போல அது மாமனார் குடும்பம் என்று நினைத்து விட்டான் போலும்!
அவள் ஜூஸை குடித்து முடித்தவள் "அவய்ங்க ஒன்னும் என் மாமனார் பேமிலி இல்ல.. ப்ரோ" என்றதும் அவன் ஆச்சரியமாக பார்க்க..
"எஸ்.. மை ஃபேமிலியே தான். அங்க நடுப்புற நிக்கிறார் இல்லையா அவர் என் புருஷன்" என்றதும் அவன் அவன் ஆச்சரியமாக அவர்களைப் பார்த்து பின் இவளை பார்த்தான் தாரா சிரிப்போடு "என் வீட்டுக்காரரை என்னைவிட அதிக பிடிக்கும் என் குடும்பத்திற்கு" என்றாள். சற்று நேரம் யோசித்து அவளை வியந்து பார்த்து அந்த கூட்டத்தையும் திரும்பி பார்த்தான்.
"மாமனார் குடும்பமே மகிழ்ந்து கொண்டாடும் நபரா அவன்? எவன் அவன்?" என்று யோசித்தவன் ஆதித்தை கூர்ந்து பார்த்தான். அவன் நம்பவில்லை போல என்று நினைத்தாள் தாரா.
"நிஜமா.. அங்க நிக்கிறவங்க எல்லாம் என் ஃபேமிலி! மாப்பிள்ளைய தான் இந்த கொஞ்சு கொஞ்சுறாங்க" என்று சோகமாக சொன்னாலும் முகத்தில் புன்னகை.
மீண்டும் அந்தப் பக்கம் பார்த்தவனின் கண்களில் ஆதித் இப்போது தெளிவாக விழ.. நெற்றி சுருங்கி யோசித்தவன் முகம் அடுத்த நிமிடம் நிர்மூலமாக மாறியது.
"கங்கிராஜுலேஷன்" என்றவன் வேகமாக எழ போக..
"உங்க பேர்? நீங்க?" என்றாள் தாரா
"ஐ அம் விநாயக் ரணசிங்க.. ஃப்ரம் இலங்கை. அவங்க என் ஃவொய்ப் ப்ரியவர்ணா… தேனி. ஒரு பேமிலி விஷேசத்துக்கு வந்துட்டு ரிட்டன் இலங்கைக்கு போறோம்" என்றவன் சிரித்த முகமாகவே அவளிடம் விடைபெற்றான் ஆதித் நிகேதனை சந்திக்காமலே…
சிலர் சந்திக்காமல் இருப்பதே சங்கடங்களை தவிர்க்கலாம் அல்லவா??
இவ்வளவு சந்தோஷமாக இருக்கும் ஆதித் இந்த இடத்தில் விநாயக்கை சந்தித்தால்…???
அது அவனுக்குள் பழைய நினைவுகளை வெளி கொணர்வதோடு அவனது தற்போதைய மகிழ்ச்சியையும் கெடுக்கும் என்பதை உணர்ந்த விநாயக்..
ஆதித் இந்த மனமாற்றத்தோடு புது வாழ்வை சந்தோஷமாக வாழட்டும் என்று நினைத்துக் கொண்டு "ஹேப்பி மேரீட் லைஃப்! டைம் ஆச்சு எங்களுக்கு. டைம் பர்மிட்டீஸ் வீ வில் மீட் சூன்" என்று தாராவிடம் விடைபெற, அதே சமயம் சர்வாவும் வந்தவன் "வாங்க மச்சான்.. உங்களுக்கு ஃப்ளைட் அனௌன்ஸ் பண்ணிட்டாங்க!" என்றான்.
"இல்லன்னா.. தங்கச்சியை விட்டுவிட்டு இப்படியொரு மச்சான் இருக்கிறதே உனக்கெல்லாம் ஞாபகம் வந்திருக்காதே.." என்று நக்கல் செய்து கொண்டே சென்ற விநாயக்கை பார்த்து புன்னகைத்தாள் தாரா. திரும்பி ஆதித்தை பார்க்க அப்போதும் அவன் தன் உறவினர் சூழல சிரித்துக் கொண்டிருந்தான்.
பெரு மூச்சு விட்டவள் அவர்களை முறைத்துக் கொண்டே…
"எங்களுக்கு ஃப்ளைட் அன்னவுன்ஸ் பண்ணிட்டாங்க" என்றாள் சற்றே முகத்தை தூக்கி வைத்து.
சட்டென்று மீண்டும் ஒரு பரபரப்பு அங்கே தொற்றிக்கொள்ள குகனும் வெற்றியும் அவர்களை உள் வரை அழைத்துக் கொண்டு வந்தனர்.
மற்றவர்களிடம் விடை பெற்ற ஆதித் கடைசியாக வெற்றியை கட்டித் தழுவும் போது அவன் காதில் "பங்கு.. உனக்கான வாழ்க்கை உன்னை தேடி வருது. தொலைச்சிடாதே! தொலைச்ச பின் வருந்தாதே! வாழ்க்கையில் பொறுமை முக்கியம் பங்கு!" என்று சிரித்துக் கொண்டே விடை பெற்றான்.
அவன் சொல்லி சென்றதின் அர்த்தம் விளங்க.. அதிர்ச்சியோடு பார்த்தவனை பார்த்து கண் சிமிட்டி சிரித்தான் ஆதித் நிகேதன்!!
ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் பொழுது தன் கண்ணம்மாவை கைபிடித்து விட வேண்டும் என்று கனவோடு மட்டுமே வந்தான் ஆதித் நிகேதன்!!
ஆனால் இன்று அவனின் கண்ணம்மா மட்டுமல்ல.. அவளின் குடும்பத்தையே தன் அன்பினாலும் பாசத்தினாலும் கட்டிப்போட்டு விட்டு ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் பயணித்தான்.
காதல் கொண்டு மட்டும் மறந்து விட்டால் அதற்குப்பின் சாரி டைல்ஸ் வாழ்க்கை போல காதல் வாழ்க்கை சீராக செல்லும் என்றெல்லாம் நினைக்க முடியாது.
உலக அழகனும் உலக அழகியமே மணந்தால் கூட அங்கே காதலோடு ஊடலும் உண்டு! அந்த ஊடலைக் கூட அழகானதாக ஆக்கி.. அதனை கூடலாக மாற்றி தாம்பத்திய வாழ்க்கையை கொண்டு செல்வது கணவன் மனைவிக்கான பெரும் சவாலே!!
அந்த சவாலை நல்ல விதமாகக் கொண்டு சென்றார்கள் ஆதித்தும் தாராவும்!!
ஆதித் தாராவின் வாழ்க்கையில் பெரும் காதலும்.. சிறு சிறு ஊடலும்.. அதன் நிறைவாக இனிய கூடலும்.. என்று வண்ணமயமாகத்தான் சென்றது!
இவர்கள் வாழ்க்கை வண்ணமயமாக செல்ல.. அதற்கு மேலும் அழகு சேர்க்க.. அவர்கள் வாழ்க்கை பூரணத்துவம் அடைய.. அழகிய பெண் குழந்தையை தாரா ஈன்றெடுத்தாள்!!
ஆதித் நிகேதனின் காதல் இங்கே வெற்றி பெற்றது!
வெற்றிவேலின் காதல் அங்கே என்ன ஆனது? வாழ்க்கை என்னானது??
மீண்டும் ஒரு அழகிய சந்தர்ப்பத்தில் வெற்றிவேல் மற்றும் விசாகாவோடு சந்திப்போம்!!
அதுவரை… சுபம்
