கண்ணம்மா 19
வெற்றியின் பார்வை இலக்கில்லாமல் வெறிந்திருந்தது.
ஜன்னல் வழியே அவன் முகத்தில் மோதியது சில்லென்ற காற்று!! திருச்செந்தூரின் கடல் காற்று.. உப்பை சுமந்து வரும் காற்று தான் ஆனாலும்.. வெற்றிக்குள் ஏதோ அன்று கொடைக்கானலில் அனுபவித்த அதே கொண்டல வாடை காற்றை போல சிலுசிலுவென்று.. அவனுக்கு மட்டும் பிரத்தியேகமாக அடித்தது!!
காதல் செய்யும் மாயம்!!
ஆனால்.. காற்று கூட செய்யுமோ மாயம்!
செய்ததே…! செய்கிறதே…!!
அன்று விசாகா செய்த விஷயங்களை நினைக்க மனதில் சில்லென்று தான் இருந்தது. ஆனால்… வயது?? திருமணத்துக்கு என்று அரசு நிர்ணயித்த வயசு அவளுக்கு வரவில்லை தான். ஆனால் இந்த காதல் மட்டும் வந்து விட்டது!
நினைக்கையில் முகம் மென்னகை பூசிக் கொண்டது அவனுக்கு.
இல்லை.. இல்லை.. காதல் என்பதை விட அதீத அன்பு.. என் மாமா என்ற உரிமை!! யார் அதை தடுக்க?? உறவுகளின் இந்த அன்பினை தடுக்கும் சக்தி எதற்கு உண்டாம்?
அன்று கொடைக்கானல் வந்தது தாரா குடும்பம் மட்டுமல்ல… வெற்றியும் தான்!
"வர வழயில் என் பங்கையும் அள்ளி போட்டு வா மச்சான்" என்று ஆதித் உத்தரவிட.. அதை தலைமேல் கொண்டு அப்படியே செய்தான் குகன்.
"யோவ்.. நீ ஹனிமூன் வந்தா எங்களை ஏன்யா இழுத்திட்டு வர சொன்ன.. கொடைக்கானல் குளிருக்கு நீ உன் பொண்டாட்டி கூட உரசி உரசி நடப்ப… நினைச்ச நேரத்துக்கு கட்டிப்பிடிப்ப.. கன்னி பசங்க பக்கத்துல இருக்கோம்னு கண்டுக்காம கிஸ் அடிப்ப.. உன் காதலுக்கு நாங்க ஊறுகாயா?"
என்று காண்டில் கத்தியவனை பங்கு என்று இறுக்க அனைத்துக் கொண்டான் ஆதித்.
அது என்னவோ ஆதித்துக்கு வெற்றி மீது ஒரு இனம் புரியாத அன்பு.
என்ன தான் வெற்றிக்கு தீபத்தாராவை பேசி இருந்தாலும், அதற்குப்பின் அதை மனதை விட்டு தூக்கியவன் கல்யாண வேலைகளில் இருந்து.. விருந்து வரைக்கும் பங்கு பங்கு என்று அவன் ஓடியாடி வேலை செய்ததை எல்லாம் பார்த்த ஆதித்க்கு தான் இந்த அன்பு பிறீட்டது.
அது மட்டுமல்லாமல் சிறு வயதிலிருந்து அப்பா அரசியல் அரசியல் என்று சுத்த.. அம்மாவுக்கும் பெரும்பான்மையான நேரம் அரசியல்வாதியின் மனைவி என்று நிறைய விருந்துக்களில் விழாக்களில் அழைப்பு வர.. தனியாகத்தான் வளர்ந்தான் ஆதித். அந்த மேல் சொசைட்டிக்கு அது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை.
இங்கே தீபதாராவின் குடும்பத்தை கண்டவுடன் தான் நிறைய இழந்தது தெரிய.. இங்கு இருக்கும் வரை அதனை எல்லாம் ஈடு செய்யத்தான் குடும்பத்தையே கொடைக்கானலுக்கு தூக்கி இருந்தான் இந்த மருமகன்.
முதலில் குகன் சொன்னதும் செந்தில்வேலனும் கதிர்வேலனும் திகைக்க.. வைதேகியும் மரகதவல்லியும் அவனை முறைக்க.. பெண்கள் மூவரும் சந்தோஷத்தில் துள்ளி குதிக்க.. ஒரு வழியாக "இதெல்லாம் உங்க மாப்பிள்ளை தான் செய்தார். அவர் தான் வர சொன்னார் எனக்கு தெரியாது.. எதா இருந்தாலும் அவரிடமே பேசிக்கோங்க" என்று அனைவரையும் சமாதானப்படுத்தி கூட்டி வருவதற்குள் போதும் போதும் என்று ஆனது குகனுக்கு.
கொடைக்கானலில் இருந்த அந்த மூன்று நாட்களும் குடும்பத்தோடு போட்டிங் போக.. பெரியவர்கள் எல்லாம் ஹார்ஸ் ரைடிங் செல்ல.. இவர்களெல்லாம் சைக்கிளிங் செல்ல.. என்று மகிழ்ச்சியும் கும்மாளமுமாக சென்றது.
செந்தில்வேலனும் அவரது தம்பியும் நிறைய லட்சணக் கணக்கில் சம்பாதித்தாலும் இம்மாதிரி பிள்ளைகளோடு தம்தம் மனைவிமார்களோடு வெளியே சென்று விடுமுறை கழித்ததெல்லாம் கிடையாது. அவ்வப்போது கோவில் திருவிழா.. உறவினர்கள் வருகை.. அவர்கள் வீட்டுக்கு இவர்கள் ஜாகை.. என்று இப்படி மட்டுமே இருந்தவர்களுக்கு புது அனுபவமாக இருந்தது.
மறுநாள் இவர்கள் இங்கிருந்து நேரடியாக சென்னைக்கும் மற்றவர்கள் மதுரைக்கும் கிளம்புவதாக ஏற்பாடு.
அன்று இரவு உணவு முடித்து அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் சமயம் மஞ்சரி குல்ஃபி கேட்டாள் என்று சிறியவர்கள் மட்டும் வாங்கி உண்டு கொண்டிருக்க… வெற்றிக்கு கொடுப்பது போல அவனைத் தேடி வந்தாள் விசாகா..
"மாமா இந்தாங்க குல்ஃபி. அய்த்தான் கொடுக்க சொன்னாய்ங்க" என்றதும் "இந்த குளிருக்கு குல்ஃபியா? எனக்கெல்லாம் வேற தான் வேணும்னு சொல்லு உன் அய்த்தான் கிட்ட" என்று சிரித்தாலும் அதை வாங்கி உண்டான்.
"ஆனாலும் உன் அய்த்தான் பண்ற அலும்புக்கு எல்லாம் அளவே இல்ல தெரியுமா?" என்றபடி அதை சுவைத்துக் கொண்டிருந்தான். கொடைக்கானல் வந்த நாட்களில் விஷாகா கொஞ்சம் தள்ளி இருந்தது, அவனுக்குள் ஒரு நம்பிக்கையை கொடுத்திருந்தது அவள் மாறிவிட்டாள் என்று!!
வெற்றியின் பாதி குல்ஃபி கரைந்து கொண்டிருக்க.. “போதும்.. மாமா..” என்றவள், அவன் கையை அழுத்தி புடித்து குல்ஃபியை நாக்கால் சுழட்டி சுவைத்தாள்.
அதில் அவன் கையில் வழிந்த ஐஸ்கிரீமை நாக்கால் நக்கி இழுக்க.. அவள் நாக்கின் தீண்டலில் அவனுள் ஏதோ ஒன்று உருக.. அவள் பிடியில் இருந்த கையை உருவியவன்.. "ஏய்.. அறிவிருக்கா உனக்கு?" என்று கர்ஜித்தான் தன் நெகிழ்வை காண்பிக்காமல்..
"இருங்க மாமா.. எனக்கு குல்பின்னா ரொம்ப பிடிக்கும் கொஞ்சோண்டு சாப்பிடுகிறேன்" என்று கண்களை சுருக்கி கெஞ்சுபவளை ஒரு நிமிடம் விழி தட்டாமல் பார்த்தான். அடுத்த நொடி தவறு என்று அவனை அவனே திட்டி அதனை தன் பக்கம் இழுக்க.. அவளோ அவன் கையை இழுத்து குல்ஃபியை மீண்டும் சுவைக்க.. அது உடைந்து கீழே விழுந்தது.
"உன்னால இது போச்சுடி குட்டி!" என்று அவன் முறைக்க..
"ரொம்ப பண்ணாதீங்க மாமா ஆக்சுவலி அது என்னோடது. நான்தான் நீங்க பாவம்னு உங்களுக்கு கொண்டு வந்து கொடுத்தேன்" என்றாள் முகத்தை சோகமாக வைத்து. சுழித்த அந்த உதடுகளும்.. சுருங்கிய மூக்கும்.. அவனை அவளை ஆழமாக பார்க்க சொல்ல.. இடவலமாக தலையசைத்து தன்னை மீட்டுக் கொண்டான் பெரும்பாடு பட்டு!
இவளை எந்த வகையில் சேர்ப்பது சின்னபிள்ளை என்று அறிவுரை கூறினாலும் ஏற்க மாட்டேன் என்கிறாள். பெரிய பெண் என்று இவளை அருகே விடவும் பயமாக இருக்கிறது தலையை உலுக்கி கொண்டான்.
"நீ முதல்ல இங்கிருந்து போ.. சொல்ல சொல்ல கேட்காம ஒட்டி ஒட்டி வந்து நின்ன அப்பறம் ஒட்ட நறுக்கிடுவேன் போடி!" என்று விரட்டி விட்டான்.
விரட்டி விட்டானே ஒழிய மனதில் ஏதோ குறுகுறுப்பு!
விசாகாவின் தீண்டலில்.. பிடியில்.. கரைந்தது… கீழே விழுந்த குல்ஃபி மட்டுமல்ல.. வெற்றியும் தான்!!
தன் நெகிழ்வை காட்டாமல் இருக்கத்தான் திருச்செந்தூர் கோவிலில் வேண்டுதல் என்று இங்கே ஓடி வந்து விட்டான்.
விசாகம் மனதில் வெற்றியின் பெயர் கடற்கரையில் வடித்த பெயர் இல்லை.. கல்லில் வடித்தது என்று காலம் அவனுக்கு புரிய வைக்கும்.
ஒரு வழியாக குடும்ப மூன் முடித்து குடும்பமே மதுரைக்கு வந்து செட்டில் ஆனது.
கொடைக்கானலில் ஆதித் மற்றும் தாரா குடும்ப மூன் முடித்து சென்னை வர.. அங்கே மிக ஆடம்பரமாக நடைபெற்றது எம்பி அருணாச்சலத்தின் மகன் ஆதித் நிகேதனின் மற்றும் தீபதாராவின் வரவேற்பு.
வங்கக்கடல் கொஞ்சும் கடற்கரையோரம் ஒரு ஆடம்பர ரிஷார்ட்டில் தான் இவர்கள் வரவேற்பு நடைபெற்றது.
மணமக்கள் பேரில் மட்டுமல்ல அந்த ஹாலின் ஒவ்வொரு இடத்திலும் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட வெள்ளை ஆர்கிட் மலர்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டு, ஆங்காங்கே கிரிஸ்டல் மணிகள் கொண்ட சரங்கள் தொங்கவிடப்பட்டு ஏதோ ஒரு தேவலோக நந்தவனத்திற்குள் நுழைந்த ஒரு எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தியது.
அவ்விழாவிற்கு வந்தவர்களும் அந்த அலங்காரத்தில் உறைந்திருந்தது சில வினாடிகள் தான்.. தங்களின் வழக்கமாக ஹைபை சொசைட்டியின் அதிநவீன நாகரிகத்தால் அவ்வலங்காரங்களை கண்டும் காணாமலும் செல்ல, அங்கேயிருந்த வரவேற்புக் குழுவினரால் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டனர்.
வரவேற்பு விழாவை ஈவன் ஆட்களிடம் விட்டாலும், ஒவ்வொரு இடத்தையும் பார்த்து பார்த்து செய்தது அனைத்தும் செழியன் தான்.
இங்கே வரவேற்பதற்கு என்றே பிரத்தியேகமான வரவேற்பு குழு இருக்க.. வந்த செலிபிரிட்டிஸ் அரசியல்வாதிகள் விவிஐபிஸ் தொழிலதிபர்கள் என்று அனைவரையும் பக்காவாக வரவேற்று அவர்களுக்கு மரியாதை கொடுத்து மணமக்களை வாழ்த்திய பிறகு அவர்களை உபசரித்து அனுப்பியது அந்த டீம்!
செந்தில்வேலன் கதிர்வேலன் குடும்பம் சற்று வாயை பிளந்து தான் இதனை பார்த்தது. ஆனால் இங்கு விளையாடுவது அனைத்தும் பணம் என்று நினைத்தாலும்.. அது மட்டுமே கிடையாது! அதனை தாண்டியும் இந்த கட்டமைப்பு அதன் செயல்பாடுகள் எல்லாத்தையும் தன் ஒற்றை கண் பார்வையிலும் ஆள்காட்டி விரலாலும் நடத்திக் கொண்டிருந்தான் செழியன்.
அருணாச்சலமும் சந்திரிகாவும் மகன் திருமணம் செய்து கொள்வான் என்று ஒரு காலத்தில் நம்பிக்கையில்லாமல் இருக்க.. இன்று வானுல கந்தர்வனென மின்னும் அழகில் ஆதித் நிகேதனும் அவனுக்கு சரி ஜோடியாக கந்தர்வ கன்னியாக அழகில் மின்னும் தீபதாராவையும் தான் விழி அகற்றாமல் பார்த்து அகமகிழ்ந்து இருந்தனர்.
அன்று அவர்களுக்கான பிரத்யேக இரவு ரெஷார்ட்டின் தனி குடில் ஒன்றில் ஏற்பாடு இருந்தது. யாரோட கசகசப்பும் இல்லாமல் மணமக்களின் பிரத்தியேக தனித்துவமான புகைப்படங்களை எடுக்க போட்டோஷூட் ஒன்றை பிரபல ஒளிப்பதிவாளர் கொண்டே ஏற்பாடு செய்திருந்தான் செழியன்.
அதீத அலங்காரங்கள் இல்லாமல் அழகான அவர்களது பேச்சு.. காதல்பாய்வை.. அன்பு.. ஆகியவற்றை அந்த கடற்கரை ஓர மணலிலும்.. பின்பு அந்த குடிலின் தோட்டத்திலும் என்று அவரும் விடாமல் எடுத்து தள்ளி இருந்தார்.
இவர்களுக்கு உதவிக்கு என்று சிலரை மட்டும் விட்டு சென்று இருந்தனர். மற்றவர்கள் அருணாச்சலத்தின் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட… எம் பி ஆக இருந்தாலும் அவரின் உபசரிப்பிலும் கவனிப்பிலும் மனம் குளிர்ந்து போயினர் தாராவின் குடும்பத்தினர்.
அனைவரும் சென்றதும் அறைக்குள் வந்தவளை "முதல்ல பாத்ரூம் போய் குளி தீப்ஸ். ஹாட் வாட்டர் டப்புல ஃபில் பண்ணி இருக்கு குளிச்சிட்டு வா ஃபீல் ஃப்ரஷ்" என்றதும் "ஆமாங்க.." என்று அலுப்பு தீர சுடுநீரில் குளித்து வந்தாள் தாரா.
குளித்து புது மலராக அறைக்குள் வந்தவள் ஆழ்ந்த மூச்சை உள் இழுக்க, மன்னவனின் அவனுக்கே உரித்தான ஆண் வாசனை அவளை கிறங்கடித்தது. அறை முழுவதும் நிசப்தம்.. அருகில் அவளை ரசித்தப்படி அவன்!
அவ்வளவு நெருக்கத்தில் ஆதித்தின் நெஞ்சு துடிப்பை அவளால் உணர முடிந்தது.
மெதுவாக அவள் தலையை உயர்த்த, ஷேவ் செய்யாத அவனின் குறுந்தாடியில் அவளின் சிவந்த உதடுகள் உரசியது. அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.
சில பல நிமிடங்கள் இவாிடமும் எந்த விதமான பேச்சும் இல்லை ஒன்றும் இல்லை! இருவரின் அருகாமையை இருவரும் உணர... ஒரு ஆழ்ந்த அழுத்தமான முத்தம் ஒன்றை அவள் நெற்றியில் இட்டு அணைவாக அணைத்திருந்தான்.
கரு மேகங்களாய் சூழ்ந்திருந்த
பயந்த கணங்கள் அனைத்தும் மறைந்து போக… அழகிய வானவில்லாய் அவர்கள் வாழ்க்கை இதோ!!
இந்த கணம் ஸ்வாசிதம்!!
காமமில்லாமல் காதலை மட்டுமே கொண்டு கணம் அது!
மோகமில்லாமல் மனது மட்டுமே ஆட்சி செய்யும் கணம் அது!!
"நம்ம வாழ்க்கை நம்ம கையில வந்துருச்சு தீப்ஸ்! இனி நீ.. நான்.. நாம்!" என்றதும் அவளும் ஆனந்தத்துடன் தலையாட்ட.. வேற எதுவும் தோன்றாமல் அவளை அனைத்த படியே அன்று உறங்கி இருந்தான் ஆதித்.
மறுநாள் செந்தில்வேலன் குடும்பம் கிளம்பி விட, இவர்கள் இருந்த அந்த மூன்று நாட்களும் சந்திரிகாவுக்கு தான் இருப்பு கொள்ளவில்லை.
மகன் மருமகளுடன் மட்டுமே அதிக நேரம் செலவழித்தார். அவர்களை கூட்டிக்கொண்டு முக்கியமானவர்கள் வீட்டுக்கு செல்வது.. பிடித்த விதமாக மருமகளுக்கு வாங்கி குவிப்பது.. வீட்டின் பாரம்பரியத்தை அவளுக்கு சொல்லிக் கொடுப்பது என்று பம்பரமாக சுழண்றார் சந்திரிகா.
"என்ன சந்திரிகா மேடம்.. உங்கள பாக்கவே முடியல! மகன் மருமகள் வந்ததும் உங்க கையிலேயே பிடிக்க முடியலையே? பிஸியோ பிஸி போல" என்று அருணாச்சலம் கேலியாக கேட்டு வைக்க..
"இத்தனை வருஷமா நீங்க உங்க அரசியலை கட்டிக்கிட்டு தானே இருந்தீங்க.. எப்பயாவது இந்த மாதிரி நான் கேட்டிருக்கேனா? உங்களுக்கு பொறாமை! வேணும்னா நீங்களும் எங்க கூட வந்து ஜாயின் பண்ணிக்க வேண்டியது தானே?" என்றார் அவரை மடக்கினார்.
மனைவியை பார்த்து இடவலமாக தலையாட்டி சிரித்தவர் "இந்த மூணு நாள் தான் உன் பையன் இங்கே! அப்புறம் ஆஸ்திரேலியா பறந்துருவான்… அதுக்கப்புறம் என்னிடம் தான் வரணும் பொண்டாட்டி நீ" என்று அவர் கலாய்த்தார்.
"அப்படியெல்லாம் தப்பா எடுத்துக்காதீங்க எம்பி சார். என்கிட்ட உங்க அரசியல காட்டதீங்க. அவன் ஆஸ்திரேலியா போனா என்ன… இன்னும் பத்து மாசத்துல எனக்கு ஆள் வந்துருவாங்க.. அவங்கள பாத்துகிட்டு நானும் ஆஸ்திரேலியாவில் இருந்துடுவேன். பாவம் நீங்க தான்! அதான் உங்களுக்கு உங்க அரசியல் அரசியல் விழுதுகள் இருக்காங்களே அவங்களோட தொங்கிக்கிட்டு இருங்க.." என்று பல வருட கோபத்தை எல்லாம் நக்கலாக பேசி கொட்டினார் சந்திரிகா.
ஹாலில் அருணாச்சலம் சந்திரிகாவும் பேசிக் கொண்டிருப்பது ஆதித்துக்கு கேட்க மெல்ல திரும்பி மனைவியை பார்த்தான்.
"ஏன் தீப்ஸ் பத்து மாசம் ஆகுமா? எனக்கு என்னமோ டவுட்டாவே இருக்கு?" என்றதும் அவள் புரியாமல் விழிக்க…
"அன்னைக்கு நைட்.. உங்க வீட்டில…" என்று அவன் கூறி கண்ணடிக்க.. அந்த நிகழ்வை நினைத்தவள் முதலில் யோசித்து.. "அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. போங்க நீங்க" என்று திட்டினாள்.
ஆனாலும் அவன் விடாமல் "எனக்கு ஒரு மகன் பிறப்பான்..! அதுவும் எட்டு மாசத்திலேயே பிறப்பான்..!" என்று சத்தமாக விசில் அடித்து பாட.. அவள் திகைத்து,
"நிக்.. வேணாம்.. உங்களை.. இந்த மாதிரி எல்லாம் சேட்டை பண்ணாதீங்க ப்ளீஸ் எனக்கு வெக்கமா இருக்கு" என்று மிரட்டினாள்.
"ஏண்டி கோபமா இருக்குறேன் சொல்லிட்டு இப்ப என்னடி சினுங்குற?" என்று அவள் முகத்தைப் பார்த்து கேட்க..
"அப்பப்பா.. எங்க ஊருக்கு வந்தாலும் வந்தீங்க.. அந்த வாலுங்களோட சேர்ந்து உங்க வாய் பெருசா ஆகிட்டு" என்று அவள் குறைப்பட..
"வாய் மட்டும் தானா.." என்றான் விஷமமாக!
அவள் "நிக்.." என்று அதிர்ந்து முகத்தை மூடிக் கொள்ள..
"ஹேய் தீப்ஸ்.. நீதான் தப்பு தப்பா திங் பண்ற டட்டி கேர்ள்" என்றவளின் கன்னத்தை கிள்ளியவன் "நான் என் அன்பை காதலை சொன்னேன் தீப்ஸ்! அது உன் மேல இன்னும் பெருசா வளரலையா என்ன?" என்றதும் கண்களை சுருக்கி அவனை முறைத்தவள் "நம்பிட்டேன்.. நம்பிட்டேன்!" என்று கோபப்பட முயன்றாலும் புன்னகை பூத்தது அவளது முகம்.
அவளை அணைத்து
க் கொண்டவன் "நாளனைக்கு ஃப்ளைட்.. நாளைக்கு உங்க வீட்டுக்கு போய்ட்டு சொல்லிட்டு கிளம்பலாம்" என்றதும் சரி என்று அவனோடு பிணைந்து கொண்டாள்.
