சண்டியரே 17
“தங்கம்…” என்ற மெல்லிய முணுமுணுப்போடு அவளைப் பார்த்தவனின் கண்களில் தான் எத்தனை எத்தனை காதல்..!!
அதனைத் தாண்டிய மெல்லிய கோபம் தன்னை விட்டு சென்றுவிட்டாயே என்று..!!
ஒற்றே ஒற்றை முத்தம் பத்தவில்லை கணவனவனுக்கு..! மொத்தமாய் அவள் வேண்டும் என்று பித்தம் கொள்ள செய்தது சிற்றிடைக்காரியின் ஸ்பரிசம் அவனை..!!
மனதோ பேயாட்டம் போட்டது அவளை ஆட் கொள்ள.. அவளின்
முறைப்பை கண்டு கோபமோ ஆத்திரமும் வரவில்லை..!
அவனுக்கு அவள் மீது ஆசையும், மோகமும் தான் பெருகியதே தவிர சிறிதும் குறையவில்லை. அவனின் காதலையும் அது கொடுத்த தாபத்தையும் அவளுக்குள் கடத்த தொடங்கினான் தன் இதழ்கள் கொண்டு..!
அவளது மென்மையான சிணுங்கலையும்.. சத்தமில்லா முணகலையும் கண்டு கொண்ட கள்வன்.. அதை குறைய விடாமல் தொடர.. இடைவிடாமல் அவன் செவிகளை அறைந்து கொண்டே இருந்தது அச்சத்தங்கள் இன்ப தாளங்களாய்!!
கொஞ்சம் முன்பிருந்த இருந்த தயக்கம் எல்லாம் முற்றிலுமாக அவனை விட்டு பறந்தோடி போக.. இன்னும் இன்னும் அவளுள் மூழ்கினான்.
உதடுகள் இந்த முறை கொஞ்சம் பலமாகவே அவள் உதடுகளில் உட்புக இந்த அழுத்தத்தால்.. ஏற்கனவே கொஞ்சம் விலகி இருந்த மயலின் தேன் சிந்தும் இளம் உதடுகள் மேலும் கொஞ்சம் விலக.... விலகிய அந்த உதடுகளில் ஒன்றை மெல்ல கவ்வி கடித்து நாக்கால் அவளது வெண் பற்களை வருடியபடி நாக்கால் பதப்படுத்த, ஆணவனின் இந்த புதிய பரிமாணத்தை கண்டு பேசற்று போனாள் பேதையவள்!!
ஒரு விரல் கொண்டு அவளது நெற்றியில் இருந்து மெல்ல கோடு இழுத்து வந்தான் கோமகன். பிறை நெற்றி.. கூர் மூக்கு.. சிவந்த அதரங்கள்.. சிறிய தாடை.. வெண்ணிற கழுத்தென பயணித்த அவனது விரல்கள்.. கழுத்தைத் தாண்டி இறங்க சற்று தயக்கம் காட்ட.. இவளோ இரு கைகளாலும் எக்ஸ் குறியீட்டு மறைத்துக் கொண்டாள் தன் மென்மையை.. பெண்மையை!!
உதட்டை உள்ளுக்குள் மடித்து சிரித்தவனின் விரல்கள் கழுத்துக்கு கீழே சற்று அழுத்தமாய் அமர்த்தலாய் அமர்ந்திருந்தது.
கீழே இறங்கி விடுமோ என்ற பயத்தோடு அவள்!!
கீழே இறக்கட்டுமா அல்லது உன் மீது இரக்கம் காட்டடுமா என்ற கேள்வியோடு அவன்!
இருவர் கண்களும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்ய.. அவள் கண்களை கூட விடாமல் கவ்வித் தின்றன ஆரூரனின் கூரிய கண்கள்!!
அந்த நேரம் அறைக் கதவு தட்டப்பட “தப்பிட்ட.. ஓடிப்போய்டு டி”என்றவன் முழங்கை வரை ஏற்றிருந்த சட்டையை நார்மலாக்கி சட்டையின் கைப் பட்டனை போட்டவாறு தன்னை ஒரு முறை அங்கிருந்த கண்ணாடியில் சரி பார்த்துக் கொண்டே கதவை திறக்கும் முன் அவளின் உடைகளை கண்களால் காட்டி சிரிக்க..
அதுவரை அவனையே பார்த்திருந்த தன் மடத்தனத்தை எண்ணி வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டவள், வேகமாக உடையை சரி செய்துக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
அந்த செவிலியரிடம் “பேஷண்ட்ட அனுப்புங்க.. அதுக்கு முன்னாடி இவங்கள பக்கத்துல இருக்குற டாக்டர் ரெஸ்ட் ரூம்ல ரெஸ்ட் எடுக்க வைங்க.. என் ஒய்ஃப் தங்கமயில் இவங்க..!” என்று அறிமுகப்படுத்தினான்.
அப்பெண்ணும் “சரி டாக்டர்” என்றவள், “வாங்க மேடம்” என்று பவ்யமாக தங்கமயிலை அழைத்து கை தாங்கலாக அழைத்துச் செல்ல “கொஞ்ச நேரம் படுத்து உறங்கு மயிலு.. டூட்டி முடிச்சிட்டு போகும் போது கூட்டிட்டு போறேன்” என்றான்.
அந்த ஹாஸ்பிடலின் பெஸ்ட் கார்டியாலஜிஸ்ட் அவனுக்கு இருக்கும் சலுகைகள் எல்லாம் டாப் க்ளாஸ். தங்கமயில் அவனின் மனைவி என்று அச்சலுகைகளும் அவளுக்கு கிடைக்க.. ஏசி ரூமில் அவள் தங்க வைக்கப்பட.. கூடவே அவளுக்கு பழரசம் வேறு பவ்யமாய் கொடுக்க ராஜ உபச்சாரம் தான்..!
“மேம்.. இத குடிச்சிட்டு சார் உங்கள ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க” என்றாள் செவிலியர்.
என்னதான் அவள் மேல் கோபம் கொண்டு திட்டினாலும் சீண்டினாலும் தீண்டினாலும் உள்ளுக்குள் இருக்கும் அந்த அன்பு பாசம் என்றும் மாறாத அல்லவா? உதட்டில் முகிழ்த்த ரகசிய சிரிப்போடு அதனை குடித்தவள் படுத்ததும் உறங்கி விட்டாள்.
வெயிலில் வந்த களைப்பு.. கீழே விழுந்த அதிர்ச்சி.. கூடவே மாமனின் இந்த கோப தாபம் எல்லாம் ஒன்று சேர அவளை ஆழ்ந்த தூக்கத்திற்குள் ஆழ்த்தியது…!!
ஓபி முடித்து வந்து ஆரூரன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அவனின் தங்கத்தின் இமை தட்டாமல் பார்த்தான். அவளின் அங்கங்கள் வேண்டுமானால் இன்று பருவ செழுமையில் இருக்கலாம்.. ஆனால் முகத்தில் தவழும் அந்த குழந்தைத்தனம் இன்னும் அவனுக்கு பழைய தங்கத்தை தான் ஞாபகப்படுத்தியது.
“என் தங்கம்..” என்று கொஞ்சியவன், அவளின் முகத்தில் புரண்ட முடி கற்றைகளை காதோரம் ஒதுக்கி காது மடலில் மெல்லிய முத்தம் கொடுத்தான்.
“ம்ம்ம்.. மாமா…” என்ற சிணுங்கல் அவனுக்கு இதமாய் இருந்தது.
அவள் மனதில் அவன் மீதான கோபம் மட்டும் தான் இருக்கிறது. அதை தாண்டிய வெறுப்பு இல்லை அதற்கு இந்த ஒற்றைச் சிணுங்கலே உதாரணம்..!!
நேரமாவதை உணர்ந்தவன் “மயிலு எழுந்திரு போகலாம் வீட்டுக்கு.. நேரம் ஆயிட்டு” என்றதும்,
“இன்னும் கொஞ்ச நேரம் மாமா.. தூக்கம் தூக்கமா வருது” என்று தூக்கத்தில் உளறியவளை கண்டீ சிரித்தான்.
“மயிலு.. இப்படி தூங்கிட்டு இருந்தேனா உன்னை தூக்கிட்டு தான் போகணும் போலையே?” என்று அவனை சீண்ட..
“தூக்கிக்கோங்க மாமா..” என்று இரு கைகளையும் அவன் புறமாய் நீட்டினாள் இன்னும் கனவு என்ற தாக்கத்தில் உறக்கத்தின் பிடியில் இருந்தவள்.
“எது தூக்கவா? அதுவும் ஹாஸ்பிடல்ல வைத்தா?” என்று சற்று அதிர்ந்து தான் போனான்.
இதுவே வெளியிடம் என்றால் அவனுக்கு கவலை இல்லை. இந்நேரம் தூங்கி இருந்திருப்பான். மெல்ல அவள் கன்னத்தில் தட்டு எழுப்ப.. அவள் மிரண்டு விழிக்க.. “உன்னை ஒன்னும் ஹனிமூனுக்கு கூட்டிட்டு வரல.. தூக்கிட்டு வரல.. ஹாஸ்பிடல் தான் இருக்கோம் கிளம்ப வீட்டுக்கு போகலாம்” என்றவனின் கிண்டலை கண்டும் காணாமல் மெல்ல எழுந்தவளை அழைத்துக் கொண்டு இப்பொழுது காரில் வந்தான். அதற்குள் காரை வரவழைத்திருந்தான்.
அவள் வீட்டிற்கு கொண்டு வந்து விட ஆச்சரியமாக அவனை பார்த்ததும் “என்னமோ நான் உன்னை விரட்டி விட்ட மாதிரி நானே கூட்டிட்டு போவேன்னு பாக்காத.. நீயா தானே உங்கொப்பன் கூட போன நீயாவே வந்து சேரு” என்றான் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல்..
அப்போதுதான் தியாகேசனின் வண்டி அருகில் இருப்பதை பார்த்தவன் “ஓ மாமனார் உள்ள தான் இருக்காரோ.. அப்போ அப்படியே போகக்கூடாதே.. மாமனார் கண்டு விட்டு தானே போகணும்” என்று நினைத்தவன் மயில் இறங்கப் போவதை கண்டு “இறங்காத.. இறங்காத..!” என்று கத்தினான்.
அவள் என்ன என்று அதிர்ந்து அவனை பார்க்க முதலில் தான் இறங்கியவன், சுற்றி வந்து அவள் பக்க கதவை திறந்ததும் “இப்ப இறங்கு..” என்றான்.
அவள் மெல்ல இறங்க சற்று என்று கைகளில் தூக்கிக் கொண்டான். இதை மயில் எதிர்பார்க்காமல் “என்ன மாமா செய்ற..கீழே இறக்கி விடுங்க” என்று அலற..
“ஏய் உனக்கு கால் அடிபட்டு இருக்கு எப்படியும் நீ நடந்து படி எல்லாம் ஏறி வருவது கஷ்டம். கட்டு வேற போட்டு இருக்கு.. இங்கே நடந்த அழுக்கா இருக்கும் நீ செருப்பு வேற போடல..” என்றதும் அவனை முறைத்தவள் “இதெல்லாம் ஹாஸ்பிடல்ல உனக்கு தெரியலையா மாமா?” என்பது போல பார்த்தாள்.
அவள் பார்வை புரிந்தும் அதனை போ போ என்று தட்டி விட்டவன் வேண்டுமென்று “மாமோய்.. ஏ.. மாமோய்..” என்று சத்தமாக உள்ளே நுழைந்தான்.
இன்னும் கமலாம்பிகை இங்கு வந்திருக்கவில்லை, மகள் கோபித்துக் கொண்டு போனது அவருக்கு தாங்க முடியாத ஆற்றாமையை கொடுத்திருந்தது. புருஷன் தான் மதிக்கட்டு திரிகிறான் என்றால் மகளும் இப்படி நல்வாழ்வை கெடுத்து கொள்கிறாளே என்று..!
மயூரன் பத்தாம் பொது தேர்வில் அதிகம் மதிப்பெண்கள் எடுத்தவன் ஆரூரனிடம் “மாமா நானும் உங்களை போல டாக்டர் ஆகணும்” என்க, அவனை திருவாரூரில் ஒரு புகழ்பெற்ற பள்ளியில் சேர்த்திருந்தான் ஆரூரன். அதனால் அவனும் அம்மாவோடவே தங்கிக் கொள்ள மகளும் அப்பாவும் மட்டுமே அவ்வீட்டில்..
விஜயராகவன் கூட மகளை அங்கே செல்லுமாறு தான் பணித்தார். “உன் புருஷன் ஒரு கிறுக்கு புடிச்ச பய மா.. ஏதாவது செய்யப் போறான் பேத்தி மட்டும் தனியா இருக்கா” என்று கவலை கொண்டார்.
“அதெல்லாம் அவ தியாகேஷன் மகளாய் இருக்கும்போது பா.. இப்போ ஆரூரன் பொண்டாட்டி மேல கைய வச்சுற முடியுமா? என்ன சும்மா வம்புக்கு சிலுப்பிக்கிட்டு திரியுறாரு கொஞ்ச நாள்ல சரி ஆயிடுவாரு தனியா கடந்த அவதிப்படட்டும்.. விடுங்க..!” என்று அமைதியாகிவிட்டார்.
அவரும் எவ்வளவு நாள்தான் பொறுத்து போவார்?? விடு கழுதய.. என்று விட்டு விட்டார்.
மகளைத் தூக்கிக்கொண்டு ஆரூரன் உள்ளே வருவதை கண்டவர் “என்ன ஆச்சு.. என்னாச்சு என் பொண்ணுக்கு? என்னடா பண்ண..?” என்று அவர் கொதிக்க..
“சும்மா எப்ப பாத்தாலும் கத்துக்கிட்டே இருக்காதீக.. பொண்ணு போனவ இன்னும் வரலையே எங்கேயாவது கவலை இருக்கா உமக்கு? இதே அக்காவா இருந்தா சும்மா விட்டு இருக்குமா? ரோடு கிராஸ் பண்ணா இவளுக்கு பயம்னு தெரியும் தானே? அப்புறம் எதுக்கு இவட்டெல்லாம் வண்டியை கொடுக்குறீக.. ரோடு கிராஸ் பண்ண கீழே விழுந்து கால ஒடச்சிட்டு வந்து இருக்கா.. ஏதோ நான் பார்த்ததினால் பரவால்ல.. இதை தனியா ரோட்ல கடந்தா?” என்று அவன் பொரிய..
“அய்யய்யோ மயிலு.. என்னாச்சு அம்மா?” என்று பதறினார்.
“அப்பா.. ஒன்னுமில்ல..” என்ற ஆரம்பிக்கும் முன்..
“வாய மூடு டி.. சும்மா ஏதாவது பேசிக்கிட்டே இருந்தா வர கோவத்துக்கு ரெண்டு அப்பு அப்பி படுவேன் பாரத்துக்கோ..” என்று வேண்டுமென்றே அவள் வாயை திறக்க விடமால் இவன் பேச இன்னும் பதறிப் போனார் தியாகேசன். மகளுக்கு கால் உடைந்தே விட்டது என்று எண்ணி…!!
ஏனென்றால் ஆருடனின் பில்டப் அப்படி இருக்க.. அவளது அறையில் அவளை விட்டவன் “போய் கொஞ்சம் சுடத்தண்ணி எடுத்துட்டு வாரும்” என்றான்.
எதற்கு சுடுதண்ணி எடுத்துட்டு வர சொல்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை.
தியாகேசன் அவன் மருத்துவர் என்பதால் எதற்கோ கேட்கிறான் என்று அவசரமாக தமக்கு தெரிந்த சமையல் கலைகளையெல்லாம் காட்டி சுடுதண்ணீர் வைத்து எடுத்து வரும்போது மகளின் அறை சாத்தி இருந்தது.
“என்ன நம்மள சுடுதண்ணி எடுத்துட்டு வரசொல்லிட்டு இந்த பக்கம் கதவை சாத்திட்டான்” என்று திகைத்தாலும் கையில் பாத்திரத்தோடு காத்திருக்க கதவு திறக்கப்படவில்லை.
“ஆரம்பிச்சுட்டான் இவன்.. இவனை..” என்று பல்லை கடித்த தியாகேசன் கையில் இருந்த சுடுநீருக்கு இணையாக அவரும் கொதித்துக் கொண்டுதான் இருந்தார்.
கொஞ்சம் கூட அதனை சட்டை செய்யாமல் அவள் கால்களுக்கு மெல்ல மசாஜ் கொடுத்தவன், “இப்படித்தான் டெய்லி மசாஜ் கொடுக்கணும். மருந்து ஏற்கனவே காலையில அப்ளை பண்ணிட்டதால இன்னொரு தடவை பண்ணல நைட் பண்ணிட்டா போதும். உங்க நொப்பன சுடுதண்ணி கொண்டு வந்தாருனா வெதுவெதுப்பான தண்ணில கொஞ்ச நேரம் கால வை.. என்ன நான் சொல்லுறது புரியுதா?” என்று கேட்க..
அவன் கைகள் செய்த மாயத்தில் தன்னை மறந்து கண்கள் மூடி லயித்திருந்தவள் ம்ம்ம் என்று முணக..
“என்ன இவ முணகுறா..” என்று அவளை நிமிர்ந்து பார்க்க.. அவளின் கண்கள் சொக்கிய நிலை கண்டவனுள் உள்ளுக்குள் ஒளிந்திருந்த கள்ளன் வெளிப்பட மெல்ல அறையை தாளிட்டு வந்தான்.
அவளை ஓரக்கண்ணால் கண்டு கொண்டே.. அவள் பாதத்தையும்.. அவளின் பிஞ்சு பாத விரல்களையும் மெல்ல முத்தமிட்டான்.
“ம்மா..மாமா..” என்று மிழற்றினாள் மாது. அவனுடன் வாழ்ந்த அந்த பத்து நாள் அவள் கண்முன் நிழலாட.. அவளின் இளமையும் அவனின் கரங்களில் இதழ்களில் சதிராட.. கணவன் கைகளில் குழைந்து உருகினாள் மாது.
அவள் எதிர் பார்க்காத விதத்தில் அவளது முகத்தை பிடித்து அவனுக்கு அருகே திருப்பி.. பட்டு போன்ற மிருதுவான அவளது உதட்டில் தன் உதட்டை வைத்து அழுத்தி ஒரு முத்தம் கொடுத்தவன், “தங்கம்.. தங்கம்..” என்று அவள் அங்கங்களில் இதழ்களால் நீண்ட..
அவளது விலகிய முந்தாணையும் அதில் தெரிந்த அவளது இளமையின் செழுமைகளும்.. முழங்கால் வரை ஏறிய புடவையில் வெளிவந்த அவளது தந்த கால்களும்.. இடையில் மாணிக்க கல்லாய் ஜொலித்த நாபிக் குழியும் அவனது உரிமையை நிலைநாட்ட வா... என்றழைக்க.. அவளது மீதே விழுந்தவனின் கை அவளது மெல்லிடையை இறுக்கி பற்றி கொண்டது. அவள் என்ன நடந்தது என்று அறியும் முன் அவனது ஆதிக்கத்திற்குள் வந்திருந்தாள்.
மெல்ல குனிந்து அவளது கழுத்து வளைவில் அவன் முகம் புதைத்து அங்கே நாவினால் கோலம் போட “மாமா.. கதவு தொறந்திருக்கு.. அப்பா வெளியே இருக்கார்” என்று பதறினாள்.
“கதவ மூடிட்டேன். உன் அப்பா தேவுடு காக்கட்டும்.. என்னை மட்டும் பதினைந்து நாளாக காக்க வைச்சுல..” என்றவன் அவளுள் மூழ்க..
“மாமா.. அதுக்குன்னு.. பட்ட பகலலேயா?” என்று கேட்டவளுக்கு அப்பா என்ற நினைப்பாரோ என்ற பதைப்பு..!
அவள் முகத்தை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தவன்.. தன் முகத்தைக் குனிந்து அவள் மாணிக்க பரள் மீது 'பச் ' சென சத்தம் வர மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தான்.
இப்போதும் அவளிடம் முன்னிருந்த சிணுங்கல் இல்லை. அவனின் தாபமும் கோபமும் இன்னும் அதிகமாகி அவனைத் தூண்ட.. மீண்டும் அவளது தடாகத்தில் தன் உதடுகளைப் பதித்து முத்தம் கொடுத்தவன், இந்த முறை தன் உதடுகளை உடனே எடுத்துக் கொள்ளவில்லை. அத்தாரகையின் தாடகத்தில் மூழ்கி முத்தெடுப்பவன் போல உதடுகளை சற்று அழுத்தி அழுத்தி முத்தம் கொண்டிருந்தான். அவனின் கோபத்தை.. அவளின் நிதானத்தை சோதிக்கும் பொருட்டு!!
அப்போதும் சிலிர்க்காத அவள் உடம்பு அவனின் நுனி நாக்கின் தீண்டலில் சட்டென சிலிர்த்தது. ஆனால் கள்ளனுக்கு ஏற்றுக் கள்ளியாக அதை மறைத்துக் கொண்டாள். அவன் முகத்தை அவள் முகத்துக்கு பக்கத்தில் கொண்டு போனவன், கனிந்து சிவந்த அவளின் இடது கன்னத்தில் தன் உதட்டைப் பதித்து அழுத்தி முத்தம் கொடுத்தான். அவளின் அந்த சிறு சிலிர்ப்பை தொடர்விக்க.. முற்றும் வீழ்ந்தாள் அவனுள்..!!
இருவர் உடல்களும் காமனின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. மோக வேட்கையின் தவிப்பில் இருவரும் ஒருவரை ஒருவர் கொன்று தின்று விடும் வெறியில் இருந்தனர்.
ஆனால்.. அவன் வெளிப்படையாக..
இவளோ உள்ளுக்குள்!!
மாமனை வெறுப்பேற்ற என்று ஆரம்பித்த அவனது சேட்டை.. அவளின் செல்ல சிணுங்கலில் வேட்கையாக மாற.. இப்பொழுது முழுவதுமாக அவளுள் மூழ்கி முத்தெடுத்தே அவளை விட்டான் ஆரூரன்.
“நெனச்சது நடத்தி முடிச்சிட்ட.. இல்ல மாமா..” என்று அவனுக்கு புறமுதுகு காட்டி அவள் படுத்து இருக்க..
அவளை தன் புறம் திரும்பியவன் “இது மட்டும் தான் என் தேவைன்னா உன்ன 15 நாளா உன் அப்பன் வீட்டுல விட்டு வச்சிருந்து இருக்க மாட்டேன் டி” என்றவனின் கண்களில் அத்தனை கூர்மை. அதைத் தாண்டி இன்னும் என்னை புரிந்து நீ கொள்ளவில்லையா என்று ஏக்கம்..!
மயிலுக்கு என்ன முடிவெடுப்பது என்பது தெரியவே இல்லை..! ஒரு பக்கம் மனம் அவனை வேண்டுகிறது.. மறுபக்கமும் இல்லை இவன் எனக்கானவன் இல்லை ஏற்கனவே ஒரு பெண்ணுடன் வாழ்ந்து ஒரு குழந்தையும் பெற்றவன் என்று முரண்டுகிறது..!!
கூடவே ராகவியை பாராமலும் அவளால் இருக்க முடியவில்லை. ஆரூரன் இல்லாத சமயத்தில் வேம்பை விட்டு தினமும் தூக்கிவர சொல்லி தங்கள் வீட்டில் வைத்திருந்த கொஞ்சி உணவு ஊட்டி அவளோடு விளையாண்டு அதன்பின்னரே அனுப்புவாள்.
ஆனால் அவனுக்கு அனைத்தும் தெரியும் என்பதை பேதை மறந்தாள்.
அவளின் முகத்தை வைத்து அகத்தைப் படைத்தவன் “ரொம்ப நாளு எல்லாம் விட்டு வைத்திருக்க மாட்டேன். மாமன்கிட்ட பொறுமை ஸ்டாக் இல்ல.. நானும் உன் பொண்ணும் ரொம்ப ஏங்கி போயிருக்கும் டி.. அவளையாவது தெரியாம கூப்பிட்டு வச்சு கொஞ்சிக்கிற.. ஆனா அந்த மாமனை மட்டும் விட்டுட்டு இல்ல..” என்று ஏக்கம் நிறைந்த வார்த்தைகள் அவளை குத்தி கிழித்தது என்னவோ உண்மை..!
“அவ குழந்தை மாமா..” என்று திக்கத்திணறி அவள் கூற..
“நானும் தான்..” என்று அவளுக்கு மட்டுமேயான தன் நிலையை கண்களால் காட்ட வெட்கம் மிக “என்ன பேச்சு பேசுறீங்க?” என்று அவனின் புஜத்தில் அடித்தாள் செல்லமாக மயில்.
அவளின் கையை பற்றி தன் இதயத்தின் அருகில் வைத்தவன் “இந்த சத்தம் உனக்கு கேட்கலையா மயிலு? உன்னால உணர முடியலையா? அது உன் பேரு மட்டும் தான் சொல்லுது.. பல வருஷமா..” என்றவனின் காதல் வார்த்தைகளில் கட்டுண்டு போனவள், மாமா என்று கதறி அவனை தன்னோடு இறுக்கி கட்டிக் கொண்டாள்.
சிறிது நேரம் அவளை அழவிட்டவன் “நேரமாயிருச்சு மயிலு..” என்ற கூறியும் அவள் விலகாமல் இருக்க, மெல்ல சிரித்தவன், அவள் உச்சியில் உதடு ஒற்றை எடுத்து “உன் அப்பா வெளியில வெயிட் பண்றார்..” என்றதும் அவள் படார் என்று அவனிடமிருந்து விலக.. வாய் விட்டு வெடித்து சிரித்தவன் “சீக்கிரம் வந்து சேரு டி மாமன் கிட்ட” என்று உடைகளை மாட்டிக்கொண்டு வெளியே வர…
சுடுதண்ணீர் ஆறி போயிருக்க ஆனால் அதற்கு பதிலாக கொதித்து இருந்தது என்னவோ தியாகேசன் தான்.
“என்ன வேலை பாக்கடா என் வீட்டுக்கு வந்த?” என்று அவர் மாப்பிள்ளை என்றும் பாராமல் பேச..
“மாமியார் வீட்டுக்கு மாப்பிள்ளை எதுக்கு வருவான்? அதுக்குத்தான் நானும் வந்தேன்..!” என்று கண்ணடித்தவன், “ஏன் நீர் வரலையா.. கல்யாணம் ஆன புதுசுல..” என்று அவருக்கு திருப்பி கொடுத்தவன் “பை மாமோய்.. நாளைக்கு வரேன்.. வரட்டா..” என்று அவர் உன் கன்னத்தில் செல்லமாக தட்ட.. அவரோ தட்டி விட்டு “தொடாத டா..!” என்றார்.
“எதே.. தொடக்கூடாதா?” என்றவன் அவரை கட்டி அணைத்து விடுவித்தவன்..
“நாளைக்கு வீட்டுக்கு வா மாமோய்.. என் மாமனார் மாதிரி கிடையாது உம்ம மாமனார்.. விரட்டி எல்லாம் விடமாட்டார்..” என்று குறும்பு புன்னகை கூத்தாட சொல்லி சென்னவனை கண்டு கொதித்து விட்டார்.
“ச்சீ.. நாதாரி பய குளிக்காம என்ன தொட்டுட்டு வேற போறான்.. முதல்ல நான் போய் குளிக்கணும்” என்று கொல்லை பக்கம் இருக்கும் கிணற்றை நோக்கி ஓடினார் தியாககேசன்.
அன்றிரவு ஆரூரனுக்கு தூக்கமே வரவில்லை. அவனோ அவளின் எழிலோவிய அழகு தந்த மயக்கித்தல் கிறங்கி கிடந்தான்.
அவனும் கண்களை மூடி தூங்கத்தான் முயன்றான். ஆனால் அவளின் நினைவுகள் அதிகமாகி அவன் மனதைக் கொஞ்சம் வதைத்தது. அவளின் அழகு முகம் அடிக்கடி வந்து அவனை ஏங்கச் செய்தது. அவளின் பிரிவு அவனை தகிக்க வைத்தது. அவளின்றி பஞ்சணை வஞ்சம் செய்தது..!!
தூக்கம் பிடிக்காமல் கொஞ்ச நேரம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். இடையிடையே பெருமூச்சுக்களை வெளியேற்றிக் கொண்டிருந்தான். அவளின் நினைவில் இருந்து அவன் மீள்வது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கப் போவதில்லை என்பதை அவன் நன்றாகவே உணர்ந்தான்.
"அவள போய் எதுக்கு இந்த அளவுக்கு நேசிச்சு தொலைச்சோம்.. எனக்கும் இருக்கும் காதலில் ஒரு சிறிதளவேனும் அவளுக்கு இல்லை.. ஏன் அதன் பிரதிபலிப்பு கூட கொஞ்சமும் இல்லை. என்ன காதலுடா இது.. மனுஷனை வதைக்குது.. உயிரோட புதைக்குது!!" என்ற மனதுக்குள்ளேயே வசைப்பாடி கொண்டான்.
எவ்வளவு கோபம் வருத்தம் ஆற்றாமை அவள் மீது இருந்தாலும் அதையும் தாண்டி அவள் மீதான காதலே ஜெயித்தது. அதனோடு கூடிய மோகமும் அவனைத் பித்தாக்கியது!! தாபம் மேலேறி அனலேற்றியது!! அதிலும் அவளாய் நேற்று அரவணைத்ததை நினைத்தவனுக்கு அவளுடனான நெருக்கமான ஞாபகங்கள் கண்களுக்குள் உலா போயின..!
அவளின் நினைப்போடு கண்கள் மூடியவனுக்கோ காலங்கள் பின்னே நகர்ந்தன
