கண்ணம்மா 16
அனைவருமே அதிர்ந்து நோக்க.. அழகு மீனாள் யாரென்று வியப்புடன் பார்க்க.. அது ஆதித் இல்லை.. வெற்றிவேல்!!
மஞ்சரியின் முன் வெற்றிவேல். எல்லோரும் சற்று கலக்கமாகத்தான் இருவரையும் பார்த்தனர். எதுவும் எக்கத்தப்பாக கேட்டு விடுவானோ என்று அன்னையர் இருவருக்கும் சற்று பயம். இருவரும் தவிப்போடு ஆதித்தை பார்க்க.. அவன் கண்களாலேயே அவர்களை சமாதானப்படுத்தியவன், மற்றவர்களை விட அவன் கூலாக தான் என்றான்.
மஞ்சரி முன்னே நின்றான் வெற்றிவேல் "இங்கே பாரு மஞ்சரி.. எனக்கு இந்த வீட்டுக்கு மருமவன் ஆகணும். ஏற்கனவே தீபுவ தான் எனக்கு பேசி இருந்தாய்ங்க.. ம்ப்ச் அந்த பேச்சு இப்ப வேணாம். எனக்கு உன்னைய கட்டிக்க விருப்பம்! உனக்கு விருப்பமா?" என்றான் கராறாக!
"என்ன இவேன் இப்படி அதிரடியாக கேட்கிறியான்?" என்று அழகு மீனாள் பதறி "டேய் வெற்றி… இப்படியாவ பொம்பள புள்ள பார்த்து கேப்ப.. பார்த்து பக்குவமாக கேட்கணும்டா. இருடா.. உனக்கு பேச தெரியல இரு நான் வந்து பேசுறேன்" என்று அவர் வர அவரை அங்கே நில் என்பதைப் போல கையை அமர்த்தினான் வெற்றி.
அவனை பயத்தோடு நிமிர்ந்து பார்த்தாள் மஞ்சரி. இதுவரை அக்காவின் வருங்கால கணவனாக அறிமுகப்படுத்தப்பட்டவன், இன்று திடீரென்று உனக்கு கணவன் ஆகிறேன் என்று கேட்டதும் அவளுக்கு படப்பட என்று வந்தது.
"சொல்லு? உனக்கு விருப்பமா இல்லையா?" என்றான் அழுத்தமாக குரலில்.
அவள் இன்னும் பயப்பட அவள் அருகே வந்து அவள் கையை பற்றிக் கொண்டாள் வர்ஷினி.
இரட்டையர்களுக்கான அந்த இன்சென்ட் பீலிங் அவர்களுக்கு இருக்கும் அல்லவா? ஒருவரை ஒருவர் ஆதரவாக கருவறையில் இருந்தே பற்றி கொண்டவர்கள் அல்லவா?
வர்ஷினியின் அருகாமையில் சற்று தைரியம் வரப்பெற்றவள் நிமிர்ந்து வெற்றிவேலை பார்த்தாள்.
"நாங்க அக்கோவோட செல்லம் தான். அக்காவோட டிரஸ்.. அக்காவோட மேக்கப் திங்ஸ்.. அக்காவோட மத்ததெல்லாம் ஓகே மாமா.. ஆனா.. அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையுமா..?" என்று அவள் முடிக்காமல் வெற்றிவேலை பாவமாக பார்க்க அதிலேயே புரிந்தது அவளின் மனம் அவனுக்கு..
"சாரி மாமா.." என்ற வர்ஷினி "இவ்வளவு நாளா உங்களை நாங்க அப்படி பார்த்துட்டு சட்டுன்னு.. இப்படி பார்க்க.." எங்கே அடுத்து தன்னை கேட்டு விடுவானோ என்ற பயத்தில் அவளும் சொல்லிவிட.. இருவரின் மனநிலையும் நன்கு புரிந்து கொண்ட வெற்றிவேல் ஒரு விரக்தி சிரிப்புடன் திரும்பிக் கொண்டான்.
"ப்ரோ.." என்று அவன் தோளில் கை போட்ட ஆதித்தோ "நமக்கு ஒன்னு தட்டி போனதுன்னா இதைவிட நல்லதா கடவுள் நமக்கு கொடுப்பாருனு நாம நினைச்சுக்கணும் ப்ரோ.." என்றதும் வெற்றிவேல் அவனை முறைக்க..
"உண்மையிலேயே நீங்கள் இவ்வளவு பீல் பண்ற அளவுக்கு தீப்ஸ் எல்லாம் வொர்த்தே இல்லை ப்ரோ.. அனுபவஸ்தன் சொல்றேன் கேளு ப்ரோ.." என்று அவன் காதில் கிசுகிசுக்க..
"போயா போ.. கல்யாணம் பண்ணிட்டு இப்போ வந்து என்கிட்ட சமாதானப்படுத்துறியான்" என்று அவனை தள்ளி விட்டாலும் அதில் சிரிப்பு இருக்க..
"ஆன்டீஸ்.. சாப்பாடு எடுத்து வைங்க ரொம்ப நேரமா பேசிப்பேசி எனக்கு ரொம்ப பசிக்குது" என்றதும் அனைவரையும் அழைத்துக் கொண்டு உணவு பரிமாறினர்.
வெற்றிவேல் எதிரில் அமர்ந்திருந்த விசாகாவோ அவனை பாவமாக பார்த்தாள். அந்த சிறு பெண்ணின் மனதில் அவனின் தோல்வி ஏதோ பெரும் காதல் தோல்வியாக பதிய அவனுக்காக மனம் இறங்கியது.
அருகில் இருந்த வர்ஷினியை சுரண்டி "நம்ம வெற்றி மாமாவ பார்க்கவே பாவமா இருக்குடி.." என்றாள்.
"ஏய்.. வாய மூடுடி சின்ன குட்டி. இப்பதான் எல்லாம் அடங்கி இருக்கு திரும்பவும் நீ எதையாவது பேசி எங்க ரெண்டு பேருல யாராவது ஒருத்தர புடிச்சு அவருக்கு கட்டி வச்சிருவாய்ங்க போல.. மூடிட்டு சாப்பிடு.." என்று அடிக்குரலில் திட்டினாள்.
அவன் அடர்ந்த மீசைக்கு அடியில் அவனது சோகம் அமிழ்ந்து விட்டதாக எண்ணிய விசாகா மீண்டும் வர்ஷினியின் கையை சுரண்டி "இல்லடி வர்சு.. மாமாவ பார்க்கவே பாவமா இருக்கு டி" என்றாள்.
"ம்ம்ம்.. அவ்வளவு பாவம் பாக்குறவ நீயே கட்டிக்கோ!" என்றாள். ஆனால் அவ்வார்த்தைகள் அந்த பிஞ்சு மனதில் பதியப்போவதை அறியாமல்..
இப்படியாக காலை நேரம் போக அடுத்து என்ன செய்வது? எப்பொழுது திருமணம்? என்பது போன்ற பேச்சுக்கள் அங்கே நடந்தது.
அருணாச்சலத்திடம் யார் விவரம் சொல்வது என்று போன்ற விவாதங்கள் அங்கே நடந்து கொண்டு இருந்தன.
"அப்பா கிட்ட பேசி நாளைக்கு அவங்களை வர சொல்றேன் அங்கிள். அவங்க வந்து பேசுறது தானே வழக்கம். கூடவே வேந்தன் அப்புறம் கதிர் புரோக் கிட்டேயும் நீங்க பேசிடுங்க.. நானும் என் சார்பா பேசிடுறேன்" என்றவன் போனை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக அம்மாவுக்கு அழைக்க சென்றான்.
அழகுமீனாள் சோகமாக அமர்ந்திருக்க அவரை "இங்கே வாங்க மதினி" என்று வைதேகி மரகதவல்லியும் அழைத்து தங்கள் அருகில் அமர வைத்துக் கொண்டு மெல்ல நிதர்சனத்தை புரிய வைக்க முயன்று கொண்டிருந்தனர்.
இரட்டியர்கள் இருவரும் தாராவை வைத்து கேலி கிண்டல் பேசிக்கொண்டிருக்க.. விசாகாவின் பார்வையோ வெற்றிவேலையே வட்டமடித்தது.
இதில் யாருடனும் கலந்து கொள்ள பிடிக்காமல் மெல்ல வாசலுக்கு வந்து நின்று விட்டான் வெற்றிவேல்.
என்னதான் செய்யறது என்று புரியவில்லை அவனுக்கு. புன்னகை முகமாக அங்கு இருந்தாலும் தீபுவின் கல்யாணத்தை ஏற்றுக் கொண்டாலும்.. மஞ்சரி வர்ஷினி மனதில் இருப்பதை புரிந்து கொண்டாலும்.. அவனுக்கே அவனுக்காய் ஒரு வலி மனதில் இருக்கத்தான் செய்தது!
'அப்படி என்ன நாம் தாழ்ந்து விட்டோம் ஒருத்திக்கு கூட நம்மளை பிடிக்கவில்லையே?' என்று சிறு சோர்வு!
காலம் எல்லாத்தையும் மாற்றுவது போல இதனையும் ஆற்றும் என்று அவன் ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தவன் தீப்பெட்டியை தேட…
"மாமா.. இந்தாய்ங்க.. வத்திப்பெட்டி!" என்று தீப்பெட்டியை நீட்டினாள் விசாகா.
அவளை சிரிப்புடன் பார்த்து "தாங்க்ஸ் குட்டி!" என்று தீப்பெட்டியை வாங்கிக் கொண்டவன் அதை பற்ற வைத்துவிட்டு ஆழ்ந்து இழுத்து வெளிவிட.. ஏதோ சற்று மனது நிம்மதியாக இருந்தது போல உணர்ந்தவன், ஏதோ குறுப்குறுப்பில் திரும்பி பார்க்க அங்கு அவனையே பார்த்தபடி நின்று இருந்தாள் விசாகா.
"ஓடு ஓடு இங்கன நிக்காத.. இதெல்லாம் பொண்ணுங்களுக்கு பிடிக்காது.. இந்தா பிடி" என்று தீப்பெட்டியை கொடுக்க.. அதை வாங்கியவள் "எனக்கு பிடிக்கும் மாமா" என்றாள் மெல்லிய குரலில்.
அவளை விசித்திரமாக பார்த்தவன் மீண்டும் ஒரு முறை சிகரெட்டை இழுத்து அவளுக்கு எதிர்ப்புறம் விட்டவன், இன்னும் அவள் அருகேயே நிற்பதை கண்டவன் 'இவ ஏன் இங்கனவே நிற்கிறா?' என்று யோசனையாக பார்த்தான்.
"மாமா.. அது.." என்றவளிடம் என்ன என்று அவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க…
"நீங்க வேணா.." ஒரு கையில் ஏதோ கூட்டி பார்த்து கணக்கு பார்த்தவள் "ஒரு அஞ்சு வருஷம் வெயிட் பண்றீங்களா?" என்று கேட்க..
"எதுக்கு குட்டி?" என்று அவன் சிரிப்புடன் கேட்க..
"என்னைய கல்யாணம் பண்ணிக்க தான் மாமா!" என்றதும் அரண்டு விட்டான் வெற்றி.
"என்னடி சொல்லுற.."
"உங்க கண்ணுக்கு மாமா பொண்ணா நான் தெரியவே இல்லையா மாமா.. அந்த இரட்டைகிளவிகள் கிட்ட மட்டும் கேட்டீய்ங்க.. என்கிட்ட உனக்கு விருப்பமானு ஏன் கேட்கவே இல்ல நீங்க?" என்று உரிமையோடு சண்டை போட்டாள் விசாகா.
அவளின் இந்த உரிமையான பேச்சில் மனம் மெல்ல சமாதானம் அடைந்தாலும்.. "இல்லை.. இல்லை இவள் சின்ன பெண்! இவளுக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் அதிகம்" என்று தனக்குத்தானே உரு போட்டுக் கொண்டான். அவளை முறைத்து பார்த்து "உளறாம உள்ள போ குட்டி!" என்று உறுமினான்.
"இப்பதான் பிளஸ் டூ படிக்கிறேன் அடுத்து யூஜி மூணு வருஷம்.. பிஜி ரெண்டு வருஷம் அஞ்சு வருஷம் ஆகும் இல்ல மாமா.." என்றவள் வருங்கால கணக்கு போட..
அவனோ வாயிலிருந்த சிகரெட் புகையை அப்படியே மறந்து வைத்திருக்க.. அது உள்ள நுழைய இருமிக் கொண்டே அவளை திகைத்துப் பார்த்தான் வெற்றி வேல்!!
"மாமா.. எனக்கு பிடிச்சிருக்கு.. உங்களை தான் பிடிச்சிருக்கு! கட்டுனா உங்களை தான் கட்டுவேன் நீங்களும் வேற யாரையும் கட்டக்கூடாது! சரியா?" என்று மிரட்டியபடி உள்ளே ஓடியவளை விக்கித்து பார்த்தான் வெற்றிவேல்.
ரைட்டு!! அடுத்த ஒரு பஞ்சாயத்து ஆன் தி வே..
அந்த ஆ
லமரம்.. அலுங்கி போன ஜமுக்காளம்.. நசுங்கி போன சொம்பெல்லாம் புக் பண்ணி வைங்கடா.. டோய்..!!
