தேன்மழை 💞 - (31)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 3 months ago
Messages: 31
Thread starter  

சினம் விடுத்து

என்னையேனும் ஓர் நொடி 

சிந்தனை செய்வாயா?

இல்லை மௌனம் சாதித்து

விழியால் கொன்று

புதைப்பாயா?

 

மாறிய வாழ்க்கையில்

யாவும் மாறிடுமென

எண்ணினேன்!

மாற்றம் வந்தது

உன் எண்ணத்தில் என்பதை

பேதை அறிய மறந்தேன்!

 

மறவாதே கூடி கழித்த

நாட்களில் கூட

கொஞ்சிய நிமிடங்களை!

உன்னவள் ஆன போதும்

தூரம் தள்ளி வைத்து

விலகாதே!

 

வளர்பிறை நிலவொளியில் நள்ளிரவில் மொட்டை மாடிக்காற்றை தனியாக ரசித்தவள் விழிகள், குளம் போல் தேங்கி நின்றது. யாரறிவார் அவள் மனது படும் பாட்டை?

 

அவன் பேசாது சென்ற மௌனம் தான் அவளை இப்படி கேவி அழ வைத்தது. அப்போது தான் அவன் தாலி கட்டியதும் கூறிய வார்த்தை நினைவுக்கு வந்தது.

 

"இதுக்கு எல்லாம் சேர்த்து மொத்தமா திருப்பி தரேன்.."

 

அவள் என்னவோ அறையாக தான் திருப்பி தர போகிறான் என எண்ணியிருக்க, ரோஷக்காரன் முதலிரவில் முறுக்கிக் கொண்டு கிளம்புவான் என அவள் அறியவில்லை. சில மணி நேரம் அழுது சோர்ந்தவள், அதன் பின் அறை வந்து சேர்ந்தாள்.

 

வந்தவளும் அயர்ந்து உறங்கி விட்டாள். காலை ஏழரை மணி போல் ருத்ரா யோசனையோடு கதவை தட்ட, தலை துவட்டியப்படி கதவை திறந்தவளை கண்டு விஷமமாக சிரித்தாள்.

 

'இவ வேற எப்போ பாரு கண்ணடிக்கிறது, சிரிக்கிறதுன்னு.. ஏதோ இவ எனக்கு புருஷன் மாதிரி.. அவன்னே போய்ட்டான்னு கடுப்புல இருக்கேன்..' என புலம்பியவள் அதை சன்னமாக முகத்தில் காட்டாது உள்ளே வருமாறு அழைத்தாள்.

 

"எங்க அண்ணனை காணாம்?" என்றவள் வந்ததும் சரியாக மோப்பமிட, அவளோ வேறு வழியற்று எப்படியோ சமாளித்தாள்.

 

"மிட் நைட்ல ஒரு போன் வந்தது.. ரொம்ப யோசிச்சாரு ஹாஸ்பிட்டல் போக.. அப்பறம் நானே அவர் பேசுனது வச்சு புரிஞ்சுட்டு கிளம்ப சொன்னேன்.. அவர் என்னை நாளை கழிச்சு பாட்டி கூட வர சொல்லிருக்காரு.." என எப்படியோ அச்சு பிசகாது, அவன் கூறியது போலவே அவள் கூறிட ருதராவிற்கு அது நம்பும் படியாக இல்லை.

 

"எது? ஊருக்கு போய்ட்டானா? யார்ட்டையும் சொல்லாம கொல்லாம? என்ன திமிரு இவனுக்கு.." என கத்தியவள், சிறிதும் தாமதியாது அனைவரையும் அழைத்து கூறி விட்டாள்.

 

அதில் எல்லோருமே பிரதீஷை பொரிந்து தள்ள, சாவித்திரி பாட்டி மட்டும் ராசிகாவிடம் இது உண்மையா என சந்தேகமாக கேட்டார்.

 

அவளும் சத்தியமடித்து கூறாது உண்மை என்றாள். விடயம் தனது வீட்டிற்கு தெரிந்தால் வேதனை அடைவார்கள் என கருதி, இல்லாத ஒன்றை கூறி வைத்தாள்.

 

"இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சும் நமக்கு நிம்மதி இருக்கா? எந்நேரத்துல போனாலும் சொல்லிட்டு போனா என்ன மா? கல்யாணம் ஆனதும் இந்த துரை அங்க போய் அப்படி என்ன கிழிக்க போறாரு.." என சதாசிவம் கொந்தளிக்க, சாவித்திரி பாட்டியோ பேரனுக்கு வழக்கம் போல் சொம்பு தூக்கினார்.

 

"அவன் தான் ஒருநாள் இருந்துட்டு என்கூட வர சொல்லிருக்கான்ல.. நான் கொண்டு போய் விட்டுட்டு வந்துறேன்.. நீங்க எல்லாம் உங்க வேலையை பாருங்க.."

 

"என்ன வேலையை பாருங்க? மறுவீட்டுக்கு நானா போறது? உன் பேரன் தானே போகணும்.."

 

அவர் பேச்சில் அங்கு சிரிப்பலையே பரவியது.

 

'மாமாக்கு இந்த வயசுல மறுவீடு போகணும் ஆசை இருக்கு போல..' என ராசிகாவும் மனதுக்குள் யோசித்து பற்கள் தெரிய சிரிக்க, எல்லோரும் ஒரு நொடி கலகலவென சிரித்து விட்டனர்.

 

"பெரியப்பா உங்களுக்கு மறுவீடு போக ஆசை இருந்தா பெரியம்மாவை கூட்டிட்டு போயிட்டு வாங்க.." என ராஜீவ் அங்கலாய்க்க, அதை கேட்ட மற்றவர்களும் "ஆமா போயிட்டு வாங்க.." என்றனர் மெல்லமாக.

 

அதில் எல்லோரையும் முறைத்து பார்த்தவர் மீண்டும் மகனை வறுத்தெடுக்க, அவரோடு சண்முகம் தாத்தாவும் ஜோடி சேர்ந்து கொண்டார்.

 

"சொந்த பந்தமெல்லாம் வருவாங்களே.. என்ன சொல்ல போற?" என்றவர் மனைவியை இளக்காரமாக காண, "ம்ம்.. விருந்துக்கு போய்ட்டான்னு சொல்லுவேன்.." எனக் கூறி ராசிகாவை அழைத்துக் கொண்டு அடுக்களை நோக்கி சென்றார்.

 

சண்முகம் ஐயாவை காண அவளுக்கு நெருடலாக இருந்தது. மிரட்டாமல் மிரட்டி சென்றவர் அல்லவா? மற்றவர்களிடம் கூட நன்கு பேசி பழகி விட்டாள். அதில் ருத்ரா மற்றும் கார்த்திகாவிற்கு அவள் தம்மோடு இருந்தால் நேரம் போவதே தெரியவில்லை என்பது போல் இருந்தது.

 

அதில் ஒருநொடி கார்த்திகா குஷிக்கு ஊட்ட செல்ல, ருத்ரா புதுபெண்ணான ராசிகாவிடம் தயங்கியப்படி முதலிரவு நடந்ததா இல்லையா என கேட்டு விட்டாள்.

 

இம்முறை கண்ணை சிமிட்டியது என்னவோ ராசிகா தான். நடவாத ஒன்றை நடந்ததென கூறியதோடு, "அதெல்லாம் நடத்தாம விட்டுருவோமா?" என்றவள் அவள் கன்னம் கிள்ளி சென்ற பின்பு தான் நம்ப ஆரம்பித்தாள்.

 

வீட்டிற்கு சொந்த பந்தங்கள் விருந்துக்கு வந்திட, எல்லோரும் பந்தி போடுவதில் மும்மரமாக இருந்தனர்.

 

"ராசிகா நீ உள்ளேயே இரு.. வெளியே வராதே.." என கல்யாணி சூழ்நிலை கருதி கூறி கடக்க, ருத்ராவிற்கு அவள் வாயை கிண்ட ஏதுவாக இருந்தது.

 

"நிஜமா நடந்துச்சா?" 

 

"இதுல பொய் சொல்ல என்ன இருக்கு?" என்றவள் விஷமமாக சிரித்தாள்.

 

'எப்படி வாய்ப்பில்லையே.. என் அண்ணன் மானஸ்தன் ஆச்சே.. அவ்வளவு சீக்கிரமா கவுந்துருப்பான்.. இருக்காதே..' என யோசித்தவள், ராசிகா கையில் அணிந்திருந்த வளையம் போன்ற ரிங்கை பார்த்து விட்டாள்.

 

"ஆமா.. இது அண்ணன் ரிங்ல.."

 

"எஸ்! அவர் தான் நேத்து போட்டு விட்டாரு.."

 

"எது? அவனா போட்டு விட்டான்?"

 

"ஆமா ருத்ரா!"

 

அவள் விரலை பார்த்தவள் விழிகள் வியப்பில் விரிய, அவளையும் ஏற்ற இறக்கமாக தான் பார்த்தாள்.

 

"நம்புறீங்களா இப்போ?"

 

"ம்ம்ம்.. நம்புறேன்.. நம்புறேன்.."

 

'9.40க்கு உள்ளே போனா.. என் அண்ணன் மிட் நைட்ல கிளம்பி போனதா சொல்லுறா. அவன் அப்படிலாம் யார்ட்டையும் உடனே க்ளோஸ் ஆக மாட்டானே..' என யோசித்தவள் மீண்டும் ரசிகாவை ஒருவாறு பார்த்தாள்.

 

"எல்லாம் ஓகே.. உங்களை ஏன் அண்ணன் ஊருக்கு கூட்டிட்டு போகல?" என மீண்டும் கொக்கி போட, அதிலும் நழுவும் விதமாக பதிலளித்தாள்.

 

"அதுவா.. காதை குடுங்க.." என்றவள் மெல்லமாக அவள் காதில், "ரெஸ்ட் எடு, டயார்ட் இருக்கும்ன்னு சொன்னாரு.." என்றாள் வெக்கப்புன்னகையாக.

 

அப்பதில் அவளை மிரள வைக்க, அதன் பின் அவளிடம் முதலிரவு பற்றி பேசவில்லை. ராசிகா கையில் அணிந்திருந்த மோதிரத்தை வைத்தே ஊர்ஜிதம் செய்து கொண்டாள் ருத்ரா.

 

அன்று தனிமையில் இருந்த போது அவள் உள்ளங்கையில் பல முத்தமிட்டு, அந்த வளைய மோதிரத்தை அணிவித்து விட்டான். பிரிவின் போது அவன் நினைவாக இருக்கட்டும் என நினைத்துக் கொண்டாள்.

 

இன்று அது தான் நடக்காததை நடந்தது என கூற சாட்சியாக மாறியது.

 

ராசிகா வீடு தான் ஏதோ துக்கம் நடந்த வீடு போல் இருந்தது. ஒருபக்கம் மகள் செய்த காரியம், மற்றொரு பக்கம் விசாலாட்சிக்கு குடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போனதால் ரைட் அண்ட் லெஃப்ட் போனில் வாங்கி விட்டார்.

 

அஸ்வத் காதலித்தவளை, சூழ்நிலை காரணம் காட்டி தன் மகனை இப்படி நோகடித்து விட்டனரே என நொந்தவர் கௌதமனை போனிலே வசை பாடினார்.

 

அவரும் பல மன்னிப்புகள் கேட்ட பின் தான் போனை வைத்தார் விசாலாட்சி.

 

"மா! இப்போ எதுக்கு முடிஞ்சு போனதை பேசிட்டுருக்கீங்க? அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அவ நிலைமையில யாரா இருந்தாலும், அப்படி தான் செய்வாங்க.."

 

"அதுக்குன்னு நீ கவலை படுறதை நான் கண்டு காணாம இருக்க முடியுமா?"

 

"மா.. இவ ஒருத்தி தான் பொண்ணு இல்லை. எத்தனயோ பேர் இருக்காங்க இந்த ஊர்ல.."

 

"அப்போ செய்ஞ்ச பாவத்துக்கு அவர் பெரிய பொண்ணை கட்டி வைக்க சொல்லுறேன்.."

 

"மா.. அவங்க இருக்க மனநிலையில இப்போ பேசாதீங்க.. கொஞ்ச நாள் ஆகட்டும். அண்ட் தென் எனக்கும் இப்போ மேரேஜ் வேணாம். சிக்ஸ் மந்த் போகட்டும்.." என்று அவனும் கறாராக கூறி கடந்து விட்டான்.

 

ஜெயமோகனுக்கு ராசிகா பிரதீஷ் காதல் விடயம் நன்கு தெரியும். குடும்ப சூழ்நிலை காரணம் கருதி யாரிடமும் இதை பற்றி அவர் பேசவில்லை  எதார்த்தமாக நடந்த திருமணம் போல் இருக்கட்டும் என நினைத்தார்.

 

நாளும் பொழுது ஓடியது. ஆனால், அவன் கோவம் மட்டும் குறையவில்லை.

 

ரசிகாவும், அவன் பாட்டியோடு ஊர் வந்து விட்டாள். இரவு நேரம் வீடு திரும்பும் பேரனுக்காக பார்த்து பார்த்து பக்குவமாக சமைக்க செல்ல, ராசிகா தான் சமைக்கிறேன் என்று முந்திக் கொண்டு சென்றாள்.

 

அவனுக்கு சப்பாத்தி, வெஜ் குருமா தான் பிடிக்கும் என்று கூறி அவர் கடந்திருக்க..

 

சிறிது நேரத்தில் சமைத்து முடித்து வந்தவள், கலைப்போடு சோபாவில் அமர்ந்து விட்டாள்.

 

"அம்மாடி! உனக்கு ஏன் இந்த வேலை? நீ ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே?"

 

"இருக்கட்டும் பாட்டி.. இதெல்லாம் வேலையா?"

 

"ம்ம் சரி மா.. நான் நாளைக்கி சாயங்காலம் கிளம்பிடுவேன்.. அவன் போய்ட்டா வீட்டை பூட்டிட்டு பத்தரமா இருந்துக்கோ.. உனக்கு என்ன தேவைனாலும் பிரதீஷ் கிட்ட கேளு.."

 

"ம்ம்.. ஓகே பாட்டி.." என்னும் போதே அவன் கார் சத்தம் கேட்க, சட்டென எழுந்து எட்டி பார்த்தாள்.

 

"வந்துட்டான்.. நான் டிபன் எடுத்து வைக்கிறேன்.. நீயும் ட்ரெஸ் மாத்திட்டு வா.." என்றிட, அவளோ அவனது அறைக்கு தான் லக்கேஜ் எடுத்துக் கொண்டு சென்றாள்.

 

வொயிட் கோட்டை தோளில் போட்டப்படி உள்ளே நுழைந்தவன், பாட்டியின் வருகையை எதிர்பார்க்கவில்லை.

 

"எப்போ வந்தீங்க? சொல்லாம வந்துருக்கீங்களே பாட்டி.."

 

"நீ தானே பா.. நாளைக்கழிச்சு வர சொன்ன.. அதான் ராசிகாவை கூட்டிட்டு வந்தேன்.."

 

அவள் பெயரை கேட்டதும் எப்போதும் தோன்றும் காதல் உணர்வு காணாமல் போய், உஷ்ண மூச்சோடு சேர்த்து கோவம் வந்தது.

 

"டின்னர் எடுத்து வைங்க.. வரேன்.." என்றவன் நேராக அறை நோக்கி செல்ல, உள்ளே தாழிட்டு இருப்பதை கண்டு அதை விட கடுப்பானான்.

 

பலமாக கதவை தட்ட, வழக்கம் போல் முட்டி வரை ஸ்கர்ட் மற்றும் இடை தெரியும் ஷர்ட்டில் கதவை திறந்தாள்.

 

கட்டில் மீது கிடந்த அவளது ஆடையையும் அவளையும் திரும்பி முறைத்து பார்க்க அள்ளிக் கொண்டு பாத்ரூம் நோக்கி ஓடினாள்.

 

அதை அங்கிருந்த ஹேங்கரில் மாட்டி அவள் வர, "இங்க பாரு.. இது என் ரூம் கண்டதை கழட்டி போடணுமான்னா கீழ இருக்க ரூம்ல போடு.. அதை விட்டுட்டு ஆள் இல்லாத நேரம் உள்ளே வந்து ஆடிக்கிட்டு இருந்த.." என்றவன் அவளை அறையப்போக, முனுக்கென கண்ணீர் துளி எட்டிபார்க்க இரு கன்னத்தையும் பயத்தில் உள்ளங்கை வைத்து மூடிக் கொண்டாள்.

 

அவனோ அதன் பின் அங்கு நிற்கவில்லை. அவளும் கீழே சாப்பிட வந்து விட்டாள்.

 

அவளை உண்ண சொல்லி, சாவித்திரி அவர்கள் பரிமாற அவனும் வந்து விருப்பமின்றி அவளருகில் அமர்ந்தான். பாட்டி நாற்காலியை இழுத்து போட்டு அமர வைத்ததால்.

 

அவரும் மூன்று சப்பாத்தியை வைத்து குருமா ஊற்ற, "டேஸ்ட் டிஃப்ரன்ட்டா இருக்கே.." என்றான் வழக்கமான ருசி மாறியதில்.

 

அதில் அவரோ, உன் மனைவி தான் சமைத்தது என்றிட அதன் பின் ஒரு வாய் கூட அவனுக்கு உள்ளே செல்லவில்லை.

 

தட்டிலே கை கழுவி எழுந்து சென்றவனை கண்டவருக்கு நெஞ்சமே நிற்க, அவளுக்கோ கண்ணீர் தாரை தாரையாக வந்தது. அதிலே அவரது விரிசலை கண்டு கொண்டவர், இருவரையும் தனியே விட்டு சென்றால் தான் அனைத்தும் தீரும் என நினைத்தார்.

 

மறுநாள் மாலை ராசிகாவிற்கு ஆயிரம் அறிவுரை கூறி அவளை தனியே விட்டு ஊருக்கு திரும்பி விட்டார் பாட்டி. எப்படியும் அவன் அவளுக்கு மடங்கி தான் ஆக வேண்டும் என்னும் யோசனையில். ஆனால், அதன் பின் நடந்த விவகாரமே வேறு.

 

வேலை முடித்து வந்தவன் பாட்டியை தேட, அவர் இல்லை என அறிந்து அவனே சமைக்க சென்றான்.

 

"நான் செய்ஞ்சு தரேன்.." என்றவள் வழிய அவன் முன் வந்து நிற்க, மூடியிருந்த வாய்க்கு விடுதலை தந்தான்.

 

"என்ன டி செய்ய போற? எது எனக்கு சமாதியா?"

 

"........"

 

"லவ் பண்ணுறேன்னு வரவேண்டியது. அப்பறம் என் அக்காவை மேரேஜ் பண்ணிக்கோன்னு சொல்ல வேண்டியது. அப்பறம் பொண்டாட்டி ஆகவும் பாசம் பொத்துட்டு வருது புதுசா!"

 

"பிரதீஷ்.. ஏன் இப்படி கத்துறீங்க? பக்கத்துல வீடு இருக்கு.. கொஞ்சம் மெதுவா பேசுங்க.. எல்லாரும் தப்பா நினைப்பாங்க.."

 

"இன்னும் என்னை என்ன டி நினைக்கணும்? உன் அக்கா என்ன கேட்டா தெரியுமா? நான் பொறுக்கியாம். எங்க பொறுக்குனதை அவ பாத்தா? இல்லை நீ பாத்த?"

 

"........"

 

"இப்போ என்ன மசுருக்கு நீ இங்க கிளம்பி வந்த? போக வேண்டியது தானே உன் வீட்டுக்கு. தாலி கட்டவும் பத்தினியா மாறி புருஷன் மேல அக்கறையில வந்துடீங்களா? ஏன் இதே அக்கறை லவ் பண்ணும் போது எங்க போய்டுச்சு?"

 

அவளோ தேம்பி அழ, அலறினான் அவள் மிரண்டு போகும்படி.

 

"இப்போ ஏன் டி அழுற? இவன் இன்னும் சாகாம உயிரோட இருக்கான்னு தானே?" என்றவன் அவளை தீயாக பார்க்க, அவளோ அவனது வலிய கரம் பற்றிட முன்னேறினாள்..

 

"அங்கேயே நில்லு.. என்னை தொடுற உரிமை உனக்கு இல்லை.. சொல்ல போனா, இந்த கல்யாணம் கூட உங்க அப்பாக்காக தான் பண்ணேன்.." என்றவன் விறுவிறுவென டி-ஷர்ட்டை முழங்கை வரை மேலே ஏற்றிக் கொண்டு மாடி நோக்கி செல்ல எத்தனித்தவனை மீண்டும் அழைத்தாள்.

 

அதில் என்ன என்னும் ரீதியில் அவளை ஏறிட்டவனிடம், "அப்போ நீங்க என்மேல இருக்குற லவ்ல மேரேஜ் பண்ணலையா?" என தழுதழுத்த குரலில் வினவ..

 

அவனோ கையை தட்டிக் கொண்டு ஏளனப்பார்வை பார்த்து சிரித்தான்.

 

"எது நீ பண்ணுனதுக்கு பேர் லவ்வா? அது சரி.. நீயா சொல்லிக்க வேண்டியது தான் டி.."

 

"பிரதீஷ்!"

 

"என்ன நான் தான்.. இப்போ ஏன் இங்க நின்னு சவுண்ட் குடுக்குற? கிளம்பு.." என்றான் அவளை உதாசீனமாக பார்த்தபடி..

 

"உன் அக்கா என்ன சொன்னா தெரியுமா? போய் அவ கிட்ட குதி. என்கிட்டே இப்படி கத்துற வேலை வச்சுட்ட மனுஷனா இருக்க மாட்டேன் டி.."

 

"ஸாரி பிரதீஷ்!"

 

"என்ன ஸாரியா? ஓஹ்.. என்ன பண்ணுனாலும் ஸாரி சொல்லலாம்ல.. ஓஹ் காட் இது எனக்கு மைண்ட்ல இல்லாம போய்டுச்சே.." என்றவன் பார்வை எங்கோ வெறித்தபடி தீவிரமாக யோசித்தது.

 

"ஒரு டீல் வச்சுக்கலாமா?" என்றான் இடையில் கை வைத்தப்படி ஸ்டைலாக.

 

அவளோ கேவி அழுது கொண்டு தான் இருந்தாள். அவனுக்கு அவள் செய்த செயலால் வாங்கிய வசையே மூளையை குடைந்து கொண்டிருந்தது.

 

"எனக்கு உன்மேல இப்போ கூட நம்பிக்கை இல்லை.. அதுனால மேடம் என்ன பண்ணுறீங்க இந்த தாலியை கழட்டி வச்சுட்டு கிளம்பி போயிட்டே இருங்க.. நம்பிக்கை வரும் போது நானே அகைன் கட்டுறேன்.. ஏன்னா மறுபடி எனக்கு இன்னொரு அக்கா இருக்குன்னு வந்து நின்னா என் லைஃப் என்ன ஆகுறது?" என்றான் நகைப்பாக..

 

அதில் அதிர்ந்து போனவளுக்கு, என்ன பேச என நா வரவில்லை. நெஞ்சடைத்து போய் அவனையே பார்த்து நின்றிருந்தாள் செய்வதறியாது.

 

ஆடவனோ ஃபிரிஜில் இருந்த ரெட் வைனை எடுத்து கடகடவென வாயில் ஊற்றியப்படி, அவளையும் கடைக்கண்ணால் அளந்தான்.

 

"என்ன மேடம் நிக்கிறீங்க? உட்காருங்க.. நீங்க நின்னா அது இந்த பூமி தேவிக்கே அடுக்குமா? உங்களை போல லவ்வர் கிடைக்க குடுத்து வச்சிருக்கணும். உனக்கு ஒரு அக்கா தானா? இல்லை வேற அக்கா யாரும் இருக்காங்களா?" என்றான் மீண்டும் வைனை அருந்தியப்படி.

 

"பிரதீஷ்! நீங்க எல்லை மீறி பேசுறீங்க.."

 

"சரி இப்போ என்ன பண்ணலாம்?"

 

"குடிக்கறதே நிறுத்திட்டு பேசுங்க.." என்றாள் எரிச்சலாக..

 

"ஏன் நான் குடிச்சா உனக்கென்ன? நீ யாரு அதை கேக்க.." என்றவன் வேண்டுமென்றே அவள் வாயை கிளற, அவள் வாய் திறக்கவில்லை.

 

"சொல்லு.. நீ யாரு எனக்கு? சொல்லு டி.."

 

அவனிட்ட குரலில் இரண்டடி பின்னோக்கி நகர்ந்து விட்டாள்.

 

"என்ன உங்களுக்கே உங்க லட்சணம் உறுத்துதோ? அதான் கழட்டி வச்சுட்டு கிளம்பி போன்னு சொல்லுறேன்.. ஏன்னா, உன்மேல இப்போ வரை நம்பிக்கையில்லை.. நம்புற மாதிரி ஏதாவது செய்.. நம்புறேன்.." என்றவன் போதையில் விஸ்தாரமாக அமர்ந்து அவளையே ஆராய்ந்து கொண்டிருந்தான்.

 

தேன்மழை💖

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top