அசுரன் 12
“வரமாட்டேன்னு சொன்ன? வந்துட்டே.. அதுவும் 9.45க்கே?” என்று அவனின் கிறக்கமான குரலில் திரும்பிப் பார்த்தவள் உற்சாகமாக, “டாக்டரே..!” என்று விளித்தவள், “வேற என்ன செய்ய? வெளியுலகமே தெரியாமல் இருந்த டாக்டர் முதன் முதலில் ஒரு டேட்டிங்கு ஆசைப்படுகிறாரு.. ஏதோ நம்மளால முடிஞ்சவர அவருக்கு ஹெல்ப் பண்ணலாம்னு தான்.! ஏன்னா பெரிய மனசு எனக்கு” என்று அவளும் கெத்தாக கூற.. அவள் காதை பிடித்து திருகியவன் “ஓவர் கொழுப்பு டி பாப்பா உனக்கு..!” என்றான் செல்லமாக.
“சும்மா பாப்பா பாப்பான்னு கூப்பிடாதீங்க டாக்டரே.. எனக்கே சின்ன பிள்ளையா ஃபீல் ஆகுது..! அப்புறம் உங்களை அங்கிள்னு கூப்பிட்ட போறேன்.. பார்த்துக்கோங்க..!” என்றதும் வாய்விட்டு சிரித்தான் ராவண்.
கடந்த சில மாதங்களில் அவன் இவ்வாறு சிரித்து இருப்பானா என்று கேட்டால்..? ம்ஹூம் கிடைக்கவே கிடையாது..!
அவளோடு இருக்கையில் அவன் மனது அத்தனை உற்சாகமாக இருந்தது..! கவலைகள் மறந்தது..! கனவுகள் பிறந்தது..!
“சரி எங்க போகலாம்?” என்று அவன் கேட்க..
“இந்த மால் ஃபுல்லா எனக்கு அத்துப்படி தான். அடிக்கடி நான் ஹசனோடு வந்துட்டு போறவ.. உங்களுக்கு ஏதாவது இல்ல எங்கேயாவது போகணும்னா சொல்லுங்க.. போகலாம்” என்றாள்
“முதல்ல இந்த திங்ஸ் வாங்கிடலாம் இல்லனா எங்க அம்மா என்னை ஒருவழி ஆக்கிடுவாங்க..!” என்றவன் வழக்கம் போல அவனது அந்த வார கிராஸரிசை வாங்கிக் கொண்டான்.
அதன்பின் அம்மால் மட்டுமல்ல அவளுக்கு தெரிந்த.. அவளுக்கு பிடித்த இடங்களுக்கும் அவனை அழைத்துச் சென்றாள்..!
அவன் அவள் வழியில் பயணிக்க துவங்க..!
அவர்கள் இதயங்களோ ஓர் வழியில் பயணிக்க துவங்கின..!!
பெரிய பெரிய கடைகளுக்கு அழைத்துச் செல்லவில்லை. சிறு சிறு கடைகளை அறிமுகப்படுத்தினாள்..!
பெரிய ரெஸ்ட்ராண்ட்டுகளை தவிர்த்து.. ஸ்டீர்ட் ஃபுட்டை அவனுக்கு புகட்டினாள்..!
கேப்பை தவிர்த்து பொது வாகனத்தில் பயணிக்க வைத்தாள்..!
அவனது மருத்துவ உலகம் தாண்டி மற்றொரு இயல்பான உலகம் இருப்பதை அவனுக்கு அறிமுகப்படுத்தினாள்..!
அனைத்தையும் கூடவே அவளையும் அத்தனை ரசித்தான் ராவண்..!
ஆடி.. ஓடி.. சாப்பிட்டு.. களைத்து.. கழித்து.. மகிழ்ந்து.. ஓய்ந்து போயினர் இருவரும்.
இளைப்பாற ஒரு பார்க்கில் அமர்ந்தனர் இருவரும். அவள் கையில் சுட்ட சோளம்..! அவனிடம் நீட்ட.. அவனோ புன்னகையோடு மறுத்தான்..!
“அப்புறம்? வேற எங்க போறது..?” அவளால் முற்றும் முழுதாக ஈர்க்கப் பட்டிருந்தான்.
“எங்க வேணா போகலாம்? என்ன வேணா பண்ணலாம்..” என்றாள் சோளத்தை கொறித்துக் கொண்டே..!
“வாட்.. என்ன வேணாலுமா..?” கொக்கிப் போட்டான் வார்த்தையில்..!
“ம்ம்ம்.. என்ன வேணா..!” அவளும் கண் சிமிட்டி கூறினாள்.
“பார்றா.. பாப்பாவுக்கு தைரியத்த?” என்றான் விளையாட்டாய்..!
“தைரியம் இருந்தா.. என்ன வேணா.. டாக்டரே.!!” என்றாள் அவளுமே..!
“வாட்?? இட் மீன்ஸ்..?” நெற்றி சுருங்க கேட்டான். அவளிடமிருந்து தெளிவான பேச்சை எதிர் பார்த்தான் ராவண். இந்த மறைமுக கண்மூடி வார்த்தைகள் அவனுக்கு போதவில்லை..!
“நத்திங் மீன்ஸ்..” என்றாள் நாக்கை வாய்க்குள் சுழற்றி..!
“புரியல….! எனக்கு தெளிவா சொல்லு.. ப்ளீஸ் டி பாப்பா..! மெடிசின் தெரிந்த அளவு பெண்களின் வார்த்தை தெரியாது..!” என்றான் ஹேசல் விழிகள் பளபளக்க..!
அவனின் அந்த விழி வீச்சில் விழுந்தாள் பெண்ணவள்..!
“யுவர் ஐஸ் மெஸ்மரைஸிங் மீ” என்றாள் அவ்விழிகளை பார்த்த கிறங்கிய வண்ணம்..!
“ஆருஷி..!” என்று மென்மையிலும் மென்மையாக அவன் அழைக்க..
“எனக்கு ஒண்ணு சொல்லனும்னு தோணுது.. சொல்லட்டா?”
“ம்ம்ம்..!!”
“நான் ரொம்ப உங்கள தேடினேன்.!” என்றாள் மெல்லிய குரலில் காதல் ததும்ப.!
அவன் பேச முடியாமல் அவளையே வெறித்துப் பார்த்தான்.
அதைச் சொன்னவள் முகமோ அவன் விழிகளில் ஏதோ ஒன்றை எதிர்ப்பார்த்து காத்து நின்றது.
கண்டிப்பாக இந்த வார்த்தையை ஆருஷி இடமிருந்து எதிர்பார்க்கவில்லை ராவண். அவர்களின் நிலையை தெளிவுபடுத்திக் கொள்ள நினைத்தான்.
புன்னகைத்தவன்,
“ஆர் யூ.. ஜோக்கிங்..? லெட் மீ க்நோ.. யூ மிஸ் மீ மீன்ஸ்..? டெல் மீ?” என கேட்க..
“நாம காலைல இருந்து.. ஒன்னா தானே.. சுத்தினோம்.. சாப்பிட்டோம்..?”
“ம்ம்..!” தலையசைத்தான்.
“அப்பல்லாம்.. அதிக பட்சம் தமிழ்லதான பேசினோம்..?”
“எஸ்.!”
“தமிழ்லேயே கேளுங்க?”
“ஓ.. அது.. ஒரு மாதிரி.. தமிழ்ல பேசினா… என் மனச சரியா சொல்லமுடியுமா தெரியல? இங்கிலீஷ்லேயே பேசி பேசி அதுவே தான் டக்குனு வருது? வாட் டு டூ?” என்றான் உதட்டை பிதுக்கி கைகளை விரித்து..!
“மத்த எந்த மொழிக்காரனெல்லாம் அவனவன் தாய் மொழில பேசறத தப்பா நினைக்கறதே இல்ல.. இந்த தமிழன் மட்டும்தான் தாய் மொழில பேசறத.. ரொம்ப கேவலமா நினைக்கறான்.! என்ன டிசைன் இது..? எல்லா இடத்திலும் எப்படி நம் உணர்வுகள வேத்து மொழியில கொட்ட முடியும்?” என்று அவள் சரியாய் கேட்க..
அவள் பேச்சில் புருவம் உயர்த்தியவன்,
பின் சிரித்து.. “இனி தமிழ்லயே பேசறேன்.! அதுக்காக.. மொழிப்பிரச்சினை அரசியல் எல்லாம் பேசாத.. சரியா? இப்ப சொல்லு.. நிஜமாலுமே என்னை ரொம்ப தேடினியா?” என்றான் ஏக்கமாக.. தன்னில் நடந்த தேடல் அவள் உள்ளும் நடந்ததா என்று அறிய அளப்பரிய ஆவல்.
அவளும் சிரித்து ‘சரி..!’ என்றவள், அவனின் பின் பாதி கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் மிகவும் தவித்துப் போயிருந்தாள். அவளின் ஏக்கம் தவிப்பு எல்லாம் அவள் முகத்தில் பிரதிபலித்தது.. !!
அக்கம் பக்கம் பார்த்து விட்டு அவளின் கைக்கு மென்மையாக முத்தம் கொடுத்தான் ராவண். அந்த பார்க்கில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால்.. அதற்கு மேல் அவனால் அவளிடம் நெருக்கம் காட்ட முடியவில்லை.
அவர்களின் அந்தரங்கத்தை அம்பலமாக்க அவன் விரும்பவில்லை..!
ஆனால்.. அவனைப் போலவே அவளும் அவனின் உள்ளங்கைகளுக்கு மென்மையாக முத்தங்கள் கொடுத்து அவனை திகைக்க வைத்தாள்.
அதில் கண்களை மூடி சுகித்தவன், சட்டென விழிகளை திறந்தான். ”எனக்கு நீ வேணும் டி..” அவளை ஏக்கமாய் பார்த்தப்படி கேட்டான்.
”ம்ம்..” மெலிதாகப் புன்னகைத்தாள்.
”இப்பவே.. இக்கணமே..! என்றான்.
அவள் முகம் திகைப்புக்கு மாறியது. ”என்ன.. என்ன சொல்றிங்க..?”
”நீ எனக்கு வேணும்… ” என்றான் அவள் கண்களை பார்த்து அழுத்தமாக..!
”யூ.. மீன்.. ??”
”எஸ்.. !!”
”அது.. இப்ப.. எப்படி… நாம.. லவ்.. மேரேஜ்?”
”இங்க வெளிப்படையாக எதுவும் பேச முடியல ஆருஷி. எங்காவது.. ப்ரைவேஸியா.. வேற இடத்துக்கு போவாமா? ப்ளீஸ்.. !!”
அவள் ஆமோதிக்க கேப் புக் செய்தவன் அவளை தன் அப்பார்ட்மெண்ட்டுக்கு அழைத்துச் சென்றான். செல்லும் வழியில் அவளது கையை பற்றியிருந்த அவனது கை விலகவே இல்லை..!
அவனது வீடு..!
அவளுள் அவனும்..!
“லவ் யூ பாப்பா..!” என்றான் காதல் பெருக..!
“இன்னைக்கு போல ஒரு நாளும் நான் சந்தோஷமா இருந்ததே இல்லை. எனக்கு நானே புதுசா தெரிஞ்சேன்..! எல்லாமே உன்னால் தான்.. இந்த சந்தோஷம் எனக்கு வாழ் நாள் முழுவதும் வேணும் டார்லிங்..! வில் யூ அக்செப்ட் மீ?” என்றவன் மேற்கத்திய பாணியில் கால்களை முட்டிப் போட்டு தன் கையில் இருந்த பிளாட்டினம் மோதிரத்தை கழட்டி அவள் முன்னே நீட்டினான்.
அவளோ இதனை சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. சிறிது நாட்களாகவே அவள் மனதில் சில பல மாற்றங்கள்..! உணர்வுகளின் உற்சாகங்கள்..! அதிலும் ராவண்னின் அந்த ஹாசல் விழிகள் அவளை ஏதோ செய்தன..
மாலில் சிறிது நேரம் பார்க்கும் அந்த நொடி பொழுதே.. அந்த வாரம் முழுக்க அவளுக்குள் பல இன்ப ராகங்களை வாசித்தன..!
மீண்டும் மீண்டும் அவனை பார்க்கத் தூண்டின..!
வகுப்பறையில் கூட சில நாட்களாக அவள் எண்ணச் சிதறல்கள் கண்ட ஹசன் தான் முதலில் அதனை கண்டுபிடித்து பின் அவளை கண்டிக்க.. தன் மனதில் இருந்ததை எல்லாம் அவனிடம் ஒப்புவித்தாள் மாது.
இருவரும் இந்தியாவிலிருந்து இங்கே படிக்க வந்தாலும் இங்கே வந்த பிறகுதான் இருவருக்குள்ளும் நட்பு..!
ஹசன் ஆருஷியை போல பெரிய பின்புலமற்றவன் அதனால் வெளி தங்கியிருந்து பார்ட் டைம்மில் தான் சம்பாதிக்கிறான்.
“ஆருஷி.. உனக்கு ரொம்பவே இளகுன மனசு. நான் பார்ட் டைம் சம்பாதிக்கிறேனு எனக்காக நான் செலவு பண்ணிக்கிறது இல்லன்னு தான் வீக்லீ ஒன்ஸ் மாலுக்கு போகும்போது பெட் வச்சு.. வேணும்னே நீ அதுல தோத்து.. எனக்காக எல்லா செலவும் பண்ற.. அந்த இளகிய மனச யாரும் பயன்படுத்திக்க விட்றாத..! எதா இருந்தாலும் நல்லா யோசிச்சு செய். ஓகே அவர் ப்ரொபஷனல் அவரோட உயரம் எல்லாம் ஓகே..! ஆனாலும் ஒரு தடவைக்கு நூறு தடவை யோசி. மனசால மட்டுமல்ல அறிவாலேயும்” என்று நண்பனாய் அறிவுரை கூறினான்.
ஆனால் காதல் புகுந்த கள்ள உள்ளம் அறிவுரையை எங்கணம் ஏற்கும்? இல்லை அறிவின் பேச்சை தான் எப்படி கேட்கும்? மனது மட்டுமே அதற்கு மகத்துவமாய் தெரிய மற்றதெல்லாம் கண்களுக்கு தெரியாது..!
சரி சரி என்று தலையாட்டியவள், அதன் பின் ஒவ்வொரு முறை மாலுக்கு செல்லும் போதும் அவனை அத்தனை தேடினாள்.
முதலில் மெல்லிய சலனமாய் அவன் மீது இருந்த ஒரு எண்ணம்.. நாளாக நாளாக அவனை தேடி தேடி ஈர்ப்பாக மாற.. ஒரு கட்டத்தில் பெரும் காதலாக மலர்ந்தது.
இதில் ஹசனுக்கு தெரியாத ஒன்று என்னவென்றால் அவளது அறையில் அவனது புகைப்படத்தை ஒட்டி வைத்திருந்தாள். கண்களில் இருந்து மறைந்திருந்தால் அல்லவா கருத்தில் இருந்து மறையும்?
அவளது கண்ணும் கருத்தும் அவன் ஒருவனே ஆயிற்றே!!
இப்படி தன்னுள் நடந்த மாற்றம் தேடல் ஈர்ப்பு காதல் எல்லாமே அவனிடமும் நடந்து இருக்கிறதா என்று பெரும் வியப்பு தான் அவளுக்கு..!
அன்று அவன் டேட்டிங் கூப்பிடும் போதே அத்தனை சந்தோஷத்துடன் தான் அறைக்கு சென்றாள் அணங்கு.
“நாளை ஒருநாள் அவனோடு.. என்னவனோடு..!” என்று நினைப்பே அவளுக்கு அத்தனை உவகையை ஏற்படுத்த, அவனிடம் தன் மனதை கூற அவளுக்கு பெரும் தயக்கம்..! மாஸ்டர் படிக்கதான் வந்திருக்கிறாள்.
ஆனால் அவனோடு எதிர்பார்ப்பு வேறாக இருந்தால்? அவன் மனம் வேறு இடத்தில் இருந்தால்? தன்னிடம் நன்றாக பேசுகிறான் என்ற ஒரு காரணம் போதாதல்லவா?
‘எப்படியோ ஒரு நாளை அவனுடன் கழித்து விட வேண்டும். அது போதும் எனக்கு..!’ என்று தன்னை மீறி தான் “உங்களை ரொம்ப தேடினேன்” என்ற வார்த்தையை விட்டாள்.
ஆனால் அவனின் வார்த்தைகள் வர்ணஜாலங்களாய் அவளது உலகையே மாற்றி இருந்தது தற்போது..!
தன் முன் மண்டியிட்டு இருந்தவனை கண்களில் கண்ணீர் மறைக்க.. விரிந்த புன்னகையுடன் பார்த்து ஆம் என்று அவள் தலையாட்ட.. அந்த மோதிரத்தை அவள் தளிர் விரலில் அணிவித்தவன் அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்.
அவளின் பார்வை அவன் மீதிருந்து விலகவேயில்லை. அவனின் இறுக்கம்.. அந்த நெருக்கம் அவளுள் ஏதேதோ உணர்ச்சிகளை தூண்ட..
“இன்னைக்கு என் கூட ஸ்டே பண்ணிறியா?” என்று கேட்டான் ராவண்.
ஒட்டியிருந்த அவளது செவ்விதழ்கள் பிரிந்து.. மெல்ல நடுங்கின. அவள் கைகளில் திடீரென மெலிதான ஒரு நடுக்கம் வந்திருந்தது. என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள்
“ப்ளீஸ் டி பாப்பா..! உன்னை இப்படியே அனுப்பிட்டா.. இந்த நைட் நான் ஏக்கத்துலயே செத்துருவேன்.. !”அவள் விரல்களைப் பிண்ணியபடி கேட்டவனை அவளால் தவிர்க்க முடியவில்லை.
”அதுக்கு.. என்னை.. என்ன பண்ண சொல்றிங்க?” அவள் குரலிலும் அந்த ஏக்கமும் தடுமாற்றமும் தெரிந்தது. அவனை பிரிய பிரியமில்லை.!
”என் கூட தங்கிடு. ப்ளீஸ்..”
”எனக்கு பயமா இருக்கு..” இமைகள் படபடக்க அவள் கூற..
”என்ன பயம் என்கிட்ட.?” என்றான் படபடக்கும் அவள் இமைகளில் மெல்லிய முத்தமிட்டு..
”தெரியல..! மனசு பதறுது.. உடம்பெல்லாம் நடுங்குது..!!”
”இதுக்கு நான் ஒரு ட்ரீட்மென்ட் சொல்லட்டுமா?” என்று கண்சிமிட்டியவன், என்ன என்று பார்த்தவளின் முன்னே குனிந்தவன் மெல்லிய ஹஸ்கி வாய்ஸில் “என்னை கட்டிப் பிடிச்சுக்கோ.. இறுக்கமா.. பயமெல்லாம் போய்டும்?”
மெல்லச் சிரித்தவள், “இந்த பயம்கூட அதனாலதான்னு நினைக்கறேன்?” என்றாள் அவளும் அதே ஹஸ்கி வாய்ஸில்..
”அப்படியா? அப்போ டெஸ்ட் பண்ணிடலாமா?” என்றவன், அவளை இறுக்க அணைத்தான். அவள் மறுக்கவில்லை. ஆனால் தவிர்க்க முடியாமல் தவித்தாள்.
அவளை பிரிந்தவன், “நான் ஹக் பண்ணுனா அருவருப்பாக இருக்கா?” கேட்டவனிடம் இல்லையென்று வெட்கத்துடன் புன்னகைத்தாள். அவள் கையைப் பிடித்தான். அவள் கைகள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன.”ஆர் யூ ஓகே?” என்று கேட்க
”ம்ம்..!” தயக்கத்துடன் தலையை ஆட்டினாள்.
”பயமா இருக்கா?” அவள் மோவாயை பிடித்து நிமிர்த்தினான்.
அவள் கண்கள் தயங்கி விட்டு மிகவும் வெட்கத்துடன் அவன் கண்களை சந்தித்தன. அவள் முகம் எல்லாம் சிவந்து போயிருந்தது. அவளது இதயம் அதிர்வதை அவள் முகம் தெளிவாக காட்டியது..!!
”ரிலாக்ஸ் டி பாப்பா..! நோ வொர்ரீஸ்..!!” என்றான்.
அவ்வளவுதான் சட்டென பாய்ந்து வந்து அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள். அவளது மென் பந்துகள் அவன் நெஞ்சில் இதமாய் அழுந்தி நசுங்க.. அவனை இறுக்கிக் கொண்டாள். அவனும் அவளை அணைத்துக் கொண்டான். சிறிதுநேரம் இருவரும் விலகவே இல்லை. அப்படியே இறுக்கியபடி நின்றிருந்தனர்.! அவன் உதடுகள் அவளின் உச்சியில் பதிந்து பதிந்து மீண்டன..! அவள் உடலும்.. வாசமும் அவனை ஆட்கொள்ள..!
“ஆரா..!”
”ம்ம்..!”
”ஐ லவ் யூ.. டார்லிங்..”
” மீ டூ..” இறுக்கி பின் மெல்ல தளர்ந்தாள்.
அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவளோ கண்களை மூடி நின்றாள்.தன் கட்டை விரலால் மெல்ல அவள் உதடுகளை வருடினான். அவள் சிலிர்த்து கண்களை மூடித் திறந்தாள். ஊன் கட்டை விரலை எடுத்து விட்டு மெல்லக் குனிந்து அவள் உதட்டில் முத்தமிட்டான்.அவள் சிலிர்த்து அவன் கையை பிடித்தாள். லேசான இளம் சூட்டில் இருந்த அவளின் கீழுதடை பற்களில் கவ்வி இழுத்து சுவைக்க ஆரம்பித்தான். இதழ்களின் சுவைத்தவன் மெல்ல மெல்ல அவளையே சுவைக்க ஆரம்பித்தான்.
அவனது
ஒவ்வொரு தீண்டலும்
ஒவ்வொரு அசைவும்
ஒவ்வொரு முத்தங்களும்
ஒவ்வொரு அணைப்புகளும்
அவளைக் கலையும் முகிலெனக் கரைய வைத்தது. தானற்ற உணர்வுகளில் கரைந்தாள். சத்தமில்லாத நிசப்தம் மட்டுமே!! அவளின் சிணுங்கல்கள் மட்டுமே பேரொலியாய் இன்பமாய் ஒலித்தது..!
நடுஇரவில் கூடல் முடித்து அயர்ந்து திரும்பிப் படுத்துக் கொண்டிருந்தவளைப் பின்னாலிருந்து அணைத்தான் ராவண்.
”ம்ம்..?” மெல்ல அசைந்தாள்.
”தூங்கிட்டியா?”
” இல்ல..”
”ரொம்ப அமைதியா இருக்க.. ?”
”யோசனை..”
”என்ன யோசனை.. ?” அவன் கை அவள் இடையில் ஊர்ந்தது. அவன் முகத்தை அவள் கூந்தலுக்குள் புதைத்துக் கொண்டான். ஆழமாய் மூச்சை இழுத்து வாசம் பிடித்தான். அவள் கிறக்கத்தில் அவனை இறுக்கினாள். சிறிது நேரம் அமைதியாக கொஞ்சிக் கொண்டனர்.
அவனின் தொடுதலில் அவளின் யோசனைகள் எல்லாம் கரைந்து போயின..
இருவரும் ஒருவரில் ஒருவர் உருகிக் கரைந்த படி அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்தனர்.
ஜன்னல் வழியாக உள்ளே பரவிய சூரிய வெளிச்சம் அவள் கண்களை உறுத்தியது. மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.. !! அவளுக்கு எழுந்திருக்க மனமில்லை. இன்னும் நன்றாக தூங்க வேண்டும் என்று அவளது உடம்பும் விரும்பியது
அவள் பக்கத்தில் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்த ராவண் அவள் தலை மீது கை வைத்து தடவியபடி மெல்ல அழைத்தான்.
“ஆரா..!
”ம்ம்..” முனகினாள்.
”மணி என்ன தெரியுமா.. ?”
”வாட்சைப் பாருங்க தெரியும். ”
”நான் பாத்தாச்சு. நீயும் கொஞ்சம் பாரு..” என்று அவள் கன்னத்தை தடவினான்.
மெல்லப் புரண்டு கண்களை மூடியபடியே தலையை தூக்கி அவன் மடி மீது வைத்தாள். அவன் இடையை வளைந்தவள் மெல்ல முனகினாள்.
”நான் டைம் பாத்து என்ன பண்ண போறேன் இப்ப..? லீவுதான எனக்கு?”
“லீவு முடிஞ்சு ஒரு நாள் ஆகுது டி.. போதும்டி தூங்கினது. ”
”ம்கூம்.! பத்தலை. இன்னும் கொஞ்ச நேரம் என்னை தூங்க விடுங்க” என்றவள், அவன் லீவு முடிந்தது என்றதும் சட்டென்று அவனை திரும்பிப் பார்த்தவள் “ஆமா இன்னைக்கு என்ன டேட்?” என்றாள் அதிர்ந்து..
அவன் விரல்கள் மெதுவாக அவளது இதழ்களை வருடின.
”அதான் நைட்டே சொன்னேன் ஞாபகம் இல்லையா?” என்று கேட்டதும் அவள் இல்லை என்று தலையசைத்தாள்.
“கொஞ்சம் நேரத்துலயே தூங்கலாம்னேன். நீதான் கேக்காம..” என்று அவன் நமட்டு சிரிப்பு சிரிக்க.. அவன் வாயை பொத்தினாள் அவசரமாக. அதில் அழுத்தமாக முத்தம் கொடுத்தவன்,
“பட்.. உன் பர்ஃபார்மன்ஸ் வேற லெவல்” என்று அவன் சிலாகிக்க..
“அச்சோ..!” என்று கண்களைத் மூடி புன்னகைத்தாள். அவன் விரல்கள் அவளது இதழ்களுக்கு இடையில் புதைந்தது.
மெல்ல அவள் கழுத்தில் கை போட்டு அவளது முகத்தை பக்கத்தில் இழுத்தவன். அவள் முகத்தில் வந்து மோதிய அவனது மூச்சுக் காற்றும் சூடாக இருந்தது. அவனது முத்தத்தை எதிர் பார்த்து மெல்லக் கண்களை மூடினாள். அவன் உதடுகள் முதலில் அவள் இதழின் ஓரத்தில் பதிய.. அவன் கை அவள் இடுப்பை வளைத்து தன்னுடன் சேர்த்து அணைத்தது. அவள் கிறங்கினாள். அவன் இன்னும் இறுக்கி அணைக்க வேண்டுமென அவள்
நெஞ்சம் ஏங்கியது. அவன் உதடுகள் அவள் உதட்டில் பொருந்தியது. அவன் உதடுகள் அவளது உதடுகளைக் கவ்வி இழுத்து.. மெதுவாகச் சுவைத்தன..!
அதன் பின் அவளுக்கு நாளும் நேரமும் எங்கே ஞாபகம் வர?
😍😍😍🥰🥰🥰🥰🥰
Nice