கண்ணம்மா 8
ஆதித்தின் இந்த செயலில் பேரிளம் பெண்கள் ஆவென்று திகைக்க..
மடந்தை அரிவை பெண்களோ கலுக்கென்று சிரித்து வைக்க..
அப்பத்தாவோ… பெண்களின் இந்த சிரிப்பு பார்த்ததும் அணுக்குண்டாய் இருந்தவர் சரவெடியாய் பொரிந்து தள்ளி விட்டார்.
"பொண்ணுங்களா டி நீங்க? பொண்ணுகனா பொறுப்பு இருக்கணும்.. சிரிப்பு இருக்க கூடாது!
பொண்ணுகனா பொறுமை இருக்கணும்.. போக்கிரித்தனம் இருக்க கூடாது!
பொண்ணுகனா பட்டுக் கோப்பு இருக்கணும்.. கண்டபடி திரியக்கூடாது!" என்று அவர் சொற்பொழிவாற்ற…
அனைவரும் இப்பொழுது ஆதித்தை முறைத்தனர் எல்லாம் உன்னால தான் என்று!!
"இந்த பாட்டி நம்ம ஃப்லோவ சொதப்பி விட்டுடுச்சு.. பேட் பாட்டி" என்று பார்த்தவன் "குகன் எங்க தீப்ஸ்?" என்று கேட்க..
அவளோ சித்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு "அவன் வெளியில் போயிருக்கியான்.. கொஞ்ச நேரத்துல வந்துருவியான்" என்றாள்.
"அவன் வர நேராகுமா? சரி! அப்ப நீ கிளம்பு! நாம வெளிய போயிட்டு வரலாம்" என்றதும் 'என்னது வெளியில கிளம்பறதா?' என்று அவள் அதிர்ந்து அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சித்தியின் பின்னே நின்று அவனை முறைத்தாள். கைகளை காட்டி 'கொன்னுடுவேன்..!' என்று மிரட்டினாள்.
"சத்தமாக சொல்லு தீப்ஸ்... நீ என்ன சொல்றேனு புரியல.." என்று ஆதித் சத்தமாக கூற, மெதுவாக திரும்பி பார்த்தார்கள் மரகதவல்லியும் வைதேகியும் அவளை. அங்கே அமைதிப் பெண்ணாய் சாதுவாக நின்று இருந்தாள் தாரா.
"இதுதான் உங்க டக்கா ஆன்ட்டீஸ்?" என்று அவன் சிரிக்க.. கொலை வெறியோடு அவனை முறைத்தாள் தாரா.
"அப்ப நீ வர மாட்ட இல்ல.. சரி.." என்று வர்ஷினி மஞ்சரி விஷாகா மூவரையும் பார்த்தவன், "நான் என் குட்டி சிஸ்டர்-இன்-லாவா கூட்டிட்டு போகட்டுமா.. ஆன்ட்டீ?"'என்று கேட்டதும் வைதேகி பார்த்த பார்வையில் மூவரும் குனிந்த தலை நிமிரவே இல்லை.
"என்னது இது யாரும் வரமாட்டேங்குறிங்க? என்ன நல்லா பாத்துக்கிறேன் சொல்லி தானே தங்க வச்சிங்க..இப்போ என் கூட திங்ஸ் வாங்க வர மாட்டேன்னு சொன்னா எப்படி? நான் என்ன பண்ணுவேன்? தெரியாத ஊர்ல எங்க போய் தேட?" என்றவன் "ஹாய் பியூட்டி நீங்க வரிங்களா என்கூட?" என்று எதிரே இருந்து அப்பத்தாவை பார்த்து கண்ணடித்து கேட்டான். அதுவும் மெதுவாகத்தான்…
ஆனால் அவன் ஏதோ தன்னை வம்பு இழுக்கிறான் என்று புரிந்த அப்பத்தாவோ "எடு அந்த உருட்டு கட்டைய.. " என்று ஆரம்பிக்க..
"ஓகே யாரும் வர வேணாம்! நானே போய் நான் இன்னாரு.. இன்னாரு.. இன்னாரு வீட்டுக்கு வந்து இருக்கேன். இன்னார் எனக்கு இன்ன உறவு வேணும்னு.. சொல்லி விசாரிச்சு.. எனக்கு தேவையானதை வாங்கிட்டு வந்துடுறேன்.. வரட்டா பியூட்டி" என்றவன் போல அப்பத்தாவின் தண்டட்டியை சுண்டி விட்டு வாயில நோக்கி நடந்தான்.
வெளியில் போனவனை பார்த்து அதிர்ந்த வைதேகியும் மரகதவல்லியும்..
"ஏய்.. புடிங்கி டி அந்த தம்பிய.. அவரு பாட்டுக்கு வெளியில போய் எதையாவது சொல்லி தொலைஞ்சா.. உங்க அப்பாருங்க வந்து நம்மள கண்டத்துண்டமா கூரு போட்டுருவாய்ங்க.." என்று வைதேகி கத்த.. தாரா வர்ஷினி மஞ்சரி விசாகா மூவரும் ஓடி சென்று அவனைப் பிடித்தனர்.
"வாவ்.. வாவ்.. கோபிகள் சூல் கோவிந்தனாய் நான்.. சூப்பர்… வாங்க வாங்க எல்லோரும் போகலாம்" என்றவன் அவர்கள் அனைவரையும் அப்படியே வாசல் நோக்கி இழுத்துச் செல்ல..
"அச்சச்சோ.. வைதேகி கெட்டுது குடி.. போய் அவகள நிறுத்துடி!" என்று மரகதவல்லி கத்த..
"ஏய். பொண்ணுங்களா நில்லுங்க.. நில்லுங்க டி!" என்று வைதேகி கத்திக் கொண்டே செல்ல..
"ஏதோ நாங்களா ஆசைப்பட்டு போன மாதிரி எங்கள குத்தம் சொல்றீக.. மச்சான் தான் எங்கள கூட்டிட்டு போறாரு" என்று விசாகா சிரித்துக் கொண்டே கூறினாள்.
"அக்கா.. நீங்களும் வாங்க.. வெரசா வாங்க கா.." என்று வைதேகி கத்த.. தனது பெரிய சரீரத்தை தூக்கி கொண்டு மரகதவல்லியும் வர
இப்பொழுது வைதேகியும் மரகதவல்லியும் ஆதித்தின் இரு புறமும் உள்ள மகள்கள் பக்கம் ஆளுக்கு ஒருவராய் நின்று மகளின் கையை பற்றினர்.
அவர்கள் அவனை பின்னுக்கு இழுக்க…
அவன் அவர்களை முன்னுக்கு இழுக்க…
இப்படியாக இரு தரப்பினரும் மாறி மாறி இழுத்துக் கொண்டிருக்கும் நேரம் தான் ஆண்கள் மூவரும் உள்ளே வந்தது.
"என்ன நடக்குது இங்கன?" என்று கதிர்வேலன் கர்ஜிக்க..
"அது ஒன்னுமில்ல மாமா… சும்மா போர் அடிக்குதுன்னு விளையாண்டுக்கிட்டு இருந்தோம்" என்று வடிவேல் தொணியில் ஆதித் பதிலளிக்க..
குகனோ முட்டி வந்த சிரிப்பை வாய் மூடி அடக்கிக் கொண்டான். வேலவன் பிரதர்ஸ் இருவரும் தங்கள் மனைவிகளை முறைத்தனர். அவர்கள் சற்று என்று மகளைப் பற்றி இருந்த கைகளை விடுவிக்க.. அடுத்தடுத்து மகள்களும் ஒவ்வொருத்தராக பற்றி இருந்த கையை விடுவிக்க.. கடைசியாக ஆதித்தின் கையை விடுவித்தனர்.
"என்ன எல்லாரும் விட்டுட்டீங்க? அப்போ நாம போகலையா?" என்று திரும்பி அவன் கேட்ட தினுசில் "ஐயையோ மாட்டி போறோம் அப்பா கிட்ட" என்று பயந்தனர்.
அதற்குள் குகன் வந்து "உங்கள கிளம்பி இருக்கங்க.. நான் வந்து வெளியில கூட்டிட்டு போறேனு சொன்னேனே.." என்றான்.
"நான் கிளம்பி வந்து ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகுது. நீ வருவ வருவனு பார்த்து வரல.. அதுதான்.." என்று அவர்களை கண்ண காட்ட செந்தில்வேலனோ கோபத்தில் கனன்று "மொதல்ல இவர கூட்டிட்டு கடைக்கண்ணிய காட்டிட்டு வா குகா.." என்று கடுகடுப்போடு சொன்னவர், மனைவி மக்களின் புறம் திரும்பினார்.
இவர்கள் வாயிலை தாண்டும் போது செந்தில்வேலனின் உரக்க கத்தும் சத்தம் கேட்டது.
"ஏன் உங்க பெரியப்பா இவ்வளவு டென்ஷன் ஆகிறார்?" என்று குகனை பார்த்து கேட்டான். ஆதித்தை பொருத்தவரை இது ஒரு சிறு விளையாட்டு போல தான். ஆனால் அவர்களால் அதை எப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை.
"பின்னே நாங்க வந்தபோது நீங்க நின்ன நிலைமையை பார்த்து டென்ஷன் ஆகாம குளுகுளுனு இருக்கும்" என்றவனை நேருக்கு நேர் பார்த்த ஆதித் "எதுவும் நாம் பார்க்கிற பார்வையிலே தான் இருக்கு குகன்" என்றான் ஆழ்ந்த குரலில். குகனுமே சிறிது நேரம் அந்த குரலில் கட்டுண்டு இருந்தான்.
இவன் பணக்காரன் என்பதால் அதற்கு தகுந்த மாதிரி கடைக்கு செல்ல "இதெல்லாம் வேணாம் குகன். நீ எங்க எடுப்பியோ அங்கேயே கூட்டிட்டு போ.. நான் இங்கே இருக்கிற வரைக்கும் உங்களில் ஒருவனா தான் இருக்க விரும்புறேனே தவிர.. உங்கள்ட்ட இருந்து வேறுபட்டு இல்ல" என்றதும் அவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே எப்பொழுதும் தான் எடுக்கும் கடைக்கு அழைத்துச் சென்றான் குகன்.
தனக்கு தேவையான உடைகள் உள்ளாடைகள் கூடவே மொபைல் ஃபோன் ஒன்றையும் வாங்கிக் கொண்டு வந்தான்.
அன்று இரவு ஆதித்துக்கு உணவை அவர்கள் அறைக்கு கொண்டு வந்து கொடுத்தான் குகன்.
"ஆமா இப்படி சாப்பாடு இவங்க ரூமுக்கே கொண்டு வந்து கொடுத்தா.. நான் எப்படி மத்தவங்களோட பழகுறது? அவங்க மனசு கவருறது? திங்க் ஆதித் .. திங்க்!" என்று யோசித்தவன் "நாளைக்கு இதுக்கு ஒரு அதிரடி செய்வோம்" என்று சிரித்துக் கொண்டே அன்றைய உணவை முடித்தான்.
மறுநாள் காலை இவன் தங்கி இருக்கும் அறைய சுத்தம் செய்ய கையில் விளக்கமாரோடு வந்து நின்றாள் தாரா.
பாவாடை தாவணியில் அம்சமாய் அழகாய் கூடவே பாவாடையை சற்று தூக்கி இடுப்பில் சொருகி இருக்க அதில் சற்று கவர்ச்சியாய் காலையிலேயே தரிசனம் தரும் அவனது தாரகையை தான் பார்த்திருந்தான் ஆதித் கண்கள் மின்ன..
பளிச்சென்று வெளிப்பட்ட மெல்லிடையே பார்த்துக் கொண்டே "வாவ்.. வாட் அ வொன்டர்ஃபுல் மார்னிங் தீப்ஸ்!" என்று அவளை அருகே இழுத்தான்.
"சும்மா இருங்க நிக்.. அன்னைக்கே சொல்லி இருக்கேன் தானே" என்று அவள் பின்வாங்க..
"நீ சொன்ன தான். ஆனா இந்த பாழாப்போன மனசு கேட்க மாட்டேங்குதே தீப்ஸ்.. ஒரு வருஷமா உன்னோட அணைப்பிலேயே தூங்கிட்டு இன்னைக்கு தனியா தூங்குடான்னு சொன்னா.. எப்படி தூக்கம் வரும் தீப்ஸ்? நீயே சொல்லு?" என்று அவள் தோளில் முகத்தை சாய்த்து கொண்டான்.
"ஐயோ.. சொக்கா!! நேத்தே நீங்க பண்ணின கூத்துக்கு நைட்டு அப்பாரு அவ்வளவு திட்டு எங்கள தெரியுமா?" என்றதும் பக்கு என்று சிரித்தான்.
"நீங்க அக்கா தங்கிச்சிங்க எல்லாம் உங்க சித்தி சொன்னாங்கன்னு நீங்களா வந்து என் கைய புடிச்சு இழுத்து விளையாண்டுட்டு.. என்னை குத்தம் சொல்லுவிஙகளா? நான் என்ன பண்ணுனேன் தீப்ஸ்.." என்று சிரிப்போடு அவன் கேட்க..
'ஆமாமில்ல.. இவன் ஒன்னும் பண்ணலை தானே.. நாங்க போய் தானே அவன் கையை புடுச்சோம்' என்று அப்போதுதான் அவளுக்கு புரிய பாவமாய் பார்த்தவளின் அழகு அவனை கொள்ளை கொண்டது.
"இந்த அவுட் பிட்டுல கொள்ளை அழகா இருக்கு தீப்ஸ் நீ" என்று அவள் கன்னத்தை நெருங்க.. அவனை விட்டு தள்ளி வந்தவள்,
"பார்த்து சைட் அடிச்சது போதும்! தள்ளியே நில்லுங்க.. ஏற்கனவே இங்கே என்னைய கூட்ட அனுப்பிட்டு இந்த ரூம் வாசலையே பார்த்துக்கிட்டு இருக்காங்க எங்க அப்பத்தா" என்று அவனை தள்ளி நிறுத்தினாள் பெண்ணவள்.
"ஆஹான்.. அப்படியா?" என்றவன் அரை வாசலில் இருந்து எட்டிப் பார்க்க அப்பத்தான் வழக்கம் போல சாய்வு நாற்கரையில் அமர்ந்து இந்த அறையைத்தான் கண்கொத்தி பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். இவனோ வேண்டுமென்றே அவரைப் பார்த்து ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்ப.. அவ்வளவுதான் அப்பத்தா எழுந்து அந்த பக்கம் ஓடி விட்டார்.
மெல்ல கதவை சாத்திவிட்டு அவள் அருகே நெருங்கியவன் "தீப்ஸ் ஒரே ஒரு டீப் கிஸ்" என்றான்.
"நோ.. நோ.. நிக்.. பாருங்க நான் குளிச்சிட்டேன். இப்படி டர்ட்டி வேலையெல்லாம் பார்க்க கூடாது. ஸ்டே அவே"
"அப்படி எல்லாம் தள்ளி நிக்க முடியாது. வேணும்னா வா ரெண்டு பேரும் சேர்ந்து இன்னொரு டைம் குளிச்சுக்கலாம்" என்றவன் அவளை ஸ்பரிசிக்க போக…
"நோ நோ… நிக்"
"ப்ளீஸ்.. ப்ளீஸ்… தீப்ஸ்"
"இதுக்கு அப்புறம் கீழ போனா நீ என்னை கிட்ட நெருங்கவே விடமாட்டா.. உன்னோட ஸ்பரிசம் வேணும் தீப்ஸ்" என்று கெஞ்சினான்.
"அப்போ ஒரே ஒரு கைக்கு மட்டும் தான் பர்மிஷன் நிக்!" என்றாள். ஒரு கையால் உன்னால் என்ன செய்து விட முடியும் என்று கெத்தாக பார்த்தாள் பெண்.
"ஒரு விரலால் தானே.." என்று அவளைப் பார்த்து ரகசியமாக சிரித்தவனின் ஒற்றை கை தனது ஊர்வலத்தை நடத்தியது பெண்ணவளின் இளமை செழுமைகளில்!
"கண்ணுக்கு விருந்தா இருந்து என்ன புண்ணியம்? என் உணர்வுகளுக்கும் விருந்து வேணுமடி தாரா.. இத்துணை தூரம் பல இடைஞ்சல்களை கடந்து வந்தது எதற்காம்? நின் ஸ்பரிசங்களை தீண்டி மோட்சம் பெறுவதற்கே.." என்றவனின் ஆழ்ந்த குரல் எதையோ உணர்த்த.. எவற்றையோ உள்ளுக்குள் உருக வைக்க… தனை மறந்து அவனது காதல் வழியும் கண்களில் கட்டுண்டு கிடந்தாள் காரிகை!
அவனது கண்களில் அவள் கண்களோடு கவிதை பேசினாலும் விரல்களோ அவளை வீணையென மீட்ட தொடங்கியது. அவன் உணர்ந்த மென்மையை கண்டு இவள் நாணமுற்று அவனது ஒற்றை கையை இரு கைகளால் சிறை பிடித்துக் கொள்ள..
"உன்னை உணர்வதற்கு எனக்கு ஒற்றை விரல் போதுமடி!" என்றவன், அவளது அழகிய முக வடிவை அளக்கலானான் ஒற்றை விரல் கொண்டு! கொஞ்சம் கொஞ்சமாக அவ்விரலின் வெம்மை அவளுள் கரையக் தொடங்க.. கண்களை மூடி இதழ்கள் கடித்து நின்றது அங்கே பெண்மை!
அவளது மாம்பழ கன்னங்களை தீண்டி தாண்டி.. கூர் மூக்கை நிமிண்டி.. ஆரஞ்சு சுளை இதழ்களை இரக்கமின்றி ஆக்கிரமித்து.. மெல்ல மெல்ல அன்ன நடை பயின்று அவளது பச்சை நரம்புகள் ஓடும் வெண்பட்டு கழுத்தில் உறவாடி.. அதற்கும் கீழே பிறை நிலவில் சின்ன குழந்தை தத்தி தத்தி நடை பயில… ம்ஹூம்… அதற்கு மேல் அனுமதிக்காது அவனது விரலை இரு கைகளால் பற்றித் தடுத்தவள், சிவந்த முகத்தை அவன் மார்பிலேயே புதைத்துக் கொண்டாள்.
அவளை நாணத்தைக் கண்டு அவனுக்கு ஆணின் கர்வ சிரிப்பு! சற்று சத்தமாகவே அவன் சிரிக்க…
"பொறுக்கி.. பொறுக்கி.. என்ன எல்லாம் பண்ற நீ?" என்று அவனை இரண்டு கைகளிலும் ‘ பட்.. பட் ‘ டென அடித்தாள்.
அவள் அடிகள் அவனுக்கு சுகமாக இருந்தது. அவள் அடிக்கும் போது அவளது முந்தானை ஒதுங்கியது. அந்த இடைவெளியில் அவளின் இடது பக்க இளமையின் செழுமையும்.. சற்று கீழே எடுப்பாய் நிற்கும் இடுப்பும் படு கவர்ச்சியாக தெரிந்தது!
அவன் பார்வை எங்கே மேய்கிறது என்பதை உணர்ந்தாள். ஆனால் தாவணியை சரி செய்யாமல்..
”அங்க என்ன டா பாக்கற.. அங்க என்ன பாக்கற.. டர்ட்டி மைண்ட் நிக்?” என்று நிறுத்தாமல் அவனை அடித்தாள்.
சுகவலிகள் தான் அவளின் தளிர் விரல்கள் கொடுக்கும் அடிகள்! வலிக்கவில்லை என்றாலும் அவள் கைகளை தடுப்பது போல அவன் கைகளை வைத்துக் கொண்டு அவளோடு மல்லுக்கு நிற்பது போல.. கட்டிலில் பின்னால் சரிந்தான்.
அவளுக்கு கை எட்டி அடிக்க கஷ்டமாக இருந்தது. அவன் கால்களுடன் அவளது கால்கள் அழுந்த.. முன்னால குனிந்து அவனை அடித்தாள். அந்த விளையாட்டு சில பல நொடிகள் தொடர.. சட்டென ஆதித் அவள் இடையைப் பிடித்தான். அவ்வளவுதான் அடுத்த நொடியே அவன் மேல் சரிந்து விழுந்தாள் பாவை.
எந்த முயற்சியும் செய்யாமலே இருவரின் உதடுகளும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டன..!!
உறவாடிக் கொண்டன..!
உணர்வுகளை பேசிக் கொண்டன..!!
அவன் மேல் சாய்ந்தவளின் உதடுகள் இன்னும் அவன் உதடுகளைத் தொட்டுக் கொண்டு தான் இருந்தது. முதலில் அவள் உதடுகளை முத்தமிட பயந்தான்.
ஏனென்றால் அவனின் உணர்வுகள் ஒற்றை முத்தத்தோடு நிற்பவை அல்ல.. மொத்தத்தையும் வேண்டும் என்று கேட்டு நிற்பவை!
அவளோ உதடுகளை விலக்காமல் அப்படி
யே வைத்துக் கொண்டிக்க.. அவன் உதடுகள் அவளின் மெல்லிய வெல்வெட் உதடுகளைக் கவ்விச் சுவைக்க ஆரம்பித்தது. தாராவின் கண்கள் தானாக மூடின..!
