கண்ணம்மா 7

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

கண்ணம்மா 7

 

அப்பத்தாவின் வெண்கல குரலோ அந்த வீதிக்கே கேட்கும் சிங்க குரல்..! அப்படியிருக்க மேல் மாடியில் உள்ளவர்களுக்கு கேட்காது இருக்குமா??


"அய்யய்யோ…‌" என்ற அலறி அவனிடமிருந்து பிரிந்து அவள் துள்ளி தள்ளி நின்றாள்.

 

"என்ன டி?" என்று சாக்லேட் பிடுங்கப்பட்ட சிறு பிள்ளையாய் ஆதித் அதிர்ந்தவன், அவனிடமிருந்து பிடுங்கப்பட்ட அந்த எச்சில் ஈரம் பளபளத்த அந்த செர்ரி உதடுகளை ஏக்கத்தோடு பார்த்தான் ஆதித்.

 

"என்னது என்னடியா? நாம இப்போ எங்க இருக்கோம் தெரியுமா? எங்க வீட்ல இருக்கோம் நிக்" என்று அதிர்ந்து கூறியவளை பார்த்தவனுக்கு அவளின் அந்த பயமும் பதட்டமும் பிடித்து போக.. மென் புன்னகையோடு இன்னும் சாவகாசமாக சென்று அவளது படுக்கையில் அமர்ந்தான்.

 

"நிக்.. நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்.. நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இப்ப நாம இருக்கிறது எங்க வீடு.. நீங்க என்னமோ மாப்பிள்ள விருந்துக்கு வந்த மாதிரி சாவகாசமா வந்து உட்கார்ந்து இருக்கீங்க.. ஐயோ வீட்ல யாராருக்கு தெரிஞ்சுச்சு என்னன்னு தெரியலையே.. கிளம்புங்க முதல்ல.. கிளம்புங்க.." என்று அவள் நிலைக்கொள்ளாமல் அவசரப்படுத்த…

 

"ஆஹான்.. பொண்டாட்டி.. அப்படியெல்லாம் போக முடியாது" என்று அவளது மெத்தையில் சாய்ந்தவாறு காலாட்டிக் கொண்டே அமர்ந்தவன்.. தன் மடியை கண்களால் காட்டி "முதலில் இங்க வந்து உட்காரு தீப்ஸ்.. உன்கட்ட கொஞ்சம் பேசணும்" என்றான்.

 

"என்னது?? அங்கன வந்து உட்காரணுமா?" என்று அதிர்ந்தவள், "முதல்ல இங்க இருந்து கிளம்புங்க நிக்.. உங்கள வீட்ல உள்ளவங்க பார்த்தாய்ங்க.. நீங்க அவ்வளவுதான்!" என்று அவன் கையைப் பிடித்து இவள் எழுப்ப முயல.. அவனோ இழுத்தவளின் கையை தன் புறம் இழுக்க அவன் மேலே பூ மாலையென வந்து விழுந்தாள் மாது.

 

தன் மேல விழுந்தவளின் இடைப்பற்றி அழுத்தமாக அணைத்து தன்னோடு இறுக்கி மடியிலேயே அமர்த்திக் கொண்டான். தேவி லெட்சுமியாய் அவள்.. அவளை ஆசையாய் தன் மடி மீது அமர்த்திக் கொள்ளும் பூவராக பெருமாளாய் அவன்.. அவ்வளவு பாந்தமாய் அவர்கள் இருவரும்!!

 

தன்னை மடியில் அமர்த்தி ஏதேதோ செய்யப் போகிறான் என்று ஏக கனவுகளோடு அவனை பார்த்தாள். ஆதித்தோ.. அவளை இறுக்கி அணைத்து தன் நெற்றியோடு அவள் நெற்றியை மூட்டி அமைதியாக இருந்தான்.

 

ஆனால் அந்த அமைதிக்கு பின்னே தான் எத்தனை எத்தனை காதல்! தன் சுவாசம் சேர்ந்த எத்தனை‌ எத்தனை ஆசுவாசம்!

 

அவளை பிரிந்து அந்த கணத்தில் அவன் மனதில் ஏற்பட்ட பயம்.. கலக்கம்.. பதட்டம் அனைத்தையும் தன்னவளின் அருகில் தீர்த்துக் கொண்டிருந்தான். அவள் சுவாசத்தை இவன் சுவாசமாய் கொண்டு!!

 

பெண்களுக்கு தான் எத்தனை வலிமை! எப்படிப்பட்ட ஆணவனையும் தன் ஒற்றை பார்வையால்.. அள்ள முடியா அன்பால்.. வானம்‌ அளவு நேசத்தால்.. முந்தானையில் கட்டி சொருகிக் கொள்ளும் இந்த வித்தையை யார் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது??

 

ஆல் மேட் பை பர்த்!

 

ஆஸ்திரேலியாவில் ஆண் பெண் பேதம் இல்லாமல் பழகும் நாட்டில் கூட யாரையும் ஒற்றை பார்வை பார்க்காமல்.. தானும் தன் கம்பெனியும் இணைபிரியாத இணை என்று சுற்றி திரிந்தவனை கண்ட எத்தனையோ வெள்ளைக்கார அழகிகள், அவனை திராவிட நிறத்தையும்.. குழி விழும் கன்னத்தையும்.. மேன்லி லுக்கையும்.. அவன் பின்னே இருக்கும் பணத்தையும் கண்டு ஒரு நாள் இரவை கூட கழிக்க முன்வந்த போது.. அனைத்தையும் தவிர்த்து 'நான் ஆதித் நிகேதன்! அவ்வளவு சாதாரணமா உனக்கு நான்? என்னை எளிதில் நெருங்கி விட முடியுமா?' என்று சூரியன் சுட்டெரிப்பது போல சுட்டெரித்தவனை தன் குளுமை நிறைந்த பார்வையால் கொள்ளையடித்த நிலவு தான் அவள்.. தீபதாரா!

 

இல்லாவிடில் இப்படி தன்னை தூக்கியவர்களை எல்லாம் ஒரு வழி பண்ணாமல், ஏன் எதற்கு என்று அலசி ஆராய்ந்து பொறுமை காப்பவன் இல்லை ஆதித்.

 

அவன் தந்தையின் வலிமை கொண்டு என்றோ இவர்களுக்கு செய்ததற்கு திருப்பி செய்திருப்பான். ஆனால்.. இங்கே அவன் கட்டுப்பட்டு இருந்தது அவனின் தீபத் தாரகையின் காதலுக்கு மட்டுமே!

 

அவனின் காதல் கைக்கூட.. அதுவும் அனைவரின் சம்மதத்தோடு கைக்கூட வேண்டும் என்று தான் இத்தனை பொறுமையாய் இங்கே அமர்ந்திருக்கிறான். இவை அனைத்தையும் எதிர்க்கொள்ள அவனின் வலிமை.. பலம்.. எல்லாமே தாராவும்.. அவளின் காதலும் மட்டுமே!!

 

தாரகையின் சுவாசத்தை சுவாசித்து தன்னுள் நிரப்பி புது பலத்தை ஏற்றிக் கொண்டான் கோமகன்.

 

"இப்ப வா போகலாம்!" என்று அவளின் கைப்பிடித்து அழைத்து வந்தான். அறையின் வாயிலை தாண்டியதும் அவள் கையை உருவிக்கொள்ள முனைய.. 

 

அவனோ முறைப்பாக..

 

அவளோ கெஞ்சுதலாக…

 

அவனோ விடாக்கண்டனாக…

 

அவளோ பயந்தவளாக…

 

ஒரு கட்டத்தில் அவளை இடையோடு அணைத்து "இங்கே பார் தீப்ஸ்.. நான் இங்கே வந்ததது எப்படின்னு உனக்கு தெரியுமா?" என்று சுருக்கமாக மருது அவனை தூக்கியதில் இருந்து‌‌ வேந்தனும் கதிரும் அவனோடு பேசியது.. பின்பு கதிர் இங்கே அவனை விட்டு சென்றது வரை, அனைத்தும் ஒப்பிக்க.. ஆவேனென்று வாயை பிளந்து பார்த்திருந்தாள் தாரா.

 

"என்னால அவங்களை எதிர்க்க முடியாதுன்னு கிடையாது தீப்ஸ்.. எங்க அப்பாவோட அரசியல் பலம் இருக்கு. ஆனா அதை எனக்கு உபயோகப்படுத்த பிடிக்கல! ஒரு பெண்ணை பெத்தவங்களாக அவங்களுடைய உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடியுது. அந்த பயத்தை போக்கி நம்பிக்கை கொடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு தீப்ஸ்… அதனால அவங்க மனச நான் ஜெயிக்கிற இந்த விஷயத்துல.. எனக்கு நீ முழு ஒத்துழைப்பு தரணும்!" என்றதும் அவனது கைளை அழுத்தமாக பற்றி கொண்டு "என் மேல நம்பிக்கை இல்லையா நிக்.. உனக்கு?" என்று கேட்டாள் பரிதவிப்போடு.

 

"எனக்கு என் தீப்ஸ் மேல முழு நம்பிக்கை இருக்கு. ஆனா இப்படி தோளை தொட்டா சுணங்குறது.. கையை புடிச்சா இழுத்துக்கிறது.. இந்த மாதிரி எல்லாம் செஞ்சினா உண்மையிலே நான் ரொம்ப பாவம் டி தீப்ஸ்.." என்று அவளின் அருகாமையை வேண்டி நிற்கும் சிறுவனாய் அவன் பேச..

 

கண்கள் மின்ன சிரித்தாள் தாரா. "நாம எங்க இருக்கோமோ அதுக்கு தகுந்த மாதிரி இருக்கணும் நிக். இது ஆஸ்திரேலியா இல்லை.. மதுரை!! இங்கே பழக்கவழக்கங்கள் ரொம்ப ரொம்ப முக்கியம் நிக். உனக்கு ஆதரவா எப்பவும் உன் பின்னே நான் இருப்பேன் நிக். அதை இப்படி தோளோடு அணைச்சு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தான் காட்டணும் எல்லாம் கிடையாது. நிக்.. என்னை புரிஞ்சிப்பதானே?" என்று தன்னை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமே என்று அவள் கலக்கத்தோடு கேட்டாள்.

 

'அவள் சொல்வதும் நியாயம் தானே! 

பீ ரோமன் அட் ரோம்! என்பது போல மதுரை வந்ததும் பக்கா மதுரைக்கார மருமகனாய் மாற வேண்டியது தான்!' என்று புரிந்தவன், "இப்போ ஒரே ஒரு ஹக் மட்டும் தீப்ஸ்.. கீழே உன் சொந்தத்தை எல்லாம் எதிர்கொள்ள எனக்கு ஸ்ட்ரென்த் வேணும்!"' அழு குரலில் கூறியவனை சிரிப்போடு அணைத்து விடுவித்தாள்.

 

அவன் முன்னே செல்ல அவனுக்கு பின்னே சற்று வெளிறிய முகத்தோடு தான் சென்றாள். ஆனால் மனதுக்குள் "நிக்.. எதா இருந்தாலும் பார்த்துக் கொள்வான்!" என்று மலை போல தைரியம் இருந்தது.

 

கம்பீரமா இறங்கி வரும் ஆதித்தையும்.. அவன் பின்னே பம்மி பம்மி வரும் தாராவையும் தான் ஒட்டுமொத்த குடும்பமே பார்த்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நினைப்பில்..

 

அப்பத்தா தான் "எடுபட்ட பயலே.. என் பேத்தி அறையில என்னடா பண்ணுன" என்று ஆரம்பிக்க..

 

"அப்பத்தா.. சத்தம் போடாத" என்று குகன் அவரை அடக்கி அருகில் இருந்து இருக்கையில் அமர வைத்தான். பையன்கள் பேச்சுக்கு கூட மறு பேச்சு பேசுபவர் தன் கணவனையே உரித்து வைத்திருக்கும் குகன் பேச்சை மட்டும் சற்று காது கொடுத்து.. இல்லை இல்லை.. அவருக்கு நான் காது கேட்காது அல்லவா? அதனால் அவனின் அதட்டலை புரிந்து கொண்டு அமைதியாக இருப்பார்.

 

"ஸ்வீட் பாட்டி!" என்று இருக்கையில் அமர்ந்திருக்கும் கிருஷ்ணாமணியின் தாடையை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி பேசியவனை விநோத ஜந்துவாக பார்த்து கையை தட்டி விட்டார் அவர்.

 

"பொண்ணுங்களுக்கு.. இந்த ஊர்ல வரவர பாதுகாப்பே இல்ல!" என்று முணுமுணுப்போடு.. ஆதித் என்னது என்று அசடு வழிய பார்க்க.. 

 

இம்முறை அனைவரின் முகத்தில் புன்னகை ஆதித்தின் முகத்தைப் பார்த்து.

 

செந்தில்வேலன் தான் முதலில் தன் பேச்சை ஆரம்பித்தார். "இங்கே பாருங்க தம்பி.." என்று ஆரம்பித்ததும் "மாப்பிள்ள.." என்று அவன் எடுத்துக் கொடுக்க..

 

"அதெல்லாம் இப்ப சொல்ல முடியாதுங்க.." என்று சட்டென்று மறுத்தவர் மகளை ஒரு கடும் பார்வை பார்த்தார். அதில் அவள் பயந்து ஆதித்தின் பின்னால் நின்று அவன் புஜத்தை இறுக்கமாக பற்றி கொண்டாள்.

 

"என்னதான் உங்களுக்குள்ள ஏற்கனவே கல்யாணம் நடந்தாலும் அது இங்கன செல்லுபடி ஆகாது!" என்றதும், அவன் பேச வர அதனை கை நீட்டி தடுத்தார் செந்தில்வேலன்.

 

"வேந்தன் தம்பி பேச்சை மதிச்சு தான் உங்கள இங்கே வரச் சொல்லி இருக்கோம். இந்த ஒரு வாரத்துல உங்களோட நடவடிக்கைகள் எங்களுக்கு புடிச்சா.. புடிச்சா அப்புறம் பார்த்துப்போம். அப்படி இல்லைன்னா.. வந்து சுவடு தெரியாம நீங்க உங்க ஊரு பாக்க போகணும். அதுக்கு பின்னே என் பொண்ணுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது" என்றதும் "உங்க பொண்ணா?" என்று அவளைப் பார்த்தவன் "தீப்ஸ்.. என் பொண்டாட்டி!" என்றான் வீம்பாக..

 

"அந்த பொண்டாட்டி.." என்று ஏதோ கதிர்வேலன் ஆவேசமாக பேச வர அவரை அடக்கிய செந்தில்வேலன்.. 

"கதிரு வாய அடக்கு!" என்று தம்பியை கண்டித்து விட்டு ஆதித் புறம் திரும்பினார்.

 

"இங்கன உங்களுக்கு எல்லா வசதியும் கிடைக்கும். ஆனா.. வெளிய மக்க மனுசரை பார்த்தா.. யார்கிட்டயும் தீபாவ பத்தி எந்த பேச்சும் நீங்க எடுக்க கூடாது! சொந்தக்காரவுகனு மட்டும் சொல்லி வைய்ங்க போதும்" என்றார்.

 

'இதையெல்லாம் தெரிந்து தானே வந்தோம்.. ம்ம்ம் சரி.. சமாளிப்போம்!' என்று நினைத்தவன் சம்மதமாய் அவருக்கு தலை அசைத்தான். திரும்பி தன் மச்சினிச்சிகளை பார்த்து "உங்க பேர் எல்லாம் என்ன?" என்று கேட்க..

 

"தீபவிசாகா.." என்று முந்திக்கொண்டு பேரைச் சொன்ன மகளின் தலையில் ஒரு கொட்டு கொட்டினார் வைதேகி.

 

"ம்மா.. என்னை எதுக்கு கொட்டுன? மச்சான் கேட்டதுக்கு தானே பதில் சொன்னேன்" என்று அழுதவளை இழுத்துக் கொண்டு தங்கள் அறைக்கு சென்று விட, மற்றவர்களும் இவனை ஒரு பார்வை பார்த்து சென்றனர்.

 

இப்பொழுது கூடத்தில் செந்தில்வேலன் கதிர்வேலன் மற்றும் குகன்.. ஓரமாக அமர்ந்து அப்பத்தா மட்டுமே இருக்க.. இன்னும் ஆதித் பின்னால் தான் நின்று இருந்தாள் தாரா.

 

அறைக்கு சென்று வைதேகி "தீபு.." என்று சத்தமாக குரல் கொடுக்க ஆதித்தை ஒரு பார்வை பார்த்தாள். அவன் தலை அசைத்ததும் "இதோ வரேன் சித்தி" என்று ஓடினாள்.

 

இவற்றையெல்லாம் ஆண்கள் மூவரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். பின் மகன் புறம் திரும்பிய செந்தில்வேலன் "அவருக்கான அறையை காட்டு குகா.." என்றார்.

 

மாடியில் இருக்கும் மற்றொரு அறையைத்தான் ஆதித்துக்கு காட்டினான் குகன். 

 

ஒரு நடுத்தர குடும்பத்திற்கு தகுந்த வசதிகள் அந்த அறையில் இருக்க "உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?" என்றவனை பார்த்து முறுவலோடு தலையசைத்தவன் "இப்போதைக்கு நல்லா தூங்க வேணும்.. தூங்கி முடிச்ச உடனே உங்க அக்கா வேணும்!" என்றதும் குகன் அவனை முறைத்து பார்க்க…

 

"நோ.. நோ.. நோ.. நோ டர்ட்டி மீனிங்! நான் மீன் பண்ணது வர அவசரதத்துல திங்க்ஸ் எல்லாம் எடுக்கல.. என்னோட போனை என்கிட்ட இல்லை. கொஞ்சம் அதெல்லாம் வாங்கணும் அதுக்கு தான் தீப்ஸ கேட்டேன்" என்றான்.

 

"அதுக்கு என்ன. உங்கள நான் கூட்டிட்டு போறேன். அக்கா எங்கேயும் உங்க கூட வெளியில் வரமாட்டா.. தூங்கி எழுந்து ரெடி ஆயிட்டு கீழே வாங்க நான் கூட்டிட்டு போறேன்.. இப்போ இதிலிருந்து நீங்க யாருக்கு பேசனுமோ பேசிக்கோங்க" என்று தன் ஃபோனை கொடுத்து சென்ற மச்சானை பார்த்து சிரித்துக் கொண்டான் ஆதித்.

 

 

அதன்பின் குகனின் ஃபோனில் இருந்தே அன்னைக்கு அழைத்து பேச.. அவரோ இப்படிப்பட்ட பொண்ணு வேண்டுமா என்று கேட்டார். மகன் அங்கே வசதி இல்லாமல் கஷ்டப்படுவான் என்ற ஆதங்கத்தில்..

 

 ஆனால் அருணாச்சலமும் "நீ கட்டுனா இந்த பொண்ணைத்தான் டா மகனே கட்டுற.. கட்டி தூக்கிட்டு வா" என்று முழு ஆதரவு கொடுக்க அதன் பின்னே தான் அவனுக்கு நிம்மதி. படுத்து உறங்கினான்.

 

 

இவன் தூங்கி எழுந்து வரும்போது அப்பத்தா மட்டுமே கூடத்தில் அமர்ந்திருக்க.. அவர் அருகே சென்று அவர் காதில் போட்டிருந்த தண்டட்டியை விரல்களால் சுண்டிவிட்டான். அவரோ தன் வெண்கல குரலை திறந்து அவனை வசைப்பாட.. சிரித்துக்கொண்டே எதிரில் அமர்ந்தான் ஆதித்.

 

அப்பத்தாவின் சத்தத்தில் அனைவரும் அடித்துப் பிடித்து ஓடி வர..

 

"அப்பாடி வந்துட்டீங்களா.. நீங்க எல்லாம் எங்க இருக்கீங்கன்னு தெரியல. எப்படி உங்களை கூப்பிடுவதுனு தெரியல.. அதுதான் அப்பத்தாவை லைட்டா இக்னைட் பண்ணினேன்.. சும்மா சொல்ல கூடாது அப்பத்தா அணுகுண்டு தான்! எப்படி வெடிச்சு உங்களை எல்லாம் கூப்பிட்டுட்டாங்க.. சூப்பர் அப்பத்தா நீங்க.‌ கிரேட் வாய்ஸ் உங்க

ளுக்கு!" என்றவனை ஆவென்று பார்த்தது வீடே..!!

 

அணுகுண்டோடு ஆரம்பித்தது அழகிய தீபாவளி அலப்பறைகள் அங்கே!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top