கண்ணம்மா 6

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

கண்ணம்மா 6

 

ஆதித்.. ஜெட் லாக் போக நன்றாக தூங்கியவன், புரண்டு படுத்து ஒற்றை கண்ணை திறந்து பார்த்தவன், அதிர்ந்தான்! அங்கே ஆஜானபாகுவாக கெடா மீசையோடு இரண்டு பெரு உருவங்கள் அமர்ந்திருந்தனர். திடுக்கிட்டு பயந்து அவன் எழுந்து உட்கார்ந்து பேந்த பேந்த விழித்தபடி இருவரையும் பார்க்க..

 

அவர்கள் இருவரும் "காப்பி சாப்பிட்டீங்களா அண்ணா? டீ சாப்பிட்டீங்களா அண்ணா?" என்ற ரேஞ்சில்.. " நல்லா தூங்கினிங்களா தம்பி? தூங்கி எழுந்துச்சிட்டீங்களா தம்பி?" என்று கோரசாக கேட்க.. ஆளுக்கும் வாய்ஸூக்கும் சம்பந்தமே இல்லாதவர்களை கண்டு அவன் குழம்பினான்.

இவன் மட்டுமா குழப்புகிறான்? இத்தனை வருடங்களாக இவர்களை வைத்து மேய்க்கும் கதிரும்தான் குழம்பி போய் இருக்கிறான்!! இவர்கள் என்ன டிசைன் என்றே தெரியாமல்… அவர்கள் வேற யாரும் இல்லை நம் கதிர்வேந்தனின் தட்.. அப்ரண்டீஸ்கள் தான்.

 

"என்ன தம்பி.. பயந்துட்டீகளா?" என்று அந்த கெடா மீசையை முறுக்கி கடகடவென்று கடோத்கஜன் மாதிரி ஒருவன் சிரித்தான் என்றால் அவனின் தம்பியாக மற்றொருவனும் சிரித்தான்.

"ண்ணே உங்கள கிளம்பி ரெடியா இருக்க சொன்னாக.. இப்ப வந்துருவாய்ங்க.." என்றான் ஒருவன்.

 

"உங்களுக்கு ஏதாவது வேணும்னா எங்கள வாங்கி தர சொன்னாய்ங்க" என்றான் மற்றொருவன்.

 

ஆனாலும் இருந்த இடத்தை விட்டு இருவரும் ஒரு இன்ச் கூட அசையாமல் அவனை பார்த்தபடி அமைந்திருக்க.. இவர்கள் முன்னால் எப்படி உடைமாற்றுவது என்று யோசித்தவன் "உங்க அண்ணன் அது மட்டும் தான் சொன்னாங்களா? வேற எதுவும் சொல்லலையா?" என்று சற்று நக்கலாகவே கேட்டான்.

 

இல்லையே என்பது போல தலை அசைக்க 'அடேய்ஸ்..!! உங்க ரெண்டு பேரும் முன்னாடி நான் ஃப்ரீ ஷோவா காட்ட முடியும்? எழுந்து போங்களேன் டா..!' என்று‌ மனதுக்குள் திட்டிக் கொண்டவன், வெளியில் மரியாதை "அண்ணுங்களா.. நான் குளிக்க போகணும். யூ நோ.. சின்ன வயசுல இருந்து எனக்கு ரொம்ப கூச்ச சுபாவம். நீங்க கொஞ்சம் வெளியில வெயிட் பண்றீங்களா? நான் குளிச்சிட்டு வந்த உடனே கதவை திறந்து உங்களை இன் கூப்பிடுகிறேன்" என்றான் பவ்யமாக..

 

உண்மையில் அவர்களின் அந்த கெடா மீசை ஆதித்தை பயமுறுத்த தான் செய்தது. அதனால்தான் இந்த பவ்யம். இவர்களை பற்றி தெரிந்தால் கொடுத்திருக்க மாட்டானோ என்னவோ? அவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு "நாங்க வெளியில் தான் இருப்போம். எங்கேயும் போயிடக்கூடாது. போயிட முடியாது" என்று எச்சரித்து விட்டு வெளியில் செல்ல…

 

"லூசா இவனுங்க? தீப்ஸ்.. உங்க ஊர்ல ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி இருக்காங்களே? எப்படி நான் சமாளிக்க போறேன்?" என்று புலம்பிப்படியே குளித்து தயாராகி வந்தான் ஆதித்.

 

அதற்குள் அவனுக்கு சாப்பாடு வந்திருந்தது சுட சுட இட்லியோடு நல்லி எலும்பு குழம்பு! 

 

இந்த புதுவித காம்பினேஷனை சற்று நன்றாகவே உண்டவன் தெம்பாகவே அமர்ந்திருந்தான் வரப்போகும் எதையும் சமாளிக்க..

ஒன்றல்ல.. ரெண்டு என்பது போல வந்து சேர்ந்தனர் வெற்றிவேந்தனும் கதிர்வேந்தனும்..

 

"குட் மார்னிங் ஆதித்..!" என்று‌ அவன் முன் இருக்கையில் தோரணையாக வேந்தன் அமர.. சற்று தள்ளி இவனை குறுகுறு பார்வை பார்த்தபடி அமர்ந்தான் கதிர்.

 

ஆதித், வெற்றிவேந்தனை மட்டும் தான் பார்த்திருக்கிறான் அல்லவா? கதிரை தெரியாது. இவனும் அவனை பார்க்க "நீங்க தான் தீபாவோட ஃபாரின் ஹஸ்பெண்டோ?" என்று கேட்க.. அவன் கேட்ட தினுசில் வேந்தன் கதிரை பார்க்க..

 

" சும்மா ண்ணே.. பொது அறிவை வளர்த்துக்கத்தான்" என்றவனை வேந்தன் கீழ் உதட்டை கடித்து அவனை முறைக்க.. அதற்கு மேல் கதிர் வாய் திறக்கவில்லை என்பது போல சைகை காட்டி அமைதியாக அமர்ந்து கொண்டான்.

 

"இந்த பார்த்தவுடனே காதல்.. காதலனே கண்கண்ட தெய்வம்.. அவன் சொன்னதே வேதம்! வீட்டுக்கு தெரியாத திருமணம்.. யார் வந்து கேட்க போகிறார்கள் என்ற லிவ் இன் வாழ்வு.. இதெல்லாம் தமிழ்நாட்டில குறிப்பா எங்க ஊர்ல செல்லுபடி ஆகாது ஆதித்" என்றதும் அதிர்ந்து வேந்தனைப் பார்த்தான் ஆதித்.

 

"எங்க ஊர்ல காதல் கல்யாணத்தை ஏத்துக்குவாய்ங்க தான்.. ஆனால் அதிலும் சில பேர் மட்டும் தான். மத்தவங்க எல்லாம் கௌரவம் தான் படுத்துவாய்ங்க.. எப்படின்னு கேக்குறீங்களா? கௌரவ கொலை.. ஆணவ கொலை.." என்று சில பல நியூஸ் வீடியோக்களை அவனிடம் காட்ட.. 

 

'மீடியோக்காரன் எனக்கே நியூஸா?' என்பது போல் சிரித்தவன் "இதெல்லாம் எனக்கு தெரியும். மூணு வருஷம் முன்னாடி நான் சென்னையில் சேனல் தானே வைச்சி நடத்திட்டு இருந்தேன். அதுல நியூஸ் சேனலும் அடக்கம் தான்.. அதானே.. என்னைப் பற்றி எல்லாம் தெரிந்து தானே நீங்கள் அழைத்து வந்திருப்பீங்க.. உங்க கிட்ட போய் சொல்றேன் பாருங்க" என்று மெலிதாக புன்னகைத்தான் ஆதித்.

 

"எஸ்..கரெக்ட்! எல்லாம் தெரிஞ்சு தான் அழைச்சிட்டு வந்தேன். இப்ப என்னன்னா மத்த பொண்ணுங்க மாதிரி எங்க ஊரு பொண்ணுங்க சட்டுனு மனச மாத்திக்கிற விதம் கிடையாது. உங்களை நாங்க பார்த்த வரைக்கும் எங்களுக்கு ஓகே.." என்றதும் ஆதித்தின் கண்கள் மின்னின..

 

"வெயிட்.. வெயிட்.. எங்க அண்ணே சொன்னது எங்களுக்கு தான் ஓகே! அவங்க குடும்பத்துக்கு இல்லனு" கதிர் கூறியதும் 100 வாட்ஸ் பல்பு போலமின்னியவன் முகம் பியூஸ் போன பல்பை போல சுணங்கி போனது.

 

"அந்த பொண்ணு கட்டுனா உன்ன தான் கட்டுவேன் ஒத்த கால்ல நிக்குது.. அப்படி என்ன இது இவன் கிட்ட இருக்கு?" என்று அவனை மேலும் கீழும் ஆராய்ச்சி பார்வை பார்த்தான் கதிர்.

 

 ஓடிசலான உயர்ந்த தேகம்.. ஆனால் வசம்பு மாதிரி உரமிக்க தேகம்! அடர்ந்த கற்றை மீசை இல்லை தான் ஆனால் அவனை மீசையும் இரண்டு வார தாடியும் அவன் முகத்திற்கு அத்தனை கம்பீரமாக இருந்தது. அதில் சிரிக்கும் போது ஒற்றை கன்னத்தில் விழும் குழி இன்னும் அவனை கவர்ச்சியாக காட்டியது.

 

"பரவால்ல நல்ல தான் இருக்கான். ஏதோ ஒன்னு இருக்கு போல இவன்ட்ட.. என்ன ணே?" என்று அண்ணனிடம் அவன் தன் அபிப்பிராயத்தை கூறிக் கொண்டிருக்க.. "கொஞ்சம் அமைதியா இரு கதிரு" என்று அதட்டினான் வேந்தன்.

 

"இப்போ அவங்கள என்னை பிடிக்க வைக்கிறதுக்கு நான் என்ன செய்யணும்?" என்று நேரடியாக விஷயத்தை பிடித்த வந்த ஆதித்தை மெச்சுதலோடு பார்த்தான் வேந்தன்.

 

"வெல்.. டூ ஆர் டைய் மாதிரிதான்! அந்த பொண்ணு அவங்க குடும்பத்தை விட்டுட்டு உன் கூட வராது. அதே சமயம் உன்னை விட்டு வேற யாரையும் கல்யாணமும் பண்ணிக்காது" என்றதும் இருமனமாய் உணர்ந்தான் ஆதித். 

 

ஒரு பக்கம் அவளின் காதல் அதுவும் தன்மீது மட்டுமே என்று சிறு கர்வமாய் உணர்ந்தாலும்.. அடுத்த நிமிடம் அவளுக்கு குடும்பம் முக்கியம் என்னை விட போல என்று சற்று பொறாமையாகவும் இருந்தது. அவர்களின் முகத்தைப் பார்த்து அகத்தைப் படித்த வேந்தன் "தட்ஸ் கேர்ள் திங்க்.. அது எங்க ஊரு பொண்ணுங்க அப்படித்தான்" என்றதும் தலையாட்டி ஆமோதித்து கொண்டான் ஆதித்.

 

"அஸ் அ மீடியா பர்சன் உங்களுக்கு சொல்ல தேவையில்லை. உங்க காதலியோட காதலை ஜெயிக்கிறது மட்டும் கிடையாது மொத்த பேமிலியோட நம்பிக்கையும் ஜெயிக்கிறது தான் உங்க உண்மையான காதல்" என்றதும் "ஆத்தி..!" என்று ஒரு பக்கம் நெஞ்சை பிடித்துக் கொண்டவன் "அவர்களெல்லாமா?? இவ்வளவு காதல் பத்தி புரிஞ்சு உங்களையே என்னால சமாளிக்க முடியல.. இதுல அவங்க மொத்த குடும்பத்தையுமா?" என்று அதிர்ந்தான்.

 

"வேற வழி இல்ல ராசா உனக்கு! பொண்ணு வேணும்னா குடும்பம் மொத்தத்தையும்.. ஐ மீன் அவங்க மனசு எல்லாம் நீ ஜெயிச்சு தான் ஆகணும். தட் இஸ்ட்! நோ வே.." என்று தோளை குலுக்கு ஸ்டைலாக கதிர் பேச பாவமாய் வேந்தனை பார்த்தான் ஆதித்.

 

"தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அதுக்குள்ள அவங்க வீட்ல இருந்து அவங்க எல்லாரோட மனசு ஜெயிச்சு.. அவங்க பொண்ணு கல்யாணம் பண்ணிக்க முடிஞ்சா பண்ணிக்கோ! இல்லைன்னா..??"

 

"உனக்காக எப்பவுமே ஆஸ்திரேலியா போக ஒரு சார்ட்டட் ப்ளைட் மதுரை ஏர்போர்ட்ல காத்துட்டு இருக்கும்.. நாங்களே ஃப்ரீ சர்வீஸ் பண்ணி அனுப்பி வைப்போம்" என்று கூறிய கதிர் "சரிதானே ண்ணே.." என்று வேந்தனை பார்த்து கேட்க.. முறைத்தாலும் தம்பியின் வார்த்தை சரி என்பதாய் ஆம் என்று தலையாட்டினான் வேந்தன்.

 

"ஆப்ஷன் ஈஸ் யுவர்ஸ்.. த வே இஸ் யுவர்ஸ்" என்ற வேந்தன் கதிரை பார்த்து "இவரை கூட்டிக் கொண்டு போய் செந்தில்வேலன் சித்தப்பா வீட்டில் விட்டுட்டு வந்துரு கதிரு.. நான் அவர்கிட்ட நேத்தே பேசிட்டேன்" என்றான்.

 

ஆதித்தை நோக்கி கை நீட்டிய வேந்தன் "நைஸ் மீட்டிங் யூ ஆதித்.. திரும்ப பார்க்கலாம்" என்று விடை பெற்றான்.

 

வரும்போது செந்தில்வேலன் எப்படி அவர்கள் வீட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் யார் யார் என்பதை போன்று கேள்விகளால் கதிரை துளைத்து எடுத்து கொண்டே வந்தான் ஆதித்.

 

*டேய்.. என்னங்கடா.. இவன் இப்படி பேசுறான்?" என்று தன் அப்ரண்டிஸ்களிடம் அலறினான் கதிர். அவர்கள் வழக்கம் போல தோளை குலுக்கி கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தனர்.

 

பழங்கால இரண்டடுக்கு வீட்டை பார்த்தவன் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு அதுவரை இருந்த குழப்பத்தை ஓரம் தள்ளி புன்னகை முகத்தோடு வாயிலில் நிற்க.. யார் என்று சத்தம் கேட்டு வந்த செந்தில்வேலன் சித்தார்த்தை பார்த்ததும் அவருக்கு யார் என்று தெரியவில்லை.

 

ஆனால் அருகில் நின்றிருந்த கதிரை பார்த்ததும் புரிந்தது. விருப்பம் இல்லை என்றாலும் வேந்தனுக்காக மதித்து "உள்ள வாங்க.." என்றதும் "இல்ல சித்தப்பு.. எனக்கு குவாரியில வேலை இருக்கு நான் கிளம்புறேன். அண்ணே இவர விட்டுட்டு வர சொன்னாப்ல.." என்று அண்ணனில் ஒரு அழுத்தம் கொடுத்து விட்டே சென்றான்.

 

"வாங்க.." என்று பொதுவாக அழைத்து சென்றார் செந்தில்வேலன். ஹாலில் நின்று வீட்டை ஒரு முறை பார்த்தான் ஆதித் நிகேதன். அதற்குள் அனைவரும் வந்து ஹாலில் ஆஜராகிவிட்டனர். இவன் வருவான் என்று ஏற்கனவே அவர்கள் எதிர்பார்த்து இருந்தது போல..

 

அனைவரையும் சிரித்து முகமாய் ஒரு முறை பார்த்தான். யாராவது பதிலுக்கு சிரிப்பார்களா என்று? ம்ஹூம்.. வாய்ப்பே இல்லை ராசா என்பது போல.. விஜிபி கோல்டன் பீச்சில் சிரிக்கா மூஞ்சியாய் நின்றிருக்கும் அந்த காவலாளி போலவே அனைவரும் விரைப்போடு நின்று இருந்தனர்.

 

"ஆரம்பமே அமர்க்களமாக இருக்கே!" என்று எச்சில் விழுங்கிக் கொண்டவன் 'நம்ம ஆளு எங்கேயாவது கண்ணில் படுகிறாளா?' என்று விழிகள் தாராவை தேடின. அவள் இல்லை அங்கே.. எங்கே என்பது போல மேல சுற்றி பார்க்க விசாகா அங்கிருந்த வண்ணமே யாரும் அறியாமல் மாடியை சுட்டிக்காட்டினாள் கண்களால்.. 

 

"ஆஹா.. வாழ்க சிஸ்டர்இன்லா" என்றவனுக்கு அந்த குட்டி மச்சினிச்சியை அப்பொழுதே பிடித்து விட்டது.

 

"எல்லாருக்கும் வணக்கம்!" என்றவனுக்கு பதிலாக எல்லாரும் மௌனத்தையும் முறைப்பையும் கொடுக்க..

 

இது வேலைக்காகாது என்று நினைத்தவன் "எக்ஸ்க்யூஸ் மீ!" இம்முறை அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் பேக்கை போட்டுவிட்டு ஹாலை கடந்து வேகமாக மாடி ஏறி சென்றான்.

 

"எங்கே செல்கிறான் இவன்? என்று காது கேட்காது அப்பத்தாவில் இருந்து அனைவருமே அவனையே பார்க்க.. முதல் இரண்டு அறைகளை திறந்து பார்த்தவன் மூன்றாவது அறையை படாரென்று திறந்து உள்ளே செல்ல..

 

அங்கே சோக சித்திரப்பாவையாக அவனின் தீபதாரா அதுவும் மதுரை மண்ணின் பெண்ணாக பாரம்பரிய பாவடை தாவணையில் அமர்ந்திருந்தவளை கண்டதும்.. மற்றதெல்லாம் மறந்து போக அவள் ஊருக்கு வந்த அன்றைய இரவின் மிச்சங்கள் இவனின் உச்சங்களை ஏற்ற…  

 

"தீப்ஸ்.." என்ற உதட்டுக்கு கூட வலிக்குமோ என்று மெல்ல அழைத்துக் கொண்டே அவளை நெருங்கியவன் ஒற்றைக் காலால் அறைக் கதவை வேகமாக சாற்ற, கீழே இருந்து பார்த்த அனைவரும் "ஆண்டவா… சொக்கா…" நெஞ்சில் கையை வைத்தனர்.

 

வழக்கம் போல அவனை காட்சிப்பிழை என்று நினைத்த தாரா, அவனை கண்டு கொள்ளாமல் தன் நினைவுகளில் உழண்டு இருந்தாள்.

நிக்.. நிக் என்று நினைவெல்லாம் நிக்கே… என்று சோக சித்திரமாய் சோபையிலும் மிளிர்ந்தவளை.. கணவன் அவன் பிரிவால் பசலை நோய் தாக்கி வளையலை மேகலையாய் மாறும் வண்ணம் இடை மெளிந்திருந்தவளை… கண்டதுமே… கொள்ளை கொள்ளையாய் காதல் கொள்ள.. அதனை கொண்டாட சித்தமானான் ஆதித் நிகேதன்.

 

உள்ளே நுழைந்த நிமிடமே அவளை இழுத்து அணைத்து தன் உயரத்துக்கு தூக்கியவன், அவள் இதழ்களோடு இதழ்களை கோர்த்தான். கோர்த்த இதழ்களை விடாது இன்னும் இன்னும் ஆழ்ந்து புதைத்துக் கொண்டு இருந்தான், தன் இதழ்களையும் தன் காதலையும் அவளுள்…!!

 

அவனை எதிர்ப்பார்க்காத இன்ப அதிர்ச்சியில் அவள் கண்கள் சிறகென விரிக்க… அதில் அவள் செவ்விதழ்கள் மலரென விரிய அதில் வண்டாய் நுழைந்து அவளின் இதழ் தேனை ரசித்து ருசித்துக் கொண்டிருந்தான் ஆதித்.

 

அவனின் வரவை எதிர்பார்க்காததால் திடீர் அதிர்ச்சியில் இருந்தாலும் அதற்குப்பின் அவன் காதலின் அதே எதிரொலி அவளிடமும் இருக்க..

"ஏண்டி இங்கே வந்ததிலிருந்து எனக்கு ஃபோனே பண்ணல? என்னை மறந்துட்டியா?" என்று அவள் உதட்டை வலிக்க இழுத்து அவன் கேட்டான், அவனுக்கு காரணம் தெரிந்திருந்தும்..

 

"உன்னை பார்த்த நாளிலிருந்து நீ மட்டும் தான் நிக் என் நினைவுகளை ஆக்ரமிச்ச.. இன்னும் கூட நீ.. நீ.. நீ மட்டும் தான் ஆக்கிரமிச்சிட்டு இருக்கிற.. இப்போதும் என்னை மறந்து.. உறவுகளை மறந்து.. வேலையை மறந்து.. உன் நினைவுகள் கூட சுகமா சுகிச்சிட்டு இருக்கேன். இன்னுமா சந்தேகம்?" என்று அவனது சட்டை பட்டனை தன் விரல்களால் திருகியபடி அவள் கேட்க...

 

"இப்படியே திரும்பி திரும்பி ஒவ்வொரு பட்டன நீயே கழட்டிட்டனா எனக்கு வேலை மிச்சம்.. சொச்சம் விளையாட்டை நான் பார்த்துப்பேன்.. ஓகே வா?" என்றான் அவளின் கன்னத்தை வருடியவாறே..

 

முகம் வெட்கப் புன்னகையில் மலர.. கன்னங்கள் ரெண்டும் நாணத்தினால் சிவக்க.. இன்னும் அவள் புறம் குனிந்து "ஓகே வா?" என்று கிசுகிசுத்தான்.

அவன் ஸ்பரிசத்தில் தன்னை மறந்து "ம்ம்ம்" என்ற வார்த்தையை தவிர அவள் செவ்விதழ்கள் வேறொன்றும் உதிர்க்கவில்லை!

 

"இப்படியே நான் கேட்குற எல்லாத்துக்கும் நீ "ம்ம்ம்" மட்டுமே சொல்லிட்டு இருந்தேன்னா.. என் வேலைக்கு ரொம்ப நல்லது" என்று அவள் கன்னத்தோடு கன்னம் உரசி அவன் கூறினான். அதில் கிறங்கினாள் மாது!

 

எப்பொழுதும் பெண்கள் மட்டும் தான் மயக்க வேண்டுமா என்ன? இங்கே தலைவன் மயக்க.. தலைவி மயங்கி கொண்டு இருந்தாள்!!

 

அவனின் சேவ் செய்யாமல் ஒருவார தாடியுடன் காணப்படும் அவனது கன்னங்கள், இவளது கன்னத்தோடு தேய்த்த போது ஏற்பட்ட அந்த உரசலில்.. அவளது பட்டு போன்ற கன்னங்கள் சிறிது எரிச்சலை உணர்ந்தாலும் அவன் ஸ்பரிசம் உள்ளுக்குள் மின்சாரத்தை உற்பத்தி செய்தது.

 

அதைத் தாங்க இயலாதவளாக தன் கீழுதட்டை பற்களால் கடித்து தாங்க எத்தனிக்க... அவனோ "தீப்ஸ்.. நோ.‌ இட்ஸ் மை ப்ராப்ரட்டி!" என்று பற்களின் கடுந்தண்டனையில் இருந்து அச்செவ்விதழ்களுக்கு விடுதலை அளித்து தன் இதழ்களுக்குள் ஆதரவு கொடுத்தான்.. காதலனவன் கள்வனாய்!!

 

யாருமற்ற அந்த தனிமை கொடுத்த தைரியத்தில் அவளும் தன் கைகளை மாலையென அவன் கழுத்தில் கோர்த்துக்கொள்ள, அதுவரை மென்மையான காதலை அவளுடன் பகிர்ந்து கொண்டிருந்தவன், அணையில் இருந்து வெளிப்பட்ட காட்டாற்று வெள்ளமென அவளை அளவெடுத்தான் தன் உதடுகளால்..

 

அவனின் இந்த வேகத்தை எதிர்பார்க்காதவள் திகைத்து, அவன் முகத்தை நிமிர்த்தி பார்க்க எத்தனிக்க.. ம்ஹூம்.. முடியவே இல்லை! அவன் முடிக்கவே இல்லை!

 

அவனோ இன்னும் வேட்கையுடன் அவளை ஆரத் தழுவி இறுக்கி, உதடுகளை அவள் உதடுகளில் புதைத்துக் கொண்டான், அங்கிருக்கும் மொத்த புதையலையும்.. முத்தமிட்டு முத்தமிட்டு கொள்ளை இட்டுக் கொண்டிருந்தான்.

 

அவனது கைகளோ அவளது அங்கங்களில் பரவி படர... அவள் கண்மூடி அனுமதித்தாள். பின் அவளை தன் மடியில் சாய்த்து, அவள் மீது படர்ந்து முகம் முழுவதும் தன் முத்தங்களால் அர்ச்சித்துக் கொண்டிருந்தான். அவன் முத்தங்களில் கிறங்கி "நிக்.." என்று அவள் கிறக்கமாக அழைக்க..

 

"இந்த நிக்கை உன்னோட ஹஸ்கி வாய்ஸில் கேட்டு எத்தனை நாள் ஆச்சு டி.. தீப்ஸ்.." என்றவனின் ஒரு நொடி அவன் உடல் விரைத்து, அவனின் இறுக்கம் அதிகரித்தது. ஆரத் தழுவிக் கொண்டான் இனி ஒருபோதும் நமக்குள் பிரிவு இல்லை என்று!

 

மென்மையான தாராவால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவன் காதை கவ்வி "சரியான அசூரன் நிக் நீ.. ஆனா காதல் அசூரன் டா" என்று அவன் சொரசொரப்பான கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.

 

காதல்.. காதல் மட்டுமே! காமம் இடையிடையே வந்தாலும்.. காதோடு சேர்ந்த காதல் தப்பில்லயே!!

 

 இருவரும் பிரிந்து இருந்த காலத்தின் காதலை ஈடு செய்வது போல தங்களுக்குள் மூழ்கி இருக்க அங்கே ஒரு குடும்பம் கீழே இவர்களுக்காக காத்துக் கொண்டிருப்பதை அறியவில்லை! அவர்கள்தான் வேறொரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்களே!!

 

காதலர்களுக்கோ நேரங்கள் விநாடிகளாக நகர்ந்து கொண்டு இருந்தது என்றால்…

 

இவர்களுக்கோ விநாடிகள் கூட மிக மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டி இருக்க.. 

"அய்யய்யோ… எவனோ என் பேத்தி இருக்குற அறைக்குள்ள போய் இவ்வளவு நேரம் ஆச்சே.. ஒன்னுக்கு ரெண்டு தடிமாட்ட பெத்து வச்சிருக்கேன்.. ஒருத்தனும் கண்டும் காணாம கீழே இருந்தே வேடிக்கை பாக்குறாய்ங்களே.." என்று ஒப்பாரி வைத்தார் நடு வீட்டில் அமர்ந்து கிருஷ்ணாமணி!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top