Thread starter 11/06/2025 1:55 pm
5
திங்கள் கிழமை காலை… அனைவருக்கும் பரபரப்பான நேரம் முதல் நாள் விடுமுறையில் சுகம் கண்ட மனதினை வேலைக்கு செல்ல திருப்புவது என்பது சிறு பிள்ளையின் கையில் உள்ள மிட்டாயை பிடுங்குவது போல மிக மிக கடினம் தான். ஆனாலும் சென்னை மாநகரம் அதையும் தட்டி விட்டு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது..
வழக்கம் போல, தன் வேக நடையுடன் அலுவலக செல்லும் படியில் எறியவன் சட்டுடென்று அந்த திருப்பத்தில் நின்று, தன் தலையை லேசாக உலுக்கி கொண்டு மீதம் படிகளை இன்னும் வேகமாக தொடர்ந்தான். அவனின் வருகைக்காக அவனின் கோபியர் கூட்டம் எப்போதும் போலஅப்போதும் ஆவலாகவே காத்திருந்தது.
" ஏய் ப்ரீத்தி , பார்த்து டி கண்ணு வெளியே வந்து குதிச்சிட போகுது"
" போடி.. காத்து இருந்தவள் புருஷனை நேற்று வந்தவ கொத்திக்கிட்டு போனாளாம்.." என்று பெரு மூச்சு விட்டவளை, மற்ற மூவரும் புரியாமல் பார்க்க..
" நீ நல்ல நாளுல பேசினால் புரியாது, இதுல பழமொழி வேற.. ஒழுங்கா விசயத்தை சொல்லு " இது அஞ்சு..
" அதான் டி.. நம்ம வி.பி. ஐ…. " என்று அவள் சொல்லி முடிக்கும் முன், மூவரும் அவளை சுற்றி நின்று, "என்னாச்சு அவருக்கு வீட்டுல பொண்ணு பார்த்திட்டாங்களா.."
" இல்ல இல்ல.. அப்படி எல்லாம் பார்க்கல.. நியூஸ் ஒன்னும் வரலையே"
" ஏய், அவர் வேற யாரையாச்சும் லவ் பண்றாரா என்ன… அதுக்கும் சான்ஸ் இல்லையே.."
" ஏண்டி.. வாயிலே என்ன கொழுகட்டையா வைச்சுயிருக்க சொல்லி தொல டி.. பக் பக் னு இருக்குல்ல.. நாங்க எவ்ளோ நேரம் கேட்டு கிட்டு இருக்கோம் நீ பாட்டுக்கு வாய் மூடி நின்னுகிட்டு இருக்க" என்று அஞ்சு சுகி கோகி மூவரும் அவள் மீது பாய , "எங்கடி என்னை பேச விட்டீங்க… அவருக்கும் ஒன்னும் பொண்ணு ஃபிக்ஸ் ஆகல… நம்மலையே கண்டுக்காம போறவரா வேற யாரையோ லவ் பண்ண போறாரு.. நான் சொல்ல வந்தது வேற, நம்ம ஆபீஸ் ல புது புராஜக்ட் பண்றாங்க அதுக்கு வி.பி. தான் ஹெட்"
" இது எல்லாம் தெரிஞ்ச பழைய நியூஸ் தான்.. நான் கூட பதறிட்டேன்"
"அது போன வாரம் நியூஸ் தான்... இந்த வார நியூஸ் அதில் செலக்ட் ஆனவர்கள் எல்லாம் பிரஷ்ஷர்ஸ்.. அதை விட ஹாட் நியூஸ் அதுல ஐந்து பேர் பொண்ணுங்க… அதிலேயம் இரண்டு பேர் செம கிளாசிக் பீயூடிஸ்" என்று நீளமாக பேசி மூச்சு வாங்கியவள் மற்றவர்களை பார்க்க அவர்கள் முகத்தில் ஏக அதிர்ச்சி…
" அப்போ வி.பி நமக்கு இல்லை .. நமக்கு இல்லை.. சொக்கா சொக்கா"
" கோகி எருமை.. ஒழுங்கா சொல்லி தொலை… "
"அதில்லைடி அஞ்சு, நமக்கு னா.. நம்மல ஒருத்தருக்கு செட் ஆனா .. ஓகே.. வேற யாருக்கோனா… கொஞ்சம் ஹார்ட் ஃபீல் ஆகுதுடி…"
" அதாண்டி நான் ஃபர்ஸ்ட் சொன்னேன், காத்து இருந்தவள்… " ப்ரீத்தி முடிக்கும் முன் மற்ற மூவரும் சேர்ந்து அவளின் வாயை அடைத்து இருந்தனர்.
" விடுடி.. எப்படி அவளுங்க கரெக்ட் பண்ணுறாங்க என்று நாமும் பார்ப்போம்.. விடுவோமா என்ன.. நம் வி.பி. நம் உரிமை"
" கரெக்ட்"
"கரெக்ட்" மற்றவர்கள் ஆமோதிக்க, " சரியா சொன்ன சுகி, சிட்டி கேர்ள் ஸ் ஆ வில்லேஜ் கேர்ள் ஸ் ஆ பார்த்திடலாம்"
தன்னை வைத்து இந்த கோபியர் கூட்டம் சவால் செய்து கொண்டு இருப்பது தெரியாமல் நம் நாயகனோ அவர்களை கடந்து சென்றான். அவர்களும் வழக்கம்போல அவர்களின் மாய கண்ணனை பார்த்து அந்த ஆபீசே நனையும் அளவு ஜொள்ளு ஊற்றினார்கள்.
ஒன்பது மணி ஆபீஸ்க்கு எட்டு மணிக்கே வந்து மகளையும் சுஜியையும் விட்டுவிட்டு ஏகப்பட்ட அறிவுரைகள் , ஜாக்கிரதைகளுடன் விட்டு சென்றது அப்பாசக்கார குடும்பம், நோ.. நோ நீங்க நினைக்கிற மாதிரி ஊருக்கு எல்லாம் போகல.. அதே கெஸ்ட் ஹவுஸ்ல தான் இருக்காங்க.. பொண்ணு ஆபீஸ் விட்டு வந்தவுடன் வேலை பற்றி விசாரித்து எல்லாம் அவளுக்கு ஓகே என்ற பிறகு தான் செல்வார்கள்.. சைடு கேப்பில் தங்கைக்கு மதியம் சாப்பாடு வாங்கி தர மறக்கவில்லை அண்ணன் ரிஷி.. கூடவே புல்லுக்கு பாய்ந்த நீர் போல, இந்த ஒட்டுபுல்லு சுஜிக்கும் சாப்பாடு.. அதற்கே அவள் அதை பிரசாதமாக பாவித்தாள் … எல்லாம் காதல் செய்யும் மாயம் தான்.
புது புராஜக்ட் செலக்ட் ஆனவர்கள் எல்லாம் ஒரு மீட்டிங் ஹாலில் உட்கார்ந்து இருந்தனர். அனைவரும் தங்களுக்குள் பேசி கொண்டிருக்க, திடீரென்று ஏற்பட்ட பரபரப்பில் அனைவரும் அட்டன்சனில்..
உள்ளே நுழைந்த மூவரில் நடுநாயகமாக அசத்திய உயரத்துடன் , அனைவரையும் கவரும் வசீகரத்துடன் நின்று இருந்த வி.பி யைப் பார்த்து முதலில் சற்று அதிர்ந்தாள் சௌமினி.. பின் அவனின் முதல் உறவான அவளின் இதழ்கள் மெல்ல விரிந்தன மலரின் இதழ்களை போல அழகாய்..
தன் விழிகளை சுழல் விட்டு அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவனின் பார்வை, சௌமினியிடம் ஒரு நொடிக்கு குறைவான நேரத்தில் நின்று பின் மற்றவரிடம் சென்றது. இளமஞ்சள் நிறத்தில் சல்வார் அணிந்து அதீத ஒப்பனையின்றி அழகின் உருவாய் இருந்தவளை அவள் வந்ததில் இருந்து மற்றவர்கள் பார்த்தும் பாரக்காதது போல பார்த்து கொண்டு இருக்க, இவன் ஒருத்தன் மட்டும் கண்டும்காணாமல் இருந்தான்.. என்ன செய்ய அவன் டிசைன் அப்படி..
" ஹாய் கைஸ்… ஐம் வி.பி.. இந்த புராஜக்ட் ல நான் உங்க ஹெட்... இவங்க இரண்டு பேரும் உங்க டீம் லீடர் ஸ்.. இது ஒரு சவாலான புராஜக்ட்.. அதுவும் பிரஷ்ஷர்ஸ் வைத்து செய்யுறது.. சோ உங்க ஒத்துழைப்பு ரொம்ப ரொம்ப அவசியம்.. இது உங்களுக்கான நேரம் கூட.. உங்க டேலண்ட்.. உங்க டெடிகேஷன்.. உங்க இன்வால்வ்மெண்ட்.. உங்க கிரியேட்டிவிட்டி… இப்படி உங்களுக்குள் இருக்கிற உங்க திறமை எல்லாம் வெளி கொண்டு வர ஒரு நல்ல சான்ஸ் ஆ இதை நீங்க மாத்திகிட்டீங்கனா … யூ ஆர் த வின்னர்… லெட் ஒர்க் டுகெதேர்.. வின் டுகெதேர்.. "
அவன் வாழ் நாளின் மிக நீண்ட பேச்சை அவன் முடிக்க, அந்த ஹாலே கரகோசத்தில் அதிர்ந்தது. அனைவருக்கும் ஒரு உத்வேகத்தையும் தந்தது அவனின் அந்த பேச்சு .. தன்னை மட்டும் குறிப்பிடாமல், ஒட்டு மொத்த குழுவையும் அவன் இணைத்து பேசியது அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தை தந்தது.. அது தான் வி.பி. அவனின் அந்த டீம் ஸ்பிரிட் தான் அவனின் வெற்றியின் ரகசியம்.. தட்டி கொடுத்து வேலை வாங்குவது..
அனைவரும் அவனின் பேச்சில் சிலாகித்து இருக்க.. சௌமினியோ அவன் , நான் தான் உங்க ஹெட் என்றதும் , என்னது என்று விழி விரிய, வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்தாள்.. எங்கே அவன் சொன்னது எல்லாம அவள் காதில் விழுந்தது. வழக்கம் போல சுஜியின் சுரண்டல் கூட அவளின் அதிர்ச்சியை தகர்க்க வழியில்லாது போனது..
அடுத்து ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்தி கொள்ள, மேஜையில் ஒரு காலை மடித்து வைத்து, ஒரு காலை கீழே ஊன்றி இரு கைகளையும் மார்பு குறுக்காக கட்டிக்கொண்டு கூர் விழிகளால் ஒவ்வொருவரையும் அவதானித்து கொண்டிருந்தான் விஷ்ணு. சௌமினி முறை வந்து போது, அவளின் அந்த விரிந்த விழி, பிளந்த வாய் வேறு நினைவுகளை நினைவூட்டினாலும், அவற்றை தூசு போல தட்டிவிட்டு , அவளை நோக்கி “மிஸ் சௌடாம்பிகை” என்று அழுத்தமாக கூப்பிட்டவனின் குரலில் அதிர்ச்சி நீங்கி அடித்து பிடித்து எழுந்து நின்றாள்.
"எப்பவும் கனவிலே தானா…இன்ட்ரடியூஸ் யூர் செல்ஃப்…" என்றவனை பார்த்து " வந்தன்னிக்கே வா மாட்டனும் இவன்கிட்ட… அய்யனாரப்பா காப்பாத்து பா" என்று அவசர வேண்டுதலை வைத்து விட்டு தன்னை பற்றிய விபரங்களை கூறினாள்.
அனைவரின் முறையும் முடிந்த பின், டீம் லீடர்கள் இருவரை விட்டு டீம் பிரிக்க சொல்லிவிட்டு அவன் தன் அறைக்கு சென்று விட்டான். டீம் பிரிக்கப்பட்டது, அதன்படி இரண்டு டீம் லீடர்க்கும் தலா ஏழு நபர்களும், வி.பி க்கு சௌமினி, சுஜியோடு சேர்த்து நான்கு ஆண்கள் என ஆறு பேரும் என பிரிக்கபட்டனர்.
விஷ்ணு சென்றவுடன் தான் இயல்பாக தன் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து இருந்தவளை பார்த்த, சுஜி நக்கல் சிரிப்பை உதிர்க்க, அதை கண்டு காண்டானவள், " அண்ணியாரே என்ன சிரிப்பு வேண்டி இருக்கு"
" காது குளிர்ந்து போச்சு டி.. சௌமி.. சௌமி.. இன்னோர் தரம் சொல்லுடி… பிளீஸ்"
" முதல நீ ஏன் சிரிச்சனு சொல்லு.. அப்புறம் பார்க்கலாம்"
" அதுவா நீ ஊர்ல எத்தன பேர ஆட்டி வைச்சு இருப்பவ, ஹ ஹ ஹ.. இப்போ நீயி வி.பி சர் பார்த்து பம்முனியா.. அதான் லைட்டா சிரிப்பு வந்துடிச்சு"
" என்னடி.. சாபமா… ஏய் … நாத்தி உதவி இல்லாம மாமியா வீட்டில குப்பை கூட கொட்ட முடியாது அண்ணியாரே… எப்படி வசதி" என்று நக்கல் குரலில் மிரட்ட..
"ஆத்தா .. தெரியாம சிரிச்சிட்டேன்.. இனி பாரு … நீ வடிவேலு காமெடி போட்ட கூட எப்படி சீரியஸ் மூடுல பார்க்குரேனு" இதை கேட்டு சௌமினி வாய்விட்டு சிரிக்க, அவள் சிரிக்கும் போது கண்களில் தெரித்த மின்னல், உதட்டில் தெரிந்த பளபளப்பு கூர்ந்து கவனித்தவாறு ஹாலுக்குள் நுழைந்தவனின் மனதில் ஏதோவொரு உணர்வுகளின் அலை..
"லிசன் கைஸ், டீம் லீடர் பிரித்வி அண்ட் ஆதர்ஷ் இப்போ அவங்க டீம் மெம்பர்கள் சொல்லுவாங்க.. மீதம் உள்ள ஆறு பேர் என்னுடைய நேரடி பார்வையில வேலை செய்ய போறீங்க" என்று அவன் முடிக்க, சௌமினி யாரும் அறியாமல் சுஜியிடம் " பாவம் டி.. அந்த ஆறு பாவ ஆத்மாக்கள், ஆண்டவர் அவர்களை காக்கட்டும்.. சோ பிட்டி.. சோ பிட்டி" என்று தானும் அதில் உண்டு என்று தெரியாமல் அனுதாபப்பட்டாள்.
டீம் லீடர் பெயர்கள் வாசிக்க வாசிக்க, இவளுக்கு உள்ளுக்குள் டிரம்ஸ் போய் .. தாரை தப்பட்டை எல்லாம் வாசிக்க ஆரம்பித்தது. கடைசியாக அந்த ஆறு பாவ ஆத்மாக்களுள் இவளும் சுஜியும் வெற்றிகரமாக சேர, இவர்கள் இருவரும் ஒருவருடைய ஒருவர் பார்த்து கொண்டனர்.. மைண்ட் வாய்ஸ் வொய் ப்ளட் சேம் ப்ளட் என்று வடிவேல் கூறிவிட்டு சென்றார்.
நீர் பூத்த தனல் போல, வெளியே பிடிக்காவிடினும் உள்ளுக்குள் இனம் தெரியாத ஒரு மகிழ்ச்சி இருக்க தான் செய்தது சௌமினிக்கு.. சுஜிக்கோ அப்பாடி இப்போவும் சௌமி கூடவே போட்டுடாங்க என்ற சந்தோசம் தான் .
மதிய உணவு கேன்டீனில் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க, சௌமினி சுஜியும் அவர்கள் கொண்டு வந்ததை சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது நட் சாப்பிட நுழைய அவன் கண்ணில் விழுந்தனர் இவர்கள் இருவரும்.. இன்டர்வியூ நடந்த அன்று நட் ஆப்சென்ட்..
சௌமினியை பார்த்த அவனுக்குள் இளையராஜா பி.ஜி.எம். கேட்டது.. நம் தன நம் தன நம் தன … அப்படினு கேட்டா நீங்க 80ஸ் கிட்ஸ்.. நம்ம நட் 90ஸ் கிட்ஸ்.. அதனால் அவனுக்கு நனன நன நானா.. நனன நன நானா விழியில் விழி மூடி.. என்ற பாடல் தான் கேட்டுச்சு..
அப்படியே கண்களில் காதல் வழிந்து ஓட அவளை பார்த்து கொண்டே அவர்கள் அமர்ந்து இருந்த இருக்கைக்கு இரு இருக்கை தள்ளி அமர்ந்து கொண்டான்.
"இவனை நாம ஒண்ணுமே செய்யலையே… இவன் எதுக்கு இப்போ ஊடால வரான்.." ஹையோ ஹையோ பாவம்…. க்யூபிட்டே கன்ஃபூஸ் ஆகிடிச்சு….
மதிய உணவுக்கு பிறகு அனைவரும் ஹால் செல்ல, சௌமினி ரெஸ்ட் ரூம் நோக்கி சென்றாள்.. முன்னே வந்து நின்றவனை பார்த்து ஜெர்க் ஆகி , தன் நெஞ்சில் கை வைத்து ஆசுவாச படுத்திக் கொண்டவளின் ஏறி இறங்கிய ஏற்ற இறக்கங்கள் மீது கண்கள் பதிந்து மீண்டது விஷ்ணுவிற்கு..
அவனின் பார்வையை கண்டு பெண்ணின் இயல்பு போல, துப்பட்டாவை சரி செய்தாள் சௌமினி.. அதில் அவனுக்கு கோபம் மூள நூலளவு இடைவெளியில் அவளை நெருங்கியவன் " என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது , பெர்வெர்ட்டுனா… ம்ம்ம்.. சொல்லுடி… " என கர்ஜித்தான்.
"அன்னைக்கு என்னவோ வாய மூடுற.. இன்னைக்கு… கண்களால் அவளின் மென்மைகளை சுட்டி காட்டி இதை மூடுற… என்ன நினைச்ச என்னை பத்தி.. பெண்களை பார்த்ததுமே பாய்றவனுனா… இனி என் கண் முன்னே வாராதே… போடி" கட்டிய மனைவியை கணவன் கூப்பிடுவது போல டி போட்டு அழைத்து திட்டியவனை கண்கள் வெறிக்க பார்த்து கொண்டிருந்தாள் அவனின் காதல் மின்மினி …
Umasai reacted