தூகை 48

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

48

 

இன்று..

 

 

சாம பேத தான தண்ட முறைகளில் கையாண்டு பார்த்தாள் வதனி, நிரஞ்சனை வீட்டை விட்டு வெளியே போக வைக்க..!

 

ஆனால் அவன் எதற்கும் வினையாற்றினானில்லை. அமைதியாக இருந்தான். 

பொறுமையாக கடந்தான்.

 

‘என்னை திட்டுகிறாயா திட்டு..!

என்னை அடிக்கிறாயா அடி..!

இன்னும் என்னென்ன உன் மனவலியை போக்க நீ செய்ய நினைக்கிறாயோ அத்தனையும் செய்..!

அனைத்தையும் பொறுப்பது என் கடன்..!

 

‘உனக்கு அந்த வலியை கொடுத்தவன் நான், அந்த வழியை நீ அனுபவிக்கும் போது.. அதை மறக்க நீ கொடுக்கும் வலிகள் அனைத்தையும் ஏறுப்பேன்’ என்பது போல அமைதியாக நிரஞ்சன் இருக்க.. ஒரு கட்டத்தில் மேல் விட்டு விட்டாள் வதனி.

 

அதற்கு மேல் அவர்கள் மகள் மிரு..! நிரஞ்சனும் பிரேமாவும் இவர்கள் வீட்டிற்கு வந்ததும் அவளிடம் ஒரு சந்தோஷம் ஒரு துள்ளல்.‌.!

 

பெரும்பாலும் நல்ல பிள்ளையாக சமர்த்தாக தான் இருப்பாள் மிரு. அன்னையை அவ்வளவாக தொந்தரவு செய்ய மாட்டாள். 

 

இப்போது அடிக்கடி வாந்தி எடுத்த சோர்வாக அமர்ந்திருக்கும் அன்னையை.. காலையில் தன்னை எழுப்பபவள் இப்பொழுது தான் எழுப்பியும் தூங்கும் அன்னையை கண்டு, குழம்பி போய் தந்தையிடமும் பாட்டியிடமும் ஒண்டிக் கொண்டாள்.

 

பிரேமா தான் ஒரு முறை “உங்க அம்மா வயத்துல குட்டி பாப்பா இருக்கு மிருக்குட்டி. உனக்கு தம்பியோ இல்ல தங்கச்சியோ வரப்போகுது. அதுதான் அவள இப்படி படுத்தது. நீயும் அம்மாவ கஷ்டப்படுத்தாதே..! கொஞ்ச நாளைக்கு அம்மாவ நீ டிஸ்டர்ப் பண்ணாதே..! உனக்கு என்ன வேணுமோ பாட்டியும் அப்பாவும் பாத்துக்குறோம்” என்று அன்பு மொழியில் கூற,ஆர்ப்பரித்தாள் மிரு புது உறவின் வரவை எண்ணி..

 

பிள்ளையைப் பெற்றுக் கொள்ளும் எண்ணம் வந்ததும் மகளிடம் மறைக்கும் எண்ணமெல்லாம் வதனியிடம் இல்லை.

 

ஆனாலும் அவளை அதற்கு யோசிக்க கூட விடாது வந்து அமர்ந்திருக்கும் அம்மாவையும் பிள்ளையும் கண்டு வெறுப்படைந்தாள். அதுவும் மிருவும் அவர்களுடன் ஒட்டிக்கொள்ள கொஞ்சமே கொஞ்சம் பொறாமை அவளுக்கு.

 

ஒரு பக்கம் மசக்கையினால் அவள் படும் பாடு.. இரவெல்லாம் தூங்க முடியாமல் பகலில் அதிக நேரம் உறங்குவது.. கூடவே வாந்தி என்று உண்பதெல்லாம் வெளியில் வந்து சோர்வை கொடுப்பது.. என்று தத்தளித்தவள், நிரஞ்சனைக் கண்டால் ஏற்படும் அந்த எரிச்சல் கோபம் ஆத்திரம் அனைத்தும் மற்றவரிடம் பிரதிபலித்தது. 

 

அவ்வப்போது வந்த மேகலாவும் அவளுக்கு பிடித்தமாக உணவை கொடுக்கும் போது, அங்கே இருக்கும் பிரேமாவிடம் ஒரு நல்ல உறவை வளர்த்துக் கொண்டார். அவ்வப்போது கண்களில் தட்டுப்படும் மாப்பிள்ளையையும் இவர் நலம் விசாரிக்க.. இவளோ கொதித்து போவாள். 

 

“இத்தனை நாள் அந்த ஆளு உன்னை எட்டிப் பார்த்தாரா? இல்ல நீ எங்க இருக்க எப்படி இருக்குனு கேட்டாரா? வீட்டுக்கு வந்தவர வாங்கன்னு தான் கூப்பிட்டாரா? எதுவுமே பண்ணாம அவர் பாட்டு சுத்துறாரு.. நீ எதுக்குமா அவரிட்ட போய் நலம் விசாரிக்குற? ஒட்டி உறவாடுற?” என்று கடித்து துப்பினாள் அன்னையை….

 

“உங்க புருஷன் பொண்டாட்டி சண்டைக்குள்ள நான் இல்ல.. இன்னைக்கு அடிச்சுக்குவீங்க நாளைக்கு சேரந்துக்குவீங்க..! இதுக்கு இடையில நாங்க வர முடியுமா? இல்ல இன்னைக்கு நான் பார்த்து பேசாம போய் அன்னைக்கு நீங்க உங்க பொண்ணோட சேர்ந்து என் கூட நீங்களும் பேசலைன்னு மாப்பிள்ளை ஒரு வார்த்தை சொல்லிட்டா..” என்றதும்,

 

“நீயும் உன் விளக்கமும்..” என்று தலையில் அடித்துக்கொண்டு செல்லும் மகளை பார்த்து சிரித்துக் கொண்டார் மேகலா. 

 

அவரைப் பொறுத்தவரை கணவன் மனைவி சண்டை என்பது காலை முடிந்து இரவு வருவது போல நிச்சயம் ஒரு முடிவுக்கு வரும் என்பது திண்ணம். 

 

ஆனால் உள்ளுக்குள் மகள் பட்ட ரணமோ வலியோ அவர் அறியவில்லை. 

 

முதலில் இவள் யாரையும் அறிய விடவில்லையே?? பின் எவ்வாறு அவர்களுக்கு மகளின் வலியோ நிரஞ்சனின் தப்போ தெரியும். 

 

அதனால் இரு பக்கமும் உள்ள பெரியவர்கள் சீக்கிரமே அனைத்து பிணக்கும் முடிந்து இருவரும் சேர வேண்டும் என்று ஆர்வமாக எதிர்பார்த்தார்கள்.. பலமாக பிரார்த்தனை வைத்தார்கள்..!

 

கூடவே புது வரவும் அவர்களின் இந்த ஆர்வத்திற்கு தூபம் போட ஒரு இணக்கமான மனநிலை தான் எல்லோரிடமும் இருந்தது, வதனியைத் தவிர..

 

அன்று நான்காம் சனிக்கிழமை காலையிலேயே மேகலா வந்தவர் மகளை அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு செல்லலாம் என்று அழைத்தார்.

 

அக்கோவில் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அங்கு சென்றால் திருமாலின் அருளால் மகளின் திரும்பவும் திருமண வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் போகும் என்று அவர் அழைக்க, அவளோ பிடிவாதமாக மறுத்துவிட்டார். 

 

மேகலாவும் தன்னாலான முயற்சியை எடுப்பதை பார்த்துக் கொண்டிருந்த பிரேமா “அவ வரலேன்னா இருக்கட்டும். வாங்க நம்ம ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்” என்று கூப்பிட மேகலாவுக்கு ஆச்சரியம்தான். 

 

இருவரும் உறவு சொல்லியெல்லாம் அழைத்துக் கொள்ளவில்லை. வாங்க போங்க என்பது பொதுவான பேச்சுக்கள் தான். இன்று பிரேமாவே கேட்கவும் மறுக்காமல் போகலாம் என்றார் மேகலா. அவர்கள் போகும்போது வீட்டில் இருந்தால் மிரு குட்டியையும் தூக்கிக்கொண்டு செல்ல முடிவெடுத்தனர்.

 

வீட்டில் நிரஞ்சனும் வதனியும் மட்டும் தான். வரும் பொழுது மதியத்துக்கு மகளுக்கு பிடித்த கார குழம்பு செய்துதான் எடுத்து வந்திருந்தார் மேகலா. 

 

வதனிக்கு இப்பொழுது காரம் க்ரேவிங்..

 

மிளகாயை பச்சையாய் அரைத்து தின்னும் அளவுக்கு காரம் அத்தனை பிடித்தது. 

 

இவ்வளவு காலம் உடம்புக்கு ஆகாது என்று மாற்றி மாற்றி எல்லோரும் சொன்னாலும்.. அது என்னவோ மத்த சுவையை விட காரம் அப்படி பிடிக்க செய்தது வதனிக்கு.

 

அதனால் தானே பதமாக செய்து மகளுக்கு எடுத்து வந்து கொடுத்திருந்தார் மேகலா.

 

முதல் பிரசவத்தில் அவர் தவறவிட்டவையை மகளின் இரண்டாவது பிரசவத்திற்கு செய்து தன் மனதை ஆற்றிக்கொண்டார். 

 

முன்னே வதனி பேசி இருந்ததை கேட்ட நிரஞ்சன், மேகலா குழம்பு பற்றி கூறியதும்,

 

“என்ன அத்த உங்க பொண்ணுக்கு மட்டும் தான் ஸ்பெஷலா? எனக்கு ஒன்னும் இல்லையா?” என்று கேட்டவுடன்..

 

‘நம்மிடமா பேசினார்? எப்பொழுதும் வெறும் தலையாட்டி செல்பவர் நம்மிடமா பேசினாரா?’ என்று அவர் விழி விரித்து பார்க்க..

 

“பரவாயில்ல அத்த.. நெல்லுக்கு பாய்வது அப்படியே இந்த புல்லுக்கும் பாயட்டும். நானும் அதே குழம்பு எடுத்துக்கிறேன். ஆனா இவ்ளோ காரம் எனக்கு சேராது.. இதெல்லாம் நெருப்பு விழுங்கும் டிராகன் சாப்பிடுவது” என்று அவன் லேசாக கேலி செய்து சிரிக்க..

 

அவன் சிரிப்பை மொத்த குடும்பமும் ஆச்சரியமாக பார்த்தது. இந்த சில மாதங்களாக சிரிப்பையே மொத்தமாக மறந்து இருந்தவன் சிரித்தால்??

 

‘அந்த கோயிலுக்கு போலாம்னு சொல்லும்போதே மகனின் முகத்தில் எவ்வளவு மாற்றம் என்றால்.. அப்ப அந்த கோவிலுக்கு போயிட்டு வந்தால்.. பெருமாளின் அருளையும் பெற்று வந்தால்.. இன்னும் இருவருக்கும் எவ்வளவோ மாறுதல் நடக்குமே..!’ என்று நினைத்த பிரேமா,

 

“வாங்க வாங்க நாம கிளம்பலாம்” என்று மேகலாவின் கையை பிடித்து இழுக்காத குறையாக அவரோடு கிளம்பிவிட்டார். 

 

கிளம்பு ம்பெரியவர்கள் சொல்லிக் கொள்ளும்போது மட்டும் தலையாட்டியவள் அதற்கு பின் தன்னுடைய லேப்டாப்பில் முகத்தை புதைத்து கொண்டாள். 

 

அவ்வப்போது ஆர்யனிடம் பேசிக்கொண்டு வேலையை தொடர்ந்தாள் அவள். 

 

வழக்கம்போல இந்நேரத்திற்கு சாத்துக்குடி பிழிந்து பிரேமா அவளுக்கு ஜூஸ் போட்டு தருவார்.

 

வதனி வேண்டாம் என்று மறுத்தாலும் “நான் எந்திரிச்சு கஷ்டப்பட்டா வேலை செய்றேன்? உக்காந்து இடத்துல தானே செய்றேன்? இது கூட செய்யலைனா உடம்பு துரு புடிச்சு போயிடும் வதனி. மிஷின் மாதிரி தான் உடம்பும். அப்பப்ப எண்ணெய் போட்டு பாலீஷ் செய்யுற மாதிரி சிறு சிறு வேலை எல்லாம் செய்யணும் வதனி” என்பார்.

 

இன்றும் அதுபோல அவன் செய்து கொடுக்க.. அதை தீண்டினாள் இல்லை.

 

ஒரு அரை மணி நேரம் அவள் எடுப்பாளா? குடிப்பாளா? என்று அந்த ஜூஸ் கிளாஸையும் அவளையும் மாறி மாறி பார்த்தபடி அமர்ந்திருந்தான் நிரஞ்சன்.

 

பின் ஒரு பெருமூச்சு விட்டு மகள் வந்தால் கொடுக்கலாம் என்று அதை எடுத்து ப்ரீட்ஜ் உள்ளே வைக்கப் போகும் சமயத்தில் காலிங் பெல் அடிக்க.. கதவை திறந்தால் விகர்த்தனன் நின்றிருந்தான். 

 

“வா சக்தி..” என்று அன்போடு அழைத்தவனிடம் ஒரு தலையாட்டுதலை கொடுத்தவன் 

 

“என்ன வெயிலு.. என்ன வெயிலு..” என்றபடி மினிவிசிறியின் வேகத்தை கூட்டி வைத்தவன், அதற்கு கீழே அமர்ந்து கொண்டான். கண்ணெதிரே இருந்த சாத்துக்குடி ஜூசை பார்த்து “என்ன ஜூஸ்? உனக்கா? குடிக்கல?” என்று கேட்க தம்பியை முறைத்தவள் பதில் சொல்லவில்லை. 

 

“ஓஓஓ.. அப்போ இது அவரு போட்டதாக்கும்.. எப்படியும் நீ எடுத்து குடிக்க மாட்ட.. அப்ப நானே குடிச்சிக்கிறேன்..” என்று அதை எடுத்து ஒரு சொட்டு விடாமல் குடித்து முடித்தான். 

 

“இந்த வெயிலுக்கு மெல்ல இனிப்பு உப்பு மிதமான சில்லுனு ஜூஸ் சூப்பரா இருக்கு” என்று நிரஞ்சனை அவன் பாராட்ட சிரித்துக் கொண்டான் நிரஞ்சன். 

 

“உனக்கு வேலை வெட்டி எதுவும் இல்லையா? இங்க வந்து உட்கார்ந்து இருக்க?” என்று சற்றே எரிச்சலோடு தான் கேட்டாள் வதனி.

 

பல வருடங்களாக கண்டு கொள்ளாமல் இருக்கும் நிரஞ்சனை இன்று தன் பிறந்த வீடு புகழ்ந்து பேசுவதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. 

 

“இப்பொழுதும் நானாக இங்கு வரவில்லை என்றால்.. இவன் இவர்களிடம் பேசமாட்டான் தானே?” என்று இன்னும் நிரஞ்சன் மீது தான் கோபம் ஏறியது.

 

“என் சீனியர் ஸ்டாப் ஓட பொண்ணு சூசைட் பண்ணி இறந்துட்டா.. பாவம் சின்ன பொண்ணு..! 18 இல்ல 19 வயசு தான் இருக்கும். ஜிஹெச்க்கு அனுப்பி வச்சிட்டு இங்கே வந்துட்டேன். திரும்ப அவர் வீட்டுக்கு போகணும் அந்த பொண்ணோட இறுதி சடங்குல கலந்துக்கணும்” என்றான் வெறுமையான குரலில்..

 

“ஏன்டா எந்த வயசுல சூசைட் பண்ற அளவுக்கு அந்த பொண்ணுக்கு என்னடா அப்படி பிரச்சனை? லவ் பெயிலாயரா டா?” என்று கேட்டாள் வதனி நிரஞ்சனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு.

 

“இல்ல இல்ல லவ் எல்லாம் இல்ல.. இந்த காலத்துல லவ் பெயிலியர் ஆனா எந்த பொண்ணுங்க சூசைட் பண்ணுதுங்க? பையங்க தான் சூசைட் பண்ணிக்கிறானுங்க” என்றவுடன்,

 

“அப்படி சொல்லு சக்தி..!” என்று நிரஞ்சன் சொல்ல இப்பொழுது அப்பட்டமாக இருவரையும் முறுத்தாள் வதனி.

 

“இது வேற விஷயம் வதனி.. அந்த பொண்ணு ஏதோ ஒரு ஆப்ல இருந்திருக்கும் போல.. பிரண்ட்ஸா இருக்கலாம் பழகலாம் வா.. பேசலாம் வானு கூப்பிட்டு இருக்காங்க.. பேசினா காசு தருவேன் ரீல்ஸ் போட்டா காயின்ஸ் தருவேனு ஏதோ ஆசை வார்த்தை காட்டி இருக்கானுங்க.. இந்த பெண்ணும் வீட்டில் இருந்து சம்பாதிக்கலாமேனு நம்பி.. அவனுக்கு ஆசை வார்த்தையில மயங்கி பேசி இருக்கு. அத அப்படியே கொஞ்சம் எல்லை மீறி சாதாரண பேச்சு அந்தரங்க பேச்சு வரைக்கும் போய் இருக்கு..” என்று விகார்த்தனன் கூறியதும், இப்பொழுது நிரஞ்சனும் வதனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வதனியின் நேர்பார்வையை தாங்க முடியாமல் நிரஞ்சன் தலை குனிந்து கொண்டான்.

 

“அதுல வீடியோஸ் எல்லாம் ரெக்கார்ட் பண்ணி பணம் கேட்டு மிரட்டுனாங்களா..?” என்று வதனி சற்று தவிப்போடு கேட்டாள்.

 

“அப்படி எதுவும் கேட்டிருந்தா நாங்களே அதை டீல் பண்ணிருப்போமே.. இந்த பொண்ணு எங்ககிட்ட தைரியமாக சொல்லி இருக்குமே..! ஆனா அவனுங்க விஷயமே வேற.. இதே மாதிரி நாங்க சொல்ற ஆள் கிட்டயும் வீடியோ கால் பேசணும்.. அப்பப்போ நேர்ல வரணும்னு சொல்லி மிரட்டி இருக்கானுங்க.. இல்லன்னா இதெல்லாம் நெட்ல போட்டுடுவேன்னு பயமுறுத்தி இருக்கானுங்க.. ஒரு கட்டத்துல அந்த பொண்ணால முடியாம வீட்டிலும் சொல்ல பயந்துகிட்டு சூசைட் பண்ணிட்டு” என்றான்.

 

விகர்த்தனன் சொன்னதை ஜீரணிக்கவே சில நிமிடங்கள் பிடித்தது வதனிக்கும் நிரஞ்சனுக்கும்.

 

எவ்வளவு அருமை பெருமையாக பிள்ளைகளை வளர்ப்பது எதற்காக? 

 

இப்படி எவனிடமோ மாட்டி சீரழிவதற்கும் சூசைட் பண்ணி இறந்து போவதற்குமா?

 

எங்கே செல்கிறது இந்த இளைய சமூகம்? 

 

எதை தேடி செல்கிறது? 

 

பணத்தையா? இல்லை அதைத் தாண்டி ஏதேனும் கவர்ச்சியையா?

இல்லை செய்துதான் பார்ப்போமே அப்படி என்ன இதில் இருக்கிறது

என்று அசட்டு துணிச்சலா? 

 

எங்கே சென்றது தனிமனித ஒழுக்கமெல்லாம்??

 

கலியுகத்தில் கடலில் கரைந்த காயம் போல காணாமல் போனது..!

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top