மாமனே 20

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

மாமனே 20

 

"உன் காதலுக்கு நான் தான் ஹெல்ப் பண்ணுனேன் என்கிற விஷயம் நம்ம ராட்ஷஸ மாமாவுக்கு தெரிஞ்சா உன் நண்பன் உசுரு அவனுக்கு இல்ல.. புரிஞ்சுதா?" என்று ஜீவன் கேட்க..

 

"புரிஞ்சது!! ரொம்ப நல்லாவே புரிஞ்சது!!" என்று தன் கையில் இருந்த தங்கக்காப்பை ஏற்றி விட்டுக் கொண்டு நின்றவனை பார்த்தவர்கள் ஹை வோல்ட் ஷாக் அடித்தது போல அதிர்ந்தனர்.

 

"மா.. மா.. மா..மா.." என்று ஜீவன் திக்க…

 

"மாஆஆஆ…" என்று மாடு போல அதுவும் பசு மாடு போல மெல்லிய குரலில் கத்தியவளின் வார்த்தையில் பாதிக்கு மேல் காத்துதான் வந்தது.

 

"என்ன சொன்னீங்க? திரும்ப இன்னொரு தடவை சொல்லுங் மாப்பிள?" என்றதும் இருவரும் எச்சில் கூட விழுங்க முடியாத அதிர்ச்சியில் மாணிக்கவேலை பார்த்தவாறு அமர்ந்திருந்தனர்.

 

எதனை எவனுக்கு தெரியக்கூடாது என்று நினைத்தார்களோ..

அதனை அவனே கேட்டு அவர்கள் முன் நின்றால்.. என்னதான் செய்வதாம்?

 

"இப்ப நீங்க சொல்லப் போறீங்களா? இல்ல.." என்று அவன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவர்களை நெருங்க, அவ்வளவுதான் ஜீவன் நடுநடுங்கி எழுந்து நின்று கொண்டான்.

 

"இப்ப சொல்ல போறீங்களா இல்லையாங் அம்மிணி?" என்று மனைவியை அழுத்தமாக பார்த்துக் கொண்டு ஜீவனிடம் கேள்வி கேட்க..

 

"ப்ளீஸ்.. ப்ளீஸ் மாமா.. மலர ஒன்னும் சொல்லாதீய்ங்க!" என்றான் ஜீவன். தன் மனைவிக்கு அவன் ஆதரவாக பேசியதும் இவன் முறைக்க…

 

"ரொம்ப மொறைக்காதீக மாமா.. அவளுக்கு நான் அண்ணன் முறை தான் வேணும்" என்றான் ஜீவன். அவன் முதுகில் தட்டியவள் "பிச்சுபுடுவேன் பிச்சு! நீ என்னைய விட ரெண்டு மாசம் அஞ்சு நாள் 10 மணி நேரம் சின்னவன். சோ எனக்கு தம்பி!" என்றாள் அந்த ரணகளத்திலும் மலர்விழி.

 

"அடி பாதகத்தி!! ஒரு ப்ளோல சொன்னா.. அதுக்கு எப்படி கரெக்டா டைமிங் சொல்றா பாரு! மேக்ஸ்க்கு பொறந்தவளா இருப்பாளோ?" என்று முணுமுணுத்தான் ஜீவன்.

 

"ஜீவா.." என்று மாணிக்கவேலின் குரல் அழுத்தமா அழைக்க…

 

"இங்க பாருங்க மாமா.. இந்த பக்கி உங்கள லவ் பண்றேன்னு சொல்லிச்சு. கூடவே நீங்களும் தனி மரமா சுத்திகிட்டே இருந்தீய்ங்க. அதனால உங்க ரெண்டு பேரையும் கோர்த்து விட சின்ன பிளான் போட்டேன். அது நடந்து போச்சு!! அவ்வளவுதான்.. உங்கள நான் குடும்பஸ்தன் ஆக்கிட்டேன்¡ அதுக்கு எனக்கு நன்றி சொல்லலைனாலும் பரவால்ல.. இப்படி என்னைய முறைச்சு முறைச்சு பார்த்து பீதியை கிளப்பாதீய்ங்க.. இனி நீங்களாச்சு! உங்க பொண்டாட்டியாச்சு! உங்க குடும்பம் ஆச்சு.. என்னைய ஆள விடுங்கடா சாமி!! இதுக்கு மேல இந்த ஜீவனுக்கு ஜீவன் இல்லை" என்றபடி எடுத்தான் ஓட்டம்.

 

அவன் ஓடுவதையே பார்த்த மலர்விழி "மச்சி.. ஓடி ஓடி அப்படியே வாழ்க்கையின் ஓரத்துக்கு ஓடிடாத!! என்னைக்கு இருந்தாலும் திரும்ப இங்கே தான் வந்தாகணும்! நான் தான் உனக்கு பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வைக்கணும்" என்று இவள் கத்த…

 

"போடி பக்கி!!" என்றவன் மாமனின் முறைத்தலில் "போங்க.. பக்கிங்க.. அய்த்தங்க..!!" என்றவன், கடைசியில் "என்னையும் இப்படி இவிய்ங்க மாதிரி பேச வச்சுட்டாய்ங்களே!" என்று புலம்பிக் கொண்டே ஓடிவிட்டான்.

 

ஓடும் அவனை தான் பாசமாக பார்த்து நின்றிருந்தாள் மலர்விழி. அவள் கண்ணில் தெரிந்த பாசம் மாணிக்கவேலுக்கு நன்கு புரிவதாய்!!

 

அவனுக்குத்தான் அவள் காதலாய் பார்ப்பது தெரியுமே, அந்தப் பார்வை அவனுக்கானது!! அவனுக்கு மட்டுமே உரிமையானது!!

 

சரி என்று அந்த ஆத்தங்கரை திட்டில் அமர்ந்தவன் "வந்து கதைய சொல்லுங் அம்மிணி! எப்படியும் ஒரு பிளாஷ்பேக் வச்சிருப்பிங் தானுங்களே! வந்து சொல்லுங்.. கேட்போமுங்க!" என்றதும் "அதெல்லாம் இப்ப முடியாது கிளம்புவோம் வாங்க!" என்றாள்.

 

ஆனால் அவனோ அசைந்தால் தானே!! அய்யனார் கணக்காய் அவன் அப்படியே அசையாமல் அமர்ந்திருக்க…

 

"அடம்! அடம்!! அடம்!!" என்றவள் மெல்ல அவன் அருகில் அமர்ந்து அவன் புஜத்தில் தலை சாய்ந்து கொண்டாள்.

 

இருவரும் சற்று நேரம் பேசவே இல்லை இவள் தன்னை காதலித்து இருக்கிறாள் என்பதே இன்னும் கிரஹிக்க முடியாமல் தான் இருந்தான் மாணிக்கவேல். அது எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கையில் முதன் முதலில் இவனோடு பைக்கில் செல்லும் போது கூட எந்தவித அசூசை படவில்லை! தெரியாத ஒருவனாக இருந்தாலும் அவனிடம் எப்படி கட்டிக்கொண்டு எந்த பெண் அமர்ந்திருப்பாள்? மனதில் அவன் இல்லாமலா?? இப்படி பல நிகழ்ச்சிகள் அவன் யோசித்துக் கொண்டிருக்க.. அனைத்திலும் அவன் கண்டது.. அன்று புரியாதது.. இன்று புரிந்தது அவள் காதல்!!

 

இரண்டு வீடுகளுக்காக காதலித்து கல்யாணம் செய்தோம் என்று பொய் சொல்லி.. அந்த புரளியை பரப்பி வைத்திருக்க.. கடைசியில் அதுவே தான் உண்மை போல என்று சிரித்துக்கொண்டவன், தன் புஜத்தில் தலை சாய்த்து இருந்தவளின் உச்சியில் மென்மையாக ஒரு முத்தம் பதித்தான்.

 

"என்னை எவ்வளோ நாளா தெரியுமுங்க அம்மிணி?" என்று‌ கேட்டான். மீண்டும் பன்மை விகுதியை சேர்த்து விட்டான் இந்த ஊருக்கு வந்தாலே இவனுக்கு இப்படி ஒரு நோய் வந்து விடுகிறது என்று சிரித்துக் கொண்டாள்.

 

தலையை மட்டும் நிமிர்த்தி அவன் முகத்தைப் பார்த்து சிரித்தவள் "ரெண்டரை வருஷமாங்க மாமா!" என்றாள்.

 

இவன் இங்கே மதுரைக்கு வந்தே மூன்று வருஷம் தான் ஆகிறது. இதில் இரண்டரை வருடமாக என்றால்.. அவனுக்கு தலையே கிறுகிறுத்தது!!

 

அவளின் காதலை நம்ப முடியாமல் அவள் கண்களை பார்த்துக் கொண்டே கன்னத்தில் மெதுவாக இவன் வருட…

 

கணவனின் மென் ஸ்பரிசத்தில் தன்னையே தொலைத்து அவளும் அமைதியாக காதலாக அவனையே பார்க்க…

 

"பங்காளி.. போதும் ரொமான்ஸ் பண்ணுது! வாங்க.. வாங்க.. வீட்டுக்கு கிளம்பலாம் வீட்டுக்கு போய் எவ்வளவு வேலை இருக்கு" என்றபடி வந்து நின்றான் கதிரேசன்.

 

"கரடி.. கரடி..!" என்று முணுமுணுத்தவன் "நீங்க முன்னால போங்க.. போங்க.. நாங்க பின்னால வர்றோமுங்க" என்றான் பல்லை கடித்தபடியே..

 

"அப்படி எல்லாம் விட முடியாது! நான் தான் சொன்னேன் இல்ல.. வீட்டுக்கு போய் நிறைய வேலை இருக்குன்னு. நீங்க இன்னொரு அரை மணி நேரம் கழிச்சு வந்தா வேலை பாதிக்கப்படுமா படாதா?" என்றான் கதிரேசன் விடாகொண்டனாய்.

 

"அப்படி என்ன வேலை வீட்ல உனக்கு போய் இருக்கு? என்ன கல்யாண வீட்டை நீதான் சொமக்க போற மாதிரி… இல்ல நாளைக்கு கறி விருந்தே உன் தலைமைல தான் நடக்க போற மாதிரி பேசுற?" என்று கொஞ்சம் கடுப்படித்தான் மாணிக்கவேல், மனைவியுடன் இந்த தருணம் எவ்வளவு முக்கியமானது இதில் வந்து இடையூறு செய்கிறானே என்று.

 

"ஆமா.. ஆமா… பங்காளி!! அதைவிட முக்கியமானது இன்னிக்கு எனக்கு ஃபர்ஸ்ட் நைட்!! அதுக்கு தான்.. வீட்டுக்கு போய் இன்னொரு தடவை இந்த பிரச்சினை எல்லாம் பேசுவாய்ங்க.. பேசி கீசி சமாதானமாகி எப்படியும் ஒரு பத்து மணிக்கு வச்சிட மாட்டாய்ங்க? அதுக்குத்தான் இவ்வளோ அவசரம்!" என்றதும், க்ளுக்கு என்று மலர்விழி சிரித்து வைத்தாள்.

 

"அய்த்தான்… உன்கூட.." என்று தலையில் அடித்துக் கொண்டாள் மலர்விழி.

 

"எல்லா பெருமையும் உன்னையே சேரும் மலர் புள்ள! என் பிள்ளைக்கும் மலரனு உன் பேர் வைக்கிறேன்" என்றான்.

 

"ரொம்ப ஓவரா பண்ணாத அய்த்தான் என் பேர்ல மட்டுமா மலர் இருக்கு? உன் பொண்டாட்டி பேர்லையும் தானே மலர் இருக்கு! அதே மாதிரி வைக்கிறேன்னு சொல்லு! இதுல எதுக்கு நீ என்னை இழுக்குற?" என்று சிரித்தாள்.

 

"ஆமாம் பங்கு.. பையன் பிறந்தால் என்ன பண்ணுவ? அவனுக்கும் மலர்னு பெயர் வைப்பியா?" என்று ஒற்றைப் புருவத்தை தூக்கி மாணிக்கவேல் கேட்க..

 

"மலரவன்னு வச்சிருவேன் பங்கு! நாங்க எல்லாம் எப்படிப்பட்ட ஆளு தெரியுமா? உனக்கு இன்னும் சரியா தெரியல.. சோழவந்தான்ல வந்து கேளு எங்க பெருமைய! மலரே சொல்லிக் கொடு நம்மள பத்தி…" என்றவனை வெறுப்பேற்றும் வகையில் "வாங்க அம்மிணி கால் வலிக்கதுனீங்க இல்ல.. நான் தூக்கிகிறேனுங்க!" என்றான் மாணிக்கவேல்.

 

'நான் எப்ப கால் வலிக்குதுன்னு இவரட்ட சொன்னேன்?' என்று அவள் யோசித்துக் கொண்டே இருக்கும் முன் அவளை இரு கைகளில் அள்ளிக் கொண்டான்.

 

அவளும் தடுமாறி அவனது நெஞ்சத்தில் நன்றாக சாய்ந்து கைகளால் கழுத்தை கட்டிக்கொண்டு "சொல்லிட்டு செய்ய மாட்டீங்களா மாமா? பாருங்க நான் பயந்துட்டேன்" என்றாள்.

 

"சொல்லிக்கிட்டே தானே செய்தேனுங்க.." என்று அவள் மூக்கோடு மூக்கை உரசிக் கொண்டு மெல்லிய குரலில் இவன் பேச.. பக்கத்தில் இருந்த கதிரேசனுக்கு இப்போதுதான் மண்டையில் பல்பு எரிந்தது.

 

அதாவது ஒவ்வொரு முறையும் அவளை சீண்டவென்று அவன் செய்ததெல்லாம் சின்னஞ்சிறுசுகளின் சீண்டலான காதல் என்று புரிந்தது.

 

"இப்படி லேட்டாவா புரியணும் நமக்கு?" என்று மறுபக்கம் திரும்பி தலையை கோதிக் கொண்டவன், "ஆனாலும் தப்பில்லை.. இப்பவாது புரிஞ்சுதே!" என்று பேசிக் கொண்டான் தனக்குத்தானே.

 

வேண்டுமென்றே கதிரேசனை வெறுப்பேற்ற அவளை கையில் தூக்கிக் கொண்டவன், இப்பொழுது 'கையில் மிதக்கும் கனவா நீ?' என்பது போலவே அவளையே பார்த்துக்கொண்டு.. அவ்வப்போது மூக்கால் அவள் மூக்கை உரசுவதும்.. நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைப்பதும்… கன்னத்தோடு கன்னம் இழைப்பதும்… என்று சிறு சிறு அன்பின் சிதறல்களை அவளிடம் கொட்டிக் கொண்டே வந்தான்.

 

"போதும் பங்கு பக்கத்திலேயே நானும் ஒருவன் இருக்கேன்" என்றான் கதிரேசன் சற்றே முறைப்பாய்..

 

"அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும் பங்கு.. நான்தான் அப்பவே உங்கள போங்கன்னு சொன்னேன்ல! நீங்க கேக்க மாட்டேங்குறிங்க!" என்றவன் தன் உலகில் மீண்டும் நுழைய…

 

"எனக்கும் பொண்டாட்டி இருக்கா! நாங்களும் இந்த மாதிரி கில்பான்ஸ் ஜில்பான்ஸ்.. அஜால் குஜால் எல்லாம் பண்ணுவோம்" என்றபடி வேகமாக முன்னே சென்று விட்டான் கதிரேசன்.

 

"ஸ்ஸப்பா… உன்ற வீட்டு ஆளுங்கள எல்லாம் சமாளிக்கிறதுக்குள்ள எனக்கு மூச்சு முட்டுதுங்க அம்மிணி" என்றான் மாணிக்கவேல்.

 

"அது என்ன என் வீட்டு ஆளுங்கனு பிரிச்சி பேசுறீங்க? இப்போ வந்தது உங்க அக்கா பொண்ணோட புருஷன்! அப்போ உங்க வீட்டு ஆளுதானே?" என்று இவளும் மல்லுக்கு நிற்க.. 

 

 இப்படியாக சண்டையும் கொஞ்சலும்.. கெஞ்சலுமாய் இருவரும் கோயிலுக்கு அருகாமைக்கு வந்து சேர… அதுவரையும் மனைவியை இவன் இறக்கி விடவே இல்லை.

 

பார்த்துக் கொண்டு இருந்த பெருசுகள் ஒருவருக்கொருவர் அவர்களை சுட்டிக்காட்டி தங்களுக்குள் சிரித்துக் கொள்ள… பெண்களின் முகமோ வெட்கத்தில் சிவக்க.. ஆண்களோ 'எப்படி நம்ம புள்ள' என்று மீசையை கர்வத்தோடு நீவிக் கொள்ள… அழகான வாழ்வியலுக்கான அர்த்தம் அங்கே!!

 

சிறுசுகள் தான் ஓவென்று சத்தம் போட.. அதில் தன்னிலை மீண்டவர்கள் "எதற்கு கத்துக்குறாங்க அம்மிணி?"

 

"எனக்கும் புரியலையே! ஏன் கத்துறாய்ங்க?" என்று அவளும் அவன் கையில் இருந்தே கேட்க.. இருவருக்கும் ஒரே நேரத்தில் புரிய.. சட்டென்று அவளை இறக்கி விட்டவன், வேட்டியை இறக்கி விட்டுவிட்டு வெட்கத்தோடு நெளிய, அவளோ மன்னவன் மார்பிலேயே முகத்தை புதைத்துக் கொண்டாள் செந்நிற முகத்தை காட்டாமல்…

 

அல்லிமலர் மருமகள் கண்ணம் வழித்து திருஷ்டி எடுத்தவர், "எல்லாரும் வீட்டுக்கு போலாமுங்க.. கிளம்புங்க! கிளம்புங்க!!" என்று தன் வெண்கல குரலில் ஆரம்பிக்க.. அடுத்த அரை மணி நேரத்தில் சொந்த பந்தங்களோடு அனைவரும் வீட்டில்!!

 

கதிரேசன் ஒரு எதிர்பார்ப்போடு காத்திருக்க.. அவன் எதிர்பார்ப்பில் மண் விழுந்தது. ஆம்! அன்று நல்ல நாள் இல்லையாம்.

 

மாணிக்கவேல் அவனை நமட்டு சிரிப்போடு பார்த்து "பங்கு முதல தொண்டோனும்… அப்புறம்தான் கட்டோணும்!" என்று சிரிக்க.. கதிரேசன் புரியாமல் பார்க்க.. களஞ்சியமோ "அதாவது பங்கு.. மொதல்ல அவக மனச வெல்லனுமாம். அப்புறம் தேன்…." என்று வாய் பொத்தி சிரிக்க.. 

 

"போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்!" என்று விறுவிறுவென்று உள்ளே சென்று விட்டான் கதிரேசன்.

 

வேகமாக சென்றவன் அங்கே தனியாக அமர்ந்திருந்த தேனை பார்த்து "ஐ அம் சாரி! அப்படி நான் செஞ்சிருக்க கூடாது. ஏதோ கோவத்துல… ஆனாலும் பிடிச்சு தேன் செஞ்சேன். இப்போ.. இப்போ… நாம… நாம… பழகி பார்க்கலாமா?" 

முதலில் ஏதோ தாறுமாறாக கேட்க வருகிறானோ என்று நினைத்து விழிவிரித்து பார்த்தவள் அவனின் 'பழகிப் பார்க்கலாமாவில்' சிரிப்பு தான் பீறிட்டது தேனுக்கு, அவளையும் அறியாமல் மெல்ல தலை அசைந்தது!!

 

இரவோடு இரவாக மனைவியை தோட்டத்தில் இருக்கும் அவர்களின் பரண் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான் மாணிக்கவேல்.

 

வயல்களின் நடுவே சுற்று தாழ்வராத்தோடு அழகிய சிறிய பரண் வீடு. பெரும்பாலும் அதனை தோட்டத்திற்கு காவலுக்கு வரும் போது தான் பயன்படுத்துவார்கள். அதுவும் இது அவர்கள் குடும்பத்துக்கு என்றே பிரத்தியேகமாக செய்யப்பட்டது. 

 

முதலில் கதவை அடைத்தவன் அதன்பின் தன் மனையாளின் அதரத்தை அடைத்தான் தன் அதரங்கள் கொண்டு.. உயிரோடு உயிர் இழுக்கும் அந்த இதழ் அணைப்பு.. அதை சற்றும் எதிர்பார்க்காதவள் இதழ் பிரிக்க எத்தனிக்க.. இன்னும் அழுத்தமாக கவ்வி கொண்டான் தேன் மதுர அதரங்களை!!

 

அவள் சூடியிருந்த மல்லிகை மணமும் பெண்ணவளின் பிரத்தியேக மணமும் மன்னவன் அவனை வசியப்படுத்த, அதில் மயங்கியவன் அவள் தோளில் முகம் புதைத்து மெல்ல வாசனையை நுகர்ந்தான்.

 

அவளது கூந்தலில் விரல் நுழைத்து அசையாது தலையை இறுகப் பற்றிக் கொண்டு மீண்டும் இதழ் யுத்தத்தை துவங்கினான். தொடங்கினால் முடிந்து விடும் யுத்தமா அது!!

 

பெண்ணவளின் கரங்கள் அவன் தோள்களிலும், முதுகிலுமாய் ஊர்வலம் நடத்த.. அதில் இன்னும் அவனது தாபம் தூண்டப்பட, ஒரு கை கூந்தலைப் பற்றி இருந்தாலும்.. மறுகரம் கொண்டு இறுக்கமாக அவள் இடை பற்றி தழுவிக் கொண்டான்.

 

அவர்களின் அழகிய கூடல் ஒற்றை முத்தத்தில் துவங்கியது.. "மாமா.. மாமா.." என மெல்லிய குரலில் அவள் அவன் காது மடலை கவ்வி சரசமாக அழைக்க.. அவனோ அதில் கிளர்ந்து அவளோடு சரசமாட முனைந்தான். அவளை இறுக்கி அணைத்தவன் அவளது கழுத்தில் அழுத்தமாக இச் ஒன்றை பதித்தான் பற் தடத்தோடு!!

 

அழகாக அலங்கரித்து சிலையென நின்றவளின் அழகு அவனை போதை கொள்ளச் செய்ய "அம்மிணி.. அசத்துற.. அழகி நீ" என்று செழுமையான அவளது கன்னத்தை அவன் செல்லமாக கடிக்க.. மேற்பற்கள் கொண்டு தன் உதட்டை கடித்து தன் உணர்ச்சிகளை கட்டினாள் மலர்விழி! விழியாளின் விழிகள் தாமாக மூடிக் கொள்ள…

 

ஒற்றை முத்தத்தில் அடங்குமா அவனின் மோகம்... இல்லை அதை அடக்கத்தான் விடுவானா அவளின் மன்னவன்!!

 

இதுநாள்வரை அவனிடம் சொல்லாத தன் காதலை மெல்ல அவன் முகம் பார்த்து "ஐ லவ் யூ மாமா" என கூறி அவன் கண்களில் எம்பி நின்று முத்தமிட்டாள். கண்களை மூடி அதை அனுபவித்தவன், அவளை இன்னும் அவன் உயரத்திற்கு இடையைப் பற்றித் தூக்கி மீண்டும் இதழ் அமிர்தம் விழுங்கினான்… 

 

அமிர்தம் குடித்தான் தேவனாய்…

அவளின் காதல் குடித்தான் இராட்ஷஸனாய்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top