மாமனே 19
அனைவரும் கண்களை மூடி அன்னையை பிரார்த்திக்க… அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கதிரேசனோ மெல்ல நகர்ந்து தேனின் அருகில் வந்தான். தன் சட்டைபையில் வைத்திருந்த மஞ்சள் கிழங்கு கட்டிய தாலிக்கயிறை எடுத்தவன், ஒரு முறை அனைவரையும் சுற்றி பார்க்க..
அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஆழ்ந்த பக்தி பரவசத்தில் கண்கள் மூடி லயித்து இருக்க.. இவன் மட்டுமே கொஞ்சம் வன்மம் கொண்டான், வஞ்சியின் மீது!!
ஆம்! கொஞ்சம் வன்மமே தான்!! தங்கள் பெண்ணை மட்டும் கல்யாணம் செய்து கொண்டு வந்து இந்த பாடு படுத்துகிறான் இந்த இர்ட்ஷஸன்… அவர்களின் குடும்பி என் கையில் இருக்க வேண்டும்! அதற்கு அவன் அக்கா பெண்ணை கட்டி தூக்க திட்டமிட்டு விட்டு தான்
கருமத்தம்பட்டியில் காலை வைத்தான் கதிரேசன்.
அதுவும் முதல் முறை அவர்கள் வீட்டுக்கு சென்ற போதே லேசுபா அவனில் இருந்த எண்ணம், இத்தனை நாட்களில் வேர் விட்டிருக்க… இப்பொழுது யாரும் அறியாமல் தாலியை கட்டி விட்டான். பஞ்சவாத்தியம் முழங்க அன்னையின் கருணை வழியும் முகத்தில் தீபாராதனை காட்டப்பட அன்னையைப் பார்த்து வணங்கிவிட்டு தான் தாலியை கட்டினான்.
இதில் தாலி கட்டும்போது மாணிக்கவேலை முறைத்துப் பார்த்துக் கொண்டே தான் கட்டினான்.
தேனுக்குமே முதலில் என்னவென்று புரியவில்லை. சாமி கும்பிட்டு இருந்தவள் கழுத்தில் ஏதோ ஊருவது போல இருக்க.. என்னவாயிருக்கும் என்று குனிந்து பார்த்தவள் மார்பில் தாலி அசைந்தாடிக் கொண்டிருந்தது.
கழுத்தை தொட்டு பார்க்க.. கட்டப்பட்டிருந்தது தாலி!! கொஞ்சம் கூட நம்ப முடியாமல்.. "அம்மாஆஆஆஆ…!!" என்று கத்த…
என்ன திடீரென்று தேன் கத்துகிறாள் அருள் வந்து விட்டதோ? என்று அனைவரும் அவளை திரும்பிப் பார்க்க..
தன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து முன்னே பிடித்தவாறு நின்றிருந்தாள் தேனு.
"என்னது தேன் கழுத்துல தாலியா? எப்படி.. எப்படி? எப்படி வந்துச்சு? யாரு கட்டினா?
என்னடா திடீர்னு தாலி கட்டி இருக்கு?
யார்ரா கட்டுனது? என்று இப்படி பலவாறு தங்களுக்குள் பேசிக்கொண்டே பெண்ணிடம் வர.. சற்று தள்ளி இருந்த கதிரேசனை கண்டு கொண்டவள் "இவன்தேன் என் கழுத்தில் தாலி கட்டினது" என்று கதிரேசனை காட்டியபடி கண்கள் கலங்க நின்று இருந்தாள்..
கதிரேசனின் இந்த செயலை அங்கிருந்து அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. எதிர்பாரா திடீர் திருப்பம் முனையாய்…
ஏற்கனவே ஒரு கல்யாணம் இப்படி நடந்திருக்க.. அதனை சரி செய்யும் பொருட்டு அத்தனை பேரையும் அழைத்து இழுத்து குடும்பத்துக்குள் பிரச்சனை வேண்டாம் என்று தவிர்க்க பார்க்க… மீண்டும் ஒரு பிரச்சனை அதே மாதிரி திருமணத்தின் மூலம்!!
அயர்ந்து நின்று விட்டார் சுந்தரவேல்!!
"அடேய்… என்னடா பண்ணி வச்சிருக்க? எரும எரும தருதலை.. தருதலை!" என்று சந்திரசேகர் மகனின் முதுகில் அடிக்க மகேஸ்வரியும் வாயை பிளந்து நின்று விட்டார்.
வேதாமணியை கேட்கவா வேண்டும்? ஏற்கனவே பொண்ணு வாழ்க்கையை நினைத்து அவ்வப்போது அழுத கண்ணீரும் ஆனந்த கண்ணீரும் மாறி மாறி வரும் அவர் கண்களில்..
இப்பொழுது கதிரேசன் செய்த வேலையில் கண்ணீர் வராத உச்சகட்ட அதிர்ச்சி அவருக்கு!!
அல்லிமலரும் அவர்களின் மகள்கள் மலர்கள் அண்ட் கோவும் தங்கள் வெண்கல தொண்டையை திறந்து "எப்படி பண்ணிவிட்டானே பாவி! இவனை என்ன பண்ணலாம்?" என்று ஆளுக்காளுக்கு தங்கள் மகளை அணைத்துக் கொண்டு எதிரே நின்ற கதிரேசனை அத்தனை முறைப்போடு பேசினர்.
ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி ஏறிவிட.. மற்றொரு பெண்ணையும் தங்கள் அருகில் பத்திரமாக வைத்துக் கொண்டார்கள்.
மலர்விழிக்கும் மாணிக்கவேலுக்கும் அங்கே என்ன நடந்தது என்று சற்று நேரம் புரியவில்லை. ஏனென்றால் அவர்கள் கருவறைக்கு சற்று அருகே நின்றிருக்க.. இங்கே இந்த கூச்சல் கும்பல் நடந்த போது சாமி பாதத்தில் வைத்த மாலையை மாணிக்கவேலுக்கு அணிவித்த பூசாரி, மற்றொன்றை மாணிக்கவேலின் கையில் கொடுத்து மலர்விழிக்கு அணிய செய்தார்.
அதே நேரம் தான் இங்கு இவனும் தாலி கட்டி விட்டான். என்ன சத்தம் என்று திரும்பி பார்த்தவர்களுக்கு ஆளாளுக்கு ஒன்று பேச ஒரு பக்கம்
ஒன்னும் புரியவில்லை.
பெண்கள் அழுது கரைய.. மற்ற பக்கம் மாமன்மார்கள் கோபத்தோடு கதிரேசன் சட்டையை பிடித்துக் கொண்டு அத்தனை பேரும் நின்று இருக்க.. கதிரேசன் என்ன செய்தான் என்று புரியவில்லை மாணிக்கவேலுக்கு.
"கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீங்களா!! என்ன நடந்துதுனு முதல்ல சொல்லுங்க!" என்று அவன் தன் ஆக்ரோஷ குரலில் கத்தியதும் தான் சற்று நேரம் அமைதியாக இருந்தது.
அதற்கு பின் தேன் மட்டும் விசும்பிக் கொண்டே இருக்க.. கதிரேசனம் தன் சட்டை நீவிக் கொண்டவன், கையை பின்னால் கட்டிக்கொண்டு மேலே இருந்த அலங்கார விளக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
எழில் தான் தன் மகளைக் காட்டி "தம்பி.. அந்த எடுப்பட்ட பய.. இந்த மாதிரி பண்ணிடியான் பாரு.. பாவி.. பாவி!" என்று அழுக.. தேனை முன்னுக்கு அழைத்து அவளை பார்த்த மாணிக்கவேலின் கண்களில் கனல் கொதிக்க.. கதிரேசனை முறைத்தான். அடுத்த கணம் விட்டான் அறை ஒன்று.
"எவ்வளவு தைரியம் இருந்தா? இந்த வேலையை பார்த்திருப்ப.. சொந்தக்காரனும் உள்ள விட்டதுக்கு உன் இஷ்டத்துக்கு நீ தாலி கட்டுவியா டா?" என்றதும், அடுத்த கணம் கதிரேசன் யோசிக்க கூட இல்லை.
மாணிக்கவேலின் சட்டையை பற்றி "இதே தான் நானும் கேட்கிறேன்! நீ எந்த உரிமையில் தைரியத்தில் ஏன் முறைப்பொண்ணு கழுத்துல தாலி கட்டுன? அப்போ நீ செஞ்சது தப்பு இல்லன்னா இப்ப நான் செஞ்சதும் தப்பு இல்ல! ஏன் என் வீட்டுப் பொண்ணு மட்டும் உன் வீட்டில் வந்து கஷ்டப்படணுமா?" என்று பல்லை கடித்துக்கொண்டு கதிரேசன் கேட்க..
அப்போதுதான் மாணிக்கவேலுக்கு உரைத்தது 'இந்த முட்டாப் பீஸ் நான் மலர்விழியை கொடுமைப்படுத்துகிறேன் என்று நினைத்து இவள் கழுத்தில் தாலியை கட்டி விட்டான்' என்று.
"ஐயோ!!" என்றானது அவனுக்கு.
"அன்றைக்கு அவனை வெறுப்பேற்றுவதற்காக செய்ததை இவன் தம்பதியரின் அன்னியோன்யமாக எடுத்துக் கொள்வான் என்று மாணிக்கவேல் நினைத்திருக்க.. இந்த என்பது 70களில் பிறந்திருக்க வேண்டியவனோ.. அதை கண்வனின் கொடுமை என்று தப்பரத்தம் கொண்டு.. பெண்ணியம் பேசி.. இப்படி என் அக்கா பொண்ணு கழுத்தில் தாலியை கட்டி இருக்கிறான்! கோட்டிபய.." என்று பல்லை கடித்தான் மாணிக்கவேல்.
மலர்விழிக்கும் அத்தனை கோபம் கதிரேசன் செய்தது. "ஏன் அய்த்தான் இப்படி பண்ணுன? நான் அவரை விரும்பி கட்டிக்கிட்டேன்! அதுக்குன்னு நீ இப்படி தாலி கட்டுறது சரியா போகுமா? கொஞ்சமாவது யோசனை வேணாம் உனக்கு! இவரோட விரும்பி தானே நான் போனேன் நீங்க எங்கள துரத்தும் போது.. ஆனா அந்த பொண்ணு உன்னை விரும்பிச்சா?" என்று கேட்டதும், ஒரு கணம் தான் தாலி கட்டிய அந்த பதுமையை திரும்பி கதிரேசன் பார்க்க.. இவனைப் பார்த்ததுமே இன்னும் உதடு பிதுக்கி அவள் அழ ஆரம்பிக்க..
அந்த அழுகை இவன் மனதை தொட, ஏனோ மனதினுள் ஒரு ஈர்ப்பு சட்டென.. "யார் சொன்னா? எல்லாம் புடிச்சு தான் தாலி கட்டினேன். உன் புருஷனுக்கு மட்டும்தான் உன் மேல லவ்வா? எனக்கும்தான் அவ மேல.." 'இந்த பொண்ணு பேரு மறந்து போச்சே!' என்று மனதுக்குள் கூறிக் கொண்டவன்," ஹான்.. லவ்வு ல்வவு.. உங்க வீட்ல பார்த்ததுல இருந்து ரொம்ப பிடிச்சு போச்சு அதனாலதான் தாலிய கட்டிட்டேன்!" என்றான்.
"என்ன லவ்வா?" என்று தேனு ஒரு பக்கம் அதிர..
வள்ளியோ "உண்மைய சொல்லுடி! எனக்கு தெரியாம ஏதாவது உனக்கு ரூட்டு விட்டியா அவருக்கு? இல்லையென்னா எப்படி கரெக்டா உன் கழுத்துல மட்டும் வந்த தாலியை கட்டிடியான்? பழி வாங்கணும்னு நினைச்சேன்னா நம்ம ரெண்டு பேரும் கழுத்துல யார் கழுத்துல வேணாலும் தாலி கட்டி இருப்பாருல? உன் கழுத்துல பர்டிகுலர் தாலி கட்டிருக்கானா.. சம்திங் இஸ்கு இஸ்கு!" என்று சத்தம் இல்லாமல் அக்காவின் காதை கடித்தாள் வள்ளி.
அதற்குள் திருமாறன் சுந்தரவேலு கையை பிடித்துக் கொண்டு "மன்னிச்சிடுங்க சம்மந்தி! இந்த பாவி பய இப்படி செய்வானு தெரியாது! அவன் என் தங்கச்சி பையன் தான்.. நல்லவன். கொஞ்சம் முரடன். மத்தபடி எந்த தப்பு தண்டாவும் பண்ணாதவன். ஊர்ல நலம் வீச்சு இருக்கு. விவசாயம் படிச்சிட்டு அதை தான் பார்த்துக்கிறான். உங்களுக்கு விருப்பம் இருந்தா.. அதுவும் அந்த பொண்ணுக்கு விருப்பம் இருந்தா இந்த கல்யாணத்தை பற்றி நாம் யோசிக்கலாம். இல்லன்னா கொஞ்சம் கூட யோசிக்க வேண்டாம். அந்த பொண்ணு கழுத்துல இருக்குற தாலி கழட்டி இப்பவே அம்மன் உண்டியல்ல போட்டுடலாம். என்ன சொல்லிறிங்க? இங்கே நடந்த விஷயத்தை நாம எல்லாரும் இதோட மறந்துவிடலாம்!" என்றார் என்ன இருந்தாலும் அவரும் ஒரு பெண்ணை பெற்றவர் தானே…
அவர் பேசியது எல்லோருக்கும் ஒப்புக் கொள்ளவதாய் இருந்தது. எழிலையும் பெரிய மருமகனையும் அழைத்தவர் "இதுல நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்லிங். பொண்ணு பெத்தவங்க நீங்க தான் நீங்க தான் சொல்லோணும்" என்றதும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அவர்கள் பார்த்த வரையில் மலர்விழியின் குடும்பம் எந்த பிரச்சினைக்கும் இல்லாததுக்ஷ கூடவே தம்பி இருப்பதால் நாளைக்கு ஏதாவது ஒன்று என்றால் கூட அவன் பார்த்துக் கொள்வான். வேறு எங்கேயோ கட்டிக் கொடுப்பதற்கு மதுரையிலிருந்து சோழவந்தான் பக்கம் தானே.. என்று அவர்களுக்கும் இந்த சம்பந்தத்தில் சந்தோசம் சம்மதம்!
ஆனால் மகளுக்கு விருப்பம் இருக்க வேண்டுமே.. அப்போதிலிருந்து ஏங்கி ஏங்கி அழுகும் மகளை என்ன சொல்லி சமாதானப்படுத்த என்று அவர்களுக்கு தெரியவில்லை. "எதுக்கும் நான் தேன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிறேனுங்க பா!" என்று சொன்னவுடன் சரி என்றார் சுந்தரவேலு.
அப்புறம் பெண்கள் கூட்டம் தனியாக செல்ல.. ஜீவனோ கதிரேசனை முறைத்துக் கொண்டே நின்றிருந்தான் ஓரமாக.
மற்ற ஆண்கள் எல்லாம் ஒருபுறம் கதிரேசனை சூழ்ந்து கொண்டனர். அவனது தந்தை சந்திரசேகர் களஞ்சியம் அவனின் அப்பா கலியபெருமாள் திருமாறன் என்று மாறி மாறி அவனை திட்டிக் கொண்டே இருந்தனர்.
அவனோ யாருக்கு இந்த விருந்தோ என்று தேனின் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குமே தெரிந்தது தான் தான் செய்தது தவறு என்று! அதிலும் அவள் கத்தி ஆர்ப்பாட்டம் போடாமல் அழுவது ஏனோ அவன் மனதை தொட்டது. பிசைந்தது. அந்த உருவம் இல்லாத ஏதோ ஒன்று தொண்டைக்கும் வயிற்றுக்கும் பயணித்தது.
'நீ உன் வீட்டுக்கு பொண்ணுக்காக பாத்தியே டா.. அந்த பொண்ணும் ஏதொ ஒரு வீட்டுக்கு ஒரு பொண்ணுனு நீ ஏன் பாக்கல?" என்று அவனது நியாயம் மனம் அவனை சாட.. அதனால் தான் இந்த அமைதி. இல்லை என்றால் வார்த்தைக்கு வார்த்தை இவனும் மல்லு கட்டிக்கொண்டு இருப்பான்.
பெண்கள் இந்த கல்யாணத்தின் நிறை குறைகளை அனைத்தையும் தேனுக்கு எடுத்துக் கூறி.. "இது நாங்கள் பார்த்த கல்யாணம் மாதிரி இருந்தா.. நீ ஒத்துக்கொள்வாய் தானே? ஆனாலும் உன்னோட விருப்பம் முக்கியம்" என்று கூறியதும், சிறிது நேரம் யோசித்தவளுக்கு பெரிதாக இதில் விருப்பம் இல்லாமல் இல்லை.
அவனும் சொந்தம். வீட்டில் பார்த்து கட்டி வைத்திருந்தால் ஒத்துக் கொண்டு இருப்பாள் தானே? ஆனாலும் மனதில் ஓரம் மாமன்!!
அவனுக்கும் திருமணம் நடந்து விட்டது. அவனுமே இத்தனை ஆண்டுகளாக பழங்காதலை நினைத்து வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருந்ததால் எத்தனை பேருக்கு எத்தனை வருத்தம் என்று அறிந்துவள் தானே அவள்! அதனால் மாமனை மனதில் இருந்து தள்ளி வைத்துவிட்டு திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாள்.
"அப்பாடி பொண்ணு சம்மதிடிச்சு.." அங்கிருந்து வள்ளி கத்த.. அப்பொழுது தான் கதிரேசன் முகத்தில் ஒரு நிம்மதி பாவம். தலையை குனிந்து யாரும் அறியாமல் வாயை தொடைப்பது போல மெல்ல சிரித்துக்கொண்டான்.
கதிரேசனை நெருங்கிய மாணிக்கவேலு "ஏதோ என் அக்கா பொண்ணு சம்மதித்தால் அந்த மட்டுல நீ தப்பிச்ச பங்காளி! இல்லைன்னு மட்டும் வச்சுக்க நீ இந்த கருமத்தம்பட்டியை தாண்டி இருக்க மாட்ட!" என்று அவனது சட்டையை சரி செய்வது போல நீவிக்கொண்டு மிரட்டினான் பொண்ணுக்கு தாய் மாமனாய்.
"அதேதான் பங்கு.. ஏதோ என் மாமா பொண்ணு ஒன்ன விரும்பனதால தான் நீயும் தப்பிச்ச.. இல்லன்னா மதுரை மண்ணை விட்டு உன்னை தாண்ட விட்டு இருப்போமா?" என்று அவனை கட்டிக் கொண்டு கூறினான், அவன் மனைவிக்கு முறை மாமனாய்!!
"இவனுங்க அலப்பறை தாங்க முடியல!!" என்று ஜீவன் இருவரையும் முறைத்து விட்டு ஓரம் சென்றான்.
அதற்குள் அம்மன் சன்னதியில் இருந்து இரு மாலையை எடுத்து வந்து பூசாரி கொடுத்திருக்க தேனும் கதிரேசனும் மாற்றிக் கொள்ள… மீண்டும் ஒரு திருமணம் தேதி குறிக்க வேண்டும். ஆனால் இந்த திருமணத்தை மதுரையில் வைத்துக் கொள்வோம் என்றதும் அடுத்து ஒரு கொண்டாட்டத்திற்கு தயாரானது சொந்தங்கள்!!
இப்படியாக மதிய விருந்து முடித்து அங்கு இருக்கிற நிழலிலேயே சிறிது நேரம் இளைப்பாரி விட்டு செல்லலாம் என்று அனைவரும் ஆங்காங்கே ஜமுக்காளம் விரித்து இளைபாறினர். சிலர் உருண்டு புரண்டு படுத்திருந்தனர். சிலர் வம்புவளத்து கொண்டு இருக்க..
தன் புது மனைவியை தள்ளி நின்று ஓரக்கண்ணால் சைட் அடித்துக் கொண்டிருந்தான் கதிரேசன். மாணிக்கவேல் அவன் பக்கத்தில் அமர்ந்து "ம்க்கும்.." என்று தொண்டையை கணைக்க..
"என்ன சித்தப்பா.." என்று நக்கல் குரலில் கதிரேசன் கேட்க..
"என்ன சித்தப்பா சொல்ற.. ஒழுங்கா பங்காளினு கூப்பிடு!" என்று மிரட்டினான் மாணிக்கவேல்.
"அதாவது சித்தப்பா.. நீங்க உங்க பொண்டாட்டியோட சொந்தக்காரனா என்னை பார்த்து பங்காளினு கூப்பிடுறீங்க.. நானும் என் பொண்டாட்டியோட சொந்தக்காரன் உங்கள பாத்தா.. அவளுக்கு தாய் மாமன்னா, எனக்கு சித்தப்பா தானே!! அதனால தான் இந்த சித்தப்ஸ்" என்று கண்ணை தேனியிடம் இருந்து பிரிக்காமல் பேசிக் கொண்டிருந்தவனை பார்த்தவனுக்கு "எங்கிருந்து டா வர்றீங்க நீங்கள் எல்லாம்..!!" என்று கேட்க தான் தோன்றியது.
ஆனாலும் தனக்காக காத்திருந்து வேறு ஒரு சம்பந்தம் வருகையில் ஏதேனும் பிரச்சினை பண்ணுவார்களோ தேனும் வள்ளியும் என்று மனதின் ஓரம் மாணிக்கவேலுக்கு குறுகுறுத்துக்கொண்டே இருந்தது.
மனைவி கூட இன்புற்று இருந்தாலும் மனதின் ஓரம் இந்த வருத்தமும் இருக்கத்தான் செய்தது அவனுக்கு.
அதில் ஒன்று விடைபெற பெருமூச்சு விட்டவன், வள்ளியைத்தான் பார்த்தான். அடுத்து இவளையும் நல்லவன் ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுத்துட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
அதே நேரம் அங்கிருக்கும் ஆத்தங்கரை திட்டில் அமர்ந்திருந்த ஜீவனை நோக்கி வந்த களஞ்சியமோ.. அவன் காதில் எதுவோ கூற..
"அடே.." என்று கத்தியவன் அருகில் இருந்த கல்லை எடுத்து அவனை அடித்தான்.
"டேய்.. என்னோட சின்ன பையன் டா நீ! பெரியவனும் மரியாதை இல்லாம என்ன அடிக்கிற?" என்று அவன் தூக்கி எரியும் கல்லிலிருந்து லாவகமாக தப்பிக் கொண்டு களஞ்சியம் கத்த…
"பெரியவனா? அந்த மாதிரி பேச்சாடா பேசுன நீனு! மவனே என்கிட்ட நீ மாட்டின.." என்று அருகில் வேற ஏதாவது பெரிய கல்லு இருக்கா என்று அவன் பார்க்க…
"இங்க பாரு மச்சான்.. இப்படி எல்லாம் கோபப்படக்கூடாது!" என்று களஞ்சியமும் தள்ளி நின்று ஜீவனை சமாதானப்படுத்த முயன்றான்.
"என்னது மச்சானா? எடு அந்த உருட்டுக்கட்டையை.. மச்சான் கிச்சான்னு கூப்பிட்ட வாயிலேயே போடுவேன்!" என்றான் ஜீவன்.
"நீ மச்சான் இல்லாம.. வேற என்ன? என் பங்காளிக்கு மச்சானா எனக்கும் மச்சான் தான். அந்த உரிமையில் தான் கூப்பிட்டேன்" என்று வேஷ்டியை நன்றாக இடுப்பில் இறுக்கி கட்டிக் கொண்டு களஞ்சியம் கேட்க.. இவனுக்கும் கடுப்பாக வந்தது அவனை கண்ட மாத்திரத்தில்…
"மச்சான்.. நான் சொன்னது.." என்று மீண்டும் அவன் ஆரம்பிக்க..
"இன்னொரு வாட்டி பேசின.." என்று எக்கி அவனது முதுகில் கட்டிக்கொண்டு தலைமுடியை பிடித்து ஆட்ட தொடங்கினான் ஜீவன்.
அந்தப் பக்கம் வந்த மலய்விழி இவர்கள் இருவரும் அடித்துக் கொள்வதை பார்த்து ஓடி வந்தவள் "விடுங்க.. விடுங்க.. ரெண்டு பேரும். சின்ன புள்ள மாதிரி என்னத்துக்குடா சண்டை போட்டு இருக்கீக?" என்று இருவரையும் பிரித்தெடுக்க முயன்று தோற்றவள், பின் ஜீவனை பிடித்து இழுக்க, ஜீவன் கீழே விழுந்தான்.
அதுக்கு அப்புறம் தான் களஞ்சியத்துக்கு நிம்மதி பெரு மூச்சு விட்டான்
"என்னைய பார்த்து இவன் எப்படி அந்த கேள்வி கேட்கலாம்?" என்றதும் "என்ன கேள்வி கேட்டாரு?" என்று தன் முறைமாமனை முறைத்துப் பார்த்தாள் மலர்விழி.
"என்ன மாமா கேட்டீக அவன்கிட்ட?" என்று களஞ்சியத்திடம் கேட்க.. அவனோ தோளை குலுக்கிக் கொண்டு மீண்டும் ஒருமுறை வேஷ்டியை இடுப்பில் இறுக்கக் கட்டிக் கொண்டவன் "அவனிடமே கேளு.. மலரு" என்றான் அலட்சியமாக…
"என்னால முடியல.. முடியல.. சத்தியமா முடியல.. முடியல.. இத்தனை பேர் இங்கு இருக்காய்ங்க அவங்களையெல்லாம் விட்டுட்டு என்னைய பார்த்து ஏன் யா இந்த கேள்வி கேட்ட நீனு?" என்று கரகாட்டக்காரன் கவுண்டமணி கணக்கா மீண்டும் கல்லை பொறுக்கி ஜீவன் அடிக்க..
களஞ்சியமோ அவனிடம் இருந்து தப்பித்து ஓடிக்கொண்டே "நல்ல யோசிச்சு பாரு மச்சான். நான் சொன்னது தான் சரியா இருக்கும்" என்று ஓட்டம் எடுத்தான்.
"அப்படி என்னதான் எங்க மாமா கேட்டுச்சு?" என்று இவள் கேட்க…
"எங்க முறை பொண்ண உங்க மாமா கட்டிக்கிட்டாருல.. அதே மாதிரி உங்க மாமாவோட அக்கா பொண்ணுங்கள பங்காளிங்க நாங்க ரெண்டு பேரும் கட்டிக்கிறோம். ஒருத்தன் ஏற்கனவே கட்டிட்டான். இன்னொருத்திய நான் கட்டிக்கிறேன். அப்படி நீங்க ஏற்பாடு பண்ணலைன்னா… கரும்புக் காட்டுக்குள்ள தூக்கிட்டு போய் கில்பான்ஸ் பண்ணிடுவேன்னு சொல்கிறான். அதுவும் என்கிட்டயே சொல்றான்!! அவ தம்பி நான். என்கிட்ட இந்த வார்த்தை அவன் பேசலாமா… அதுவும் அந்த 'கரும்பு காட்டுக்குள்ள கசமுசா' ஐயோ..! ஐயோ..! ஐயோ..!!" என்று அவன் காதை பொத்திக் கொள்ள…
ஜீவன் பேசிய பேச்சிலும் அவன் நடந்துகிட்டு இருப்பதிலும் சிரிப்பை அடக்க மாட்டாமல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவள், அந்த குளத்தங்கரையில் இருந்த திட்டில் அமர்ந்து அப்படி சிரித்தாள்.
"சிரிக்காதடி.. பக்கி! பக்கி!!" என்று அவள் தலையில் இரண்டு கொட்டு கொட்டிய ஜீவன் "எல்லாம் உன்னால தான்!! உன் காதலுக்கு நான் உதவி செஞ்சு கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்தா.. உன் மாமனுங்க ரெண்டு பேரும் என் அக்காளுங்கள டார்கெட் பண்றாய்ங்க.." என்றான் தன் தோழி மலர்விழியிடம்!!
"விடுடா.. விடுடா.. இதெல்லாம் உனக்கு புதுசா என்ன? காதலுக்கு சப்போர்ட் பண்றதும் பின் அந்த குடும்பத்தால அடி வாங்குவதும் நண்பனுக்கு எல்லாம் புதுசு இல்லடா! நீ என் நண்பேண்டா!!" என்று அவனை இழுத்து அருகில் அமர வைத்து கூறினாள் மலர்விழி.
"அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். நீ என் மாமன லவ் பண்ணது.. அதுக்கு நான் உனக்கு ஹெல்ப் பண்ணது. இந்த விஷயம் கடுகளவு கூட அந்த ராட்ஷஸ மாமனுக்கு தெரியக்கூடாது! தெரிஞ்சுச்சு.. உன் நண்பன் உசுரு அவனுக்கில்ல.. புரிஞ்சுதா?" என்று அவன் கூறி முடிக்கும் முன்..
"புரிஞ்சுது! நல்லா புரிஞ்சுது! தெரிஞ்சுது.. பத்து நிமிஷத்துக்கு முன்னாலேயே எல்லாம் தெரிஞ்சது
டா என் பக்கி!!" என்று கேட்ட குரலில் இருவரும் ஹை வோல்ட் ஷாக் அடித்தது போல் திரும்பி பார்க்க..
அங்கே அய்யனார் போல நின்று இருந்தான் நம் மாணிக்கவேல்!!
