அதிகாயன் 3

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 233
Thread starter  

3

 

தூத்துக்குடி துறைமுகம்…

 

“அண்ணே.. அந்த கஸ்டம் ஆபிசரு ரவுசு பண்ணுதான் ணே” என்றபடி வந்து நின்றான் ஐசக். 

 

துறைமுகத்தில் அவனுடைய தார் ஜீப்பில் அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்த ஐராவோ, புருவம் நெரிய யோசனையாய் அவனை பார்த்து “யாம்லே.. கந்தப்பன் புதுசா சொத்து வாங்க ஆசப்படுதானோ.. ஏற்கனவே உள்ள சொத்து போதலையாமா?” என்று நக்கலாக கேட்டவன்,

 

“கூப்புடுலே அவன இங்கன, மூக்கு முழி எல்லாம் மூஞ்சிலேதேன் இருக்குதுதானு செக் பண்ணிடுவோம்லே..” என்றவன் குதித்து இறங்கினான் ஜீப்பை விட்டு..!

 

“இல்லணே.. கந்தப்பன் போன வாரம் மாத்தலாகி போயிட்டாராம். புதுசா எவனோ ஒருத்தன் இளவட்ட பய தேன் வந்திருக்கான். நேர்மை நீதி நியாயம்னு பொங்குறாணே.. முடியல அண்ணே..!” என்று நக்கலாக சொன்னான் ஐசக். 

 

“இதோ வரம்லே நானே நேரே.. நீதி பேசுற மூஞ்சிய பாத்திடுதுவோம்” என்றபடி புகைத்துக் கொண்டிருந்த சிகரட்டை தரையில் போட்டு நசுக்கியபடி வேக நடையோடு முன்னே சென்றான் ஐரா..!

 

 

பின்னால் ஐசக் சேவியர் இருபுறம் அரணாய் வர, அரனாய் புயலாய் நுழைந்தான் துறைமுகத்தின் உள்ளே…!

 

அங்கே வெள்ளை உடையில் நின்று கொண்டு யாரிடமோ காரசாரமாக விவாதித்ததுக் கொண்டிருந்தவன், ஐராவை விட சற்றே கலராக அதே உயரத்தில் மிடுக்கோடு பேசிக் கொண்டுயிருந்தவனின் அருகே சென்ற ஐரா, யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிரே இருந்தவன் சட்டையை கொத்தாக பற்றி தன்னருகே இழுத்து அதில் இருந்த பெயரை பார்த்தவன்..

 

“வருண் விதேகன்” என்ற பேரை நக்கலாக வாசித்த ஐராவோ “இங்கன பாரு புது ஆபிசரு.. கஞ்சியை யூனிபார்ம்க்கு மட்டும் போடுலே.. அதை விட்டுபுட்டு உள்ளுக்கு இறக்கி வெறப்பா சுத்திக்கிட்டு இருந்தேனு வையேன்.. ஒரே இழுப்பா இழுத்து புடுவேன் கழுத்த..” என்றான் கூர்ந்து அவனைப் பாரத்து..

 

அப்பொழுதும் விரைப்பாகவே அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தவனை பார்த்து புருவம் உயர்த்திய ஐரா, அவனின் பின்னால் நின்றிருந்த சீனியர் ஆபிஸரை தலையை மட்டும் சாய்த்து எட்டி பார்த்து “என்னலே ஜேம்ஸ் புது வந்தோடிகளுக்கு நீ எதுவும் சொல்லிக் கொடுக்க மாட்டியாலே.. உன் சிஷ்சய புள்ள நல்லா வெறப்பா புது மாப்பிள்ளை கணக்கா நிக்குதான்…! நம்மள எல்லாம் பத்தி பக்குவமா புட்டு புட்டு வைக்கிறது இல்லையாலே..! அதுக்கப்புறம் புது ஆபிசரு வந்தாரு உடனே ட்ரான்ஸ்பர் ஆயிட்டாரு.. இல்ல ஆள காணோம் கப்பல்ல தான் வேலை செஞ்சாரு திடீர்னு கடல்ல பொணமா மிதக்குறாருனு அப்படின்னு நாளைக்கு யாரும் எங்களை தப்பா பேசக்கூடாதுலே..! வரலாறு முக்கியம் ஜேம்ஸ்.. சரியா மக்கா..!” என்று பேச்சு ஜேம்ஸோடு இருந்தாலும்.‌.. சொன்ன செய்தி அத்தனையும் உனக்கு தான் டா என்று கண்களால் எதிரே இருந்தவனை கதறடித்துக் கொண்டிருந்தான் ஐரா. 

 

புதுசா கஸ்டம் ஆபிசராக வந்திருந்தவனும் ‘அப்படி ஒன்றும் உனக்கு பயப்பட மாட்டேன்.!’ என்பதாக இவனுக்கு மசியாமல் இன்னும் முழு விரைப்பாகவே நின்று கொண்டு தனது சீனியரை கேள்வியாக அதே நேரம் அழுத்தமாக பார்த்தான்.

 

“விடு வருண் இங்கன சில பலதெல்லாம் அப்படித்தான்..!” என்றார் அலட்டிக்கொள்ளாமல்..!

 

அவனோ தன் சட்டையை பற்றியிருந்த ஐராவின் கையை தட்டிவிட்டு “இதெல்லாம் சரி இல்ல சார்” என்றவன், இருவரையும் முறைத்துக் கொண்டே சென்றவன்,

 

“இங்க பார் கத்தி உனக்கு மட்டுமல்ல எனக்கும் பிடிக்க தெரியும்..! அதே மாதிரி கடல் எல்லாருக்கும் பொது..! அங்கு யார் வேணாலும் மிதக்கலாம்.. பொணமா..! சரியாலே..!” என்று அவனை மாதிரியே பேசி காட்டு விட்டு வேகமாக உள்ளே சென்றவனை பார்த்த ஜேம்ஸ் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு,

 

“தப்பா நினைக்காத ஐரா.. வருண் புதுசு இல்ல.. அதுவும் இளம் இரத்தம் அதான் கொஞ்சம் முரண்டு பிடிக்குது மாடு.. போக போக படிஞ்சிடும்” என்றபடி சிரிப்பாக பேசுவது போல அவனை சமாதானம் செய்ய முயன்றார்.

 

ஐராவோ கொஞ்சமும் கோபம் குறையாமல் நின்று இருந்தான். காரணம் எவ்வளவு தெனாவட்டு துணிச்சல் இருந்தா என் கையை தட்டி விட்டு போயிருப்பான்? 

 

“இது தூத்துக்குடிலே.. என் கோட்டை..! கடல் மட்டும் தான் அதுவும் டியூட்டில இருக்குற போதேன் அவனுக்கு சொந்தம்.. வெளிய வருவான்லே.. அப்ப பாத்துக்குதேன்” என்று உள்ளே கொதித்துக் கொண்டிருந்தது அவன் திமிர்..! ஆணவம்..! அகங்காரம்..! எல்லாம்.

 

அதே நேரம் அதை காட்டிக் கொள்ளாமல் தன் மீசையை இடது கையால் முறுக்கி விட்டுக் கொண்டு “சரி தாம்லே அந்த முரண்டுபிடிக்கிற மாட்ட கொஞ்சம் மூக்கணங்கயிறு போட்டு கட்டியே வையும்.. அதுக்கப்புறம் மூக்கு அறுத்துக்கிட்டு வந்துச்சுன்னா மூக்கு மட்டும் அல்ல தலையே இருக்காதுலே.. இது தூத்துக்குடி எங்க கோட்டை..! ஞாபகம் இருக்கட்டும்லே” என்றவன்,

 

“ஏலேய்.. சரக்கெல்லாம் சரியா இருக்கான்னு பாத்துட்டு கண்டெய்னர் வெளியில எடுத்துட்டு வாலே‌‌.. ஜேம்ஸ் சார் புது மாப்பிள்ளைக்கு பதிலாக கையெழுத்து போட்டு தருவாரு..!” என்றவன் வேகமாக வெளியேற.. 

 

“அதெல்லாம் அப்பவே போட்டு வச்சிட்டேன் ஐரா” என்று அந்த கிளியரன்ஸ் சர்டிபிகேட்டை அவனிடம் காட்ட…

 

“அது..!” என்றபடி வாங்கியவன் சேவியர் கையில் திணித்து “சரக்கு பத்திரம்..!” என்றபடி வேகமாக நடந்தவன், ஒரு நிமிடம் நின்று சட்டென்று திரும்பிப் பார்க்க அங்க அந்த கப்பலின் மேலிருந்து இவனை தான் முறைத்துக் கொண்டு இருந்தான் வருண்.

 

“ஏம்லே ஜேம்ஸ்.. அந்த பையன் நம்மளையே இப்படி உத்து உத்து ஆசையா பாக்குதானே.. ஒரு வேள அவன் கன்னத்தில் நான் ஏதாவது கொடுக்கணும்னு ஆசைப்பட்டு இருப்பானோ.. அதை நாம நிறைவேத்தாம வந்துட்டோம்னு பாக்குதானோ?” என்று திரும்பி ஜேம்ஸ் பார்த்து கேட்டாலும்.. அது வருணின் காதில் விழ வேகமாக அவனோ உள்ளே சென்று விட்டான்.

 

அதற்குள் அருகில் வந்த ஐசக்கிடம் “அவன் பார்வையே சரியில்லலே.. மூளையும் சரியில்லலே.. அவன் எப்படி இந்த வேலைக்கு வந்தான். அதுவும் கந்தப்பன நமக்கு தெரியாம தூக்கிட்டு இவன் எப்படி உள்ள வந்தான்? எல்லாத்தையும் ராவுக்குள்ள விசாரிச்சு எனக்கு செய்தி வந்து இருக்கணும்.. இல்ல..!” என்று ஐசக்கிடம் கட்டளையிட்டவன் வேகமாக தன் ஜீப்பை நோக்கி சென்றான். 

 

சரக்கு சரக்கு என்று சொல்கிறானே அப்படி அந்த சரக்கில் என்னதான் இருக்கிறது என்று ஒரு நாளும் ஐசக்கும் சேவியருக்கும் ஒரு துளி ஆர்வமோ சந்தேகமும் கூட வந்தது கிடையாது.

 

 ஏனென்றால் அது தெரிய வேண்டும் என்றால் கண்டிப்பாக ஐரா அவர்களிடம் தெரிவிப்பான் என்று அவன் மீது ஏக நம்பிக்கை அவர்களுக்கு..!

 

 நம்பிக்கை அது தான் ஆதாரம் அனைத்து உறவுகளுக்கும்..!!

 

அதன்படி குத்தி போட்டாலும் கூட ஐராவை பற்றி ஒரு வார்த்தை குறை சொல்ல மாட்டார்கள். அவனை விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள்..! அவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள். அப்படிப்பட்ட வலுவான பிணைப்பு அவனோடு இருவருக்கும் சிறு வயது முதலே..! அதன் காரணமாகவே இருவரையும் எப்பொழுதும் தன் கூடவே வைத்திருக்கிறான் ஐரா.

 

ஐசக்கை வருண் பற்றி விவரங்களை கண்டுபிடிக்க அனுப்பி விட சேவியரை சரக்கோடு அனுப்பி விட்டான்.

 

தனியாக ஜீப்பில் ஏறியவன் ‘யாராயிருக்கும்? எதற்காக இப்பொழுது இம்மாதிரி செய்கிறார்கள்?’ என்றபடி யோசனையோடு ஜீப்பை ஒட்டி கொண்டிருந்தான் ஐரா.

 

சிக்னலில் வந்து நின்றதும் அதே யோசனையோடு தான் ஸ்டேரிங்கில் விரல்களால் தாளம் போட்டபடி எதிரே இருந்த சிக்னலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 

கண்கள் என்னவோ வழக்கம் போல அவ்வப்போது சுற்று சுழன்று கொண்டு இருந்தாலும் ஞாபகம் எல்லாம் புதிதாக முளைத்த அந்த புல்லுருவி யார்? எதற்காக எங்களுக்கு தடை விதிக்க புதிதாக ஆளை நியமித்திருக்க வேண்டும்? இது எங்கள் ஐயா தேவேந்திரனின் கோட்டை அல்லவா? என்று யோசித்தபடி இருந்த அவன் அருகில் வந்த ஒரு பிச்சைக்காரன் காசு கேட்க..

 

அது என்னவோ வயதான பிச்சைக்காரர்களை கண்டால் மட்டும் இவனுக்கு பாசம் அப்படி பொங்கும். 

 

இதுவே வேற யாராவது கேட்டிருந்தால் ஓடிப்போ என்று விரட்டி விடுவான். ஏன் ஒரு பெண்மணி பச்சிளம் குழந்தையை வைத்துக்கொண்டு அவனிடம் பிச்சை எடுத்தால் கூட பொளீரென்று ரெண்டு கன்னத்தில் ஒன்று விடுபவன்,

 

“புள்ள வளர்க்க முடியாதவ எதுக்குடி பெத்துக்கிட்டு நடுரோட்டில் பிச்சை எடுக்க விடுற? உழைச்சு சாப்பிட வழி இல்லன்னா.. நாண்டுகிட்டு சாவு..! இன்னொரு முற புள்ளயோடு பிச்சையேடுக்கிறத பார்த்தேன் வை.. நானே உன்னைய கொண்டுபுடுவேன்” என்று அவளைப் பார்த்து இன்னும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டியவன்,

 

“அது மட்டுமல்ல இன்னொரு முறை இந்த இடத்தில் உன்னால குழந்தை பிச்சை எடுப்பத நான் பார்க்கவே கூடாது.. மொவளே பார்த்தேன் வச்சுக்கோ..” என்று அதட்டி உருட்டி மிரட்டி ஓட்டி விடுவான். 

 

அதேபோல தான் சிறுவர்களும் பிச்சை எடுப்பதை கண்டால் “உன்ன வச்சு பிச்சை எடுக்குறவன வர சொல்லடா?” என்றதிலேயே அவர்கள் பம்பி விடுவார்கள். 

 

இதுவும் ஒரு வலை பின்னல் தொழில் தான்..! குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்து அதன் மூலம் சம்பாதிக்க என்ற ஒரு கூட்டமே இருக்கிறது.

 

‘அதை எல்லாம் களை எடுக்க நான் என்ன தூத்துக்குடி போலீசாடா?’ என்று பலமுறை நக்கல் அடித்ததும் உண்டு அவன். 

 

அதுபோல தான் இன்று அவன் அருகில் வந்த முதிய பிச்சைக்காரருக்கு பணம் எடுக்க தன் பேண்ட் பேக்ட்டில் இருந்து எக்கி பர்ஸை எடுக்க முயன்றான். கிட்டத்தட்ட 5 அல்லது 6 வினாடிகள் கூட இருக்காது. அதற்குள் அவன் இடது பக்கம் பாய்ந்தது அந்த துப்பாக்கி குண்டு. 

 

ஆம்..! வந்தவன் பிச்சைக்காரன் இல்ல கொலைக்காரன்..!

 

ஐராவிடம் வந்து பிச்சை கேட்ட உடனே இவன் தன் சட்டை பையில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்து இருந்தால்.. இந்நேரம் அந்த குண்டு அவனது நெஞ்சை துளைத்திருக்கும்..!

 

அவனோ சற்று எக்கி பின்பக்கத்தில் இருந்து பர்ஸை எடுக்கும் போது அந்த சமயம் குண்டு அவன் நெஞ்சுக்கு சற்று கீழே வயிற்றில் பாய்

ந்து இருந்தது. 

 

வெண்ணிற சட்டை கொஞ்சம் கொஞ்சமாக செந்நிறம் பூசிக் கொண்டது..!

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top