பிரதீஷ் பேசிய பேச்சில் கொதித்து போயிருந்தான் அஸ்வத். ராசிகா மட்டும் கையில் கிடைத்தால் நிச்சயம் கட்டாயத் தாலி கூட கட்டிடுவான். அப்படியொரு கோவம், ஏமாற்றம் என எல்லாம் ஒன்று சேர்ந்து ஊடாடியது.
அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதையே அவனால் ஏற்றுக் கொள்ள முடியாது. எவனோ ஒருவன் காதலன் என உரிமை கொண்டாடியாதோடு, விலகிச் செல் என விதித்த நிபந்தனை அவனை அவமானமாக உணர வைத்தது.
அவன் பேசியதற்கு பின் என்ன செய்வதென அவனாலே தீர்மானிக்க இயலவில்லை. வீடு திரும்பியவனிடம் விசாலாட்சி நற்செய்தியை கூற, பாதி செவியில் வாங்கியும் வாங்காமலும் ம்ம் கொட்டி அறை நோக்கி சென்றான்.
இரண்டு நாட்களாக இதே சிந்தனையில் தான் சுற்றி திரிந்தான். சட்டென அவளை வேண்டாமென தூக்கி எறிய முடியாத நிலையை உணர்ந்தவன், தனிமை தேடி வெறித்தபடி அமர்ந்தவன் எத்தனை மணி நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ?
ஒரே ஒரு முடிவு மட்டும் தீர்மானித்தான். அவளது அக்கா திருமணம் முடியட்டும் என்ற ஒன்றே. அதன் பின் வேறெதேனும் காரணம் கூறி, இத்திருமணம் வேணாம் என மறுத்து விடுவோம் ஒரு மனதாக முடிவெடுத்தான்.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. கடந்து சென்ற நாட்கள் யாவும் பிரதீஷின் நாட்குறிப்பில் குறித்துக் கொள்ள வேண்டிய நாட்களே. பிருந்தாவை காண வேண்டும் என்றவன் அவளை காணாமல், ராசிகாவோடு உல்லாசமாக ஊர் சுற்றி விட்டு வேலைக்கு திரும்பி விட்டான். அவள் மட்டும் கோயம்புத்தூரில் இருந்தாள்.
எல்லாம் அத்தையின் ஆசைக்கிணங்கியே. மணி கணக்கில் வேலை நேரம் தவிர போனும் கையுமாகவே இருந்தான். இந்நொடி கூட அவளோடு போனில் தான் பேசிக் கொண்டிருந்தான்.
"எப்போ தான் வர்ற?"
"நாளைக்கி வந்துடுவேன் பிரதீஷ்."
"என்னமோ பண்ணு டி. அன்னேக்கியே வர சொன்னேன், வர மாட்டேன்னு இருந்துட்ட."
"ப்ளீஸ்.. ப்ளீஸ்.. கோவப்படாதீங்க.. பிரதீஷ்.. நாளைக்கி ஸியூர்ரா வந்துடுவேன்."
"நீ வந்தா போதும்.."
"எல்லாம் ஓகே யா?"
"அங்க இருந்து கேள்வியா கேக்காதே டி. வந்தா போதும்.."
"சரி வந்துறேன் டா. வீட்டுல கிளம்பவே விட மாட்டுறாங்க. அப்பறம் அத்தை தான் நாளைக்கி போறோம் வான்னு சொன்னாங்க."
"ம்ம்ம்.."
"ஸாரி!"
"டோன்ட் நீட்"
"வேணும்னா ஒரு ஹக் தரவா?"
"ஐ டோன்ட் நீட் எனிதிங். நேரா வந்து பேசு எதுனாலும்!" என்றவன் போனை வைக்க போகிறான் என தெரிந்து, "உம்ம்மாஆஆ.." என்றாள் சற்றே அழுத்தமாக.
அதன் பின்பு அவன் போனை வைக்கவில்லை என சுதாரித்தவள், மீண்டும் நச்சென இச்சு வைக்க..
"அங்க உக்காந்து போனை எச்சி பண்ணாம நேரா வந்து எங்க வேணாலும் எச்சி பண்ணு.." என்றவன் அவள் பதிலை கூட எதிர்பாராமல் துண்டித்து விட்டான்.
மறுநாள் வருவாள் என எதிர்பார்த்தவன், அவளுக்கு அழைக்க மொபைல் சுவிட்ச் ஆஃப். அன்று இரவு முழுவதும் அடிக்கொரு முறை அவன் எழுந்து கொள்ளும் போதெல்லாம் போன் செய்து பார்த்தான். ராசிகா எண் தொடர்பில் கிடைக்கவில்லை.
கிட்டத்தட்ட மூன்று நாட்களாக இதே நிலையே. இது சாதாரண விடயமாக உணர முடியவில்லை. நண்பர்களிடம் கூறி, அவளை பற்றி முடிந்த வரை துரிதமாக விசாரிக்க கூறியிருந்தான். இதுநாள் வரையில் அவள் போன் அணைப்பில் இருந்ததே இல்லை.
இது தான் முதல் முறை. ஒருநாள் என்றால் கூட அசட்டையாக இருக்கலாம். மூன்று நாட்கள் என்னும் போது விஷயம் ஏதோ சீரியசானது என்பதை உணர்ந்தான். வேலைக்கு கிளம்பியவன் ஒரு மனதாக செல்ல முடியவில்லை. எண்ணம் முழுவதும், என்ன ஆனதோ என்னும் பதட்டமே நிறைந்திருந்தது.
கிளம்பியவன் வாசல் கதவை திறந்து கொண்டு வெளியேற, வராண்டாவில் அவன் வீட்டு வாயிலை நோக்கி நடந்து வந்த ராசிகாவை கண்ட பின்பு தான் உயிரே வந்தது அவனுக்கு.
ஓடிச்சென்று அள்ளி அணைத்தவன், "எங்க டி போன? ஏன் ஒரு கால் பண்ணல? மொபைல் மிஸ் ஆகிடுச்சா? உனக்கு தான் என் நம்பர் தெரியுமே. ஏன் வேற யாரு மொபைல்ல இருந்தும் போன் பண்ணல?" என்றவன் கன்னம் முழுவதும் முத்தமிட்டு கேட்க, அவளோ எவ்வித உணர்ச்சியற்ற நிலையில் இருந்தாள்.
"அப்பா.. இது சரியா வருமா?" என சதாசிவம், தந்தை முகத்தை புருவம் சுருக்கி யோசனையாக காண..
"சரியா வரும்.. ரெண்டு நாள் தான் அவளுக்கு கெடு!"
"அப்பாஆஆ!!"
மகனை விஷமமாக சிரித்தப்படி ஏறிட்டார் சண்முகம் ஐயா.
"அப்பா.. அவனுக்கு தெரிஞ்சா நிச்சயம் சம்மதிக்க மாட்டான். இதுனால நமக்கு தான் தலைவலி. பேசாம.." என்றவர் முழுவதும் கூறாமல் வாய் பொத்திக் கொண்டார். அவரின் கடுமையான பார்வையில்.
"நடக்கும்.. நிச்சயம் இந்த கல்யாணம் குறிச்ச தேதியில, அந்த முகுர்த்தத்துல நடக்கும்.. காதல் அப்படிங்குற பேச்சு இந்த வீட்டுல யார் வாயிலயும் வரக்கூடாது.." என்றார் திட்டம் ஒன்றை மனதில் வைத்து.
அவளை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தவன், பொலிவற்ற முகத்தையும் அழுது சோர்ந்து போன விழிகளையும் நன்கு கண்டு கொண்டான். அமரச்சொல்லி கூறியவன், மருத்துவமனைக்கு போன் செய்து கேஸ் ஏதேனும் வந்துள்ளதா என கேட்டுக் கொண்டு, வர சற்று தாமதம் ஆகும் என மட்டும் ரீனாவிடம் கூறி போனை வைத்தான்.
சோபாவில் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தவளை குழப்பமாக பார்த்தான். விறுவிறுவென அவளை நோக்கி சென்றவன், இழுத்து மடியில் உட்கார வைக்க; நீர் நிறைந்த விழிகள் வழிந்தோட தயாராக இருந்ததை சரியாக காணவில்லை பிரதீஷ்.
"ராசிகா என்ன டி ஆச்சு?" என்று கொண்டே வாஞ்சையாக அவள் கேசம் வருடி, கன்னத்தில் முத்தமிட நெளிந்து விலகினாள்.
இழுத்து அணைத்துக் கொள்ள, மடியில் அமர்ந்திருந்தவள் முகம் அவன் தோளில் தஞ்சமடைந்தது.
"எதுவும் உடம்பு சரில்லையா? எப்போ ஊருக்கு வந்த?" என்றவன் அணைப்பு இறுகியதில், அவனது தவிப்பை நன்கு உணர்ந்தாள்.
பதிலே பேசாதவள் அவன் அணைப்பில் விசும்பி விலக, "என்னாச்சு ராசிகா?" என்றவன் கன்னம் பற்றி முத்தமிட முயல, வேண்டாமென்ற தலையசைப்பை கேள்வியாக பார்த்தான்.
"ஒருநாள் கூட என்கிட்டே பேசாம இருந்தது இல்லை. அப்படி இருக்கும் போது, மூணு நாள் எங்க போன? என்ன நடந்தது? எப்போ ஊருக்கு வந்த?"
அவன் அடுக்கடுக்காக கேள்வியை வைக்க, அவள் விலகி எழுந்தாள் தவிர பதிலளிக்கவில்லை. அவள் விலகளை புரியாதவன், மீண்டும் அவளை நெருங்கி ஆதூரமாக கேசம் வருடி நுதல் முத்தம் தர முயற்சிக்க..
"இந்த கல்யாணம்.. வேணாம் பிரதீஷ்.."
முத்தமிடாமல் நூலிழையில் விலகியவன் அவளது முகம் காண, தலை தாழ்த்தியிருந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.
மூன்று நாட்களுக்கு பின் இருவருக்கும் திருமணம். பிரதீஷ் தான் இந்த ஏற்பாட்டை அவளின் விருப்பப்படி செய்தது. நண்பர்களுக்கு மத்தியில், கோவிலில் திருமணம் வைத்துக் கொண்டு வீட்டில் சில நாட்களுக்கு பின் கூறிடலாம் என்றாள்.
அவள் கூறி மறுக்கவா முடியும்? அத்தனை வேலையையும் துரிதமாக செய்து வைத்து விட்டான் திடீரென அவள் மூன்று நாட்கள் பேசாமல் இருந்ததே, சிறு நெருடலை தந்திருந்தது.
இப்போது இத்திருமணம் வேண்டாம் என்ற அவள் வார்த்தையில் அதிர்ச்சியில் உறைந்து அவளையே பார்த்திருந்தான்.
"என்ன சொன்ன மேரேஜ் வேணாமா?"
தைரியத்தை ஒன்று திரட்டி, உமிழ்நீரை பிரயத்தனப்பட்டு விழுங்கி, விழிகளில் நீர் வழிய அவனை பார்த்தாள்.
"என்ன சொன்ன? சொல்லு.."
"............"
"என்ன டி சொன்ன? உன்கிட்ட தான் கேக்குறேன்."
"இந்த மேரேஜ்.. வேணாம்.."
முதல் பத்திரிக்கை கோவிலில் வைத்து விட்டு, மாப்பிள்ளை வீட்டினர் பெண் வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க வந்தனர்.
பிருந்தா, தலை வாரி முல்லைப் பூவை பின்னலில் வைத்தப்படி வந்தவள் அழகை கண்டு, பிரதீஷ் வீட்டினர் முகத்தில் அப்படியொரு மலர்ச்சி.
"வாங்க அத்தை.. வாங்க மாமா.. வாங்க ருத்ரா.."
"என்ன மருமகளே நாங்க வருவோம்ன்னு எதிர் பாக்கலையோ?"
அவளோ கூச்சமாக, "அப்படியெல்லாம் இல்லை மாமா.. இருங்க டீ எடுத்துட்டு வரேன்.." என்றவள் சட்டென அடுக்களையினுள் புகுந்து கொண்டாள்.
வந்தவர்கள் அவர்களுக்கு முறைப்படி பத்திரிக்கை வைத்து விட்டு, தாலிக்கு ஆர்டர் கொடுக்க நாளை நகை கடை செல்வோமா என ஒப்புதல் கேட்க, ஏக மனதோடு அனைவரும் சம்மதம் என்றனர்.
சில நிமிடங்களுக்கு பின் கல்யாணியும், சதாசிவமும் விடைபெற எத்தனித்த நேரம் உறுத்தலாக இருந்த ஒரு விடயத்தை கேட்டாள் பிருந்தா.
"அத்தை ஒரு நிமிஷம்.." என்றதில் எல்லோரும் அவளை கேள்வியாக பார்க்க, "அது.. வந்து.. இந்த மேரேஜ் பேசுனதுல இருந்து நிறைய தடங்கல்..
இப்போ கூட மாமா தம்பிக்கு ஸ்ட்ரோக்ன்னு சொன்னாங்க.. நான் தான்.. காரணம்.." என்றவள் தடுமாற்றம் புரிந்த கல்யாணியோ, "அது அவருக்கு ரொம்ப நாளா இருக்குற நோய். இதுக்கும் உனக்கும் என்ன இருக்கு மா. கல்யாணப் பொண்ணு கண்டதை யோசிக்காதே. எங்க ருத்ரா மாதிரி நீயும் எனக்கொரு பொண்ணு தான்.
மத்த மாமியார் மாதிரி கிடையாது மா. சொன்ன வார்த்தையில நானும், என் பையனும் சரியா இருப்போம். அவன் யார்ட்டையும் அதிக பேச மாட்டான் தான்.
அதுக்குன்னு எங்க வீட்டுல நடக்கிறதுக்கு நீ காரணம்ன்னு சொல்லுறது தப்பு. நான் இந்த ராசியெல்லாம் பாக்க மாட்டேன் மா. என் மருமக நீ மட்டும் தான். புரியுதா மா பிருந்தா?"
அவரின் பெருந்தன்மையான பேச்சு வீட்டினரை ஆசுவாசம் கொள்ள வைக்க, பிருந்தா மலர்ந்த முகத்தோடு தாங்க்ஸ் அத்தை என்றிட, சதாசிவமும் பதிலுக்கு அவரது பாணியில் நம்பிக்கை அளித்து விட்டு கடந்தார்.
"என்னால.. இப்போ.. இந்த கல்யாணத்தை பண்ணிக்க முடியாது.."
அவளின் பேச்சில் சினம் சிரசேர, விலகி கை கட்டி நின்றவன் "அதான் ஏன் டி?" என கர்ஜிக்க, அதிர்ந்து போய் சுவற்றோடு பல்லியாக ஒட்டிக் கொண்டாள்.
தாரை தாரையாக கண்ணீர் வழிய நின்றவளை காண அவனுக்கு மேலும் சினமே மூண்டது.
"எதுக்கு கல்யாணம் வேணாம்ன்னு சொன்ன?"
தனது பேண்ட் பாக்கேட்டின்னுள் மடித்து வைத்திருந்த திருமண பத்திரிக்கையை எடுத்து அவன் முன் நீட்டியவளை, குழப்பமாக பார்த்தான். வெடுக்கென வாங்கி பிரித்து படித்து பார்த்தவனுக்கே அது உச்சபட்ச அதிர்ச்சியே.
அவனுக்கு மட்டும் அறிந்து நடந்த விடயமா? வேண்டாமென்ற திருமணத்தை, அவனிடம் ஒரு பேச்சிற்கு கூட சம்மதம் கேளாது பத்திரிக்கை அடித்து சொந்த பந்தங்களுக்கு விநியோகம் செய்யத் துவங்கி விட்டனர்.
பளபளத்த பத்திரிக்கையில் அவனது பெயரோடு பிருந்தா பேரை சேர்த்துக் கண்டவன் அவனது அப்பாவிற்கு போன் செய்தான். அவரோ அழைப்பை ஏற்கவில்லை. அடுத்தபடியாக அன்னைக்கு அழைத்தான்.
மகனிடமிருந்து வந்த போனை மகிழ்ச்சி ஆர்ப்பரிக்க எடுக்க சென்றவர் போனை தட்டி பறித்தார் சதாசிவம்.
"வீடு போய் சேருற வரை போன் எதுவும் எடுக்க கூடாது.."
"ஏங்க பையன் அடிக்கிறான்.." என்றவர் அவரின் போனை வாங்க முயல..
அவரோ, "அவன் போனை தான் குறிப்பா எடுக்க கூடாது.." என உத்தரவிட்டு, கார் கதவை படீரென அறைந்து சாற்றிய வேகமே அவரை மூச்சடைக்க வைத்தது.
"எவனும் எடுக்க மாட்டுறானுங்க. போனை எடுங்க. பேசிக்கிறேன்." என ஆவேசமாக கத்தி விட்டு அவளை ஏறிட்டவன், "இது ஒரு காரணம் நீ கல்யாணம் வேணாம்ன்னு சொல்லுறயா? ஏன் இல்லைனா இத்தனை நாள் உனக்கு தெரியாதா?" என்றவன் காதலியை கனலாக காண..
அவளோ வாயே திறக்கவில்லை. நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
"பத்திரிக்கை அடிச்சா அடிக்கட்டும். அதுனால என்ன? கவலைப்பட வேண்டிய நானே கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்லும் போது, நீ ஏன் டி பயந்துட்டு வேணாம்ன்னு சொல்லுற. ஒழுங்கா ரெடி ஆக பாரு." என்றவன் அவளை நெருங்கி கரம் பற்ற..
"ஸாரி.. என்னால இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாது.." என்றாள் மீண்டும் அதே வார்த்தையை அழுத்தமாக கூறி..
அதற்குள் அவனது அலைபேசி ஒலி எழுப்பிட, மருத்துவமனையில் இருந்து வந்த போன் என்பதால் பதிலளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானான்.
பேசி முடித்து வந்தவன் தோரணையும், கழுத்து நரம்பு புடைக்க நின்றிருந்த விதமும் பெண்ணவளை மிரட்சி கொள்ள வைத்தது.
"இப்போ என்ன டேஷ்க்கு வேணாம்ன்னு சொல்லுற? சொல்லு டி.."
"..............."
"உன்கிட்ட தான் கேக்குறேன். உன் இஷ்டத்துக்கு விளையாட நான் தான் கிடைச்சேனா? ஏன் உன் சொந்த பந்தத்துல, ஊருல எவனும் கிடைக்கலயா?" என்றவன் பார்வையை எதிர்கொள்ள முடியாது, தலை தாழ்த்தி நின்றவளை அறைய எட்டி பாய்ந்தவன், அவளது மிரண்டு போன பார்வையால் கையை கீழிறக்கினான்.
"இவளால.. தான்.. எல்லா.. பிரச்சனையும்.." என முணுமுணுத்தவன், அவள் நினைத்தது போல் உடன்பிறப்பிற்கு அழைக்க..
வெடுக்கென மொபைலை தட்டி பறித்தாள். அவளது விசித்திரமான செயல் கண்டு புரியாதவன் குழம்பி நிற்க, பிருந்தாவிடமிருந்து அழைப்பு வந்தது.
"போனை.. குடு டி.."
"ப்ளீஸ்.. பிரதீஷ்.. புரிஞ்சுக்கோங்க.. இந்த கல்யாணம் என்னால நிக்க கூடாது.." அவள் கண்ணீர் மல்க கை கூப்பி கெஞ்ச..
"போனை குடுன்னு சொன்னேன்.." என்றவன் அப்போது அறையாமல் விட்ட அறையை, செவியோடு சேர்த்து அறைந்து போனை வாங்கினான்.
எங்கு அக்காவிடம் உளறி விடுவானோ என்னும் பயமே அவளை ஆட்கொள்ள, அடியின் வலியை கூட பெரிதாக எண்ணாதவள் போராடி போனை பறித்து வீசி எறிந்தாள்.
"பிருந்தா என் அக்கா.. பிரதீஷ்.. இந்த கல்யாணம் நடக்கணும்.. ப்ளீஸ்.. உங்க கால்ல விழுந்து கேக்குறேன்.." என்றவள் பேசியப்படி அவன் காலை பற்ற, அவனுக்கு தான் நிகழ்விற்கு வர சில நாழிகையானது.
"உன் அக்காவா? யாரு பிருந்தாவா?"
அதற்கு காலை பிடித்திருந்தவள் தலையசைப்பை மட்டும் தர, அவன் அதையெல்லாம் பெரிதாக எண்ணாமல் அசட்டையாக பதிலளித்தான். காதலித்தவள் தான் தனக்கு வேண்டும் என்னும் நோக்கில்.
"அது நான் உன்னை லவ் பண்ணுறதுக்கு முன்னாடி வரை. எனக்கு உனக்கும் தான் கல்யாணம்.." என்றவன் தன்னெதிரே நின்றவளை சமன் செய்யும் பொருட்டு அணைத்திட நெருங்க, "பிரதீஷ்.. முட்டாள் மாதிரி பேசாதீங்க.." என அலறி கத்தினாள்.
தேடி தேடி வந்து காதலை விதைத்து விட்டு, அக்காவிற்காக தூக்கி எரிந்து செல்பவளையா காதலித்தோம் என்னும் ரீதியில் அவன் பார்வை இருக்க, "பிரதீஷ்.. என்னால கல்யாணம் நிக்க கூடாது.. பிருந்தாவை கல்யாணம் பண்ணிக்கோங்க.." என்றாள் கை கூப்பி வேண்டியப்படி.
"நீங்க என்ன சொன்னாலும்.. இனி நான் உங்களை.. கல்யாணம்.." என அவள் முழுவதும் கூறாமல் அவனை காண, சப்பென அறை வைத்தான்.
அதோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை அவன். தனக்குள் இன்னொரு குணம் இருக்கிறது என்பதை வார்த்தையாலே திட்டி தீர்த்தான்.
"வாவ்.. எக்ஸ்லன்ட் ராசிகா.. இப்படியொரு தியாகியவா நான் லவ் பண்ணிருக்கேன்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு. அக்காவுக்காக லவ்வரை விட்டு தர. நாளைக்கி இது தெரியாம உனக்கு தாலி கட்டிருந்தா, இந்த ஃபர்ஸ்ட் நைட் அவ கூட தானே நடக்கும் போயிட்டு வான்னு சொல்லிருப்ப." என்றவன் கை தட்டி அவளை இழிவாக பாராட்டி இக்கேள்வி கேட்க, அவளோ சூழ்நிலை கைதியாக கேவி அழுதாள்.
"ப்ளீஸ்.. பிரதீஷ்.. இப்படிலாம் பேசாதீங்க.. என்னால என் அக்கா கல்யாணம் நிக்க கூடாது.."
"சரி டி கல்யாணம் பண்ணிக்கிறேன்.. நீ சொன்னப்படி, ஒரே மாசத்துல டைவர்ஸ் குடுத்துட்டு உன்னை மறுபடி கல்யாணம் பண்ணிக்கிறேன்.. சோ சிம்பில்.."
அவனது இப்பேச்சிற்கு காரணமே உருகி காதலித்தவள் கூறிய வார்த்தை தான். அவள் மீது காதல் வர காரணமாக இருந்தது இக்கூற்றே. ஆனால், இன்று தன் உடன்பிறப்பு என வரும்போது அவளோ பின்வாங்க, நாயகனோ சம்மட்டியால் அடித்தது போல் வார்த்தையால் தாக்கினான்.
"என்னால இனி.. உங்களை எப்பவும்.. கல்யாணம் பண்ணிக்க முடியாது.."
"ஏன் டி என்னை பாத்த உனக்கு எப்படி டி தெரியுது? ஊருல வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணுனா மட்டும் டைவர்ஸ் பண்ணுன்னு மெசேஜ் அனுப்புவ.
இப்போ என்ன டி உன் அக்கான்னு சொன்னதும் வலிக்குதா? ஏன் மத்தவங்கலாம் பொண்ணு இல்லையா. நீயும், உன் அக்காவும் தான் பொண்ணா?"
"நான் உங்களை.. லவ் பண்ண.. அப்படி சொல்லிட்டேன்.. மன்னிச்சுக்கோங்க.. என்னால, இனி ஒரு அவுமானத்தை.. தாங்கிக்க.. முடியாது.." என்றவளின் கேவலோடு சேர்ந்து வந்த இறுதி வார்த்தையில் கோவம் விடுத்து அவளை நெருங்கி அணைத்துக் கொண்டான்.
இவ்வணைப்பிலாவது அவள் மாறுவாள் என்னும் நப்பாசையே. ஆனால், அதுவே அவனது கோவத்தை விஸ்வரூபம் ஆக்கவுள்ளதை அவன் அறியவில்லை.
"ராசிகா.. அவ உன் அக்காவை இருந்தாலும், நம்ம லவ்ல யாரோ ஒருத்தி தான் டி. இந்த சின்ன விஷயத்துக்கு ஏன் டி இப்படி பேசுற. வேற யாரும் உன்னை மிரட்டுனாங்களா?" என்றவனின் அணைப்பில் ஒருநொடி மனம் மாற, மூளையோ அவள் போராட்டத்தை நினைவுறுத்தியது.
"ப்ளீஸ்.. விடுங்க.. என்னை யாரும் மிரட்ட நான் குழந்தை இல்லை.." என அலறி கத்தியவள் அவனது அணைப்பை கூட நிராகரிக்க..
"ஏன் நான் தொட்டா வலிக்குதா டி? இல்லை உன் அக்காவுக்கு நான் ரொம்ப பரிசுத்தமா இருக்கணும்ன்னு நினைக்கிறயா?"
"ஸ்டாப் இட் பிரதீஷ்.. தேட்ஸ் யுவர் லிமிட்!"
"ராசிகா யாரும் உன்னை மிரட்டி வேணாம்ன்னு சொல்ல வச்சாங்களா? சொல்லு டி? உங்க வீட்டுல நான் பேசுறேன் ராசிகா. ஒருடைம் நிதானமா யோசிச்சு பேசு டி."
"பிரதீஷ்.. இது நான் மிரட்டல்ல சொல்லல.. மேரேஜ் இன்விடேஷன் பாத்துட்டு சொல்லுறேன். தேவையில்லாம நீங்களா கற்பனை பண்ணிக்காதீங்க. என்னால என் அக்கா லைஃப்ல பிரச்சனை வந்தா நல்லாருக்குமா? ஏற்கனவே.. நான் வீட்டுக்கு ஆகாதவ.. இனி இதையும் கேட்டு.. நான் சாகனுமா?"
"ஏன் இந்த அறிவு இத்தனை நாள் எங்க டி இருந்துச்சு? இப்போ தான் குடும்பம் மேல அக்கறையா பேசுற?"
"யோசிச்சு பாருங்க.. பத்திரிக்கை குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.. இனி.. எப்படி? எனக்கு இந்த கல்யாணம் வேணாம்.."
"அப்போ நான் உனக்கு வேணாம்?"
"என் அக்காவை கல்யாணம் பண்ணிக்கோங்க.. ப்ளீஸ்.. என் குடும்பமே அசிங்கப்படுறதை என்னால பாக்க முடியாது.."
"அப்போ நான் எப்படி இருந்தாலும் பரவாயில்லை? உன் அக்காக்கு வாழ்க்கை தரணும்ன்னு எதுவும் கட்டாயமா?"
"ப்ளீஸ்.. பிரதீஷ்.. எனக்காக நீங்க இதை செய்ங்க.." என்றவள் மீண்டும் கை கூப்பி கண்ணீர் சிந்த..
"நீ யாரு டி எனக்கு ரூல்ஸ் போட? வெளியே போ.."
"பிரதீஷ்.. இந்த கல்யாணத்தை மட்டும் வேணாம் சொல்லிடாதீங்க.. உங்க காலை பிடிச்சு கேக்குறேன்.." அவளோ அவனது காலை பற்ற நெருங்க..
சப்பென அறைந்தவன், "ஏன் டி ஏன் இப்படி சாகடிக்கிற? நீயா வர்ற.. லவ் பண்ணுறேன்னு சொன்ன.. இப்போ என் அக்காவை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லுற.. நான் மனுஷனா? இல்லை மாடா? எதுல விளையாடனும் அறிவு இல்லையா உனக்கு?" என்றவன் கர்ஜித்து தீயாக பார்த்திட..
"இனி உங்க கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை.. என்னால உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது.." என்றவள் அங்கிருந்து நகர..
அவனோ மணிக்கட்டில் அணிந்திருந்த ரோலெக்ஸ் வாட்ச்சை கழட்டி ஒரு ஓரம் வைத்தவன், டக்கின் செய்த ஷர்ட்டிற்கும் விடுதலை தந்தான். வேலைக்கு கிளம்பியவன், இனி எதற்கு என முடிவு செய்து அவளை அழைத்தான்.
"மேடம் ஒன் செகண்ட்!"
அவளும் சட்டென திரும்பி பார்க்க, "உன் அக்காவை கல்யாணம் பண்ணிக்கிறேன். பட் ஒன் கண்டீஷன்!" என்றதில் அவள் தான் முன்பை விட வெம்பி நின்றாள்.
"எனக்கு உன் அக்காவை விட உன்னை தான் பிடிக்கும். சோ, கல்யாணம் மட்டும் உன் அக்கா கூட.. மத்ததெல்லாம் உன்கூட தான்.. நீயும் யாரை வேணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்.. எனக்கு எந்த இஸ்ஸு இல்லை..
அதுக்கு இப்போ ஒரு சின்ன ரிகர்ஷல்.. ஸாரி.. ஸாரி.. டே டைம்ல ஃபர்ஸ்ட் நைட் நடக்கப்போது இப்போ.. இது எனக்கு இனி தேவைப்படும் போதெல்லாம் நடக்கும்.. நடக்கலாம்.. நீ வந்து தான் ஆகணும்!
நீயா வந்தா ரெண்டு பேருக்குமே நல்ல சுகமான ஃபீலா இருக்கும் இப்போ மட்டுமில்ல எப்பவுமே. இல்லை, உனக்கு தான் ஃபீலிங்ஸ் ஆ இருக்கும்..
7 to 1 ரிவர்ஸ்ல கவுண்ட் பண்ணுறேன். அதுக்குள்ளே நீங்களா ரூம்க்குள்ள போய் வெயிட் பண்ணுங்க வரேன். என்ன 7 to 1ன்னு பாக்குறீங்களா? அது என் கீப்க்கு பிடிச்ச நம்பர்."
அவளின் விசும்பல் அவனை காதையடைக்க, "கீப் கொஞ்சம் கத்தாம அழுங்க. காதை அடைக்குது!" என குத்தலாக கூற, மேலும் வாய் பொத்தி கதறி அழுதாள்.
"என்ன மா கீப்ன்னு சொல்லிட்டேன்னு பாக்குறயா? அப்பறம் உனக்கு என்ன ரிலேஷன்ஷிப் தர முடியும்? எனக்கு எப்பவும் கோப்ரேட் மட்டும் பண்ணு.. பத்திரிக்கை அடிச்ச நாளுக்கு முன்னாடி உன் அக்காவை கல்யாணம் பண்ணிக்கிறேன். நான் உன்னை போல எல்லாமே தியாகம் பண்ண முடியாது."
"யுவர் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்!"
தேன்மழை💖💖
