தூகை 37

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

37

 

அன்று..

 

 

“அடியே நான் சொல்றதை கேளுடி.! அந்த பொண்ணு என் கூட ஆபீஸ்ல வேலை பார்க்கிற பொண்ணு..”

 

“ஓஓஓ.. அப்போ ஆபீஸ்லேயும் அவளோட கூத்தடிக்கிறீங்க நீங்க.. அப்படித்தானே…??”

 

“என்னடி அறிவு கெட்டத்தனமாக பேசுற? ஆஃபீஸ்ல என்னடி கூத்தடிக்க போறேன்? ஆஃபீஸ் நான் போறது வேலை பார்க்க.. அங்க இந்த மாதிரி எல்லாம் நான் பண்ண எவனாவது என்ன வேலைக்கு வச்சு இருப்பானா? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா நீ?” என்று பொரிந்து தள்ளினான் அவன்.

 

“ஆமா.. ஆமா.. எனக்கு அறிவில்ல தான்.! நான் அழகில்ல தான்..! எனக்கு வயசு ஆயிடுச்சு தான் அதனால தான் வேற ஒரு பொண்ண பாத்துட்டீங்களே..!” என்று கத்தினாள் அவள்.

 

“என்னடி உளற? நானும் எத்தனை தடவை சொல்றேன்? அந்த பொண்ணுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு.. என் ஆபீஸ்ல வேலை பாக்குற பொண்ணு அவ்வளவுதான்” என்று ஒரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு மறு கையால் தலையை பிடித்துக் கொண்டு “இவளோட ஒரே தலைவலி..!” என்ற முணுமுணுத்தான் அவன்.

 

“புதுசா ஒரு சக்களத்தி வந்ததும்.. ஏற்கனவே உள்ள பொண்டாட்டி உங்களுக்கு எல்லாம் தலைவலியா தான் மாறிடுவா..! அவ பேசுறதெல்லாம் உங்களுக்கு கத்துற மாதிரி தான் இருக்கும்..! அவ ராட்சசி மாதிரி தான் தெரிவா..!” என்று முந்தானையில் மூக்கு உறிஞ்சி கொண்டு இப்பொழுது கோபத்தை விட்டு அழுகையை ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டாள் அவள்.

 

“அம்மா தாயே..! உன்ன நான் ஒண்ணுமே சொல்லல.. உன்ன கையெடுத்து கும்பிடுறேன். இந்த பிரச்சினையை இதோட விடு.!” என்று அவன் கையெடுத்து கும்பிட..

 

“அது எப்படி எனக்கு விட முடியும்? சுளையா 25 ஆயிரம் ட்ரான்ஸ்க்சன் ஆயிருக்கு உங்க அக்கவுண்ட்ல இருந்து அவ அக்கவுண்டுக்கு..! என்னன்னா படிக்காத கூமுட்டை நினைத்தீங்களா? வீட்டில் இருந்தால் வெளியில் நடக்குறது தெரியாதுனு நெனச்சீங்களா? உங்களுக்காகவும் உன் குடும்பத்துக்காகவும்.. உங்க பிள்ளைங்களுக்காக தான் வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு நான் இப்படி வெட்டியா வீட்ல இருக்கேன்..! அதுக்குன்னு ஒன்னும் தெரியாத தற்குறினு நீங்க நினைச்சுக்காதீங்க..!” என்று பாயின்ட் பாயிண்டாக வாதாடினால் அவள்.

 

அவள் சொல்வதை எதுவுமே மறுக்க முடியாது. டிகிரி படித்தவள்தான். வேலைக்கு செல்கிறேன் என்றவளை நான் வேலை பார்க்கிறேன். நீ குடும்பத்தை பாரு என்று மாற்றியதும் அவன் தான்.

 

“சரிதான் மா. தப்புதான் நான் சொன்னது. உனக்கு தெரியாம நான் எதுவும் செஞ்சிருக்க கூடாது..! அந்த பொண்ணோட தம்பிக்கு காலேஜ் ஃபீஸ் கட்டணும்னு கேட்டுச்சு. அதுக்காக கொடுத்தேன். ஒருத்தங்க படிப்புக்கு கொடுக்கிறது எவ்வளவு பெரிய உதவி தெரியுமா? அதை தான் டி செஞ்சேன். அது உனக்கு தெரியாம செஞ்சது தான் நான் பண்ணுன தப்பு..!” என்று அவன் தன் பக்க நியாயங்களை கூறினான். அப்பொழுதும் அவள் இரங்காமல் இருக்க..

 

“அந்த பொண்ணுக்கு என்ன வயசு இருக்கும் தெரியுமா? ஒரு 21 வயசு தான் இருக்கும்..!” என்றதும் அவள் இப்பொழுது கணவனை முறைத்தாள். 

 

“என்னடி பாக்குற நம்ம பொண்ணுக்கு 15 வயசு. டென்த் படிக்கிறா.. அந்த பொண்ணு அவளோட ஒரு நாலஞ்சு வயசு கூட எப்படி அந்த பொண்ண நான் தப்பா பாப்பேன்? என் பொண்ணு மாதிரி இல்லையா?” என்று அவன் கேட்பதும் சற்று நியாயமாக இருக்க.. அவள் இன்னும் முறைத்தலை கைவிடவில்லை. திரும்பி இவர்கள் இருவரையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த மச்சினனை பார்த்து நிர்மலாவின் கணவன் செல்வம் 

 

“மாப்ள நீயே சொல்லு.. அந்த பொண்ணு இப்பதான் படிப்பு முடிச்சு வேலைக்கு வந்து இருக்கு. தம்பிக்கு காலேஜ்க்கு பீஸ் கட்டனு என்கிட்ட கடன் கேட்டுச்சு.. அப்போ ஆபீஸ்ல வேற ஆடிட்டிங் நடந்துட்டு இருந்த டைம் லோன் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. சரினு நானும் என் ஃப்ரண்டும் சேர்ந்துதான் அந்த பணத்தை அந்த பொண்ணுக்கு கொடுத்தோம்”

 

“இது ஒரு தப்பா? அந்த பொண்ணு வயசு என்ன? என் வயசு என்ன? என்ன போய் அந்த பொண்ணோட இணைக்கூட்டுறா உன் அக்கா? எனக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்குது. நான் எப்படி தப்பா பார்ப்பேன் அந்த பொண்ண? அதுவும் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணிட்டு?” என்று அவர் கேட்டதும் செருப்பால் அடிப்பது போல விலுக்கென்று நிமிர்ந்தான் நிரஞ்சன். 

 

“நீங்க ஒன்னும் என் தம்பி கிட்ட உங்களை நியாயப்படுத்த வேண்டாம். அவன் எல்லாம் அவன் பொண்டாட்டியை எப்படி தாங்குவான் தெரியுமா? இத்தனைக்கும் சீர்வரிசை நகை நட்டுனு எதுவும் வதனி கொண்டு வந்ததே கிடையாது” என்று நிர்மலா பேச. 

 

“நகை நட்டு சீர்வரிசை இதெல்லாம் முக்கியம் கிடையாது நிர்மலா..! நம்ம மேல் அன்பு காட்ட.. பாசம் வைக்கிற நேசம் வைக்கிற.. உண்மையான காதல் உள்ள மனைவி மட்டும் போதும். அந்த வகையில் நிரஞ்சனுக்கு என்ன குறைச்சல் சொல்லு? வதனி தங்கச்சி அப்படி தான். இதோ உங்க அம்மாவுக்கு உடம்பு சரியாயில்லாம இருக்காங்க.‌ அந்த பொண்ணு தானே எல்லாம் பொறுப்பா பார்த்துக்குது? உன் தம்பி கூட அவங்க அம்மாவ இப்படி பாத்துக்கல தெரியுமா?” என்றதும் நிரஞ்சன் விரல்கள் எல்லாம் நடுக்கம் கொண்டது. 

 

அக்கா கணவன் கேட்க கேட்க.. நிதர்சனம் புரிய.. அவனுக்கு உடம்பெல்லாம் புழு ஊர்வது போல அருவருப்பாக இருந்தது தன்னை நினைத்தே…!

 

“வெறும் பணத்தை தான் கொடுத்தேன். அதுக்கே இந்த ஆட்டம் ஆடற நீ..! ஒவ்வொருத்தவன் பாரு வீட்டுக்குள்ள நல்லவனா இருந்துட்டு வெளிய எப்படி பொண்ணுங்களோட பேசுறானுங்க.. கூத்தடிக்கிறானுங்கனு.‌ அதுவும் புதுசா அந்த ஆப் இந்த ஆப்புனும் இருக்கானுங்க.. அதுல ஃபேக் ஐடியில போய் என்ன வழியுறானுங்க தெரியுமா? இத்தனைக்கும் என் ஃபோனை எப்ப வேணாலும் நீ எடுத்து பார்ப்ப.. எங்க அதுல ஒரு குத்தும் சொல்லு பாப்போம்?” என்றதும் மிகவும் அவமானமாக உணர்ந்தான் நிரஞ்சன். 

 

செல்வம் பேசப்பேச தான் எப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலையை செய்து கொண்டிருக்கிறோம். மனைவிக்கு எவ்வாறு துரோகம் புரிகிறோம். அதுவும் அவளை அருகில் வைத்துக் கொண்டே..! அவனது எண்ணங்கள் எல்லாம் மனைவி சுற்றி சுற்றியே இருந்தது‌.

 

அவள் கஷ்டப்பட்டு வீட்டு வேலைகள் செய்யும்போது இவன் அந்தப் பெண்ணோடு சாட் செய்த நிமிடங்களை நினைத்து பார்க்க கூசி போய் ச்சீ என்று தனக்குத்தானே வெறுத்துக் கொண்டான். 

 

“என்ன ரொம்ப பேசுறீங்க? ஒழுக்கங்கறது ஆம்பள பொம்பள ரெண்டு பேரு கிட்டயும் இருக்க வேண்டியது. அவன் வெளியில போறான்.. இவன் வெளியில போறான் நான் அப்படி இருக்கல தானேனு என்ன கேள்வி இதெல்லாம்? ஏன் உங்களுக்கு உள்ளுக்குள்ள அப்படி ஒரு ஆசை இருக்கோ? போய் தான் பாருங்களேன்..! அப்புறம் நடக்கிறது தெரியும்..!” என்று நிர்மலா முந்தானை உதறி இடையில் சொருகி கொண்டே பேச..

 

“அடியே நான் அந்த அர்த்தத்துல சொல்லல.. அப்படியும் நிறைய பேர் இருக்காங்க. நான் அப்படியா? இத்தனை வருஷத்துல என்ன உனக்கு தெரியாதா? உனக்கு மறச்சு ஏதாவது செஞ்சு இருக்கேனா நானு? சொல்லு?” என்று செல்வம் சமாதான படலத்தில் இறங்கினான்.

 

 

“அக்கா ப்ளீஸ் மாமா மேல தான் எந்த தப்பும் இல்லையே..! நீ ஏன் இப்படி சண்டை போட்டுக்கிட்டே இருக்க அதான் தெளிவா சொல்றாரு தானே?” என்று வந்ததற்கு ஏதாவது பேச வேண்டும் என்று அக்காவிடம் அவன் பேச..

 

“இன்னைக்கு இப்படிதாண்டா ஆரம்பிக்கும். பணம் கேட்கிறா கொடுத்தேன்..! ஹெல்ப் கேட்டா அவ வீட்டுக்கே போய் செஞ்சு கொடுத்தேன்..! இங்கே வாங்க இன்னொரு ஹெல்ப் ஒன்னு கேட்பா.. இவரும் போவாரு.. இப்படியே அவங்க ரெண்டு பேருக்கும் பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும். அடுத்ததாக எங்க போய் முடியும் நினைக்கிற? இந்த காலத்துல காதல விட கள்ளக்காதல் தான் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு..! எனக்கு ரெண்டு பொண்ணு இருக்கு. அவங்கள நான் பாக்கணும் இல்லையா? இவரை கண்ட மேணிக்கு எல்லாம் விட்டுட்டு இருக்க முடியாது” என்று அக்கா பேச பேச.. அவனுக்கு தன் தப்பின் வீரியம் புரிய தொடங்கிய இடம்.

 

அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவனை குத்தி கிழிக்க.. அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல்

 

“சரி. கா எனக்கு மிருவ கூப்பிட டைம் ஆச்சு. நான் கிளம்புறேன். வரேன் மாமா” என்று வேக வேகமாக வெளியே வந்தவனுக்கு மூச்சடைப்பது போல இருக்க, காரை எடுத்துக்கொண்டு பீச் பக்கம் சென்று நிறுத்தி ஆசுவாசமாக சுவாசித்து சற்று நேரம் கண்களை மூடி காருக்குள் அமர்ந்து இருந்தான்.

 

நல்ல வேலை பஜனைக்கு இதுவரை எந்த சந்தேகமும் வரவில்லை என்று நினைத்து பெருமூச்சு விட்டவன், மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான். 

 

அன்று மொபைலை கையில் எடுக்கவே அவனுக்கு நடுக்கமாக இருந்தது. மாலை வீட்டுக்கு வந்த கணவனை அதிசயமாக பார்த்தவள், அமைதியாக அனைவருக்கும் டீ போட்டாள்.

 

“வதனி.. மழை வர மாதிரி இருக்கு சூடா பஜ்ஜி போடுறியா டீயோட நல்லாயிருக்கும். ஆதவனும் இருக்கான்” என்று பிரேமா கேட்க சரி என்றாள்.

 

இப்போதெல்லாம் பிரேமா அதை செய் இதை செய் என்று கட்டளை இடுவதில்லை. இதை செய்றியா அதை பண்றியா என்று கேட்க தான் செய்தார். அவரின் மாற்றம் அவளின் மனதுக்கு இதமாக இருந்தாலும் கணவனின் தப்புகள் அவளை நிலை குலைய செய்து கொண்டிருந்தது.

காய்கறிகளில் பஜ்ஜி செய்தவள் அனைவருக்கும் கொடுத்தாள்.

 

நிரஞ்சன் அன்று அமைதியாக மகளோடு அமர்ந்து அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தான். அன்னையிடம் பேசினான்.. அவ்வப்போது மனைவியை நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்தான். அதை எல்லாம் ஓரக்கண்ணால் பார்க்காமல் பார்த்துக் கொண்டே தன் வேலையை பார்த்தாள் வதனி.

 

மாலை சிற்றுண்டி முடிந்ததும் மகள் அருகே அமர்ந்து அவளின் டைரியில் என்னென்ன வீட்டு பாடங்கள் கொடுத்திருக்கிறார்கள் என்பதை வதனி பார்க்க..‌அருகே தான் நிரஞ்சனும் அமர்ந்திருந்தான். பிரேமாவும் கூட இன்று மகன் இருப்பதால் சற்று வெளியில் சோபாவில் அமர்ந்திருந்தார். 

 

“ஆதவா.. நீ இந்த ஏதோ இந்த ஃபோன்ல வேலை செய்வியே.. இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?” என்று கேட்க அவனும் திடுக்கிட்டு மனைவியை பார்க்க.. அவளோ குனிந்த தலை நிமிரவே இல்லை. 

 

“இந்நேரமெல்லாம் தலைய எங்க கிட்ட காமிச்சிட்டு நீ அதுல போய் நெருப்புக்கோழி மாதிரி தலையை விட்டுட்டு உக்காந்து இருப்பியே அதாண்டா கேட்டேன்..!” என்று சற்று நகைச்சுவையாக பேசி சிரித்தார் பிரேமா. 

 

“இல்லம்மா.. இன்னும் ரெண்டு மாசத்துல எப்படியும் ப்ரோமோஷன் கிடைச்சுடும். அதனால இதெல்லாம் வேண்டாம்னு‌ முடிவுல இருக்கேன் மா” என்றான் மனைவியை பார்த்துக்கொண்டே..

 

“அப்பாடி கடவுள் கண்ண தொறந்துட்டான். உனக்கு புரமோஷன் கிடைச்சுச்சுதுனா உன்னோட இந்த வேலை சுமை எல்லாம் கொஞ்சம் குறையும்” என்று மகனுக்காக பார்த்தார் பிரேமா. 

 

மனைவி ஏதாவது பேசுவாள் கேட்பாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவள் எதுவுமே பேசவில்லை. அமைதியாக இருக்க சரி மகளின் பாடத்தில் கவனமாக இருக்கிறாள் என்று விட்டுவிட்டான். இரவு சாப்பாடும் இப்படி மௌனமாகவே கலைந்தது இருவரிடமும். 

 

இப்பொழுது தான் மனைவியை நன்கு கவனித்தான் நிரஞ்சன். ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் அவள் பேசவே இல்லை இவன் வந்ததிலிருந்து குறிப்பாக அவனிடம்..!

 

‘மேகா கிட்ட ஏதோ ஒரு சேஞ்ச் இருக்கு’ என்று அவன் யோசிக்க..

 

அவன் யோசிப்பை எல்லாம் கடந்து அவன் மனைவி அவனை விட்டு வெகு தொலைவுக்கு சென்று விட்டாள் என்று பாவம் அவனுக்கு தெரியவில்லை.

 

அன்று இரவு மகளை தட்டி தூங்க வைத்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன். மிரு அவனை வியப்போடு விழி விரித்து தூங்காமல் பார்த்துக் கொண்டே இருக்க “என்னடா தூங்கலையா?” என்று அவன் கேட்க…

 

“இல்லப்பா..! இன்னைக்கு சர்ப்ரைஸா நீங்க என்ன தட்டி கொடுத்து தூங்க வைக்கிறீங்க?”

 

“ஏன் டா நான் தூங்க வைப்பேனே உன்னை?” என்றான் மகளின் நெற்றியில் கிடந்த முடிகளை ஓரமாக ஒதுக்கி.

 

“ரொம்ப நாளா நீங்க எனக்கு தட்டி கொடுத்து தூங்க வைக்கவே இல்லை. பாப்பா ரொம்ப சேட் தெரியுமா?” என்று வெறும் சொன்னதும் அவனுக்கு நெஞ்சு வலித்தது. மகளைக் கூட கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறோம

 

“எஸ் பா..! நீங்க அந்த போன்ல தானே ஏதோ பார்த்து பேசி சிரிச்சுகிட்டு இருப்பீங்க. நான் உங்களை எதிர்பார்த்துட்டு நீங்க வரலைன்னதும் அப்படியே தூங்கிடுவேன். ஸ்கூல்ல நடந்தது எதுவுமே உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கவே முடியாது. இன்னிக்கு நீங்க என்கிட்ட பேசுறீங்களா.. அதான் உங்ககிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கட்டுமா அப்பா?” என்று ஆசையாக கேட்ட மகளின் குரலில் மரித்தே போனான் தந்தையாய் நிரஞ்சன். 

 

அவளை தன்னோடு அணைத்து கலங்க இருந்த கண்கள் கண்ணீரை உள் இழுத்துக் கொண்டவன் “இல்லடா பாப்பு.. அப்பா உன்கிட்ட மட்டும் தான் இனி பேசுவேன். நீ தூங்கு” என்று தட்டிக்கொடுத்து அவளை தூங்க வைத்தான்.

 

எங்கோ வெறித்தபடி மகளைத் தட்டிக் கொண்டிருந்தவன் அப்போது உள்ளே வந்த மனைவியை பார்த்தான் அவன். 

 

அவளோ இவனை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் குளியலறை சென்று இரவு உடையை மாற்றி வந்தவள், லைட்டை அணைக்க சென்றவளை அவனின் குரல் தடுத்தது.

 

“மேகா.. இன்னைக்கு

இங்கேயே படுத்துக்கிறியா? என்று கேட்டான் மனதில் படபடப்பை அடக்கிக் கொண்டு..!

 

“எதுக்கு..? நீங்க உங்க கள்ளகாதலியோட சேட் பண்றத வெறிச்சு வெறிச்சு நான் பாக்குறதுக்கா? இல்ல அவள நினைச்சுகிட்டு என்கூட படுத்து அவ பெயர சொல்றத ரசிக்கவா?” என்று அவள் அமைதியாக அவன் கண்களை பார்த்து கேட்க

..

 

“மேகா..!” என்று அலறியிருந்தான் நிரஞ்சன்.

 

அதே நேரம் இடி மின்னலோடு பயங்கர மழை பெய்தது..!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top