தூகை 35

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

35

 

அன்று..!

 

 

நிரஞ்சன் வழி மாறி போகிறான் என்று தெரிந்தும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை வதனி முதலில்..

 

அவன் அதிலிருந்து மாறுகிறானா? இல்லை இதிலேயே தொடர்கிறானா? 

 

மனைவிக்கு தெரியாமல் தொடர்வது அவனுக்கு குற்ற உணர்வு ஏற்படுத்தவில்லையா?

 

இல்லை நெறி தவறி விட்டோமே என்று தனக்குத்தானே அதனை உணர்ந்து திரும்பவும் நேர்வழியில் நடப்பானா? என்று அவனை விட்டுப் பிடித்தாள் வதனி.

 

எந்த ஒரு உறவுலுமே விட்டுக் கொடுத்தல்.. விட்டு பிடித்தல்.. இரண்டுமே மிக அவசியமாகிறது..!

 

அந்த விட்டுக் கொடுத்ததற்கு அடுத்த வரும் விட்டு பிடித்தலை மற்றொரு இணை சரியாக இனம் கொண்டு தன் தப்பை திருத்தி.. தப்புக்கான மன்னிப்பை யாசித்து.. ஒழுக்க நெறியோடு நடந்தால் அங்கு சிறு சங்கடத்தோடு அனைத்தும் மாறிவிடும்.. உன்னை போல் இல்லை என்றாலும் சகஜ நிலைக்கு திரும்பி விடும் வாழ்க்கைக்கு‌. 

 

தப்பு செய்பவர்கள்

தெரிந்தால் பார்த்துக் கொள்ளலாம்? அப்படி என்ன நம்மளை கண்காணிக்க போகிறாளா என்ன?

 

தெரியும் போது அப்பொழுது மன்னிப்பு யாசித்துக் கொள்ளலாம்..!

என்று சிலர் இருப்பார்கள்.

 

சிலரோ தெரிந்தால் தெரியட்டுமே..! உன்கிட்ட கிடைக்காதது அங்கே கிடைக்கிறது என்று இப்படி வழி மாறி செல்கிறேன் என்று உணர்த்தி விடலாம் என்பது போல தான் சுற்றுவார்கள்… திருந்தாத ஜென்மங்கள்..!

 

இதில் நிரஞ்சன் எது மாதிரியான நிலையில் தற்போது இருக்கிறான் என்று வதனிக்கு தெரிய வேண்டி இருந்தது.

 

தான் செய்வது தப்பு என்று அவன் மனது உருத்தவில்லையா? காதல் செய்து திருமணம் முடித்த மனைவிக்கு துரோகம் இழக்கிறோம் என்று அவனுக்கு புரியவில்லையா? என்பது போலவே தினமும் அவனை அவதானித்தாள்.

 

முன்னில் அவனிடம் தெரியாத மாற்றங்கள் இப்பொழுது தெளிவாக தெரிந்தது. 

 

சில சமயம் சாப்பிடும் போது அருகில் ஃபோனை வைத்து மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்து வந்த மெசேஜ் வந்தால் அவன் முகத்தில் தோன்றும் ஒரு சிறு குறுநகை..

 

சில சமயம் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு பதில் மெசேஜ் அனுப்பும்போது அவனின் உற்சாக நடவடிக்கைகள் என்று அனைத்தையுமே பாராமல் பார்த்து இருந்தாள் வதனி.

 

சரி இவன் முற்றிவிட்டான்‌..! இவனுக்கு மனைவி என்ற ஒருத்தி ஞாபகமே இல்லை..!

 

வீட்டு வேலை செய்ய.. அவன் அன்னையை‌ கவனித்துக் கொள்ள.. அவன் பிள்ளையை பராமரித்துக் கொள்ள.. இதற்கு மட்டுமே அவனுக்கு ஒரு பெண் தேவைப்படுது. அவ்வப்போது அவனுக்கு ஏற்படும் ஹார்மோன் சதிராடலை தணிக்க படுக்கையிலும் ஒருத்தி தேவைப்படுகிறாள். அவ்வளவுதான்..! அவ்வளவே தான்..!! என்று தீர்மானத்திற்கு வந்து விட்டாள் வதனி. 

 

இனி நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனதில் முடிவெடுத்தாள்.

 

சாதாரணமாக முடிவெடுத்து சென்று விடலாம்? ஆனால் எங்கே செல்வது? திரும்பவும் அன்னை தந்தையிடம் தான் செல்ல வேண்டும்..! வேறு போக்கிடம் ஏது?

 

பெற்றோர் தன்னை ஏற்பார்களா? நமக்கு தான் கல் நெஞ்சு. ஆனால் நம்மை பெற்றவர்களுக்கு அப்படி கிடையாது. கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள் தான்..!

 

அன்று நான் அவர்களுக்கு செய்த துரோகம் தான், இன்று என்னை வந்து தாக்குகிறது என்று வழிந்த கண்ணீரை வழக்கம் போல புறங்கையால் துடைத்துவிட்டு கடனே என்று கடமைகளை செய்து கொண்டிருந்தாள். 

 

எந்தக் கடமையிலிருந்தும் அவள் தவறவில்லை.. வழுவவில்லை..!!

 

மருமகளாய் மாமியாருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகள், வீட்டின் தலைவியை வீட்டை சரியாக பராமரிப்பது, அன்னையாய் மகளுக்கு தேவையானவற்றை செய்வது, மனைவியாய் கணவனுக்கு வயிறு வாடாமல் சமைப்பது அவன் துணிகளை துவைப்பது என்று அனைத்தும்..! ஆனால் அவனிடம் அந்தரங்கத்தை அவள் நாடவில்லை. அவனுமே அன்றைய நாள் பிறகு எதுவுமே பேசவில்லை.

 

அன்றைய கசப்பான நாள் பின் மூன்று நாட்கள் கடந்து இருக்கும். 

 

“மேகா.. மேகா.. சீக்கிரம் வா.. சீக்கிரம் வா..” என்று அழைத்தான் நிரஞ்சன்.

 

என்ன எது என்று தெரியாமல் ஏன் இப்படி அலறுகிறான்? மனைவிக்கு கொடுக்க வேண்டிய எல்லாத்தையும் தான் வேறொருத்திக்கு தூக்கி வாங்கி கொடுத்து விட்டானே.! இப்பொழுது எதற்கு அழைக்கிறான் என்று இகிழ்ச்சியாக நினைத்துக் கொண்டே “என்ன?” என்றாள்.

 

சில நாட்களாக அவள் பேச்சின் மாற்றம் அவனுக்கு லேசாக உருத்திக் கொண்டுதான் இருக்கிறது.

 

முன்னெல்லாம் அவன்‌ மேகா என்று அழைத்தால் கண்கள் முகம் விகிசிக்க என்னங்க என்று கேட்கும் மனைவி இல்லை இப்பொழுது. 

 

எதைக் கேட்டாலும் ஓரிரு வார்த்தைகளில் தான் பதில். நிரஞ்சன் என்றோ.. என்னங்க என்றோ.. சொல்லுங்க என்ற விகுதி பன்மையில் அழைப்பதில்லை.

 

 “என்ன?” 

 

“சரி பாத்துக்கலாம்..!”

 

“உங்க இஷ்டம்..!” 

 

இப்படிப்பட்ட பதில்கள் தான் வருகின்றன..

 

அதை அவன் முழுதாக ஆராய்ந்து இருந்தால் எதற்காக மனைவி இப்படி மாறி இருக்கிறாள் என்ற உண்மை அவனுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவனது சுயத்தை தான் தொலைத்து விட்டு கற்பனை உலகில் கண்டவளோடு கூத்தடித்துக் கொண்டிருந்தானே..  

 

“வர வர ரொம்ப மாறிட்டா.. இப்போதெல்லாம் எதுக்கு எடுத்தாலும் கோபமாக பேசுவது எரிந்து விழுவது என்றே இருக்கிறாள்.. ஆசையாக அழைத்தால் கூட எரிச்சல் படுகிறாள்..” என்று சகட்டுமேனிக்கு தன் மனதில் மனைவியை வறுத்தவன் “கொஞ்சம் கீழே வா” என்றான் விட்டேறியாக..!

 

சரி என்று கீழே செல்ல அங்கே ஆழ்ந்த நீல நிறத்தில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. 

 

‘இம்மாதிரி கார எங்கேயோ பார்த்திருக்கிறானே?’ என்று அவள் யோசனையாக அவனைப் பார்க்க.. 

 

“நமக்கு தான் புதுசா எடுத்திருக்கேன்?”

 

“இஎம்ஐ ஆ? முடியுமா உங்களால?”

 

“அதெல்லாம் கட்டிடலாம். ரெண்டு மாசத்துல ப்ரொமோஷன் கிடைச்சிடும். அதுல இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல..!” என்று அவன் சொல்ல சொல்ல வெறும் தலையசைப்பை மட்டுமே கொடுத்திருந்தவள் எண்ணமோ ‘இந்த கார் எங்க பார்த்தோம்? எங்க பார்த்தோம்?’ என்பதிலேயே இருந்தது. 

 

“அடுப்படியில் வேலை இருக்குங்க. அத்தை தூங்கிட்டு இருக்கிறவங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்திருவாங்க.. அதுக்கப்புறம் மிரு வந்துடுவா.. எனக்கு வேலை சரியா இருக்கும்” என்றாள்.

 

“சரி சரி மிருவ நான் போய் கூட்டிட்டு வந்துடறேன். நீ அம்மாவ பாத்துக்க” என்றவன், காரை எடுத்துக் கொண்டு சென்று விட.. செல்லும் அவனை திரும்பி பார்த்தவள் நெற்றி சுருக்கதோடு மீண்டும் சமையலறையில் வந்து வேலை செய்யும்போது அவளது எண்ணங்கள் மீண்டும் மீண்டும் எங்கே பார்த்தோம் என்றே இருந்தது.

 

“ஆம்.. ஞாபகம் வந்துருச்சு..! இவரோட வீ ப்ரண்ட்ஸ் ப்ரொபைல் இது மாதிரி ஒரு கார் ஓட நின்னு தான் போட்டோ எடுத்து வச்சிருக்காரு. அந்த கார் எங்கேயோ ஏதோ அவங்க பிரெண்ட்ஸ் கூட ரெஸ்டாரண்ட் போகும்போது அங்க இருந்த காரோட‌ செல்ஃபி எடுத்துட்டு வந்து காட்டினாருல.. இது ஒரு எப்படியும் ஆறு மாசத்துக்கு முன்ன நடந்தது இல்ல.. இப்ப ஏன் அதே கலர்ல கார் வாங்கி இருக்கார்?” என்று யோசித்துக் கொண்டே இருந்தவளுக்கு அதற்கான விடையும் அன்று இரவே கிடைத்தது. 

 

கார் வாங்கிய மகிழ்ச்சியை அன்னையிடமும் அந்த பகிர்ந்து கொள்ள.. தன் மகன் வாழ்க்கையில் முன்னேறுவது எந்த அன்னைக்கு தான் சந்தோஷமாக இருக்காது?

 

“சந்தோஷம் பா. ஆனா என்னால இப்போ கார்ல வர முடியாதே” என்று அவர் வருத்தப்பட..

 

“அதெல்லாம் வரலாம் மா. ஒரு ஒன் வீக் போகட்டும். டாக்டர் செக்கப் போகும் போது அவர்ட்ட ஓப்பினியன் கேட்டுட்டு அதுக்கப்புறம் உங்களை நான் காருல வச்ச கூட்டிட்டு போறேன்.. மிருவ கூப்பிடவும் அழைக்கவும் நீங்களும் என்னோடு வரலாம்..

 

“ஐ ஜாலி ஜாலி.. அப்ப பாட்டியும் என் கூட ஸ்கூலுக்கு வர போறாங்களா ப்பா? இனிமே நம்ம எங்க போனாலும் கார்லயே போலாம் இல்லையாப்பா?” என்று மிருவும் தன் சந்தோஷத்தை கொண்டாட மகளின் சந்தோஷத்தை பார்த்த வதனி முகத்தில் சின்ன முறுவல். 

 

“உனக்கு என்ன? உன் புருஷன் உன்னை நல்லா வச்சிருக்கான் பாரு. கார் வாங்கிட்டான்.. இனிமேல் உங்களை எல்லாம் கையாலே புடிக்க முடியாது. டூவீலர்லையே ரெண்டு பேரும் ஊரை சுத்துவீங்க.. இப்ப கார் வேற வந்துருச்சு கைல புடிக்க முடியுமா? வயசானவங்க வீட்ல இருக்கேன் அப்பப்ப உங்களுக்கு ஞாபகம் இருந்தா சரி..!” என்று மகனின் பழைய வாழ்க்கையை நினைத்து நிகழ்காலத்தை தெரியாமல் எதிர்காலத்தைப் பற்றி அவர் கூறினார். 

 

“அது எப்படி உங்கள விட்டுட்டு நாங்க மட்டும் சுத்துவோம் அத்த? முன்னெல்லாம் நீங்க நல்லா இருந்தீங்க.. இப்போ உங்களுக்கு பாத்துக்க ஒரு ஆள் தேவைப்படுது. அப்படி எல்லாம் நான் சுத்த மாட்டேன் கவலைப்படாதீங்க..!” என்று வதனி கூறியவுடன் பிரேமாவின் முகத்தில் ஒரு மெச்சுதல்.

 

‘பரவாயில்லை மருமகளுக்கு நம் மீது பாசமும் அக்கறையும் இருக்கு’ என்று. 

 

ஆனால் நிரஞ்சனா “அப்பப்போ நம்ம போயிட்டு வருவோம். அப்புறம் அதுக்கு தான் கார் வாங்கி இருக்கிறது” என்றதும் அவளோ அதற்கு ஏதும் பதில் சொல்லாமல் மீண்டும் சமையலறையில் நுழைந்து கொண்டாள்.

 

இரவு அனைவரும் உணவு கொண்டு தூங்கு முன் அழைத்தார் பிரேமா.

 

அப்போதுதான் அவன் லைவ் முடித்துக் கொண்டு அந்த பெண்ணோடு சாட் செய்து முடித்துவிட்டு உறங்க ஆரம்பித்து இருந்தான். 

 

சற்றே எரிச்சலோடு “என்ன மா?” என்று வந்து கேட்க..

 

“இங்கு வாடா உங்க அக்கா இந்நேரத்துக்கு கால் பண்ணி இருக்கா? என்ன பிரச்சனைன்னு தெரியல.. என்னன்னு பேசு பக்கத்துல உங்க மாமா வேற எதுவோ உர் உர்ரனு பேசிட்டு இருக்காரு.. எனக்கு ஒரே படபடப்பா வருது” என்றதும் 

 

“கொடு நான் பேசுறேன்” என்று என்ன பிரச்சனை என்று பேசிக் கொண்டிருந்தான் அக்காவிடம். 

 

வதனி அவருக்கு பால் கொண்டு வந்து கொடுக்க “நீ போய் பாப்பா கூட படுத்துக்கோ.. தனியா படுத்து இருக்கா. இங்க என்னன்னு தெரியல நாங்க பேசுறோம்” என்று மருமகளை அவர்கள் அறைக்கு அனுப்பி வைத்தார். 

 

பேத்தியின் மீது ஒரு அக்கறை என்றாலும் அதை தாண்டி பெண்ணில் வீட்டு நடக்கும் எந்த சண்டை வம்பு தும்பும் மருமகள் காதுக்கு போய் விடக்கூடாது. மகளையும் மருமகனையும் பற்றி மருமகள் தவறாக நினைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அவளை விரட்டினார்.

 

“சரி அத்தை நான் தூங்கிட்டனா நீங்க இங்கேயோ படுத்துக்கோங்க” என்றபடி வெகு நாள் கழித்து மகள் அருகில் படுக்க ஆயத்தமாக அப்பொழுதுதான் தலையணைக்கு அடியிலிருந்த நிரஞ்சனின் ஃபோனை பார்த்தாள்.

 

மெல்ல கதவை தாழிட்டு வந்தவள் அந்த சாட்டை மனம் படபடக்க கைகள் நடுநடுங்க மீண்டும் பார்த்தாள்.

 

“ஹாய் ஸ்வீட்டு.. அன்னைக்கு நான் சொன்ன நீ நம்பல இல்ல.. இத பாரு அதே கார் தான்..! இப்போ செல்பி எடுத்து போட்டு இருக்கேன். இடையில கொஞ்ச நாள் எங்க அக்கா வீட்டுக்கு போயிருந்தது. நீ கேட்ட உடனே போய் எங்க அக்கா கிட்ட இருந்து வாங்கிட்டு வந்துட்டேன். இப்போ ஹாப்பியா ஸ்வீட்டு…” என்று அவன் மெசேஜ் செய்திருக்க..

 

“நான் கேட்டதுக்காக வா?” என்று ஆச்சரிய ஸ்மைலிகளை அவள் அனுப்பியிருக்க..

 

“எஸ்.. ஆல் மை ஸ்வீட்டு” என்று இவனும் சந்தோஷ ஸ்மைலிகளை பதிலுக்கு அனுப்ப..

 

“லவ் யூ நிரு” என்று முத்த ஸ்மைலிகளை அவள் அனுப்ப..

 

“லவ் யூ டூ.‌ மிஸ் யூ ஸ்வீட்டு” என்று இவனும் பதில் அளிக்க..

 

‘ஆக.. அவளுக்கு காட்டுவதற்காக போலியாக இருந்த காரை நிஜமாகவே எடுத்து இருக்கிறான். இதற்கு சப்ப காரணம் வேறு..’ என்று கண்ணீர் கண்கள் மறைக்க.. அழுத்தமாக துடைத்துக் கொண்டவள் மூர்த்தி உறிஞ்சி அழுகையை அடக்கினாள்.

 

மீண்டும் அத்தனையையும் தன் செல்போனில் படம் எடுத்து மெயிலுக்கு அனுப்பி வைத்துவிட்டு நிரந்தரமாக அந்த படங்களை அழித்துவிட்டாள்.

 

எப்பொழுதும் போல அவனது ஃபோனை அவன் வைத்திருந்த இடத்தில் வைத்துவிட்டு வெளியே தாள் போட்டு இருந்த கதவை திறந்து விட்டவள், நிரஞ்சன் ரொம்ப நேரமாக வராமல் இருப்பதைக் கண்டு இவளாக சென்று அத்தை ரூமை எட்டிப் பார்த்தாள்.

 

அப்பொழுதும் நிரஞ்சன் அவன் அக்கா மாமா இருவரிடமும் ஏதோ மாறி மாறி பேசிக்கொண்டிருக்க

 

சைகையில் “நேரமாயிட்டு நீங்க தூங்கலையா?” என்று கேட்டாள் மாமியாரிடம்.

 

“நான் எங்க தூங்க? இங்க பாரு..!” என்று மகன் பேசுவதை காட்டி விட்டு எல்லாம் தலையெழுத்து என்றார் பிரேமா. 

 

“மணி ஒன்னாக போது. இன்னும் தூங்கலைன்னா உடம்பு என்னத்துக்கு ஆகும்? நீங்க ஃபர்ஸ்ட் தூங்கணும். எதா இருந்தாலும் காலைல பேச சொல்லுங்க உங்க புள்ளை கிட்ட” என்று மாமியார் அருகில் மென்பொருளில் அவள் கூற..

 

அவருக்கே உடம்பு ஒரு மாதிரி தள்ளாடியது தான்.

 

“ஆதவா எதா இருந்தாலும் நாளைக்கு இரண்டு பேரையும் வீட்டுக்கு வந்து பேச சொல்லு. இப்ப வேண்டாம்” என்று இவரும் கூற அவனும் அதை ஆமோதித்து 

 

“சரி கா.. என்னவாக இருந்தாலும் மாமாவை அழைச்சிட்டு வீட்டுக்கு வா பேசிக்கலாம்” என்று வைத்து விட்டான். 

 

ஆனால் அவர்களின் பஞ்சாயத்தை தீர்ப்பதற்காக இவன் பார்த்திருக்க.. இவனுக்கு மறுநாள் பஞ்சாயத்து காத்திருந்தது..!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top