Share:
Notifications
Clear all

மாமனே 12

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

மாமனே 12

 

"விளையாண்டது போதுமுங்க… அப்புறம் பார்க் போய் விடலாம்!" என்று பிள்ளைகளை கொஞ்சியப்படி படி ஏறியவள் சாட்சாத் மணிமேகலை தான்‌ (நீ நீ நீ என்னோட இஷ்டம்… நாயகியே தான்)

 

பிள்ளைகள் இருவரையும் கைக்கு ஒருவராய் பிடித்துக் கொண்டு மெல்ல படியேறியவள், அங்கே நின்றிருந்த மாணிக்கவேலை பார்த்து ஒரு நிமிடம் பயத்தில் திடுக்கிட்டாள்.

 

"இவன் எங்கே இங்க?" என்று!!

 

அவளின் திடுக்கிடலில் அவனது இதயம் கத்தி கொண்டு பிளந்தது போல வலித்தது. நேசம் வைத்த பெண்ணின் பயந்த பார்வையை எந்த ஆண்மகனால் ஏற்றுக் கொள்ள முடியும்? அது கடந்த காலமானாலும் வைத்த நேசம் உண்மை தானே!! அது கொடுத்த வலியை இந்த மூன்று வருடமாய் மறக்க முயன்று வென்றாலும், அந்த வடு அவ்வவ்போது அதை ஞாபகப்படுத்தி விட்டு செல்லும்!!

 

அவள் தெரியாதது போல சென்றிருந்தால் கூட இத்தனை வலி இருந்திருக்காது! ஆனால்.. அந்த கண்கள்.. அது காட்டிய அந்த பயம்! கண்களை இறுக்க மூடி தன்னை நிலைப்படுத்திக்க முயன்று

ஒரு பெருமூச்சை விட்டவன், "போலாமுங்க.. அம்மிணி!" என்று மலர்விழியின் கையை பிடித்துக் கொண்டு இவன் விறுவிறுவென்று படியேற…

 

மாணிக்கவேலை மனைவியோடு பார்த்த மணிமேகலையின் கண்களில் இப்பொழுது ஆச்சரியம்! உதடுகளில் ஒரு புன்னகை!!

 

எங்கே பழையதை பேசி விடுவானோ என்று தான் பயந்திருந்தாள், இப்போது அவன் வாழ்வு வேறு ஒரு பெண்ணோடு மலர்ந்து விட்டதை நினைத்து மகிழ்ந்தாள்!!

 

பொற்றாமரை குளத்தில் இருந்து வேகமாக அந்த தூண் மண்டபத்தில் வேகமாக நடந்துக் கொண்டிருந்தவனின் மனம் வெகுவாக கலங்கி இருக்க… கண்களுக்கும் அறிவிற்கும் சுற்றமும் சூழலும் புலப்படவே இல்லை! 

 

மலர்விழியோ "என்னாச்சு இவருக்கு? நல்லாத் தானே பேசிட்டு இருந்தாரு?" என்று அவன் இழுத்த இழுப்புக்கு பின்னோடு ஓடிக் கொண்டிருந்தாள்.

 

மலர்விழியும் மணிமேகலையும் அவன் நினைவில் இல்லை. அந்த கண்கள் அது காட்டிய பயம்… அது மட்டுமே!!

 

"அவ்வளோ கேவலமாகவா நடந்தேனுங்க கண்ணு உங்க கிட்ட…

ஏனுங்க இவ்வளவு பயம்?" என்று மனதில் புலம்பிக் கொண்டே நடந்தவன், எதிரில் வந்தவனை இடித்து விட்டு "மன்னிச்சுக்கோங்க.." என்று முகம் பார்க்காமல் இவன் நகர.. இடி வாங்கியவனோ, அவனையும் அவன் அருகில் சென்ற பெண்ணையும் கூர்ந்து பார்த்துவிட்டு, பின்னால் திரும்பிப் பார்க்க.. அங்கே தப்பு செய்தவள் போல நின்றிருந்த மனைவியை பார்த்தான். ஆம்! அவன் கார்த்திக் கிருஷ்ணா!!

 

"நம்ம பெல்லு தான் ஏதோ வாய் விட்டுட்டா போலயே!" என்று கண்டு கொண்டவன் நிமிடமும் யோசிக்காமல் "ஹலோ ப்ரோ.." என்று சத்தமாக அழைக்க, மாணிக்கவேலின் காதில் அது விழுந்தால் தானே? அவன் தான் மன ஊளைச்சலில் இருந்தானே!!

 

"ஹலோ ப்ரோ.. உங்களை தான்!" என்று அழைக்க இம்முறை மலர்விழி திரும்பி பார்க்க, அவளிடம் அவனை சுட்டிக்காட்டி கூப்பிட சொன்னான் கார்த்திக்.

 

"ஏங்க.. உங்களைத்தான் அந்த அண்ணன் கூப்பிடுறாரு. உங்களை தாங்க…" என்று இரண்டு முறை உலுக்கியவுடன் தான் சுயநினைவுக்கு வந்தவன், யார் என்று திரும்பிப் பார்க்க.. இவனை நோக்கி புன்னகை முகமாக வந்து கொண்டிருந்தான் கார்த்திக் கிருஷ்ணா!! நம் கேகே!! (நீ நீ நீ என்னோட இஷ்டம் நாயகனே தான்)

 

"அச்சோ.. அடுத்தது இவனா?" என்று நெற்றியை ஒற்றை விரலால் தேய்த்துக்கொண்டவன் குனிந்து நிற்க..

 

"அப்புறம் எப்படி இருக்கீங்க ப்ரோ? பார்த்து ரொம்ப நாளாச்சு!!" என்று வெகு கேஷ்வலாக பேசியவன் மாணிக்கம் முன்னே கையை நீட்ட..

ஆச்சரியமாக அவனை பார்த்தான் மாணிக்கவேல்.

 

அன்று அந்தக் குலதெய்வக் கோவிலில் மாணிக்கவேலால் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு, இன்று தான் சந்திக்கிறார்கள் இருவரும்!!

 

கார்த்தியையும் அவன் நீட்டிய கையையும் விழி அகற்றாமல் பார்த்தவனை, அவன் மனைவி "என்னங்க…" என்று புஜத்தால் இடிக்க, "ஹான்…" திரும்பிப் பார்த்தவனிடம் கண்களால் கார்த்திக்கின் நீட்டிய கையை காட்டினாள்.

 

ம்ம்ம் என்றவன், சன்ன புன்னகையோடு கார்த்திக்கோடு கையை குலுக்கினான் மாணிக்கவேல்.

 

"அப்புறம் கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆகுது? எங்களை எல்லாம் இன்வைட் பண்ணவே இல்ல.."

 என்றதும் பதில் அளிக்காமல் நின்ற கணவனை அதிசயமாக பார்த்தாள். அவனோ கார்த்திக் தன்னிடம் இவ்வளவு தன்மையாக பேசுகிறானா? என்பதை நம்ப முடியாமல் நின்றிருக்க.. இவளே பதில் அளித்தாள், "நீங்க வேற ணே.. நாங்க எங்க பெத்தவங்களையே இண்வைட் பண்ணல.." என்றாள் கண் சிமிட்டி!!

 

கணவனின் குறிப்பு கொண்டு மணிமேகலை அவர்கள் அருகில் வந்தவள், மலர்விழி பேசியதை கேட்டு "எதே…??" விழி விரிக்க.. வெடித்து சிரித்தான் கார்த்திக்!!

 

"அச்சோ…!!" வெட்கம் வந்து குங்குமம் பூசிக்கொண்டது மாணிக்கவேலுக்கு!!

 

மணிமேகலையும் கார்த்திக்கும் அவனது வெட்கத்தை ரசித்தனர்.

ஆனால் துருவி எதுவும் கேள்வி கேட்கவில்லை!! அவர்கள் அந்தரங்கத்தில் தலையிடவில்லை!

 

 மணிமேகலையையும் பசங்களையும் அறிமுகப்படுத்தினான் கார்த்திக்! 

மலர்விழியை மாணிக்கமும் அறிமுகப்படுத்த… இரு பெண்களும் நெருங்கினர். "உங்க குழந்தைகள ரொம்ப அழகு.." என்று இருவரின் கன்னத்தையும் எடுத்து கிள்ளி முத்தம் வைத்தாள் மலர்.

 

மாணிக்கவேலோ மணிமேகலையின் கண்களை தான் பார்த்திருந்தான் விடாமல்! அப்பொழுது தெரிந்த பயமோ எச்சரிக்கை உணர்வோ எதுவும் இல்லாம அமைதியாக நிர்மலமாக இருக்க.. சற்றே மனம் ஆறுதல் அடைந்தது அவனுக்கு.

 

"உங்களை இப்படி குடும்பமா பார்க்க சந்தோசமா இருக்குங்க!" என்றாள் மணிமேகலை மாணிக்கவேலிடம்.

 

"உங்களையும் தாங்க.." கண்ணு என்று கூற வந்தவன் அதை விழுங்கிக் கொண்டான்.

 

"நீங்க எங்க இங்க?" என்று மாணிக்கம் கார்த்திக்கிடம் கேட்க..

 

"கம்பெனி விஷயமா வந்து அப்படியே பேமிலிமோட ஒரு சின்ன வெக்கேஷன்!" என்றான் கார்த்திக்.

 

"நீங்க..??" என்று திரும்பி இவனிடம் கேட்க.. "நான் மூணு வருஷமா இங்கதானுங்க தொழில் பண்றேன்!" என்று அவனது கடையின் பெயரையும், கிளைகளையும் கூறினான்.

 

மாணிக்கவேலன் இந்த பொறுப்பு, தொழில் மூன்று ஆண்டுகளில் அவன் அடைந்த வளர்ச்சியை கண்டு வியந்த பார்வை ஒன்றே கொடுத்தாள் மணிமேகலை!! அப்படி ஊரில் விட்டேறியாக.. ராஜா வீட்டு கன்றுக்குட்டியாய் இல்லாமல் இளவரசனாய் கருமத்தாம்பட்டியில் நகர் வலம் வந்தவனா இவன்? என்று!!

 

ஆனால் அவனின் மாற்றத்திற்கு வித்திட்டவள் அவள் தானே!!

 

"தரிசனம் ஆச்சா?" என்று கார்த்திக் கேட்டுக் கொண்டே அவனுடன் இயல்பாக நடக்க.. மணிமேகலையும் இயல்பாக மலர்விழியோடு பிள்ளைகளோடு முன்னே நடக்க.. இவர்கள் இருவரும் பேசிக் கொண்டே வந்தனர்.

 

என்றோ ஒருநாள் அவன் செய்த தவறு!! ஆனால் அதை மறந்ததோடு மட்டுமல்லாமல் இன்று அப்படி ஒரு விஷயம் நடந்தது போலவே காட்டிக் கொள்ளாமல்.. பழகும் இவர்களை கண்டு மலைத்தான் மாணிக்கவேல்.

 

குறிப்பாக கூட இருவரும் கடந்த காலத்தை நினைவூட்டாமல் ஏதோ தெரிந்தவர்கள் என்ற மட்டில் பேசிக் கொண்டே சென்றது நிஜமாவே வெகு நாள் கழித்து மனம் நிம்மதியாக உணர்ந்தான்.

 

அந்தப் பிரச்சினைக்கு பிறகு இவன் ஊரை விட்டு வந்து விட்டாலும் தான் செய்தது தவறு என்று மனதின் ஓரத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. என்றாவது பார்க்கும்போது மன்னிப்பு கேட்டு விட வேண்டும் இவன் நினைத்திருக்க.. அதற்கு வழியே கொடுக்காமல் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததா என்ன? என்று இயல்பாக பேசும் கார்த்திக்கை அத்தனை பிடித்தது மாணிக்கவேலுவுக்கு!

 

விடைபெறும்போது கார்த்திக்கை அணைத்து விடுவித்தவன் "நீங்க ரொம்ப கிரேட்டுங்க!" என்றான்.

 

"இல்லை மாணிக்கம் நீங்க தான் கிரேட்! விழுந்த இடத்திலேயே இல்லாமல் உங்களை நீங்களே மாற்றி உங்கள் வாழ்வையும் புதிய பாதையில் கொண்டு போய்ட்டு இருக்கீங்க… நீங்கதான் கிரேட்!! கீப் இட் அப் மேன்! ஊருக்கு வரும் போது பார்க்கலாம்!" என்று விடை பெற்று சென்றனர் கார்த்திக் மணிமேகலை குடும்பம்!!

 

"அவங்க உங்க ஊரா மாமா?" என்றவளிடம் கடந்த காலத்தை பேச பிரியப்படாமல் "ஆமாங் அம்மிணி!" என்றவனின் புன்னகையில் 

வேற எதுவும் கேட்காமல் அவன் கைகோர்த்து நடந்தாள் காரிகை!

 

இரவு உணவை வெளியில் முடிக்கலாம் என்று அவன் சொல்ல.. "வீட்டில செஞ்சதெல்லாம் வீணா போயிடுங்க.. இன்னொரு நாள் வரலாம்!" என்று பொறுப்பான மனைவியை கூறியவளை மெச்சுதலோடு பார்த்தவனின்

மனதில் இன்று மண்வாசத்தோடு மழை!!

 

மீண்டும் ஒரு ஆட்டோ பயணம் அவர்கள் வீடு நோக்கி!!

 

'முதல்ல இந்த வண்டியை மாத்தணும். இல்ல வேற புது வண்டிய வாங்கணும்! இனிமே ஆட்டோ பயணம் எல்லாம் சரி படாது. உடம்பு தாங்கல டா சாமி!' என்று உடம்பை முறுக்கி நெளிவு எடுத்தவன் உள்ளே செல்ல.. மதியம் செய்த சாப்பாடு இருக்க அதையே சூடு படுத்தி உண்டு முடித்துவிட்டு ஜீவனுக்காக காத்திருந்தனர் இருவரும்.

 

ரொம்ப நாள் பிறகான அதிக நேர நடை, கூடவே ஆட்டோவிலேயே அதிகம் பயணித்தது என்று அசந்து போயிருந்தாள் மலர்விழி. ஆனாலும் ஜீவனுக்காக காத்திருந்தாள்!

 

"அவன் வரும்போதே சாப்பிட்டு தான் வருவானுங்க அம்மிணி.. நீங்க தூங்கங்க.. முகமே அவ்ளோ சோர்வா இருக்கு!" என்றான்.

 

"இல்லங்க இருக்கட்டும்! இன்னைக்கு ஒரு நாள் வெயிட் பண்றேன். நாளிலிருந்து எப்படினு நானே கேட்டுக்கிறேன்ங்க.. மதிய அவர் தான் எனக்கு அவ்வளவு ஹெல்ப் பண்ணினார்!" என்றதும் அவள் எப்படி வந்திருப்பாள் என்று ஏற்கனவே அவனுக்கு ஒரு ஊகம் இருந்தது. இப்போது தெளிவானது!!

 

"சரி இருங்க.. அவனுக்கு போனை போடுறேன்" என்று ஜீவனுக்கு அழைக்க.. வழக்கம் போல அவனும் எடுக்கவில்லை!

 

"இவன் போனை வாங்கி ஒரு நாள் முக்குல இருக்குற பிள்ளையாருக்கு நான் சிதறு தேங்காய உடைக்கல.. எப்ப போன போட்டாலும் எடுக்கிறதே கிடையாது. நாதாரி பய.. எங்க ஊரு சுத்துறானோ?" என்று திட்டிக் கொண்டே அவள் அருகில் அமர்ந்தான்.

 

கால் லேசாக வலி எடுக்க காலை நீட்டி தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் மலர்விழி.

 

அவளின் வெண் பஞ்சு பாதங்களை தான் பார்த்திருந்தான். முயல் குட்டி போல சேலையில் இருந்து மெல்ல தலையை வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

 

வெண்ணிற பாதங்கள்.. குட்டி குட்டியாய் விரல்கள்.. இரண்டு விரல்களில் கிரீடமாய் மெட்டி.. அதற்கு அழகு சேர்க்க சிவப்பு நகபூச்சு என்று கொள்ளை அழகாக இருந்தது அவளது பாதங்கள்!!

அவனையும் மீறி அவளது வெண்பாதங்களை லேசாக வருடினான்.

 

மாணிக்கத்தின் விரலின் தீண்டல்.. அவள் படக்கென்று காலை மடக்க.. பட்டென பிடித்து தன் மடியில் வைத்துக் கொண்டான்.

 

"ம்ம்ம்… என்னங்க…" சிணுங்கலாய் அவளின் குரல் கீதமாய்!

 

மெல்லிய வெள்ளி கொலுசு.. முடிகள் இல்லாமல் வழுவழுப்பான கால்கள்.. அவள் கால்கள் இரண்டையும் சேர்த்து அழுத்தி பிடித்தான். அவன் கைக்குள் இருந்த வெள்ளி கொலுசு.. அவள் காலில் அழுத்த..

 

“ப்ளீஸ்.. காலை விடுங்க.. ஏற்கனவே வலிக்குது…” என்று அவள் காலை திருப்ப, பாதங்களை மெல்ல அவன் பிடித்து விட.. "அச்சோ.." என்று அவள் 

கால்களை இழுக்க முயன்றவள், "என்னங்க.. நீங்க போய் என் காலை பிடிச்சிட்டு…" என்று நெளிந்தாள்.

 

"ஏனாம்? பிடிக்கலையா??" என்று கரகரத்தது அவனது குரல்.

 

"ம்ம்ம்.. வேணாம்!" என்று சிணுங்கியது அவள் குரல்!!

 

"அப்போ இது?" என்றவன் நுனி நாக்கை நீட்டியவன், அவள் உள்ளங்காலில் மெதுவாக வருட..

 

“ஐயோ.. விடுங்க.. ” என்று அவள் கால்களை உதற, அவன் மூக்கில் மோதியது அவள் பாதம்.. அவளின் பிஞ்சு பாதத்தில் முகம் பதித்து மூச்சை உள் இழுத்தான்.. கூச்சத்தின் உச்சத்தில் அவள் திமிற.. அவள் உடல் மேல் முன்னேறியது மாணிக்கத்தின் இதழ்கள், அவள் கால்களில் முகத்தை தேய்க்க..

 

“ம்ஹும்…. ப்ளீஸ்.. மாமா .. ” என்றவள் அவனிடமிருந்து விலக பார்க்க.. அவளின் அடி வயிற்றை சுற்றி வளைத்தவன் பிடிக்குள் அவள் புழுவாய் துடிக்க.. மடிப்பு இல்லாத மெல்லிய இடையில் அழுத்தி ஒரு முத்தம்!! அவ்வளவு தான்!!

 

மாமா… என்று அவள் திணற…

 

அவளை தன்னருகில் இழுத்தவன் அவள் முகத்தில் எண்ணிலா முத்தங்களை பொழியத் தொடங்கினான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவனிடம் மறுக்கவும் இல்லை. அவனுக்கு இல்லாதது என்று தன்னிடம் எதுவும் இல்லை என்ற எண்ணம் பெண்ணுக்கு!!

 

அவளது நெற்றி, கண்கள், கன்னமெல்லாம் ஊர்வலம் வந்த அவனது இதழ்கள் அவள் தேன் இதழிகளில் புதைத்தபோது சட்டென கண்களை மூடிக்கொண்டாள். 

 

சில முத்தங்கள் விருப்பமும் எதிர்ப்புமாய்!! 

சில அசைவுகள் நெருக்கமும் விலகலுமாய்!!

சில தீண்டல்கள் கொஞ்சலும் கெஞ்சலுமாய்!!

சில தொடுகைகள் சீண்டலும் கிறக்குமுமாய்!!

 

அனைத்தும் தித்திப்பான அவளின் செவ்விதழ்கள் வந்து முடிவுற்றது!!

 

முடிவு என்பது மற்றொருன்றின் தொடக்கம்!!

 

அவர்களின் தாம்பத்தியத்தின் தொடக்கமாய் இருந்திருக்கும்! ஆனால்….

 

அதே நேரம்… மாமா… என்று குரல்கள் வெளியே…

 

"அச்சோ ஜீவன் வந்துவிட்டார் போல!" என்றவள் சட்டென்று அவனிடமிருந்து பிரிந்து

கொள்ள… வந்தது ஜீவன் மட்டும் அல்ல அவனது அக்காள்களும் கூடத்தான்!!

 

"மாமா… நாங்க வந்துட்டோம்!" என்றனர் கோரஸாய்!!

 

வழக்கம் போல கரடிகளாய்….!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top