வஞ்சகன் - 5

 

(@madhusha-novels)
Member Moderator
Joined: 5 months ago
Messages: 8
Thread starter  

அத்தியாயம் 5

 

அவளின் அழுகையில் இவனுக்கு உயிர் பிசைந்தது..

 

“யாது.. யாது..” என்றவளின் தலையை ஆதூரமாக தடவி விட்டான்.. 

 

“யாதிராஆஆ..” என்ற சந்தோஷ் குரல் கேட்டதும் தான் தாமதம், பட்டென்று அவனை விட்டு இரண்டெட்டு பின் வைத்தாள் யாதிரா.. 

 

இவ்வளவு நேரம் இவனையா அணைத்திருந்தோம்? என கண்களில் அதீத  வெறுப்புடன் அவனைப் பார்த்தாள்.. 

 

அவளின் பார்வையில் கசந்த புன்னகை தான் சயந்தனிடத்தில்.. 

 

அவன் எதிர்பார்த்தது தானே.. கண்டிப்பா அதீத பயத்தில் தான் தன்னை அணைத்திருக்கிறாள் என்பJ புரிந்தது.. 

 

“அப்பாஆஆஆ..” என சந்தோஷின் அருகில் சென்று நின்றுக் கொண்டாள் யாதிரா.. மறந்தும் சயந்தன் புறம் திரும்பவில்லை.. 

 

சயந்தனை அணைத்தது போன்று சந்தோஷை அணைக்கவில்லை.. 

 

அணைக்கவில்லை என்பதை தாண்டி அணைக்க தோன்றவில்லை.. 

 

அவளின் பயத்தையும், அச்சத்தையும் ஒரே அணைப்பில் அவளிடம் இருந்து விடுபட வைத்திருந்தானே.. 

 

வேறென்ன வேண்டும் அவளுக்கு.. 

 

“என்னாச்சி?..” என்றான் கணீர்க்குரலில்… 

 

காதலன் மறைந்து காவலன் வெளியே வந்திருந்தான்.. 

 

அவனை நிமிர்ந்து பார்த்தால் தானே பதில் சொல்வதற்கு.. ஊமைக்குறத்தியாட்டம் அமைதியாக நின்றிருந்தவளின் விழிகள் மட்டும் வைகையாற்று வெள்ளத்தைப் போன்று கண்ணீர் வந்துக் கொண்டேயிருந்தது.. 

 

சலிப்பாக பார்த்தான் அவளை.. 

 

“என்ன நடந்தது?..” என்றான் கர்ஜனைக்குரலில்.. 

 

“என்னம்மா நடந்தது?..” என்றார் கெளதம்.. 

 

‘வந்துட்டாரு.. பெரிய நாட்டாமை. தீர்ப்பு சொல்லிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாரு..’ என உதட்டைச் சுழித்தபடி அவர்களை தான் பார்த்துக் கொண்டேயிருந்தான்.. 

 

அவளின் அழுகைக்குரல் மட்டும் தான் அனைவருக்கும் கேட்டது. 

 

“ஹலோ..” என்றான் அதட்டல் குரலில், 

 

அவனின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள் அவள்.. 

 

“இங்கே பாரு என்ன நடந்தது?.. பூட்டியிருந்த ரூம்க்குள்ள உன்னை அடைச்சி வச்சது யாரு?..” என்ற சயந்தன் புறம் திரும்பியவளின் பார்வை, அங்கிருந்த வாத்தியாரின் மேல் அழுத்தமாக பதிந்தது.. 

 

அவளின் பார்வை போன திசையில் நின்றிருந்தது அவளின் கணக்கு வாத்தியார் தான் மோகன் தான் நின்றிருந்தார்.. 

 

அவளின் பார்வையில் அவர் சற்று நடுங்கினாற் போன்று தெரிந்தது சயந்தனுக்கு.. 

 

“என்னாச்சின்னு கேட்குறேன்ல?..” என்றான் கம்பீரக்குரலில்.. 

 

“ஒன்னுமில்லை அப்பா.. விளையாட்டா, பசங்க அடைச்சி வச்சிட்டாங்க. வேற ஒன்னுமில்லை..” என்றவளின் பார்வை மறந்தும் சயந்தன் புறம் திரும்பவில்லை.. 

 

அவன் கண்களைப் பார்த்தாலே அவளுக்குப் பொய் சொல்ல வராது என்பது தான் முற்றிலும் உண்மை.. 

 

“அதான் அந்தப் பொண்ணே சொல்லிட்டாளே, விளையாட்டுப் பசங்க ஏதோ விளையாடுறோம்னு இப்படி பண்ணிட்டாங்க..” என கணக்கு வாத்தியார் முந்திக் கொண்டு சொல்லிட, சட்டென்று சயந்தன் கூர்மையான பார்வை அவரை துளைத்தெடுத்தது.. 

 

அவர் அவன் பார்வை அறியவில்லை.. ஆனால், அவனோ அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.. 

 

தடுமாறினார்.. நிலையற்ற கருவிழிகளின் அலைப்புறுதல், அதீத பதட்டம் என அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அவரைத்தான் குற்றம் சாட்டியது.. 

 

“நீங்க சொல்லுறதும் சரியா தான் சார் இருக்கு. வாங்களேன்.. நாம அப்படி போய் பேசலாம்..” என கணக்கு வாத்தியாரின் தோளின் மேல் கைப்போட்டவாறே, பள்ளியின் பின்பக்கம் இழுத்துக் கொண்டு வந்து நின்றான்.. 

 

“என்ன சார்?.. இங்கே கூப்பிட்டு வந்திருக்கீங்க?.” என்றவனின் கன்னத்திலேயே ஓங்கி அறைந்தான் சயந்தன்.. 

 

“என்னடா பண்ணின? என் யாதுவை?..” என்றான் கணீர்க்குரலில்.. 

 

“நான்.. நான்.. ஒன்னும் பண்ணலை சார்..” என்றவனின் சில்லு மூக்கை உடைத்திருந்தான் சயந்தன்.. 

 

“சார்.. சார் நான் சொல்லுறதை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க.... நீங்க நினைக்கிற மாதிரி இல்லை சார் நான்.. யாதிரா நல்லா படிக்கிற பொண்ணு சார்.. ஆனா கொஞ்ச நாளா எதுலையும் அவ கான்சன்ட்ரேஷன் பண்றதே இல்லை.. 

 

ஏன்னு கேட்டாலும் பதில் எதுவுமே சொல்லமாட்டேங்குறா.. அமைதியா போறா.. சில நேரம் ரொம்ப அழுகிறா.. ஏங்கி ஏங்கி அழுகிறா.. ஏன்னு யாருக்குமே புரியலை.. 

 

அதுனால நான் அவளை தனியா அழைச்சிட்டு ஸ்டாப் ரூம்ல வச்சிப் பேசினேன்.. 

 

அப்போ.. அப்போ.. நீங்க.. அவளைய்ய்ய் என்ற மோகனின் வார்த்தையில் உடல் விறைத்தது சயந்தனுக்கு.. 

 

என்ன சொன்னாஹ்?.. என்றான் அழுத்தமாக பல்லைக் கடித்துக் கொண்டு, 

 

“நீங்க அவளைக் காதலிக்கிறதாவும், கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறதாவும்..” என்றவனின் வார்த்தையில் சட்டென்று அவன் பற்றியிருந்த சட்டையை விட்டு விட்டான்.. 

 

“ஓஹோ.. எல்லாத்தையும் சொல்லிட்டாளா?..” என்றான் சுரத்தேயில்லாமல்.. 

 

தன்னைப் பற்றி இன்னொருவரிடம் பேசியிருக்கிறாள் என்றால், தன்னிடமிருந்து தப்பிச் செல்லத் தானே நினைக்கிறாள் என நினைக்கும் போதே மனம் இறுகியது அவனுக்கு.. 

 

“உங்களை பார்க்கவே அவளுக்குப் பிடிக்கலை சார்.. அதுனால நிறைய தடவை தற்கொலை..” என்றவரை அதிர்ந்து பார்த்தான் சயந்தன்.. 

 

“தற்கொலையா?..” என கேட்கும் பொழுதே அவனின் அழுத்தமான உதடுகள் காய்ந்து வறண்டுப் போனது.. 

 

அவள் இந்த முடிவை எடுப்பாள் என கனவில் கூட அவன் நினைத்ததில்லை.. 

 

“அது மட்டுமில்லை சார்.. அவளோட கையில காம்பஸ் வச்சி கிழிச்சி வச்சிருக்கா..” என்றவரின் வார்த்தையில், யாரோ இதயத்தை சம்மட்டியால் அடித்தாற் போன்று வலித்தது அவனுக்கு.. 

 

சத்தியமாக அவன் இப்படியொரு கோணத்தில் யோசிக்கவேயில்லை.. 

 

என் யாதுவா? இப்படி செய்தது?.. என்றவனுக்கு அப்பொழுது தான் சட்டென ஒரு யோசனை தோன்றியது.. 

 

அவளை அறைக்குள் போய் பார்க்கும் பொழுது கால்களை ஸ்ட்ராங்காக கட்டியிருந்தாள்.. கையை பற்களின் உதவியைக் கொண்டு கட்ட முயற்சித்திருக்கிறாள் என்பது நன்றாக புரிந்தது.. 

 

அப்படியென்றால், அந்த அறைக்குள் சென்று தற்கொலைக்குத் தான் முயன்றிருக்கிறாள் என்பதை நினைக்கும் போதே நெஞ்சில் சுளீரென்ற வலி அவனுக்கு.. 

 

“ஏன்டி..” என மனதோடு கேட்டுப் பார்த்தவனுக்கு, அவளின் வலி நிறைந்த கண்களே கண் முன்னாடி தோன்றியது.. 

 

கசங்கிய முகத்தோடு நின்றிருந்தவனிடம், “அவளை விட்டுருங்க சார்..” என்றார் மோகன். 

 

“நீ மூடு.. உன்கிட்ட நான் கேட்டேனா. உன் வேலையை மட்டும் பாரு.. வந்தீயா வாத்தியார் வேலையை பார்த்தீயான்னு மட்டும் இரு.. எரிச்சல் கூந்தலை கிளப்பாதே..” என கடுமையாய் சாடினான்.. 

 

“உங்களுக்கே நீங்க பண்றது அசிங்கம்னு தெரியலை சார்.. அவ உங்க தங்கச்சி..” 

 

“கூட பிறக்கலை தானே..” என்றானே பார்க்கலாம்.. 

 

அதிர்ந்து விட்டார் மோகன்.. 

 

இவன் என்ன சொல்ல வருகிறான்?.. உடன் பிறக்கவில்லை என்றால், எந்தப் பெண்ணின் மீது ஆசை வைப்பானா?.. 

 

“அப்படின்னா, ஏன் சார் உங்க சித்*..” என சொல்லி முடிக்கவில்லை.. வாயை பேர்த்து விட்டான் சயந்தன்.. 

 

“என்னடா பேசுற?.. என்ன பேசுற?.. என் சித்தி எனக்கு அம்மா மாதிரி.. மாதிரியென்ன டா.. அம்மா தான்.. நான் அவுங்களை அந்த இடத்துல வச்சித்தான் பார்க்குறேன்.. இனிமேலும் பார்ப்பேன்..” 

 

“அப்போ யாதிராவை எப்படி சார் உங்களால காதலிக்க முடியும்?..” 

 

“உனக்கென்ன டா தெரியும்?.. என்னைப் பத்தி.. எனக்கும் யாதுவுக்கும் இருக்கிற உறவைப் பத்தி.. முறைதவறி வாழுற அளவுக்கு எங்க அம்மா என்னை வளர்க்கலை போதுமா..” என்றவனின் கர்ஜனையில் அடங்கிப் போனார் மோகன்.. 

 

அவ்வளவு தீட்சண்யமான பார்வையை அவன் மீது செலுத்தினான் சயந்தன்..  

 

என் யாதுவைப் பத்தி.. என் சித்தியைப் பத்தி அசிங்கமாவா பேசுற?..” என்றவனின் கோபம் இன்னும் அடங்க மறுக்க, மோகனின் வயிற்றிலேயே ஓங்கி ஒரு குத்தி விட்டான்.. 

 

இங்கே பாரு, என்னைக்கு இருந்தாலும் அவ தான் என் பொண்டாட்டி.” என்றவன், மோகனின் அதிர்ந்த பார்வையை பார்த்து நக்கலாக புன்னகைத்தபடி சென்று விட்டான்.. 

 

அவன் அங்கு வந்த நேரம் யாருமே இல்லை.. 

 

“என்னடா இது?.. அம்புட்டு பயலும் தெறிச்சி ஓடிட்டாய்ங்க..” என புலம்பியபடி தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு மறுபடியும் ஸ்டேஷனுக்கே சென்று விட்டான்.. 

 

உள்ளே வந்ததும் எஸ்.ஐ அசோக் ஓடி வந்தார்.

 

“சார்.. உங்களைப் பார்க்க வாசுதேவன் சார் வந்திருக்கார்..” என்றான் சற்று பணிவுடன்.. 

 

‘அந்த பொறம்போக்கு எதுக்கு இங்கே வந்தான்?..’ என மனதுக்குள் நினைத்தபடி, வெளியே இறுகிய முகத்துடன் தன் நாற்காலியில் அமர்ந்தான் சயந்தன்.. 

 

வாயெல்லாம் புன்னகையுடன் உள்ளே நுழைந்தான் வாசுதேவன்.. அவன் அருகில் நின்றிருந்தாள் யாதிரா பாவை.. 

 

வாசுதேவனுடன் உள்ளே நுழைந்த யாதிராவை புருவம் சுருக்கிப் பார்த்தான் சயந்தன்.. 

 

“எப்படி இருக்க மச்சான்?..” என்றவனை அடித்து நொறுக்கிட மனம் துடித்தது.. போலீஸ் ஸ்டேஷன் என்பதால் அமைதியாக இருந்தான்.. 

 

அவன் பார்வையோ ஒரு இன்ச் கூட யாதிராவை விட்டு அகலவில்லை.. 

 

“எதுக்கு இவன் கூட வந்த?..” என்றான் கர்ஜனைக்குரலில், 

 

“என்ன மச்சான்?. உன் தங்கச்சி தான் ஷை(shy) டைப்னு தெரியாதா” என்றவனின் கரமோ, யாதிராவின் இடதுகையை தன்னோடு பிடித்துக் கொண்டது.. 

 

“என்ன மச்சான்?.. அப்படி பார்க்குறீங்க?..” என்றவனை ஆழ்ந்து பார்த்தவன், 

 

“கையை எடு டா.. பொறம்போக்கு.. **************” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் யாதிரா.. 

 

“டேய்ய்ய். என்னடா சொன்னஹ்?..” என வாசுதேவன், சயந்தனை அடிக்கச் செல்ல, சட்டென்று அவன் கை வளைவினில் நின்றிருந்தவளை தன் புறம் இழுத்து நிறுத்தியிருந்தான் சயந்தன்.. 

 

நொடி பொழுதில் நிகழ்ந்த மாற்றத்தில் விதிர் விதிர்த்துப் போனாள் யாதிரா.. 

 

இத்தனை கெட்ட வார்த்தைகளை வாழ்க்கையில் அவள் கேட்டதே இல்லை.. 

 

அதுவும் சயந்தன் வாயால் வருவதைப் பார்த்தவளுக்கு இனம் புரியாத பயம் மனதைக் கவ்விக் கொண்டது.. 

 

திடீரென்று தன்னிடம் இருந்து யாதிராவை இழுப்பான் என வாசுதேவனே எதிர்பார்க்கவில்லை.. 

 

“ஏய்ய்ய். அவளை விடுடா?..” என வாசுதேவன், யாதிராவின் கையைப் பிடித்திழுக்க.. அவளின் முன்பாக நின்றிருந்தான் சயந்தன்.. 

 

அவனைத் தாண்டிச் சென்று அவளைத் தொடுவதென்பது முடியாத ஒன்று என அவனுக்கேப் புரிந்தது.. 

 

“இங்கே பாரு சயந்தா, அவளை விடு..” என்றான் சற்று கறாரான குரலில்.. 

 

“என்னை விடுங்க..” என்றாள் மெல்லிய குரலில் யாதிரா.. 

 

அவளைத் திரும்பிப் பார்த்தவனின் கூர் விழிகளின் தாக்கத்தில் தானாக தலை கவிழ்ந்துக் கொண்டாள்.. 

 

அவளின் கைகளில் இருந்த காம்பஸை பார்த்தவள், சட்டென்று அவன் கையை விட்டு விட்டான்.. 

 

“யாதிரா இங்கே வா..” என்ற வாசுதேவன் அருகில் சென்று நின்றுக் கொண்டாள் யாதிரா.. 

 

“நான் இவரை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.. இன்னும் நாலு மாசம் கழிச்சு எங்களுக்குக் கல்யாணம்..” என தலை கவிழ்ந்து சொன்னவளை பார்த்து அட்டகாசமாய் புன்னகைத்தான் சயந்தன்.. 

 

அவரின் சிரிப்பில் புரியாமல் பார்த்தனர் இருவரும்.. 

 

‘லூசாயிட்டானோ..’ என்பது தான் வாசுதேவன் எண்ணம்.. 

 

அவனின் சிரிப்பு கூட ஒருத்தியை அச்சுறுத்துமா?.. அச்சுறுத்தியது அவளை.. 

 

அவன் முறைத்தால், கோபப்பட்டிருந்தால் கூட அவள் இவ்வளவு பயந்திருக்க மாட்டாள்.. 

 

அவன் சிரிப்பு இவளுக்கு உயிர் வரை சென்று தாக்கியது.. 

 

விழிகளில் ஒரு வித கலவரத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் யாதிரா.. 

 

“காங்கிராட்ஸ்..” என கை நீட்டியவனைக் கண்டு அதிர்ந்து போயினர் வாசுதேவனும், யாதிராவும்.. 

 

நிச்சயமாக தன்னை அடைய ஏதாவது செய்வான், கோபப்படுவான் என்று தான் யாதிரா நினைத்துக் கொண்டிருந்தாள். 

 

அவன் இப்படி வாழ்த்துக்கள் சொன்னதே அவளுக்கு அதிர்ச்சி தான்.. 

 

“ஏன் வாழ்த்துக்கள் சொன்னான்?..” என நினைத்துக் கொண்டே, ஸ்டேஷனை விட்டு யாதிரா வெளியே சென்றாள்.. வாசுதேவனும் வெளியேற முயன்றிட, 

 

“உன் கல்யாணம் நடக்கவே நடக்காது..” என்றான் சயந்தன் இறுகிய குரலில்.. 

 

“ஓஹ்.. சார்க்கு அவ்வளவு நம்பிக்கையா?.. அவரோட கள்ளக்காதல் மேல..” என்றவனின் சட்டையை கொத்தாக பிடித்தான்.. 

 

“யாருடா கள்ளக்காதல் பண்றா?.” என்றவனின் கைகளை மெல்ல விலக்கி விட்ட வாசுதேவன், 

 

“இங்கே பாரு சயந்தா, நான் யாதிராவை பார்க்குறதுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை.. ஆனா உன் கண்ணு அவ மேலன்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷமே பிக்ஸ் ஆகிட்டேன்.. அவ எனக்கு வேணும்.. நீயும் முயற்சி பண்ணு.. நானும் முயற்சி பண்றேன். யாரு அவளை அடையுறோம்னு பார்த்துக்கலாம்..” என்றான் மீசையை நீவிக் கொண்டு சற்று கர்வமாக. 

 

என்னதான் சயந்தன் யாதிராவை காதலித்தாலும், அவர்களின் உறவு முறை, அவன் காதலை தடுத்து நிப்பாட்டி விடும் என்பதை அவன் அறிந்தே வைத்திருந்தான்.. 

 

வாசுதேவன் சென்ற பின்னும் இவனுக்கு கோபம் அடங்குவேனா என்றது.. 

 

‘இவன் எல்லாம் என்னை பேசுறது மாதிரி வச்சிட்டல்ல டி..’ என சினம் அடங்காமல் அங்குமிங்கும் கத்திக் கொண்டிருந்தவன், விறு விறுவென வெளியேறிச் சென்றான்.. 

 

அவன் நேராக சென்றது என்னவோ டாஸ்மாக்கிற்கு தான்.. நன்றாக குடித்து விட்டு, நேராக வீட்டிற்குள் நுழைய, அத்தனை பேரும் தூக்கத்தில் தான் இருந்தனர்.. 

 

இரவு பனிரெண்டு மணியை தாண்டியிருந்தது.. தள்ளாட்டமாய் நடுக்கத்துடன் உள்ளே நுழைந்தவன் நேராக சென்றது என்னவோ யாதிராவின் அறைக்குத் தான்.. 

 

யாதிராவின் அறைக்கதவை தட்டிக் கொண்டே இருந்தான்.. 

 

நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவள், அரக்க பரக்க எழுந்து கதவை திறக்கவும், அவளை தள்ளிக் கொண்டே உள்ளே நுழைந்தான் சயந்தன்.. 

 

புதிதாக அறையை நிரப்பித்த மதுபான வாடையில் முகத்தை சுழித்தாள் யாதிரா.. 

 

“குடிச்சிருக்கீங்களா?..” என படபடக்கும் இதயத்துடன் கேட்டவளின் தோள்பட்டையை அழுத்தமாக பற்றினான் சயந்தன்.. 

 

அவன் பற்றிய வேகத்தில் தோள்பட்டை வலி எடுத்தது.. 

 

“விடுங்க.. எனக்கு வலிக்குது..” 

 

“வலிக்கட்டும் டி. நல்லா வலிக்கட்டும்..” என்றவனின் கண்கள் சொருகி, பேச்சே குழறலாக தான் வந்தது.. 

 

“இப்போ நீங்க விடப்போறீங்களா? இல்லையா?..” 

 

“ஏன் நான் விட்டுட்டா, அந்த வாசு பின்னாடி போறதுக்கா?..” என்றவனை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தாள் யாதிரா.. 

 

‘பாருடா என் அயித்தே பெத்த முத்தாரத்துக்கு கோபம் எல்லாம் வருது..’ என மனதோடு நினைத்துக் கொண்டவனுக்கு வாசுதேவனுடன் அவள் ஸ்டேஷனில் நுழைந்தக் காட்சி தான் கண் முன்னால் விரிந்தது.. 

 

“ஏன்டி.. அவன் கூட வந்த?.. ஹான் ஏன் வந்த?..” என கேட்டுக் கொண்டே நிற்க முடியாமல் சரிந்து விழுந்தவன் அப்படியே சரிந்து யாதிராவின் மேல் விழுந்தான்.. 

 

அவனின் பாரத்தை சுமக்க முடியாமல் பெண்ணவள் அப்படியே சரிந்து படுக்கையில் விழுந்தாள்.. 

 

“நீ அவனை கல்யாணம் பண்ணிக்க நான் விடமாட்டேன் டி..” என்றவனை தன்னை விட்டு விலக்கிட முயன்றாள்.. 

 

ஒடிசலான தேகம் கொண்டவளால் சுத்தமாக முடியவில்லை.. 

 

“ப்ச்ச்.. விடுங்க அண்ணா..” என்றவளின் அடுத்த வார்த்தைகளை தன் இதழ்களுக்குள் முழுங்கிக் கொண்டான்.. 

 

யாதிராவின் வலி மிகுந்த கண்கள் கண்ணீரை தானாக சொறிந்தது.. 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top