வஞ்சகன் - 4

 

(@madhusha-novels)
Member Moderator
Joined: 5 months ago
Messages: 8
Thread starter  

அத்தியாயம் 4

 

“யாதிராஆஆ..” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பினாள் யாதிரா.. 

 

சயந்தனோ மிக சாதாரணமாக தான் அமர்ந்திருந்தான்.. குரல் கேட்ட அடுத்த நிமிடமே கண்டுகொண்டான் அதை யாரென்று.. 

 

வேறு யார்.. அவனைப் பெற்ற புண்ணியவதி தான்.. 

 

“பெரியம்மாஆஆ..” என கேவலுடன் அவனிடமிருந்து விடுபட முயன்றிட, அடுத்த கணமே கால்களால் சிறைப்பிடித்திருந்த அவளை விட்டு விட்டான்.. 

 

சட்டென்று ஓட முயன்ற யாதிராவை, அவள் இடையோடு கையிட்டு தன்னோடு நெருக்கமாக அணைத்துக் கொண்டான்.. 

 

கிட்டத்தட்ட அவளின் பின்தேகம், அவன் முன் தேகத்தோடு உரசி நின்றது.. திகைத்துப் போனாள் யாதிரா.. 

 

அதைப் பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலியின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.. 

 

இதுவரை இப்படி எல்லை மீறியதில்லை அவன்.. தோளில் மட்டும் தான் கைப்போடுவான். அதற்கே துடித்துப் போவாள் பெண்ணவள்.. 

 

அன்று இரவு முழுதுவம் அவளுக்கு உறக்கமே வராது.. ஆனால் இன்று தன் இடையோடு தவழ்ந்த உரமேறிய கைகளைப் பார்த்தவளுக்கு அச்சத்தில் உடல் நடுங்கியது..

 

“டேய்ய்ய். விடுறா அவளைய்ய். பன்னி மாடே விடுடா.. என் பொண்ணை…” என அஞ்சலி வேகமாக சயந்தனின் கைகளை உதறிவிட, உரமேறிய கைகள் அவனுடையது.. சிறிதும் அசைக்க முடியவில்லை அவரால்.. 

 

மாறாக அவனின் அணைப்பு இன்னும் இன்னும் இறுகியது.. அவளின் எலும்புகளை ஊடூருவி செல்வதைப் போன்ற இறுக்கமாக அணைத்திருந்தான்..  

 

“எடுபட்ட நாயே… விட்றா என் புள்ளைய்ய்ய்யய.. ஏங்க.. ஏங்க.. சந்தோஷ்.. லெட்சுமி” என்றவரின் கூச்சல் குரலில், அத்தனை பேரும் ஓடி வந்தனர்.. 

 

அப்பொழுதும் அவன் சிறிதும் அசைந்தானில்லை.. 

 

மொட்டை மாடிக்கு விரைந்து வந்த மூவருக்கும் பேரதிர்ச்சி.. சயந்தனின் இறுகிய அணைப்பிற்குள் யாதிரா இருந்தாள்.. 

 

“டேய்ய்ய்.. என் பொண்ணை விட்டுறா?..” என கோபத்தில் ஓடி வந்த சந்தோஷ், வலுக்கட்டாயமாக பிரித்தெடுத்தார் தன் பெண்ணை.. 

 

யாதிராவிற்கு தன் உடலின் ஒட்டுமொத்த சக்தியையும் யாரோ உறிஞ்சு எடுத்தாற் போன்று வலித்தது அவளுக்கு.. 

 

அப்படியொரு இறுகிய அணைப்பு.. 

 

சப்பென்று ஒரு அறை விட்டிருந்தார் கெளதம் சயந்தனிற்கு.. 

 

அந்த இடமே ஒரு கணம் நிசப்தமாகியது.. 

 

இறுகிய தன் கைகளை பிரிக்கவேயில்லை சயந்தன். நிச்சயமாக கெளதம் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், மண்டையை ரெண்டாக பிளந்திருப்பான்.. ஆனால் எதிரில் இருப்பது அவனுக்கு உயிர் கொடுத்தவராயிற்றே.. 

 

அந்த ஒரு காரணம் போதுமே, அவனின் கைகளை கட்டிப் போடுவதற்கு.. 

 

பயத்தில் உடல் நடுங்க நின்றிருந்தாள் யாதிரா.. அப்பொழுதும் அவன் பார்வை அவளிடத்தில் மட்டும் தான்.. 

 

அவளை அப்படியே விழுங்கி விடுவதைப் போன்று பார்த்தவனின் ஊசி குத்தும் பார்வையில் பெண்ணவள், தலை நிமிர்ந்து பார்க்கவே அச்சம் கொண்டாள்.. 

 

“சந்தோஷ், நீ பாப்பாவை அழைச்சிட்டு உள்ளே போ..” என்றதும், யாதிராவும் தன் தந்தையை கட்டியணைத்தபடியே படிகளில் இருந்து கீழே இறங்கிச் சென்றாள்.. 

 

படிகளில் இறங்கிக் கொண்டிருந்தவள், அச்சத்தில் மெல்ல திரும்பிப் பார்க்க.. சட்டென்று அவளைப் பார்த்து கண்ணடித்தான் சயந்தன்.. 

 

ஒரு கணம் திடுக்கிட்டுப் போனாள் யாதிரா.. 

 

“பொறுக்கி..” என இதழ்கள் முணுமுணுக்க, சயந்தன் இதழ்களில் சிறு கர்வ புன்னகை.. 

 

“பார்க்க அமுக்கிணி மாதிரி இருந்துக்கிட்டு என்னையே திட்டுறீயா?..” என்றவனை, கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டிருந்த தந்தையையும், தாயையும் சிறிதும் கவனிக்கவில்லை. 

 

மொட்டைமாடிக்கு அந்தப்புறம் தாவிக் குதித்து, அங்கிருந்த நாவல் பழ மரத்தைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கிச் சென்றவனை தான் கண் சிமிட்டாமல் பார்த்தனர் பெற்றவர்கள் இருவரும்.. 

 

பின்னே புள்ளைய பெத்தால் பரவாயில்லை.. குரங்குக்குட்டி பெற்றால், அது பாட்டுக்கு குஸ்தியடித்துக் கொண்டு மரத்திற்கு மரம் தாவி ஓடி தான் செல்லும்.. 

 

சுவரின் மேல் கைகளை வைத்து சயந்தன் தாவிக் குதிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த கெளதம், பக்கவாட்டாக நின்றிருந்த தன் மனைவியை ஏகத்துக்கும் முறைத்தார்.. 

 

அவரின் முறைப்பில் திருதிருவென வீழித்தாள் அஞ்சலி.. 

 

காலம் காலமாக மகன்கள் செய்யும் சேட்டைக்கு அப்பாவி பலிகடாவாகிப் போவது அவனை பெற்ற தாய் தானே.. 

 

“ஏன்டி இவன் பொறக்கும் போது குறுக்கால எதுவும் கிடந்தீயா என்ன?..” என்றவரை திரும்பிப் பார்த்து முறைத்தார் அஞ்சலி.. 

 

“இல்லை இப்படி குரங்கு சேட்டை பண்றானே ன்னு கேட்டேன்..” என நழுவிச் சென்று விட்டார்.. 

 

அங்கு தந்தையின் அணைப்பில் உயிர் கரைய அழுதுக் கொண்டிருந்தாள் யாதிரா.. 

 

“என்னால முடியலை ப்பா… நாம வேற வீட்டுக்குப் போயிடலாம்..” என்றவளை அதிர்ந்து பார்த்தார் சந்தோஷ்.. 

 

இதுவரை இது போல் எண்ணம் அவருக்கில்லை..

 

“கொஞ்ச நாள் பொறுத்துக்கோ டா.. சிக்கீரமா வெளியே போயிடலாம்..” என்றவருக்கு, அண்ணனைப் பிரிய வேண்டுமென்பதே மிகப்பெரிய வலியைக் கொடுத்தது.. 

 

ஆனாலும் தன் மகளுக்காக அந்த வலியையும் தாங்கிக் கொள்ள தயாராகி விட்டார்.. 

 

அவர் சென்றால் அனைத்தும் முடிந்து விடுமா?.. அவர்களை விடணுமே விடாக்கண்டன் அவன்.. கண்டம் விட்டு கண்டம் சென்றாலும், அனகோண்டா பாம்பு போன்று யாதிராவை முழுங்கி விட்டுத் தான் மறு வேலை பார்க்கும் சயந்தன் என்கின்ற மலைப்பாம்பு.. 

 

அன்றைய சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்திருந்தது.. 

 

சயந்தனும் அதன் பின் வீட்டிற்கு வந்ததில்லை.. ப்ரணவ் வீட்டிலேயே தங்கிக் கொண்டான்.. 

 

மாலை வேளையில் கமிஷனர் ப்ரணவ்வின் முன்பாக நின்றிருந்தனர் சயந்தன், வாசுதேவன்.. 

 

இருவருமே ஒருவரையொருவர் பார்க்காமலே, அனல் அடித்தது அந்த இடத்தில்.. 

 

என்னதான் பதவிக்கு மரியாதை கொடுத்தாலும், அவர்கள் இருவருக்கும் எப்பொழுதும் ஆகாது.

 

உட்காருங்க ரெண்டு பேரும் என்றதும் இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டே எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.. 

 

வாசுதேவன் கர்ம சிரத்தையாக ப்ரணவ் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.. 

 

சயந்தனுக்குத் தான் அது சுட்டுப் போட்டாலும் வராதே, டேபிளுக்கடியில் அமர்ந்து ஜாலியாக சோசியல் மீடியாவைப் பார்த்துக் கொண்டிருந்தான்... 

 

“நான் உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டதுக்கு காரணம்.. நீங்க தான் இந்த கேஸ்க்கு பொருத்தமா இருப்பீங்க..” என்றவரை புருவம் இடுங்க பார்த்தனர் இருவரும்..

 

“என்ன கேஸ்?..” என்றான் வாசுதேவன்.. 

 

“ஒரு பொண்ணுக்கு எஸ்கார்ட் டுயூட்டி பார்க்கணும்” என்ற ப்ரணவ்வை கண்களாலேயே எரித்தனர் மற்ற இருவரும்..  

 

“சார் என்னால முடியாது?..” என வாசு தேவன் சொல்லி முடிக்கவில்லை.. 

 

“என்னால மட்டும் முடியும்னு நான் சொன்னேனா?.. கண்டிப்பா என்னாலையும் முடியாது..” என்றான் சயந்தன் சற்று அலட்சியமான குரலில்.. 

 

“ஏய்ய்ய. என்ன திமிரா?..” என எகிறினான் வாசுதேவன்.. 

 

“ஆமா.. திமிரு தான்.. வெத்து வேட்டு உனக்கே இவ்வளவு திமிரு இருந்தா, எனக்கு எவ்வளவு இருக்கும்..” என்றவனின் சட்டையை கொத்தாக பிடித்திருந்தான் வாசுதேவன்.. 

 

“யாரு டா வெத்து வேட்டு?..” என சீறியபடி வந்தவனின் கழுத்தை நெறித்திருந்தான் சயந்தன்.. 

 

“அடச்ச்சை.. நிறுத்துங்கடா ரெண்டு பேரும்..” என்ற ப்ரணவ்வீன் கணீர்க்குரலில் சற்று அடங்கித்தான் போயினர்.. 

 

“நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்.. சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் சண்டை மட்டுமே போட்டுக்கிட்டு..” என்றவர்  நாற்காலியில் சற்று தளர்வாக அமர்ந்தார்.. 

 

“என்னாச்சி மாமா?..” என்றான் சயந்தன்.. 

 

“என்னாச்சி அங்கிள்..” என்றான் வாசுதேவன்.. 

 

“இந்த போட்டோவுல இருக்கிற பொண்ணைப் பாருங்க..” என்றதும், வேகமாக டேபிள் மேல் இருந்த பொண்ணைப் பார்த்தனர் இருவரும்.. 

 

மிஸ் இந்தியா அழகிப் பட்டம் வென்ற தாரக் ரூபி.. 

 

“அழகா தான் இருக்கா மாமோய்ய்ய்ய்.. வேணும்னா கட்டிக்கோ.. என்ன ரொம்ப சின்னப் பொண்ணா இருக்கு” என்ற சயந்தனை தீயாய் முறைத்தார் ப்ரணவ்.. 

 

“நீ அதைப் பத்தியெல்லாம் பேசுறீயா டா?..” என கண்ணாலேயே அவனை சுட்டெரித்தார் ப்ரணவ்.. 

 

“அங்கிள் நீங்க சொல்லுங்க, இவனுக்கு ஏதாவது பேசலைன்னா.. பொழுதே போகாது..” என்றான் தீர்க்கமான குரலில் வாசுதேவன்.. 

 

தங்களைப் பற்றி அனைத்தும் அறிந்த ஒருவர், ஒரு பொண்ணுக்கு பாடிகார்ட் வேலை பார்க்கச் சொல்கிறார் என்றால், அது சாதாரணமாக இருக்காது என்பது அவர்களுக்கு நன்றாக தெரிந்தது.. 

 

“சரி மாமோய்ய்ய்.. நீ அத்தையைப் பத்தி சொல்லு?..” என்றான் சயந்தன் நக்கலும், கிண்டலும் கலந்த குரலில்.. 

 

“நான் என்ன எனக்கு பொண்ணு பார்த்துருக்கேன்னு சொன்னேனா டா. இவ மிஸ் இந்திய அழகி மட்டுமில்லை.. டாப் மோஸ்ட் பணக்காரரான குப்தா குரூப்ஸோட ஒரே வாரிசு..” 

 

“ஸ்த்து.. ஸ்த்து.. நானும் அடுத்த வாரிசு படத்துல இருந்து பார்த்துக்கிட்டே இருக்கேன் மாமோய்ய்ய்.. பெரிய பணக்காரங்க எல்லாம் ஒரேயொரு புள்ள தான் பெத்துக்கிறாங்க.. ஏன் இரண்டாவது புள்ள எல்லாம் அவுங்களுக்குப் பொறக்காதா?..” என்றான் தாடையை நீவிக் கொண்டே.. 

 

“டேய்ய்ய். சீரியஸா கேளு டா..” என்றார் ப்ரணவ்.. 

 

“சரி மாமோய்ய்ய்.. சொல்லு.. மிஸ் வேர்ல்ட் அழகி.. வீட்டுக்கு ஒரே வாரிசு.. ஏகப்பட்ட சொத்து.. ப்ராக்கெட் போட்டா காலம் முழுக்க உக்காந்து சாப்பிடலாம்..” என்றவனைக் கண்டு நரநரவென பல்லைக் கடித்தனர் இருவரும்.. 

 

“ஏன் நீ ப்ராக்கெட் பண்ணப் போறீயா?..” என்றார் அவனைப் போலவே.. 

 

பழக்கதோஷம்ங்க வேற ஒன்னுமில்லை.. தானாக நக்கலும், கிண்டலும் வந்து ஒட்டிக்கொண்டது..

 

“இல்லை மாமோய்ய்ய். என் மனசு ஹவுஸ்புல்.. வேணும்னா இவனைச் சொல்லுங்க.. இவன் தான் ப்ரீயா இருக்கான்..”

 

“டேய்ய்ய்..” 

 

“ஏய்ய்ய்..” என மறுபடியும் சண்டைக்கு ஆயத்தமாக.. 

 

“டேய்ய்ய்ய்.. கொஞ்ச நேரம் நீ பேசாம இருந்து தொலை டா..” என ப்ரணவ் ஏதோ சொல்ல வாயெடுக்க, அந்நேரம் திபுதிபுவென உள்ளே நுழைந்தனர் சந்தோஷூம், கெளதமும்.. 

 

பதட்டத்தின் உச்சத்தில் நின்றிருந்தவர்களை புருவம் இடுங்க பார்த்தான் சயந்தன்.. 

 

“என்னாச்சி அங்கிள்?..” என பணிவாக கேட்டது என்னவோ வாசு தேவன். 

 

நம்மாளு சயந்தன் சேரில் இருந்துக் கூட எழுந்துக் கொள்ளவில்லை.. 

 

அம்புட்டு மரியாதை பெற்றவர்கள் மீது.. 

 

“ப்ரணவ்வ்வ்வ.. நம்ம யாதிரா..” என்றதும் தான் தாமதம், வேகமாக அவர்கள் இருவரையும் மறைத்தாற் போன்று நின்றிருந்தான் சயந்தன்.. 

 

“யாதுவுக்கு என்ன?..” என்றவனின் குரலில் அப்படியொரு இறுக்கம்.. 

 

“உன்கிட்ட நாங்க ஏன்டா சொல்லணும்?..” என கெளதம், அவனைத் தாண்டிச் செல்ல முயன்றவரின் முன்பாக மறைத்தாற் போன்று நின்றான் சயந்தன்.. 

 

“யாதுவுக்கு என்னன்னு கேட்டேன்?..” என்றவனின் குரல் மட்டுமல்ல உடலும் விறைத்தது.. 

 

“அவளைக் காணோம்..” என்றதும் தான் தாமதம், சட்டென்று கெளதமின் சட்டையை கொத்தாக பற்றினான் சயந்தன்.. 

 

“என் பொண்ணு, என் பொண்ணுன்னு வார்த்தைக்கு வார்த்தை சொன்னா மட்டும் பத்தாது.. அவளை பத்திரமா பார்த்துக்கவும் தெரியணும்.. அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்.. உங்களை வெட்டிக் கூறு போடுறேன்..” என்றவனின் முகமோ கோபத்தில் செந்தணலாய் தகித்தது..

 

வாசுதேவனுக்கே சற்று அதிர்ச்சி தான். தங்கையின் மேல் இவ்வளவு பிரியமா என வியக்காமல் இருக்க முடியவில்லை..  

 

“நான் அவளை அழைச்சிட்டு வர்றேன்..” 

 

“டேய்ய்ய். கொஞ்சம் பொறுமையா இரு டா..” என்ற ப்ரணவ்வின் வார்த்தைகளை எங்கே அவன் நின்று கேட்டான்.. 

 

விறு விறுவென வெளியே வந்தவன், கோபத்தில் பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்.. ஒரே கிக்கில் பைக் ஸ்டார்ட் ஆகியது.. கண்மண் தெரியாத கோபத்தில் வண்டியை எடுத்தவன், யாதிரா படிக்கும் பள்ளியின் வாசலில் வண்டியை நிறுத்தினான்.. 

 

அவனைக் கண்டதுமே வாட்ச்மேன் கேட்டை திறந்து உள்ளே நுழைந்தான்.. போலீஸ் யூனிபார்மில் இருந்தான் அல்லவா..  

 

உள்ளே நுழைந்தவனின் கம்பீரமான நடை, அழுத்தமான பார்வை அத்தனை பேரையும் கொத்திக் கொல்ல தயாராக இருந்தது.. 

 

மாலை வேளை என்பதால் பனிரெண்டு வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே ஸ்டடி என நிறுத்தி வைத்திருந்தனர்…

 

வாத்தியார்கள் அத்தனை பேரும் அங்கு தான் நின்றிருந்தனர்.. சில மாணவர்களும் கும்பல், கும்பலாக நின்றிருந்தனர்..

 

அத்தனை பேர் முகத்தில் அதீத பதட்டம் தான் தெரிந்தது.. 

 

சிலர் வருத்தப்பட்டனர்.. சிலர் பரிதவித்தனர்.. 

 

தலைமை ஆசிரியரும் வருத்தத்துடன் தான் அங்கு நின்றிருந்தார்..  

 

“சார்..” என யாதிராவின் வகுப்பு ஆசிரியர் அழைக்க, 

 

“யாதிரா எங்கே டா?..” என்றவனுக்கு மரியாதை என்பது சிறிதும் தோன்றவில்லை.. 

 

மதியம் மூணு ப்ரீயட் அவ க்ளாஸ்ல தான் இருந்திருக்கா, அதுக்கப்புறம் தான் காணாம போயிருக்கா.. சார்.. நாங்க எல்லா இடத்துலையும் தேடிட்டோம் காணும்..” என்ற வாத்தியாரின் சட்டையை கொத்தாக பற்றியவன், 

 

“அவ மட்டும் கிடைக்கலை.. உன் வீட்டுல ஒருத்தர் விடாம எல்லாரையும் ஜெயிலுக்குள்ள வச்சிடுவேன் ஜாக்கிரதை..” என்றவன், பள்ளி மொத்தத்தையும் அலசி ஆராய ஆரம்பித்தான்.. 

 

பாத்ரூம் கூட விடவில்லை. எங்கேயும் அவள் இல்லை.. வேகமாக சிசிடிவியை ஆராய்ந்தான்.. அவள் பள்ளியை விட்டு வெளியே சென்றதற்கான அடையாளமும் இல்லாமல் இருந்தது.. 

 

புருவங்கள் முடிச்சிட்டது அவனுக்கு.. 

 

அங்கேயும், இங்கேயும் கண்களை அலைய விட்டான்.. எங்கும் அவளில்லை.. 

 

“ஆமா, அது என்ன ரூம்?..” என்றான் பள்ளியில் இருந்து தூரத்தில் தெரிந்த ஒரு கட்டிடத்தைப் பார்த்து.. 

 

“சார்.. அது ஸ்டோர் ரூம்.. பல வருஷமா அதைப் பூட்டி தான் வச்சிருக்கோம்.. அந்த ரூமை யாரும் திறக்க முடியாது சார்.. அவ்வளவு ஸ்ட்ராங்கான பூட்டு” என்றவர்களின் பேச்சை காதில் கூட வாங்காமல், வேகமாக அந்தக் கட்டிடத்தை நோக்கிச் சென்றான்.. 

 

பூட்டியிருந்த கதவை படாரென்று பிடித்திழுக்க, கதவு தானாக திறந்துக் கொண்டது..

 

வேகமாக அந்த ஆசிரியரை திரும்பிப் பார்க்க, ‘இது தான் ஸ்ட்ராங்கான பூட்டா’ என கண்ணாலேயே அவரை எரிப்பது போல் பார்த்வன், வேகமாக அறைக்குள் நுழைந்தான்.. 

 

அறையெங்கும் இருட்டாக இருந்தது.. தன் செல்போனின் டார்ச்சை உயிர்ப்பித்தவன், அறையின் மூலை, முடுக்கெங்கும் தேடினான்.. 

 

ஒரு பெஞ்சின் அடியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுத்திருந்தாள்  யாதிரா.. 

 

“யாதுஊஊ.. யாது..” என வேகமாக அவனருகில் சென்றவள், அவள் கை, கால்களை அவிழ்த்து விட்டான். 

 

“யாது.. யாது..” என கன்னம் தட்டி அவனை அழைக்க.. 

 

“சையு.. சையு..” என அரை மயக்க நிலையில் அவன் பெயரை தான் அழைத்துக் கொண்டிருந்தாள்.. 

 

“ஏய்ய்ய.. கண்ணை முழிச்சுப் பாருடி..” 

 

ஏதோ நடந்திருக்கிறது என்பதை அறிந்தவன், அவளை தன் கையில் ஏந்திக் கொண்டு வேகமாக வெளியே வந்தான்.. 

 

அவன் வெளியே வரவும், ஒருவனின் முகம் மட்டும் பயத்தில் வெளிறியது.. 

 

“சார்.. என்னாச்சி யாதிராவுக்கு?..” என பதட்டத்துடன் வேகமாக ஒடி வந்தார் தலைமை ஆசிரியர்.. 

 

“சாதாரண மயக்கம் தான்..” என்றவன், நின்ற நிலையிலேயே அவளையும் நிற்க வைத்தான்.. 

 

அங்கிருந்த மாணவன் ஒருவன் தண்ணீரைக் கொண்டு வந்து நீட்டினான்.. 

 

அவன் நீட்டிய தண்ணீரை வாங்கி அவள் முகத்தில் தெளித்தான் சயந்தன்.. 

 

அவன் தெளித்த தண்ணீரில் லேசாக சுயம் உணர்ந்தவள் மெல்ல கண்களை விரித்தாள்.. 

 

அவளின் கண்களுக்கு அங்கிருந்த யாருமே கண்ணில் படவில்லை.. 

 

தன் நெஞ்சாக்கூட்டில் பொத்தி வைத்திருந்த சயந்தன் மட்டுமே கண்ணில் பட்டான்.. 

 

தாய் மடி தேடும் கன்றுக்குட்டியினைப் போன்று.. அவனை அப்படியே இறுக்கமாக அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.. 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top