தூகை 33

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 232
Thread starter  

33

 

அன்று…!

 

“இல்ல இல்ல இருக்காது.. இருக்காது.. என் கணவன் என்னை விட்டு வேறு பெண்ணை பார்க்க கூட மாட்டான். இது ஏதோ.. தவறுதலாக.. இல்லை.. ப்ரண்ட்லியா இருக்கும்..!” இன்று அதனை அவளுக்கவளே மனதை தேற்றிக் கொள்ள முயன்றாள்.

 

ஆம் முயல மட்டும் தான் முடிந்தது

 

“ஆமா.. ஆமா.. அப்படித்தான் இருக்கும் இந்த ஆப்ல தான் நிறைய பேரு அவருக்கு பிரண்ட்ஸ் இருக்காங்களே..! அதுல கேஷுவலா பேசுறதா இருக்கும்” என்று அவள் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டாலும்,

 

அவளின் அறிவு அப்படி இருக்காது என்று அழுத்தமாக எடுத்துரைத்தது. நடுங்கும் விரல்களோடு படபடக்கும் மனதோடு மீண்டும் அந்த சாட்டுக்குள் நுழைந்தவள் கண்ணில் விழுந்தது அவர்களுக்கு இடையேயான கடைசி உரையாடல் அழுத்தமாக..

 

 

“ஹாய் ஸ்வீட்டு.. ஸ்வீட் மார்னிங்” என்று இருந்தது.

 

அதைப் படிக்கும் போதே கண்கள் கலங்கியது. மனதெல்லாம் வலித்தது. கைகள் அந்த சிறு ஃபோனை கூட பிடிக்க முடியாமல் நடுங்கியது. 

 

கண்ணீர் சூழ்ந்த கண்களோ ஃபோனின் திரையைப் பார்க்க முடியாமல் தடுமாற‌‌.. 

 

மூக்கை உறிஞ்சினாள் கொண்டே அவசரமாக புறங்கையால் இரு விழிகளையும் துடைத்துக் கொண்டவள், அன்னார்ந்து மேல்முச்சி வாங்கியபடி தன்னை நிதானப்படுத்திக் கொள்ள எவ்வளவோ முயன்றாள்.

 

ஆனால் நிதானம் கடுகளவு கூட அவளிடம் இல்லை. இனிமே இப்படி ஒரு சாட்டை பார்த்து பிறகு எங்கணம் ஒரு மனைவியால் நிதானமாக இதை கையாள முடியும்?

 

பின் தனக்குத்தானே “ரிலாக்ஸ் மேகா.. ரிலாக்ஸ் மேகா..” என்று கூறிக்கொண்டு அந்த சேட்டின் ஆதி முதல் அந்தம் வரை படிக்கலானாள்.

 

இருவரின் உரையாடலும் ஆரம்பித்தது என்னவோ சாதாரணமாக லைவ் லிங்க்கில் பகிர்வதில் இருந்து தான். வெறும் ப்ரண்ட்லியான சாட் கொஞ்சம் கொஞ்சமா வேறு விதமாக மாறி இருந்தது.

 

சாதாரணமாக நம் மீது அக்கறை கொள்ளும் ஒருவர் மீது நாம் காட்டும் தோழமை சற்றே மாறும் அல்லவா?

அப்படி தான் மாறி இருந்தது நிரஞ்சனுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையேயான உரையாடல்கள்.

 

அதன் பின் அந்த பெண்ணுக்கு ஸ்வீட் என்று நிரஞ்சன் செல்ல பெயர் வைத்திருந்தான்.

 

“நீ ரொம்ப ஸ்வீட். அதனால உன்ன ஸ்வீட்னு தான் கூப்பிடுவேன்…” என்று அவன் ஆரம்பித்த பிள்ளையார் சுழியை அவள் மாற்றினாள்.

 

“என்ன காலையிலிருந்து மெசேஜ் காணோம்” என்று கோப ஸ்மைலிகளோடு அவள் அனுப்ப..

 

“டைட் வொர்க் ஸ்வீட்டீ..!” என்று ஸ்மைலிகளோடு அவன் திருப்பி அனுப்ப..

 

“மெசேஜ் பண்ண முடியாத அளவுக்கு வொர்க் கா?” என்று அவளிடம் வருத்தமான ஸ்மைலிகள்..!

 

“ஒர்க் டென்ஷன்ல இருந்தேன். உன்னோட மெசேஜ்ல சட்டென கூலாகிட்டேன். பிசினஸ்ல.. டைம் எல்லாம் பாக்கவே கூடாது.. உழைப்பு மட்டும்தான் பாக்கனும் ஸ்வீட்டு” என்று அவன் புன்னகைக்கும் ஸ்மைலிகளை அனுப்பி இருக்க..

 

”உடம்பக்கூட பாக்காம உழைச்சா… உடம்புக்கு ஒன்னும் கேடு வந்தராதா நிரு?? நாம என்ன ரோபோவா.. ?? நேரா நேரத்துக்கு சாப்பிடனும்.. தூங்கனும்.. கொஞ்சம் ஓய்வெடுக்கனும்.. !!” அவள் அக்கறையாக சொல்லிக் கொண்டிருக்க.. அவர்களது உரையாடல் இப்படியாக சென்றிருந்தது. 

 

அவளின் அக்கறையில் இவன் சந்தோஷமாக இருப்பது போல மெசேஜ் செய்திருக்க.. விரக்தியான புன்னகை வதனியின் வதனத்தில்..!

 

இப்படி பொதுவான அக்கறையான வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக தடம் புரண்டன.. நிரஞ்சனையும் மெல்லச் மெல்ல அவன் வாழ்க்கை நெறியில் இருந்து வழுவச் செய்தது.

 

“என் நிரு செல்லத்துக்கு மூக்குதான் ரொம்ப செக்ஸி..!” இது அவள்..!

 

“அடிப்பாவி நான் லைவ்வுல வரும்போது சைட் அடிச்சியா நீ?” இது அவன்..!

 

“பின்ன.. இவ்வளவு ஸ்மார்ட்டா இருந்தா சைட் அடிக்க மாட்டாங்களா? நாங்களெல்லாம் அழகை ரசிப்போம் நிரு” என்று அவள் செல்லம் கொஞ்சிருந்தாள்.

 

“அது சரி..! என் ஸ்வீட்டுக்கு எனன்ஐ அவ்வளவு பிடிக்குமா?” என்றவனின் கேள்வியில், அது நீ படுத்துக் கொண்டிருந்த வதனியின் மனம் வேகமாக அடித்துக் கொண்டது.

 

 

“ரொம்ப.. ரொம்ப.. உன்ன பாக்கறப்ப எல்லாம் என்னை உன் மூக்குதான் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணும்.. !! ஒரு நாளைக்கு புடிச்சு நறுக்குனு கடிச்சு வெக்கனும்னு நினைச்சுப்பேன்” என்று அவள் செல்லமாக நிரஞ்சனை‌ நிரு என்று அழைக்க.. சந்தோஷ வானின் உச்சிக்கே சென்றான் நிரஞ்சன்.

 

இந்த அன்பான அக்கறை.. 

சின்ன சின்ன மோகம் கலந்த பேச்சு..

எல்லாமே இருவரையும் ஒன்றாக இணைத்தது.

 

அவள் நிரு என்பதும்..

இவன் ஸ்வீட்டு என்பதும்.. 

 

அடுத்தடுத்த உரையாடலின் தொடக்கமே இதுவாகி விட.. முகத்தை மூடி வாய் விட்டு கதறினாள் வதனி. 

 

“ஆஆஆஆஆ…. அம்மா… என்னால தாங்க முடியலையே..! என் புருஷனா இது? என்னை விட்டு இனனொருத்தியிடம் இப்படி பேசியது? அம்மாஆஆஆ” என்று அவளின் கதறல்கள் எல்லாம் அந்த அறையிலேயே அடங்கி போயின.

 

எவ்வளவு நேரம் அழுது இருப்பாளோ அதற்கு மேல் கண்களிலிருந்து தண்ணீரே வரவில்லை. இந்த பேரதிர்ச்சியில் அவளுக்கு மூச்சு வாங்கியது. சரியாக மூச்சு கூட விட முடியவில்லை.

 

மூச்சு வாங்க வாங்க அந்த உரையாடலை மீண்டும் ஒரு முறை படித்தவளுக்கு மனது அத்தனை வலித்தது. 

 

எதில் நான் குறை வைத்தேன்?

என் காதலிலா?

என் அன்பிலா?

என்‌ கடமையிலா?

இல்லை கட்டிலிலா?

 

எதில் குறை வைத்தேன்? எதற்கு அவளிடம் சென்றாய்?

 

மெல்லிய சாரலாய் நேசத்தை பொழிந்து.. அடுத்தவர் இதயத்தை தொடுவது போல பேசி.. அன்பான அக்கறையான வார்த்தைகளை வீசி.. இருவரும் அந்த ஆப்பில் நெருங்கி இருந்தனர். சில அந்தரங்க ஜோக்குகளை பகிர்ந்து இருந்தான் நிரஞ்சன். அவளும் அவனுக்கு அதே போல சில ஜோக்களை பகிர்ந்து இருந்தாள்.

 

என்னதான் அது ஜோக்காக இருந்தாலும் அந்தரங்கம் அந்தரங்கம் தானே?

 

என்னிடம் சொல்லிய பேசிய பகிர்ந்த அந்தரங்கத்தை இன்னொருத்தியிடம் அதுவும் யார் என்று தெரியாத ஒருத்தியிடம் பகிர்வாயா?

 

எப்படி முடிந்தது உன்னால்? 

 

இவர்களின் வார்த்தைகளில் விரசம் இல்லையென்றாலும் ஒரு ஆணால் அதுவும் மணமான ஆணால் மனைவியை‌ தவிர்த்து மற்ற பெண்ணிடம் எப்படி இவ்வாறு பேச முடிகிறது? என்று வதனியால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

அப்போ நீ என் மீது காட்டிய அன்பு பொய்யா? நேசம் பொய்யா? காதல்.. பொய்யா??? என்று கண்ணீர் மல்க நிரஞ்சனின் உரையாடலை பார்த்திருந்தாள், கண்களில் கண்ணீரும் இதயத்தில் இரத்தமும் வழிந்தது அவளுக்கு..!

 

கண்களை துடைத்தவள் தன் ஃபோனில் இருவரின் உரையாடல் இரண்டையும் ஒன்று விடாமல் போட்டோ எடுத்துக் கொண்டாள். அதனை உடனே தன் மெயிலுக்கு அனுப்பிவிட்டு ஃபோட்டோகளை நிரந்திரமாக அழித்து விட்டாள்.

 

ஃபோன் முன்னே எப்படி இருந்ததோ அப்படியே சார்ஜரில் வைத்துவிட்டு மெத்தையில் படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் வேக வேகமாக உள்ளே வந்தான் ஆதவ் நிரஞ்சன்.

 

சாப்பாட்டை கூட டைன்னிங் டேபிளில் வைக்காமல் கையோடு எடுத்துக் கொண்டே தங்கள் அறைக்குள் நுழைந்தவன்‌ பார்வை முதலில் சென்றது ஃபோனிடம் தான்.

 

அவன் எப்படி சார்ஜ் போட்டு சென்று இருந்தானோ, அதேபோல இருக்க ஆசுவாசமான மூச்சு அவனிடம்..! மனைவியை பார்க்க.. வதனி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

 

மேகா.. மேகா.. என்று அவளது தோளை தொட்டு மெல்ல அழைக்க.. 

 

வதனியின் உடம்பு இப்பொழுது கணவனின் தொடுதலில் தீயாய் சுட்டது அவளை..! அடர் அமிலத்தை ஊற்றியது போல காந்தியது..!

 

தூக்கத்திலேயே தள்ளி விடுவது போல அவனது கைகளை தட்டி விட்டவள் “ரொம்ப தலைவலியா இருக்கு. கண்ணே முழிக்க முடியல என்னால.. கொஞ்ச நேரம் தூங்குறேன். இன்னைக்கு ஒரு நாள் நீ பார்த்துக்கோங்க..” என்று விட்டு கண்ணை இறுக்க முடிகொள்ள,

 

அவனுமே நிஜமாக அவளுக்கு உடம்பு சரியில்லை என்று நினைத்தவன், “சாப்பாடு வாங்கிட்டு வந்து இருக்கேன் மேகா.. சாப்பிட்டு தூங்கு” என்றான் கன அக்கறையாக.

 

“எனக்கு இப்ப வேணாம். ரொம்ப ரொம்ப வலிக்குது. நான் தூங்கணும்..! வலியெல்லாம் போக நல்லா தூங்கி எந்திரிக்கணும். நீங்க கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாம போங்க..” என்று கண்ணீர்குரல் எரிந்து விழுந்தாள்.

 

எப்பொழுதும் இது மாதிரி எரிந்து விழ மாட்டாள் வதனி. கணவன் மீது கோபம் வந்தாலும் பேசாமல் முறைப்பாளே தவிர இப்படி எல்லாம் பேசமாட்டாள். 

 

இன்று இப்படி எரிந்து விழவும் நிஜமாலுமே அவளுக்கு உடல் நிலை சரியில்லை என்று நினைத்த நிரஞ்சன் “சரி.. சரி.. நீ தூங்கு. நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணல” என்று மெல்ல அரை கதவை சாத்திவிட்டு வெளியே சென்று விட்டான். 

 

சாப்பாடு வைத்தவன் அன்னைக்கு தனியாக வாங்கி வந்திருந்த இடியாப்பத்தை தட்டில் வைத்து தண்ணீர் சகிதம் எடுத்துக் கொண்டு அவர் அறைக்கு சென்றான்.

 

அவன் சென்றதும் அவசரமாக தன் மொபைலுக்கு வந்த மெயில் நோட்டிபிகேஷனை டெலிட் செய்தாள் வதனி.

 

பொதுவாக வதனியின் ஃபோனை எடுத்து எல்லாம் ரொம்ப நோண்ட மாட்டான் நிரஞ்சன். அதுவும் சமீப காலமாகும் அவனுக்கு அவன் வேலையே சரியாக இருக்க.. எதையுமே கண்டுகொள்ளாமல் இருந்தான்.

 

அதிலும் இவளை கண்காணிக்கவில்லை. அப்படி கண்காணிக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு தவறு நடந்திருக்க வேண்டும் தானே?

 

நிரஞ்சனின் எண்ணத்தில் மேகவதனி என்பவள், அப்பழுக்கற்ற உண்மை அன்பு கொண்ட மனைவி.. உண்மையான காதலி அன்பான தாய்.. நிதர்சனமும் அதுதானே??

 

அன்று முழுவதும் அமைதியாக படுத்து நன்றாக உறங்கி எழுந்தாள் புண்பட்ட மனதை வெளியில் காட்டுக் கொள்ளாமல் அமைதியாக வலம் வந்தாள். பிரேமா கூட அவள் முகத்தை பார்த்து “இரண்டு நாள் ரெஸ்ட் எடுக்கிறதுன்னா எடுத்துக்கோ வதனி. உன் முகமே சரியில்ல” என்று வருத்தப்பட்டார்.

 

நிரஞ்சனுக்கு மனைவிக்கு மனதில் இருந்த வலியை தெரியவில்லை. “உடல் ஏதேனும் வலிக்கிறதா? ஏதும் செய்கிறதா?” என்று கேட்டுக் கொண்டே இருக்க…

 

அவளுக்கோ அவனை பார்க்கவே பிடிக்கவில்லை. “நீங்க தொணதொணு பேசாம என்னை கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாம இருங்க. அது போதும்” என்று பேச்சை கத்தரித்து சென்று விட்டாள்.

 

அடுத்து வந்த நாட்களில் அவனிடம் அதைக் கேட்டு சண்டை பிடிக்கவில்லை..! சத்தம் போடவில்லை..! மெதுவாக அவனை அவதானித்தாள், இதுவரை இல்லாத கோணத்தில்…

 

எப்போதும் நிரஞ்சனிடம் தெரியாத அந்த மாற்றங்கள் இப்பொழுது இன்னும் தெளிவாக தெரிந்தது. 

 

தான் எவ்வாறு ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று நினைக்க நினைக்க தன் மீதே கோபம் வந்தது வதனிக்கு.

 

நான் எப்படிப்பட்ட ஏமாளியாக இருந்திருக்கிறோம் என்று நினைத்து உள்ளம் மருகினாள்..! 

 

 

அது ஏமாளித்தனம் இல்லை அவன் மீது கொண்ட நம்பிக்கை..! அவன் காதல் மீது கொண்ட நம்பிக்கை..

!

அவர்களின் தாம்பத்தியத்தின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை..!

 

அத்தனை நம்பிக்கையையும் அடித்து நொறுக்கி இருந்தான்‌ நிரஞ்சன்..!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top