அத்தியாயம் 3
கவலை தோய்ந்த முகத்துடன் தோட்டத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தனர் சந்தோஷ், கெளதம், அஞ்சலி, மகாலெட்சுமி நால்வரும்..
அவர்களின் முகத்தில் அவ்வளவு கவலை.. சந்தோஷின் அருகில் அமர்ந்திருந்த மகாலெட்சுமியின் கண்களில் கண்ணீர் வந்துக் கொண்டேயிருந்தது..
“அழாதே லெட்சுமி..” என்ற கணவனின் தாேளில் சாய்ந்தவருக்கு, இன்னும் இன்னும் அழுகை தான் வந்தது..
எப்படி அழுகை வராமல் இருக்கும்?.. சொந்த அண்ணனே தங்கையை மணந்து கொள்வேன் என சொல்வதை ஏற்றுக் கொள்ள மட்டுமில்லை, நினைத்துப் பார்க்கவே முடியவில்லை..
“சயந்தன் இப்படி பண்ணுவான்னு நான் கனவுல கூட நினைச்சதில்லைங்க.. நான் அவனை அஞ்சலி பையன் மாதிரியா நடத்துனேன்.. சொந்த பையன் மாதிரி தானே வளர்த்தேன்.. சித்தி.. சித்தின்னு எவ்வளவு உரிமையா பேசுவான்.. பழகுவான்.. அவன் போய் நம்ம பொண்ணை கல்யாணம்..” என தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார் லெட்சுமி..
“எனக்கும் அதே வலி தான் லெட்சுமி.. யாதிரா பிறந்ததும், முதல்ல கையில தூக்கினது அவன்தானே.. நான் இவளை என் கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பேன்னு சொல்லும் போது.. நான் அவ்வளவு சந்தோஷப்பட்டேன்.. ஆனா இப்போ..” என்றவருக்கு துக்கத்தில் தொண்டையடைத்தது..
சந்தோஷூம், லெட்சுமியும் அழுவதைக் கண்ட கெளதமிற்கு ஆத்திரத்துடன் கூடிய கோபம் தான் வந்தது..
அத்தனைக்குக் காரணம் தன் மகனாயிற்றே..
யாரால் தாங்கிக் கொள்ள முடியும் தன் மகன், தன் தம்பி மகளை விரும்புகிறான் என்பதை..
கண்களில் ஈரம் கசிந்தது அவருக்கு..
அவர்களின் கண்ணீரைப் பார்த்த அஞ்சலிக்கு, பெற்ற வயிறு பற்றி எரிந்தது..
“எல்லாம் என் மகனால்.. நான் பெத்து வைத்த சீமந்த புத்திரனால், வந்த வினை..” என தனக்குள்ளேயே மருக ஆரம்பித்தார்..
ஏனோ இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டிய பொறுப்பும் தனக்கிருக்கிறது என்று தான் நினைத்தார் அவர்..
“லெட்சுமி..” என சற்று மெல்லிய குரலில் அழைத்தார் அஞ்சலி..
வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே நிமிர்ந்தார் லெட்சுமி..
“எனக்கு ஒரு யோசனை தோணுது.. சொல்லவா?..” என்றார் அனைவரின் முகத்தையும் பார்த்தபடி,
அவர் கண்களில் சயந்தன் மேல் வைத்த அன்பைத் தாண்டி, ஒரு வித கலக்கமும் இருந்தது..
“ம்ம்ம.. சொல்லு..” என்றார் கெளதம்..
“நாம ஏன் யாதிராவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கக்கூடாது…” என்றார் சற்று தயக்கமான குரலில்,
“அறிவிருக்காடி உனக்கு?.. மைனர் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைப்பீயா?..” என எகிறிக் கொண்டு வந்தது என்னவோ கெளதம் தான்..
“இல்லை அக்கா சொல்லுறது தான் சரி.. யாதிராவுக்கு கல்யணாம் பண்ணி வைக்கலாம்” என தீர்க்கமான குரலில் சொன்னது என்னவோ லெட்சுமி தான்..
தன் மகளை சயந்தனிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமென்றால், அவளுக்காக ஒருவன் வர வேண்டும் என்று நினைத்தார்..
“என்ன பேசுற லெட்சுமி.. அவ மைனர் பொண்ணு..” என்றார் சந்தோஷ்..
“அதுக்கென்ன இப்போ.. நாம ஒன்னும் 17 வயசுப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறதில்லை.. அவளுக்கு 18 வயசாக, இன்னும் நாலு மாசம் இருக்கு.. அதுக்குள்ள நாம ஒருத்தனை தேடிப் கண்டுபிடிப்போம்.. அவன்கிட்ட நம்ம பிரச்சினையை சொல்லுவோம்.. நம்ம பொண்ணை நல்லா பார்த்துக்கிற பையன் கையில நம்ம பொண்ணை ஒப்படைக்கலாம்..” என்றார் கெளதம் சற்று ஆதங்கமான குரலில்..
“ஆமா அண்ணா, நம்ம சயந்தனை எதிர்த்து நிக்கிற ஒருத்தனை தான் நாம தேடிக் கண்டு பிடிக்குறோம்..” என்றார் சந்தோஷ்..
“மாமா, எனக்கு ஒரு பையனை தோணுது.. அவனை நாம ஏன் யாதிராவுக்கு பார்க்கக்கூடாது..” என்ற லெட்சுமியை புரியாமல் பார்த்தான் கெளதம்..
“யாருடி அந்த பையன்?..” என்றார் சந்தோஷ்..
“நம்ம வாசுதேவன்.. சயந்தனோட பேட்ஜ் தான் அவனும்..”
“ஆனா, அவனுக்கும் நம்ம சயந்தனுக்கும் சுத்தமா ஆகாது.. அவனை மாப்பிள்ளையா கொண்டு வந்தா, சயந்தன் எப்படி கல்யாணத்துக்கு சம்மதிப்பான்..” என்ற அஞ்சலியை திடுக்கிட்டுப் பார்த்தனர் மூவரும்..
“அவனோட சம்மதத்தோட இந்த கல்யாணம் நடக்கும்னு நீ நினைக்கிறீயா?.. உனக்கென்ன கிறுக்கு பிடிச்சிருக்கா?..” என்றார் கெளதம்..
“அப்போ, அவனுக்கு தெரியாம இந்தக் கல்யாணம் பண்ணப் போறோமா?..” என கேட்கும் பொழுதே அஞ்சலிக்கு சுருக்கென்று வலி உணர்ந்தார்..
ஏனோ அவனை மட்டும் இந்தக் குடும்பத்தில் இருந்து விலக்கி வைப்பது போன்ற உணர்வு வந்து போனது..
ஆனாலும் அதை வாய் விட்டு சொல்ல முடியவில்லை.. சூழ்நிலை அவர் வாயை கட்டிப் போட்டு வைத்திருந்தது..
“சரி அண்ணா, நாம போய் அந்தப் பையனை பார்த்துப் பேசிட்டு வருவோம்.. அவனுக்கும் சரின்னா சிக்கீரமா யாதிராவுக்கு கல்யாணம் பண்ணி வைப்போம்..” என்றார் சந்தோஷ்..
கெளதமிற்கும், சயந்தனிடம் இருந்து எப்படியாவது யாதிராவை காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கியது..
“கண்டிப்பா அவன் சரின்னு சொல்லுவான்னு தோணுது.. அப்படி சொல்லிட்டா, நாலு மாசம் முடிஞ்சதும் ரிஜிஸ்டர் மேரேஜ் பர்ஸ்ட் வச்சிப்போம்.. அப்புறம் நாம ஊரறிய கல்யாணத்தை பண்ணி வைக்கலாம்..” என்றார் சந்தோஷ்..
தன் மகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்.
அவரால் சயந்தன் பக்கத்தில் யாதிராவை வைத்து பார்க்கவே முடியாது.
கண்டிப்பா முடியாது..
அண்ணன் தங்கையுடன் இணைவது வெளிநாட்டுக் கலாச்சாரத்துக்கு ஒப்பானதாக இருக்கலாம்..
ஆனால் தமிழ் மண்ணிலே பிறந்து, தமிழ் மண்ணிலே ஊறி வளர்ந்த அவருக்கு, அது தீண்டத்தகாத ஒன்று..
அப்படியொரு சூழ்நிலை வந்தால், கண்டிப்பாக சயந்தனைக் கொல்லக்கூட தயங்க மாட்டார் அவர்..
ஆனால் அதை வெளிப்படையாக சொல்லி தன் அண்ணனை காயப்படுத்த அவருக்கு மனமில்லை..
இரவு நீண்ட நேரம் முழித்திருந்ததால் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவனின் காதில் ஜல், ஜல் என கொலுசொலி கேட்டது.
அந்தக் கொலுசொலி சத்தத்தைக் கேட்டதும், முகம் சுணங்கியது சயந்தனுக்கு..
“ப்ச்ச்ச்..” என சலித்தான் அவன்.. முகத்தை தலையணையில் அங்குமிங்கும் புரட்டினான்.. உறக்கம் மறுபடியும் வருவேனா என்றது..
“யாராவது நிப்பாட்டுங்க டா..” என சலித்தபடி எழுந்தவனின், காதில் இன்னமும் சலங்கை ஒலி கேட்டுக் கொண்டேயிருந்தது..
“இவளைய்ய்ய்.” என கோபத்தில் சிவந்து, பல்லை நரநரவென கடித்தபடி கட்டிலை விட்டு இறங்கியவன், நேராக மாடிக்கு தான் சென்றான்..
யாதிரா தான் ஆடிக் கொண்டிருந்தாள்.. பரதநாட்டியம்..
வழக்கமாக அவள் இங்கு தான் நடனம் ஆடுவாள் என்பதை, அவனும் அறிவான்..
ஒரு நாள் மட்டும் சிரிக்க…
ஏன் படைத்தான் அந்த இறைவன்…
என்று கேட்டது பூக்களின் இதயம்…
கண் பார்வை பறித்து எனைக் காணச் சொல்கிறாய்…
வெந்நீரை ஊற்றி ஏன் பூக்கச் சொல்கிறாய்…
ஊமையாய் மாற்றியே பாடவும் கேட்கிறாய்…
நான் சரியா இல்லை தவறா…
நான் கனவு எழுதி கலைந்து போன கதையா…
ஒரு நாள் மட்டும் சிரிக்க…
ஏன் படைத்தான் அந்த இறைவன்…
என்று கேட்டது பூக்களின் இதயம்…
உன் மீது சிந்தும் நீர் தீர்த்தம் ஆனதே…
உனைச் சேரும் சாம்பல் திருநீறும் ஆகுதே…
உருகியே கேட்கிறேன் அடுத்து என் பிறவியில்…
மனம் இறங்கி அருள் வழங்கி…
உன் காலில் படிகளாக பிறக்கும் வரம் தா…
முருகா என் சலனம் சலனம்…
தீர்க்க வேண்டும் முருகா…
இந்த ஜனனம் ஜனனம்…
போதும் போதும் முருகா…
உன் சரணம் சரணம் சரணம்…
சரணம் சரணம் சரணம் சரணம்…
சரணம் சரணம் சரணம் முருகா…
என நெஞ்சம் நெக்குறுகி, கண்கள் கலங்கி முருகனை மட்டுமே மனம் முழுவதும் தழுவியபடி அவள் ஆடிய கால்களுக்கு, மற்றொருவனாக இருந்திருந்தால், அவள் பாதங்களில் சரணாகதி அடைந்திருப்பான்..
ஆனால் இங்கு இருப்பவனோ ரசனை கெட்ட ஜென்மமாயிற்றே..
இவனோ முகம் முழுவதும் கோபத்தையும், கண்களில் அதீத எரிச்சலையும் தான் கொண்டு வந்திருந்தான்..
“ஏய்ய்ய்.. ச்ச்சீய்ய்ய.. நிப்பாட்டு..” என்றவனின் கர்ஜனைக்குரலில், நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்த கால்கள் அப்படியே ஒரு கணம் அசைவின்றி நின்று விட்டது.
சத்தியமாக அவள் இவனை எதிர்பார்க்கவில்லை என்பதை அவளின் அதிர்ந்த விழிகளே காட்டியது.
அவளின் முட்டை விழிகளை கண்டவனுக்கு, கோபம் காற்றாய் பறந்து தான் போனது..
‘கொல்லுறாளே.. ராட்சஷி..’ என முணகிக் கொண்டே அவளருகில் சென்றான்..
அவனைப் பார்த்ததுமே அவள் அழ ஆரம்பித்து விட்டாள்..
“ஆமா என்னஹ் நீ?. எப்போ பார்த்தாலும், அழுது வடிஞ்சு ஒப்பாரி வச்சிக்கிட்டு இருக்க?..” என்றவன், சுவரில் வேகமாக ஏறி அமர்ந்திருந்தான்..
அவளுக்கு அவன் பேசுவது சைனீஸ் பாஷை போன்று தெரிய, வேகமாக அங்கிருந்து ஓட முயன்றவளின் தன் இரு கால்கள் கொண்டு சிறைபிடித்தான்..
அவனின் அதீத நெருக்கத்தில் பெண்ணவளுக்கு அச்சத்தில் வேர்வை பூத்தது..
“என்னை விட்டுருங்க அண்ணா..” என்றாள் சிறு நடுக்கத்துடன்..
அவ்வளவு தான் மலையிறங்கிய மாரியாத்தா, மீண்டும் அவன் உடம்பில் வந்து புகுந்து கொண்டாள்..
“உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன். என்னை அண்ணா ன்னு கூப்பிடாதேன்னு..” என அவள் இரு தோள்களையும் அழுத்தமாக பற்றி, தன்னை நோக்கி பார்க்க வைத்தான்..
அவளுக்கு சாதாரணமாகவே வராத பேச்சு, அவனின் அதிரடியில் சுத்தமாக வரவில்லை..
அவள் குறுக்காக கட்டியிருந்த துப்பட்டாவை உருவி எடுக்க, சட்டென்று அவன் கைகளை தடுத்துப் பிடித்திருந்தாள் அவள்..
என்ன செய்யப் போகிறான் தன்னை.. ஏடாகூடாமாக எங்கேயாவது கை வைத்து விடுவானோ, என பெண்மைக்கே உண்டான அச்சம் அவள் முகத்தில் பரவி கிடந்தது..
அவள் விழிகளில் அவ்வளவு அச்சம்.. சொந்த வீட்டில் கூட ஒரு பெண் குழந்தைக்கு நிம்மதியில்லையா?. என மனம் முழுவதும் ஒரு தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவள்.. அடுத்த அவன் செய்கையில் எச்சில் தான் விழுங்கினாள் பெண் பாவையவள்..
அவள் நெற்றியில் பூத்த வேர்வை மொட்டுக்களை மெல்ல, தன் கையிலிருந்த துப்பட்டாவைக் கொண்டு துடைத்துக் கொண்டிருந்தான்..
அவன் மனதில் கல்மிஷமில்லை, காதல் மட்டுமே..
ஆனால் அவள் மனதில் பயம், அச்சம் மட்டுமே..
அவனின் அருகாமை தீயில் நிற்பதை போன்று தகிக்க வைத்தது.. சட்டென்று அவன் கையில் வைத்திருந்த துப்பட்டாவை வாங்கிக் கொண்டு பின்னால் நகர்ந்து செல்ல, அவளை தன் இரு கால்களாலேயே சிறை பிடித்திருந்தான் அவன்..
“ஏன்டி.. போலீஸ்காரன் என்கிட்டேயே தப்பிச்சு ஓட பார்க்குறீயா?..” என உறுமினான்..
அவளுக்கு யாராவது தன்னை இந்த கழுகிடம் இருந்து காப்பாற்றி செல்ல மாட்டார்களா என்ற எண்ணம் தான்..
“ஆமா.. உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.. நான் வீட்டுக்குள்ள இருந்தா, இந்த மாதிரிய த்தய்ய.. தக்கா.. ன்னு குதிக்காதேன்னு..” என்றவனைக் கண்டு பயத்தில் நா வறண்டது அவளுக்கு..
அவளே அதீத மன அழுத்தத்தில் தான், தனக்கு பிடித்த நடனத்தை ஆடிக் கொண்டிருந்தாள்..
அதையும் வந்து கெடுத்து விட்டானே கிராதகன் எனஉள்ளுக்குள்ளேயே அவனை வறுத்துக் கொண்டுதானிருந்தாள்.. ஆனால் அவள் முகமோ பயத்தில் வெளிறியபடி இருந்தது..
அமைதியாக நின்றவளை தான் அப்படியே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சயந்தன்..
விழிகளை இமைக்க மறந்த கணங்கள் அவை..
“எனக்கு இந்த பரதநாட்டியம், மா கோலம் போடுறது, அடுப்படியில போய் சமைக்கிறது, இந்த மாதிரி பொண்ணுங்களை எல்லாம் சுத்தமா பிடிக்காது..” என்றவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் யாதிரா..
இவை எல்லாம் யாதிராவின் வழக்கம்.. காலை எழுந்ததும் தாயுடன் சேர்ந்து கோலம் போடுவாள்.. பெரியம்மா சமைக்கும் பொழுது அவர்களுடன் கூட மாட உதவுவாள்..
பரதநாட்டியம் சிறு வயதில் இருந்தே அவளின் விருப்பம்..
தனக்காக என்று அவள் செய்து கொள்வது பரதநாட்டியம்..
‘இதெல்லாம் உனக்கு பிடித்தால் என்ன? பிடிக்காவிட்டால் என்ன?..’ என்பதை போல் ஒரு பார்வை பார்த்தாள் யாதிரா..
“என்னடி, உனக்குப் புடிச்சா என்ன?. பிடிக்காட்டி என்ன ன்னு?..” ஏளனமா பார்க்குறீயா?..”
அவள் எதுவுமே பேசவில்லை அமைதியாக இருந்தாள்..
“இப்படியே பார்த்து, பார்த்து தான்டி என்னைக் கொல்லுறே?..” என அவளின் அஞ்சன விழிகளை அழகா வருடிக் கொண்டிருந்தன அவன் கண்கள்..
“யாதிராஆஆ..” என்ற குரலில் அதிர்ந்து நின்றாள் யாதிரா.
