அத்தியாயம் 2
என்கவுண்டரில் சுட்டுப் போட்டிருந்த ஆறு பேரின் உடலையும் மார்ச்சூரிக்கு அனுப்பி வைத்திருந்தான் சயந்தன்..
அவர்களின் டீடெய்ல் ரிப்போர்ட்டை மேலிடத்தில் சப்மிட் செய்ய வேண்டும்.. எங்கெங்கே தோட்டாக்கள் துளைத்தது.. என்கவுண்டர் செய்ய வேண்டிய அவசியமென்ன? அதற்கான ஆதாரங்கள் என அத்தனையும் ரெடி பண்ண ஆரம்பித்தான் சயந்தன்..
நள்ளிரவு பத்து மணிக்கு அவன் போன் அடிக்கும் சத்தத்தில் தான் சற்று களைந்தான்..
வேலை என்று வந்துவிட்டால் சயந்தன் வெள்ளைக்காரன் தான்.. சக்கையாக பிழிந்து எலுமிச்சை ஜூஸ் எடுத்து குடித்து விடுவான்.. அம்புட்டு நேர்த்தியான வேலை செய்யக்கூடியவன்.
விரும்பிய வேலை என்பதாலோ, என்னவோ விருப்பமாக செய்தான்..
ஆபத்துக்கள் அவனை துரத்தி வந்த பொழுதும், அதைப் பார்த்து அஞ்சி நடுங்கும் ஆள் அவனில்லை..
கமிஷனர் என திரையில் தெரிந்த எண்ணைப் பார்த்ததும் சலித்துப் போனான் சயந்தன்..
“சுட்டுப் போட்டு முழுசா ஒரு நாள் ஆகலை.. அதுக்குள்ள நொச்சு, நொச்சுன்னு நோண்டுறதுக்கு போன் போட்ருவாய்ங்க..” என மனதுக்குள் கமிஷனரை வைதுக் கொண்டே போனை அட்டென்ட் பண்ணினான்..
“எங்கே இருக்க?..” என்ற கம்பீரக்குரல் தான் கேட்டது..
“ஹான்… சுடுகாட்டுல.. வர்றீங்களா?..” என மார்ச்சூரியை பார்த்துக் கொண்டே பேசினான் சயந்தன்..
“உன்னைய்ய சுடுகாட்டுக்கு அனுப்பினா தான் எனக்கு நிம்மதி.. எதுக்குடா பப்ளிக் ப்ளேஸ்ல என்கவுண்டர் பண்ண?..” என கர்ஜித்தார் கமிஷனர் ப்ரணவ ஈஸ்வரன்..
“ப்ச்ச்.. அதைப் பத்தி டீடெய்லா ரிப்போர்ட் ரெடி பண்ணி வைக்கிறேன்.. பார்த்து தெரிஞ்சுக்கோங்க.. உங்களுக்குப் பதில் சொல்லிட்டு இருந்தா, எனக்கு வாய் வலிக்கும்..” என போனை வைத்து விட்டான் சயந்தன்..
“இவனையெல்லாம் பெத்தாங்களா? இல்லை அமேசான்ல ஆர்டர் போட்டு வாங்குனாங்களான்னு தெரியலையே..” என புலம்பிக் கொண்டே, அவருக்கு வந்த மேலிடத்து காலை அட்டென்ட் பேசினார்..
முழுதாக அரை மணி நேரம் கடந்த பின்பு தலைவலி வந்தது மிச்சம் அவருக்கு..
“எப்படியாவது இவன்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்து பரமா..” என கையெடுத்து கும்பிட்டு இறைவனை வேண்டிக் கொண்டார்
அடுத்த நாள் விசாரணை என கமிஷன் அலுவலகத்தின் முன்பாக வந்திருந்தான் சயந்தன்..
“உங்க மனசுல என்ன நினைச்சிக்கிட்டு மிஸ்டர் சயந்தன்..” என கம்பீரக்குரலில் காட்டுக்கத்தலாக கத்திக் கொண்டிருந்த கமிஷனரை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் சேரில் சாய்வாக அமர்ந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தான் சயந்தன்..
“சயந்தன்.. சயந்தன்.. டேய்ய்ய்ய்.. பொறம்போக்கு..” என்றவரை கண நேரம் இமை உயர்த்தி ஒரு பார்வை பார்த்தவன், மறுபடியும் விளையாட ஆரம்பித்து விட்டான்..
“இவனைய்ய்ய்ய்..” என தன் சேரை விட்டு எழுந்தவர், வேகமாக வந்து அவன் கையிலிருந்த போனை வெடுக்கென்று பிடுங்கினார்.
“ப்ச்ச்ச. என்ன மாமோய்ய்ய் வேணும் உனக்கு?..” என்றான் த்ரிஷாவைப் போன்று ஹஸ்கி குரலில்..
அவனை கண்ணாலேயே பஷ்பமாக்கினார் ப்ரணவ்..
நாற்காலியில் இன்னும் சாய்வாக தளர்ந்து அமர்ந்து.. கைகள் இரண்டையும் பின்னோக்கி சாய்த்து நெட்டி முறித்தவாறே எழுந்து நின்றான் சயந்தன்..
“என்ன மாமோய்ய்..” என்றான் மீண்டும் கில்மா குரலில்..
“அதான் டா, அந்த மாமாங்கிறதுனால நீ பண்ற அட்டூழியத்தை எல்லாம் பொறுத்துக்கிட்டு இருக்கேன்.. என்னடா பண்ணி வச்சிருக்க?..” என்றவரின் குரலில் அவ்வளவு சீற்றம்..
“ஏன் என்ன பண்ணி வச்சிருக்கேன்னு உனக்குத் தெரியாதா?..” என்றவனின் பார்வையோ டேபிளில் மேல் இருந்த நாளிதழில் தான்.
அதில் மாலை வேளையில் அவன் நடத்திய என்கவுன்டரை பற்றித் தான் நார் நாராக கிழித்து தொங்க விட்டிருந்தனர் மீடியா ஆட்கள்..
“காவல் துறையின் அலட்சியம்”
“பொது மக்களின் உயிரைக்கூட பொருட்படுத்தாமல், தங்கள் பகையை தீர்த்துக் கொண்டது காவல்துறை.. ஏதோ ரவுடிகள் எல்லாம் நல்லவர்கள் போன்று முத்திரையிடப்பட்டிருந்ததை அலட்சியமாக பார்த்தான் சயந்தன்..”
பல பக்கங்களுக்கு காவல்துறையை நார் நாராக கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருந்தனர் மீடியா ஆட்கள்..
“ப்ச்ச்.. என்ன மாமா வேணும் உனக்கு?.. இப்போ எதுக்கு இவ்வளவு கோபம்?.. இது என்ன புதுசா?..” என்றான் சற்றும் அலட்டிக் கொள்ளாமல்..
“நான் அதெல்லாம் கேட்கலை டா.. மீடியாவை பத்தி எனக்குத் தெரியும்.. அவுங்களை எப்படி சமாளிக்கணும்னு எனக்கும் தெரியும்.. நீ அந்த பேப்பரை எடுத்துப் பாரு..” என்றதும், கண்கள் சுருங்கி அந்தப் பேப்பரை எடுத்துப் பார்த்தவனின் விழிகள் அட்டகாசமாய் விரிந்தது..
“மாமோய்ய்ய்.. வழக்கமா என் போட்டோ மட்டும் வரும்.. இன்னைக்கு என் பொண்டாட்டி போட்டோவும் சேர்ந்து வந்து இருக்கு... இதெல்லாம் யாரு எடுத்தது?.. எனக்கு இந்த போட்டோவை வாட்ஸப்ல அனுப்பி விட சொல்லேன்..” என வாய் விட்டு நகைத்தபடி கேட்டான்..
“டேய்ய்ய். பொறுக்கி.. பண்ணாடை.. அவசரத்துக்கு பொறந்தவனே.. என்னடா பண்ணி வச்சிருக்க?..” என்றார் சற்று காட்டமான குரலில்..
“ஏன் பார்த்தா தெரியலை.. இது நான்.. இது யாது பாப்பா..” என்றான் அலட்சியமாக..
“டேய்ய்ய்ய்.. இந்த விஷயம் மட்டும் வீட்டுக்கு தெரிஞ்சா சும்மா இருப்பாங்களா சொல்லு.. அந்தப் பொண்ணை ஏன்டா டார்ச்சர் பண்ற?..” என தவிப்புடன் கேட்டார் ப்ரணவ்..
“மாமா.. அவுங்களுக்கு பயந்து என் காதலை எல்லாம் ஒளிச்சு மறைச்சு வைக்க முடியாது..”
“அப்படியென்ன டா பொல்லாத காதல்.. ஹான்.. கன்ட்ராவிக் காதல் இது.. இதெல்லாம் வெளியே காதல்னு சொன்னா.. அசிங்கம் டா” என்றவருக்கு சற்று சீற்றம் தான்..
இவன் புரியாமல் பேசுகிறானே என்று..
“எப்படியிருந்தாலும் அவ தான் என் பொண்டாட்டி.. போண்டா டீ.. எல்லாமே.. சோ நீ ஓவரா பில்டப் பண்ணாம வேலையை மட்டும் பாரு.. அவளுக்கு 18 வயசானதும், நான் தாலி கட்டி தூக்கிட்டுப் போயிடுவேன்..” என்றவனை அதிர்ந்து பார்த்தார் ப்ரணவ்..
“டேய்ய்ய்.. என்னடா சொல்லுற?. அவ பாவம் டா.. ஊமைப்பொண்ணு.. வாய் திறந்து நாலு வார்த்தை பேசவே நானூறு தடவை யோசிக்கும்” என்றவரை எரிப்பது போல் முறைத்தான் சயந்தன்..
“என் பொண்டாட்டியை ஊமை, கீமைன்னு சொன்ன.. அவ்வளவு தான் உனக்கு.. நாம நாலாயிரம் வார்த்தை பேசுனா, பாவம் அவ நாலு வார்த்தை பேசுவா.. அதுக்காக ஊமைப்பொண்ணுன்னு சொல்லுவீயா நீ?.. அப்படியே சாவடிச்சிடுவேன் பார்த்துக்கோ..” என கமிஷனரையே மிரட்டி விட்டு வெளியேறினான் சயந்தன்..
வீட்டிற்குள் பயத்தின் உச்சத்தில் தன் அன்னையை கட்டிப் பிடித்து அழுதுக் கொண்டிருந்தாள் யாதிரா..
ஹாலில் இருந்த மிகப்பெரிய டிவியில் யாதிராவும், சயந்தனும் அணைத்திருக்கும் படம் தான் தெரிந்தது..
மீடியாக்கள் எப்பொழுது எங்கிருந்து இதை எடுத்தார்கள் என்பதை அறியவே முடியவில்லை..
அவ்வளவு நேர்த்தியாக போட்டோவை க்ளிக் செய்திருந்தனர்..
அதைப் பார்த்த கணத்தில் இருந்து அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது அவளுக்கு..
உடம்பெல்லாம் கம்பளி பூச்சி ஊறிய உணர்வு அவளுக்கு..
“யாதிராஆஆஆ..” என அழுகையுடன் தேம்பி தேம்பி அழுதார் மகாலெட்சுமி..
யாதிராவின் அன்னை.. அன்னையின் அழுகை அவளையும் பலவீனப்படுத்தியதோ? என்னவோ?..
அவளுக்கு அழுதாலோ, சந்தோஷமாக இருந்தாலோ பேச்சு வராது..
“ஆஆஅ..” என்ற கதறலுடன், அவரைக் கட்டியணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள் யாதிரா…
“அந்தப் பொறுக்கிக்கு இதே வேலையா போச்சி, எப்பவும் உன்னைக் கஷ்டப்படுத்தி பார்க்கிறான்.. அண்ணன் வர்றேன்னு சொல்லியிருக்கான்” என்றார் காட்டமான குரலில் சந்தோஷ்.. யாதிராவின் தந்தை..
கண்களில் நீர் மளுக்கென்று வந்தது..
“யாதிரா குட்டி..” என்ற பெரியப்பாவின் குரலில் ஓடிச்சென்று அவரின் மார்பில் சாய்ந்து கதறியழுதாள் யாதிரா..
சரியாக வாய் பேச முடியாத காரிகையவள், அவர் நெஞ்சில் முட்டியழ, பெறாத பிள்ளைக்காக இதயமோ பாறாங்கல்லாய் கனத்தது..
“அவனைய்ய்ய்.. அவன் உயிரோட இருக்கிறதுனால எல்லா பிரச்சினையும் பண்ணிட்டு இருக்கான்.. இன்னைக்கே கொன்னு போடுறேன்..” என அருவாளை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு தாண்டிச் சென்றுக் கொண்டிருந்த கெளதமை வேகமாக பிடித்து இழுத்தார் சந்தோஷ்..
“ஏங்க.. ஏங்க.. நில்லுங்க..” என அழுதுக் கொண்டே ஓடி வந்தாள் அஞ்சலி..
“அண்ணா. கொஞ்சம் பொறுமையா இருங்க..” என்றார் சந்தோஷ்..
“என்னடா பொறுமையா இருக்கிறது?.. இதுக்கு மேல எப்படி பொறுமையா இருக்கிறது.. ஹான்.. இந்த மாதிரி கேவலமான ஜென்மம் எல்லாம் உயிரோட இருக்கவேக் கூடாது.. அவன் யாதிராவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லும் போதே அவனை வெட்டிப் போட்டுருக்கணும்.. ” என்றவர் வெளியே செல்ல முயன்றிடும் அதே வேளையில்.. போலீஸ் ஜீப் கம்பீரமாக உள்ளே நுழைந்தது..
போலீஸ் ஜீப்பைக் கண்டதும், அவரின் கோபமோ பல்மடங்கு பெருகியது..
ஜீப்பில் இருந்து கம்பீரமாக இறங்கினான் சயந்தன்.
அவன் கண்களில் தப்பாமல் பட்டது, கெளதமின் கைகளில் இருந்த அருவாளும், சந்தோஷ் அவரை பிடித்து வைத்திருப்பதும் தான்..
அலட்சியமான புன்னகை தான் அவனின் கண்களில்..
அவர்களை எல்லாம் அழுத்தமாக பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தவனின் கண்களில் வந்து விழுந்தாள் யாதிரா..
“டக்க்க்..” என சொடக்கிட்டு அவளை அழைத்தான்..
அவன் அழைத்ததும் தான் தாமதம், உடல் நடுங்கி, தன் அன்னையின் வயிற்றோடு இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டாள் யாதிரா..
“ப்பாப்பாஆஆஅ..” ‘பயமா இருக்கிறது’ என்பதைக் கூட சொல்லி அழ திராணியில்லை அவளுக்கு..
அழ ஆரம்பித்தவளின் முன்பாக வந்து நின்றான் சயந்தன்..
அவனின் கம்பீரமும், தோரணையும் மகாலெட்சுமியையே சற்று பயமுறுத்தியது.. யாதிராவின் பயமுறுத்தாமல் இருந்தால் தான் அதிசியமே..
சப்பென்று ஒரு அறை சயந்தன் கன்னத்தில்.
கண்களை இறுக்கமாக மூடி ஒரு நிமிடம் அமைதியாக நின்றிருந்தான் அவன்..
தன் மகள் படும் பாட்டினை பார்த்து தவித்துக் கொண்டிருந்த மகாலெட்சுமி தான் ஓங்கி அறைந்திருந்தார்..
“வாய் பேச முடியாத ஒரு பொண்ணை இப்படி சித்திரவதை பண்றீயே,. நீயெல்லாம் நல்லா இருப்பீயா டா.. நாசம்மா தான் டா போவ.. பெத்த வயிறு.. வயிறு எரிஞ்சு சாபம் விடுறேன்.. நீ நல்லாவே இருக்க மாட்டே.. ரோட்டுல புழு புழுத்து தான் டா சாவ.. உன் கடைசி காலத்துல உனக்கு ஒரு சொட்டு தண்ணீ கூட கிடைக்காது.. அவ உனக்கு தங்கச்சி முறை டா.. அவளைப் போய்ய்ய்ய..” என சாபமிட்டு நிமிர்ந்து பார்க்க.. அஞ்சலியோ வாய் பொத்தி அழ ஆரம்பித்து விட்டார்..
“என்னை மன்னிச்சிடுங்க அக்கா.. என்னால முடியலை..” என மகாலெட்சுமியும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தார்..
“நீ என்னம்மா பண்ணுவ?.. சொந்த தங்கச்சியை கல்யாணம் பண்ண நினைக்கிற, இந்த நாய் கண்டிப்பா நடுரோட்டுல அடிபட்டுத் தான் சாகும்..” என்ற தந்தையை திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு, வேகமாக தன்னறைக்குச் சென்று விட்டான் சயந்தன்..
அவனின் கண்களில் அப்படியொரு அனல்.
இதயத்தை ரெண்டாக பிளக்கும் வலியை தான் உணர்ந்துக் கொண்டிருந்தான் அவன்..
ஆம் கெளதமும், சந்தோஷூம் உடன் பிறந்த அண்ணன் தம்பி..
கெளதமின் மனைவி அஞ்சலி அவர்களின் ஒரே மகன் தான் சயந்தன்..
சந்தோஷின் மனைவி மகாலெட்சுமி அவர்களின் ஒரே மகள் தான் யாதிரா பாவை..
மகாலெட்சுமியின் உடன் பிறந்த தம்பி தான் ப்ரணவ ஈஸ்வரன்.. தற்போதைய கமிஷினர்..
அறைக்குள் சென்றவனின் பார்வை முழுவதும், அங்கிருந்த சுவரை தான் பார்த்தது..
அத்தனையும் யாதிரா படம் தான்.. ஒரு படம் கூட அவனுடையது தனியாக இல்லை.. அனைத்திலும்.. யாதிரா. யாதிரா.. யாதிரா அவள் மட்டுமே..
பிறந்ததில் இருந்து போன வருடம் பிறந்தநாள் கொண்டாடிய போட்டோ வரை அதில் இருந்தது.. அதில் பெரும்பாலான போட்டோக்கள் இவனுடன் சேர்ந்து இருப்பது தான்..
யாதிரா ஒழுங்காக கூட நின்றிருக்க மாட்டாள்..
இவன் தான தோளில் கை போடுவான் சில நேரம் துடித்துப் போவாள் பாவையவள்..
