அதிகாயன் 1

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 233
Thread starter  

1

 

தூத்துக்குடி..

 

நீர் நிறைந்த நிலத்தைத் தூத்து, துறைமுகமும், குடியிருப்பும் தோன்றிய ஊர் என்பதால் 'தூத்துக்குடி' என்பது பெயர்க்காரணம்.

 

மன்னார் வளைகுடா அருகே அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம், ஒரு 'இயற்கைத் துறைமுகம்'. இப்பகுதி, புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. தூத்துக்குடி நகருக்கு, இராமன் உச்சரித்து கடல் அலைகளின் இரைச்சலை கட்டுப்படுத்தியதால் 'திருமந்திர நகர்' என்றும், 

 

கடலில் முத்துக்குளித்து உலக பிரதிப்பெற்ற முத்துக்களை பெறுவதால் 'முத்துநகர்' என்றும் சிறப்புப் பெயர்களும் இருக்கின்றன..!

 

பெயர் காரணம் சிறப்பு பெயர் காரணம் கேட்கவே வியப்பாக அடடே என்று இருக்கிறது அல்லவா??

 

தூத்துக்குடி மட்டுமில்லை மக்கா.. பண்டைய காலத்தில் இப்படி ஒவ்வொரு ஊருக்கும் காரணப் பெயர்களும் சிறப்பு பெயர்களும் இருக்க தான் செய்கிறது..!

 

என்னே..! தமிழ் மொழியின் வளம்..!!

 

சரி வாங்க.. நாம கடலுக்குள்ள போலாம்..!

 

அட.. பயப்படாதீக மக்கா.. கதை நடுக்கடலில் தான் ஆரம்பிக்குது..!

 

 

“எலேய்.. ஒழுங்கு மரியாதையா எடுத்த சரக்கு எங்க பதுக்கி வச்சிருக்கேன்னு சொல்லதே.. இல்ல உசுரு மிஞ்சாதுவே” என்று நடு கடலில் பாய்ந்து ஓடும் அந்த மீன் பிடி படகில் நடுவே ஒருவன் பின்னால் கைகட்டி முட்டிக்கால் போட்டு அமர வைக்கப்பட்டு இருக்க.. அவன் கண்களோ பீதியில் மிரண்டது. 

 

ஆனாலும் சற்று தைரியமாகவே “எனக்கு அத பத்தி எதுவும் தெரியாதுவே.. எனக்கும் சரக்கும் என்னலே சம்பந்தம்?” என்று கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டான்.

 

“எதே சரக்கு பத்தி தெரியாதா? அன்னைக்கு குடோன்ல காவலுக்கு இருந்தது நீ மட்டும் தான்லே.. உனக்கு தெரியாதா?” என்று பளேர் என்று அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டான் அவன்.

 

அறை வாங்கியவனும் வலித்த கன்னத்தை பல்லைக் கடித்துக் கொண்டு “நிஜமா தெரியாதுன்னு சொல்றேன்லே.. என்னோட டூட்டி முடிஞ்சு போய் நான் எட்டு மணிக்கு கிளம்பிட்டேன்லே.. அதுக்கப்புறம் தானே சரக்கே காணாம போச்சு.. அப்போ அந்த டைம்ல ஆரு காவலுக்கு இருந்தானுவோலோ அந்த பயலுகள தானே நீ கேக்கணும்” என்று பாயிண்ட் பாயிண்டாக கேட்டவனை கண்டு அவன் முன்னே இருந்த இருவரும் ஒருவரை ஒருவரை பார்த்து சிரித்துக் கொண்டனர். 

 

“பயபுள்ள மாட்டிட்டான்லே ஐசக்” என்று சேவியர் கூற,

 

“அதாம்லே.. எப்படி கணக்கா போட்டு சரக்க தூக்கி இருக்கான் பாத்தியாவே.. இவன் போயிட்டான்னாம்.. அடுத்து வந்து காவல் காத்தவேன் தான் காரணமாம்.. பயபுள்ள எப்படி பாயிண்ட் பாயிண்டா பேசுது பாரு?” என்று ஐசக் நக்கல் அடிக்க..

 

“அவன் பாயிண்ட் பாயிண்ட்டா பேசலலே ஐசக்.. எவனோ எழுதிக் கொடுத்தத இங்கன வந்து இந்த நாய் வாந்தி எடுக்குது” என்று அவன் பொறடியிலேயே வேகமாக ஒன்று போட்டான் சேவியர்.

 

“கரெக்ட் தாம்லே..” என்ற ஐசக் தன் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து,

 

“இந்த கத்தி ரத்தம் பார்த்து ரொம்ப நாள் ஆகுதுடே.. ரொம்ப பசியோட இருக்குதுவே.. இன்னைக்கு கொஞ்சம் பசியாத்தலாமாலே..” என்றவன் தன் எதிரே இருந்த அவனின் சட்டை மேலேயே தோள்பட்டையில் கத்தியை வைத்து கிற, அவன் அணிந்திருந்த வெள்ளை சட்டையை கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பு வண்ணம் பூசிக் கொண்டது. அவனோ பல்லை கடித்து கொண்டு வலியை அடக்கினான்..!

 

“ஏம்லே ஐசக்.. நம்ம அண்ண தான் உனக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறாருல அப்புறம் நல்ல கத்தியா வாங்கி வச்சுக்கிட்டா என்னவே.. அங்க பார் சரியான வெண்ண வெட்ற கத்திய வச்சு இருக்கடே வெண்ண, அவனுக்கு வலிக்கவே இல்ல பாருவே.. இப்ப பாரு நான் எப்படி கத்தியை இழுக்கிறேன்னு” என்றவன் சட்டென்று தன் இடுப்பில் இருந்த கத்தியை உருவி அவனது புஜத்தில் சரசரவென்று வரிசையாக கோடு போட.. 

 

அடுத்தடுத்து அக்கீறல்களில் அவன் உடம்பில் இருந்து ரத்தம் வழிய இப்பொழுதோ மண்டியிட்டு இருந்தவன் வலி தாங்க முடியாமல் ஆவென்று கதறினான்.

 

“இப்ப பாருவே எப்படி கத்துகிறாம்ல.. எப்படி ரத்தம் வருது பாரு.. கத்துக்கல என்கிட்ட..” என்று சேவியர் காலரை தூக்கி விட,

 

“சரிதாம்லே.. நான் இனி டியூஷனுக்கு வந்துடறேன்” என்று இருவரும் தன் எதிரில் ஒருத்தன் வலியில் துடிப்பதை.. ரத்தம் வர கிடப்பதே.. கண்டு கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் நக்கல் நையாண்டி பண்ணிக் கொண்டிருந்தனர். 

 

இப்படியாக இருவரும் தங்கள் கத்தியின் கூர்மையை அவனது உடலில் அங்கே இங்கே என்று பரீட்சித்து பார்த்துக் கொண்டிருந்தனர். 

 

“ஏலே.. என்னைய கொன்னுடுங்கலே கொன்னுடுங்க..! இப்படி சித்திரவதை செய்றத வூட்டுட்டு அந்த கடலை தூக்கி போட்டுடுங்கலே நாலு மீனு பசிக்கு உணவாவது மாறிப்போறேன்..” என்று அவன் கதற..

 

“டேய் சேவியரு.. பாருலே இவனுக்கு அதுக்குள்ள மரண பயம் வந்துருச்சு?” என்று சிரித்தான் ஐசக். 

 

“நம்ம விளையாட்டுக்கே இவனுக்கு மரண பயம் வந்துருச்சுன்னா.. அந்த காலன நேரவே பார்த்தா.. என்னாம்லே ஆவான்?”என்று கேட்டான் சேவியர்.

 

“அண்ணா வந்துட்டாரா என்ன?” 

 

“அப்பவே வந்துட்டாரு ஐசக்.. அங்கன பாரு..” என்றதும் அந்த கப்பலில் இருளில் இருந்த பக்கத்திலிருந்து ஒளியை நோக்கி ஒரு நெடிய உருவம் வந்து கொண்டிருந்தது. 

 

கைகளிலோ சிகார் புகைந்து கொண்டிருக்க.. சுற்றி சுழன்று அடிக்கும் கடல் காற்றின் குளுமைக்கு அந்த நிக்கோட்டின் புகை கதகதப்பாய் அவன் மூச்சு குழல் வழியே உள்ளே இறங்கியது. 

 

அதை ஆழ்ந்த சுவாசித்து வெளியிட்டவனோ.. தன் முன்னே இரத்த சகதியில் கிடந்தவனை தலை முடியை இரக்கமே இல்லாமல் பிடித்து தூக்கி அவன் முகத்தை உற்றுப் பார்த்து நிக்கோட்டின் புகையை அவன் மூஞ்சிலில் வேகமாக ஊதினான்..

 

 

“என்னலே பாக்குத.. இந்த தூத்துக்குடிக்கு கடல் தான்டி புயல் வராது. ஆனா.. உன் முன்னாடி நிற்கிறது யாரு தெரியுமா? தூத்துக்குடி புயலு.. எங்க அண்ணே ஐராவதன்..!” என்றதும் அதுவரை வலியில் சோர்ந்து இருந்த அவனது கண்கள் மரண வீதியில் பளீச்சிட.. அவன் தொண்டையோ எச்சிலை கூட விழுங்க முடியாமல் அத்தனை பயந்தது எதிரில் நின்றவனை பார்த்து..!

 

ஐரா என்றழைக்கப்படும் ஐராவதன் அவன்..!

 

அவனை பகைத்துக் கொள்பவர்களுக்கு காலன் அவன்..!!

 

ஐராவதனை பார்த்ததில்லை இதுவரை அவன்..! அவனுக்கு மேல் உள்ள சேவியர் ஐசக் ஆகியோரிடம் தான் அவனின் பணி..!

 

எப்போதும் அவர்கள்‌ வாயிலில் இருந்து வரும் ஐரா ணே.. என்ற விளிப்பில் எதிரில் இருப்பவர்கள் உடம்பு சற்றே நடுங்கி பயம் ஏற்படுவது உண்மை..!

 

ஏன்னென்றால் ஐரைவை அவனது நண்பர்கள் அல்லாதவர்கள் பார்க்க இயலாது அவ்வளவு இலகுவில்..! 

 

அப்படி பார்த்தவர்கள் அடுத்து இவ்வுலகில் இருக்க மாட்டார்கள்..!

 

அவன் தான் காலன் ஆச்சே..!

 

“என்னலே பிச்சை.. எவேன் கிட்ட பணத்துக்கு பிச்சை எடுத்து எனக்கு துரோகம் செய்ய நினைச்சவே..” என்றவனின் ரௌத்திரமான வார்த்தைகளில் எச்சில் கூட அவன் தொண்டைக்குள் இறங்க மறுத்தது..!

 

“அது.. அது.. நானு.. இல்ல.. எதுவும் செய்யல ணே” என்று வார்த்தைகள் கூட பயந்து தந்தியடித்தது அவனுக்கு..!

 

ஐரா திரும்பி ஐசக்கை பார்க்க அவனின் பார்வை புரிந்தவன் ஒரு சிறு இருக்கை கொண்டு வந்து போட்டான். அதில் அமர்ந்தான் ஐராவதன் கால் மேல் கால் போட்டுக் கொண்டு..

 

அவனது வலது கையில் சிகார் புகைந்து கொண்டு இருக்க.. இடது கையோ எதிரே இருந்த பிச்சையின் முடியை கொத்தாக பற்றிருந்தது.

 

“அப்போ உனக்கு எதுவுமே தெரியாதுல.. நீ ரொம்ப நல்லவேன்.. பச்ச புள்ள.. பாவ பட்டவன் அப்படித்தாம்லே..?” என்று ஒவ்வொரு வார்த்தைக்கு மெல்ல அந்த சிகாரை இழுத்து வெளியிடட்டவாறே அவன் கேட்க, பயத்தில் வாயிலிருந்து எச்சிலும் ரத்தமும் ஒழுக ஆம் என்று தலையாட்டினான் அந்த பிச்சை..! பாவப்பட்டவன்..!

 

அடுத்த நொடி வேகமாக இறுக்கமாக அவனது தலை முடியை பற்றி இந்த பக்கமும் அந்த பக்கமும் அடியப்படியே “என்னை என்ன நீ சொல்றதெல்லாம் நம்புற கேணையனு நினைச்சியாவே.. சங்குலேயே ஒட்டே மிதி.. ஆவி வெளியாந்து ஆவியாடும்” என்றவன் பிச்சையின் பற்றியிருந்த முடியில் இருந்து கையை எடுக்க.. அவனது பாதி முடி இவன் கையோடு வந்திருந்தது. 

 

ஐசக் மெல்லிய சிரிப்புடன் “அப்பவே அந்த பக்கி பயக் கிட்ட சொன்னோம்லே.‌ ஒழுங்கா எங்க கிட்டயே உண்மய சொல்லுவே.. அண்ணே வந்தா ஒன் உடம்புல கை இருக்கும்.. கால் இருக்கும்.. ஆனா உசுரு இருக்காதுவேனு.. கேட்டனா அந்த சல்லிபய..” என்று சேவியரிடம் முணுமுணுத்தவன் திரும்பி அங்கே நடப்பவற்றை பார்க்கலானான்.

 

“உனக்கு அப்போ உன் பொஞ்சாதி புள்ள குட்டி எல்லாம் வேணாம்.. அப்படித்தானலே?” என்றதும் மொத்த உடலும் பதறிப்போனது பிச்சைக்கு. 

 

அவனுக்கு கல்லூரியில் பிடிக்கும் ஒரு மகளும் பள்ளியில் படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். அவர்களுக்காக தான் இந்த துரோகச் செயலை செய்ய முன்வந்தான் பிச்சை. அவன் மனைவி கூட தடுத்திருந்தாள் 

 

“யோவ்.. எனக்கு காசு பணம் எல்லாம் வேணாமயா.. நீ மட்டும் உசுரோட இருந்தா போதும்யா” என்று எவ்வளவோ சொல்லியும்.. கெஞ்சியும்.. கேட்காமல் ஐராவுக்கு துரோகம் விளைத்தவன், அதற்கான தண்டனையை இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருந்தான்.

 

ஏற்கனவே ஐராவதனை பற்றி நிறைய நிறைய கதைகளை கேள்விப்பட்டிருக்கிறான் தான். ஆனாலும் பணத்தாசை யாரை விட்டது?

 

கண்டுபிடித்தால் பார்த்துக் கொள்ளலாம்..! கண்டுபிடிக்கா விட்டால் இத்தனை பணமும் எனக்குத்தானே..! என்ற பேராசை தான் இன்று அவன் உயிருக்கு கெஞ்சும் அளவுக்கு வந்து நின்றது.

 

சேரக்கூடாதவரோடு சேர்ந்து.. பண்ணக்கூடாததை பண்ணி.. இப்பொழுது மாட்ட கூடாதவனிடம் மாட்டியிருக்கிறான் பிச்சை..!

 

இனி அவன் நிலை?? 

 

அவல நிலைதான்..!

 

ஐராவதனின் கால் அருகில் தன் தலையை வைத்தவன் “அண்ணே.. என்னை எதுவேனாலும் செய்க, ஆனா என் புள்ள குட்டி எல்லாம் விட்டுருங்கணே.. அவக எல்லாம் வாழ வேண்டியவக” என்றதும் தன் வலது காலால் அவன் முகத்தை உயர்த்தி ஓங்கி ஒரு மிதி மிதித்தான் ஐரா.

 

“அது நீ என்கிட்ட வேலையில இருக்கும்போது சொல்லி இருந்தேனே நான் பாவம் பார்த்திருப்பேன்லே.. ஆனா இப்போ நீ என்ன பண்ணிட்டு வந்திருக்க? எனக்கு துரோகம் பண்ணிட்டு வந்திருக்குவே.‌ உனக்கு எங்கலே நான் பாவம் பார்க்க?”” என்று தாடையை தடவி யோசித்தவன் கையில் இருந்த சிகார் முடிந்ததும் அதை எங்கே போட என்று சுற்றும் முற்றும் பார்த்தவன், தன் எதிரில் இருந்தவனின் உள்ளங்கையிலேயே அதை வைத்து நசுக்கினான். 

 

ஐசக் சேவியர் கூட அவ்வப்போது ரத்தம் வருமாறு வெட்டி விட்டு விட்டனர். அந்த நேரம் வலி அதற்கு அப்புறம் பல்லை கடித்துக் கொண்டான். 

 

ஆனால் இந்த அரக்கனோ கொத்தாக அவன் முடியை பிடித்து இழுத்தே முடியை பிக்கிறான்.. கையில் சிகரட்டை வைத்து அழுத்தமாக நசுக்குறான்.. கால்களால் அவன் முகத்தில் மிதித்து ரணப்படுத்துகிறான்.. என்று அவன் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் உயிர் பயம் என்னவென்று அவன் கண்முன்னே வந்து வந்து போனது பிச்சைக்கு..!

 

இந்த வேலையை அவன் ஒத்துக் கொள்ளும்போது ‘ஒருவேளை பிடிபட்டால் தூக்கி கடல்ல வீசிடுவாங்க.. பரவால்ல நம்ம குடும்பத்த செட்டில் பண்ணிட்டோம்’ என்ற திருப்தியோடு கடலில் உயிரை விட்டுவிடலாம் என்று அவன் நினைத்திருக்க..

 

இங்கையோ அணுஅணுவாக சித்திரவதை செய்து அதன் பின்னே தான் மீனுக்கு உன்னை நாங்கள் உணவாக்குவோம் என்றவர்களைப் பார்த்து இப்பொழுது நெஞ்சமெல்லாம் கிடுகிடுத்தது அவனுக்கு..!

 

“அண்ணே அண்ணே.. தயவுசெஞ்சு என் குடும்பத்த ஒன்னும் பண்ணிபுடாதீகணே.‌. தப்புதேன் நான் செஞ்சது பூராவும் தப்புதேன்.‌.! நான் உங்களுக்கு நம்பிக்க துரோகம் பண்ணி இருக்க கூடாது” என்றவன் ஐராவிடம் மன்னிப்பு கேட்டு முடியும் முன்னே அவன் தொண்டையை கிழித்திருந்தது ஐராவின் கையில் இருந்த சிறிய கத்தி..!

 

“நான் என்ன சொம்புபயலாலே.. நீ என்கிட்ட இருந்து சரக்கு களவாடிட்டு போனதுக்கு அப்புறம் உன்னை புடிச்சி.. உன்கிட்ட கேட்டு நீ சொன்னதுக்கு அப்புறம் அத போய் தூக்கிட்டு வர? நான் எப்பவோ தூக்கிட்டு வந்தாச்சுடே என் வெண்ண..!” என்று கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் வர மண்டியிட்டு இருந்தவனின் நெஞ்சில் ஓங்கி ஒரு உதை உதைத்தான். அவனோ சுருண்டு போய் கீழே விழுந்தான். 

 

“ஏலே, என்னைய பத்தி தெரிஞ்சும் அவன் பேச்சை கேட்டுருக்க கூடாதுவே நீ? தூத்துக்குடி மண்ணு என் மண்ணுல.. என்ன மீறி ஒருத்தன் ஒன்னையும் புடுங்க முடியாதுவே” என்றவன்,

 

 

“இவன தூக்கி கடல்ல போடுங்க டே”

என்றவன், திரும்பி சேவியரை ஒருமுறை முறைத்தான்.

 

 

“எல்லாமே தெரிந்து இருக்கணும்லே.. எங்க இருந்தாலும் கண்ணு சுத்திலும் இருக்கணும் இல்லன்னா நம்மள புடிச்ச மென்னு தின்னு விழுங்கி ஏப்பம் விட்டுறுவானுவலே..” எச்சரித்தவன், 

 

பின் “ஏலே மாடா.. படக கரைக்கு திருப்புலே..!” என்றான் சத்தமாக..!

 

பின் அந்த போட் நுனியில் இரு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு நெடுமரமாக நின்றிருந்தவனின் விழிகளோ

எதிரே இருந்த கரையில் இருந்து சிறு சிறு வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருக்கும் கலங்கரைவிளக்கத்தை தான் உற்று நோக்கிக் கொண்டிருந்தது.

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top