சாவித்திரி பாட்டியின் மனம் தான் இது ஏதோ அசம்பாவிதத்தின் அறிகுறி என ஓயாமல் அடித்துக் கொண்டது. பிள்ளைகளுக்கு எத்தனை வயதானாலும் வலி என்று வந்து விட்டால், அன்னை என்றும் அவர்களை குழந்தை போல் தான் பார்த்துக் கொள்வார்.
அதே போல் தான் அவரை அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். முதலில் ரங்கராஜன் சாவு, அடுத்து மகனது கவலைக்கிடமான நிலை அனைத்தும் வெகுவாக கலங்க வைத்தது. நெஞ்சம் தாளாமல், கணவரிடம் இதை பற்றி பேச சென்றார்.
கடவுள் களிமண்ணை உருட்டி உள்ளே வைத்து விட்டான் என்பதை பேசிய பின்பு தான் அறிந்து கொண்டார்.
"என் மனசுக்கு எதுவும் சரியா படல.." என்றவர் புடவை தலைப்பில் கண்ணீரை துடைத்திட, மனைவியின் அழுத முகத்தை எவ்வித சலனமற்று பார்த்தார்.
"உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். என்னெக்கி அந்த இடத்துல காலடி பட்டுச்சோ, அன்னேக்கி இருந்து எதுவும் சரியில்ல. இப்போ அந்த வீடு கட்ட வேணாம்.."
சாய்வு நாற்காலியில் சாய்ந்து ஆடியப்படி, மனைவியை ஒரு பொருட்டாக கூட மதிக்காது போல் பார்த்தார்.
"அந்த வீட்டு வேலையை இதோட நிறுத்திடுங்க.."
"........"
"ஏங்க.. நம்ம பிள்ளைங்க நல்லாருக்கணும். இது ஒண்ணே போதாதா? இன்னும் நான் சாகுறதுக்குள்ள.. என்னலாம் பாக்கணும் நினைக்கிறீங்க?" என்றவர் கண்ணீரில் தத்தளிக்க, அதையும் உணர்ச்சி துடைத்த முகத்தோடு பார்த்தவர் சரட்டென எழுந்து கொண்டார்.
அலைபேசி அலறலில் உறங்கி கொண்டிருந்தவன் எழுந்து விட்டான். அவளுக்கென ஸ்பெஷலாக வைத்த காலர் டியூன் கேட்டு உறக்கமா வரும்?
"ம்ம்ம் சொல்லு டி.."
"எப்போ வரீங்க? கிளம்பியாச்சா? இல்லையா?"
"கிளம்பனும் ராசிகா. என்ன பண்ண வர வேண்டிய சூழ்நிலை ஆகிடுச்சு.."
"நான் இன்னேக்கி ஈவினிங் ஊருக்கு வரலாம்ன்ணு நினைச்சேன். நீங்க வரலைன்னா வந்துருப்பேன் உங்களை பாக்க.."
"அவ்வளவு லவ்வா டி என்மேல?"
"என்ன கேள்வி பிரதீஷ் இது? நான் கட் பண்ணுறேன் பை.."
"இரு டி அதான் வரேன்னு சொல்லிட்டயே, கிளம்பி வா.."
"நான் வரல.."
"ராசிகா இப்போ கிளம்புனா, நீ டூ ஹவர்ஸ்ல வந்துடலாம்."
"ஒன்னும் வேணாம் போடா.."
"ஒன் மோர்.."
"என்ன ஒன் மோர்? ஹான்.. நான் பேசுனா கிண்டலா இருக்கா உங்களுக்கு?"
"ராசிகா கிளம்பு போனை கட் பண்ணிட்டு. இங்க பாரு ரொம்ப சேஃப்ட்டியா வரணும். எங்க வர என்னனு எனக்கு அடிக்கடி டெக்ஸ்ட் பண்ணு டி.."
"நான் பண்ண மாட்டேன்.."
"நீ பண்ணாம இரு.. நேர்ல என்கிட்டே நல்லா வாங்க போற.."
"முதல சீக்கிரம் வாங்க. உங்க வீடு லாக் ஆகியிருக்குறதே பாக்க பிடிக்கல.." என்றவள் குரல் வருத்தமாக வெளி வர, மீண்டும் சீண்டி பார்க்கவே நினைத்தான்.
"நான் இல்லைனா உனக்கு சந்தோஷம் தானே டி. அப்பறம் என்ன ஃபீலிங்ஸ்?"
"இப்படிலாம் பேசுனீங்க.. நான்.."
"நீ.."
"மாடில இருந்து குதிச்சுடுவேன்.."
"லூசு.. போனை வைச்சுட்டு கிளம்பு.."
"ஓகே என்ன பிளான் வந்தா?"
"மேடம் கிளம்பி வாங்க.. வந்து தெரிஞ்சுக்கோங்க.."
கணவனது முகத்தை கலக்கமாக பார்த்துக் கொண்டிருந்தவரிடம், விட்டேற்றியாக பேசி மேலும் நோகடித்தார் சண்முகம் அவர்கள்.
"உனக்கு என்ன தெரியும்ன்னு இப்போ வேணாம் வேணாம்ன்னு சொல்லிட்டு நிக்கிற? காசோட அருமை என்னன்னு தெரியுமா உனக்கு? எல்லாம் இருக்கும் போது தான் அனுபவிக்க முடியும். ஆஸ்தியை தேடி வைக்க முடியும்.
அதை விட்டுட்டு வேணாம்ன்னு சொல்லுற. போய் முருகனுக்கு என்ன வேணுமோ, அதை கிட்ட இருந்து பாத்து கவனிச்சு குடு. தேவையில்லாம வியாக்கினம் பேசி என் முன்னாடி வந்து நிக்காதே." என்றவர் பார்வையில் பிடிவாதமே தலை தூக்கியிருக்க, பேசி பிரயோஜனம் இல்லை என்று கண்ணீரை சிந்திக் கொண்டு அங்கிருந்து கடந்து விட்டார்.
ராசிகா படு குஷியாக கிளம்பிக் கொண்டிருந்தாள். ஏதோ பிளான் என்று கூறி விட்டானா, அதனால் தான் இப்படியொரு பரபரப்பு நொடிக்கு நொடி.
அவசரதியாக கிளம்பும் நேரம் அலைபேசி அலறியது.
ராணியின் அழைப்பு என்றதும், காதிற்கு புதிதாக வாங்கிய ஜிமிக்கியை கூட மாட்டிடாது, ஓரம் வைத்து விட்டு அழைப்பை ஏற்றாள்.
"ராசிகா எப்படி இருக்க செல்லம்? அம்மாக்கு ஒரு போன் கூட பண்ண மாட்டுற? அம்மா மேல என்ன கோவம் உனக்கு?"
"மா.. கோவம்லாம் ஒன்னும் இல்லை. யார் மேல வேணாலும் கோவம் வரும் உன்மேல அப்படி இல்லை. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நான் காண்ட்ராக்ட் பண்ணுன ஆட்ல மட்டும் தான் நடிச்சுட்டு, ஸ்கூல்ல வேலைக்கு போலாம்ன்னு இருக்கேன். எல்லாம் உங்களுக்காக தான் மா.." அன்றைய தினம் ரஞ்சித் செய்த செயலால், புதிதாக உதயமான எண்ணத்தை அம்மாவிடம் மட்டும் கூறி நெகிழ்ந்தாள்.
"நிஜமா தான் சொல்லுறயா?"
"உன்மேல ப்ராமிஸ் மா.."
"உன் அப்பா தான் இதை கேட்டா சந்தோசப் படுவாரு.." என்றவர் அருகில் இருந்த தனது கணவன் முகத்தை பார்க்கவும் தவறவில்லை. அவரும் அருகில் தான் ஒரு காரணத்திற்காக நின்றிருந்தார். இந்த அழைப்பு கூட ஒரு காரியமான அழைப்பே!
"இப்போ எதுவும் சொல்ல வேணாம் மா.. சொன்னா அப்பவும்.." ஏதோ தயங்கியவள் குரல் கண்டு, கௌதமன் மனைவியிடம் கையசைவிலே ஏதோ கூற..
"அம்மாக்கு உன்னை பாக்கணும் போல இருக்கு. ஊருக்கு வரயா?"
அன்னையின் கனிவான குரல் கேட்டு, உண்மையை கூறாமல் இருப்பாளா?
"ஊருக்கு தான் கிளம்புறேன்.. எப்படியும் மதியம் வந்துடுவேன்.." என குத்துமதிப்பாக கூறி வைத்தாள். பிரதீஷை சந்தித்து விட்டு வீட்டுக்கு சென்று விடலாம் என்று.
அதில் மேலும் இரட்டிப்பாக மகிழ்ச்சியடைந்தவர், "அப்படியா? சரி சரி.. சீக்கிரம் வந்துடு செல்லம்.." என கூறி அழைப்பை வைக்க, மனைவியை ஒருவாறு பார்த்தப்படி நின்றிருந்தார் கௌதமன்.
அவர் பார்வையின் அர்த்தம் புரிந்த ராணி அவர்களோ, "சாயங்காலம் வந்திடுவா. நீங்க நினைக்கிற மாதிரி இல்லைன்னு புரியுதா இப்போவாது? அவளுக்கு உங்க மேல இப்போவும் பயம், மரியாதை எல்லாம் தான் இருக்கு!" என்றவர் மகளை தூக்கி வைத்து பேச..
"ஆமா.. ஆமா.. வந்த பிறகு தானே தெரியும் உண்மை என்னன்னு? சரி மத்ததை ரெடி பண்ணு. நான் ஒரு எட்டு போய் சம்மந்தி தம்பியை பாத்துட்டு, மதியத்துக்குள்ள வந்துறேன்." என்றவரை தான் நெருடலாக பார்த்தார்.
"அடி முட்டாள் ஜென்மமே கண்டதை யோசிக்காதே. மாப்பிளைக்கு ஒன்னும் ஆகாது. அதெல்லாம் மாப்பிளை வீட்டுல பேசிட்டேன். செய்ய வேண்டியதை செஞ்சிடுவாங்க. அவங்க நல்ல குடும்பம். மாப்பிளையை பத்தி விசாரிச்சப்போ கூட நல்ல விதமா தான் சொன்னாங்க."
பிருந்தா விருப்பம் தான் நமக்கு முக்கியம். அதை விட்டுட்டு, நீ ஏன் எது எதையோ கற்பனை பண்ணிக்கிற. கொஞ்சம் நல்லதையும் யோசிக்க முயற்சி பண்ணு.." என கணவர் கூறி கடக்க, மகளின் ஆசையை பற்றி அலசிட ஆரம்பித்தார்.
சில்லென குளிர் காற்று. ஒவ்வொரு அணு வரை பாய, உதடுகளோ அவ்வப்போது தந்தியடித்தது ஆயிழை அவளுக்கு. பைக்கும் அதற்கேற்ப, வால்பாறை மலைப்பாதையில் வளைந்து நெளிந்து வேகமாக சென்றது.
"ஹைய்யோ.. குளிருது பிரதீஷ்.."
"ம்ம்ம்ம்.."
"என்ன ம்ம்.. நீ.. ஃபுல் ஹேண்ட் டி-ஷர்ட்ல வந்துட்டு, இவ்வளவு ஸ்பீடா போற? இதே வேகத்துல போனா.. நான் செத்துடுவேன் ஜன்னி வந்து.."
அவனது வேகம் மேலும் கூட, "டேய்.. டேய்.. ஸ்லோ பண்ணு.. இல்லை இறக்கி விடு.. நான் வீட்டுக்கு போறேன்.." என அவளது நடுக்கம் நிறைந்த குரலும், சாயம் பூசிய செவ்விதழ் துடிப்பதை கற்பனை செய்து தானாக புன்னகைத்துக் கொண்டான்.
"பிரதீஷ்.."
"என்ன டி?"
"குளிருது டா.."
"இதுவே குளிரா டி?"
"எங்க.. போறோம்?"
"உன்னை கிட்னாப் பண்ணிட்டு போறேன் குட்டி மா.."
"யாரு நீங்களா? தோடா.. அதுக்கெல்லாம் நீங்க சரியா வர மாட்டீங்க டாக்டர்.."
"பின்னே.. எதுக்கு சரியா வருவேன்?"
"அவசியம் சொல்லனுமா டா?"
"சொன்னா கேக்க நல்லாருக்கும்.." என்றவன் கண்ணாடியை சரி செய்து அவளை காண, அட்டை போல் ஒட்டிக் கொண்டவள் அணைப்பில் சிலாகித்தவன் காற்றுக்கு இணையான வேகத்தில் மேலும் சீறி பாய்ந்தான்.
"டேய்.. ரொம்ப குளிருது.. சாரல் அடிக்குது.."
"நல்லா டைட்டா ஹக் பண்ணிக்கோ.. தானா ஸ்பீட் குறையும்.. இல்லை இன்னும் ஸ்பீடா போக வேண்டியதா இருக்கும் டி.."
அவனது முதுகில் மேலும் இறுக்கமாக ஒட்டிக் கொண்டவள், "பிரதீஷ்.. எங்க போறோம்?" என்றாள் ரகசிய குரலில்.
'இவ விலகியே உட்காந்துருக்கலாம். தேவையில்லாம.. நான் தான் நல்லா ஹக் பண்ணிக்கோன்னு சொல்லி ரெம்ப டெம்ப்ட் ஆகுது..' என மனதோடு புலம்பியவன், கண்ணாடியில் அவள் முகம் பார்க்க..
"ஒன்.." என பாதியோடு ஏதோ கூற வந்து கூறாமல் முற்றுப்புள்ளி வைக்க..
"என்ன சொன்ன ராசிகா?"
"ஒன் ம்வாஹ்.."
அவனுக்கு தான் அவளது கேள்வியில் மகிழ்ச்சி ஆர்ப்பரித்தது. பைக்கின் வேகம் தானாக குறைந்தது. தான் மட்டுமே இதுவரை கூறி விளையாட்டு காட்டிய விடயம் இவளுக்கு எப்படி தெரியும் என யோசித்தவன், "அப்படினா என்ன?" என்றான் குறுநகை மலர.
"ஏன் உங்களுக்கு தெரியாதா?"
"டோன்ட் நோ ராசிகா.."
"அப்போ ஏன் தெரியாததை பேசிட்டு?" என உச்சுக் கொட்டி சலித்தவளை வினாடிகள் கடக்க ஆழ்ந்து பார்த்தான் கண்ணாடி வழியே.
"எதுக்கு சார் இப்படி பாக்குறீங்க?"
"சும்மாஆஆஆ.."
"ஏன் பைக் திடிர்னு வேகம் குறைஞ்சுடுச்சு பிரதீஷ்?"
"பைக்குக்கு அட்டாக் வந்துடுச்சு.. அதான் ஸ்லோ ஆகிடுச்சு டி.."
"நம்பிட்டேன்.. யாருகிட்ட கதை விடுறீங்க?"
"உங்கனால கான்சன்ரேட் பண்ண முடியலன்னு சொல்லுங்க.. உண்மை தானே?" என காதோடு அனல் முத்தம் தர போவது போல் கேட்டு வைக்க, அவனுக்கு தான் உடலெங்கும் ஜிவ்வென ஆனதில் லேசாக நெளிந்து கொண்டிருந்தான்.
"நான் சொல்லவா என்னனு?"
"வேணாம் டி.. அடிக்கிற குளிருல இந்த கிளமேட்ல அப்பறம் ஏதாவது ஆகிடும்.."
"இல்லை நான் சொல்லுவேன்.."
"ராசிகா.. ப்ளீஸ்.."
அவளோ அவனை இறுக கட்டிக்கொண்டு, சேட்டை செய்யும் விதமாக மீண்டும் அவன் பெயரை ஒருவாறு உச்சரித்தாள்.
'ஐயோ.. சுத்தி பாக்க கூட்டிட்டு வந்த என்னை.. இப்படி மூடை மாத்துறாளே.. கடவுளே.. இவ பண்ணுற சேட்டைல நான் தான் கண்ட்ரோல் இல்லாம போய்டுவேனோன்னு பயமா இருக்கு.. "
"ம்வாஹ்.. வேணுமா? வேணாமா?"
"குட்டிமா.. ஃபால்ஸ்க்கு போற வரை அமைதியா வா.. இதுக்கு மேல என்னால டிரைவ் கூட பண்ண முடியல.. அழுதுடுவேன்.."
அவனது நிலையை எண்ணி கலகலவென சிரித்தவள், அதன் பின் விலகி அமர்ந்து கொண்டாள்.
"நான் இப்படியொரு பிளான் பண்ணுவீங்கன்னு எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை.."
"இதுக்கு அப்பறம் கூட ஒரு பிளான் இருக்கு. அதை நீ நினைச்சு கூட பாக்க மாட்ட.." என்றவன் இதழ்கள் நக்கல் புன்னகையில் விரிய, "என்ன பிளான்?" என்றாள் குழப்பமாக.
"உன்னை கிட்னாப் பண்ணி கல்யாணம் பண்ண போறது தான் டி.."
இருவரும் காதல் மொழியில் அளவளாவியப்படி குரங்கு அருவி வந்து சேர்ந்தனர். அங்கிருந்த குரங்குகளை கண்டதுமே, பயத்தில் இறுக அவன் உள்ளங்கை பற்றிக் கொண்டாள்.
"இங்க வேணாம்.. போலாம்.. ப்ளீஸ்.. பயமா இருக்கு.. ஒரே மங்கீஸா இருக்கு." என்றவள் நின்ற இடத்திலே அலற, அவனும் முடிந்த வரையில் போராடி பார்த்தான் அருவி நோக்கி அழைத்து செல்ல.
குறுக்கும் நெடுக்கும் ஓடும் குரங்குகளை கண்டவள், பயத்தில் துள்ளிக் குதிக்க.. வம்படியாக அவனை அழைத்துக் கொண்டு போயே ஆக வேண்டுமென பிடிவாதம் செய்தாள். அவனும் வேறு வழியற்று காதலியை வற்புறுத்தாமல், கூழாங்கல் ஆறு நோக்கி அழைத்து சென்றான்.
"வாய் மட்டும் கிழிய கிழிய பேசு டி. குரங்கை பாத்து பயப்படுற. உன்னை கூட்டிட்டு பைக் எடுத்துட்டு வந்தேன் பாரு. என்னை சொல்லணும்.." என்றவன் அவளை திட்டி தீர்க்க, பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள் எதுவும் பேசாமல்.
"இப்போ எங்க போறோம்?"
"ம்ம்.. உன்னை பஸ் ஏத்தி விடுறேன். ஊர் போய் சேரு.."
"பிரதீஷ்.. எனக்கு குரங்குன்னா ரொம்ப பயம்.. சும்மா திட்டாம ஓட்டுங்க.."
"ஃபால்ஸ்க்கு கூட்டிட்டு வந்த என்னை சொல்லணும் டி.."
"எனக்கு குரங்குன்னா பயம் டா.. புரிஞ்சுக்கோ.." என பாவமாக கெஞ்சிய பின்பு தான் அதனை புரிந்து கொண்டான் பிரதீஷ்.
எதற்கும் மகளிடம் மாப்பிளை பேசுகிறாரா என கேட்டு பாப்போம், இக்காலத்தில் சகஜம் தானே நினைத்தவர் வேதகியிடம் பேசிக்கொண்டிருந்த பிருந்தாவை அழைத்தார்.
"கொஞ்சம் இங்க வா பிருந்தா. உனக்கு டிஃபன் எடுத்து வச்சுட்டேன். போதுமா பாரு.."
"இதென்ன புதுசா என்னை கூப்புடுறீங்க? எப்போவும் நீங்க எடுத்து வைக்கிறது தானே?" என்றவள் கிச்சனுள் நுழையும் போதே படபடக்க பேச, ராணி அவர்கள் தான் சுற்றி வளைக்காது விஷயத்தை நேரடியாக கேட்டு விட்டார்.
"மாப்பிளை.. உன்கிட்ட போன்ல பேசுறாரா? ஏன் கேட்டேனா.. கல்யாண நாள் நெருங்கிட்டு இருக்கு. அதான்.. கேட்டுப்போம்ன்னு கேட்டேன்.." என்ற அன்னையை அசந்து போக வைக்கும் பதில் அளித்தாள்.
"அடிக்கடி பேசலைனாலும், எப்போவது மெசேஜ் பண்ணுவாரு. என்கிட்டே நேர்ல பேசணும் கூட சொல்லிருக்காரு மா. ஈவ்னிங் காஃபி ஷாப் வர சொல்லிருக்கார்.." என அவளும் உண்மையறியாது கூற, "அப்படியா?" என மெய் சிலிர்க்க கேட்டார் ராணி அவர்களும்.
அவனோ காதலுக்காக கல்யாணம் வேண்டாமென்று புதிய ரீதியில் பொய் ஒன்று தயார் செய்து வைத்திருந்தான். அது தெரியாத மவராசியோ, அவனை தன்னால் இயன்ற வரை பெருமை பாடி நகன்றாள்.
தேன்மழை💖💖
