தூகை 28

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 232
Thread starter  

28

 

இன்று..!!

 

 

மாமனின் கையை அழுத்தமாக பற்றிய விகர்த்தனன் “வாங்க போகலாம்” என்று அவனோடு மருத்துவரின் அறைக்குள்ளே நுழைந்தான் விகர்த்தனன்.

 

உள்ளே நுழைந்த இருவரையும் ஒரு முறை பார்த்த மருத்தவர் “மேகவதினி ஹஸ்பண்ட்?” என்று கேட்க.. நான் தான் என்பது போல தலையசைத்தான் நிரஞ்சன். எதிரே இருந்த இடுக்கி காட்ட இருவரும் அமர்ந்தனர்.

 

“இது உங்களுக்கு செகண்ட் பேபியா சார்?” என்று கேட்டார் அவர்.

 

“ஆமா டாக்டர். முதல்ல ஒரு பொண்ணு இருக்கா எட்டு வயசுல” என்று சொன்ன நிரஞ்சன் “டாக்டர் ஏதும் பிரச்சனை இல்லையே?” என்று சிறு பரிதவிப்போடு கேட்டான். 

 

“அப்படி இல்லைன்னு சொல்ல முடியாது..! இருக்குன்னு சொல்ல முடியல..” என்று புன்னகைத்தார்.

 

மச்சானும் மாமனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 

 

“ஃபர்ஸ்ட் டெலிவரில அவங்களுக்கு யூட்ரஸ்ல ஒரு ஸ்கேர் இருக்கு அதோட பெயின் இன்னமும் அவங்களுக்கு இருக்குன்னு சொன்னாங்க.. கூடவே அவங்களோட யூட்ரஸ் ரொம்ப வீக்..”

,

“அப்போ குழந்தை.. குழந்தையை..” என்று அதற்கு மேல் எப்படி கேட்பது என்று தவித்தான் நிரஞ்சன்.

 

நிரஞ்சன் கேட்க வருவதை புரிந்து கொண்ட விகர்த்தனன் “மேடம் அப்போ அக்காவால குழந்தையை சுமக்கிறது முடியாதா? இல்லை அது ரொம்ப கஷ்டமா?” என்றதும் இல்லை என்ற தலை அசைத்தவர். 

 

“யூட்ரஸ் ஒரு அதி அற்புதமான உறுப்பு கடவுள் கெடுத்ததில்..! நார்மலா இருக்கிறதை விட நியர்லி 500-1000 டைம்ஸ் பிரக்னன்சி டைம்ல அது விரிவடையும். கிட்டத்தட்ட 3ல இருந்து நாலு கிலோ குழந்தையை நல்லாவே அது தாங்க முடியும். உங்க அக்காவுக்கு அதுல பிரச்சனை இல்ல பிரச்சனை என்னன்னா உங்க அக்கா இந்த குழந்தை வேண்டாம்னு‌ சொல்கிறாங்க..!” என்றதும் இருவரும் ஒருசேர அதிர்ந்து மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டனர். 

 

“அவங்களுக்கு அப்பவே மயக்கம் தெளிஞ்சிட்டு நான் ட்ரீட்மெண்ட் பண்ணும் போதே.. அவங்க கிட்ட சில விஷயங்கள் எல்லாம் பேசினதுல அவங்க இன்னுமே அபாஷனுக்கு அடமண்டா இருக்கிறது எனக்கு புரியுது. இப்ப நான் சொல்ல வரதும் அதுதான்..!”

 

 “ஒரு அபார்ஷன் தாங்கும் அளவுக்கு உங்க வொய்ப் யூட்ரஸ் அவங்க உடல் நிலை பலம் இல்லை. ஆஃப்டர் அபார்ஷன் கண்டினுவஸா பிலீடிங் குறைந்தது மூணு நாளைக்கு இருக்கும். ஏற்கனவே ஸ்கேர் உள்ள யூட்ரஸ், கூடவே ப்ளீடிங் அவங்களால நிச்சயமா தாங்க முடியாது. பெட்டர் அவங்க இந்த குழந்தையை சுமக்கிறது.‌ வேண்டாம்னா டெலிவரி டைம்ல குழந்தையை சிசேரியன் பண்ணி எடுக்கும் போது யூட்ரஸூம் ரிமூவ் பண்ணிடலாம். அவங்களுக்கு ஃபியூச்சர்ல வலி இருக்காது” என்று அவர் தனக்கு தெரிந்த வழிமுறைகளை கூற இருவரும் ஒருவரை பார்த்துக் கொண்டனர். 

 

“இந்த காலத்துல ஒரு குழந்தையோட போதும்னு சொல்ற நிறைய கப்பிள்ஸ் இருக்காங்க தான். ஆனா உங்க வைஃப் கண்டிஷன் அதுக்கு ஒத்து வரல.. நீங்க கொஞ்சம் உங்க வைஃப் கிட்ட பேசுங்க” என்றார்.

 

என்ன பேசுவது? எதை சொல்வது? எதை சொன்னாலும் அந்த சண்டாளி கேட்க மாட்டாளே..! இந்த நிலைமையிலும் குழந்தையை அழிப்பதற்கு அவள் இன்னும் யோசிக்கிறாள் என்றால்.. அவன் தப்பின் வீரியம் இன்னும் இன்னும் அவனுக்கு வலித்தது..! சாட்டையால் வலிக்க அடித்தது..! உயிரோடு கொண்டு தின்றது..!

 

ஆம்.. உயிரைத் தான் தின்றது அவன் குழந்தையின் உயிரை..!

 

எத்தனையோ முறை குழந்தைக்காக இவர்கள் தவம் இருக்க.. இப்பொழுது வரமாய் வந்திருக்கும் அந்த குழந்தையையும் கலைத்து விட கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் மனைவி ஒரு புறம்…

 

எந்த பாவமும் செய்யாமல் பெற்றோரை நம்பி வயிற்றுக்குள் இப்பொழுதுதான் சிறு குருத்தாயிருக்கும் குழந்தை ஒரு பக்கம்.. எந்த பக்கம் சாய்வது என்று புரியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் நிரஞ்சன்.

 

“இப்படி ஒரு நிலைமை வரும்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா அந்த தப்பை நான் செஞ்சிருக்கவே மாட்டேன்.. செஞ்சிருக்கவே மாட்டேன்..!!” என்று மனதோடு பேசிக் கொண்டே..

 

தன் தலையிலேயே அவன் பட் பட்டென்று அடித்துக்கொள்ள.. பதறிப்போயினர் விகர்த்தனனும் மருத்துவரும்.

 

 “சார் காம் டவுன்..! நீங்க இவ்வளவு உணர்ச்சிவசப்படாதிங்க” என்று தன் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து கொடுக்க.. அதை வாங்கி மாமனுக்கு பருக கொடுத்தான் விகர்த்தனன். 

 

எல்லோரும் சொல்வது தான் கண் கேட்ட பின் சூரிய நமஸ்காரம், 

 

ஒரு விஷயம் மனதுக்கு உறுத்தலா இருக்கும்போது நாம் தவிர்த்து விட வேண்டும். ஆனால் சிறு தவறு என்று நினைத்து மாட்டி கொண்டான். தவறு இல்லை தப்பு என்று தெரியாத வகையில் உள்ளே நன்றாக மாட்டிக் கொண்டு.. செய்வதெல்லாம் செவ்வனே செய்து விட்டு.. அதன் பின் விளைவுகளை சந்திக்க முடியாமல்.. சந்திக்கும் நேரும் போது அதன் வீரியம் தாங்க முடியாமல் அழுது புலம்புவது தான் மனிதனின் குணம் அல்லவா? 

 

இவன் ஜியாவின் ஹீரோ என்பதினால்.. நிரஞ்சன் மட்டும் விதிவிலக்கா என்ன?

 

விதி வலியது தான்..! யாராயினும்..!!

 

தண்ணீரைக் குடித்து அமைதியாக அமர்ந்திருந்தவன் “இப்ப நான் என்ன செய்வது சக்தி? உங்க அக்கா இவ்வளவு அடமண்ட்டா இருக்காளே.. இன்னும் இருக்க கொஞ்சம் மாறி இருப்பான்னு நினைச்சேன். ஆனா அப்படியே இருக்காளே” என்று அவன் சன்னக் குரலில் வலியோடு அருகில் இருந்த மச்சானிடம் புலம்ப 

 

“கவலைப்படாதீங்க.. நாம பார்த்துக்கலாம்” என்று ஆறுதல் அளித்தான்.

 

“மேடம்.. எனக்கும் என் வைஃப்புக்கும் ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்” அவன் மனசாட்டி காறித் துப்பி ‘அது சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிஙாஆஆ டா?’ என்று கேட்க, தலையை உலுக்கி கொண்டவன் “அதனால வைஃப் என்கூட இல்ல. தனியா இருக்காங்க என்னால அவங்களை கேர் எடுத்து பாத்துக்க முடியல..” என்றதும் அவர் இன்னும் யோசனையாய் அருகில் இருந்த விகர்த்தனனை பார்த்தார்.

 

பொதுவாக கணவனிடம் மனைவி கோபித்துக் கொண்டு செல்லும் இடம் பிறந்த வீடு தானே? இவன் அப்பொழுது அக்கா என்றானே.. சரி இவர்கள் வீட்டிற்கு வந்திருப்பாள் என்று அவர் கேள்வியை பார்க்க..

 

“இல்ல மேடம்..! அக்கா எங்க வீட்லயும் இல்ல. கொஞ்சம் சுயகௌரவம் பார்ப்பா‌‌ அதனால தனியா வீடு எடுத்து தங்கி இருக்கா வேலைக்கு போயிட்டு வர்றா” என்றான்.

 

“வீட்ல யாராவது பெரியவங்க இருக்காங்களா அவங்க கூட துணைக்கு இருக்காங்களா?”

 

“இல்ல மேடம்..! அவளும் என் பொண்ணும் தனியா தான் இருக்காங்க” என்றான் நிரஞ்சன். 

 

“என்ன சார் இது? உங்க வொய்ஃப் தனியா இருக்காங்களா? அதுவும் அவங்க கண்டிஷன் இப்போ நல்லா இல்ல.. பிரக்னண்டா இருக்காங்க வீட்டு வேலையும் பார்த்து வெளிலயும் வேலை பார்த்து குழந்தையும் பார்த்து.. எப்படி அவங்களால எல்லாத்தையும் மேனேஜ் பண்ண முடியும்? நான் பொண்ணுங்க தனியா குடும்பத்தை தாங்குறத தப்பா சொல்லல.. கண்டிப்பா இந்த காலத்துல ஆண்களோட துணை இல்லாம பெண்களால் எதையும் சாதிக்க முடியும் தான்..! ஆனா சில விஷயங்கள்ல பக்க பலமா உறுதுணையா ஒரு துணை தேவை அது கணவன் என்ற பட்சத்துல அவங்களுக்கு மனசு அளவிலும் ஒரு நம்பிக்கை கொடுக்கும். ரெண்டு பேரும் மனசு விட்டு பேசி பாருங்க சார். உங்க வொய்ஃப்ப தனியா விடுவது இனி சாத்தியமே கிடையாது. ஏன்னா அவங்க பெட் ரெஸ்ட்டில் இருக்கிறது நல்லது ஒரு டூ மன்த்ஸ்க்கு” என்றார்.

 

“நான் அவங்ககிட்ட பேசி பார்க்கிறோம்” என்று அவருக்கு வாக்கு கொடுத்து மாமனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான் விகர்த்தனன். 

 

“என்னடா சொன்னாங்க டாக்டர்?” என்று ஆர்யன் கேட்டான்.

 

விகர்த்தனனும் டாக்டர் சொன்னதை ஒன்று விடாமல் கூற..

 

“மாமா நீங்க அக்காவ வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.. நாங்க பேசி அவங்களை அனுப்பி வைக்கிறோம்” என்று தன்னை மாமா என முறை வைத்து முதல் முதலில் அழைத்த ஆர்யனை சற்று பாசத்தோடு பார்த்தவன் “அதுக்கு உங்க அக்கா வரணுமே மச்சான்?” என்றான் நலிந்த குரலில்..

 

“விகா.‌.. நீ வீட்டுல பேசி அனுப்பி வைக்க பாருடா” என்றதும் பெருமூச்சு ஒன்றை விட்டவன் “முயற்சி பண்றேன்” என்றான் 

 

அதற்குள் பில் கட்ட சொல்லி செவிலியர் வர, நிரஞ்சன் சென்று அனைத்து பில்லையும் கட்டி வந்தான். டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை வாங்கி வந்தவன், அவற்றையெல்லாம் விகர்த்தனன் கையில் கொடுத்து “நான் வாங்கினேனு சொல்லாதீங்க சக்தி.‌ நீங்க வாங்கினீங்கன்னு சொல்லுங்க” என்றதும் சிரித்துக் கொண்டவன், “அதை அவ நம்பனுமே.!” என்றான்.

 

அதுபோல மெல்ல வெளியே நடந்த வந்த வதனி தம்பி கையில் இருந்த மருந்துகளை பார்த்து ஒன்றும் கூறாமல் அவற்றை வாங்கினாள்.

 

அப்பாடி மனைவி எந்த பேச்சும் பேசாமல் அமைதியாக வாங்கிக் கொண்டாள் என்று நிரஞ்சன் விட்ட பெருமூச்சு அவன் நாசியைத் தாண்டி வெளியே வரும் முன்னே, அந்த மருந்துகளோடு இருந்த மருந்து பில்லை பார்த்து அதில் உள்ள பணத்தை கண்டு ஒரு பெருமூச்சு விட்டவள் தன் ஃபோனை எடுத்து நிரஞ்சன் நம்பருக்கு ஜிபே செய்தாள்.

 

டொய்ங் என்று வந்து விழுந்த மெசேஜ் அவனுக்கு ஆப்படித்தது. 

 

நமட்டு சிரிப்போடு மச்சானை பார்த்தவன் “போலாமாக்கா?” என்று அக்காவை கை தாங்கலாக அழைத்துக் கொண்டு சென்றான். நிரஞ்சனும் செல்லும் மனைவியை வேதனையோடு பார்த்திருந்தான். 

 

ஆர்யனும் விகர்த்தனனும் அவளை வீட்டில் கொண்டு வந்து விட்டு “நீங்க வீட்ல இருந்து வேலையை பாருங்க கா. உங்கள டாக்டரை கண்டிப்பா பெட் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க.. நான் உங்களுக்கு என்னென்ன பைல் என்னென்ன பண்ணனும்னு காலையில கொண்டு வந்து குடுத்து சொல்லிட்டு போறேன். ஈவினிங் முடிஞ்சா நான் வரேன். இல்லன்னா இந்த ட்ராபிக் இன்ஸ்பெக்டர விட்டு வாங்கிட்டு வர சொல்றேன். நீங்க எங்கேயும் அலையாதிங்க கா. உடம்ப பாத்துக்கோங்க அக்கா” என்றபடி ஆர்யன் சென்று விட்டான் அவன் வேலையை பார்க்க..

 

அமைதியாக அக்காவை பார்த்து இருந்த விகர்த்தனன் “இதுவரைக்கும் உன்கிட்ட நான் என்ன ஆச்சுன்னு கேள்வி கேட்கல? ஆனா அப்படியே விட்டுயிருக்க கூடாது பொளீரீனு கன்னத்தில் ஒன்னு விட்டு என்ன நடந்துச்சுன்னு கேட்டு இருக்கனுமோனு இப்போ ரொம்ப வருத்தப்படுகிறேன் வதனி” என்றான்.

 

அவளோ முட்டும் அழுகையை அடக்கியபடி உதடு கடித்து அமர்ந்து இருந்தாளே தவிர, தம்பியை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவன் கூறியவற்றுக்கு பதில் கூறவும் இல்லை. 

 

“நீ போய் ரெஸ்ட் எடு நான் போய் மிருகுட்டிய கூட்டிட்டு வரேன்..” என்று அவன் வாயில் வரை செல்ல.. அதற்குள் வாசல் வந்து நின்றாள் மிரு.

 

“எப்படி அம்மு வந்தீங்க?” என்றதும்,

 

“அப்பா அழைச்சிட்டு வந்தாங்க மாமா” என்று இப்பொழுது சலுகையாய் மாமன் மீது ஏறி உட்கார்ந்து, அப்பா வந்தது அவளை காரில் அழைத்து வந்தது என்று அனைத்து கதையும் கூற அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டே வதனி கண் மூடி படுத்து இருந்தாள் உள் அறையில்.

 

இரவு வரைக்கும் அக்காவோடு இருந்தவன் இரவு உணவுக்கு வெளியில இருந்து வாங்கி கொடுத்துவிட்டு “நீ ரெஸ்ட் எடு. நான் வேலைக்கு ஏதாவது ஆள் ஏற்பாடு பண்றேன். இல்லன்னா அம்மாவ வந்து கொஞ்ச நாள் இங்க இருக்க சொல்றேன். சரியா?” என்றதும் அவள் ஏதோ பேச போக..

 

“ஏதாவது பேசினா.. நிஜமாவே அடி பிச்சிடுவேன் டி. ஆள பாரு ஆள்” என்று அதட்டி விட்டே சென்றான் வீட்டுக்கு. 

 

இரவெல்லாம் ஒரே யோசனை வதனிக்கு. ஆனால் இப்பொழுது ஒரு முடிவுக்கு வந்திருந்தாள் அவள். 

 

அருகில் இருக்கும் மிரு போலவே தானே அவள் வயிற்றில் உள்ள குழந்தையும்.

 

 இவளும் எவ்வளவோ போராடி பார்த்தும் அத்தனை போராட்டத்திற்கும் ஈடுகொடுத்து நிற்கும் குழந்தையை கண்டு ஒரு சிரிப்பு அவளுள்.

 

“பிடிவாதம்.! பிடிவாதம்.! உங்க அப்பனைப் போலவே உனக்கும் பிடிவாதம்..;” என்று வயிற்றை மெதுவாக தடவி கொஞ்சிக் கொண்டாள்.

 

எவ்வளவோ கடந்து வந்து விட்டோம்.. எத்தனை ரணங்களையோ பார்த்து விட்டோம்.. எத்தனை வலிகளையோ தாங்கி நிற்கிறோம்.. எத்தனை துரோகங்களையோ சகித்து போராடுகிறோம்.. அத்தனையும் செய்கையில் இந்த குழந்தையை ஏன் விட வேண்டும்? பெற்று வளர்த்து தான் பார்ப்போமே?!! என்று மனதில் ஒரு திடம் பிறக்க.. அதன் பின்னே நடு சாமத்திற்கு மேல் தான் உறங்கினாள் வதனி.

 

காலையில் காலிங் பெல் தொடர்ந்து அடிக்க.. கண்விழித்து பார்த்தவள் மணியை பார்த்தாள்.

 

மணி எட்டாக இருந்தது. “போச்சு இன்னைக்கும் பாப்பாவுக்கு லேட்” என்று முதலில் யோசித்தவள், பின் காலிங் பெல் சத்தத்தில் “இந்த சக்தி காலையிலே அம்மாவ கூட்டிட்டு வந்துட்டான் போல.. டேய் வரேண்டா இருடா..!” என்றவள் முகத்தை கழுவி விட்டு வேகமாக கதவை திறந்தவள்,

 

“வரேன்னு சொல்றேன் தானே.. இப்படித்தான் தொடர்ந்து பெல் அடிச்சிட்டு இருப்பியா டா.. இடியட்..!” என்று சத்தம் போட.. எதிரில் நின்றவனோ அவளின் உரிமையான பேச்சில் மெய் மறந்து நின்

றான் பல நாட்களுக்குப் பிறகு..

 

ஆதவ் நிரஞ்சன் தான் வந்திருந்தான் கூடவே அவளின் மாமியார் பிரேமாவும்..!!

 

 

தொடரும்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top