அசுரன் 10
லண்டனின் புகழ்பெற்ற ஷாப்பிங் மால் அது. தனக்கு வேண்டிய துணிகள் முதல் ஆஃப்டர் ஷேவ் லோசன் வரை அவ்வாரத்திற்கு தேவையானவற்றை வாங்கிவிட்டு
கடையிலிருந்து வெளிப்பட்டான் இராவண்.
லண்டனில் மேற்படிப்பு முடித்து அங்கேயே தற்போது வேலைப்பார்க்கும் மகளிர் நல மருத்துவன். ஸ்பெஷலிஷ்ட் இன் இன்ஃபெர்டிலிட்டி டிரீட்மென்ட்..!
மெல்ல அந்த மாலை சுற்றிப் பார்த்தபடி ஃபோனில் தன் அன்னையிடம் கதைத்தபடி வந்து கொண்டிருந்த ராவண்
தன் எதிரில் மித வேகத்தில் இறங்கிக் கொண்டிருந்த எஸ்கலேட்டரில் இறங்கினான்.
“மாம்.. எல்லாம் வாங்கிட்டேன். ஹான்.. ஹான்.. ஒன்னும் விடல.. நீங்க போட்ட லிஸ்ட்டில் ஒன்னும் விடல.. ஓகே ஹாப்பி.. பை மாம்..!” என்று ஃபோனை அணைத்து பாக்கெட்டில் வைக்கவும் தன் கூலரால் மாலை சுற்றி பார்த்தான்.
அப்போது அவனுக்கு பின்னே இரண்டு இரண்டு படியாய் தாவித் தாவி இறங்கத் தொடங்கினாள் அவள்..!
“டேய்.. நில்லு.. மவனே கையில சிக்குன நீ கைமா தான். என்கிட்டயே உன் வேலைய காட்டுறியா? நில்லு டா.. எரும.. பரதேசி..” என்று நல்ல சுத்த தமிழில் பச்சை பச்சையாக திட்டிக்கொண்டு இறங்கியவள் ராவண் மட்டுமல்ல அந்த மாலில் இருந்து அனைவருக்குமே காட்சி பொருளானாள்.
ராவண்னும் அவளை சுவாரசியமாக பார்த்தபடி நின்றிருந்தான். அவனும் தமிழன்தான் ஆனா இவள் பேசிய வார்த்தைகளை பலவற்றுக்கு அவனுக்கு அர்த்தம் பிடிப்படவில்லை.
அதன் முழு அர்த்தத்தையும் அவன் புரிந்து முடிக்கும் முன் அவன் உள்ளுணர்வு உந்த அனிச்சையாய் பின்னால் திரும்பினால்…
இருபது வயது மதிக்கத்தக்க அந்த சைதை தமிழுக்கு சொந்தக்காரி படபடவென படிகளில் பாய்ச்சலாய் இறங்கி வந்து கொண்டிருந்தாள். எந்த பேலன்சும் இல்லாமல் எங்கு போய் விழுவாளோ என்ற வகையில் அப்படி ஒரு ஓட்டம் அவளிடம்.
இவள் இப்படி தாவி ஓடுவதை பார்த்து பின்னால் நின்றிருந்த சிலர் எச்சரிக்கை செய்ய.. எதையும் சட்டை செய்யாது முன்னால் செல்பவனே குறி என்று அவனை நோக்கி தன் முழு வேகத்தையும் கொடுத்து அந்த எக்ஸ்லேட்டரில் தாவி தாவி வந்துக் கொண்டிருந்தாள். இவள் என்ன ஸ்பைடர் மேனா ச்ச.. வுமனா.. கையில் விசிக் விசிக் என்று நூல் விட்டு எதிரே இருப்பவனை பிடிக்க.. பிடித்த வேகத்தில் தூக்கிக் கொண்டு பறக்க…!! அவளின் அவசரக்குடுக்கை தனத்தால் முன்னே சென்றிருந்தவன் மீது மாரமல்லா விழுந்தாள் அவள்.
இதற்குள் தன்னருகில் வந்திருந்தவளை அன்னிச்சை செயலாய் தாவிப் பிடித்திருந்தான் இராவண். பிடித்து விட்டானே தவிர… ஓடும் எஸ்கலேட்டரில் கொஞ்சமும் பேலன்ஸ் செய்ய முடியாமல் பிடித்தவனோடு சேர்த்தே விழத் தொடங்கினாள்.
உதவி செய்தவனுக்கே உபத்திரவம் கொடுத்தது போல.. ஆனால் இராவண்னின் வலுவான கரம் அவள் இடையோடு சேர்த்து இவளை வளைத்திருந்தது அழுத்தமாய்..! அசைய முடியாத விதமாய்..!
இவளை பிடித்திருந்தவன் “ஆர் யூ ஓகே?” என்று கேட்டான். மெல்ல தற்போது தான் தன்னை சுற்றி சுதாரித்து பார்த்தவள் அவனை பார்க்க.. முரட்டு அழுத்தமான உதடுகளும்.. க்ளீன் ஷேவ் செய்த தாடையும் தான். விழிகளை உயர்த்தி அவனை பார்த்தாள்.
அதே நொடிதான் அவன் தன்னை அணைத்தது போல் பிடித்திருக்கிறான் என்பதும் புத்தியில் உறைக்க அனிச்சையாய் இவள் விலக முயல… “ஹேய்.. ஈஸி..” என்றபடி இவளை இன்னுமாய் இறுகப் பற்றினான் அவன்.
பிறகுதான் இவளுக்கு தான் நின்று கொண்டிருக்கும் நிலையே கவனத்தில் வந்தது. இதற்குள் எஸ்க்கலேட்டர் தரையை அடைய இருவரும் தரைக்கு வந்துவிட்டார்கள்.
அதற்குள் எக்ஸ்லேட்டரின் பின்னால் வந்தவர்கள் ராவண்னின் முதுகைத் தட்டி “எக்ஸலண்ட்.” “கிரேட் ஜாப்” “சூப்பர்” என்று அவன் அவளை அழகாக பிடித்ததை பாராட்டி விட்டு செல்ல.. அவனும் புன்னகை முகமாக அனைவருக்கும் தலையாட்டியவன் திரும்பிப் பார்க்க அவள் சிட்டாக பறந்துக் கொண்டிருந்தாள்.
“யாரை துரத்திகிட்டு இப்படி ஓடுற இவ?” என்று அவன் பார்க்க அதற்குள் மாலின் வாசலை தாண்டி இருந்தாள் அவள்..!
யார் அவள்??
யாரோ அவள்..!! என்று அவன் நினைத்திருக்க… அவளே அவனின் கனவுகளை திருடி வாழ்கையின் பல ரகசியங்களை ரசனையாக்கப் போகிறாள் என்று அப்பொழுது அவன் அறியவில்லை..!
மறுவாரம் அதே மால்..! ஆனால் இப்பொழுது வேறொரு தளத்தில் இவன் வந்து கொண்டிருக்க இவனை இடித்தபடி வேகமாக ஓடினாள் அவள்.
யார்? என்று ராவண் பார்க்க.. மீண்டும் அவளே..!!
கூடவே திரும்பி கண்களை சுருக்கி தலையை சாய்த்து ஒரு சாரி என்று விட்டு செல்ல..
‘இவளை எங்கோ பார்த்திருக்கிறோமே எங்க?’ என்று யோசித்தவனுக்கு முதல் வாரம் எக்ஸ்லேட்டரில் விழ இருந்ததை காப்பாற்றியது ஞாபகம் வர,
“இவ எப்போதுமே நடக்க மாட்டாளா ஏன் இப்படி ஓடிட்டே இருக்கா?” என்றபடி அவளை எட்டி பார்க்க எங்கும் காணவில்லை. தோளை கொளுத்திக் கொண்டவன் தன் உலுக்கிவன், தன் அன்னையிடம் பேசிக் கொண்டே நடந்தான்.
ஆனால் அடுத்த முறை அதே நாளில் அவளை பார்க்க அவனுக்கே சற்று விசித்திரம்..!
“உலகம் ஒரு குளோபல் வில்லேஜ் என்று சொல்வார்கள் அதற்காக நான் வரும்போதெல்லாம் இவள் என் கண்களிலேயே விழுகிறாளே? கண்களில் மட்டுமா விழுகிறாள்.. என் மீது சேர்ந்தே விழுகிறாள்?” என்று அவன் புன்னகையோடு நினைத்து முடிக்கும் முன் அவள் மேல் விழ வந்தவளை இம்முறை அவள் புஜத்தை பற்றி அழுத்தி பிடித்தவன் புன்னகையை விடுத்து இறுக்கமாக முகத்தை வைத்து அவளை முறைத்தான்.
அவளோ அதற்குள் பத்து பதினைந்து சாரி கூடவே ஏதேதோ பேசி ஆங்கிலத்தில் உளறி கொட்டிக் கொண்டிருந்தவளிடம் “ஹே.. நிறுத்து..! எதுக்கு இப்படி ஒவ்வொரு தடவையும் ஓடுற நீ?” என்று அவன் தமிழில் அதட்ட..
அதற்கு பின்னே தான் இவனை நாம் எங்கே பார்த்தோம் என்று யோசிக்கலானாள் அவள்.
வெல் க்ரூம்ட் என்பார்களே அது போல வாரப் பட்டிருந்த கற்றை முடியும் அவனது பார்வையும் நாசியும் இவனை எங்கோ அவளுக்கு தெரியும் என்ற ஒரு எண்ணத்தை உறுதிப்படுத்தியது.
“லாஸ்ட் வீக் இதே மால்ல இதே டைம்ல என்ன வேகமாக இடிச்சிட்டு ஓடுன.. அதுக்கு முதல் வாரம் லிஃப்ட்டுல தாவித்தாவி வந்து என் மேல விழுந்த.. நான் தான் உன்னை கஷ்டப்பட்டு கீழ விழாம காப்பாற்றினேன். இப்போ ஞாபகம் வருதா.. மேடம் ம்ம்ம்?” என்றதும் தலையை ஆட்டியப்படி ஆமாம் என்று அசட்டு சிரிப்பை உதிர்த்தாள்.
“ஒழுங்கா சொல்லு? எதுக்கு இப்படி ஓடிக்கிட்டே இருக்க.. உன்னால எத்தனை பேர் அபெக்ட் ஆகுறாங்க தெரியுமா? வயசானவங்க போகுற போது நீ விழுந்தா அவங்க நிலைமை என்ன ஆகிறது? ஒரு போனோட வேல்யூ தெரியுமா? திரும்பவும் கூடாவதற்கு எத்தனை நாள் ஆகும் தெரியுமா? சப்போஸ் வேற ஏதாவது ப்ளட் வர மாதிரி காயம் ஏற்பட்டா?” என்று மருத்துவனாய் அவன் மருத்துவ கணக்கை படிக்க.. இவள் காதில் ரத்தம் வழிய அவனை பார்த்தாள் பாவமாய்..!
இப்பொழுது நிஜமாகவே மயங்கி விழவே போனாள் அவனின் அட்வைஸில் பெண்.
“சார்.. சார்.. வெரி சாரி.. இனிமே இப்படி ஓட மாட்டேன் அது ஜஸ்ட் ஒரு பந்தயம்” என்றாள் ஒற்றை விரலால் தலையை சொரிந்தபடி..
“வாட் பந்தயம்? என்ன பந்தயம்?” என்று அவன் விசாரிக்க..
“நான் சொன்னா நீங்க என்ன திட்டக்கூடாது.. முக்கியமாக அட்வான்ஸ் பண்ண கூடாது. சிரிக்க கூடாது” என்றதும் சொல்லு என்பது போல் அவன் முறைத்து பார்க்க..
“அது.. நானும் என் ப்ரண்ட் ஹசனும் ஒன்னா தான் ஷாப்பிங் வருவோம். ரெண்டு பேரும் ஷாப்பிங் முடிச்சிட்டு யாரு ஃபர்ஸ்ட் ஷாப்பிங் மால் வாசலுக்கு போறாங்களோ அவங்கதான் வின்னர். ரிட்டன் போற செலவு சாப்பாடு செலவு எல்லாம் லூசர் தான் செய்யணும். ரெண்டு டைம் நான் தோத்துட்டேன். உங்களால இந்த வாரமும் தோத்துட்டேன்..!” என்றாள் வருத்தமாக..!
“நீங்க பிடக்கலைன்னா நான் ஓடியிருப்பேன். அந்த பக்கி அப்பவே ஓடிட்டான்” என்றவளை என்ன செய்வது? இதற்கு எப்படி ரியாக்ஷன் கொடுப்பது? என்று தெரியாமல் அவன் விழித்திருக்க.. அந்த வேளையில் சிட்டாய் பறந்து விட்டாள் அவள்.
“ஏய் இனி ஒருதரம் இந்த மாதிரி ஓடி நான் பார்த்தேன்.. அடுத்த டைம் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்..!” என்று அவன் எச்சரிக்கை செய்ய.. திருப்பி அவனைப் பார்த்தவள் வவ்வளம் காட்டிவிட்டு ஓடியவளை கண்டு ஒரீ நிமிடம் திகைத்தவன் பின் ஒரு சிறு புன்னகையோடு நகர்ந்துவிட்டான்.
அடுத்து வந்த நாட்களில் அவ்வளவாக ராவண் மாலுக்கு வரவில்லை. அவனது வேலை அவனுக்கு நெட்டி தள்ளியது. அந்த வாரம் பிடித்து வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டார் அவனது அம்மா.
“வாரத்துல ஆறு நாளும் அந்த ஹாஸ்பிடல்தான் கட்டிக்கிட்டு இருக்க.. ஒரு நாள் கூட உனக்காக பார்த்துக்க மாட்டியா ராவண்? அப்படி என்ன வேலை? அப்படிப்பட்ட வேலை நீ செய்ய வேண்டாம்.. நீ கிளம்பு யூஎஸ்ஸூக்கு” என்று அவர் பிடிவென்று படுத்தி எடுக்க..
“சரி சரி இந்த வாரம் போய் எல்லாத்தையும் வாங்கி ஸ்டாக் பண்ணிக்கிறேன்.. என்ன நான் குரூம் பண்ணிக்கிறேன். ஓகேவா?” என்று சொல்லியவன் அதற்கு பின்னே தான் தன்னை கண்ணாடியில் பார்த்தான்.
ஒரு மாதமாக சேவ் செய்யப்படாத தாடிக்ஷ. அடர்த்தியாக வளர்ந்து இருந்து சிகை என்று பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தான்.
“பாரு. நல்லா பாரு.. ஒரு டாக்டர் இப்படியா இருப்பான்?” என்று பின்னாலிருந்து அவன் அன்னையின் குரல் கேட்பது போல இருந்தது.
“ஆல் மம்மீஸ் ஆர் சேம்..!” என்று புன்னகைத்தவன் அன்று மாலுக்கு செல்ல..
என்றும் இல்லாத திருநாளாக அவன் முன்னே நடந்து வந்து கொண்டிருந்தாள் அந்தப் பாவை.
அவள் யார் என்று தெரியாது. அவள் பெயர் என்ன தெரியாது. அவள் பேச்சை வைத்து தமிழச்சி என்று மட்டும் புரிந்து வைத்திருந்தான்.
அருகில் அவள் வர அன்று சொன்ன அவள் நண்பன் ஹசனும் உடன் வர அவனிடம் வளவளத்துக் கொண்டே வந்து கொண்டிருந்தாள் காரிகை.
அவள் நடையில் காணப்பட்ட ஒரு வகை துள்ளலும் அவள் முகத்தின் ஒவ்வொரு செல்லிலும் ஒளிந்திருந்த புன்னகையும் அவளது சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் ஓசையின்றி பறை சாற்றியது.
அவள் அப்படித்தான். சந்தோஷம் கொள்ளவோ உற்சாகப் படவோ அவளுக்கு தனிவகை காரணம் தேவையில்லை. ‘சந்தோஷமா இருங்க.. சந்தோஷமா இருங்க.. எப்போதும் சந்தோஷமா இருங்க” என்ற ரகம்.
அவனைத் தாண்டி சில அடிகள் கடந்திருப்பாள்… சட்டென்று அவனை திரும்பி பார்க்க..
இவள் பார்வைப் படவும் சின்னதே சின்னதாய் அவனும் புன்னகைக்க… நட்புதான் அதிலிருந்தது என்றாலும் அவசர அவசரமாக அவன் பார்வையை தவிர்த்தாள் இவள்.
இப்படியாக ஒரு இரண்டு மாதங்கள் செல்ல வெறும் கண்களாலயே ஒருவித நட்பு எல்லைக்கும் நுழைந்தார்கள் இருவரும்.
அந்த மாதம் அவளுக்கு அதிக இரத்த போக்கு.. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து புலம்பியவளை சமாதானம் செய்து அழைத்து வந்தான் மருத்துவமனைக்கு ஹசன்.
இவள் முறை வந்ததும் உள்ளே சென்றவள் அங்கிருந்த ராவண்னை பார்த்து அதிர்ச்சியாய் சற்றென்று வெளியே ஓடி விட்டாள். அவனும் எதற்கு இவள் ஓடுகிறாள் என்று புரியாமல் பார்த்திருந்தான்.
அங்கே நின்றிருந்த ஹசன் தலையில் ஒரு கொட்டு வைத்தவள், “டேய்.. அறிவு இருக்கா உனக்கு லேடிஸ் டாக்டர்ட்ட கூட்டிட்டு போக சொன்னா.. ஜென்ட்ஸ் டாக்டர் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி வைச்சிருக்க? கைனிய பாருடா லூசு பக்கி” என்று அவள் திட்டினாள்.
“அடியேய்.. கைனகாலஜிஸ்ட் கிட்ட தான் அப்பாயின்மென்ட் வாங்கினேன். அப்புறம் அங்க ஜென்ட்ஸ் டாக்டர் இருக்க முடியும்? வா உள்ள போய் பார்க்கலாம்” என்று அவனும் உள்ளே செல்ல.. இவர்களை இருவரையும் நட்பாக பார்த்து புன்னகைத்தான் ராவண்.
“ஆமாம் டி மாத்தி அபார்ட்மெண்ட் பண்ணிட்டாங்க போல.. ரிசப்ஷன்ல கேட்கலாம் வா” என்று அவளை அழைத்துக்கொண்டு திரும்பியவனை கண்டு இரு பக்கமும் தலையாட்டிய ராவண் “சில்லி கைஸ்.. இன்னும் காயனாகாலஜிஸ்ட்னா அது லேடிஸ் தான் நினைக்கிறாங்க..!” என்று புலம்பியவன்,
“கைஸ்.. நான் தான் இங்க கைனகாலஜஸ்ட்..!” என்று சத்தமாக கூறினான்.
அதில் ஹசனும் அவளும் அதிர்ந்து அவனை திரும்பிப் பார்க்க “கம் அண்ட் சிட்” என்றதும் வந்து அமர்ந்தனர்.
“என்ன பிரச்சனை?” என்றவன் இருவரையும் குறுகுறுப்பாக பார்த்தான்.
அவளோ திரும்பி ஹசனை பார்ப்பதும் பின்பு தலை குனிவதுமாக இருக்க…
“ஆர் யூ பிரகனண்ட் ?” என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தனர் ஹசனும் அவளும்..!
“நோ நோ நோ..!” என்று அவசரமாக பதில் அளித்தாள் அவள்.
“நீங்க ரெண்டு பேரும் இந்தியாவா?” ஆமாம் என்று தலையசைத்தனர்.
“இந்தியாவில் இருந்து ஒரு பெண்ணை லண்டனுக்கு படிக்க அனுப்பி இருக்காங்க அப்படின்னா நல்ல டெவலப்மெண்ட் தானே. அது பேல தான் இதுவும். ஏன் லேடிஸ் நீங்க மட்டும்தான் எல்லா பீல்டுலையும் இருக்கணுமா?” என்று குறும்பாய் அவன் கேட்க வேகமாக இல்லை என்ற தலை அசைத்தாள் அவள்.
“ஓகே உங்க நேம் என்ன?” என்று கேட்டான் ஆர்வமாய் ராவண். இத்தனை மாதங்களாய் அவளை சந்திக்கிறான். அவளின் பேரைக் கேட்க ஏதோ ஒரு தயக்கம்..! இன்று தெரிந்துவிடும் நோக்கில் ஆர்வமாய் அவளைப் பார்த்தான்.
“ஐ அம் ஆருஷி.. ஆருஷி வள்ளியம்மை..!” என்றாள்.
“அரிசியா?” என்று அவன் விழிக்க..
“ஹலோ.. ஆருஷி..! ஆ..ரு..ஷி..!” ஒவ்வொரு எழுத்தாக அழுத்தி கூறி அவனை முறைத்து பார்த்தாள் ஆருஷி.
“ம்ம்.. நைஸ் நேம்” என்றவன் “வள்ளியம்மை யாரு?” என்று கேட்க..
“அது எங்க ஆச்சி பேரு.. எங்க ஊர்ல இது மாதிரி பெயர் வைக்கிறது வழக்கம். தாத்தா பாட்டி பெயர்களை பேரன் பேத்திக்கு வைக்கிறது* என்றாள்.
“ஓகே.. ஓகே.. ஆருஷி.. என்ன பண்ணுது சொல்லுங்க? என் கிட்ட எக்ஸாமின் பண்ண உங்களுக்கு கூச்சமா இருந்தா நான் நர்ஸ் கமெண்ட் பண்றேன்” என்றதும் அவள் தன் பிரச்சனையை கூற அவளிடம் மேலும் பல கேள்விகளை கேட்டு அதன் பின் சில மாத்திரைகளை பரிந்துரைத்தான் அவன்.
மேலும் இரண்டு மூன்று முறை அவளை அடுத்தடுத்த சிட்டிங்ஸ் வர சொல்லி இருந்தான். அவளது உடல் நிலையை கருத்தில் கொண்டு..!
“உங்களுக்கு பிசிஓடி இருக்கு. அதனால தான் இந்த இர்ரெகுல பீரியட்ஸ்.. ப்ளட் ப்லோ அதிகம் எல்லாம். நீங்க ரெகுலரா த்ரீ மன்த்ஸ் மெடிசின் எடுத்துக்கோங்க you will be ஆல்ரைட் சூன்” என்றான். அதே போல மருந்துகளை எடுத்துக் கொண்டாள் ஆருஷி.
மாதத்துக்கு ஒரு முறை அல்லது இரு முறை அவளை வர சொல்லி அவளது உடல் நிலையை ஸ்கேன் செய்து பார்த்து அதற்கு தகுந்தது போல மாத்திரைகளை மாற்றி அவளது டயட்டையும் நியூட்ரிஷனை விட்டு மாற்றிக் கொடுப்பான் ராவண்.
முதலில் தயங்கியவன் ராவண்னின் அனுசரனையான பேச்சில் நம்பிக்கையான வார்த்தைகளில் இப்பொழுது தன் கூட்டில் இருந்து வெளிவந்து சலசலவென்று அவனிடம் அத்தனை வாயாடுவாள் அவள்.
“நான் இருக்கிறது காலேஜ் ஹாஸ்டல். எனக்கு அங்க பிடிக்கவே இல்லை.. ஐயோ.. பிரெட்டும் ஜாமின் கொடுத்து கொல்றானுங்க” என்று அத்தனை புலம்புவாள் அவனிடம்.
கூடவே அவளது குடும்பத்தை பற்றி அக்கு வேறு ஆணிவேர் என்று அவளிடம் கொட்டுவாள்.
“எங்க தாத்தா எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா? எத்தனை பாத்திரக்கடை இல்லை இல்லை பாத்திரக்கடல் அப்படிதான் விளம்பரத்துல சொல்ல சொல்லுவார்” என்று பூர்வீகம் தொட்டு அனைத்தையும் ஒப்பிப்பாள்.
“நீ எப்பவுமே இப்படித்தானா? இல்ல இப்படித்தான் எப்பவுமே வா? இது வாய் ஓயவே மாட்டேங்குதே..!” என்று அவன் அவளது உதட்டை பிடித்து லேசாக ஆட்ட.. அதிர்ந்து விழித்தவள் மனதினுள் ராவண்னின் தொடுகை முதல் முறையாக வேதியல் மாற்றத்தை தோற்றுவித்தது.
இப்போதெல்லாம் ராவண்னின் நெருக்கம் ஆருஷியின் மனதில் மட்டுமல்ல தேகத்திலும் சில பல உணர்வுகளை தோற்றுவித்தது. பெயர் தெரியாத அவ்வுணர்வுகள் அவளுக்கு அலாதி சுகமாக இருந்தது.
அன்று மாலுக்கு வழக்கம் போல ஹசனோடு வந்திருந்தவள், எதிரில் இவனை பார்த்து சிறிது நேரம் பேசிவிட்டு, விடை பெறும் வண்ணமாய் சின்னதாய் தலையை மட்டும் அசைத்து விட்டு திரும்பி நடக்க துவங்கினாள் ஆருஷி.
அவளது முகமோ கனிந்து சிவந்திருந்தது.
நடந்து செல்லும் ஆருஷியை தான் உச்சாதி பாதம் முதல் அணு அணுவாக பார்த்தான் ராவண். அதுவரை அவன் முகத்திலிருந்த புன்னகை மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது.
கண்ணோடு முகமுமே சுருங்க அவளை தீவிரமாய் வெறித்தவன்
“மொதல்ல இந்த கிளிக்கு வலைய விரிக்கணும்… ஆனா.. ரொம்ப கஷ்டப்பட தேவையில்ல போல” என மனதுக்குள் சொல்லிக் கொண்டவன், வேக வேகமாக நடந்தவன் மனதில் அவளை வசப்படுத்துவதற்கான திட்டங்கள் வரிசைக் கட்டி வந்தன..!
தொடரும்..