தூகை 24

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 233
Thread starter  

24

 

இன்று…!!

 

காலையில் வதனிக்கு எழவே முடியவில்லை தலையெல்லாம் சுற்றியது இன்னும் சிறிது நேரம் படுத்து ஓய்வு எடேன் என்று உடம்பு கெஞ்சியது.

 

ஆனாலும் முடியாதே..! மிருவுக்கு காலை சிற்றுண்டி மதிய உணவு கட்டிக் கொடுக்க வேண்டுமே..!! 

 

ம்மா.. ம்மா.. மெல்ல பூனைக்குட்டியாய் அழைத்து கொண்டு பாயில் புரண்டு உருண்டு‌ அன்னையின் கதகதப்பை தேடி ஒட்டிக் கொண்டு, பிஞ்சு கைகளால் அன்னையை அணைத்துக் கொண்ட மகளின் நெற்றியில் மெல்ல முத்திட்டு, “பாப்பா.. மிரு.. எழுந்திரு டா. ஸ்கூல் போகுணும்ல.‌.” என்று கழுத்தில் குறுகுறுப்பூட்டி கொஞ்சினாள்.

 

மகளின் வாசத்தில் மசக்கை வாசம் மட்டுப்பட்டு இருந்தது..!

 

“வேணாம்.. இன்னைக்கு லீவ் போட்டுக்கலாம்” என்றாள் அவளும் தூக்கத்திலேயே..!

 

“வேணாவா? ஸ்கூல் வேணாவா?” என்று மீண்டும் அவள் குறுகுறுப்பூட்டி மகளிடம் விளையாண்டாள்‌.

 

“ஹான்.. ஹா.. ஹா.. ஆமா.. ஹா.. ஹா.. வேணாம்.. ஹா.. ஹா.. ஸ்கூல் வேணாம்..” அம்மாவின் விளையாட்டில் சிரித்தாள் மிரு.

 

“ஏய்.. பப்பு ஒழுங்கா சொல்லு.. இன்னைக்கு மேக்ஸ் எக்ஸாம் தானே? அதனால தானே ஸ்கூல் வேணாம் சொல்லுற??” என்று இப்போது வயிற்றில் கிச்சுகிச்சு மூட்டி வதனி கேட்க..

 

“ஹா.. ஹா.. நோ.. நோ.. ஹா.. ஹா.. இல்லயில்ல தமிழ் எக்ஸாம்” என்று சிரித்தாள் மகள்.

 

“அடிப்பாவி..! தமிழ் கஷ்டமா உனக்கு?” வியந்தாள் வதனி.

 

“கொஞ்சம் கஷ்டம் இல்லம்மா.. ரொம்ப கஷ்டமா இருக்கு..!” என்றாள் முகத்தை பாவமாக வைத்து.

 

“ஏன் டா குட்டி?” இப்போது மகளை தன்னோடு அணைத்து கேட்க..

 

அம்மாவின் வயிற்றில் தலையால் முட்டி “ம்ம் மா” என்றாள்.

 

“ஏன் கஷ்டம்?”

 

“இங்கிலீஷ் மாதிரி கொஞ்சமா லெட்டர்ஸ் இருக்கலாம்ல.. ஏன் மா இந்த தமிழ் மட்டும் இவ்வளோ லெட்டர்ஸ் வைச்சிருக்கு..” என்று கேட்ட மகளை கண்டு சிரிப்பு பொங்கியது வதனிக்கு.

 

“தமிழ் அவ்வளோ லெட்டர்ஸ் வைச்சிருக்கிறதுல உனக்கு என்ன டா கஷ்டம்?” என்று சிரிப்போடு கேட்டாள் வதனி.

 

“ம்ம்ம்.. என்ன கஷ்டமா? இங்கிலீஷ்ல எல்ஏ ல சவுண்ட்..! ஆனா.. தமிழ் ல ள ழ.. மூணு இருக்கு” என்றாள்‌ விரல்களை விரித்து.

 

“சரி.. அப்புறம்??”

 

“ம்ம்ம் அப்புறம் ர ற இரண்டு இருக்கு. ன ண இரண்டு இருக்கு..” என்று விரல்களை விரித்து மடக்கி காட்டி பேசி மகளை பார்த்து வாய் பிளந்தாள்.

 

பின், “ண ந ன.. மூணு இருக்கு டா” என்று‌ மகளை திருத்த..

 

“பாத்திங்களா.. பாத்திங்களா.. பாப்பாவுக்கு இது கூட தெரியல” என்று மூக்கை உறிஞ்சினாள் மிரு அழகாக..!

 

மகளின் அழகில் அன்னையாய் அவளை ரசித்தாள் வதனி.

 

அப்போது இன்னொரு குழந்தை பற்றி சாருபாலாவும் ராவண்னும் சொல்லியவை ஞாபகத்தில் வந்தது.

 

மெல்ல தன் வயிற்றை தடவிக் கொண்டாள் மகள் அறியாமல் வதனி.

 

இவளை போல தானே இக்குழந்தையும் என்று அவளின் மனது தாய்மையில் பூரித்தது…! 

மிரு போல பேசுமா? குறும்பு செய்யுமா? அன்பாய் பேசுமா? பாசமாய் அணைக்குமா? அம்மா என்று கொஞ்சுமா? என்று சூல் கொண்டிருந்த வயிற்றை மெல்ல தடவியபடி தனக்கு தானே யோசித்துக் கொண்டிருந்தாள் மேகவதனி.

 

“இல்லை.. வேணாம்.. வேணாம்.. அந்த நேரத்தில் உருவான குழந்தை வேணவே வேணாம்..” என்று மனதினை கடினப்படுத்திக் கொண்டாள்.

 

“ம்மா.. ம்மா..” அம்மாவின் கவனம் தன் மீது இல்லையென்று புரிந்த மிரு, தாயின் தாடையைப் பற்றி தன் புறம் திருப்பி “ஸ்கூல் லீவ் தானே?”என்று கெஞ்சலாக கேட்டாள்.

 

“உனக்கு வேலையாகும்னா கொஞ்சி கெஞ்சி சாதிக்க பார்க்குறா. அப்படியே அப்பா மாதிரி” என்றாள் குழந்தையின் முன்னுச்சி முடியை களைத்தாள்.

 

“எப்பம்மா.. நாம நம் வீட்டுக்கு போறோம்? அப்பா கூட வண்டியில போகணும்னு ஆசையா இருக்கு.. பாட்டி இப்பல்லாம் என் கிட்ட சண்டை போடறது இல்ல தெரியுமா? புதுசு புதுசா கதை எல்லாம் எனக்காக youtube ல பார்த்து சாட்டர்டே நைட் எனக்கு சொல்லுவாங்க.. நானு நீங்க அப்பா மூணு பேரும் வண்டியில ஜாலியா லாங்க் ட்ரைவ் போகணும்.. இதெல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்றேன் ம்மா..” என்று மகள் பேச ஆரம்பித்த உடனே எழுந்து அவளுக்கு முதுகை காட்டி நின்று கொண்ட அம்மாவின் இடையை கட்டிபிடித்துக் கொண்டு கொஞ்சலாக பேசினாள் மிரு‌.

 

“அது அப்புறம் பார்ப்போம்.. இப்ப ஸ்கூல் கிளம்பு டா குட்டி” என்றாள் பெரியவர்களின் சண்டையில் மகளின் மனதை வருத்தக் கூடாது என்று எண்ணி.

 

“டுடே ஸ்கூல் வேணா ப்ளீஸ்ஸம்மா” என்று மீண்டும் மிரு கெஞ்ச…

 

“எத பார்த்தும் பயப்படக்கூடாது மிருக்குட்டி. உன்னோட தாய்மொழி தமிழ்..! தெரிஞ்ச விஷயத்துக்கே இவ்ளோ பயப்பட்டனா தெரியாத எவ்வளவு விஷயம் இருக்கே? எல்லாத்துக்கும் லீவு போட்டுட்டு வீட்ல ஒளிஞ்சிருக்க முடியுமா சொல்லு?” என்றது யோசனையாய் அன்னையைப் பார்த்தாள் மிரு‌

 

“உனக்கு தெரிஞ்சத எழுதிட்டு வா.. மார்க் கம்மியா வந்தா நான் உன்னை திட்ட மாட்டேன்” என்றதும் தான் மிருளாணிக்கு முகத்தில் சந்தோஷமும் தெளிவுமே வந்தது.

 

“தேங்க்யூ சோ மச் மா” அவள் கட்டியிருந்த அன்னையின் வயிற்றிலேயே முத்தம் வைத்துவிட்டு ஓட.. ஒரு நிமிடம் சிலிர்த்து போனாள் வதனி‌. மிருக் குளிக்க சென்றும் உன் கூட அந்த சிலிர்ப்பு அடங்க மறுத்தது.

 

 

உடல் உபாதைகளை ஒதுக்கி வைத்து மெதுவாக எலுமிச்சை சாதம் கிளறி மிருவுக்கு பிடித்த பேபி உருளைக்கிழங்கை வறுவல் செய்து அதே மகளுக்கு மதியமும் கொடுத்து தனக்கும் வைத்துக் கொண்டாள்.

 

இப்பொழுது ஒரு மாத காலமாக ஜிஎஸ்டி ஃபைல் மற்றும் அதன் தொடர்பான வேலை பற்றிய ஒரு கம்பெனியில் கற்றுக்கொண்டு அங்கேயே வேலையில் தான் சென்று வருகிறாள் வதனி.

 

சக்தி தான் அந்த இடத்தில் அவளை அறிமுகப்படுத்தி வேலை வாங்கி கொடுத்தது. 

 

இன்று ஏனோ வேலைக்கு செல்லும் எண்ணமே எழவில்லை. நன்றாக படுத்து தூங்க வேண்டும் போல உடலும் மனமும் அயர்ச்சியாக இருந்தது. ஆனாலும் விடுமுறை எடுக்க இயலாது. 

 

ஸ்கூட்டியை தவிர்த்து ஆட்டோவிலேயே கிளம்பி மகளை பள்ளியில் விட்டு தான் வேலைக்கு சென்றாள்.

 

மதியம் வரை மட்டுமே வதனியால் தாக்கு பிடிக்க முடிந்தது. ஆனால் அதற்குப்பின் அவளால் முடியவில்லை. அதுவும் உணவு உண்ண டிபன் பாக்ஸை திறந்ததுமே அவளுக்கு குமட்டிக் கொண்டு வர ஓடி சென்று வாந்தி எடுத்தவள், நிலை கொள்ளாமல் மயங்கி சரிந்தாள்.

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top