கள்வன் 31
கூடல் முடித்து விலகினாலும் அவளை தன் கைவளைவிலேயே வைத்திருந்தான்.
"கேளு ஹிமா?? நீ கேட்கணும் அப்பத்தானே நான் சொல்ல முடியும்!" என்று அவளின் கனிந்த இதழ்களை பற்றி செல்லமாக இழுக்க..
"ம்ம்ம்" என்றாள் இம்முறையும்..
"இவ்வளோ தண்டனை அந்த உதடுகளுக்கு கொடுத்தும் திரும்பவும் அது இம்னு சொல்லுது!!" என்று அவன் நன்றாக அவள் புறம் தலையை தாங்கியவாறு படுத்துக் கொள்ள..
"ம்ப்ச்.. பாவா.. நீங்களே சொல்லுங்க.." என்றாள்.
"சரி.. எங்கிருந்து ஆரம்பிக்க.. தமிழ்நாட்டுல பாண்டிசேரி பக்கத்துல பிறந்தவன் நான். அப்பா ஆர்மி ஆபிஸர்! அப்படி பார்க்காதே.. கர்னல் அங்கிளோட இருந்தவர்தான். பின் இறந்தவர் ஆனார். அம்மாவை நான் பார்த்ததே கிடையாது. என் பாட்டியின் வளர்ப்பில் தான் வளர்ந்தேன். ஏகப்பட்ட சொத்து ஆனா.. சொந்தம் எல்லாம் எவரும் இல்லை.. இல்லை என்று சொல்வதைவிட பாட்டி யாரையும் நம்பல. அதற்குப்பின் நான் ப்ளஸ் டூ முடித்து காலேஜ் சேர்ந்த புதுசில் என் பாட்டி தவறி போனாங்க.. என்னை அப்பா சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் ஹாஸ்டலில் சேர்த்து விட்டார். அங்கே எனக்கு நிறைய ப்ரண்ட்ஸ்.. ஊரில் இருந்த சொத்தையெல்லாம் குத்தகைக்கும் சில நம்பிக்கையானவர்களிடம் பாத்துக்க சொல்லி திரும்பவும் ஆர்மிக்கே போய்ட்டார். பணத்துக்கு பிரச்சினை இல்லை. கண்டிக்கவும் அருகில் ஆளில்லை. பிரண்ட்ஸோட எப்பவும் கொண்டாட்டம்தான்!!"
"கொண்டாட்டம்னா??" அவள் சற்று கோபத்தோடு கேட்க..
"நீ நினைக்கிற போல் அதெல்லாம் கிடையாது. எங்க செட் பிரெண்ட்ஷிப் வேறுவிதம். அதாவது பிரண்ட்ஸ் சேர்ந்து எங்காவது டூர் போவோம் ட்ரெக்கிங் போவோம்.. இல்ல சைக்கிளிங் வெகு தூரத்துக்கு போவோம்.. ஒரு த்ரில்லிங் மாதிரியான அனுபவம்!! அப்படித்தான் ஒரு முறை நானும் எனது மற்ற பிரண்ட்ஸூம் இப்ப நாம இருக்கோமே இந்த ஏரியாவில் இருந்து பக்கத்துல இருக்கிற ஒரு மலைக்கு டிராக்கிங் வந்திருந்தோம். டிரேக்கிங்கில் இருக்கும் போது எங்கிருந்தோ வந்த ஒரு ஒத்தை மதயானை எங்க முன்னால் நின்றது. கூட்டத்தோடு வரும் யானையைவிட இந்த ஒத்த மதயானை ரொம்பவும் ஆபத்தானது. அதனால நாங்க மலை ஏறாமல் ஆளுக்கு ஒரு பக்கமாக சிதறி ஓட ஆரம்பித்தோம். ஏற்கனவே நாங்க பேசுகிறது தான் இப்படி ஏதாவது ஒரு ஆபத்து வந்தால் எங்களுக்குன்னு ஒரு மீட்டிங் ஸ்பாட் இருக்கும். அங்கே அவ்வளவு நேரத்துக்குள் வந்துடனும். அப்படி யாராவது வரலைன்னா.. மத்தவங்க அந்த இடத்தை விட்டு கிளம்பி உதவிக்கு ஆட்களை அழைத்து வரவேண்டும். அதேபோல நான் ஓடுனது வேறு ஒரு பாதையில்.. என்னால் அந்த மீட்டிங் ஸ்பாட்டை கண்டு பிடிக்க முடியல. அந்த சமயத்துல இரவு தங்க நான் ஒரு குகைக்குள் நுழைத்தேன்… அந்த குகை தான்..
முதன்முதலில் உன்னோடு நான் தங்கிய இடம்!!
உன் நினைவு என் மனதில் அழுத்தமாகப் பதிந்த இடம்!!
என் காதலை உணர செய்த இடம்!! மீண்டும் இருவரும் ஒன்றாக ஒரு பௌர்ணமி இரவில் இணைந்த இடம்!!
அன்றிரவு முழுக்க ஏதேதோ நினைவுகளும் கற்பனைகளுமாய் உளறி தவித்து கடைசியில் ஜூரம் கண்டு மயக்கமாகிட்டேன். தேடி வந்தவர்கள் என கண்டுபிடித்து மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அப்போது எனக்கு கார்டியனாக கர்னல் அங்கிள தான் நியமித்திருந்தார் என் அப்பா. அவருக்கு ஆர்மில ஏதாவது நேர்ந்துவிட்டால் என்னைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அவரிடம் தான்.. அவர்தான் என்னை வந்து பார்த்தார்.. அதுவரை என் கண்களுக்கு கலங்கலாக தெரிந்தவர் அந்த ஞாபகத்துக்கு பின்னே… சுமன் பிரதாப ரெட்டியாக தெரிந்தார். அதாவது.."
"என் முன் ஜென்ம அப்பா? சரியா?" என்றாள் வாஹினி.
"ம்ம்ம்!!"
"அப்புறம்??"
" அப்புறம் என்ன?? நான் ஏதோ அதிர்ச்சியில் பயத்தில் இப்படி எல்லாம் உளறுவதாக அங்கு உள்ளவர்கள் எல்லாம் சொன்னாங்க.. டாக்டரும் கவுன்சிலிங் போகணும்னு இரண்டு முறை கவுன்சிலிங் கூட அனுப்பி வைத்தாங்க.. ஆனால் என்னை யாரும் நம்பல. அப்புறம் ஒருமுறை கர்னல் அங்கிள் என்னோடு இருக்கும்போது.. உன் அப்பாவிடம் ஏதோ பேசினார் போல.. அவர் சொன்ன அந்த ரெட்டி என்னுள் யோசனை… அது யார்? என்று நான் கேட்க.. என் பேச்சை மாற்றுவதற்கும் என் கற்பனைகளை போக்குவதற்காகவும் உங்க அப்பாவை பற்றியும் அவருடைய குடும்பத்தை பற்றியும் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த கிரீடம் பற்றி சொன்னார்.. அவர் சொல்ல சொல்ல அந்த கிரீடம் என் கண் முன்னே நிஜமாய் வந்து நிற்க.. நான் அதை பற்றி அவரிடம் விவரித்தேன். அவர் அதிசயித்து என்னை பார்க்க..
"எப்படி கரெக்டா சொல்லற தஸ்யூதா?? நான் கூட அந்த கிரீடத்தை ஒருமுறை தானே பார்த்தேன்!" என்றார் ஆச்சரியமாக..
அதுவரை ஏதோ பயத்தில் ஏதோ ஏதோ நான் உளறுவதாக நினைத்து கேட்காமல் இருந்தவர், அனைத்தையும் கேட்க.. ஆதி முதல் அந்தம் வரை நான் சொல்லியவுடன் அவருக்கு ஒன்றுமே சொல்ல முடியவில்லை. ஏனென்றால் உன் அப்பாவின் மூலம் இந்த கதை ஏற்கனவே அவருக்கு தெரியும். அதுவும் அவர்கள் குடும்பம் மட்டும் அறிந்த ரகசியம்!!
ஹைதராபாத்தில் நான் எனது படிப்பை தொடர்ந்தேன். இரண்டாமாண்டு முடிவில் இருக்கும் பொழுது ஒரு முறை உன்னையும் உன் அப்பாவையும் என்னை பார்க்க அழைத்து வந்தார் கர்னல்.
உனக்கு அப்போ பத்து இல்லை பதினோரு வயசு இருக்கும். வெள்ளை வெளேரென்று இருந்த.. எனக்கு பார்த்ததும் பால் டப்பான்னு கூப்பிட தான் தோணுச்சு. அப்போதிலிருந்து இப்ப வரைக்கும் நீ என் பால் டப்பா தான்!!" என்றான் அவளது கன்னம் நிமிண்டி..
"அப்புறம்???" என்று சுவாரசியமாக கேட்டாள் வாஹினி.
"அப்புறம் என்ன?? நீ தான் என் இதய ராணி என்பது திண்ணம்!! உன்னை விட மாட்டேன் என்பதை நிமிர்வோடு உன் தந்தைடமே சொன்னேன்!!"
"அப்பா என்ன சொன்னார்?" கேட்டவளின் குரல் ஏகத்துக்கும் தழுத்தழுத்திருந்தது.
"என் பொண்ணை பத்திரமாக பார்த்துக்கோங்க மாப்பிள்ளை சொன்னார்!!"
"நிஜமா?"
"அவுனு.. அவுனு!!"
"லவ் யூ பாவா!!"
"மீ டூ லவ் யூ பால் டப்பா!! உங்க அப்பாவால் முதலில் இதையெல்லாம் நம்ப முடியவில்லை. அப்புறம் ஒவ்வொன்றையும் நான் தெளிவாக கூற அவரும் புரிந்து கொண்டார். ஆனால் நமக்கான காலம் வரும் வரையில் காத்திருக்க வேண்டும் என்று வாக்கு கேட்டார். நானும் என் படிப்பை கர்னல் அங்கிளுக்கு நடத்தும் செக்யூரிட்டி போர்ஸீக்கு தகுந்த மாதிரி தற்காப்புக் கலைகள் செக்யூரிட்டி ஸ்டெம்ஸ் இதைப்பற்றி எல்லாம் நம் நாடு வெளிநாட்டில் எல்லாம் படித்து முடிக்க மேலும் ஐந்து ஆண்டுகள் போனது. அதன் பின் எனது தடத்தை இங்கேயே நிர்ணயிக்க.. அப்போது வந்த சேர்ந்தவர்கள்தான் பபின் ரகு.
"உங்கப்பா இப்போ எங்க பாவா?" என்று அவள் கேட்க..
"உங்க அப்பா எங்கையோ.. அங்க தான் எங்க அப்பாவும். அந்த ஜென்மத்தில் பிறந்த நாங்கள் மறுபடியும் பிறந்தாலும் எல்லோருக்கும் பழைய ஞாபகம் வந்திருக்கவில்லை. எனக்கு வந்ததை போல.. விஷ்ரூத்துக்கு வந்து இருக்கலாம். ஆனால் கர்னலுக்கோ நாக பிரசாத்துக்கு ஏன் உனக்கு கூட வரவில்லை. ஆனால்.. கஞ்சனராமரெட்டிக்கு வந்தது.
"அவனா??" என்று விழி விரித்தாள்.
"ஆம்.. ஒருமுறை கர்னல் அங்கிள் உங்க அப்பாவோடு எங்க அப்பாவோடும் என்னோடும் ஒரு மீட்டிங்.. ஆனால் அது யாருக்கும் தெரியாமல் இருக்க.. அவர்களது ரகசிய பங்களாவில் அதாவது அன்று உன்னை நாக பிரசாத் வைத்திருந்தானே அந்த பங்களாவில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முற்பிறப்பு கஞ்சனராம ரெட்டி இப்பிறப்பில் அப்பங்களாவின் செக்யூரிட்டியாக வேலை பார்த்திருந்தான்.
ஆனால்… முற்பிறவி ஞாபகங்கள் வரவில்லை எங்கள் எல்லோரையும் அவன் தோட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது பார்த்தவனுக்கு தான் கொஞ்சம் கொஞ்சமாக வந்திருக்கிறது. அதிலும் கர்னலையும் என்னையும் பார்த்தவன், எங்க எல்லோரையும் கொன்றுவிட ஸ்லோ பாய்ஸன் வைத்தான் நாங்க குடிக்கவிருந்த டீயில்.. நானும் கர்னலும் அவ்வளவாக டீ அருந்த மாட்டோம். ஆனால் வந்தவரை உபசரிக்க என்று உன் அப்பாவும்.. விருந்து உபசரிப்பை ஏற்க வேண்டுமென என் அப்பாவும் அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்கள் உடலில் மாற்றம் வர.. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க.. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் மூன்று மாதத்துக்கு மேல் இருவரையும் இவ்வுலகில் பிடித்து வைக்க முடியவில்லை" என்றான் வருத்தத்தோடு..
"அந்த அயோக்கிய நாயை சும்மாவா விட்டீங்க?" என்று கொந்தளித்தாள் வாஹினி.
"விடுவோமா என்ன?? அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விட்டாச்சு! விஷ்ரூத் இறந்தது போல.."
"ஆனாலும் பாவம் சித்தப்பா இல்ல பாவா.. அவருக்கும் சித்திக்கும் எப்பவும் தெரிய வேண்டாம். வெளிநாடு சென்றவனாக சொல்லப்பட்டது அப்படியே இருக்கட்டும்!! சரியா??
"உத்தரவு மகாராணி!!"
"எல்லாம் ஓகே.. அன்னைக்கு ஏன் நீங்க திருடனு பொய் சொன்னீங்க? என்னை பரிசோதிக்க வா??" என்றாள் கேள்வியோடு..
"உண்மைய சொல்லனும்னா அது தான்!! ஏனென்றால் முற்பிறவியில் என்ன தான் நான் திருடன் இல்லை என்றாலும்.. என் மீது உனக்கு காதல் வந்தாலும்.. அதை வெளிப்படுத்த தயங்குன!! இப்பவும் அதே மகாராணி தோரணை தானே.. ஒருவேளை உண்மையாகவே நான் திருடனாக இருந்தால் உன் காதலை மறுக்காமல் சொல்வாயா? என்று எனக்கு தெரிய வேண்டி இருந்தது. முதலில் இதை நான் இத்திட்டத்தை சொன்ன போது கர்னல் அங்கிள் ஒத்துக்கொள்ளவில்லை. அதுதான் அவர் பாதுகாப்புக்காக வேறு இடம் சென்று இருந்தபோது.. அன்றைக்கு பிறந்தநாள் விழாவில் உன் வீட்டுக்குள் நுழைந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வலைவிரித்து காத்திருந்தேன். நீயாக வந்து மாட்டிக்கொண்ட.. அப்புறமென்ன??? உனக்காக ஒரு ஊரையே உருவாக்கி விளையாடினோம் நாங்கள்!!" என்று சிரித்தான் அவன்..
"அன்னைக்கு நான் நாக ப்ரசாத்னு நினைச்சு பேசுனது எல்லாம்..." என்று அவள் இழுக்க..
"சாட்சாத் உன் பாவாவிடம் தான்!!" என்று சிரித்தான் கள்வன்.
"பிராடு.. திருட்டு பாவா!! முரட்டுப் பையா!!" என்று தன் தளிர் விரல்களால் அவளது வெற்று மார்பில் அடிக்க.. அவளின் கைகளைப் பிடித்து தன் இதயத்தை பக்கம் வைத்துக் கொண்டான்.
"அப்புறம் ஏன் ஹரிதாவை விட்டு…" என்று அவள் ஆரம்பிக்க..
"பின்னே உனது காதல் எத்தனை ஆழமான தெரிஞ்சுக்கணும் தான் நான் செய்தேன். ஆனால் ஹரிதா சொன்னவுடன் எனக்காக நீ பேக் எல்லாம் திருட போவேனு சத்தியமா எதிர்பார்க்கலடி பால் டப்பா!!" என்று இறுக்க அணைத்துக் கொண்டான் தன்னவளை..
"பாவா.. எனக்கு போன ஜென்ம ஞாபகங்கள் வேண்டவே வேண்டாம்!!
நாம சேர முடியாத சோகங்களும்.. உன் பிரிவால் நான் வாடிய அந்த துயரங்களும் வேண்டவே வேண்டாம்!! எப்போதும் நான் உன் பால் டப்பா.. நீ என் பாவா!! இதுபோதும்.. எப்போதும்!!"
"எனக்கும் டா!!" என்றான்.
"அந்த ஹிரன்மாயி ஜெயத்ரிக்கு வேண்டுமென்றால் ஜலந்திரனின் காதலை விட தனது கடமை பெரிதென, அவரை தவிர்த்து இருக்கலாம்!!
ஆனால்... இந்த ஹிரண்மையா வாஹினி எப்போதுமே இந்த கள்வனின் காதலி தான்!!" என்றாள் சிரித்துக் கொண்டு..
"வெறும் காதலி இல்லடி.. பல சுவைகளை ஒருங்கே கொண்ட கசாட்டா காதலி..!!" என்றான் விஷம குரலில்..
"பாவா!!!" என்றவளின் சிணுங்கலும்..
"ஹிமா!!" என்றவனின் தாப முணங்கலும்..
ஒலித்துக் கொண்டே இருந்தது அவ்விடத்தில்.. காதலாய்!!
அதே நேரம் வெளிநாடு தப்பிச் சென்ற நாக ப்ரசாத் கையிலிருந்த கிரீடம் தன் அரசியை சேருமா??
சுபம்!!
