காதலி 28

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

கள்வன் 28

 

கண்களை பிரிக்க முடியாமல் கஷ்டப்பட்டு திறந்தவளின் காதுகளில் வந்து விழுந்தது "கிரீடத்தை குறித்த நேரத்துக்குள் கொண்டு வந்து தரவில்லை என்றால்.. நீங்கள் குறித்த நேரத்தில் இவளை என் பொண்டாட்டி ஆக்கிக் கொள்வேன்!!" என்ற நாக பிரசாத்தின் அருவருப்பான வார்த்தைகள் தான்!!

 

எப்படி இங்கே வந்தோம்? யார் கொண்டு வந்தா? என்று ஒன்றும் அறியமுடியாமல் கண்களை தேய்த்து பார்க்க கைகளோ கட்டி இருந்தது. மெல்ல தன் தோள்களில் துடைத்துக்கொண்டு எதிரே நின்று இருந்தவனை பார்த்து அதிர்ந்து தான் போனாள்!!

 

 

அது.. விஷ்ரூத் ரெட்டி!! அவள் சித்தாப்பாவின் மகன்!! கூட பிறக்காத பிறப்பு!! அப்படி ஒன்றும் பெரிய வயது வித்தியாசம் இல்லை இருவருக்கிடையே மிஞ்சி மிஞ்சி போனால் எட்டு மாதங்கள் தான். ஸ்ரீனிவாச ரெட்டிக்கு சற்று காலதாமதமாக தான் பிறந்தாள் ஹிரண்மையா வாஹினி!!

 

சண்டை போடவில்லை! ஆர்ப்பாட்டமாக கத்தவில்லை! அமைதியாக அவனை துளைத்தது வாஹினியின் கூர் விழிகள்!!

 

 

ஏன்?? எதற்கு இந்த இரட்டை வேடம்? என்ற‌ கேள்வி அதில்!!

 

 

நேற்று இரவு இவள் உடை மாற்றி விட்டு வந்து படுக்கும் முன் கதவு தட்டப்பட..யார் என்று பார்த்தால்? கைகளில் அழகிய பரிசுகளோடு நின்று கொண்டிருந்தான் அவளது தம்பி. "ஏய்.. விஷ் வா..வா!" என்று அழைத்து அமர வைத்தவள், "என்னடா இதெல்லாம்??" என்று ஆச்சரியமாக அவனை பார்த்து கேட்டாள்.

 

 

"உனக்காக தான் வாங்கிட்டு வந்தேன். உனக்கான கல்யாணம் கிப்ட் கீழே நிற்குது. அது ஸ்பெஷல்!!" என்று அவன் கண் சிமிட்டி கூற, "அப்படி என்ன பெரிய கிப்ட் நீ எனக்கு வாங்கி வந்திருக்க போற? " என்று இவளும் அவன் கொடுத்த பரிசுப் பொருட்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

"அதெல்லாம் சஸ்பென்ஸ்!!இப்போது சொல்ல முடியாது!! உனக்கு வேணா.. விருப்பம் இருந்தா.. கீழே போய் பார்த்துக்கோ!! உன்னால கண்டுபிடிக்க முடிஞ்சா?? கண்டு பிடிச்சுக்கோ!!"என்று அவன் சொல்லிய விதத்தில் அவளுக்கு சற்று ரோசம் வந்தது.

 

 

"ஆமாம் இதெல்லாம் எனக்கு மட்டும்தான் வாங்குனியா? ரிதிக்கு??" என்று அவள் கேட்க..

 

 

"அப்பப்பா தாங்க முடியலை உங்க பாசப்பிணைப்பு!! இப்பதான் அவளுக்குக் கொடுத்தேன். அவளும் இதே கேள்விதான் கேட்டா" என்றான்.

 

 

"அப்ப சரி!!" என்று அந்த பொருட்களை எல்லாம் பத்திரமாக எடுத்து வைத்தவள், "இப்ப சொல்லு?? என்ன வாங்குன எனக்கு? " என்று அவனை பார்த்து கேட்க.. அவனோ இரு கைகளையும் கட்டிக்கொண்டு இருபுறமும் தலை ஆட்டி சொல்ல மறுத்தான்.

 

 

"என்ன பெருசா கிப்ட் கொடுக்க போற?? இல்ல நீ பேசினத பார்த்தா ஏதாவது கார் மாடலாக இருக்கும்!" என்று அவள் ஒவ்வொன்றாக கேட்க இல்லை இல்லை என்று மறுத்து அவளது ஆசையை ஆர்வத்தை தூண்டி விட்டான்.

 

 

"என்னை ரொம்ப கியூரியஸ் ஆக்குற டா நீ!! வா போய் பாத்துட்டு வரலாம்" என்று அவனை இழுத்துக் கொண்டு கீழே வர சுற்றி சுற்றி நின்றிருந்த நிறைய கார்களை பார்த்தவண்ணம் இவள் வர.. சட்டென்று‌ அவள் முகத்தில் ஸ்ப்ரே செய்யப்பட்ட மயக்க மருந்தில் அவள் சரிய.. சரிந்தவளை அள்ளி காய்கறிகள் கொண்டு வந்த மினி லாரியின் அடியில் போட்டு மேலே காலி டப்பாக்களை அடுக்கி வைத்து அவளை கடத்தி கொண்டு வந்தான் விஷ்ரூத்.

 

"கல்யாணப்பரிசு எப்படி என்று நக்கலாக கேட்டான்?" அவன். 

 

 

"கிரீடம் வேண்டும் என்று கேட்டால் அதை நானே உனக்கு தந்திருப்பேனே??எதுக்கு இதெல்லாம்!??" என்று அவள் கேட்க..

 

 

"யாருக்கு வேண்டும் அந்த கிரீடமும்! அதுல இருக்கிற வைடூரியமும்!! அதெல்லாம் அழிந்து போகும் செல்வம். ஆனா உன்னை அதுக்காக தூக்கிட்டு வரல..ஜென்ம ஜென்மமாய் என் நெஞ்சுக்குள் இருக்கின்ற பழியை தீர்த்துக்க தூக்கிட்டு வந்தேன்! "என்று அவன் கூற..

 

 

"ஜென்ம ஜென்மமாவா??? என்னடா உளறுற?? மயக்க மருந்து எனக்கு தான கொடுத்த? இல்லை நீ உனக்கே அடிச்சிக்கிட்டியா? இப்படி தத்து பித்தென்று உளறுற" என்று அலட்சியமாக கேட்டாள் வாஹினி.

 

 

"ஓஹோ..!! அப்ப உனக்கு ஒன்னுமே ஞாபகத்துக்கு வரலை போல இன்னும். ஆனால் உன் புருஷனுக்கு வந்துருச்சு தெரியுமா? அவன் என்னைப் பார்த்த பார்வையில்.. அவன் கண்களில் ஒரு நொடி வந்து போன அந்த அதிர்ச்சியில்.. நான் கண்டுபிடிச்சிட்டேன். அவனுக்கும் பூர்வ ஜன்ம ஞாபகம் வந்தது" என்று அலட்சியத்துடன் அவன் கூற..

 

 

"அப்படி என்னடா பொல்லாத உங்க ஃப்ளாஷ் பேக்கு!!" என்றாள் சலிப்புடன் வாஹினி.

 

 

"இருக்காது? உனக்கு ஏன் சலிப்பு இருக்காது? நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ ஆளப்பிறந்தவள் தானே!! ஆனால் நான் ஆண் வாரிசாய் பிறந்தும் அரியணை ஏற முடியாது. அதிலும் உன்னால் அநியாயமாகக் கொல்லப்பட்ட எனக்குள் இருக்கும் அந்த வன்மமும் பழிவாங்கும் எண்ணமும் என்னைக்கும் மாறவே மாறாது!! ஹிரன்மாயி!!" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கர்ஜித்தான் விஷ்ரூத் அன்றைய சோமன்!!

 

 

'இவன் என்ன ஜென்ம ஜென்மம் என்கிறான்.. பழிவாங்குகிறேன் என்கிறான்.. அநியாயமாக கொன்னேன் என்கிறான்.. இவன் என்ன லூசா??? உங்களுக்கெல்லாம் வந்த அந்த பூர்வ ஜென்ம ஞாபகம் எனக்கு மட்டும் ஏன் வரல?' என்று இவள் தனக்குள் யோசித்துக் கொண்டிருக்க..

 

 

"என்ன உன்னை காப்பாத்த உன் ஜலந்திரன் வருவான் என்று எதிர்பார்க்கிறாயா?? அதெல்லாம் அவன் வருவான்!! வரணும்.. எந்த இடத்தில் என் கையை வெட்டி இழுத்து சென்று கழுவேற்றினீர்களோ.. இன்று நீங்களும் அதே இடத்தில்தான் உயிர் விட போறிங்க?? இப்பொழுது அதே இடத்தில் உன்னை பிடித்து வைத்து இருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் அவன் வந்தவுடன் உங்கள் இருவரையும் சேர்த்து தூக்குவது தான் என் பிளான்!" என்றான் கண்களில் குரோதம் மின்ன..

 

 

"என்ன.. என்ன.. கொலையா?? அப்போ அந்த வைடூரியம்?? அதை தரேன்‌ சொன்ன?" என்று‌ நாக ப்ரசாத் அதிர்ச்சியில் கேட்க..

 

 

"சந்தேகமே இல்லை அந்த வைடூரியம் உனக்குத்தான். அதை எடுத்துட்டு நீ வெளிநாட்டுக்கு தப்பி விடலாம். வைடூரியத்திற்காக இவளையும் இவளை கட்டிக்க போறவனையும் கொன்னுட்டாங்கனு நாளைக்கு நியூஸ் பேப்பரில் வரும்! அதோட இவளோட சாப்ட்டர் க்ளோஸ்!! அதற்குப்பின் அரண்மனையின் ஏகபோக வாரிசு நான் தான்!!" என்று‌ சிரித்தான் விஷ்!!

 

 

"ஆசைப்படலாம் தப்பில்லை!! ஆனால் இவ்வளவு பேராசைப் படக் கூடாது!!" என்று அவர்கள் முன்னால் நின்றிருந்தான் ஜலந்திரன் ஆக ஜித்தேந்தர்.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top